கட்டுரை
தேவிபாரதி  

திராவிட இயக்கம் தன் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதன் எஞ்சியிருக்கும் ஒரே முது பெருந்தலைவராகக் கருதப்படும் திமுக தலைவர் கருணாநிதி ஒரு கேலிச்சித்திரமாக மாறிக்கொண்டிருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. 90 வயதை எட்டிவிட்ட அந்த முதுபெரும் தலைவர் இளைஞனைப் போல ஓடியாடித் திரிய வேண்டியிருக்கிறது. நாளொன்றுக்கு இரண்டுமுறை அறிக்கைவிட வேண்டியிருக்கிறது. பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏதோவொரு காரணத்துக்காகக் கட்சியின் பொதுக்குழுவையோ செயற்குழுவையோ அவசரமாகக் கூட்ட வேண்டியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் அடைந்த அவமானகரமான தோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்கும் முழுப் பொறுப்பையும் தன் தோள்களில் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குட்பட்டவ

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

நீதிக்கட்சி முன்னோடிகளைச் சொல்லும்போது நடேச முதலியார், தியாகராயச் செட்டியார், டி. எம். நாயர் ஆகிய மூவரைப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இம் மூவரைக் குறித்து விவரிக்கும்போது திராவிடச் சங்கம் தொடங்கியவரான நடேச முதலியாருக்கும் பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டவரான தியாகராயச் செட்டியாருக்கும் தரப்படும் அழுத்தம் டி. எம். நாயருக்குத் தரப்படுவதில்லை. டி. எம். நாயரின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் உரிய அளவில் சொல்லப்படாமல் பெயரளவிலான இடமே தரப்படுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றம் பற்றி இன்றைக்குத் தரப்படும் சித்தரிப்பிற்கு நாயரின் பங்களிப்பு பற்றிய செய்திகள் தோதாக அமைவதில்லை என்பதே இதற்குக் காரணம். தற்போதைய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பற்றிய அறிவிப்பிலும் அதையொட்டி வ

கட்டுரை
மண்குதிரை  

அது ஒரு மந்தமான மதியப்பொழுது. சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகரப் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அந்த நொடியிலிருந்தே ‘பரபரப்பு’ தொற்றிக்கொள்கிறது. ‘பதட்டம்’, ‘மீட்புப் பணி தீவிரம்’ என முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘ப்ளாஷ் நியூஸ்’ வருகிறது. அது ஒன்றும் மோசமான விபத்தல்ல. உயிரிழப்பும் இல்லை. யாருக்கும் படுகாயம் இல்லை. அதனாலென்ன? இன்னொரு தனியார் தொலைக்காட்சி நேரடிக் காட்சிக்காகத் தங்கள் வாகனங்களை அனுப்புகிறது. வாகனங்கள் போய்ச் சேருவதற்குள் நேயர்களுக்காகக் கணினி வரைகலைக் காட்சி ஒன்றை உடனடியாக ஒளிபரப்புகிறார்கள். ஒரு சினிமாவுக்கு நிகரான அக் காட்சியில் பாலத்தின் மையப் பகுதியிலிருந்து - கிட்

நேர்காணல்
நேர்காணல்: ராகவன் தம்பி  

குஷ்வந்த் சிங் இந்த ஆண்டின் (2012) பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய 97ஆம் பிறந்தநாளைக் கொண்டாடினார். 2015இல் அவர் நூறாம் வயதில் காலடி எடுத்துவைக்கிறார். இப்போதும் அவருக்குப் படைப்பாளிகள் பலரிடமிருந்து விமர்சனத்துக்காக நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நினைவுகள் அதிகம் மங்கிய நிலையிலும் இயன்றபோது படிக்கிறார் என்று அவருடைய ஊழியர்கள் கூறினார்கள். மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். நான் ஒரு பேட்டிக்காக அவரைத் தொடர்புகொண்டபோது உடல்நிலை கருதி முதலில் மறுத்தவர் பிறகு ஐந்தாறு கேள்விகள் மட்டுமே வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும் என்றார். நீண்ட நேரம் உட்காருவதற்கு உடல் நிலை அனுமதிக்காது என அவருடைய உதவியாளர்கள் மறுத்தார்கள். பிறகு பத்து நிமிடங்கள் மட்டுமே பேட்டியை வைத்துக்கொள்ளலாம் என்றார்க

நேர்காணல்: யாழ்ப்பாணம் தோமஸ் சௌந்தரநாயகம்
 

தமிழ் மக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டபோதும் முகாம்களில் அடைக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்குள்ளானபோதும் யாழ் ஆயர் இல்லம் ஏதாவது அறிக்கை விடாதா வத்திக்கான் எங்களுக்கு ஏதாவது உதவாதா என்று தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். யாழ் ஆயர் இல்லம் தமிழ் மக்கள் நிலை குறித்துத் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டது. யுத்தத்திற்குப் பிறகு, இப்போது அம்மக்களின் நிலை குறித்து நீங்கள் அக்கறை காட்டிவருகிறீர்களா? வடக்குப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை என்ன? யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இத்தறுவாயில் இன்னும் அங்கு வாழும் மக்கள் அமைதியான சூழலில் வாழ்வதுபோலத் தோன்றவில்லை. முக்கியமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் வைக்கப்பட்டிருந்த

கவிதை
 

தாகமுள்ள மீன் ஒன்று நான் உன்னால் சோர்வடைவதில்லை. என்மீது கருணைகொள்வதால் நீ களைத்துப் போய்விடாதே! தாகத்தைத் தணிப்பதற்கான இந்த உபகரணங்கள் நிச்சயம் என்னிடம் சலிப்படைந்திருக்க வேண்டும். இந்த நீர்க்குவளை, அந்த நீர்க்குடம். தாகமுள்ள மீனொன்று எனக்குள் இருக்கிறது. அதன் தாகம் தணியப் போதுமானது அதற்கு என்றும் கிடைப்பதில்லை. கடலுக்குச் செல்லும் திசையை எனக்குக் காட்டு! இந்த அரைகுறைத் தீர்வுகளை, இந்தச் சிறிய பாத்திரங்களை உடைத்தெறி. இந்த மனக்கோட்டைகளையும் இந்தத் துயரத்தையும்கூட. எனது நெஞ்சின் நடுவில் மறைந்திருந்த முற்றத்திலிருந்து நேற்றிரவு எழுந்த அலையில் என் வீடு மூழ்கட்டும். ஜோசஃப் ஒரு நிலவுபோல என் கிணற்றுக்குள் விழுந்தான். நான் எதிர்பார்த்திருந்த விளைச்சல் அடித்துச் செல்லப்ப

சிறுகதை
 

என் கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுக்கையின் மேல் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தேன். ஊரடங்கி நள்ளிரவாகியும் அவள் உள்ளே வரவில்லை. இருள் வேகமாகக் கரைந்து எங்கும் வெளிச்சம் பரவி விடிந்துவிடும்போலத் தோன்றியது. நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முதலிரவு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. நீரோடையின் சலசலப்பைப் போல வெளியிலிருந்து அர்த்தம் புரியாத பேச்சுக் குரல்கள் காதில் விழுந்துகொண்டிருந்தன. அவளுடைய உறவினர்கள் என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏதாவது காரணங்களைச் சொல்லி அவளைத் தடுத்து நிறுத்தவோ அல்லது முடிந்தவரை காலம் தாழ்த்தவோ முயலலாம். கூடத்துக்குச் சென்று மற்றவர்கள் எதிரில் அவளை அழைக்க எனக்குத் தயக்கமாயிர

சிறுகதை
 

‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம் ஒன்றும் தெப்பக்குளத்தில் புதிதாக விடப்பட்டுள்ள மோட்டர் படகு சவாரிக்கான அனுமதிச் சீட்டும் இலவசமாகத் தருவதாக அறிவித்துப் பத்து தினங்களுக்கும் மேலாகியிருந்தது. அறிவிப்பைக் கேட்டு லட்சக்கணக்கான ஜனங்கள் வரக்கூடுமென்று இவ்விளையாட்டை அறிவித்திருந்த மோட்டர் படகு நடத்தும் நிறுவனம் காத்திருந்தது. உலகத்திலுள்ள அனைத்துக் குப்பைகளும் கொட்டப்படும் இந்நகரத்தில் வாழ்கிறவர்கள் தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கேட்டுப் பழகியிருந்தனர். அவர்கள் நிறுவனத்தின் வண்ண நோட்டீஸ் காகிதத்தைப் படிக்காமலேயே கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டனர். மே

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

கல்லூரிப் படிப்புக்காக மதுரை வந்தபோது என் வாசிப்பு முயற்சிகளுக்கு வழியேற்படுத்தித் தந்த சுந்தர்காளிதான் முதலில் எனக்குக் காலச்சுவடு பற்றிச் சொன்னவர். அவர் சொன்ன கடையைத் தேடிப் பிடித்து இதழை வாங்கி வாசித்தேன். முதல்முறையாகப் படித்தபோதே அதன் தீவிரத்தால் கவரப்பட்டேன். என் வாசிப்பு விரிவடையத் தொடங்கிய சில நாள்களுக்குள்ளாகவே நிறப்பிரிகை இதழும் எனக்கு அறிமுகமானது. இப்போது எதிரெதிராகக் காட்டப்படும் இவ்விரண்டு இதழ்களையும் என் வாசக மனம் முரணானவையாகக் கொள்ளவில்லை. இந்த முரண் பிந்தைய இதழ்களில் அதில் செயற்பட்டவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்று எனத் தோன்றுகிறது. ஒரு வாசகனாகக் காலச்சுவடு இதழில் வெளியான நீண்ட நேர் காணல்கள், விரிவான கட்டுரைகள் ஆகியவை என்னைப் பெரிதும் ஈர்த்திருந்தன. நண்பர் ஹவ

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
 

கடந்த ஜூன் - ஜூலை இதழ்களிலிருந்து தொடர்ந்து வரும் காலச்சுவடு - 150 கட்டுரைகள் என் மனத்தில் பழைய நினைவுகளைத் தட்டி எழுப்புவதாக அமைந்தன. என் மன அதிர்வுகளைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆ. இரா. வேங்கடாசலபதியுடையது மட்டுமல்ல. பழ. அதியமானின் ‘கிடைத்த வரை லாபம்’கூடத்தான். ‘காப்புரிமைப் போர்!’ - என்பது எங்களுக்கு இருமுறை. ஒன்று அப்பா மறைந்த சில ஆண்டுகளில் அம்மா நீதிமன்றப் படியேறி உரிமையை மீட்டது. அப்போதைய பொருளாதார நிலையும் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் தன்னந்தனியே போராடிப் பெற்ற ஒரு பெண்ணின் பின்னால் மலைபோல் நின்றது. அத்துனை சிக்கல்களிலிருந்தும் விடுபட்டு நிமிர்ந்தபோது, அப்பாவின் படைப்புகளைச் செம்மையுறக் கொண்டு வரவேண்டும் என்னும் பேரவ

திரை
செல்லப்பா  

சமீபத்தில் எண்பதுகளின் வெற்றிப்பட நாயகன் ஒருவர் தனியார் தொலைக் காட்சி அலைவரிசை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அவரது நடிப்பில் 19 திரைப்படங்கள் வெளியானதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் வரவு தமிழ் திரைப்படங்களின் பொற்காலங்களைக் காலாவதியாக்கிவிட்டதோ எனத் தோன்றியது. பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் சினிமாவின் ஆதரவால் பிழைத்திருக்கும் சூழலில் இது ஒரு முரண்நகைதான். இப்போது ஒரு படம் பத்து நாள்கள் ஓடினால் இமாலய வெற்றி என விளம்பரப்படுத்தப்படுகிறது. எண்பதுகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயித்தவர்கள் தாய்க்குலங்கள்; இப்போது அவற்றை நிர்ணயிப்பவர்கள் இளம்வயதினர். இளைஞர்களைக் குறிவைத்தே பெரும்பாலான படங்களுக்குத் திரைக்கதைகள் அமைக்கப்படுகின்றன. ஐம்பதுகளை

விவரணப்படம்
எஸ். ஸ்ரீதரன்  

மணக்கால் ரங்கராஜன் தனித்துவமிக்க வித்வான். சில தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த மூத்த வித்வான்கள், பெரிய வைத்தா என்று அழைக்கப்பட்ட மஹா வைத்தியநாத சிவனின் (1844-1893) சங்கீதத்தைப் போற்றிப் பேசுவதுண்டு. மூன்று ஸ்தாயி சஞ்சாரமாகட்டும், ஷட்கால ஸ்வரப்ரஸ்தாரமாகட்டும், பத்ததி வழுவாத நடைமாற்றங்களை நிரவலிலும் ஸ்வரம் பாடுவதிலும் நிறைவேற்றுவதாகட்டும் இந்தக் கால கட்டத்தின் பெரிய வைத்தா மணக்கால் ரங்கராஜன்தான் என்று மூத்த சங்கீதக்காரர்கள் ஒப்பிட்டிருந்திருக்கிறார்கள். கர்நாடக சங்கீதம் என்பது வித்துவத்தையும் திறமையையும் உள்ளடக்கி, ஆத்மாவைத் தொடும் ஒரு கலை. இந்த அளவுகோல்களின்படி, இளம் சங்கீத வித்வான் டி. எம். கிருஷ்ணா சொல்லியிருப்பதுபோல், ‘மணக்கால் ரங்கராஜன் வித்வான்களின் வித்வான்.&rsqu

மதிப்புரை
வா.மணிகண்டன்  

சொற்பறவை (கவிதைகள்) ஆசிரியர்: ஸ்ரீசங்கர் பக். 64. விலை ரூ. 50 வெளியீடு உயிர் எழுத்து திருச்சி பேச: 99427 64229 ஸ்ரீஷங்கர் கவிதைகளின் வாசகனைக் கவரக்கூடிய முக்கியமான அம்சம், அதில் கையாளப்பட்டிருக்கும் மொழியமைப்பு. “யாவிலும் பனி தன்னை அணிவித்திருக்கும்/அங்கே” என்னுமொரு வரியே இதற்கு உதாரணம். “பனி எங்கும் விரவியிருக்கிறது” என்பது போன்ற வழமையிலிருந்து “பனி தன்னை அணிவித்திருக்கும்” என்னும் மொழி தனித்துத் தெரிகிறது. பிறரின் எந்தவொரு கவனத்தையும் கோராமல் பனி தன்னை எல்லாவற்றிலும் அணிவிக்கிறது என்பதை இவ்வரி காட்சிப்படுத்துகிறது. பனி தன் கடமையைச் செய்கையில் அதன்மீதான மற்றவர்களின் விருப்பமின்மை கவிதையில் மறைவான பொருளில் இருக்கிறது. சொற்களை மி

உரை
கண்ணன்  

அனைவருக்கும் மாலை வணக்கம். என்னை இந்நிகழ்வுக்கு அழைத்த பேராசிரியர் ரகு அந்தோணிக்கும் பியர்ல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் எட்வின் சாமுவேலுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டு சாராள் - ராச பாண்டியன் இலக்கியச் சாதனை விருதைப் பெற்ற கவிஞர் தேவதேவனும் இவ்வாண்டு இவ்விருதைப் பெற இருக்கும் நாவலாசிரியர் ஸ்ரீதர கணேசனும் அரசு, மதம், ஜாதிய நிறுவனங்கள், வணிக ஊடகம் போன்ற அதிகார சக்திகளுக்கு அப்பால் நின்று ஆத்மார்த்தமான படைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள். ஸ்ரீதர கணேசனின் படைப்புச் சாதனைகளை முன்வைத்து இரண்டு முக்கியப் படைப்பாளிகள் பேசியுள்ளார்கள். எனவே தனக்கு அனுபவப்பட்ட வாழ்க்கையை நேர்மையாகத் தனது படைப்புகளில் முன்வைத்து எழுதிவரும் எழுத்தாளருக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில்

பதிவு: கே.பி.எஸ்.மேனோன் நூலக அரங்கு, கோட்டயம், ஜூலை 7, 2012
என்னெஸ்  

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையையொட்டித் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் விதமாகவும் பிரச்சினைக்கு மாற்று வழிகளைக் கண்டடைவதற்குமாக ‘உயிர்’ என்ற அமைப்பும் கோட்டயம் பொது நூலகமும் இணைந்து ஜூலை 7, சனிக் கிழமை அன்று கோட்டயம் கே. பி. எஸ். மேனோன் நூலக அரங்கில் ஒரு கூட்டத்தை நடத்தியது. தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளின் பின்னணியில் செயல்படும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுலகினர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், விவசாயிகள் ஆகியோர் இந்த மாற்றுத் தேடல் முயற்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்தது. தமிழகத்திலிருந்து த

செம்மை
நஞ்சுண்டன்  

சமீபத்தில் சுந்தர ராமசாமியின் ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு சிறு கதையைப் படிக்க நேர்ந்தது [காகங்கள் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பு, 2000]. கதையின் இரண்டாம் பத்தியில் ‘யாரோ ஒரு கட்சிக்காரர் தகப்பனாரை டாக்சி அமர்த்தி திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாராம். அன்று ஞாயிற்றுக்கிழமையும்கூட. கல்லூரியும் இல்லை’ என உள்ளது. இக்கதையின் நான்காம் பக்கத்தில் ‘ஷர்பத் குடித்து முடித்தோம். மேரி குரைத்தது. தபால்காரன் வந்து விட்டுப் போனான்’ என ஒரு பத்தி வருகிறது. கதை முழுவதும் ஒரு முற்பகலில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தபால்காரன் வருவானா என்று உடனே கேட்டுக்கொண்டேன். முதல் பக்கத்திலிருந்து நான்காம் பக்கம்வரை கதை எழுதிச் செல்லும் இடைவெளியில

எதிர்வினை
 

அம்பேத்கர் குறித்த கேலிச்சித்திரம் வெளிவந்திருக்கும் பகுதியைப் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கச் சொல்லி தலித்துகள் நடத்திய போராட்டங்களைச் சகிப்பின்மையின் அரசியல் என்று சாடியிருக்கும் க. திருநாவுக்கரசின் கட்டுரை மேலோட்டமாகப் பார்க்கும் எந்த ஒரு வாசகனுக்கும் தன் நியாயத்தைக் கற்பிக்கும் தன்மையுடையதாக இருப்பது என்பது பாராட்டுக்குரியதாக இருந்தாலும் அந்தக் கேலிச்சித்திரத்தைப் புரிந்துகொள்ளும் தன்மையும் அதன் நீட்சியாக அவர் வடித்திருக்கும் கட்டுரையும் அவர் யார் என்பதை மிகவும் தெளிவாக நின்று பேசுகிறது. இதழ்களில் வரும் கேலிச்சித்திரங்கள் எல்லாம் தவறானவை என்றும் சரியானாவை என்றும் நம்மால் சொல்லிவிட முடியாதுதான். ஆனால் அவற்றின் மீது கருத்துகளை வைப்பதோ தான்வைத்திருக்கும் கருத்திற்கு நியா

தலையங்கம்
 

ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பதினான்காம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளருமான பிரணாப் முகர்ஜி. முழுநேர அரசியல்வாதியொருவர் குடியரசுத் தலைவர் ஆகியிருப்பது பற்றிய பெருமிதம் ஊடகங்களில் பெருக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் வசித்துவந்த பிரதீபா பாட்டீலைப் போல் அல்லாமல் முகர்ஜி செயல்படும் தலைவராக இருப்பார் என்பது ஊடகங்களின் எதிர்பார்ப்பு. அரசியல்வாதியல்லாத பிரதமர் மன்மோகன் சிங்கைப் போலவும் அவர் இருக்கமாட்டார் என்றுங்கூட முகர்ஜியின் ஆதரவாளர்கள் கருதியிருக்கக்கூடும். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முகர்ஜி உண்மையிலேயே செயல்படும் குடியர

உள்ளடக்கம்