கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

ஒலிம்பிக்ஸின் பூர்வீகம் கிரேக்க நாட்டின் ஒரு பட்டணம் என்பது விளையாட்டுகளை அரைகுறையாகக் கவனிப்பவர்களுக்குக்கூடத் தெரியும். இன்றைக்குப் புதிய வடிவங்களோடு பரிணமித்திருக்கும் நவீன ஒலிம்பிக்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுமுகமான ஆனால் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த உறவை வெளிப்படுத்தியவர் ஓர் ஆங்கிலேயர் அல்ல. ஆங்கிலக் கலாச்சார நேசகரான Charles Pierre Coubertin (1863 - 1937) என்ற பிரான்சு நாட்டவர். கொபார்ட்டின்தான் செயலற்றுப்போன இந்தப் பண்டைய விளையாட்டுகளை மீள்கண்டுபிடித்தவர். இன்றைக்கும் ஒலிம்பிக்ஸ் என்னும் வார்த்தையைக் கேட்டவுடன் நினைவுக்கு வரும் ‘வாகை சூடுவதல்ல பங்குகொள்வதுதான் முக்கியம்’ என்னும் சாசுவதமான வார்த்தைகளின் சொந்தக்காரர் இவர்தான். நவீன ஒலிம்பிக்ஸ் மறுப

சின்ன விஷயங்களின் கடவுள்
செல்லப்பா  

தமிழ்மொழி மூலமாக உலக இலக்கியப் பரிச்சயம்கொண்ட வாசகனின் நீண்ட கால எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது. அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் புக்கர் பரிசுபெற்றதிலிருந்தே அந்நாவல் குறித்த பாராட்டு மொழிகளும் அதன்மீது தூற்றப்படும் அவதூறுகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. 28 ஜூலை 2012 வரை 38 மொழிகளில் பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்த நாவல் அன்று தமிழிலும் வெளியாகி வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் சில அல்லது பல ஆயிரங்கள் அதிகரித்துக்கொண்டது- வெளியான அன்றே விற்றுத்தீர்ந்த பிரதிகள் அதற்குச் சான்று. இப்போது 39 மொழிகளில் வெளியான நாவல் என்னும் பெருமையையும் அது பெற்றுள்ளது. அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் தன்னுடன் மேலும் 3 நூல்களை இணைத்துக்கொண்டு அரங்கேறியது. கிறிஸ்தவர்கள

சின்ன விஷயங்களின் கடவுள்
சுகுமாரன்  

அனைவருக்கும் வணக்கம். அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் நாவலை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு ஒரு பெரிய காரணமும் சில சின்னக் காரணங்களும் இருக்கின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கிடையில் நான் வாசித்து மகிழ்ந்த, என்னைப் பரவசப்படுத்திய மிகச் சில ஆங்கிலப் படைப்புகளில் ஒன்று இந்த நாவல். நான் சிந்திக்கும், கனவு காணும் என்னுடைய மொழியில் இனி இந்த நாவலை வாசிக்கவும் இதைப் பற்றி என்னுடைய மொழியிலேயே கலந்துரையாடவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்பது பெரிய காரணம். சின்னக் காரணங்கள் நிறைய இருக்கின்றன. இந்தக் காரணங்களுக்காகத்தான் அதை விரும்பினேனா எனக் கேட்டால் இந்தக் காரணங்களுக்காகவும்தான் என்று தான் சொல்ல முடியும். விருப்ப

சின்ன விஷயங்களின் கடவுள்
அருந்ததி ராய்  

காஷ்மீரில் இருக்கும் இந்தியாவின் முகமூடிகளைக் கிழிக்கிறீர்கள். இலங்கையில் ராஜபக்சேவின் முகமூடியைக் கிழிக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி உங்கள் கருத்து என்ன? ஆரம்பத்திலேயே இதைப் பற்றி எழுதிய வெகுசிலரில் நானும் ஒருத்தி என நினைக்கிறேன். போரின்போது, அது நடந்துகொண்டிருந்தபோது நான் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: நான் என்ன சொன்னேன் என்பதல்ல, நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதுதான். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள்? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள்? இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள்? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்

சின்ன விஷயங்களின் கடவுள்
கண்ணன்  

‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அந்நூல் மொழிபெயர்க்கப்பட்ட முன்கதையைச் சுகுமாரன் பேசும்வரை அக்கூட்டத்தில் அதை அவர் பேசவிருந்தது எனக்குத் தெரியாது. நிகழ்ச்சியில் சுகுமாரன் உண்மையைப் பேச வேண்டும் என்று மனுஷ்யபுத்திரன் முகநூலில் விடுத்த கோரிக்கையே அவருக்குத் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும். யாரும் காலச்சுவடு நிகழ்ச்சியில் உண்மையை மட்டுமல்ல, தமது கருத்துகளைப் பேசுவதிலும் எனக்குப் பிரச்சினை இருந்ததில்லை. காலச்சுவடு போதிக்கும் விஷயங்கள் மிகக் குறைவு. அதில் கருத்துச் சுதந்திரமும் காப்புரிமையும் முக்கியமானவை. அமைப்பின் உள்ளே கடைப்பிடிப்பவற்றை வெளியேயும் போதிப்பதே சிறப்பு. உண்மையைப் பேச சுகுமாரனுக்கு நெருக்கடி கொடுத்து எழுதப்பட்ட முகநூல் குறிப்பு

நேர்காணல்
சந்திப்பு: தேவிபாரதி  

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மரபான இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைகொண்ட அவர் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகிறார். தமிழில் கால்கொண்ட அமை

க.நா.சு. 100
ஜி. குப்புசாமி  

தன்னை வெறுக்கிற சமுதாயத்தை விட்டுக் கெட்டிக்காரத்தனமாக ஒதுங்கி நின்று உண்மை இலக்கியாசிரியன் தனது முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறான். மௌனமாக, வாசகர் கவனத்தையும் கவர விரும்பாமல் - திருட்டுத் தனமாக என்றுகூடச் சொல்லலாம் - எழுதிச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தனி மனிதனாக அவன் கௌரவிக்கப்படுகிறான். எழுதிவிட்டானானால் ஒரு சில வாசகர்களையேனும் எட்டுவது பெரிய விஷயமாக இல்லை. வேறு என்ன வேண்டும் ஒரு நல்ல உண்மையான இலக்கியாசிரியனுக்கு? இலக்கிய வட்டம் இதழ் 7, 14.2.64 இன்றையத் தமிழ் இலக்கியம் கட்டுரையில் க.நா.சு. கந்தாடை நாராயணஸ்வாமி சுப்ரமண்யம் (க.நா.சு) என்னும் பன்முக ஆளுமையின் மொழி பெயர்ப்பாளர் என்ற பரிமாணம் மட்டுமே இக்கட்டுரையில் மீள்பார்வை செய்யப்பட்டுள்ளது. நாவலாசிரியர், சிறுகத

 

அரும்பு கவிதைகள் அனார் கவிதைகள்

சிறுகதை
 

வலி. அவன் வயிறு முறுக்கி வலிக்க ஆரம்பித்தது. நிச்சயம் தன்னால் மேலும் அதிகத் தொலைவு நீந்திவிட முடியுமென்றே நம்பினான். ஆனால் கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே அவன் வயிறு வலிக்கத் தொடங்கியிருந்தது. நகர்ந்துகொண்டே இருந்தால் வயிற்றுவலி மறைந்துவிடுமென்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் முறுக்கி வலித்தபோது நீந்துவதை நிறுத்திவிட்டுக் கையால் தொட்டுப் பார்த்தான். வலது புறத்தில் ஏதோ கெட்டியாக நெருடியது. குளிர்நீரால் ஏற்பட்ட சுளுக்கு என்று அவனுக்கு ஏற்கனவே தெரியும். நீருக்குள் இறங்கும் முன்னர் அவன் உடற்பயிற்சி எதுவும் செய்திருக்கவில்லை. உணவுண்ட பிறகு விடுதியிலிருந்து நேராகக் கிளம்பிக் கடற் கரைக்கு வந்திருந்தான். இலையுதிர்காலத் தொடக்கம். குளிர் காற்றடித்தது. அந

திரை
எம். ரிஷான் ஷெரீப்  

நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும் - ஒஸ்கார் விருது வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம். விவாகரத்து கோரி நிற்கும் இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் அவர்களுடைய பதினோரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தன் மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின் கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயால் பாதிக்கப்பட்ட முதியவரான தன் தந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள். ‘ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே.

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
சுகிர்தராணி  

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நான் எழுதவந்தபோது தான் சிற்றிதழ்களின் அறிமுகம் கிடைத்தது. அதற்கு முன்புவரை இலக்கியத்திற்கு என்று சிற்றிதழ்கள் வெளிவருகின்றன என்பதுகூடத் தெரியாமல் இருந்தேன். வணிக இதழ்களையும் மாதாந்திர நாவல்களையுமே வாசித்துப் பழக்கப்பட்டிருந்த எனக்குச் சிற்றிதழ்கள் ஆச்சரியத்தையும் மகிழ்வையும் தந்தன. கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், சமூக, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த சிற்றிதழ்களை வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி அறிமுகமானவைதாம் காலச்சுவடு, கணையாழி போன்ற இதழ்கள். அவற்றை வாசித்ததும் என்னுள் கிளம்பிய கேள்விகள், சிந்தனைகள் போன்றவற்றை எப்படிப் பகிர்ந்துகொள்வது, யாரிடம் பகிர்ந்துகொள்வது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அந்தக்

அஞ்சலி: கேப்டன் லட்சுமி சேஹல்
இரா.முருகானந்தம்  

23.07.2012 அன்று கேப்டன் லட்சுமி சேஹல் காலமானபோது இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதன் பிறகான இந்திய அரசியல் களத்திலும் பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயம் ஒன்று முடிவுபெற்றது. லட்சியத்தின் மீதான அரசியல் பணியையும் தொழில் சார்ந்த மருத்துவப் பணியையும் தன் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப் பணித்து வாழ்ந்த அவரது பூதவுடல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டது சாலப் பொருத்தமே. 24.10.1914 அன்று சென்னையில் சுவாமிநாதன் - அம்மு தம்பதியினருக்கு லட்சுமி மகளாகப் பிறந்தார். பெற்றோர் இருவரும் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தந்தை டாக்டர் சுவாமிநாதன் புகழ்பெற்ற வழக்குரைஞர். சென்னைச் சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டமும் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் சட்ட மேற்படிப்

மதிப்புரை: அழகம்மா
கவிதா முரளிதரன்  

“மெடுஸாவைச் சந்திப்பதற்கு நீங் கள் அவளை நேராகப் பார்க்க வேண்டும். அவள் பயங்கரமானவள் அல்ல. அவள் அழகானவள், அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.” ஹெலன் சிக்ஸூ (தி லாஃப் ஆப் தி மெடுஸா – The laugh of the medusa) அழகம்மா (சிறுகதைகள்) ஆசிரியர்: சந்திரா பக்கம்: 96, விலை ரூ. 70 வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம் திருச்சி-1. தொலைபேசி 0431 6523099 அழகம்மாவும் சிரிக்கிறாள். ‘ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒரேயொரு தரம் தான் அந்த மாதிரி சிரிக்க முடியும்.’ அப்படியொரு சிரிப்பு அது. அந்தச் சிரிப்பு அழகம்மாவுக்கேகூடத் திரும்ப வாய்க்கவில்லை. காத்தம்மாளுக்கும் நல்லபெருமாளுக்கும் கடைக்குட்டியாகப் பிறந்து பேரழகியாக வளரும் அழகம்மாவைக் குடும்பமே கொண்டாடுகிறது. தன்

பதிவு: ஈரோடு புத்தக கண்காட்சி நூல் வெளியீட்டு நிகழ்வு, ஈரோடு - 2012 ஆகஸ்டு 4
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடந்த அருந்ததி ராயின் நாவல் உள்ளிட்ட நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு அடுத்த சில தினங்களில் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஈரோட்டில் மற்றுமொரு வெளியீட்டு விழாவையும் காலச்சுவடு நடத்தியது. ஈரோடு புத்தகக் கண்காட்சியை ஒட்டி நான்கு நூல்கள் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. கண்காட்சி நடந்த வ. உ. சி. மைதானத்திற்கு அருகிலிருந்த ஆக்ஸ்போர்டு ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடந்தது. தேவிபாரதியின் வரவேற்புரையோடு தொடங்கிய இந்நிகழ்வில் D. டேவிட் எழுதி ஸ்டாலின் ராஜாங்கம் பதிப்பித்துள்ள விழுப்புரம் படுகொலை 1978 என்ற நூல் முதலில் வெளியிடப்பட்டது. 1978ஆம் ஆண்டு விழுப்புரம் நகரில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது 12 தலித்துகள் துன்புறுத்திக் கொல்லப்பட்ட வன

திர்வினை
க. திருநாவுக்கரசு  

‘கருத்துச் சுதந்திரமும் கால் கிலோ மண்ணாங்கட்டியும்’ என்னும் தலைப்பே கருத்துச் சுதந்திரம் குறித்து யாழன் ஆதி கொண்டிருக்கும் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ‘இதழ்களில் வரும் கேலிச் சித்திரங்கள் எல்லாம் தவறானவை என்றும் சரியானவை என்றும் சொல்லிவிட முடியாதுதான். ஆனால் அவற்றின் மீது கருத்துகளை வைப்பதோ தான் வைத்திருக்கும் கருத்திற்கு நியாயத்தைக் கோருவதோ எப்படிக் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக இருக்கும் என்று விளங்கவில்லை’ என்கிறார் யாழன் ஆதி. எனக்கும் விளங்கவில்லைதான். ஒரு கருத்தைக் கடுமையாக விமர்சிப்பதும் முற்றிலுமாக நிராகரிப்பதும் தனது கருத்திற்கு நியாயத்தைக் கோருவதும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தும் விஷயங்களேயன்றிப் பறிப்பவை அல்ல. இதையே எனது கட்

செம்மை
நஞ்சுண்டன்  

யாரடி நீ மோகினி படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. சில மாதங்களுக்கு முன் நான் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை சமையல் வேலைக்கிடையில் அதன் சில காட்சிகளைக் கவனித்தேன். கதாநாயகனின் தந்தை இறந்துவிட அவன் நண்பன் கதாநாயகனின் மன ஆறுதலுக்காகத் தன் ஊருக்கு அழைத்துச் செல்கிறான். நண்பனின் குடும்பத்தினர் மிகத் தீவிரமான வைணவர்கள். வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது. அவர்கள் அநேகமாக ஆழ்வார் திருநகரி ஐயங்கார்கள். கதாநாயகன் தன்போக்கில் வீட்டின் உட்பகுதிக்குள் நுழைந்தவுடன், அங்கிருக்கும் முதிய கைம்பெண் விழுப்பாகிவிட்டதாகக் கூப்பாடு போட்டு, ‘பெருமாளே பெருமாளே’ எனப் புலம்புகிறார். தீவிர வைணவப் பெண் நாராயணா அல்லது பெருமாளே என்று

தலையங்கம்
 

சுதந்திர தினத்தையொட்டிச் சமீபத்தில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் வந்த செய்தி இது. கடந்த ஏப்ரல்மாதம் சென்னையில் டி. பி. சத்திரம் என்னும் இடத்தில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம்செய்தபோது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருடைய தம்பி சின்னமுனியைப் பேட்டி கண்டு ஒளிபரப்பியிருந்தது. அந்தத் தொலைக்காட்சி. மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்காது. அண்ணனின் வேலையை வாங்கிவிட்ட சின்னமுனியும் கடந்த ஜூலைமாதம் சாக்கடையில் இறங்கிச் சுத்தம் செய்தபோது காதுக்குள் நுழைந்த கிருமி மூளையைத் தாக்கியதால் இறந்துவிட்டார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் சுமார் பத்தொன்பதுக்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகக் களப்பண

உள்ளடக்கம்