கட்டுரை
கவிதா  

அகிம்சைதான் நமது வழிமுறை என்றால், எதிர்காலம் பெண்களிடம்தான் இருக்கிறது. ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரால் இதயத்தைத் தொடும் ஒரு வலுவான கோரிக்கையை முன்வைக்க முடியும்? - காந்தி சேவியரம்மாவுக்கு அது முதல் சென்னைப் பயணம். அவருடன் வந்திருந்த 20 சொச்சம் பெண்கள், குழந்தைகளில் அனேகருக்கும்கூட அது முதல் பயணமாக இருக்கக்கூடும். தலைமைச் செயலகத்துக்குப் போக, மெரினாவைக் கடக்கும்போது அவர்களுடைய கண்களில் மின்னல். “இங்கதானே அண்ணா சமாதியெல்லாம் இருக்கு?” என்று கேட்கிறார் இமாக்குலட். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு நேரமிருந்தால் மெரினாவுக்கு வரலாம் என்னும் எனது ஆலோசனையை மென்மையாகப் புறந்தள்ளுகிறார்கள் அந்தப் பெண்களும் குழந்தைகளும். “வேண்டாம் கா, நாங்க அதுக்காக வரல” என்கிற

கட்டுரை
 

1. கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரிலும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான் மைல் தூரத்திலும் உள்ள கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் செயல்படப்போகிறது. மின் உற்பத்தித் துறையில் அணு ஆற்றல் நமக்கு அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுப்புறவாசிகளுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா? அணுமின் நிலையம் அமைக்கக் கூடங்குளம் பொருத்தமானதா? அங்குக் கட்டப்பட்டுள்ள மின் நிலையம் பாதுகாப்பானதா? இவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டியது அவசரத் தேவையாகி இருக்கிறது. 2. உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும்போது இந்தியா மட்டும் ஒதுங்கி இருக்க முடியாது என்னும் வாதம் எதார்த்த நிலைக்கு முரணானது. இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்கு

கட்டுரை
சு. கி. ஜெயகரன்  

மன்னர்கள் காலத்திலிருந்து கோயில்கள், கோட்டை, கொத்தளங்கள் கட்டக் கொத்தடிமைகளை ஈடுபடுத்திப் பாறைகளையும் கற்களையும் உடைத்துப் பயன்படுத்தியது நடந்துவந்தது. அதே வேலை இன்று நவீனக் கனரக இயந்திரங்களின் உதவியுடன், பெரும் முதலீடுகளுடன், தொலை நோக்கற்ற நகர அபிவிருத்தித் திட்டங்கள், அடுக்குமாடிக் கட்டடப் பணிகள், சாலைகள் அமைப்பு, கொள்ளை லாபம் ஈட்டும் பாறைகள் ஏற்றுமதி ஆகியவற்றின் முக்கியக் கூறாக இயங்குகிறது. வெட்டப்பட்ட பாறைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடம்பிடிக்கும் இந்தியா ஆண்டுக்கு 276 மில்லியன் யூரோ மதிப்புள்ள கற்களை அனுப்புகிறது. அவற்றில் 30% தமிழ்நாட்டிலிருந்தும் 27% கர்நாடகத்திலிருந்தும் 24% ஆந்திராவிலிருந்தும் மீதி இதர மாநிலங்களிலிருந்தும்

கட்டுரை
பூமா சனத்குமார்  

கடந்த ஜூன்மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் - முந்தைய 1992ஆம் ஆண்டின் ரியோ பூமி மாநாடு நடந்து இருபது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் - நிலையான வளர்ச்சி குறித்த ஐ. நா. மாநாடு ஊடகப் பரபரப்பு ஏதுமின்றியும் ஆரவாரமற்றும் நிகழ்ந்து முடிந்துள்ளது. முந்தைய மாநாட்டின்போது பங்கேற்ற நாடுகளுக்கிருந்த பொறுப்புணர்வும் பேரவாவும் உறுதியான தீர்மானங்கள் பலவற்றை நிறைவேற்ற வைத்து, உலகளவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் விவாதங்களையும் தூண்டின. ஆனால் இப்போதைய மாநாடு உறுதியான முடிவுகள் எவையுமின்றி நிறைவடைந்துள்ளதை இன்றைய உலகளாவிய பிரச்சினைகளின் - குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைகுலைந்த பொருளா தாரங்களின் - பின்னணியில் புரிந்துகொள்ளும்போது ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்ல

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்  

1. முன்பு வால் இப்போது வாள் அதனால் என் குரலை எழும்பவிடாமல் செய்வது அறமாகாதென்பதை நீங்கள் படித்தெறிந்த புத்தகங்களின் வழி அறிந்ததால் சொல்கிறேன் பலஹீனன்தான் மறுபடியும் உங்கள் முன் கும்பிட்டு நிற்கக்கூடியவன்தான் ஆனாலும் மன்னித்துவிடுங்கள் என்னால் முடியாது நான்கொண்ட விசுவாசத்திற்காக அவமானப்பட்டேன் சமர் செய்தேன் சமரசமானேன் சாவோடு பகடையாடினேன் இருட்டிலும் உங்கள் சுவடைப் பின் தொடர்ந்தேன் நிழலாக இருந்தவனே உங்களுக்கு ஆதரவாக இல்லை வேதனைதான் புரிகிறது ஒரு தோட்டா ஒரு அடி ஒரு அறை குறைந்த பட்சம் ஓர் அதட்டலே போதுமெனக்கு இருந்தாலும் உங்களுக்கு வாலாட்ட முடியாது மன்னித்துவிடுங்கள் இறுதிச் சொட்டு விஸ்வாசத்தோடு சொல்கிறேன் மூன்றுதலைமுறைக்கும் மேலாக உ

கட்டுரை: சுந்தர ராமசாமியின் கட்டுரைகள்: ஒரு விரிவான அறிமுகம்
அரவிந்தன்  

“நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் என்னுடைய நடுத்தரமான படைப்புகளின் ஆயுளைக் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துகளை என் வாசகன் சரிவரப் புரிந்துகொள்கிறபோது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துகளை அறியாத நிலையில் மிகச் சிறப்பாக நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துகளைத் தெரிந்துகொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை ஏன் உங்களால் படைக்க முடியவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க அவனுக்குக் கற்றுத்தந்து நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் என்னை அவனால் நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்.&

உரை
தொகுப்பு: கமலா ராமசாமி  

அன்பார்ந்த நண்பர்களே, முதலில் நான் ஒரு நல்ல மன நிலையில், சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு இலக்கிய கூட்டத்திற்கு இந்த அளவுக்கு நண்பர்கள் வருவார்கள் என்பது தமிழ்நாட்டிலே ரொம்ப அபூர்வமான விஷயம். அதிக அளவு கூட்டம் வந்தாலும் இலக்கியக் கூட்டத்தில் பிரச்சினைதான். போதுமான அளவு வந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருப்பது, அதற்கான அமைப்பு, சூழல் எல்லாமே மனதுக்கு இதமாயிருக்கிறது. வெளியிலே மழை பெய்வது அதிக சந்தோஷம் தருகிறது. மழை பெய்யும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. அது இன்னும் சந்தோஷமளிக்கிறது. மழையோடு குறுக்கீடில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். மழையால் நமக்கு எந்தத் தொந்தரவுமில்லை. நம்மால் மழைக்கும் தொந்தரவில்லை. நீண்ட நாட்களாக இந்த ஊ

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
கருணாகரன்  

சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவல் வெளிவருகிறது என்னும் அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தபோது உள்ளூரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்னும் பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே இதைப் புலி ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாகத் தேவையில்லாத வம்பில் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழ வில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியல் சூழலில் ‘புலி நகக்கொன்றை’ தப்பியது அபூர்வமே. இதை ஏன் சொல்கிறேன் என்றால், க

சிறுகதை
 

செனட்டர் ஓனெசிமோ சான்செஸ் இறப்பதற்குச் சரியாக ஆறு மாதம் பதினோரு நாட்கள் மிச்சமிருந்தபோது வாழ்க் கையிலேயே தான் மிகவும் விரும்பிய பெண்ணைச் சந்தித்தார். ரோஸல் டெல் வெர்ரி கிராமத்தில் அவளைச் சந்தித்தார். அந்தத் தீவைப் பகல் நேரத்தில் பார்த்தால், பாலைவனத்தில் கடல் நீர் புகுந்திருக்கும் பகுதியைப் போலக் காட்சியளிக்கும். இரவு நேரத்தில் கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கான இறங்குதளமாக இருக்கும். யாருடைய வாழ்வையாவது மாற்றியமைக்கக்கூடிய யாராவது அங்கே வசிக்கக்கூடும் என யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இடம் அது. அத்தீவின் பெயரே நகைப்பிற்குரியதுதான். அந்தக் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு ரோஜாவை செனட்டர் ஓனெசிமோ அணிந்திருந்தார். லாரா ஃபரினாவை அவர் சந்தித்தது அந்த மதியப் பொழுதில்தான். ஒவ்வொ

மதிப்புரை
புலவர் செ. ராசு  

சோழர் காலச் செப்பேடுகள் ஆசிரியர்: மு. ராஜேந்திரன் பக்கம்: 322, விலை ரூ.200 வெளியீடு அகநி வெளியீடு வந்தவாசி-604 408 94443 60421   தமிழக அரசின் இந்திய ஆட்சிப் பணி (IAS) அலுவலர்களில் ஒருவரான டாக்டர் மு. இராசேந்திரன் தன் முதல் தமிழ்ப் படைப்பான சோழர் காலச் செப்பேடுகள் என்னும் அறிமுக நூலை மிகவும் ஆர்வமுடன் எழுதியுள்ளார் (டிசம்பர் 2011). இந்நூலை வந்தவாசி, அம்மையப்பட்டு மு. முருகேஷ் தம் அகநி வெளியீடு மூலம் நல்ல பதிப்பாக வெளியிட்டுள்ளார். இதுவரை சோழர் செப்பேடுகள் பற்றிய முழுமையான தொகுப்பு நூல் வரவில்லை என்னும் குறையைப் போக்கும் வண்ணம் இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுதற்கு உரியது (இதே டிசம்பர் 1911இல் முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் நடன காசிநாத

திறந்தவெளி
எஸ். நீலகண்டன்  

25. 07. 2012 தேயிட்ட துக்ளக் வார இதழ் (Vol. XLIII - No. 28) பக்கம் 31-32இல் ‘அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் நமக்குத் தேவையா’ என்பது பற்றித் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் போராசிரியர் ஆர். சேதுராமன் கட்டுரைத் தொடர் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அதில் 2.2.1835இல் மெக்காலே பிரபு பிரிட்டீஸ் பாராளுமன்றத்தில் பேசியது என்று கீழ்வரும் மேற்கோள்களைக் காட்டியிருக்கிறார். ‘இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நான் சென்று பார்த்திருக்கிறேன். பிச்சைக்காரர் எவரும் என் கண்ணில் படவில்லை. அதே போலத்தான் திருடனும் தென்படவில்லை. இப்படிப்பட்ட அரிய காட்சியை இந்த நாட்டில்தான் பார்க்கிறேன். வாய்மையையும், மரபையும் உயிரெனப் போற்றும் பண்பாளர்களை இங்கே நா

எதிர்வினை
பரமு லோகநாதன்  

எழுபதுகளில் “ஈமானைக் கொன்றவன் நான்” என்று இலங்கை வானொலியில் கவிதை பாடிய நுஹ்மான், அன்று முஸ்லிம்கள் பலரால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார். அப்போது நுஹ்மான் ஒரு மாவோயிஸ்ட்; நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு காம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி. இன்றைய 2012இன் நுஹ்மான், முஸ்லிம் தேசியவாதியாக-ஒற்றைப்படையான அகவயக் கருத்துகளை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தையே தருகிறது! அவர் சொன்னதிலும் சொல்லாமல் விட்டதிலுமுள்ள நுண்ணரசியல் ஆராயத்தக்கது. 1. ‘இஸ்லாமிய உயர்குழாத்தினர்’ “. . .தாங்கள் அராபிய வழித்தோன்றல்கள் என்றும் தங்களுடையது தூய அரபு ரத்தம் என்றும் வாதிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ததால் சில கலாசார ஒற்றுமைகள் இருக்கலாம், ஆனால் தங்க

எதிர்வினை
 

ஜூலை 2012 காலச்சுவடு இதழில் க. திருநாவுக்கரசு எழுதிய ‘கருத்துச் சுதந்திரம் சகிப்பின்மையின் அரசியல்’ என்னும் கட்டுரையையும் அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட், செப்டம்பர் மாத இதழ்களில் வந்த எதிர்வினைகளையும் வாசித்தேன். கருத்துச் சுதந்திரம் பற்றித் திருநாவுக்கரசு கொண்டிருக்கும் புரிதல்கள் கோட்பாட்டு முறையிலானவை. செய்முறை வடிவிலானவை அல்ல. ஒரு கோட்பாட்டுக்குள் நடப்பு நிகழ்வுகளை அடைக்கும் முயற்சி. குறிப்பிட்டதொரு கோட்பாட்டுக்குள் அல்லது தத்துவத்திற்குள் சூரியனுக்குக் கீழே இருக்கும் எல்லா விசயங்களும் அடங்கிவிடுவதில்லை. கருத்துச் சுதந்திரம் வெளிப்படும்போதெல்லாம் அது எவ்வாறு அடக்கப்படுகிறது என்பதற்கு அவர் உதாரணமாகக் காட்டும் பல புத்தகங்கள் யாவும் நிறுவனமயப்பட்ட நபர் அல்லது அமைப்ப

கண்ணன்  

நான் முதல்முறையாகச் சிங்கப்பூர் போனபோது - 2002இல் என்று நினைவு -சிங்கப்பூர் தமிழ்ப் பேட்டையான செராங்கூன் ரோட்டில் ஒரு விடுதியில் தங்கினேன். அதைவிடச் சின்ன அறையை அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. சும்மா நண்பர்களைச் சந்திக்கச் சென்ற பயணம். முதல் வேலையாக ஒரு சிம் கார்டை வாங்க முடிவுசெய்தேன். ஓட்டல் அருகிலேயே கடை இருந்தது. சீனப் பெண்மணியிடம் சிம் கிடைக்குமா என்றேன். can என்று பதிலளித்தார். சிங்கப்பூரின் ரத்தினச் சுருக்கமான ஆங்கிலத்தை அதற்கு முன்னர் நான் கேட்டதில்லை என்பதால் ஒரு கணம் திகைப்பு ஏற்பட்டது. can or cannot do la என்பதை கடைக்காரரிடம் நாம் இங்கு தமிழில் பேசி முடிக்க 10 நிமிடம் ஆகும்! சிம்மில் எனக்கு வரும் அழைப்புகள் இலவசமாக இருக்கும் திட்டம் வேண்டும் என்றேன். சீனப்

தலையங்கம்
 

அடித்தட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மிக வலிமையானதும் மகத்தானதுமான போராட்டங்களுக்கு நம்காலத்தின் உதாரணமாக விளங்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு எதிராகக் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி காவல் துறை தனது அடக்குமுறையை ஏவியது. தம் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அணு உலை என்னும் பேரழிவை உருவாக்கும் அபாயத்துக்கு எதிராகவும் மனஉறுதியோடு போராடிவரும் அந்த எளிய மக்கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் தன் வீரத்தை நிலைநாட்ட முயன்றது காவல் துறை. பன்னாட்டு நிறுவனங்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகத் தன் சொந்த மக்களின் நலன்களைப் பலியிடுவதற்குத் தயாராகிவிட்ட மத்திய, மாநில அரசுகளின் விசுவாசமான இந்த வேலைக்காரர்கள் தூத்துக்குடி