கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் சாதிமீறிக் காதலித்த காரணத்திற்காகத் தலித்தான முருகேசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி ஆகிய இருவரையும் ஊரின் ஆதிக்க சாதியினர் கொடூரமாகக் கொலைசெய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமுகமான ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது. இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அக்கட்சி சட்டரீதியாக உதவியதாகவும் கூறப்பட்டது. புகாரை அந்தக் கட்சி இதுவரை மறுக்கவில்லை. ஆனால் கடந்த 2012 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் பெண்களைப் பிற சாதி ஆண்கள் காதலிக்கவோ

நேர்காணல்
 

தம் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டம் தற்போது முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அரசின் அடக்குமுறையை மீறி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விடாப்பிடியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீதும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மீதும் அரசும் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அவதூறுகள் நம் காலத்தின் அசாதாரணமானதொரு மக்கள் போராட்டத்தை மிக அநாகரிகமான முறையில் இழிவுபடுத்துபவை. அணு மின்நிலையங்களின் அபாயம் தொடர்பாக ஏற்கனவே நிறுவப்பட்ட உண்மைகளைக் கொஞ்சமும் வெட்கமில்லாமல் மூடிமறைத்து, இப்போராட்டத்திற்கு மக்கள் அளித்துவரும் தார்மீக ஆதரவைக் குலைத்துப் போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்தும் தந்திரமான நடவ

கட்டுரை
பி. ஏ. கிருஷ்ணன்  

1 மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் போன்றது வரலாறு. அது வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட நூற்றாண்டுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருபதாம் நூற்றாண்டு இத்தகைய நூற்றாண்டுகளில் ஒன்று. ஹாப்ஸ் பாமின் வாழ்க்கையையே எடுத்துக்கொள்வோம். ஹாப்ஸ்பாம் 9 ஜூன் 1917ஆம் ஆண்டு எகிப்திய நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரத்தில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். அந்த ஆண்டில் முதல் உலகப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. ரஷ்யப் புரட்சியின் சூல்காலத்தின் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்தது. அலெக் ஸாண்டிரியாவில் அன்று சுமார் 50,000 யூதர்கள் இருந்தனர். அலெக்ஸாண்டிரியாவிலிருந்து அவரது குடும்பம் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவிற்குக் குடிபெய

கட்டுரை
ஆ.இரா.வேங்கடாசலபதி  

எரிக் ஹாப்ஸ்பாம் (1917-2012) “1913ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில், ஆஸ்திரிய–ஹங்கேரிப் பேரரசின் தலைநகரான வியன்னாவில் ஓர் இளம்பெண் உயர் நிலைப்பள்ளியில் தேறினாள். அக்கால மத்திய ஐரோப்பாவில் பெண்கள் இவ்வாறு தேர்ச்சி பெறுவது அரிதானதால், இதைக் கொண்டாடுவதற்காக அவளுடைய பெற்றோர் அவளை வெளிநாட்டுச் செலவுக்கு அனுப்ப முற்பட்டனர். கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பதினெட்டு வயதுப் பெண்ணைத் தனியே அனுப்ப இயலுமா? உதவிக்குப் பொருத்தமான துணையைத் தேடினர். அதிர்ஷ்டவசமாக, போலந்திலிருந்தும் ஹங்கேரியிலிருந்தும் அதற்கு முந்தைய தலைமுறையில் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்து, செல்வமும் கல்வியும் ஈட்டிய பல உறவுக்காரக் குடும்பங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று சிறந்த செல்வ வளம் பெற்றிருந்தது. ஆல்பர்ட் மாமா

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நான் தினமும் வாசிக்கும் த கார்டியன் நாளிதழில் g2 என்ற இணைப்பு வரும். அதில் ஆங்கில நாவல்களில் அதிசிறந்த கடைசி வரிகள் எவை என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குப் பெரும்பான்மையான த கார்டியன் பிரியர்கள் தேர்ந்தெடுத்தது ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசி வாசகம். ருசியப் புரட்சியைப் பற்றிப் பரிகாசமாக எழுதப்பட்ட நாவல் தரும் கருத்து அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் புரட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதுதான். நாவலின் முடிவில் பண்ணை உரிமையாளர்களும் அவர்களை எதிர்த்த பன்றிகளின் தலைமைப்பீடமும் ஒன்றுகூடுகிறார்கள். சிரிப்பும் பாட்டுச் சத்தமும் கேட்கின்றன. என்னதான் நடக்கிறது என்று அப்பாவியான விலங்குகள் வெளியே நின்று பார்க்கின்றன. எந்தவிதத

சிறுகதை
 

தாத்தன் செத்தபோது குமரேசனுக்கு ஏழு எட்டு வயதிருக்கும். அந்த ஊரில் வயிற்றுப்பாட்டுக்கு அவ்வளவாகப் பிரச்சினை இல்லை என்பதால் ஓராண்டுக்கு மேல் அவன் குடும்பம் அங்கே நிலையாகத் தங்கியிருந்தது. பறவைகள் கும்மாளமிடும் ஏரிக் கரையோரப் பாறைச் சிறுகுடிசை அவர்களின் வசிப்பிடம். நீர்ப் பறவைகளை வேட்டையாடுவது அவர்களின் தொழிலல்ல. ஊரார் யாரும் எச்சமயத்திலும் பறவைகளுக்கு ஊறு விளைவிப்பதில்லை. ஆகவே அவற்றோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். தாத்தா பாட்டியுடன் அவன் குடும்பமும் சித்தப்பன் குடும்பமும் எனப் பன்னிரண்டு, பதின்மூன்று பேர் இருந்தார்கள். பாட்டிக்குத் தினம் ஒரே வேலை. முன்னிரவில் ஊருக்குள் போய் வருவாள். மூன்று சட்டிகளே அவள் சொத்து. அவள் கைச்சட்டியில் சோறு நிறைந்திருக்கும் நாளில் ‘நெறசட்டி

 

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள் அகச்சேரன் கவிதை வே. பாபு கவிதை

நூல் அறிமுகம்
 

மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்குத் தமிழில் எப்போதுமே ஒரு சிறப்பான இடம் இருந்து வருகிறது. தமிழ் நவீன இலக்கியத்தின் ஒருபகுதி என்றுகூட மொழிபெயர்ப்புகளைக் குறிப்பிடலாம். பாரதி, புதுமைப் பித்தன் தொடங்கி தமிழின் நவீன இலக்கிய ஆளுமைகளில் பலரும் மொழிபெயர்ப்புகளில் அக்கறையுடன் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். உலக மொழிகளில் புகழ் பெற்ற படைப்புக்களாக அறியப்பட்டவற்றில் கணிசமானவை தமிழுக்கு வந்துள்ளதைக் குறித்துத் தமிழ் வாசகன் நிச்சயமாகப் பெருமைகொள்ள முடியும். நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பு இவ்வகையில் ஒரு புதிய வரவு. சி. மோகன் நடத்திய புனைகளம் இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. ஜூலியோ கொர்த்தஸார், மிலன் குந்தேரா, யசுனாரி கவபத்தா, புபென் கக்கர், ஸிந்தியா ஒசிக் ஆகிய ஆ

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் ஆசிரியர்: அன்வர் பாலசிங்கம் பக்கம்: 98, விலை ரூ.100 வெளியீடு கலங்கைப் பதிப்பகம் - யாதுமாகிப் பதிப்பகம் செங்கோட்டை கைப்பேசி: 9445801247 கருப்பாயி என்கிற நூர்ஜஹான் ஒரு நாவல். இதன் ஆசிரியர் அன்வர் பாலசிங்கம். இஸ்லாமியச் சூழலில் இப்படியான பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். விசித்திரமாகவும் இருக்கிறது. இதெல்லாம் என்ன என்னும் கேள்வியும் மனத்துக்குள் இல்லாமல் இல்லை. நாவலின் பக்கங்களைக் கவனமாகத்தான் புரட்ட வேண்டும்! கீரனூர் ஜாகீர் ராஜாவின் கருத்த லெப்பை, மீன்காரத்தெருபோல இதுவும் சிறிய நாவல்தான். இஸ்லாமிய வாழ்வியலை எழுதும் அண்மைக்கால நாவல்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத திணைகளைக் கொண்டவை. அதனதன் முத்திரைகளோடு அவை சிறப்பாக வெளிவந்து

எதிர்வினை
 

வெப்பியாரத்துடன்தான் இதை எழுதத் தொடங்குகிறேன். ‘நீங்களுமா நுஃமான்?’ என்ற ஒரு வாக்கியம்தான் என்னுள் எழுகிறது. மானிட விரோதிகள் என்று என்னால் உணரப்படுபவர்கள் எவரின் கருத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா? நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும் உங்கள் சக இனம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. அது பற்றிய எவ்வித

எதிர்வினை
 

கருத்துச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இரண்டே நிலைகள் மட்டுமே இருக்க முடியும் என்னும் எளிய உண்மையைக்கூட இது குறித்த விவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் - குறிப்பாகக் கருத்துச் சுதந்திரத்திற்கு ‘நியாயமான’ கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்கிறவர்கள் - அறிந்திருப்பதில்லை. இந்த இரண்டு நிலைகளும் முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. ஒரு நிறமாலையின் இரண்டு நேரெதிர் எல்லைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை. இதில் இடைப்பட்ட நிலை என்பது அதிகாரவர்க்கத்தினருக்குத் தேவைப்படும்போது கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்கே உதவும். ‘கத்தியால் அவனைக் குத்திக் கொல்’ என்றோ அல்லது ‘அந்தப் பேருந்தை தீ வைத்துக் கொளுத்து’ என்றோ ஒருவர் பேசுவது பேச்சு சுதந்திரத்தின்,

எதிர்வினை
 

அக்டோபர் 2012 காலச்சுவடு இதழில் ‘தடம் பிறழும் வரலாறு’ என்று புலவர் ராசு, டாக்டர். மு. ராஜேந்திரன், இ. ஆ. ப. எழுதிய சோழர் காலச் செப்பேடுகள் என்னும் நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். இலக்கியச் சுவை நிரம்பிய ஒரு கட்டுரையை மொழியின் வெளிக்கட்டு மானத்தில் மட்டுமே தீவிர கவனமுடைய ஒரு தமிழாசிரியரிடம் திருத்தக் கொடுத்தால் அதன் ஒற்றெழுத்துக்களையும் நிறுத்தற்குறி தவறுகளையும் சிவப்புமையால் முதலில் அடிக் கோடிட்டு விடுவார். பிறகு திருப்பிப் பார்த்து இவ்வளவு சிவப்புமை திருத்தங்களா எனத் தன் மொழிப் புலமையை மெச்சியபடி அந்தக் கட்டுரையை நகர்த்திவைத்துவிட்டு அடுத்தத் தாளுக்கு நகர்வார். ஒற்றெழுத்துக்களைத் தாண்டி கட்டுரையின் உயிரோட்டமான உணர்வோட்டத்தைப் பற்றி எந்தக் கவனமும் கொள்ளாத ஒரு

எதிர்வினை
 

துணைவேந்தர் சேதுராமன் மெக்காலே பிரபு பேசியதாகக் காட்டியுள்ள மேற்கோள் போலியானது என்று நீலகண்டன் ஐந்து காரணங்களைக் கூறியுள்ளார். (காலச்சுவடு 154). மெக்காலே இந்தியாவைப் பற்றிவாய் தவறிக்கூட நல்லவார்த்தை எதையும் பேசாதவர் என்ற ஒரே ஒரு காரணம் போதுமானதாக இருந்திருக்கும். மேற்கோள் போலியானது என்பதோடு நிற்காமல் மெக்காலே நமக்கு வகுத்துத் தந்த கல்வியமைப்பை சிலாகித்தும், 1830களில் இந்தியாவில் இருந்ததாக அவர் கருதும் கல்வியமைப்பு வாழ்க்கைக்கு உதவாததாக இருந்ததாகவும் நீலகண்டன் கூறும் கருத்துடன் உடன் படமுடியவில்லை. 1822இல் சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த தாமஸ் மன்ரோ தன் ஆட்சிக்குப்பட்ட 20 மாவட்டங்களிலும் அன்றிருந்த கல்விக் கூடங்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்புக்கு ஆணையிடுகிறார். மாவட்டக் கலெக்

செம்மை
நஞ்சுண்டன்  

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் பதினைந்து சிறுகதைகளின் தமிழாக்கத் தொகுப்பாக 2011ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்துள்ளது அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும். தலைப்பிலேயே கோளாறு தொடங்கிவிடுகிறது. தொகுப்பின் கடைசிக் கதையின் தலைப்பு: அல்ஃபோன்சாம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும். முகப்பு அட்டையின் அல்ஃபோன்சம்மா புத்தகத்துக்குள் அல்ஃபோன்சாம்மா ஆகிவிடுகிறார். கதையில் எல்லா இடங்களிலும் சாம்மாதான். நூலுள் நுழைய சகரக் குறில் நெடிலாகுமே என்பது புது விதிபோலும்! பிழைகள் மலிந்துள்ள இந்நூலில் இது சும்மா சாம்பிள். அவர் பால் சக்கரியா. பால் சக்காரியா அல்ல. பால் சக்கரியா தன் பெயரை ஆங்கிலத்தில் Paul Zackaria என்றே எழுதுகிறார். ஆனால் இப்புத்தகத்தின் imprint பக்கத்தில் அவர் பெய

கண்ணோட்டம்
கண்ணன்  

நண்பர்களே, வணக்கம். கூடங்குளம் அணு மின்நிலையத்தின் ஆபத்துகளைப் பற்றியும் மத்திய மாநில அரசுகளின் ஒடுக்குமுறைகள் பற்றியும் நீங்கள் பரவலாக அறிந்திரு ப்பீர்கள். இன்றும் அவை விரிவாகப் பேசப்பட்டன. நண்பர் ஸ்டாலின் நானும் பேச வேண்டும் என்று விரும்பியதால் சில வார்த்தைகள் பேசுகிறேன். கூடங்குளம் போராட்டத்தை, இப்போராட்டம் மக்கள் போராட்டமாக உருப்பெறும் காலத்திற்கு முன்பிருந்தே ஆதரித்துவரும் ஒரு இதழின் ஆசிரியர்/பதிப்பாளர் என்ற நிலையிலிருந்தே பேசுகிறேன். இப்போராட்டத்தில் நான் களப்பணியாளராக எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவும் போராட்டத்திற்கு எதிர்ப்பும் பல தளங்களில் பரவி நிற்கின்றன. இந்திய அரசு, அதன் கிளை நிறுவனங்கள், ஊடகங்கள், மதவாத அமைப்புகள், ந

தலையங்கம்
 

தமிழக மக்களின் அன்றாட வாழ்வைக் கடுமையாகப் பாதித்திருக்கும் மின்பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் தமிழக அரசு சூரிய சக்தி மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய மின்சாரக் கொள்கையை அறிவித்திருக்கிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்ட பத்துப் பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் அக்டோபர் 21ஆம் தேதி ‘தமிழ்நாடு சூரிய சக்தி மின்கொள்கை-2012’ ஆவணத்தை வெளியிட்ட முதல்வர் தமிழகத்தில் நிலவிவரும் கடும் மின் பற்றாக்குறையைப் போக்க அடுத்த மூன்றாண்டுகளில் சூரிய சக்தியைக் கொண்டு 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்குழுவினராலும் சமூக ஆர்வலர்கள