கட்டுரை
 

நவம்பர் 7ஆம் தேதி வன்னியர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட தருமபுரியின் மூன்று கிராமங்களுக்கு எழுத்தாளர் குழுவாக நவம்பர் 10ஆம் நாள் சென்றிருந்தோம். செப்பனிட முடியாத அளவுக்கு எல்லா வீடுகளும் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தன. உடல்மீதான வன்முறையைத் தவிர்த்துவிட்டு வீடுகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய திட்டமிட்ட சம்பவம் இது. மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றவில்லை. எங்கள் குழுவில் மறைமுகமாகவேனும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளாதவர் யாருமில்லை. வாழ்விடத்தை இல்லாமலாக்குவது சாகடிப்பதைவிட மோசமான வன்முறை. இந்நிலைமை பாதிக்கப்பட்டவனின் இருப்பையே அழிக்கிறது. உயிரை மட்டும் விட்டுவைப்பதன் மூலம் இழப்பு ஏற்படுத்திய வலியிலேயே அவனை உழலவைக்கும் உளவியல் தந்திரம் இது. எலி வள

கட்டுரை
சுகிர்தராணி  

தங்கள் உழைப்பின் மூலமாகவும் கல்வியின் மூலமாகவும் பொருளாதார நிறைவை எட்டிவிட்டாலும் தலித்துகள் ஆண்ட பரம்பரையின் வாரிசுக் கூட்டத்திற்குக் கீழாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆதிக்கசாதி யினரின் சமூகநீதி. இந்தச் சமூக நீதிக்குத் தலித்துகள் குந்தகம் விளைவிக்கும்போதெல்லாம் அதை நிலைநாட்டுவதற்காக நீதியின் தொண்டர்கள் கையிலெடுக்கும் ஆயுதம்தான் சாதிய வன்முறை. அப்படிப்பட்ட சமுகநீதிக் காவலர்களால் மிகச் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட களங்கள்தாம் தர்மபுரிக்கு அருகில் உள்ள நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புப் பகுதிகள். நகைகள், விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்து, வீடுகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தி தலித்துகளின் ஒட்டுமொத்த வாழ் வாதாரத்தைய

சந்திப்பு
 

அணுசக்தியை ராணுவரீதியாக மட்டுமன்றி ஆக்கபூர்வமாகவும்கூடப் பயன்படுத்தக் கூடாது என்பதே பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் அடிப்படையான நிலைப்பாடு. தொழில்நுட்பரீதியில் அணு சக்தி மனித குலத்துக்கு எதிரானது என உறுதியாக நம்புகிறோம். அணு உலை விபத்துக்கள் மட்டுமல்ல அவற்றின் ஒட்டு மொத்தச் செயல்பாடுகளுமே மனிதர்கள், இயற்கை, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு எதிரானது. எனவே அணு சக்தியின் பயன்பாட்டை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எமது இயக்கத்தின் ஆழமான நம்பிக்கை. அது உண்மையும் கூட. யுரேனியத்தின் தொடர்வினையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இன்னும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அணுக்கரு பிளவு என்னும் வினை ஒருமுறை தொடங்கப்பட்டுவிட்டால் பிறகு அதை நம்மால் ஓரளவு மட்டுப்படுத்த முடி

கட்டுரை
பா. செயப்பிரகாசம்  

அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைகளாலும் ரசாயன ஆயுதங்களாலும் வியட்நாம் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் வியட்நாம் மக்களுக்கு உதவுவதற்காக ஆஸ்திரேலியக் குடிமகளான ஒரு பெண்மணி அங்குச் சென்றார். அவருக்கும் அவர் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனத்துக்கும் சில புள்ளி விவரங்கள் தேவைப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அவசியம் தேவைப்பட்ட அந்தப் புள்ளி விவரங்கள் போதுமான அளவுக்கு எங்கிருந்தும் அப்போது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. 1986இல் இலங்கை ராணுவத்தால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அதே ஆஸ்திரேலியப் பெண்மணி இலங்கைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. ஒரு கிராம அலுவலரை அணுகினால்கூடப் போதும் தேவையான அனைத்து தகவல்களையு

கட்டுரை
 

ஒரு போரில் 50,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக/காயம்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு யுத்தகளத்திலிருந்து கிடைத்திருப்பதாக, ஐநா சபை இன்று அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உலகம் அதைக் கவனித்திருக்காதா? படுகொலையைத் தடுக்க முனைந்திருக்காதா? இலங்கைப் போர் பற்றி 2009ஆம் ஆண்டே ஐநா அமைப்பிடம் இத்தகவல் இருந்தது என்பது இப்போது நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை அமுக்கிவிட்டார்கள். இப்போது ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒரு உள் ஆய்வுக்கு உத்தரவிட்டதால் இத்தகவல் தெரிய வந்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் ஐநாவின் செயல்பாடு ‘மோசமான தோல்வி’, இனி ‘மீண்டும் அப்படி நடக்கக் கூடாது’ என்று இந்த உள் ஆய்வறிக்கைய

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்  

எழுதிக்கொண்டிருந்தேன் என் இருக்கையில் அமர்ந்தபடி எழுதிக்கொண்டிருந்தேன் நான்கு ஐந்து வார்த்தைகளை மனம் வலை வீசிக்கொண்டிருக்க வெளியே ஆந்திமந்தாரை மரத்தின் கீழே முற்றத்தில் நான்கு ஐந்து மலர்கள் வீழ்ந்துகொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மதிய சாலை இன்று காலை முதல் என் எல்லா வெற்றிகளையும் யார் யாருக்கோ கையளித்துவிட்டு சந்தோஷத்தில் நிழலற்ற மதிய சாலையில் தன்னந்தனியாக நடந்து செல்கிறேன் என் தலைக்குமேல் மிதந்தபடி வரும் இந்தக் கத்திக்கப்பலுக்கு என்ன செய்வேன்?

சிறுகதை
 

அந்தோணி ராஜ் தன் நண்பர் இம்மானுவேல் திடீரென்று இறந்த பாதிப்பிலிருந்து விடுபட இயலாதவராயிருந்தார். இருவரும் அடிக்கடி வேளாங்கன்னிக்குச் சென்றுவருவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். தனியே வேளாங்கன்னிக்குச் செல்வதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இன்று காலை இம்மானுவேலை அடக்கம் பண்ணப் போகிறார்கள். தனது சந்தோஷங்களையும் பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்வதற்கு ஆள் எவரும் இல்லை என்ற கவலை அவரைப் பீடித்திருந்தது. ‘கண்ணீர் அஞ்சலி’ என்று சுவரொட்டி அடித்து அப்பகுதியில் ஒட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அவ்வாறே ஒட்டுவதற்கும் ஏற்பாடு பண்ணினார். ‘கண்ணீர் அஞ்சலி’ என்பது ‘கன்ணீர் அஞ்சலி’ என அச்சாகிவிட்டது. அச்சகத்தில் சரியாகக் கவனித்தாற்போல்தான் அவரு

நேர்காணல்
 

பிரெஞ்சு ‘மொஸைக்’ கலைஞர் ழான் - மிஷேல் புலென் இயற்கையுடனும் மனிதர்களுடனும் மிக நெருக்கமாக வாழ்பவர். ஸ்ட்ராஸ்பூர்க் (Strasbourg) பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் படிப்பை முடித்த பின்னர், இவர் பல்வேறு நாடுகளில் பயணம் மேற்கொண்டார். வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடும் முயற்சியுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருந்த இவருடைய நீண்ட பயணங்கள் இவரைப் பலவிதமான இடங்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன: கொல்கத்தா, சென்னை நகரங்களின் புறநகர்ப் பகுதிகள், பிரான்ஸின் மலைப்பகுதியான ‘சவ்வா’ பிரதேசத்தின் துறவிகளின் ஆசிரமங்கள், க்லேர்வோ சிறையில் கைதிகளின் இருப்பிடம், தென்பிரான்சின் துறைமுக நகரம் மார்சேய் (Marseille), அல்ஜீரியா கிராமமொன்றுக்கு மிக அருகிலிருந்த ஒரு பல்கலைக்கழகம் . . . . மெ

திரை
செல்லப்பா  

அம்மாவின் கைப்பேசி படத்தின் அறிவிப்பு வந்தபோது அதில் தலைப்புக்குக் கீழே சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில் A Mother’s Hand Phone எனத் துணைத் தலைப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. படத்தின் மீது ஒரு கவனத்தை உருவாக்கியது அந்த மொழியாக்கம்தான். பொதுவாக, டி.ராஜேந்தர், விஜயகாந்த், பவர் ஸ்டார் போன்றவர்களின் திரைப்படங்கள் எப்போதுமே முழு பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிப்பவை. அந்த வகையான படமாக அம்மாவின் கைப்பேசி இருக்க முடியாது என்பதில் முழுமையான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற உலகத் தரமெனத் தான் நம்பிய படங்களைத் தாம் தங்கர் பச்சான் இதுவரை உருவாக்கியுள்ளார். அவரது நோக்கம் நல்ல திரைப்படம் என்பதால் அம்மாவின் கைப்பேசியைப் பார்ப்பதில் ஆர்வ

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
களந்தை பீர்முகம்மது  

சில கனவுகள் அரைத் தூக்கத்திலேயே உருவாகி வருபவை எனக் கருதுகிறேன். அவை வெம்மை தகிக்கும் நிலங்களில் கரிந்து போகாமலும் பனிப் பொழிவுப் பிரதேசங்களில் உறைந்து போகாமலும் அனாந்தரமாகச் சுற்றிக்கொண்டிருப்பவை. அந்தக் கனவின் மூலப்பொருளும் முதல் ஆயுதமுமாக இருப்பது பேனாதானே? ஆமாம், பேனாதான். பேனாவின் குரல் யாரோ ஒருவருக்கான நீதி தேடி ஒலிப்பதில்லை. அது சமூகத்தின் குரலாக ஒலிப்பதால், சமூக நீதியைத் தேடுவதால் அந்தக் குரல் மாத்திரமே மகிமைகொண்டதாக இருக்கிறது. இப்படியான குரல் காலச்சுவடுக்கு உரியது. அநேகமாகக் கடந்த இருபதாண்டுச் சமூகம் சூழலில் ஒரு மாற்றத்தை, முன்னோடியாக இருந்து உருவாக்கியதில் காலச்சுவடு முதன்மைப் பங்கு வகிக்கிறது. 1983இல் நான் எழுத வந்தபோது காலச்சுவடு இல்லை. அப்போதிருந்த இலக்கிய இதழ்க

உரை
சுகுமாரன்  

அனைவருக்கும் வணக்கம். நெய்தல் அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கவிஞரும் விமர்சகருமான ராஜ மார்த்தாண்டன் ஆகியோர் நினைவைப் போற்றும் வகையில் விருதுகளை வழங்கிவருகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதுக்கு இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கும் கவனம் கவிதைக்கான இன்னொரு விருதை வழங்கவும் தூண்டுதலாக இருந்தது. புதிய கவிதைகளைத் தேடி வாசிப்பவரும் புதிய கவிஞர்களை உற்சாகப்படுத்துபவருமாக இருந்த ராஜமார்த்தாண்டன் நினைவாக ஒரு கவிஞரின் முதல் தொகுப்புக்கு ராஜமார்த்தாண்டன் கவிதை விருது வழங்கப்படுகிறது. இந்த விருதும் மூன்றாவது ஆண்டை எட்டிவிட்டது. எளிமையாகத்

மதிப்புரை
தியடோர் பாஸ்கரன  

தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள்; (Weland Birds of Tamil Nadu: A Pictorial Field Guide) - தமிழிலும், ஆங்கிலத்திலும்.கெட்டி அட்டை, வண்ணப்படங்கள் ராபர்ட் கிரப், ஷைலஜா கிரப் கெட்டி அட்டை விலை ரூ.250 வெளியீடு: Institute for Restoration of Natural Environment. 2nd Main Road, Christopher Nagar Extn, Nagercoil 629003 (Phone: 04652-232430) மக்களிடையே புள்ளினம் பற்றிய ஆர்வம் அதிகரித்துவருவது மகிழ்ச்சியான அறிகுறி. பறவைகளை அவதானித்தல் உலக அளவில், வேகமாகப் பரவிவரும் ஈடுபாடு. இன்று தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, சென்னை போன்ற நகரங்களில் பறவை ஆர்வலர்களுக்கெனச் சங்கங்கள் உள்ளன. போட்டிகள் நடத்தப்படுகின்றன. புள்ளினங்களைப் புகைப்படம் எடுப்பது பற்றிய முகாம்கள் காட்டி

மதிப்புரை
அம்ஷன் குமார்  

நிழலின் தனிமை (நாவல்) ஆசிரியர்: தேவிபாரதி பக்கம்: 176, விலை ரூ.125 வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி.சாலை நாகர்கோயில்-629 001 தொலைபேசி: 04652-278525 இதற்கு முன்பாகவே தேவிபாரதியின் எழுத்துகளுடன் நான் பரிச்சயம் கொண்டிருந்தாலும் ‘பிறாகாரு இரவு’ சிறுகதையை வாசித்த பிறகு நான் அவரது படைப்புகள் மீது சீரிய கவனம் கொள்ளத் தொடங்கினேன். கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் அது ஒன்று என்பது என் கணிப்பு. ‘நிழலின் தனிமை’ தேவிபாரதியின் முதல் நாவல். பல நூறு பக்கங்களில் நாவல்கள் எழுதப்படுகிற வேளையில் தேவிபாரதியின் நாவல் இருநூறு பக்கங்களைக் கூட தாண்டவில்லை. முன்னுரையில் அவரே இது ஒரு நீளமான சிறுகதை

செம்மை
நஞ்சுண்டன்  

தமிழின் நவீன இலக்கியத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் இஸ்லாமியச் சமுதாயம் படைப்பெழுத்தின் வழி இடம்பெற்றுவருகிறது. அதிலும் இஸ்லாமிய எழுத்தாளர்களே தங்கள் சமுதாயம் தொடர்பாக எழுதுவது வரவேற்கப்பட வேண்டியது. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி உலகங்களைத் தமிழ் வாசகர்களுக்குக் காட்டுகிறார்கள். இந்த வகையில் தற்போது தீவிரமாகப் படைப்பெழுத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர் கீரனூர் ஜாகீர் ராஜா. இவருடைய மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி, வடக்கே முறி அலிமா நாவல்களும் தேய்பிறை இரவுகளின் கதைகள் சிறுகதைத் தொகுப்பும் தமிழ் வாசகர்களிடையே பரவலான கவனம் பெற்றவை. மீன்காரத் தெருவின் தொடர்ச்சி மீன் குகைவாசிகள் நாவல். தோப்பில் முகம்மது மீரான், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், நாஞ்சில

எதிர்வினை
கருணாகரன்  

கதை ஒன்று காலச்சுவடும் புலிகளும் என்ற என்னுடைய கட்டுரைக்கு சிரிப்பின் வஞ்சக அரசியல் என்ற தலைப்பில் அ. இரவி லண்டனிலிருந்து எதிர்வினை ஆற்றியிருந்தார். இரவியின் எதிர்வினைக்கான என் பதிலை அதற்குரிய முறையில் எழுதுவதற்கிருந்தேன். பதிலை எழுதுவதற்கு முன்பு, இரவி ஒரு காலம் என்னுடன் நெருங்கிப் பழகியவர் என்ற காரணத்தால் ‘நான் பதில் எழுதவுள்ளேன்’ என்பதை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். இதற்கு முன்னரும் பல இடங்களில் இரவி என்னைக் குறித்துத் தாழ்வாக எழுதியும் பேசியும் வந்ததால் முடிவாக அந்த மின்னஞ்சலை எழுதினேன். அதனையடுத்து இரவி தொலை பேசியில் தொடர்புகொண்டு அந்தப் பதிலை வேறுவிதமாக மோதல்களற்ற நிலையில் எழுதும்படியும் கேட்டார். ‘நாங்கள் நண்பர்களாகவே இருக்க வேண்டும் எனவு

எதிர்வினை
ப்ரவாஹன்  

பொதுவாகச் சோழர் காலக் கல்வெட்டுகள் பெரும்பாலானவற்றில் சம்மந்தப்பட்ட கொடையினை “கல்லிலும் செம்பிலும் பொறித்திருப்பதாக” ஒரு வரி இடம்பெற்றிருக்கும். சிலாசாசனம் என்றும் தாம்ர சாசனம் என்றும் இவை குறிப்பிடப்படுவதுண்டு. ஆவணங்கள் அனைத்துமே கல்லில் மட்டுமின்றிச் செம்பிலும் பொறித்து வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் மரபு உண்டு. இது முழுமையான உண்மையா என்று தெரியாவிட்டாலும்கூட, பல கல்வெட்டுச் செய்திகள் செப்பேடுகள் மூலமும் அறியப்படுகின்றன என்பதும் உண்மையே. இதை அடிப்படையாகக் கொண்டால் வெண்ணிலாவின் கூற்றுப்படி அனைத்து சாசனங்களுமே பிராமணர்களுக்கு வழங்கப்பட்டதாகிவிடும். முதல் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் நரலோகவீரன் என்ற பட்டப்பெயர் கொண்ட மணவிற் கூத்தன் காலிங்கராயன், தேவாரப் பாடல்க

எதிர்வினை
புலவர் செ. இராசு  

அக்டோபர் இதழில் சோழர் காலச் செப்பேடுகள் நூல் பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு அ. வெண்ணிலா தன் எதிர்வினையை நவம்பர் இதழில் எழுதியுள்ளார்கள். செப்பேடுகளில் காணப்படும் பெரும்பான்மையான சொற்களைச் அவற்றில் உள்ளவாறு அன்றிப் படிப்போருக்குப் பொருள் புரியாத புதிய வடிவங்களில் பிழையாகப் பொருத்தம் இன்றி மனம்போன போக்கில் நூல் முழுவதும் விரவிக்கிடப்பதை மிகச் சாதாரண ‘ஒற்றுப்பிழை போல’ எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. (ஒரு எடுத்துக்காட்டு இராசேந்திரன் கடார வெற்றியில் ஓரிடம் சாந்திமத் தீவு: நூலில் இதற்குரிய பெயர் ‘சந்தமட்டுவு’) மூலச் செப்பேட்டை ஒருமுறைகூடப் படிக்காமல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏராளமான வரலாற்றுச் சொற்கள் தவறாக எழுதப்பட்டுள்ளன. பிழைகளைச்

எதிர்வினை
பொ. வேல்சாமி  

நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் அ. வெண்ணிலாவின் எதிர்வினையைப் படித்தேன். டாக்டர் மு. ராஜேந்திரன், இ. ஆ. ப., பதிப்பித்த சோழர் காலச் செப்பேடுகள் என்னும் நூலில் உள்ள பெரும்பிழைகளைச் சுட்டிக்காட்டிப் புலவர் ராசு எழுதியிருந்த கட்டுரையைக் குறித்து வெண்ணிலா குரூரமான வார்த்தைகளைக் கொட்டி அக்கிரமமான செய்திகளைப் பொழிந்திருந்தார். முதுபெரும் பேராசிரியரான ராசு தன் வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு அறிந்திருந்த கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் பற்றிப் பொறுப்பற்ற தன்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலைக் கண்டு மனம் வருந்தி அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது அந்த நூலுக்கான மதிப்புரை அல்ல. வெண்ணிலா அதை மதிப்புரை என்கிறார். ஆசிரியர் தன் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்த

எதிர்வினை
எஸ். நீலகண்டன்  

மெக்காலே பிரபு பேசியதாக ஒரு போலியான மேற்கோள் பற்றி ‘திறந்தவெளி’ காலச்சுவடு 154இல் நான் எழுதியிருந்தேன். காலச்சுவடு 155இல் ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் எதிர்வினையில், நம்முடைய அந்நாளைய மரபுவழிக் கல்வி ‘அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பரந்த, விரிவான ஒரு முழுமையான கல்வியறிவை வழங்கவில்லை’ என்று நான் எழுதியிருந்ததை மறுத்து, தரம்பாலின் The Beautiful Tree என்னும் நூல் அந்தக் காலகட்டத்தின் மரபுவழிக் கல்வி பற்றி மிகத் தெளிவாக விவரித்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, 1826இலேயே சென்னை மாகாணத்தில் மரபுவழி மாணவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் எட்டு விழுக்காடு இருந்தது என்பதையும் பிரிட்டீஸாரின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு அது வெகுவாகக் குறைந்துவிட்டது

பதிவு
 

காலச்சுவடு, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மதுரை அற்றைத்திங்கள் நிகழ்வில் 14.02.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர், விமர்சகர் க. பஞ்சாங்கத்தின் உரை: காலச்சுவடு நடத்தும் இந்த மாதாந்திர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவது எனக்குள் மகிழ்ச்சியாகப் பரவுகிறது. இதற்கு இரண்டு காரணம். ஒன்று காலச்சுவடைச் சுந்தர ராமசாமி தொடங்கிய காலத்தில் இருந்தே அதனோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பு. 90களில் என்னுடைய ‘தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு’ வெளி வந்தபோது கோமல் சுவாமிநாதன் சுபமங்களா நேர்காணலில் “நான் சமீபத்தில் சந்தோசமாகப் படித்துக்கொண்டிருக்கும் நூல்” என்று கூறிய தோடு காலச்சுவடு மலரிலும் எழுதி அந்தப் புத்தகத்திற்கு உல

 

ஒரு பக்கம் சாதியின் கொடிய வெறித்தனம், இன்னொரு பக்கம் மதங்களை நிலைநிறுத்திக்கொள்ள மதமாற்றங்கள். இப்படியான சூழலில் ‘கலப்பு மண அரசியல் எதிர்ப்பு’ போன்ற கட்டுரைகள் வரவேற்கப்பட வேண்டியவை. கட்டுரையில் கலப்பு மணத்திற்கு எதிராக நிற்கும் சாதிய ஆதிக்க அமைப்புகளின் அடாவடித்தனங்களும் சாதியத்தை ஆதரிக்கும் சுயமரியாதையின் பின் வந்த/வளர்ந்த கட்சிகளின் முகமூடித்தனமும் விமர்சையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில் கலப்பு மணத்திற்கு எதிராக நிற்கும் மதங்களின் போக்கையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தால் கட்டுரை இன்னும் நன்றாக இருந்திருக்கும். சாதி வெறி ஆதிக்கம் எப்படி உயர்சாதி என்ற வறட்டுக் கௌரவத்தையும் ஆண்டான் அடிமை பாரம்பரியம் இவை எல்லாம் கலப்பு மணத்திற்குத் தடைபோடுகின்றன. க

தலையங்கம்
 

கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்றே மத்திய அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, மானியவிலைச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு ஆறு என்ற அளவில் குறைத்தது அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது முதலான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பங்களால் அவை நடவடிக்கைகள் முற்றாக முடங்கின. மத்திய அரசுக்கெதிராக காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முன்னாள் உறுப்புக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முன்மொழிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் போதிய ஆதரவு இ

உள்ளடக்கம்