கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்முதலில் வெளிப்படையாகச் சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். லண்டனிலிருந்து திரும்பிய திருமாவளவன் உடன

கட்டுரை
மு. புஷ்பராஜன்  

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெம், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டார். “இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்குவகித்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து ஒரு சமாதான முயற்சியை 2009 ஜனவரி மாதத்தில் மேற்கொண்டதாகவும் அதன்படி சர்வதேச அமைப்பு அல்லது அமெரிக்கா, இந்தியா அல்லது வேறொரு நாடு, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு ஒரு கப்பலை அனுப்புவதென்றும் போரில் எஞ்சியிருந்த பொதுமக்கள், விடுதலைப்புலிகள் அனைவரையும் புகைப்படத்துடன் பதிவுசெய்து கொழும்புக்குக் கொண்டுசெல்வதாகவும், பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்த்து அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதென்றும் முடிவுசெய்யப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்காக

நூல் வெளியீடு
மண்குதிரை  

கருவறைகூட அங்குப் பாதுகாப்பானது அல்ல என்கிறார் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன். குண்டு துளைத்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து வெளியே துருத்திக்கொண்டிருந்த ஒரு சிசுவின் கரங்களைக் கண்டதாகத் தமிழ்நெட் ஊடகவியலாளர் லோகீசன் நேர்காணல் ஒன்றில் கூறுகிறார். வெறும் முப்பதைந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்புடைய மிகச் சிறிய பிரதேசம். நூற்று முப்பது நாட்களாக அதற்குள் அடைபட்டிருந்த லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள். பாதுகாப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட அந்தப் பகுதியில் தடைசெய்யப்பட்ட, மிகப் பயங்கரமான ஆயுதங்களைக்கொண்டு தனது ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் மூலம் கணக்கிடவியலாத படுகொலைகளைச் சாட்சியங்களே இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறது இலங்கை ராணுவம். அவை வரலாற்றின் மிகக் கொடிய படுகொலைகள். செஞ்சிலுவைச் சங்கம், ஐ

கட்டுரை: குருதியில் நனைந்த சாட்சியங்கள்
 

அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். கொடுமையான வெயில் எரிக்கும் பின் மதியம். லோகீசனின் முழு வாழ்க்கையையுமே தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளின் நிர்வாகம் சில மாதங்களிலேயே சிதைவுற்றது. ஒரு காலத்

 

நான் நம்பியதும் நம்பவில்லை என்பதும் நான் நம்பவில்லை இத்தனை கடினமானதாயும் இலகுவானதாயும் நீ இருப்பாய் என அப்படித்தான் நம் வாழ்க்கையும் இருக்கிறது என்றாய் வெல்லவும் முடியா தோற்கவும் முடியா முடிவற்ற சதுரங்க ஆட்டத்தில் இனிமையும் கசப்பும் நிரம்பியிருக்கிறது என்னருகிலே உள்ள எல்லாக் கிண்ணங்களிலும் நீயும் அப்படித்தானுள்ளாய்கசப்பாயும் இனிப்பாயும் உன்னிடமும் உலகிடமும் அப்படித்தானுள்ளது என்றாய் நாளெல்லாம் அங்கும் இங்குமாகத் திரிந்த பின் களைத்துறங்கினோம் கசப்பும் இனிப்புமாக வந்து திரையிட்டது கனவும் கனவு முடிய, இரவு முடிய விடிந்ததுஅப்போதும் நேற்றும் இன்றும் நாளையும் என்ற எல்லாக் கிண்ணங்களிலும் இருந்தனகசப்பும் இனிப்பும் நிறைந்த பானங்கள் அருகில் நீயிருந்தாய் கசப்பாயும் இனிப்பாயும்அருகில் நானுமிருந்தேன

 

உதிர்ந்த இலையொன்று வறண்டதும் தண்ணீரற்றதுமான நிலத்தில் தரையிறங்கி அலைந்து திரியும் பறவையென தவிப்புற்றுக் கிடக்கிறது மனம் அவனுக்கென உடலின் வாசனையை முகர்ந்து கடக்கிறது உதிந்த இலையொன்று தரை விழுந்து நொறுங்கும் அதன் சப்தம் மிக அருகில் கேட்கிறது அவன் நடந்து வருகிறானா அல்லது பறவையின் மிருகத்தின் கால்களில் மிதிபட்டதா தெரியவில்லை நீரற்றுக் கிடக்கும் நிலத்தின் தகிப்பின் நடுவே கிடக்கிறேன் காய்த்துப் பழம் தரும் விதைகளை ஏந்தியபடி. கரிய மேகமாகும் கூந்தல் எனக்கு மெல்லிய கூந்தல் எனச் சொல்லுவான் நான் கூந்தலினால் ஆனவள் அல்ல அது எனக்குச் சுமை கரும் மேகங்கள் போல அடர்ந்த என் கூந்தலை நீரால் அலம்பி காற்றால் கோதி பின் அதை பின்னிப் பின்னி ஒழுங்கு செய்கிறேன் ஒவ்வொருநாளும் வாசனைத் திரவியம

 

கோழியம்மாள் ஒரு முட்டையிட்டதற்காகஇவ்வளவு உரக்க அலற வேண்டுமாவென்றுஜிம்மி என்ற நாய் கேட்டதுநந்தினிக் குட்டி என்ற பசு கேட்டதுபஞ்சவர்ணம் என்ற கிளி கேட்டதுஇடுப்பு முழுக்கப் பலாக் குழந்தைகளுடன்நிற்கும் பலாவம்மாள் கேட்டாள்ஆகாசவாணியில் மிதந்து வரும்யேசுதாஸ் கேட்டார்தென்னங் கீற்றில் தொங்கும் காற்று கேட்டதுகிட்டிப்புள் விளையாடும் சிறுவர்கள் கேட்டார்கள்வாழைகளும் சேம்புகளும் கேட்டனதேங்காய் எண்ணெய் தடவிய வெயில் கேட்டதுகுளித்துத் துவைத்து மாதவிலக்குப் போர்வையைபாய்க்குள் சுருட்டி வரும் தங்கமணி கேட்டாள்.யார் கேட்டுமென்னஅலறிக் கொண்டேயிருந்தாள் கோழியம்மாள்.பின்னும் கேள்விகள் எழுந்தனஇப்படி அலறுவதால்ஆம்லெட் தயாரிக்க எடுத்துப் போனமுட்டை திரும்பக் கிடைக்குமா?இப்படி அலறுவதால்நாளை முதல் முட்டையிடுவதிலிருந்து விடு

சிறுகதை
 

இருள் கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்னும் யோசனை வந்தது. தோசையா சப்பாத்தியா என்று ஆலோசித்துச் சப்பாத்தி என முடிவெடுத்தாள். அப்போதுதான் மஃரிபு தொழுகை முடித்தாள். ஆடு யாசின் ஓதிவிட்டுக் கையோடு கிஷாவும் தொழுதுவிடலாமா என யோசித்தாள். இப்போது மாவு பிசைந்து வைத்துவிட்டால் தொழுதுவிட்டுச் சுடுவதற்குச் சரியாக இருக்கும். மாமியார் பசிக்கிறது என்று சத்தம் போட்டால் கஷ்டம். ‘சரி இப்படியே மாவு பிசைஞ்சுடலாம்’ எனத் தனக்குள்ளேயே முணுமுணுத்தவள் கையிலிருந்த யாசீன் கிதாபைப் பீப்பாயின் மீது வைத்துவிட்டு அடுப்படிக்குச் சென்றாள். சுவிட்சைத் தட்டிய சமயம் எலி ஒன்று காலில் குதித்து இருட்டுக்குள் ஓடி மறைய ‘ஐய்யோ’ என்று அலறிச் சுதாரித்து ‘சனியன் பிடிச்ச எல

ஆப்பிரிக்கச் சிறுகதை
 

நைஜீரியாவின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முதன்மையானவர். நைஜீரிய இலக்கியவாதிகளின் பிதாமகரான சினுவா ஆச்சிபீ, நோபல் பரிசு பெற்ற வொலே சொயிங்கா, மிகப்பிரபலமான பென் ஓக்ரி போன்ற மகத்தான கலைஞர்களை 1977இல் பிறந்த அடிச்சீ தன் முதல் நாவலான Purple Hibiscus மூலம் மிக எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார். நைஜீரிய ராணுவம், ரத்தக்களறியான போரில் நைஜீரியாவின் எண்ணெய் வளமிக்க பயாஃப்ரா பகுதியின் தனிநாட்டுக்கான-சுதந்திரத்திற்கான கனவைச் ஆங்கில - அமெரிக்க உதவியுடன் கோரமாகச் சிதைத்ததை, அந்த வருடங்களில் பிறந்தே இராத இந்த இளம் எழுத்தாளர் தனது முதல் நாவலில் பதிவு செய்தது உலக இலக்கிய அரங்கில் முக்கியமான நிகழ்வு. தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இன்றைய நைஜீரியாவைத் தனது சிறுகதைகளில் தொடர்ந்து படம் பிடித்

 

அசமா’வு அதோ போகிறாள் அசமா’வு அதோ போகின்றன அவளின் சிதைந்த கைகள் அதே கைகள்தான் வெறுப்புடன் ஒதுக்கப்பட்ட பண்ணைகளில் களைப்பின்றி உழைத்தன அதோ அங்கே! வெள்ளத்தில் அவள் அமைதியாகப் போராடுவது தெரிகிறது அசமா’வு, லாவனின் மனைவி அசமா’வு ஏழு சொச்சம் பேரின் தாய் மிகவும் உரமிழந்த தோள்களில் ஓர் உலகத்தின் கனத்தைத் தாங்குகிறாள் ரேகைகள் துண்டுபட்டுக் காய்ப்பேறிய உள்ளங்கைகளில் ஒரு கூட்டத்தின் செல்வத்தைத் தாங்குகிறாள் உடாபாவிலிருந்து எல்லா நாட்களும் அவளது நேர்மையான சுவட்டிலிருந்தே புழுதிப்பாதையில் முன்னேறுகின்றன பாகனாவில் விற்பனையோ பண்டமாற்றோ செய்யும்போது அவளது விவேகமான புருவங்களில் சுளிப்பின் சாயல் இல்லை. ஓ!ஓ!ஓ! அசமா’வு பெண்ணின் திடமான வலுவே உன்னை ஆதரவற்று அப்படி இழுத்துப்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

சென்னைப் புத்தக விழாவில் கூட்ட நெரிசலிடையே எக்கச்சக்கமான புத்தகக் குவியல்களின் மத்தியில் தடுமாறிக்கொண்டு என்ன புத்தகங்களை வாங்கலாம் என்று திணறிக்கொண்டிருக்கும் உங்களை இன்னும் கொஞ்சம் குழப்பமடையச் செய்ய சென்ற ஆண்டு நான் படித்த சில ஆங்கில நாவல்கள் குறித்த குறிப்புகளைக் கீழே தந்திருக்கிறேன். இந்த நூல்கள் இன்றைக்கு நான் எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தெரிவுசெய்யப்பட்ட கணிப்புகள். ஒரு வேளை சென்ற ஆண்டு வெளிவந்த நாவல்களை மூன்று மாதங்கள் கழித்துத் திரும்பிப் படிக்கும்போது வேறு ஒரு பட்டியலைத் தர நேரலாம். இலக்கிய விருப்பு வெறுப்பு படிப்பவரின் சூழ்நிலையைச் சார்ந்தது மட்டுமல்ல அக எண்ணத்தையும் சார்ந்தது. இந்த நாவல்களை எழுதிய கதாசிரியர்களுக்கு ஆங்கிலம் தாய் மொழியல்ல. குறுகிய பிராந்தியக் கண்னோட்

கட்டுரை
பெருமாள்முருகன்  

என் அம்மா 02.12.12 அன்று காலை 7:20 மணிக்கு இறந்துபோனார். திருச்செங்கோட்டு நகரத்தை ஒட்டியுள்ள சானார்பாளையத்தில் மாரிக்கவுண்டர் – பாப்பாயி ஆகியோரின் இளையமகளாகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அங்கிருந்து மூன்று கல் தொலைவில் உள்ள கூட்டப்பள்ளியில் மேட்டுக் காட்டு விவசாயிகளாகிய ராமசாமி – பாவாயி ஆகியோரின் மகனான பெருமாள் என்பவருக்கு மனைவியாகிச் சாதாரண மனுசியின் கஷ்டங்களை எல்லாம் பட்டு வாழ்ந்து அப்படியே முடிந்தும் போனார் அம்மா. ஆயுள் முழுக்கப் பட்ட கஷ்டம் போதாதென்று கடைசி காலத்தில் பார்கின்சன்ஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுச் சில ஆண்டுகளாகப் பெருந்துன்பம் அனுபவித்த அவர் ஒருவழியாக அதிலிருந்து விடுதலை பெற்றார். இறப்பைப் போல அவரது பிறப்பைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. தோராயமாகச்

கட்டுரை
 

“முக்கால் வாசி இந்தியர்கள் முட்டாள்கள்தாம். சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள்! ஜாதியையும் மதத்தையும் வைத்துக்கொண்டு அவர்களை எளிதில் ஏமாற்ற முடியும். யார் வேண்டுமானாலும் சில நொடிகளில் ஒரு ஜாதி மதக் கலவரத்தை இங்குத் தூண்டிவிட முடியும்” - மார்கண்டேய் காட்ஜு (உச்சநீதிமன்ற நீதிபதி, இந்தியப் பத்திரிகைகள் மன்றத் தலைவர்) “ஷாஜி என்பது உங்களது நிஜப் பெயரா புனைப் பெயரா?” “நிஜப்பெயர்” “உங்களது முழுப்பெயர் என்ன?” “முழுப்பெயருமே ஷாஜி தான்” “அப்படியா? அப்ப உங்கள் அப்பாவின் பெயர்?” “என் அப்பாவின் பெயர் உங்களுக்கு எதுக்கு?” “அது . . வந்து . . .” எனது பெயரிலிருந்து எனது ஜாதியையும் மதத்தையும் யூகிக்க முடியாமல்

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
சுகுமாரன்  

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு.                                                                                       -பாரதி 1 காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட செவ்வியல் ஆக்கங்களை மீண்ட

புத்தகப் பகுதி:  நூல்நிலையங்களின் ஜன்னல்
தேவிபாரதி  

தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரான் என்னும் செல்வாக்கு மிகுந்த மனிதனைக் கொன்று பழி தீர்த்த சிதம்பரம் என்னும் கரிசல் காட்டு எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பதினைந்து வயதுச் சிறுவனைப் பற்றிய கதை ‘வெக்கை.’ வடக்கூரானைக் கொன்ற பிறகு தன் தந்தையுடன் எட்டு நாட்கள் குழந்தைப் பருவத்தின் விளையாட்டுகளோடு காடுகளில் தலைமறைவாக அலைந்து திரியும் சிதம்பரத்தின் நினைவுகளினூடாகக் கரிசல்காட்டு வாழ்வின் முரண் களைப் பற்றியும் பழியின் அரசி யலைப் பற்றியும் ஆராய்கிறார் பூமணி. சிதம்பரம், அவனோடு தலைமறைவாக அலைந்து திரியும் அவனுடைய தந்தை ஆகிய இருவரைத் தவிர, வடக்கூரானால் கொல்லப்பட்ட சிதம்பரத்தின் அண்ணன், வடக்கூரான், மாமா, அத்தை, தாய், தங்கை, ஜின்னிங் பாக்டரி முதலாளி எனச் சொற்ப மான சில பாத்திரங்களைக் கொண்

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
வீரா  

சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலை நான் படிக்கத் தூண்டியது எது என்று நினைத்துப் பார்க்கிறேன். நமது சமகால இலக்கிய ஆளுமைகளின் சிபாரிசுப் பட்டியலில் இடம்பெறும் முக்கிய ஆக்கம் என்பதாலோ செல்லப்பா பற்றி நான் அறிந்து வைத்திருந்த உணர்ச்சியூட்டக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எனக்குள் உருவாகியிருந்த ஆர்வத்தாலோ இல்லை. ஜல்லிக்கட்டை நான் ஒருவித ஜீவகாருண்யக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே புரிந்துவைத்திருக்கிறேன். தமிழ் சினிமா ஜல்லிக்கட்டைப் பற்றித் தந்த நாடகத்தனமான சித்திரங்களாகவும் பொங்கல்நாளன்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி சுவாரஸ்யத்துக்காகக் காட்டப்படும் மேம்போக்கான வீர சாகச நிகழ்வாகவுமே ஜல்லிக்கட்டு என்னுள் பதிவாகியிருந்தது. சமீபத்தில் புத்தகக் கடையொன்றில் ஒரு புத்தகத்தின

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
இரா. மோகன்ராஜன்  

ஈழத் தமிழரின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமைப் போராட்டத்தின் முப்பதாண்டுக்கால மென்முறை வழி, அது மிக மோசமாக அடக்கி ஒடுக்கிச் சாத்தப்பட்டதிலிருந்து உயிரோட்டமாகக் கிளர்ந்தெழுந்த மறுமுப்பதாண்டுக் காலப் போராட்டத்தின் மாறுபட்ட வடிவமான ஆயுதவழி ஆகியவற்றுக்கிடையிலான அந்தரிப்பு, அலைக்கழிப்பு, பெருமளவிலான இடப்பெயர்வு, உயிர், உடைமை, பொருளிழப்பு மற்றும் ஈழச்சமூகத்தின் சகலமட்டங்களிலுமான மனிதர்களுக்கும் வாழ்வதற்கான சவால்கள் நிறைந்த பகல், இரவு என நீளும் துயரத்தின் பெருவெளி அ. இரவி என்னும் படைப்பாளியின் விரல்வழி ஒரு மொழியாக வெளிப்பட்டுள்ளது. வாழ்தலில் தன்னெழுச்சியான தாகம் கொண்ட மனிதர்கள் வருவதும் போவதுமான வண்ணச் சித்தரிப்பு அ. இரவியின் பாலைகள் நூறு சிறுகதைத் தொகுப்பு. தமிழ் அரசியல் பாராளுமன்றத் தலைமைகள், பா

புத்தகப் பகுதி:  நூல்நிலையங்களின் ஜன்னல்
களந்தை பீர்முகம்மது  

ஒரு முட்டையை ஓதி எறிந்துவிட்டால் போதும், எதிராளிகளை ஒழித்துவிடலாம். ஓதி எறியப்படும் முட்டைக்கு அவ்வளவு சக்தியிருப்பதாக மோதியாரும் நம்புகிறார். எதிராளிகளை வயிறு வெடித்துச் சாகடிக்கும் அந்த முட்டையை ஏன் மோதியார் ஓதி வீசவில்லை? அதுதான் சூட்சுமம். மூச்சுமுட்டவைக்கும் சோதனைகளும் துயரங்களும் மிகச் சாதாரணமான விசயங்களால் ஒருவருக்கு உண்டானால் அவர்கூட முட்டையை ஓதி எறியலாம். ஆனால் மொய்துசாகிபோ குச்சித்தம்பி என்கிற முகம்மது அலியோ முட்டைகளை ஓதி வீசவில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் வாழ்வின் பெரிய துயரத்தை ஒரு முட்டை தீர்த்துவிடாது என்னும் எண்ணம் இருக்குமானால் அதையும் இந்த நாவலின் மூலமாகவே கண்டுபிடிக்க வேண்டும். வரதட்சணையும் சாதாரணமாகச் செயல்படவில்லை. அதற்கும் ஓ

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
ஆனந்த்  

என்ன இருக்கிறது நம் ஆழங்களுக்குள்? மேலோட்டமாக நமக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிந்தனையோட்டம், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், உணர்வு நெரிசல்கள், இவற்றுக்கடியில் நம் இருளாழங்களுக்குள் என்ன இருக்கிறது? பூதங்களா, கடவுளரா? என்ன நடக்கிறது அங்கே? அச்சமும் ஆசையும் வெறுப்பும் வன்முறையும் பதுங்கியிருக்கும் ஆசாபாசங்களின் இருட்குகை அங்கே உள்ளதாக மனோவியலாளர்கள் சிலர் சொல்லிப் போயிருக்கிறார்கள். உள்ளே கடந்து சென்றால் உண்மை அறியலாம் என்கிறார்கள் ஞானிகள். புறத்தே உள்ள உலகம் போன்றே அகத்தேயும் எல்லையற்று உலகம் விரிவதாகச் சொல்கிறார்கள் தரிசிகள். உள்ளே வெறும் எண்ணங்களும் உணர்ச்சிகளும் நினைவுகளும் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கின்றனவா? அல்லது புறவுலகத்தைப் போலவே அகத்திலும் நிகழ்வுகள், எதிர்வினை, எதிர்கொள்ளல

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
சமயவேல்  

இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளில் பெருவாரியானவர்கள் கவிஞர்களாக இருப்பதையும் ஒவ்வொரு ஆண்டும் சில நூறு கவிதைத் தொகுப்புகள் வெளிவருவதுவும் குறித்து ஏளனமான பேச்சு நம்மிடையே இருந்துவருகிறது. எதற்காக இப்படி ஏராளமான ஆண்களும் பெண்களும் கவிதையின் பக்கம் திரும்புகிறார்கள்? இவர்கள் இரண்டு வரி மூன்று வரிக் கவிதைகள் எழுதத் தொடங்கி ஓரிரு ஆண்டுகளுக்குள் சுமார் 50 முதல் 100 வரை கவிதைகளைச் சேர்த்து, ஒரு தொகுப்பாக்கி, யாராவது ஒரு கவிஞரைப் பிடித்து முன்னுரை வாங்கி, பல சிரமங்களுக்கிடையில் அதை அச்சில் பார்த்து, சிறிய அளவிலாவது ஒரு வெளியீட்டு விழா நடத்தி ‘கவிஞர்’ என்னும் அடையாளச் சிலுவையைச் சுமக்கத் தொடங்குவதின் தாத்பர்யம் என்ன? கவிதை ரொம்பவும் தன்வயமானது; அதே சமயத்தில் பூமியைத் தாண்டிப் பரவெளி ம

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
க. வை. பழனிசாமி  

விமர்சகராக யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒருவர் இருப்பதற்கும் சாத்தியமில்லையோ எனப் பல நேரங்களில் தோன்றுகிறது. இதுவரை எழுதப்பட்ட விமர்சனங்கள் எல்லாமே வாசக அனுபவங்கள்தாம். அந்த வாசக அனுபவங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவை என்றுதான் பார்க்க விரும்புகிறேன். முழுமையாகப் படிக்காமல் எழுதப்பட்ட விமர்சனங்களே தமிழ்ச் சூழலில் அதிகம். கவிஞர் சின்னசாமியின் ஏழிலைக் கிழங்கின் மாமிசம் என்னும் கவிதைத் தொகுப்பை வாசித்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறேன் என்பதும் வாசிப்பில் அடங்கும். எனக்கு இப்படித் தோன்றுகிறது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரி என இலக்கியத்தில் எதுவும் இல்லை. யாரோடும் முட்டி மோதி என்ன ஆகப்போகிறது? சின்னசாமியின் கவிதையில் நேர்மையா

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
க. அம்சப்ரியா  

அனுபவங்கள் முந்தைய காலத்திற்கு உரியவையாயினும் அவற்றைத் தனக்கேற்ற வெளிப்படுத்தலுக்கான வடிவமைப்பிற்குத் தயாராக்கிக்கொள்வதே வளர்ச்சியென்று கூறலாம். அது எந்தக் கலைக்கும் பொருந்தும் எனினும் கவிதைக்கு இன்னும் கூடுதலாய்க் கடந்த கணங்களில் சிலவற்றை, மூன்று தொகுப்புகளாய்க் கொடுத்திருக்கிற செல்வராஜ் ஜெகதீசன் நான்காவது சிங்கம் என வெளிப்பட்டிருக்கிறார். மூன்றாவது தொகுப்பிற்குப் பிறகு தனது தளத்தை, முதிர்நிலைக்குக் கடத்தியிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். எழுதப்படாத, கவிதைப் பாடுபொருட்களைக் கண்டறிந்து, அவற்றைப் படைப்புக்குள் பிரதிநிதிப்படுத்துவது கவிஞருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இதையுணர்ந்து செயல்பட்டிருக்கிறார். ஏற்கெனவே யாராலோ சொல்லப்பட்ட அனுபவங்களும் இவருடையனவாகவே வெளிப்பட்டிருக்கின்றன.

புத்தகப் பகுதி: நூல்நிலையங்களின் ஜன்னல்
 

ஆந்திர எல்லைப் பகுதியான பொன்னைக்கு அருகில் உள்ள வசூர், அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு சார்ந்து கதைகள் படைப்பவர் கவிப்பித்தன். பண்பாட்டு வறட்சி பெற்ற நிலப்பகுதியாகவே மாநில எல்லைப்பகுதிகள் கருதப்படுவது தமிழகத்தின் இலக்கியப் பொதுப்புத்தியாகும். இதிலிருந்து கேரள எல்லைப்பகுதிக்கு எப்படியோ விதிவிலக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் ஆந்திர, கர்நாடக எல்லைப்பகுதிகள், அப்பகுதி இலக்கிய முயற்சிகள் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் அறியப்படுகின்றன; அங்கீகரிக்கப்படுகின்றன. கவிப்பித்தனின் கதைகள் பொன்னை வட்டார ரெட்டியார்மாரின் ‘இனவரைவியல் சார்’ பண்பைப் பெற்றுள்ளன என்பது கவனத்திற்குரியது. தமிழ்ப் புனைகதை உலகிற்கு இதுவரையிலும் வந்துசேராத மக்களின் வாழ்வியல் அம்சங்கள், பண்பாட்டு அசைவுகள் இவரது சிறுகதைகளி

காலச்சுவடு- 150, தொடரும் பயணம்
சல்மா  

புத்தகங்கள் வாழ்வின் குறுகிய வெளிகளுக்குள் புகுந்து கொண்டிருந்த காலம் அது. மனுஷ்யபுத்திரனைச் சந்திப்பதற்காக நண்பர்கள் வந்துபோவது வழக்கம். அப்படி வருபவர்கள் இலக்கிய இதழ்கள் சிலவற்றைத் தந்துவிட்டுச் செல்வார்கள். இனி, நிகழ், கணையாழி, காலச்சுவடு போன்ற இதழ்கள் அப்போதுதான் கைக்குக் கிடைத்தன. நிகழ், இனி படித்த பிறகு கோவை ஞானியோடும் எஸ்.வி. ராஜதுரையுடனும் கடிதங்களில் தொடர்புகொள்ள ஆரம்பித்திருந்தேன். சுந்தர ராமசாமி என்னும் பெரிய எழுத்தாளரால் நடத்தப்பட்டு, சில இதழ்களுக்குப் பிறகு நின்றுவிட்ட பத்திரிகை என்னும் அறிமுகத்தோடு கைக்குக் கிடைத்த காலச்சுவடின் சில இதழ்களை வாசித்தபோது அதிலுள்ள படைப்புகளை ஏனோ நெருக்கமாக உணர்ந்தேன். மாற்றுச் சிந்தனைகளை அளிக்கக்கூடிய கட்டுரைகள், நேர்காணல்கள், படைப்புகள் எ

கட்டுரை
ரவிசுப்ரமணியன்  

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும். அதனால் தான் அவர் போன்ற கலைஞர்களை, அவர்கள் வாழ்ந்த காலங்கடந்தே நாம் முழுமையாகக் கண்டுணரும்படி நேர்ந்துவிடுகிறது. தன் சிறுகதைகள் குறுநாவல்கள், நாவலில், எந்த ஒரு கருத்துக்காகவும் கொள்கைக்காகவும் தனிப்பட்ட குரலில் அவர் மாய்ந்து உருகுவதையோ எதிர்ப்புக் குரல் எழுப்புவதையோ நாம் க

என்னெஸ்  

அதிராத தந்தி இசைக்குமா? ஆனாலும் அதிர்கிற தந்தியில் தூசு குந்தாது. - பிரமிள் (எல்லை) வாழ்வு, கலை ஆகிய இரண்டிலும் எல்லா அர்த்தங்களிலும் பண்டிட் ரவிசங்கர் மரபை மீறியவர். கொந்தளிப்பான வாழ்க்கையைக் கலையாலும் வேட்கை தணியாத கலையை வாழ்க்கையாலும் நிறைவு செய்துகொள்ள முயன்றவர். அவரளவுக்குப் புகழையும் அங்கீகாரத்தையும் பெற்ற கலைஞர்கள் குறைவு. எந்த அளவுக்குப் போற்றப்பட்டாரோ அதே அளவுக்குக் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தவர். அவரது மரபு மீறல்கள் தாம் அவரை உலக இசையின் அடையாளமாக்கின என்பதும் உண்மை. வசதியான வங்காளப் பிராமணக் குடும்பத்தின் கடைக்குட்டியாக வாரணாசியில் பிறந்தவர் ரவீந்திர சங்கர் சௌத்ரி. தகப்பனார் சியாம் சங்கர் சௌத்ரி வடமொழி வல்லுநர். ராஜஸ்தானின் ஜாலவார் சமஸ் தானத்தின் திவான். பின்னர் ச

பதிவு
காளிமைந்தன்  

இந்த ஆண்டு தமிழில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் கலைவிமர்சகர் இந்திரன் மதுரை அற்றைத்திங்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அற்புதமான கதை சொல்லல் பாணியில் தன் இளம்பிராயம் தொடங்கித் தன் பயணத்தை விவரிக்கத் தொடங்கிய தான் ஓவியராகவும் கலைரீதியான செயல்பாட்டாளராகவும் விளங்கியதை அதிகம் விவரித்து முடித்தார். குடும்பப் பின்னணியின் காரணமாகக் கலைமீதான ஆர்வம் பெற்றதைக் கூறிய இந்திரன் கறுப்பு இலக்கிய மொழிபெயர்ப்பு, தான் நேரில் சந்தித்துப் பழகிய பெரும் ஆளுமைகள் பற்றியும் பேசினார். மரபுக் கவிதை பாணியில் அவரது முதல் கவிதைத் தொகுப்பான திருவடிமலர்கள் வெளிவந்தது. ஆங்கில வாசிப்பு சார்ந்திருந்தாலும் தமிழறிஞர் ம. லெ. தங்கப்பா போன்றோரிடம் ஆரம்பத்திலிருந்தே தொடர்ப

பதிவு
சு. ம. கருநா  

08.12.2012 அன்று மதுரை செசி வளாகத்தில் அயோத்திதாசர் ஆய்வு நடுவம் மாறுதலுக்கானஅரசியல்: அயோத்திதாசர் எனும் பொருளில் கருத்தரங்கொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் எழுத்தாளர் பிரேம், பேராசிரியர் ந.முத்துமோகன், எழுத்தாளர் ஜெயமோகன், முனைவர் ஞான. அலாய்சியஸ் முனைவர் க.ஜெயபாலன் ஆகியோர் பல்வேறுதளங்களில் ஆய்வுரையை நிகழ்த்தினார்கள். முதல் அமர்வில் எழுத்தாளர் பிரேம் மாறு தலுக்கான அரசியல் அயோத்திதாசரும் அம்பேத்காரும் எனும் பொருளில் உரையாடினார். அண்மையில் தலித்மக்களுக்கு எதிராக நடந்த தர்மபுரி வன்முறையும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்த தாக்குதலையும் பற்றிக் குறிப்பிட்ட பிரேம் இது போன்ற வன்முறைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, இச்சூழலில் அயோத்திதாசர் அம்பேத்கரின் சிந்தனைகளை முன்னெடுக்க

எதிர்வினை
வெ. வெங்கடாசலம்  

டிசம்பர் 2012 இதழில் ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தராணி கட்டுரைகள் படித்தேன். தர்மபுரியில் தலித் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்ட வன்முறை நிகழ்வை விரிவாகவும் துல்லியமாகவும் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். வாசிப்பின் ஊடாக நம்மை அப்பகுதிகளுடனும் மக்களுடனும் பொருத்திக்கொள்ளும்போது துக்கம் பெருகுகிறது. தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான தாக்குதலில் ‘268 வீடுகள் பாதிப்பு, 175 வீடுகள் சேதம், 40 வீடுகள் எரிந்து சாம்பல்’ என்று ஊடகச் செய்திகளும் கள ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய இம்மூன்று கிராமங்களை எரிப்பதற்கு 150 லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தியுள்ளது வன்முறைக் கும்பல். உருட்டுக் கட்டைகள், கடப்பாறைகள், அரிவாள்கள், மரம் அறுக

 

காலச்சுவடு (நவம்பர் 2012) இதழில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா இலக்கியங்களும் வசீகர வரிகளும் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை பற்பல நினைவுகளைத் தூண்டியது. 1968ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பாட நூல்களுள் ஒன்றாக George Orwell எழுதிய Animal Farm நையாண்டி நாவலை வெறுமனே வாசிப்பதை விடுத்துக் கருத்தூன்றிக் கற்க நேர்ந்தது. சோவியத் யூனியன் தோன்றிய தருணத்தையும் இயங்கிய விதத்தையும் எய்திய கோலத்தையும் நையாண்டி மொழியில் எடுத்துரைக்கும் குறுநாவல் அது. Animal Farm, Nineteen Eighty-Four ஆகிய இரு நாவல்களிலும் அவர் சுட்டிக்காட்டிய மொழித்திருட்டு இற்றைவரை என்னை எச்சரித்த வண்ணம் உள்ளது. 1949இல் வெளிவந்த Nineteen Eighty-Four நாவலில் ஆட்சியாளர்கள் எக்காலமும் விடுக்கும் அறைகூவல்கள் சில

தலையங்கம்
 

தமிழகப் பதிப்பாளர்கள் சிலர் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசு நூலக ஆணை வழங்காததை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்குமளவுக்கு அறச்சீற்றமும் அடைந்திருக்கிறார்கள். பதிப்பாளர்கள் சார்பாக அரசுடன் உரையாடி ஆவன செய்ய வேண்டிய பதிப்பாளர் கூட்டமைப்பு இதில் போதிய முனைப்பின்றி இருக்கிறது. பொது நிறுவனர்கள் அதிகாரத்துடன் ‘அகலாமல் அணுகாமல் தீக்காய்வார் போல்க’ உறவுகொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியின் பிரச்சார அரங்காக, சென்னைப் புத்தகச் சந்தை, பதிப்பாளர்கள் சிலரின் சுயநலத்திற்காக மாற்றப்பட்டது. அவருடைய ‘சொந்தப் பணத்தை’ வாங்கிப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட அரசியல் கறை, புதிய அரசுடன் சுமூகமான உறவை மேற்கொள்ள இன

உள்ளடக்கம்