சிறப்புப் பகுதி: பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும்
 

சமீபத்தில் புதுதில்லியில் இருபத்து மூன்று வயதுடைய பிசியோதெரபி மாணவியொருவர் கூட்டு வன்புணர்ச்சிக்கு இரையாகிச் சிதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் மிகவும் பரபரப்பான பொதுவிவாதங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான அறிகுறி. இது போன்ற கொடுமை களுக்கு உடனடித் தீர்வு வேண்டுமென்னும் கோரிக்கை எழுப்பப்படும் அதே நேரம் மகளிருக்கு இழைக்கப்படும் பலவிதமான வன்முறைகளுக்கு அப்பால் உள்ள சிக்கலான சில அம்சங்களை நாம் புறக்கணித்துவிடக் கூடாது. கொலையைவிடவும் வன்புணர்ச்சி மிகக் கொடூரமான குற்றம் என்று நிறுவ முயல்வது, மன அயர்ச்சி அளிக்கக்கூடிய அளவுக்கு வாடிக்கையாகிவிட்ட வன்முறைச் செயல்களை இயல்புக்குப் புறம்பான மிக அரிதான மனக் கோளாறு என வாதிடுவது, குடும்பத்துக்குள்ளேயே நிகழும் பாலியல் வன்முறைகளைக் கண்டுகொள்ளாமல் விட

சிறப்புப் பகுதி: பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும்
 

2011ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கனடாவின் டொராண்டோ நகரக் காவல் துறை அதிகாரிகளுள் ஒருவரான மைக்கல் ஸான்குய்னெட்டி (Michael Sanguinetti) குற்றங்களைத் தடுப்பது எப்படி என்பது பற்றி யார்க் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை மாணவர்கள் மத்தியில் பேசியபோது, ‘இதை நான் சொல்லக் கூடாது என்று சொல்கிறார்கள், இருந்தாலும் கூறுகிறேன், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகக் கூடாது என்றால் அவர்கள் Slut போல், (ஆண்கள் பலருடன் உடலுறவுகொள்ளும் ‘தரம் தாழ்ந்த’ பெண்களைப் போல். அதாவது ஒரு பெண் ஆண்கள் பலருடன் உறவுகொள்வது என்பதே அவள் கேவலமானவள் என்பதற்கான ஆதாரம்) உடையணியக் கூடாது’ என்றார். மைக்கலின் இந்தப் பேச்சு SlutWalk என்ற ஒரு பெரும் இயக்கத்திற்கு வழிவகுத்தது. அடுத்த மூன்று மாதங்களில் அட்லாண்

சிறப்புப் பகுதி: பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும்
கண்ணன்  

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் வன்பாலுறவு பாரதத்தில் நடப்பதில்லை எனவும் இந்தியாவில்தான் நடக்கிறது என்றும் குறிப்பிட்டமை கடுமையான சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இதில் அவர் இந்தியா எனக் குறிப்பிடுவது, ஆர்.எஸ்.எஸ்சின் பார்வையில், நவீன மயமாகத் திகழும் நகரங்களை. இந்தியப் பண்பாட்டின் கேந்திரமாகப் பார்க்கப்படும் அதன் கிராமங்களை ‘பாரதம்’ எனச் சுட்டுகிறார். இது பற்றிக் கருத்துக் கூறியுள்ள சமூகவியல் அறிஞர் அஷிஸ் நந்தி, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்தில் உண்மை இருக்கிறது என்றும் அருதியிட்டு அவர் கூறியுள்ளதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பாரம்பரிய வாழ்க்கைமுறை எஞ்சியுள்ள நாட்டுப்புறங்களைவிட நகரங்களில்தாம் வன்பாலுறவு அதிகம் நடக்கிறது என்பது உண்மைதான், வருங்காலத்திலும் நகரங்களிலேயே இது அ

சிறப்புப் பகுதி: பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும்
பூமா சனத்குமார்  

தில்லியில் டிசம்பர் 16ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் கொடூரக் கும்பலால் வன்புணர்ச்சிக்கு ஆளாகிச் சிதைந்த 23 வயதான மருத்துவ மாணவி பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களையும் விவாதங்களையும் தொடங்கி வைத்தபடி, சிகிச்சைகள் பலனின்றி இறந்தாள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் அரசியல் மயமாக்கப்பட்ட தில்லி இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் இச்சம்பவத்தால் கொதிப்படைந்து தன்னிச்சையாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தில்லியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துவரும் நிலைமை பெண்களையும் இப்போராட்டங்களில் பங்கேற்கத் தூண்டியது. போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை, தடுப்பு அரண்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் மீறி மாணவர் அமைப்புகளும் பெண்கள் அமைப

தேவிபாரதி  

தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற்றைப் பிரசுரித்திருந்த இத்தளங்கள் அந்த மருத்துவ மாணவிக்குத் தம் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியிருந்தன. இந்த அறிவிப்புகள் வியப்பிலாழ்த்தின. மருத்துவ மாணவியி

ஓவியங்கள்: பி.ஆர் ராஜன்  

நமக்காகவா காத்திருக்கின்றன? உன்னை வெறுப்பதாக இருந்தால் அதை ஒரு வாக்கியத்தில் சொல்லுவேன் அந்த வாக்கியம் கறுப்பு நிறமுள்ளதாகவும் கரிப்பானதாகவும் குளிர்ந்து உறைந்ததாகவும் இருக்கும் உன்னைப் புறக்கணிப்பதாக இருந்தால் அதை இரண்டு வார்த்தைகளில் சொல்லுவேன் அந்த வார்த்தைகள் சாம்பல் நிறமுள்ளவையாகவும் துவர்ப்பானவையாகவும் காற்றில் அலைவதாகவும் இருக்கும் உன்னை நேசிப்பதாக இருந்தால் அதை மௌனத்தின் ஒற்றைச் சொல்லில் காட்டுவேன் அந்தச் சொல் நிறமற்றதாகவும் ருசியற்றதாகவும் காட்சியிலிருந்து ஓசைக்குள் பாய்வதாகவும் இருக்கும். இந்தப் பளிங்குப் பேழைக்குள் பத்திரமாக இருப்பவை: உறைந்த ஒரு வாக்கியம் அலைமோதும் இரண்டு சொற்கள் ததும்பும் ஒரு மௌனம் அவை நமக்காகவா காத்திருக்கின்றன?   மஞ்சள் நிற டாலியா கண்டேன் ஜன்னல

உமா வரதராஜன்  

சென்ற இதழில் வெளியான உமா வரதராஜனின் இக்கவிதைகள் அச்சாக்கப் பிழை காரணமாக மீண்டும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது. - பொறுப்பாசிரியர் எதிர் திசைப் பயணி ஒரு பாதாளத்தின் மேடையில் பிரிந்தவள் சொர்க்கத்தில் சந்திக்கலாம் எனக் கூறிச் சென்றாள். என் பயணப் பையும், கால்களும் நினைவின் பள்ளத்தாக்கில் கீழ் நோக்கி இழுத்துச் செல்லுகின்றன ஒவ்வொரு பறவைக்கும் தெரிகின்றது மாலையில் அதனதன் கூடு அவற்றின் மரக் கிளைகள்... சாபத்தின் சின்னமாய் நின்றபடியே துயிலும் குதிரையாக்கி நடுக்காட்டில் விட்டுச் சென்றிருந்தாள் ஆளுயரப் புல்வெளியில் என் வகிடு எதுவென்று தேடுகின்றேன்... எந்தப் படகும் தென்படாத இரவின் நதியைக் கடக்கு முன் நிற்க ஓர் இடம்.. வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்க ஒரு கூரை ஏதுமின்றி இருக்கிறேன்...

நேர்காணல்
 

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான The Progressive இதழிலும் அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வெளியான Louder than Bombs: Interviews from the Progressive Magazine நூலிலும் இடம்பெற்ற நேர்காணலின் தமிழ் வடிவம் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் யுத்தங்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன். ‘யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? இந்த மனித அவலத்திலிருந்து ஆதாயம் ஈட்டிக்கொள்வது யார்?’. இதற்கான பதிலை ஒருபோதும் ஊடகங்களில் கண்டடைந்ததில்லை. ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போது நீங்கள் கேட்க வேண்டிய பிரதானமான கேள்விகள் இவைதாம். - எடுவார்டோ கலியானோ லத்தீன் அமெரிக்காவின் எழுத்தாளர்கள், கதைச

சிறுகதை
 

புதுச்சட்டம் வந்தபோது எல்லோரும் கூடிக்கூடி அது பற்றியே பேசினார்கள். ‘இது மனித அடிப்படை உரிமை. அரசு எப்படி இதில் தலையிடலாம். வேற்று நாடுகளில் இப்படியான புதுச்சட்டம் கிடையாதே? அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது பின்னோக்கிச் செல்கிறது. நாங்கள் போராட வேண்டும் என்றாள்’ ஒரு மாணவி. அவளுக்கு வயது பத்து. ‘நான் என்னுடைய வலைப்பூவில் எழுதுவேன்’ என்றான் ஒரு பையன். ‘ஆஹா! உன் பெயரைத் தெருவுக்குச் சூட்டுவார்கள்.’ எல்லோரும் சிரித்தார்கள். இறுதியில் நானோபேசியின் மூலம் இந்த அநியாயத்தை உலகம் முழுவதும் பரப்புவது, பேசுவது, அறிக்கைவிடுவது என்று முடிவானது. அமெரிக்க அரசு நிச்சயம் பணிந்துவிடும். சமந்தா இது பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை.

கன்னடச் சிறுகதை
 

இந்தக் கோடை விடுமுறையில் தார்வாட் தாத்தா வீட்டுக்குத் தன்மயி வந்தபோது வீட்டில் விசித்திரமான மேகங்கள் சூழ்ந்திருந்தன. எப்போதும்போல விடுமுறையின் மகிழ்ச்சி தென்படவில்லை. ஸ்டேஷனுக்குக் குஷீ சித்தியும் மஞ்சுவும் வந்திருந்தார்கள். குதிரை வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது தாத்தாவும் பாட்டியும் பாசத்தோடு உடம்பைத் தடவினாலும், சித்தப்பா ‘இந்தத் தடவை விடுமுறையைக் கொண்டாட முடியாது. படிக்கணும். எங்க மஞ்சுவுக்கும் இந்தத் தடவை எஸ்எஸ்எல்சி. அவன் படிப்பையும் கெடுக்கக் கூடாது’ எனத் தீவிரத் தொனியில் ஆணை பிறப்பித்துவிட்டார். தன்மயிக்கு அழுகையே வந்ததுபோலாயிற்று. ‘இந்தத் தடவை பியூசி முடியுது. அடுத்து என்னமோ ஏதோ? அந்தக் கோர்ஸ் இந்தக் கோர்ஸுன்னு எல்லாத்துக்கும் முயற்சிபண்ணன

மதிப்புரை
க. காசிமாரியப்பன்  

உப்பு நாய்கள் (நாவல்) ஆசிரியர்: லக்ஷ்மி சரவணக்குமார் முதல் பதிப்பு 2011 பக்கம்: 252, விலை ரூ.180 வெளியீடு உயிர்எழுத்து பதிப்பகம் திருச்சி கைப்பேசி: 99427 64229 ஜெயகாந்தனும் ஜி.நாகராஜனும் இருளில் புழங்குவோரை அச்சுக்குக் கொண்டுவந்தார்கள். வெளிச்சம் பாயும் அரையிருள் நிழல்முற்றத்தில் ‘கால்மசுரு’ முளைக்காத பையன்களின் கஞ்சாப் புகையும் வாழ்க்கையைத் தொண்ணூறுகளில் பெருமாள்முருகன் எழுதினார். பகல்வாராப் பெண்களை இமையத்தின் ஆறுமுகம் கண்டார். ஜெயமோகனின் ஏழாம் உலகம் பிச்சையெடுக்கும் உருப் படிகளின் குரூர ஜீவிதத்தைக் காட்டியது. இன்னும் சிலர் முயன்றனர். மாறிவரும் பொருளியல் பண்பாடும் உலகளாவிய அதிகாரமும் தொழில் விரிவும் குற்றவுணர்வுகளைக் குறைத்த மட்டுமீறிய பணப்புழக்கமும் நடப்பு வாழ்வின

கட்டுரை
கோ. ரகுபதி  

சமூக அறிவியல் புலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த ஆராய்ச்சியில் வண்ணார் சாதி குறிப்பிட்டுக் கூறும்படி கவனப்படுத்தப்பட்டிருக்கவில்லை. குறைந்த மக்கள்தொகை, அரசியல் அதிகாரமின்மை, வலுவான அமைப்பின்மை போன்ற இன்றைய சூழல்களை அம்மக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களாகக் கூறலாம். முனைவர் பட்டத்திற்கான தரவு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது 2003ஆம் ஆண்டு “வண்ணான் பாட்டுக்கு” எதிரான போராட்டம் குறித்த ஆவணம் ஒன்று என் கைக்குக் கிட்டியது. பின்னர் ஆவணம் சேகரிக்கும்போதெல்லாம் அப்போராட்டம் தொடர்பான வேறு ஆவணங்களையும் தேடிக்கொண்டிருந்தேன். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் சென்னை பெரியார் திடல், ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் ஆவணங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது வண்ணார்களின் போராட்டம் தொடர்

ஜி.எஸ். தயாளன்  

இடிந்தகரை, இறுகப் பூட்டியிருக்கும் இந்தியாவின் மனசாட்சியைத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருக்கும் ஒரு கடற்கரை கிராமம். பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் இங்கு இல்லை. ஆனால் உலக சிந்தனைகள் கிராமத்திற்குள் நுழைந்து எங்கெங்கும் பரவியுள்ளன. பல்வேறு மக்கள் இயக்கத்தினர், செயல்பாட்டாளர்கள், களப் பணியாளர்களின் அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது இப்பூமி. நீண்ட போராட்ட வாழ்க்கையால் தெளிவும் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட முகங்களாகக் காட்சி தருகிறார்கள் இம்மக்கள். நேர்மையான நோக்கம் கொண்ட போராட்டமும் அன்பும் எத்தனை நெருக்கமானவை என்பதை இங்கே காணமுடிகிறது. இடிந்த கரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் சொந்த வீ¢ட்டிற்கு வந்த உணர்வே மேலிடுகிறது. 31.12.12 அன்று இக்கிராமம் போராட்டத்தின் இறுக்கத்த

பதிவு
பெருமாள்முருகன்  

கல்விப்புலம் சார்ந்தோர் கள ஆய்வு நிகழ்த்தித் தரவுகள் சேகரித்து எழுதிய கட்டுரைகள், ஆய்வேடுகள், நூல்கள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. ஆய்வுப் பட்டம் பெறுவதற்காகச் சில இடங்களுக்கு மட்டும் சென்று தாங்கள் சேகரித்தவற்றைக் கொண்டு அத்துறையில் கரைகண்டோர் போல ஆய்வு முடிவுகளைச் சொல்லி பட்டங்களைப் பெற்றுவிடுகின்றனர். அதன் பின் அவர்களுக்கும் அந்தத் துறைக்கும் தொடர்பேதும் இருப்பதில்லை. ஆனால் தங்கள் வாழ்வையே களத்தோடு இணைத்துக்கொண்டவர்கள் உருவாகி வரும்போது ஆய்வு முடிவுகள் தங்கள் போதாமை வெளிப்பட வெளிறி நிற்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகக் கொங்குப் பகுதி மாவட்டக் (குறிப்பாகச் சேலம், நாமக்கல்) கூத்து பற்றிப் பல அரிய பதிவுகளைச் செய்துவரும் எழுத்தாளர் மு. ஹரிகிருஷ்ணன

ஜெய்குமார்  

புனைவெழுத்துகளைவிடவும் ஆய்வெழுத்துகளும் சமூகக் கட்டுரைகளும் வாசப் பரப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் இக்காலகட்டத்தில் காலச்சுவடு பதிப்பகம் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என இருபதிற்கும் மேற்பட்ட புனைவெழுத்து நூல்களை இவ்வாண்டு வெளியிட்டுள்ளது. அவற்றில் ஆறு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஐந்தாம் தேதி புக் பாயிண்ட் அரங்கத்தில் நடந்தது. மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள். அவற்றுள் ஒன்று மொழிபெயர்ப்பு நூல். இந்நிகழ்வுக்குத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு நிகழ்வின் தொடக்கமாகக் குன்னிமுத்து நாவலைக் க. பஞ்சாங்கம் வெளியிட அதைப் பெற்றுக்கொண்டவர் சுகிர்தராணி. குன்னிமுத்து குமாரசெல்வாவின் முதல் நாவல். அடுத்ததாக ஏமாறும் கலை என

 

ஜனவரி 2013 இதழில் கரிச்சான்குஞ்சு பற்றிய ரவிசுப்ரமணியனின் கட்டுரை அந்த லட்சியக் கலைஞனை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது. வறுமையின் கோரப்பிடியில் ஞானம் பட்டபாட்டைப் படித்து முடித்ததும் மனம் கனத்தது. ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பதைக் கரிச்சான்குஞ்சு பல சந்தர்ப்பங்களில் பின்பற்றியிருப்பதை அறிய முடிகிறது. தன் மகள் திருமணம் பற்றி அவர் எழுதிய கடிதம் நெகிழவைக்கிறது. ஓர் உண்மையான கலைஞனை எந்த இக்கட்டான சூழலும் வீழ்த்த முடியாது என்பதை அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் காலச்சுவடு ஜனவரி 2013 தலையங்கம் படித்தேன். எழுத்தாளர் மேம்பாட்டாலே பதிப்புத் தொழில் மேம்படும். தமிழ்ப் பண்பாடும் மேன்மை கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சிறப்பான தலையங்கம். ஜி. குப

தலையங்கம்
 

ஜனவரி மூன்றாம் வாரம் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் உயர்மட்டக்குழுக் கூட்டம் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களையும் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையும் எதிர்கொள்வதற்கான தேர்தல் அறிக்கையே இந்தப் பிரகடனம். தொடர்ந்து எட்டாண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் அக்கட்சி, அரசின் தோல்வியை மறைப்பதற்காக மேற்கொள்ளும் தந்திரம் என்றும் சொல்லலாம். ஊழலற்ற, திறமையான நிர்வாகம், மதச்சார்பின்மை, நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் கட்டிக் காப்பது, முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பது, வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டத்தை முற்றாக ஒழிப்பது, தலித்துகள், பழங்குடிகள் முதலான விள

உள்ளடக்கம்