சந்திப்பு
சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்  

அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது பற்றிப் பேச வேண்டுமானால் அதற்கு முன் தூக்கிலிடப்பட்ட கசாப் பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் முதன்முறையாக ஒருவரை ரகசியமாகத் தூக்கிலிடுவது 2012 நவம்பர் 21ஆம் தேதி கசாப்பைத் தூக்கிலிட்டபோதுதான் நடந்தது. இது போன்ற தருணங்களில் தேசப் பாதுகாப்புக் கருதி இதைச் செய்தோம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இம்முறை அப்சல்குரு தூக்கிலிடப்பட்டபோது உள்துறை அமைச்சர் ஒரு உண்மையையும் சேர்த்து சொல்லிவிட்டார். இப்பிரச்சினையில் யாரும் உச்ச நீதிமன்றத்தை நாடிச் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தோம் என்று சொல்லியதுதான் அந்த உண்மை. சட்ட ரீதியான தலையீடு எந்த விதத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசு தெளிவாக இருந்திருக்கிறது. அர

விஸ்வரூபம்
க. திருநாவுக்கரசு  

‘எல்லாம் சிவமயம் என்பார்கள். ஆனால் எனக்கு எல்லாம் பயமயம்’ எனத் தொடங்கி உலகில் உள்ள எல்லாப் பயங்களும் தனக்கிருப்பதை மூச்சுவிடாமல் உளவியல் மருத்துவர் ஜெயராமிடம் அடுக்குவார் தெனாலி படத்தின் கதாநாயகன் கமல் ஹாசன். இன்றைய இந்தியர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் என்று சொன்னால்கூட இந்தியச் சமூகத்தின் ஏதாவது ஒரு பிரிவினரின் உணர்வு புண்படும்போலிருக்கிறது. எந்தப் பிரிவினரின் மனத்தையும் புண்படுத்தாத ஒரு கருத்தைக் கண்டுபிடித்துக் கூறுவது என்பது கணிதத்தில் ஆகப் பெரிய பகா எண்ணைக் (prime number) கண்டு பிடிப்பதைவிடக் கடினமான காரியமாக இருக்கும். இந்தியர்களின் இந்த மனநிலை எந்த அளவிற்குக் கண்டனத்திற்குரியதோ அதைவிடப் பரிதாபத்திற்குரியது. ‘அனிச்ச ம

விஸ்வரூபம்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

எழுத வந்த விசயத்திற்கு வருவதற்கு முன் ஒரு கிளைச் செய்தி. ஆண்டு 1980, ஓர் ஆங்கிலச் சித்திரை மாதம். முனைவர் பட்ட ஆய்வுக்காக பார்மீங்கம் வந்தேன். அந்த நாள்களில் அங்கிருந்த ஒரே ஒரு ஊத்தையான திரையரங்கில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலையில் ஹிந்தி சினிமா திரையிடுவார்கள். இந்த அரங்குக்கு முன்னால் தமிழ்த் திரை அரங்குகள் நாய்க்கர் காலத்து அரண்மனைகள் போல் தோன்றும். மற்ற நாள்களில் இந்தியப் பலசரக்கு விற்கும் அங்காடியாக அந்த அரங்கம் மாறிவிடும். அன்றைய குடியேறிகளில் பெரும்பாலான இந்தியர்கள் பஞ்சாபிகளும் குஜராத்திகளுமே. விந்திய மலைகளுக்கு அப்பால் அவர்களுக்குத் தெரிந்த தமிழ் கலாச்சாரக் கூறுபாடுகள் இட்லி, வடை, மசாலா தோசை. கமல் ஹாசன் இன்னும் உலக நாயகனாக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கவில்லை. ஆனால் இந்தத்

விஸ்வரூபம்
அரவிந்தன்  

புறாக்களின் சிறகடிப்போடு மென்மையாகத் தொடங்கும் படம் திடீரென்று வன்மைக்கு மாறுவது விஸ்வரூபம் படத்தின் தன்மையை உணர்த்தும் குறியீடு என்று சொல்லலாம். பெண்மையின் சாயலுடனும் வசீகரமான நளினத்துடனும் தோற்றம் தரும் நாயகன் ஆக்ரோஷமான ஆண் மகனாக உருமாறுவதும் அதே வகையிலான குறியீடுதான். மென்மையும் நளினமும் பெண்மையும் ரசிக்கவும் போற்றவும் ஆராதிக்கவும் உரியவை; ஆனால் வீறு கொள்ளும் ‘ஆண்மை’யும் வன்மையும்தான் இந்த உலகை எதிர்கொள்வதற்கு ஏற்ற வழி என்று விஸ்வரூபம் சொல்ல முயல்கிறது என்று இந்தப் படிமங்களைக் கட்டுடைக்கலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பேர்போன திரைப்பட ஆளுமையான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எழுப்பியுள்ள சர்ச்சைகளின் போக்கும் இந்தப் படத்தின் குறியீட்டைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது

கட்டுரை
எம். ரிஷான் ஷெரீப்  

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்கிவைக்கவும் பல்வேறு விதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலங்காலமாக இலங்கையில் நடைபெற்

நேர்காணல்
தமிழில்: எத்திராஜ் அகிலன்  

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் பேராசிரியர் நோம் சாம்ஸ்கியுடன் ஜெகன் வின்சென்ட் டே பால் நடத்திய நேர்காணலின் தமிழ் வடிவம் இது. பேராசிரியர் சாம்ஸ்கி அமெரிக்காவின் பிரபல MIT பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிநிறைவுக்குப் பின்னர் மாண்புடைய கௌரவப் பேராசிரியர் பொறுப்பில் நீடித்துவருகிறார். பேராசிரியர் நோம் சாம்ஸ்கி கலையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து அழகிய எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட ZERO 1 எனப்படும் அமைப்பின் அறக்கட்டளை சார்பாக மேற்கொண்ட ஒப்பீடும் வேறுபாடும்: நடத்தை நியதிகள் (Compare and Contrast: Codes of Conduct) என்னும் திட்டச் செயலுக்காக இந்த நேர்காணல் நடைபெற்றது. இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய http://www.zero1biennial.org/jegan-vincent-de-paul எனும் இணைய இணைப்

கவிதைகள்
 

மயிலைப் பார்த்தல் ஒன்று அப்போதும் அக்காட்டில் மயில் இருந்தது. எப்போதும் பார்க்கிற மயில்தான் அது. ஊமத்தம் பூ பூத்திருக்கிற வரப்புகளின் ஓரத்தில் அது பரபரப்புடன் எட்டு வைக்கிறது. சில சமயம் சோளக்காடே கதியெனக்கிடக்கிறது. காற்றில் அதன் அகவல் மிதந்து வருகிறது. ஏன், உங்கள் புத்தகங்களின் நடுவே குட்டியீன்ற மயிலாகவும் அது இருந்தது. மேலும் முதல் காதலியை ஒத்ததாகவும் அது இருக்கிறது. கடந்த ஆண்டொன்றில் கடம்பவனத்தின் நடுவே ஒரு மயிலைக்கொன்று தன் கிளை பரப்பிய நிறுவனத்தை அடையாளம் தொ¢ந்ததிலிருந்து மயிலைப்பார்க்கும்போதெல்லாம் அது ராணிதிலக்கின் மயிலாகவே தெரிகிறது. இரண்டு சமீபமாக இருமருங்கிலும் மரங்களடர்ந்த குறுகியத் தார்ச்சாலை வழி சென்று திரும்புகிறேன் தூரத்தில் மயில் அகவல் கேட்டபடியிருக்கிறது ஒருபோத

சிறுகதை
 

முந்தின நாள் கிருஷ்ணா தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்க்கப் போயிருந்தேன். விளைவு மறுநாள் காலை சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. வழக்கத்தைவிடப் பதினைந்து நிமிடம் தாமதமாகத் தான் நடவரசு அய்யா வீட்டுக்குப் போய்ச் சேர முடிந்தது. அதற்குள் குட்டைக் கிருட்டிணன் முந்திக்கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அய்யாவின் சைக்கிளை நிறுத்தித் துடைத்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது. முகத்தை இறுக்கிப் ‘போடா குள்ளப் பண்ணி’ என்று அவனுக்குக் கேட்காத குரலில் முணுமுணுத்து உதடுகளைப் பிதுக்கிப் பழிப்புக் காட்டி விட்டுத் திண்ணைமேல் ஏறினேன். குட்டைக் கிருட்டிணன் சைக்கிளின் பெடலை வேகமாகச் சுழற்றித் துடைத்துக்கொண்டிருந்த துணியைச் சுருட்டிப் பின் சக்கரத்த

கட்டுரை
பி. ஏ. கிருஷ்ணன்  

(8 ஜனவரி 2012 அன்று சென்னையில் ‘சங்கம் 4’ - நாம் மற்றும் தமிழ் மையம் இணைந்து நடத்திய விழாவில் பி.ஏ. கிருஷ்ணன் பேசியதன் திருத்தப்பட்ட முழுவடிவம். வாசகர் கருத்துகளையும் விவாதங்களையும் வரவேற்கிறோம் -ஆ) I என்னை இங்கே பேச அழைத்த ஃபாதர் கஸ்பார் அவர்களுக்கும் நண்பர் சுந்தரராஜன் அவர்களுக்கும் எனது நன்றி. இப்பேச்சிற்கு ஒரு வடிவம் கொடுக்க எனக்கு உதவிய நண்பர்கள் கலவை வெங்கட், கற்பகவினாயகம், பழ. அதியமான் ஆகியோருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன. நான் பெரியாரைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நான் பிறந்தது பிராமணக் குலத்தில். ஆனால் என்னிடம் சில கலாச்சார எச்சங்களைத் தவிரப் பிராமணர்களுக்கே உரித்தான எந்த அடையாளமும் இல்லை என்றே நம்புகிறேன். கடவுள்

புத்தகப் பகுதி
பழ. அதியமான்  

நவீன தமிழகத்தின் அரசியல் போக்கையே திசைதிருப்பிவிட்ட ஒரு போராட்டம் 1924-25இல் நிகழ்ந்தது. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தமிழக அரசியலில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற புதிய திறப்புக்கு அடிகோலிவிட்டது. முன்னரே பிற்படுத்தப்பட்டோர் விழிப்பு பெற்றிருப்பினும், இந்த நிகழ்வே இப்புதிய அணி பிரிப்பைப் பொதுவெளியில் உறுதிப்படுத்தியது. இதைச் சமூக வரலாறு பதிவு செய்துள்ளது. தான் காங்கிரசிலிருந்து வெளியேறியதற்குப் பின்னாளில் காரணம் தெரிவித்த பெரியார், சேரன்மாதேவி சம்பவத்தால் நேர்ந்த கசப்பு நிலைமையையே முதலாவதாகக் குறிப்பிட்டார். அடுத்தே பலரும் பரவலாக அறிந்த அவரது வகுப்புவாரி பிரதிநிதித்துக் கோரிக்கைக்கு ஏற்பட்ட தோல்வியைச் சுட்டினார். அவரைப் பற்றிய ஒரு பேனாசித்திரத்தில் பெரியார் காங்கிரசிலிரு

மதிப்புரை
அம்ஷன் குமார்  

தமிழ் சினிமா வரலாறு என்பது படவுலகினரின் வாழ்க்கைக் குறிப்புகள், படங்கள் வெளியான காலம், அவற்றின் வெற்றி, தோல்விகள் பற்றிய செய்திகள் என்பதைச் சுற்றிய வண்ணமாகவே இருந்தது. 1981இல் தியடோர் பாஸ்கரன் எழுதிய The message Bearers என்னும் நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றியலை அங்குரார்ப்பணம் செய்தது. தேசிய அரசியலும் ஜனரஞ்சக ஊடகங்களும் பற்றிய 1945 வரையிலான அறுபத்தைந்து ஆண்டுக் காலகட்டத்தின் முன்னோடியற்ற அரிய நூலாக அது இருந்தது. ஒரு கல்விமான் வேட்டைக்காரர்போல் அலைந்து திரிந்து கண்டெடுத்த தகவல்களும் அவற்றின் மீதான முடிவுகளும் அந்நூலில் விரவியிருந்தன. அந்நூலின் ஆகச் சிறந்த பகுதி தமிழ் மௌனப்படக் காலம் பற்றியதாகும். தமிழகத்தைக் களப்பிரர் ஆண்ட காலம் போன்ற ஒன்றாகத் தமிழ் மௌனப்படக் காலமும் ஆகிவிட்டிருந்தது

அஞ்சலி: டி. வினயசந்திரன் (13 மே 1946 - 11 பிப்ரவரி 2013)
சுகுமாரன்  

எழுபது எண்பது கால கட்டங்களில் தமிழ் இலக்கியத்தில் புதிய வரவுகளுக்கான வழி சற்று விரியவே திறந்திருந்தது. அந்த வழியில் மலையாள நவீன இலக்கியமும் அறிமுகமானது. குறிப்பாக நவீன கவிதை. அன்று நவீன கவிதையின் நடைமுறையாளர்கள் என்று அறியப்பட்ட பலரும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். கவனமாக வாசிக்கப்பட்டார்கள். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், சச்சிதானந்தன், ஏ.அய்யப்பன், பாலசந்திரன் சுள்ளிக்காடு. டி.வினயசந்திரன் ஆகியோர். இவர்களின் சிலரது கவிதையாக்க முறைகள் லேசான பாதிப்புகளையும் ஏற்படுத்தின. இந்தக் கவிஞர்களுக்கெல்லாம் முதலாவது தமிழ் பொழிபெயர்ப்பாளன் நானாக இருந்தேன் என்பது தற்செயல். இவர்களில் அதிகம் மொழிபெயர்க்கப்படாத கவிஞர் டி. வினயசந்திரன். அவரது ஒரு கவிதையை மட்டுமே தமிழாக்கம் செய்ய முடிந்தது. ‘

அஞ்சலி
தேவிபாரதி - பொறுப்பாசிரியர்  

மலர்மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் கடந்த 09.02.2013 அன்று சென்னையில் காலமானார். பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர் எனப் பல முகங்களைக் கொண்ட மலர்மன்னன் 1980களில் 1/4 (கால்) என்னும் இலக்கியக் காலாண்டிதழை நடத்தினார். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் அதன் முதல் இரண்டு இதழ்களில் தொடராக வந்ததாக நினைவு. 1/4 அதன் இலக்கிய ஈடுபாட்டுக்காகப் பெரிதும் கவனத்துக்குள்ளாகியிருந்த இதழ். தனது சிறுகதையொன்றுக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்றவர் மலர்மன்னன். இவரது மலையிலிருந்து வந்தவன் என்னும் நாவல் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பிறகு நூலாக்கம் பெற்றது. திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை

நேர்பார்வை: பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி
தேவிபாரதி  

இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சி அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து பல தரப்பினரின் விமர்சனங்களுக்குள்ளாயிற்று. இடமாற்றம், பதிப் பகங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளின் பரப்பளவு குறைக்கப்பட்டது முதலான காரணங்களுக்காகப் பதிப்பாளர்களும் வாசகர்களும் ஊடகங்களில் தம் விமர்சனங்களைப் பதிவுசெய்திருந்தனர். எனக்குப் புத்தகச் சந்தைகளின் மேடை நிகழ்வுகள் மீது கடும் விமர்சனங்கள் உண்டு. புத்தகச் சந்தை மேடைகளில் பட்டிமன்றப் பேச்சாளர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. கு. ஞானசம்மந்தனும் வைகோவும் நன்றாகப் பேசக்கூடியவர்கள்தாம், சந்தேகமில்லை. வைகோ சில சமயங்களில் எஸ். ராமகிருஷ்ணனைவிடவும் ஜெயமோகனைவிடவும் புத்தகங்க

 

காலச்சுவடு பிப்ரவரி இதழில் வெளியிடப்பட்ட எடுவார்டோ கலியானோவின் நேர்காணலின் எனது மொழிபெயர்ப்பில் ஆசிரியர்குழு செய்திருந்த மாற்றங்கள் தொடர்பாகச் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். Coffee - கோப்பி, New York Times - நியூயோர்க் டைம்ஸ் முதலான பிரயோகங்களை, தமிழக வழக்கை அனுசரித்து, நீங்கள் காப்பி, நியூயார்க் டைம்ஸ் என மாற்றி யிருப்பது எனக்கு முழு உடன்பாடு. எனினும், USA ஐ அமெரிக்கா என விளிப்பது, அரசியல் சார்ந்த அர்த்தத்தில் தவறானது என்பதே என் நெடுநாளைய நிலைப்பாடு. அமெரிக்க ஐக்கிய அரசுகளைச் சார்ந்தவர்கள் தம்மை ‘அமெரிக்கர்கள்’ என்று அழைத்துக்கொள்கிறபோது ஏனைய வட, தென் அமெரிக்கப் பிராந்தியங்கள் மறக்கடிக்கப்படுகிற அபாயம் ஏற்பட்டு விடுகிறது - இது வெள்ளை மேலாண்மைவாதத்துடன் நுட்பமாகத்

தலையங்கம்
 

நாட்டின் பதிமூன்றாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பிரணாப் முகர்ஜி தனக்கு முன்னாள் அந்தப் பதவியை வகித்தவரும் நாட்டின் பனிரெண்டாவது குடியரசுத் தலைவருமான பிரதிபா பாட்டீலைப் போல் செயல்படாத குடியரசுத் தலைவர் என்னும் விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது போல் தோன்றுகிறது. பிரணாப் உள்துறை அமைச்சராகப் பதவிவகித்தவர் என்பதால் அதன் நீட்சியாகவே குடியரசுத் தலைவர் பொறுப்பையும் கருதிக்கொண்டுவிட்டாரோ என்னும் சந்தேகமும் எழுகிறது. பொறுப்பேற்றுக்கொண்ட மூன்று மாதங்களுக்குள் மும்பைத் தாக்குதல் பயங்கரவாதி கசாப்பின் கருணை மனுவை நிராகரித்து அவரை ரகசியமாகத் தூக்கில் போடுவதற்கு உறுதுணை புரிந்தததற்காக அரசின் தலைவர் என்ற முறையில் அவர் பாராட்டப்பட்டார்.

உள்ளடக்கம்