கட்டுரை
க. திருநாவுக்கரசு  

என் வாழ்க்கையில் நான் நேரில், அதிலும் மிக நெருக்கத்தில் பார்த்த ஒரே உலகத் தலைவர் ஹியுகோ சாவேஸ் மட்டுமே. 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி புது டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு (JNU) சாவேஸ் வருகை தந்த சந்தர்ப்பம் அது. தனது இந்திய வருகையின் போது கல்லூரி மாணவர்களைச் சந்திக்க சாவேஸ் விருப்பம் தெரிவித்ததாகவும் அந்த நிகழ்ச்சிக்கு JNUவை விடப் பொருத்தமான இடம் இருக்க முடியாது என்பதால் மத்திய அரசு JNUவை தெரிவு செய்ததாகவும் சொன்னார்கள். அன்று JNU விழாக் கோலம் பூண்டிருந்தது. அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழை அன்றைய விழாவைக் கெடுத்துவிடுமோ என்ற அச்சம் பலர் மனதில் இருந்தது. ஆனாலும் சாவேஸை வரவேற்க மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்ததைப் போல முன்பு எப்போதும் எந்த நிகழ்ச்

கட்டுரை: ஏப்ரல் - தலித் வரலாற்று மாதம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

மூன்று சம்பவங்களை விவரிப்பதன் மூலம் இக்கட்டுரையைத் தொடங்கலாம். 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த தலித்துகள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் கொளுத்திவிட்டுக் குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் கண்டார். த

கட்டுரை
 

காந்தி, ஜின்னா இருவருமே தேசத் ‘தந்தை’களாக பாராட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தைமை இருவருக்கும் சுகமானதாக அமையவில்லை. அதிக பணிச்சுமையால் ஜின்னா தன் உடல்நலத்தை இழந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்பட்ட இந்திய ஆளுமையான காந்தி, ஒரு ‘தேசபக்த’னின் கருத்தில், குறைபட்ட இந்தியத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்கியதற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தைமை இருவரையுமே பலிவாங்கியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர்ப்பும் அளித்து திருஉருக்களாக்கியது. அவர்கள் இருவருக்கும் இடையில் உருப்பெற்ற எல்லைக் கோட்டின் தம் பக்கத்தில் அவர்கள் புகழப்பட்டார்கள். இரு தலைவர்களும் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்பதை பார்ப்பவரின் தேசம் மற்றும் மதத்தை வைத்து எளிதில் ஊகித்துவிட முடியும

அஞ்சலி: ஜெகந்நாதன் (1914 - 2013)
தி. சுபாஷிணி  

சர்வோதயத் தம்பதியரான கிருஷ்ணம்மாள் - ஜெகந்நாதன் இருவரில் ஜெகந்நாதன் கடந்த பிப்ரவரி 12ஆம் நாள் மறைந்தார். வயது 98. நிறை வாழ்வு வாழ்ந்தவர் என்று சொல்லலாம். வருட எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல; அந்த நிறைவு அவர் ஆற்றிய பணிகளுடைய மகத்துவத்தின் அடிப்படையில். ராமநாதபுரம் மாவட்டம் செங்கப்படை என்ற சிற்றூரில் பிறந்தவர். வசதியான குடும்பம் அவருடையது. விடுதலைப் போரின் அனல்காற்று மூண்டு வீசிக்கொண்டிருந்த கால கட்டத்தில் கல்லூரி மாணவராக இருந்த ஜெகந்நாதன் காந்தியின் அழைப்பை ஏற்று படிப்பைத் துறந்தார். விடுதலைப் போராட்டத் தொண்டரானார். பொது நலமே தன்னலமாக ஆனது. அதே கால அளவில் வினோபா பாவேயின் ‘நிலக்கொடை’ இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டார். காந்திய நெறிமுறைகளில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக்கொண

கட்டுரை
 

தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். பயணிகள் பின்பற்றியே ஆக வேண்டிய நடைமேடை அறிவிப்புகள் அவ்வப்

திரை
செல்லப்பா  

1939ஆம் ஆண்டில் தங்களது சொந்த ஊரான சாலூரில் பிழைக்க வழியின்றி சூழலில் வாழ்வாதாரம் தேடித் தேயிலைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழ விதிக்கப்பட்ட இந்தியத் தமிழர்களுக்கு நேர்ந்த துயரார்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பால் ஹாரிஸ் டேனியல் என்னும் மருத்துவர் 1969இல் எழுதிய நாவல் ரெட் டீ. இரா. முருகவேள் தமிழில் மொழி பெயர்த்துள்ள இந்த நாவலை விடியல் பதிப்பகம் எரியும் பனிக்காடு என்னும் பெயரில் 2007இல் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சம்பவங்களுடன் தனது கற்பனையைக் கலந்து பாலா உருவாக்கியுள்ள படம் பரதேசி. சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளிக்கு தகுந்ததொரு வாய்ப்பை அளிக்க வேண்டியது தனது கடமை என்பதால் அவரை இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெ

நேர்காணல்
சந்திப்பு: கருணாகரன்  

ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ அணியில் முக்கியமானவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகின்றபோதும் ‘எல்லை கடத்தல்’ என்ற ஒரு கவிதை நூல் மட்டுமே இதுவரையில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து எழுத்திலும் களச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்னர் ஆசிரியர் பணி, கல்விச் செயற்பாடுகள் எனத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஔவை, கொந்தளிக்கும் அரசியல் சுழற்சிகளில் நெருக்கடிகளைச் சந்தித்தவர், அபாய நிலைகளை

ஓவியங்கள்: ஜேக்கப் ஜோசப் தயாளன்  

சிவப்பு சாவின் உணர்கொம்புகளோடு விழுந்தது சிவப்புவண்டு மின்னல் நரம்புகள் தெறிக்கின்ற மரணத்தின் வழியில் வயல்கள் பருவங்களைக் காத்திருந்தபொழுது கதிர்கள் குருவிகளைக் காத்திருந்தபொழுது பேய்களின் நடனத்தீவில் மரணவரவேற்பு கும்மாளம்கொட்டி ஒலிக்கிறது நச்சுப் புகையில் பொசுங்கிய மார்பகங்களை... நெருப்பில் அவியும் சதைகளை. . . மாதவிடாயை . . . ஊனத்தை . . . ருசிக்கும் பேய்கள் காலத்தின் சிதைவோடும் முறிந்த உணர்கொம்புகளோடும் ஒடுக்கமான மண்புற்றில் தன் உடலால் சுவடுகளைப் பதிக்கிறது விலங்கின் உரோமங்களில் சாம்பல் கீறுகளில் செவியின் மென்மையில் சாபம் பலிக்கத்தொடங்கியிருப்பதான சகுனம் வெளிப்பட்டது வாலைத் தளர்த்தி உறங்கும் மரக்கிளையிலும் அதன் ஒரு எட்டுக்கும் மறு எட்டுக்கும் நடுவேயும் மரணம் நகர்ந்தது இலைகள் உதிரும் கோடை

சாதனை
அம்பை  

மும்பையில் தாகூர் பற்றிய சிறப்பு நிகழ்வு ஒன்றிற்கு தாகூர் பற்றிப் பேச வங்காளியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள ஒரு நபரின் பெயரைத் தரும்படி என்னை அணுகினர். மொழிபெயர்ப்பின் பொற்காலம் என்று கருதப்பட்ட இரு தசாப்தங்கள், முப்பதுகளும் நாற்பதுகளும். அந்த இரு தசாப்தங்களில் மொழிபெயர்க்கப்பட்ட வங்காளம், மராட்டி, குஜராத்தி நாவல்களும் சிறுகதைகளுமே அதன்பின் வந்த மொழிபெயர்ப்புப் பாலைவனத்தில் வளர்ந்த என் போன்றோர்களுக்கு சரத் சந்திர சட்டர்ஜி, காண்டேகர், தாகூர் போன்றோர்களை எங்கள் இலக்கிய உலகின் அங்கமாகப் பார்க்க உதவின. த.நா. குமாரசாமி, த. நா. சேனாபதி, கா. ஸ்ரீ. ஸ்ரீ. இவர்கள்தான் அந்தப் பொற் காலத்தைக் குறிப்பவர்களாக என் மனத்தில் இருந்தார்கள். அறுபதுகளின் இறுதியிலிருந்து தன் மொழிபெயர்ப்புப் பணியைச்

 

மந்திரச் சிமிழ் (காலாண்டிதழ்) ரூ. 110 ஆசிரியர்: க. செண்பகநாதன் தொடர்புக்கு: 24/17, சி.பி.டபிள்யூ.டி. குடியிருப்பு, கே.கே.நகர் சென்னை 600 078. மின்னஞ்சல்: nsenbaga@gmail.comநவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்புகளின் பங்கு முக்கியமானது. குறிப்பாகச் சமீபத்தில் கதையமைப்பில் நிகழ்ந்த பெரும் மாற்றத்திற்குச் சிற்றிதழ்களில் வெளி வந்த மொழிபெயர்ப்புகள்தாம் முக்கியக் காரணங்கள். இதனால் பெரும்பாலான சிற்றிதழ்கள் மொழி பெயர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்துவருகின்றன. மந்திரச்சிமிழின் இந்த இதழ் (ஆகஸ்ட் 2012 - ஜூன் 2013) ஹருக்கி முராகமியின் நேர்காணல், அவரது இரு சிறுகதைகள், அவர் எழுத்து குறித்த எஸ். சண்முகத்தின் கட்டுரை ஆகியவற்றுடன் ஹருக்கி முராகமி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. முராகமியின் இரு

சிறுகதை
 

அவர்கள் இறுதிப் பரீட்சை எழுதிய மையமான பெரிய பள்ளியின் தாழ்வாரம் காலியாயிருந்தது. அதில் கோபியும் கலைவாணியும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவள் அகப்படாமல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அவன் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். அவளைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேகமாகப் பாய்ந்து கடைசியில் அவளுடைய கையைப் பிடித்தான். அது இளங்குருத்தைப் போல் சில்லென்றும் சிறுத்துமிருந்ததை முதன்முறை முழுமையாக உணர்ந்தான். அவள் கையை உருவிக்கொண்டு மீண்டும் தப்பிக்க முயற் சித்தாள். கண்ணாடி வளையல்கள் உடைந்து சிதறிவிடுபவை போல் குலுங்கின. அவளை வென்ற பெருமிதத்தில் கையை கெட்டியாகப் பற்றிக்கொண்டிருந்தான். இருவரும் இணைந்து சிரித்தது உயர்ந்த கூரையில் மோதி எதிரொலித்து பள்ளிக் கட்டிடம் இறுக்கம் கலைந்து சிரித்ததைப்

காலச்சுவடு 150 - தொடரும் பயணம்
இராகவன்  

காலச்சுவடு என்ற பெயரை 2001 பிற்பகுதியில் நண்பர் குப்பிழான் ஐ. சண்முகன் வாயிலாகத்தான் நான் முதன் முதலாகக் கேள்வியுற்றேன். 1988 காலப் பகுதியில் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்ததாகவும் தான் இதுவரை சந்தித்த மனிதர்களுள் கேண்மை பூண்டு விருந்தோம்புவதில் சுந்தரராமசாமி போல் ஒருவரை எடுத்துக்காட்ட இயலாதென்றும் கதை கதையாகச் சொல்லி சுந்தர ராமசாமியின் மகள் தைலாவின் ஒளிப்படத்தையும் எனக்குக் காட்டியிருக்கிறார். எனினும் நான் காலச்சுவடு இதழைக் கண்டது தேவதாசனின் ‘சலன சித்திரம்’ அலுவலகத்தில்தான். தேவதாசன் ஈழத்துத் தமிழ் சினிமாவை வளப்படுத்தப் போகிறேனென ‘சலன சித்திரம்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போதுதான் ‘பாரதி’ திர

வாசிப்பு
 

ஒரு பாதையின் கதை குப்பிழான் ஐ. சண்முகம் காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001, ரூ. 95 குப்பிழான் ஐ. சண்முகத்தின் எல்லாக் கதைகளும், அவை உள்ளடங்கக் கொண்டிருக்கும் கருப்பொருளுக்கு அப்பாற்பட்டு, வெவ்வேறு உருவகங்களை உடையதாயிருக்கின்றன. இதை உணர்தல் வாசகருக்கு வாசகர் மாறுபடலாம். ‘ஒரு பாதையின் கதை’ என்னும் தொகுப்பிலிருக்கும் இவரது அநேக கதைகள் கலைத்தன்மை என்பதைக் காட்டிலும் லட்சியவாதத்தை முதன்மைப்படுத்துபவை. சிதறலில்லாத தெளிவான விவரிப்புகள் கொண்டவை. பிரச்சினைகளும் போர்களும் ஏறத்தாழ தொடங்கியிராத காலகட்டத்தில் எழுதப்பட்ட சில கதைகளில் தமிழர் - சிங்களர்களிடையேயான இருபாலினர் ஈர்ப்பையும் தமிழர் கிராமங்களின் இயற்கை அழகுகளையும் அவர்களது திருவிழாக் கொண்டாட

வாசிப்பு
 

மௌனியின் மறுபக்கம் ஜே.வி. நாதன் விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 600 002, ரூ. 75 மௌனியின் எழுத்துகள் பற்றிப் பேசப்பட்ட அளவு அவரது வாழ்கைத் தகவல்கள் முன்வைக்கப்பட்டதில்லை. அவரை மிக நெருக்கமாக அறிந்தவர்கள் பலர் இருந்தபோதும் - எடுத்துக்காட்டு: இந்த நூலின் முன்னுரையாளரான கி.ஆ. சச்சிதானந்தம் - அவரைப் பற்றி எழுத்தில் பதிவு செய்ததில்லை. விதி விலக்கு சுந்தர ராமசாமி. மௌனியின் படைப்புகளின் பின்புலத்தில் அவரைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களையும் இணைத்தே அவருடைய கட்டுரை அமைந்திருக்கிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே. வைத்தியநாதன் - ஜே.வி. நாதன் - மௌனியுடன் பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். ஒரு வாசகராக அறிமுகமாகி மௌனியின் கடைசிக் கதையான &lsqu

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்  

நீலப்படத்துக்கு நிகரான கலைப்படத்தில் மூழ்கி யிருந்தேன். இருளும் நிசப்தமும் ஆரத் தழுவி முயங்கிய என் தனியறையில். உறுமும் ஆண்குரலுக்கு முனகும் பெண்குரலுக்கு ஒத்தாசைப் பின்னணியாய் சுவர்க்கோழி. கணிப்பொறித் திரையின் இடதுகீழ் மூலையில் தோன்றி புணரும் உருவங்களை நோக்கி நகர்ந்தது எட்டுக் கால் பூச்சி. திரையளவு பரந்த மார்பகத்தை வியந்ததோ ஒளியைப் பிளக்கும் ஆவேசத்தை பயந்ததோ ஒளிரும் சுவரின் வழுவழுப்பில் திகைத்ததோ வலது காம்பருகில் சென்று நகராமல் நின்றது. ஆண் பூச்சியா பெண்ணா எட்டுக் கால் பூச்சிகள் எப்படிக் கலவிகொள்ளும் அவர்கள் இனத்திலும் அடுத்தவர் காமத்தை படமாய்ப் பார்ப்பது வழக்கமா நடுவயது ஏக்கமா இளவயதேதானா கேள்விகள் ஒருபுறமும் நான் எதிர்ப்புறமும் ஓடிப்பிடித்து விளையாட மூச்சிரைக்க மூச்சிரைக்க திரையில் நடந்

புத்தக மதிப்புரை
க. பஞ்சாங்கம்  

நானூறு பக்கத்திற்கும் மேலான இதை எப்படி வாசித்து முடிக்கப் போகிறோம் என்கிற மிகப்பெரிய தயக்கத்தோடுதான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன். நாவல் இப்படித் தொடங்குகிறது:- “குபீரென வாளியை உற்சாகமாகத் துளைத்தது நீரின் ஓசை. அதன் ஒலிச் சிதறல் இரவை உலுக்கியது. நீரின் மதர்ப்பினால் கையை எடுத்த பிறகும் குழாயின் அதிர்வு ஓயாமல் தொடர்ந்தது. பொங்கி பிரவகிக்கும் பெருக்கில், ஓடும் நதியை இழுத்து வந்தது போல் இருந்தது. அதன் துடிப்பு உள்வீட்டில் படுத்திருந்த கிழவியைத் தொட்டது. அது அவளைச் சல்லியப்படுத்தி இருக்க வேண்டும். ஓரவாக்கில் இருந்து மல்லாக்கப் படுத்தாள். அந்த அசைவு வானத்து நட்சத்திரங்களைச் சலனப்படுத்தியது. அவள் துயரத்தில் விரிந்த பாக்கிய மலர். உலகத்தைத் தரிசிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை அவளுக

கட்டுரை
கண்ணன்  

எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம் பாரதி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 22இல் தி இந்து நாளிதழில் மீரா சுந்தர ராஜன் எழுதிய ‘Bharati and his copy right’ என்ற கட்டுரை வெளிவந்தது. முக்கியமான கட்டுரை. படைப்புகள் பொதுவுடைமை அல்லது நாட்டுடைமை ஆவதின் சில தீங்குகளைச் சுட்டிக்காட்டிய கட்டுரை. அதைவிட முக்கியமாகக் காப்புரிமையின் அங்கமாக இருக்கும் படைப்பின் மீதான அற உரிமையை விவாதித்தக் கட்டுரை. கட்டுரையாளர் ஆக்ஸ்போர்டில் கற்றவர். காப்புரிமையின் பன்னாட்டு நிபுணர். பாரதியின் கொள்ளுப் பேத்தி. பாரதியின் மகள் தங்கம்மாளுக்குப் பிறந்த எஸ். விஜயா பாரதியின் மகள். கட்டுரையைப் படித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நண்பர் சலபதிக்குத் தொலைபேசியில் இக்கட்டுரையை மொழிபெயர்த்து காலச்சுவடில் வெளி

சிறுகதை
 

பல வருடங்களுக்குப் பிறகு வீணாவிடமிருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதம்கூட சோகச் செய்தியைத் தெரிவிப்பதாகயிருந்தது. அவள் அதைப் படிக்கும்பொழுதே ஆழமான துயரத்துக்குள் அமிழ்ந்தாள். வீணாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பழுத்த இரும்புக் கம்பிகளாக அவளைத் துளைத்துப் பாய்ந்தன. ‘நான் இந்தக் கடிதத்தை எழுதுவது முறையில்லை, அக்கா. இருப்பினும் நான் இதை எழுதுகிறேன். அப்பா இறந்துபோய் ஒரு வாரமாகிவிட்டது. அம்மாவால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்பா எல்லோருக்கும் ஏதேதோ உதவிகள் செய்திருக்கிறார். இப்போது யாருக்குமே வந்து துக்கம் கேட்டு குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேரம் இல்லை . . .’ அதற்கு மேல் கடிதத்தை முழுவதுமாக படிப்பதற்கு அவளிடம் மனத்திடம் இல்லை. அவள் சோபாவில் பொத்தென அமர்ந்தா

குறுக்கெழுத்து
சுகுமாரன்  

பாம்பின் நிறத்தில் ஒன்று. கருஞ்சாந்து நிறத்தில் ஒன்று. இரண்டு குட்டிகள் எங்கள் வீட்டில் வளர்கின்றன. குடியிருப்பின் ஏதோ வீட்டுப் பின்கட்டில் சுகப் பிரசவம் முடிந்து குட்டிகள் கண் விழித்ததும் தாய்ப்பூனை ஒவ்வொரு குட்டியையும் ஒவ்வொரு மூலையில் கடாசிவிட்டுப் போயிருந்தது. பக்கத்துக் காலி மனையில் திக்குத் தெரியாமல் கத்தித் திரிந்துகொண்டிருந்த பாம்பு வருணியை வீட்டுக்கு எடுத்து வந்தேன். மறுநாள் அடுத்த வீட்டுக் கொல்லை வாழை மரநிழலில் நிராதரவாக முனகிக்கொண்டிருந்த கருஞ்சாந்தனை எடுத்து வந்தேன். இரண்டும் ஒன்றையொன்று பார்த்தன. உடன் பிறந்த பாசத்துடன் ‘நாளை நமதே’ என்று பாடியபடி பரஸ்பரம் கவ்விக்கொண்டன. நான்கைந்து மாதங்களில் இரண்டும் வளர்ந்து ஆளாகியிருக்கின்றன. என் மேலும் மனைவி மேலும் இருக்கு

எதிர்வினை
க.சி. அகமுடைநம்பி  

பெரியார்: ஒரு பார்வை, பி.ஏ. கிருஷ்ணனின் பேச்சு (காலச்சுவடு 159ஆம் இதழ்) பெரியாரைப் பல முனைகளில் விரிவாக ஆராய்கிறது. ஒரு பிராமணர் பெரியாரை ஆராய்கிறார் என்பதே சிறப்பாகக் கவனிக்கப் படவேண்டிய ஒன்றாகும். பிராமணர்கள் ஆதிக்க சாதியினர் என்பதைப் பேச்சாளர் ஒப்புக்கொள்கிறார். ஆதிக்கவாதிகள் எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள வேண்டுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான் அல்லவா? இந்தியைப் பார்ப்பன பாஷை என்றார் பெரியார் என்றும், இந்தி எதிர்ப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒன்றாக்கினார் என்றும் குறைப்படுகிறார். மேற்போக்காகப் பார்த்தால் பெரியாரின் நிலைப்பாடு பொருளற்றதாகத் தோன்றும். ஆழமாக இதனைக் கருதிப்பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழர்களை எப்படி ஆங்கில மோகம் அலைக்கழித்து வருகின்றதோ, அப்படியே அந்தக் காலகட்டத்தி

 

மார்ச் 2013 - காலச்சுவடு, பெரியார் ஓரு பார்வை - வாசித்தேன். அதிர்ச்சியுற்றேன். பெரியார் பற்றிய பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் பார்வையும் ஒட்டு மொத்தப் பிராமணர்களின் பார்வையும் ஒன்றுதான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. பெரியார் போன நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமை. அவர் ஒரு சமூகவியல் விஞ்ஞானி. இன்றும் கூட அவர் புரியாத புதிர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள மூடப் பழக்கவழக்கங்களை, புரையோடிப்போன சமாதியை சம்மட்டி கொண்டு தனி ஆளாய் தகர்ந்து எறிந்தார். ஆனால் பெரியாரின் சிந்தனை நம்மிடையே இல்லை. இருக்கும் இடமே தெரியாமல், சுவடே இல்லாமல் செய்தால் கூட, எதிர்ப்புகள் எவ்வளவு பலமாக உள்ளதோ அதற்கேற்றாற்போலப் பிராமணியம் பதுங்கும். எதிர்ப்பு அடங்கியவுடன் பீறிட்டுப் பொங்கி எழும். அதாவது ஜென் தத்துவம்போல. சோக்கள

தலையங்கம்
 

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏதேனும் ஒரு தீர்வைத் தருமா என்பது சந்தேகமே, எனினும் 2009இல் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை அது மீண்டும் கவனப்படுத்திப் பரிசீலனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழக மக்களும் புலம்பெயர் தமிழர்களும் பிற இன மொழி தேச ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இந்திய அரசுக்கும் உலக நாடுகளுக்கும் ஐ. நா. சபைக்கும் அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசின் மீதும் ராஜபக்சே குடும்பம் மீதும் போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது அவசியமானது. அதேநேரம் ஒரு பெரும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அறச்சார்போடு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒடுக்கப்படுபவர் ஒடுக்குபவரைவிட உயர்ந்த விழுமியங்களோடு செயல

உள்ளடக்கம்