கட்டுரை
சமஸ்  

தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது. லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறு

கட்டுரை
கண்ணன்  

கார்ப்பரேட்டுகளில் ஒரு பகுதியினர் நமோவையும் மற்றொரு பகுதியினர் ராகாவையும் முன்னிறுத்தி வருகின்றனர். இதில் பேச்சாற்றலும் நடிப்புத்திறனும் மிகுந்த, பழம் தின்று கொட்டைபோட்ட மஸ்தான் முன்னர் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் அமுல் பேபியின் செயலூக்கம் இதுவரை எடுபடவில்லை. கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்கள் அதிகமும் மோடியை முன்னிறுத்திப் பேசிவருகின்றன. பெரும் ஊழல்களாலும் குற்றங்களாலும் பற்றாக்குறைகளாலும் கதிகலங்கிப் போயிருக்கும் நாட்டிற்கு இன்று வலுவான தலைமை தேவை என்ற எண்ணம் பெருகிவருகிறது. மோடியின் எழுச்சி இந்துத்துவர்களுக்கு உற்சாகத்தையும் இடது சாரிகளுக்கு, தாராளவாதிகளுக்கு, மதச்சிறுபான்மையினருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கார்ப்பரேட் இந்தியாவால் மோடியை

நினைவுகூரல்
 

தலைமுறை ஒரு தலைமுறைக்கு முன் நாடு கடந்தார்கள் அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல மொழி இழக்கும் தருணத்தில் தீராப்பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது பனி உதிர்ந்து காற்றுறையும் இரவுப் பெரும்பொழுதிலும் சினத்துடன் எழுந்து தெருவை நிறைத்த பல்லாயிரம் மக்களிடையே குரல்வற்றிய ஒரு பெண்ணைக் கண்டேன் கண்ணீரின் சுவடுகளால் முகக் கோலம் அழிந்தாலும் இன்னொரு முகம் பன்முகமாக விரியக் கண்டேன். சேரன்/‘காடாற்று’

கட்டுரை
 

கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் தாக்குதலுக்கான ஏவுகணைப் பீரங்கிகளுக்குப் பாகுபடுத்திப் பார்க்கும் திறனில்லை. அவன் படுத்துறங்குகிற கொட்டகையோ எதிரிலிருந்த வயற்காட்டில் இர

கட்டுரை
 

“ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும்.” அமார்த்தியா சென் (The Argumentative Indian) இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்பாலான சிங்கள - பௌத்த மக்கள் அதை ஒரு வரலாற்று நூலாகவும், புனிதப் பாடமாகவும் போற்றி வருகிறார்கள்.

கட்டுரை
 

புதுதில்லியில் மரண தண்டனையை எதிர்பார்த்து 11 ஆண்டுகள் சிறையிலிருந்த - அதிலும் தனிமைச் சிறையிலிருந்த - முகமது அப்சல் குரு, 2013 பிப்ரவரி 9ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். அது கள்ளத்தனமாக நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை. முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் (உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) ஒருவர் கூறுவது போன்று, அதன் சட்டத் தன்மை குறித்து அழுத்தமான கேள்விகள் எழுகின்றன. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் மூன்று ஆயுள் தண்டனைகளும் இரண்டு மரண தண்டனைகளும் வழங்கிய ஒருவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் தூக்கிலிட்டதில் உள்ள சட்டத் தன்மையைக் குறித்து எப்படி சந்தேகங்கள் ஏற்படுகின்றன? வழக்கத்திற்கு மாறாக நீண்டகாலம் சிறையிலிருந்த கைதிகளுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம்

கட்டுரை
ரவிசுப்பிரமணியன்  

நாடக நிகழ்வென்பது கூட்டு உழைப்பாலும் ஒத்திசையும் கூட்டு உடல் மொழியாலும் நிகழ்த்தப்படுவது. ஒலி ஒளி வண்ணங்கள், ஒப்பனைப் பிரதி என பல்கலையின் கூட்டு உச்சரிப்பு அது. அந்தக் கூட்டு உச்சரிப்பின் தனித்துவம் வாய்ந்த குரல்களில் ஒன்று தமிழ் நாடகக்கலையின் தலைமை ஆசான் என்று இன்றும் எல்லோராலும் போற்றப்படும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள். பொழுதுபோக்கோடு, புராணம், இலக்கியம், வரலாறு, சமயம், கற்பனை, மொழிபெயர்ப்பு என எழுதி, நடித்து, நிகழ்த்திக்காட்டி தமிழின் தொன்மங்களை பாமரனுக்கும் நாடக வழியில் கொண்டு சேர்த்தவர் சுவாமிகள். இரணியன், இராவணன், எமதர்மன், சனீஸ்வரன் போன்ற பல கதாபாத்திரங்களில் அவரது அசாத்திய நடிப்புத் திறன் வெளிப்பட்டுள்ளது. ஒப்பனையைக் கலைக்காமல், சனீஸ்வரன் வேஷத்தில் விடியற்காலை குளக்கரைக்கு

நேர்காணல்
 

தனது சமரசமற்ற பார்வையாலும் சமுதாய அக்கறையாலும் மனிதாபிமான உணர்வாலும் நீதித் துறை மீது மதிப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சந்துரு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார். பதவி ஏற்கும்போதும் பதவியில் இருக்கும்போதும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோதும் செய்தியாகவே இருந்தார். வழக்கறிஞராக அவரது அறச் செயல்பாடுகளும் நீதிபதியாக அவர் அளித்த முக்கியமானத் தீர்ப்புகளுமே அந்த செய்தி முக்கியத்துவத்துக்குக் காரணமாக அமைந்தவை. காட்சிக்கு எளியவர். கடும் நீதியுணர்வு கொண்டவர் என்பதை அவரது பணிக்காலத்திலும் பணி ஓய்வு பெறும் தருணத்திலும் நிரூபித்தவர். பணி ஓய்வு பெற்ற பின்னரும் பரபரப்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்த சந்துருவுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இல்லத்தில் மார்ச் 17 அன்று நடத்திய நேர்காணல

 

நைஸ் எதேச்சையாகப் பட்டுவிட்டது உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா முனிகள் பிறழ்ந்தனரா இதற்காகத்தான் இப்படி தேம்பித் தேம்பி அழுகிறார்களா இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா செங்குருதியில் மடலிடுகிறார்களா இதுமட்டும் போதுமென்றுதான் கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா இந்த நைஸிற்காகத்தான் ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டைப் போட்டு மூடுகிறார்களா இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்துப் பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா கைவளை நெகிழ்கிறதா இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா” இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா முதலாளிகள் சமத்துவம் பேணு

நேர்காணல்: தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை - சில தெளிவுகள்
கேள்விகள்: காலச்சுவடு  

தமிழ்நாட்டில் உள்ள மின் பற்றாக்குறைக்குக் காரணங்கள் என்ன? தமிழ்நாட்டில் உள்ள மின் பற்றாக்குறைக்கும், மின் தடைகளுக்கும் காரணம் வெளிப்படையான போதுமான அளவு மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தால்* அளிக்க இயலாததுதான். இதன் காரணங்கள்: 1. போதுமான மின்சாரத்தை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய அவசியமான திறன் நிறுவப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் மின் உற்பத்தித் திறன் 11.5%தான் கூடியுள்ளது. 2. பற்றாக்குறையான மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து தருவிக்கத் தேவையான மின் தொடரமைப்புக்களின் திறன் (Capacity of Transmission Lines) இல்லை. அப்படி தொடரமைப்புக்களின் திறன் இருந்திருந்தாலும் அவ்வாறு மின்சாரத்தை வாங்க முயற்சிகள், வாங்குவதற்கான நிதி வசதிகள் செய்யப்படவில்லை. இந்தப் பற்றாக்குறை எதிர்பாராத ஒன

சிறுகதை
 

வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின் ஆறுதல் வார்த்தையும் கடற்கரை வெக்கையை மேவிக் குளிர்வித்தது. “ஓடு ஓடு” என்று மனம் சொன்னது. அப்பாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுவிட்டு எப்படிப் போவது? அப்பாவின் நரைத்த தாடி மயிர்களுக்குள்ளால்

அஞ்சலி
ஜைனபு ஜாலா  

“கதை சொல்லிகள் ஒரு அச்சுறுத்தல். அவர்கள் கட்டுப்பாட்டின் காவலர்களை அச்சுறுத்துகிறார்கள். அரசாங்கத்திலும் தேவாலயம் அல்லது மசூதியிலும் கட்சிப் பேராயங்களிலும் பல்கலைக்கழகத்திலும் அல்லது வேறு எந்த இடத்திலும் மனித ஆன்மாவின் சுதந்திரத்துக்கான உரிமையை அடாத வழியில் கைப் பற்றியிருப்பவர்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள்.” சினுவா அச்செபெ Anthills of the Savannah 2013 மார்ச் மாதம் 21ஆம் தேதி. இலக்கியத் திரு உருவின் மறைவுச் செய்தி வைரஸ் வேகத்தில் பரவியது. ‘நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை’ என்று அறியப்பட்டிருந்த பேராசிரியர் சினுவா அச்செபே அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரத்து மருத்துவ மனையொன்றில் மரணமடைந்தார். 1930 நவம்பர் 16ஆம் தேதி நைஜீரியாவில் ஆல்பெர்ட

காலச்சுவடு 150 - தொடரும் பயணம்
அனார்  

1990களின் நடுப்பகுதியில் என் கவிதை முயற்சிகளைத் திருட்டுக் காரியம் பண்ணும் பிரயத்தனங்களோடும் எனக்கிருந்த சவால்களோடும் இயலாமைகளோடும் எழுதத் தொடங்கியிருந்தேன். எனக்குள் சென்று என் ஆன்மா பேசியதை உற்றுக்கேட்பதற்கு எவரும் தயாராக இல்லாத சமயத்தில், நானே அதைக் கேட்க விரும்பினேன். மிக உன்னிப்பாக, கொஞ்சம் ஆதரவாக. என்னை நான் வளர்த் தெடுக்கும் கனவுகளோடு, கவிதை யுடன் ஆழ்ந்த உடன்பாட்டிற்கு வந்தேன். யுத்தம் காதலைப் போலவும் காதல் யுத்தத்தைப் போலவும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் அவ்வப்போது வெடித்துக்கொண்டிருந்தன. திணறிக்கொண்டிருந்த அன்றைய காலச் சூழலுக்கு மூன்றாவது மனிதன் சஞ்சிகையும் மிக அரிதாகவே கிடைத்த சரிநிகர் பத்திரிகையும் அமைதி சேர்த்தன. அவற்றில் இடம்பெற்ற கட்டுரைகள், கவிதைகள், எதிர்வினைகள், அவற்

புத்தக மதிப்புரை
இரா. மோகன்ராஜன்  

தமிழீழப் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டு கடும் சமரில் பட்டியல் இடப்படாத இழப்பீடுகளுக்குள் அடங்காத அழிவுகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆளாகிவரும் சமூகத்தின், பெண்களின் நிலைகுறித்த, முக்கியமாக விளிம்பு நிலை பெண்கள் பற்றிய, விவாதத்திற்கோ அல்லது அதற்கு அப்பாலும் கூட செல்லும் எந்தவொரு முயற்சியும் சிறப்பானதொரு கவனத்தைப் பெற்றுக்கொள்வதாயில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் உள் ஒடுங்கிய அல்லது உள் ஒடுக்கப்படும் பெண்களின் மெலிந்த குரலானது மேலெழும்பியதாய் இருக்கவில்லை. நிலத்தை ஆக்கிரமித்து நிற்கும் சகோதர இனத்திற்கு எதிராகவும் அதேவேளை, சக இன ஆதிக்கத்திற்கும், பொதுவான ஆணுலகுடனான கருத்தியல் மோதலின் ஊடாகவும், கலாச்சாரக் கண்ணி வெடிகள் பலவற்றைக் கடந்தும், ஆள்கடத்தல், படுகொலை, பாலியல் வல்லுறவு இவற்றுக்கு

வாசிப்பு
நித்ய ஸந்யாஸ்  

இந்திய இலக்கியச் சிற்பிகள்: (கிருத்திகா) ஆசிரியர்: அ. மங்கை பக். 88, ரூ.50 சாகித்திய அகாதெமி குணா பில்டிங்ஸ் 443 அண்ணா சாலை தேனாம்பேட்டை சென்னை  600 018. தமிழ் நவீன எழுத்தின் தொடக்கத்தில் தீவிர இலக்கியப் பங்களிப்பு செய்த கிருத்திகா என்னும் ஆளுமையைப் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலின் வழியாக அறிந்துகொள்ள ஏதுவாகிறது. 1915இல் பிறந்த மதுரம் என்னும் பெயர் கொண்ட கிருத்திகா, வசதி வாய்ப்பும் கல்விப் பாரம்பரியமும் உடைய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். கற்றல் இவருக்குத் தடையாக இருக்கவில்லை. உளவியல் ரீதியிலான பாலுணர்வு, பண்டமாக்கப்படும் பெண் உடல் ஆகிய கூறுகள் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், மு. வரதராசன் ஆகியோரது படைப்புகளில் இடம்பெறுவதுபோலத் தயக்கமற்ற வெளிப்பாடுகளாக இவரது எழுத்

வாசிப்பு
மண்குதிரை  

மைனஸ் ஒன் (கவிதைகள்) ஆசிரியர்: நந்தாகுமாரன் பக். 112, ரூ.90 வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 11/29, சுப்ரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை 600 018. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு தளங்களுக்குள் தமிழ்க் கவிதை பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பயணம்தாம் தமிழ்க் கவிதையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நந்தாகுமாரன் இத்தொகுப்பின் மூலம் அதற்கு ஒரு புதிய தொழில்நுட்ப உலகை அறிமுகப்படுத்துகிறார் - ‘சீரோஸ் அண்ட் ஒன்ஸ்’. ஒரு கவிதையில் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதற்கு 1/ நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதற்கு 0...’ என்கிறார் நந்தா. கவிதை அனுபவங்களால்தாம் உருவாகிறது. அவ்வகையிலும் இந்தக் கவிதைகள் அனுபவத்தின் ஈரம் கொண்டவை. ஆனால் இது சிலிக்கானின் ஈரம். தொகுப்பு முழுவதும் இ

 

என் தலைக்குள் தேவையான இடமிருக்கிறது இப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சகிப்புத் தன்மையுடையவர் என்றாலும் என்றாவது ஒருநாள் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார் அதற்குள் நான் எனக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும் இந்தப் பூமியில் எனக்கென ஓர் இடமில்லாததை சிந்தித்துக் கொண்டிருந்தபோது என் தலைக்குள் தேவையான இடமிருப்பதைக் கண்டேன் அங்கே தோட்டவசதியுடன் அழகான புத்தம் புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன் அதில் மனைவிக்குப் பிடித்த மாதிரி சமையலறை கழிவறையுடன் கூடிய இரட்டைப் படுக்கையறை மகளுக்கு ஏற்றதுபோல் எல்லா வசதிகளோடும் ஓரறை அம்மா அப்பாவிற்கும் உறவினர்கள் சௌகரியமாக தங்கிச் செல்லவும் ஓய்வறை வாஷிங் மெஷினுடன் கூடிய ஒரு துவைப்பறை நவீன வசதிகளுடன் குளியல் அறை நான் வணங்கும் எல்லாக் கடவுள்களுக்குமான பெர

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

என்னுடைய இங்கிலாந்து வாழ்க்கை தாட்சர் ஆட்சிக் காலத்தில்தான் ஆரம்பித்தது. அவை எழுச்சியூட்டும் நாட்கள் அல்ல. இந்த வரியிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தக் கட்டுரை தாட்சரைப் பற்றி வணக்கத்துடனும் மரியாதையுடனும் இருக்கப்போவதில்லை என்று. நான் வருவதற்கு முந்திய ஆண்டில் அவரின் அரசு ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்று பங்காக உயர்த்தியிருந்தது. நல்லவேளை, அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி ஆண்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே என் ஆராய்ச்சியைத் தொடங்கியபடியால் நான் தப்பித்துவிட்டேன். அவரின் இன்னுமொரு செயலும் என்னை அவரது அரசியல் செயல்பாடுகளில் நெருங்க முடியாமல் செய்தது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ‘வந்தேறிகள் இங்கிலாந்தை மொய்க்க

கண்ணோட்டம்
எம். பௌசர்  

இலண்டனில் 2013 ஏப்ரல் 6, 7 தேதிகளில் நடந்த 40ஆவது இலக்கியச் சந்திப்பில், ஆணாதிக்க நோக்கில் கருத்துச் சொன்னதாக என் மீது குற்றம் சுமத்தி பானுபாரதி ஒரு வீடியோ தொகுப்பில் தோன்றி என்னைக் கண்டித்திருக்கிறார். அதனையடுத்து தமிழ்ச்சூழலில் இருந்து 29 பெண் ஆளுமைகள் என் மீதான கண்டனத்தை வெளிப்படுத்தி “பானுபாரதியின் சுயத்தை நான் இழிவுபடுத்திவிட்டதாகவும்”, “பெண்களின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இப்படியான பொறுப்பற்ற கருத்துக்களை வைப்பதை ஆணாதிக்கவாதிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்” எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பானுபாரதி உட்பட இந்த அறிக்கையில் கையொப்ப மிட்டவர்கள் அனைவரும், அரங்கில் நான் என்ன கூறினேன் என்பதை நேரடியாகக் கேட்டவர்கள்

எதிர்வினை
 

பெரியார் ஒரு பார்வை என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். கட்டுரையாளருக்கு என் வணக்கமும் பாராட்டுதல்களும். ஜனவரி 2012இல்* வாசித்தக் கட்டுரையை 2013 மார்ச் காலச்சுவடு இதழ் காலங்கடந்து அச்சில் கொண்டுவந்து இருப்பது ஏன்? என்ற கேள்விகளைத் தாண்டி கட்டுரைக்குள் வரவேண்டி இருந்தது. கிருஷ்ணன் அவர்கள் பெரியார் குறித்த தன் கருத்தை வைப்பதற்கு அவருக்கு முழு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான ஒரு கட்டுரையை எந்த ஒரு தலைவரைப் பற்றியும் எவரும் எழுதிவிட முடியும். காந்தியைக் குறித்து நேருவும் தாகூரும் வைத்திருக்கும் விமர்சனங்களை நாமறிவோம். இக்கட்டுரைக்கு கனம் சேர்த்திருப்பது எழுதிய கருத்துகள் என்பதை விட எழுதியவர் யார்? என்கிற உண்மைதான். எழுத

கண்ணன்  

1990களின் தொடக்கத்தில் அடிக்கடி கோவில்பட்டி போகும் பழக்கம் இருந்தது. என் முதல் இலக்கிய நண்பர்கள் அங்கேதான் சந்திக்கக் கிடைத்தார்கள். எப்போதும் தங்குவது யுவன் சந்திரசேகர் வீட்டில்தான். (அப்போதே ‘யுவன்’ என்ற புனைப்பெயர் வேண்டாம், வயதுபோனதும் சிக்கலாகிவிடும் என்று எச்சரித்தேன்!). நண்பர்கள் சுதந்திரமாக வந்து தங்கும் சூழலை சந்துருவும் உஷாவும் ஏற்படுத்தியிருந்தார்கள். ஒருமுறை சந்துருவின் அம்மா வந்திருந்தார்கள். அம்மாவுக்கும் மகனுக்குமான ஒரு பொய்ச் சண்டையின் இறுதியில் சந்துரு இப்படி அறிவித்தான். ‘நம்ம வீட்ல ரெண்டுபேருக்கு மனைவி வாய்க்கலம்மா. ஒண்ணு எனக்கு. இன்னொண்ணு அப்பாவுக்கு!’ இரண்டு பெண்கள் அதை மிகவும் ரசித்தார்கள். o சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் கோவில்பட்டியி

தலையங்கம்
 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. ஊடக கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் போராட்டத்தின் இலக்காகி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சுப் புகை பொதுமக்களின் உடல் நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்திய பாதிப்பால் வெகுண்ட மக்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தாயிரத்துக்கும் அதிக மானவர்கள் கலந்துகொண்ட போராட்டத்தில் இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடி விளைவாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது. இதற்கும் முன்பே ஆலை மூடலுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத்தான் விசித்திரமானதாகவும் கண்டனத்துக்குரியதாகவும் அம

 

ஜின்னா - காந்தி, இரு தேசப் பிதாக்கள் எனும் கண்ணனின் மொழிபெயர்ப்புக் கட்டுரை அருமை. இவ்வளவு நுணுக்கமாக இவர்கள் இருவரும் இதுவரை அலசப்பட்டதில்லை. ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர், விசுவாசங்களையும் வழிபாட்டுணர்வையும் வேண்டிய ஒரு லட்சியவாதி அல்ல’ என்ற காந்தியைப் பற்றிய வரி அட்சர லட்சம் பெறும். காந்தி சமயங்களில் பிரச்சனைகளைத் தவிர்த்ததற்கும், தான் விரும்பியது நடக்காத போது உண்ணாவிரதம் இருந்ததற்கும் அல்லது பிரிவினைக் காலகட்டத்தைப் போல, அவர் விலகிக் கொண்டதற்கும் பல காரணங்கள் இருந்திருக்கலாம். பிரச்சனைகளின் உக்கிரத்தை குறைப்பதற்கோ அல்லது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கோ, காந்தி தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருக்கலாம். ஜின்னா ‘நேரடி நடவடிக்கை&r

உள்ளடக்கம்