தலையங்கம்
 

தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ் ஊதி வளர்த்தெடுத்த சாதிய வன்மத்தை அவரது முக்கிய எதிரியாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கும் தொல். திருமாவளவன் பண்பட்ட அணுகுமுறையுடன் எதிர்கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டியது. பா.ம.க.வினரின் வன்முறையையும் தீஞ்சொற்களையும் வன்மத்தால் எதிர்கொள்ளாமல் ஜனநாயக முறையிலும் அரசியல் செயல்பாடுகளாலும் திருமாவளவன் எதிர்வினையாற்றி வருவது விவேகமான தலைவராக அவரை உயர்த்திக் காட்டுகிறது. ராமதாஸைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதையும் வன்னியர்களைப் பழிப்பதையும் அவர் முற்றாகத் தவிர்த்து வருகிறார். பா.ம.க.வினரின் கொடுஞ்செயல்களுக்கு எதிர்வினையாகச் சாதிய முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதைத் தவிர்த்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் இயக்கங்களையும் ஒன்றுதிரட்ட அவர் மேற்கொண்டுள்ள முயற்ச

கண்ணோட்டம்
எஸ்.வி. ஷாலினி  

அன்னையர் தினம் கொண்டாடத் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்திருக்கிறது. வழக் கம்போல் இந்த தினமும் நுகர்வோர் கலாச் சாரத்தின் பகுதியாக மாற்றப் பட்டுவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு சாரா நிறுவனத்தின் அறிக்கை ஒரு கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கிறது-உலகிலேயே அதிகமான பிரசவ இறப்புகள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. ஆண்டுக்கு 56,000 பெண்கள் பிரசவத்தின்போது இறக்கின்றனர். சென்ற ஆண்டு வெளியான உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கையும் இதை உறுதிசெய்கிறது. உலகில் ஆண்டுக்கு 2,87,000 பெண்கள் பிரசவ காலத்தில் இறக்கின்றனர். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலும் நைஜீரியாவிலும்தான் நிகழ்கின்றன என உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. உலகின் மிகச் சிறிய நாடுகள்கூட பிரசவ இறப்புகளைத் தடுப்பதில் கு

 

காலச்சுவடு ஏப்ரல் மாத இதழின் தலையங்கப் பகுதி யிலும் மே மாத இதழில் திரு. மகேந்திரன் என்பவரின் மின் அஞ்சல் தகவலிலும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைப் பற்றிய செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன.அவற்றில் கழகத்தைப் பற்றியும், இப்பல்கலைக் கழகத்தால் வழங்கப்பபடும் பட்டங்கள் பற்றியும் இதன் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களைப் பற்றியும் சொல்லப்பட்ட செய்திகள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை மற்றும் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டவை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் பத்திரிகை தர்மத்தின்படி இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றி ஏதேனும் அவதூறு செய்திகள் தெரியவரும் பட்சத்தில், அதன் உண்மைத் தன்மையை அதன் பதிவாளரிடம் கேட்டுத் தெரிந்தபின் தான் பிரசுரிக்கப்படவேண்டும். ஆனால், இது பின்பற்றப்படவில்லை. மேலும் கீ

கட்டுரை
சமஸ்  

எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இ

கட்டுரை
தேவிபாரதி  

 சில வாரங்களுக்கு முன்னர், மரக்காணம் கலவரத்தையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றிய பத்திரிகை யாளரொருவரின் கேள்விக்குப் பதிலளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வருங்காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார். அந்த முடிவில் தான் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு அவர் திமுக தலைவர் மு. கருணாநிதி அடிக்கடி பயன்படுத்திவரும் புகழ் பெற்ற மேற்கோள்கள் சிலவற்றைப் பயன்படுத்தினார். “வான் உள்ள அளவும் கடல் மீன் உள்ள அளவும், கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும்” என்பன போன்ற அவரது மேற்கோள்களைப் பயன் படுத்திய ராமதாஸ் “வரும் நாடாளு மன்ற

கட்டுரை
கண்ணன்  

1990களில் தமிழ் அறிவுலகின் சில முகாம்களில் டாக்டர் ராமதாஸ் ஒரு விடிவெள்ளியாக இருந்தார். பெரியாருக்குப் பின்னர் தோன்றிய பெரியாராகப் பார்க்கப்பட்டார். அந்நாட்களில் திராவிட இயக்கத்தின் மூல லட்சியங்களை மீட்டெடுக்கும் இயக்கமாக பா.ம.க. பார்க்கப்பட்டது. பா.ம.க. வெளியிட்ட ஒரு மலரில் அன்றைய முன்னணி மார்க்சியப் பெரியாரிய அறிஞர்கள் பெருமிதத்துடன் பங்களித்தனர். இன்று அவர்களில் பெரும்பான்மையினர் பா.ம.க.வின் தீண்டாதார் பட்டியலில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளுமே உருப்பெரும் காலத்தில் அறிவுஜீவிகளின் அருகாமையை விரும்புகின்றன. வளர்ச்சியடைந்த பின்னர் அவர்களை வெறுக்கின்றன. இருப்பினும் ஒவ்வொருமுறை இது ஏற்படும்போதும் நம் அறிவுஜீவிகள் நம்பிக்கையுடன் ஒத்துழைக்கின்றனர். விலக்கப்ப

கட்டுரை
பா. செயப்பிரகாசம்  

மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பான கட்டையன் தெருவைச் சென்றடைந்தபோது மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தன. ஏப்ரல் 25ஆம் நாள் ‘கோடிவன்னியர் கூடும் சித்திரை முழுநிலவு விழா’ மாமல்லபுரத்தில் நடந்தது. அதே நாளில் பட்டப்பகலில் கட்டையன் தெருவிலும் புதுச் சேரியிலிருந்து மரக்காணம் வரும் வழியில் அங்கங்கும் தலித் மக்கள் மீது பா.ம.க. வினர் கொடூர ஆட்டத் தை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர். பி.யூ.சி.எல். சார்பில் உண்மை அறியும் குழுவில் நாங்கள் (பேராசிரியர் சரசுவதி, த.முகேஷ், ராகவராஜ், கௌதம் பாஸ்கர்) சென்ற நாள் ஏப்ரல் 29. நிற்கக் கூட இயலாத தில்லையாம்பாள் என்ற (67 வயது) மூதாட்டியின் நெல் மூட்டைகளும் வைக்கோல் போரும் எரிந்துபோயிருந்தன. குத்துக்காலிட்டு உட்கார்ந்து வைக்கோல் படப்பும் தொழுவமும் எ

அஞ்சலி
க. திருநாவுக்கரசு  

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகேயுள்ள சலம்புர் நகரில் தாவூதி போரா முஸ்லிம் குடும்பத்தில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினீர். அந்நகரிலிருந்த போரா முஸ்லிம் சமூகத்தின் மதகுருவாக இருந்தவர் இவரது தந்தை ஷய்க் குர்பான் உசைன். தந்தையிடமிருந்து அரபு மொழியையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் கற்றார். சிறு வயதிலேயே இஸ்லாமியக் கல்வியுடன் மதச்சார்பற்ற கல்வியும் போதிக்கப்பட்டு கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றார். சுமார் 20 ஆண்டுகள் மும்பை மாநகராட்சியில் பொறியியல் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் வாழ்க்கையை இஸ்லாமிய சீர்திருத்தம், மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், ஜனநாயகம், முஸ்லிம் பெண்கள் உரிமை ஆகிய விஷயங்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டார். குரான் குறித்தும், இஸ்லாம் குறித்தும் இவர் கொண்டிருந்த புர

கட்டுரை
ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்  

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைத் தழுவியதும் காங்கிரஸ் கட்சி மீண்டும் பதவிக்கு வந்ததும் நாடு முழுவதும் அறியப்பட்ட விஷயங்கள். காங்கிரஸ் கட்சி என்னும் கப்பல் கடந்த நான்கு ஐந்து வருடங்களாக ஓட்டைக்கு மேல் ஓட்டை விழுந்து மூழ்கும் தருவாயில், கர்நாட கத்தில் கிடைத்துள்ள வெற்றி அவற்றையெல்லாம் அடைக்கும் Quick Fix என்பது போலப் பலர் உற்சாகம் கொண்டுள்ளனர். காங்கிரஸ் பெரும்பான்மை இடங் களைப் பிடிக்கும் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறிவந்தபோதும், அரசியல் வல்லுநர்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைமை உருவாகும் என அஞ்சினர். ஒரு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருப்பது கர்நாடக மக்களின் நல்ல காலம். ஒருவேளை காங்கிரஸ் இருபது அல்லது முப்பது

கட்டுரை
சுகதா ஸ்ரீனிவாசராஜூ  

அரசியல் கட்சிகள் அவர்தம் குறுகியகால தேர்தல் வெற்றிகளுக்கு நிரந்தரமான பண்புகளை வழங்கும் நோக்கத்தோடு அவற்றுக்கு போர்க்கால அல்லது வரலாற்று விவரணைகளை அளிக்க முந்துகின்றன. இந்தியாவில் பிற கட்சிகளைவிட பாஜக தனது சாதனைகளை மிகைப்படுத்தவும் அவற்றைச் சொற்களால் அலங்கரிக்கவும் அழகுபடுத்தவும் முந்துகிறது. 2008இல் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அறுதிப்பெரும் பான்மைக்கு 3 சீட்டுகள் குறைவாக அவர்கள் வென்று சுயேட்சைகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தபோது கர்நாடகத்தை அவர்கள் தெற்கிற்கான ராஜபாதையாக வர்ணித்தார்கள். மதச்சார்பற்ற கட்சிகளின் கோட்டையை உடைத்து விட்டதாக ஏதோ படையெடுத்து வந்ததுபோலப் பேசினார்கள். காவிப்படையின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது என்று முழங்கினர். இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2013 தே

எதிர்வினை
 

’காலச்சுவடு’ மார்ச் இதழில் வெளியான பி.ஏ. கிருஷ்ணனின் ‘பெரியார் ஒரு பார்வை’ என்னும் கட்டுரையை விட ஏப்ரல் இதழில் வெளியான அகமுடை நம்பியின் விவாதம் சுவாரசியமாக இருந்தது. விவாதத்தின் இறுதியில் பிராமணர் என்ற முறையில் உயர்வு மனப்பான்மை கொண்டவராக இருந்தபோதும் இவரை தமிழராக ஏற்றுக்கொள்கிறோம் என்று ‘ஆதார்’ அடையாள அட்டை கொடுத்திருப்பது வேடிக்கையான விஷயம். தமிழர்களுக்கு எப்போதுமே எதிரிகள் தேவைப்படுகிறார்கள். நிஜமான எதிரிகள் இல்லாத போது கற்பனை எதிரிகளைத் தயார் செய்து கொள் கிறார்கள். தமிழர்களில் ஒரு பகுதியினர் சாதீயப் பாகுபாட்டால் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்காகப் பேசுவதாகச் சொல்லிக் கொண்ட வர்கள் இந்த ‘இரு துருவ’ அரசியலை மிக சாமர்த்திய மாகப்

குறுக்கெழுத்து
 

அலுவலகத்துக்கு அருகில் சந்தடியான சாலை மீது இருந்தது கோவில். உள்ளே உஜ்ஜயினி மகாகாளி வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். கோவிலுக்கு ஐம்பதாண்டுக்கும் மேலான பழைமை இருக்கலாம். “அம்பதா, நூறுக்கும் கூடுதல் காணுமாக்கும். எங்க பாட்டா கொச்சாக இரிக்கும் பொத் தொட்டே உள்ளதாக்கும். அம்ம மகாராணி சேது லட்சுமிபாய் காலம் மொதலே இருக்கிற கோயிலாக்கும்னா நீங்களே கணக்குக் கூட்டிப் பாருங்கோ” என்று சாக்கு மண்டி நாடார் மறுத்தார். கூட்டிப் பார்த்தேன். பூராடம் திருநாள் சேது லட்சுமிபாய் (1895-1985) திருவிதாங்கூரை ஆண்டது 1924 முதல் 1931 முடிய. அந்தக் காலத்துக் கோவில் என்றாலும் நூறை எட்டவில்லை. அண்ணாச்சியுடன் சமாதான சக வாழ்வைப் பேணுவதற்காக ஒப்புக்கொண்டேன். சாலையை விரிவுபடுத்தும் திட்டம் அறிவ

திரை
செல்லப்பா  

தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும். நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்கு

கட்டுரை
வீ.அ. மணிமொழி  

மலேசியாவின் நடப்பு அரசாங்கம் எப்பொழுது கலைக்கப்படும் என்று தீவிரமாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்துக் கணித்து கொண்டிருந்த வேளையில், கடந்த 05.05.2013இல் மலேசியாவின் பொதுத் தேர்தல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மே 6, முற்பகல் ஒரு மணிக்கு அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் தெரிய வந்தன. இவ்வளவு காலதாமதமாக முடிவுகள் தெரிய வருவதற்குப் பெரிய காரணங்கள் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாரிசான் கட்சி வெற்றிபெற்ற செய்தி நாட்டு மக்களுக்கு அதிருப்தியாகவே இருந்தது. காரணம் இது உண்மையான நேர்மையான தேர்தல் முடிவல்ல. இதில் கீழறுப்பு வேலைகள் நடந்துள்ளன என மக்கள் நம்பினர். ஏனென்றால், இதுவரை பனிரெண்டு தேர்தல்களில் இல்லாத நாட்டமும் புத்துணர்வும் இந்தப் பதின்மூன்றாவது தேர்தலின்போது வெளிப்ப

சிறுகதை
யுவன் சந்திரசேகர்  

மறதியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் திரு.எம். அங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவருடையப் பெயரை முழுசாகச் சொல்லிவிட முடியும்; ஆனால், அது தொழில் அதர்மம். மாநில அரசு ஊழியர், ஐம்பது வயதை எட்டியவர், மதுரையில் பிறந்து வளர்ந்தவர், அங்கேயே வசிப்பவர் என்று பொத்தாம்பொதுவான தகவல்கள் சொல்லலாம். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோசனமும் கிடையாது தான். ஆனால், வெறுமனே அவர் அவர் என்றே தொடர்ந்து பேசுவதில், உங்களுக்கும் அவருக்கும் இடை யில் பெரிய அகழி உருவாகி விடுவது மட்டுமல்ல, எனக்கும் சொல்கிற விஷயத்தின் மீது ஈடுபாடு குறைந்து விட வாய்ப்பிருக்கிறதே. திரு.எம். என்றே வைத்துக் கொள்வோம். தொழில் தர்மம் பற்றிச் சொன்னேன். அதன் பிரகாரம், திரு.எம், சொன்ன சமாச்சாரங்களை என் மனத்தின் இருட்டறைக்குள் பூட்ட

கட்டுரை
சுகுமாரன்  

வாழ்க்கையில் முக்கியமானது உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதல்ல. நீங்கள் எதை நினைவுகூர்கிறீர்கள்; எப்படி நினைவுகூர்கிறீர்கள் என்பதுதான். காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மார்க்கேஸின் எல்லாப் படைப்புகளையும் நினைவு, மரணம் ஆகிய இரண்டு நிலைகளில் பொதுமைப்படுத்திவிடலாம். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் நினைவுகளின் மரணமும் மரணம் பற்றிய நினைவுகளும். பல்தசாரின் அற்புதப் பிற்பகல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கம், இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை, மகோந்தாவில் மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இசபெல்லின் தனிமொழி போன்ற ஆரம்பகாலக் கதைகள், அறிமுகமற்ற புனிதப் பயணிகள் தொகுப்பில் இடம்பெறும் ஒரு தொலைபேசி அழைப்புக்காக மட்டுமே போன்ற சில கதைகள் தவிர அவரது பிற கதைகளிலும் நாவல்களிலும் முன்சொன்ன இரு நிலைகள

எம். ரிஷான் ஷெரீப்  

நான் இசைக்கும் ஒற்றைப்பாடல் சந்திப்பதற்கான ப்ரியம் பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து ஆரம்பிக்கிறது உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம் தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக்கிளி ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது நீ பரிசளித்த அக்கிளி சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை கிளையில்லை; ஆகாயமில்லை ஒரு கூண்டு கூட இல்லை நீ கவனித்திருக்கிறாயா விரல்களை அசைத்தசைத்து நான் ஏன் ஒற்றைப் பாடலை இசைக்கிறேனென உனது கவனத்திற்கும் அப்பாலான எனது கனவிற்குள் நீயறியாதபடி இருக்கிறது திரைகளேதுமற்ற ஒரு வாசச் சோலை உனது கிளி அமர்ந்திருக்கும் இச் சீமெந்து வாங்கின் மூலையில் ஆறிக்குளிர்ந்திருக்கின்றன இரு தேநீர்க் குவளைகள் வாசிக்க மனமின்றி மூடி வைத்தப் புத்தகத்தில் பட்டு மின்னுகிறது பொன்னந்தி

நேர்காணல்
நேர்கண்டவர்: இளைய அப்துல்லாஹ்  

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் (80) 1977இல் இருந்து இலங்கைப் பாராளுமன்ற அரசியல் தொடர்பாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜயதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க, மகிந்த ராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் அரசியலை கண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வரவேண்டும் என்று பாடுபட்டு வருகிறார். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு இலங்கை அரசாங்கம் இந்தியாவின் 13 ஆவது திருத்தத்தை கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் இந்திய அரசோடும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளோடும் இலங்கை அரசாங்கத்தோடும் அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளோடும் பேசக்கூடிய ஒரே தமிழர் தலைவராக இரா. சம்பந்தன் இப்பொழுது இருக்கிறார். ‘&l

நிகழ்வுப் பதிவு
ஸ்டாலின் ராஜாங்கம்  

தலித் இலக்கியம் மற்றும் அறிவுலகம் சார்ந்த செயற்பாடுகள் பல்வேறு காரணங்களால் குறைந்துள்ள நிலையில் அண்மையில் நான் பங்கேற்பாளராகக் கலந்துகொண்ட தலித் பற்றிய இரண்டு கருத்தரங்குகளின் பதிவு இது. தமிழகத்தில் நடந்த சாதி வன்முறைகளுக்காக அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் மீதான விமர்சனக் கருத்தரங்கு Interrogating the Reports of Judicial Enquiry Commissions on Caste Violence in Tamil Nadu என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS) நடந்தது. சென்னை வளர்ச்சி ஆய்வு மையமும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கவுன்சிலும் (ICSSR) இணைந்து நடத்திய இக்கருத்தரங்கை எம்.ஐ.டி.எஸ் பேராசிரியர் சி. இலட்சுமணன் ஒருங்கிணைத்திருந்தார். 1950 தொடங்கி 2000ஆம் ஆண்டு வரைய

உரை
எம். ஏ. நுஃமான்  

இது எனக்கொரு புது அனுபவம். இதுவரை இத்தகைய விருது விழாக்களில் விருதுபெறும் ஒருவனாக நான் இருந்ததில்லை. விருதுகளுக்கு எதிரான ஒரு மனநிலையில் இவ்வளவு காலமும் இருந்துவிட்டேன். இன்று இவ்விருதினைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாக என்ன பேசுவது என்று யோசித்தேன். எழுத்தாளர்கள், பரிசுகள், விருதுகள், பாராட்டுகள் பற்றியே பேசலாம் என்று நினைத்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ‘காத்திருங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எனக்கு அறுபது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு எனது சில நண்பர்களும் மாணவர்களும் எனக்கு ஒரு விழா எடுக்கும் நோக்கில் என்னை அணுகிய போது அதை மறுதலித்த மனநிலையில் பரிசுகள் விருதுகள் பாராட்டுகளுக்கு எதிராக எழுதிய கவிதை அது. கவிதை இதுதான்: மன்னிக்கவேண்டும் எனக்கு எதற்கு இப்போது

நிகழ்வு
கே. பாரதி  

‘மரப்பாச்சி’ குழுவினர் வழங்கிய ‘வாக்குமூலம்’, ‘சுடலையம்மா’ ஆகிய இரு நாடகங்களும் ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டன. நாடகங்கள் உருவானதன் பின்னணி சுவாரஸ்யமானது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஜனநாயக மாதர் சங்கத்திலும் அனுபவம் மிக்கவர் மைதிலி சிவராமன். இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் பெண்ணிய வரலாற்றாளர் வ. கீதா. நெருக்கடி நிலை காலகட்டத்தில் காவல் துறையின் வன்முறைக்கு ஆளான நாகம்மாள், சீராளன் ஆகியோரின் அனுபவத்தை சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவு செய்திருந்தார் மைதிலி. நாகம்மாளின் போராட்டத்தையும் சீராளனுக்கு நேர்ந்த கொடுமையையும் நாடக வடிவத்தில் மறுபதிவு செய்யும் எ

அஞ்சலி: லால்குடி ஜெயராமன் (1930-2013)
பி. ரவிகுமார்  

லால்குடி ஜெயராமன் மறைந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் கால் நூற்றாண்டுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் சூர்யா கலைவிழா மேடையில் அவர் வாசிக்கக் கேட்ட மோகன ராகம்தான் மனதுக்குள் ஒலித்தது. சொந்த சாகித்தியமான சாமா ராக வர்ணத்துடன் அன்று கச்சேரியை ஆரம்பித்தார். அன்று அவர் வாசித்த ஜானகீ ரமணா (சுத்த சீமந்தினி), பாஹி ஜகஜ்ஜனனி (வாசஸ்பதி), பஜரே மானஸ (பீம்ப்ளாஸ்), எந்த முத்தோ (பிந்துமாலினி), என்ன தவம் செய்தனை (காபி) முதலான எல்லா ராகங்களும் இன்றும் மனதுக்குள் ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எனினும் அன்று பிரதானமான வாசித்த தியாகராஜரின் ‘மோகன ராமா’ நினைவின் ஆழத்தில் புரண்டு கொண்டே இருக்கிறது. மரணம் வரையிலும் அதை மறக்க முடியாது. அன்று கேட்ட அந்த ‘மோகன’ வாசிப்புக்குப் பிறகு மற

கட்டுரை
ஸர்மிளா ஸெய்யித்  

இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைகள் தொடர் பாகவும் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம், சமூக, பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் ஆய்ந்தறியும் பணியினை மேற் கொள்வதற்காக 2012இன் நடுப்பகுதியில் வடக்கின் பல பிராந்தியங்களுக்குப் பயணித் திருந்தேன். போரில் கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான பதிவுகள் தவிர்த்து, போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வு குறித்தப் பதிவுகள் குறைந்தளவு கவனத்தையே பெற்றுள்ளன. முள்ளிவாய்க்காலில் முடிவு க்குக் கொண்டுவரப்பட்ட போர் இன அழிப்பாக சர்வதேச விவகார மாகியிருப்பதனாலும், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தும் கவனத்தைப் பெற்று வருவதனாலும் வடக்கிற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பணி யாளர்கள், பத்திரிகையாளர்கள்

எதிர்வினை
பானுபாரதி  

லண்டன் இலக்கியச் சந்திப்பில் பௌசர் பகிரங்கமாக, நான் முகநூலில் எழுது பவை எனது வாழ்க்கைத் தோழன் தமயந்தியினாலேயே எழுதப் படுவ தாக ஓர் அபாண்டத்தை அவிழ்த்து விட்டார். அதைநான் கடுமையாகக் கண்டித்து உடனடியாகவே ஒரு காணொளியை வெளியிட்டேன். சில தினங்களின் பின் தமிழின் முக்கிய மான பெண் படைப்பாளிகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை இணையத்தில் வெளியிட்டு, பௌசர் தனது ஆணாதிக்கக் கருத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்றோம். தான் அவ்வாறாகப் பேசவில்லை எனப் பௌசர் சொல்வதை ஏற்க முடியாது. சந்திப்பில் கலந்துகொண்ட உமா, கலையரசன், ராகவன் மற்றும் சில தோழர்கள் பௌசர் அவ்வாறு பேசியதை எழுத்து மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். ஆணாதிக்கச் சூழலில் பானுபாரதி அவ்வாறு அவரது கணவரால் பயன் படுத்தப்படுகிறாரோ என்றே தான் கருதிப் பேசிய

கண்டதும் கேட்டதும்
(ஆண் எழுத்தாளர்களுக்கானது)  

1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா/ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள். 2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங்களை வாசித்ததுமில்லை, வாசிப்பதுமில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது. 3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதையோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார். -இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள். இனி, உங்களுக்கான தகுதிகள்: 4. தமிழ்ச் சொற்களையும் வாக்கியங்களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்புப் பெறாத விஷயங்களையும் சொல் ஜாலங்கள் காட்டி, அவை மகா தத்துவங்கள் என்பது போன்ற மயக்கத்தை வணிக வாசகர்கள் மத்தியில் ஏற்பட

உள்ளடக்கம்