தலையங்கம்
 

பெண்களின் கற்பொழுக்கத்தைப் பொருத்தவரை, தன் குடும்பத்துப் பெண்கள் தவிர்த்தப் பிற பெண்கள் அனைவரும் சோரம் போகிறவர்களாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் விருப்பம் என்று கேலியாகச் சொல்லப்படுவதுண்டு. நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பொருத்தவரை மக்களின் மனநிலை இதற்கு நேரெதிரானதாக இருக்கிறது. தன்னைத் தவிர்த்து மற்ற அனைவரும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர். ஊருக்குத்தான் உபதேசம் என்பது நம்முள் ஆழமாக வேர்கொண்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் அல்லது அமைப்பும் நேர்மையுடன் செயல்பட வெளிப்படைத்தன்மை மிக அவசியம். விதிவிலக்கின்றி எல்லா நிறுவனங்களும் அமைப்புகளும் வெளிப்படைத்தன்மையைக் கண்டு அஞ்சுகின்றன. இச்சூழலில், அரசியல் கட்சிகள்,

கண்ணோட்டம்
கண்ணன்  

நரேந்திர மோடிதான் பாரதத்தின் அடுத்த பிரதமர் என்று பாஜக அபிமானிகள் உற்சாகமடைந்துள்ளனர். மோடியின் புகழ் இந்துத்துவ ஆதரவாளர்களையும் தாண்டி விரிந்து வருகிறது. கார்ப்பரேட் இந்தியாவின் வலுவான ஒரு பகுதி மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறது. கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் இந்த எண்ணத்தை முன்னெடுக்கின்றன. ஊழல் இல்லாத, நிர்வாகத் திறம் கொண்ட, வல்லரசாக இந்தியாவைக் கனவு காண்பவர்கள் பலருக்கும் மோடி சிறந்த தேர்வாகத் தெரிகிறார். பல அறிவுஜீவிகளும் மோடி நாமத்தை முன்னெடுக்கின்றனர். இந்தியாவின் முக்கியப் பெண்ணியவாதியாக அறியப்பட்ட மது கிஷ்வர், மனித உரிமை திருஉருவாகப் பார்க்கப்படும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் எனப் பல பெயர்களைக் குறிப்பிடலாம். அதே

 

தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங் களிலும், புத்தகக் காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்ற காலச்சுவடின் கோரிக்கை என்னைப் போன்ற பலரின் மனதிலிருந்த நீண்ட கால விருப்பம். சென்னை புத்தக காட்சி ஆண்டு தோறும் நடைபெற்றாலும், சென்னை தவிர்த்த நகரங்களில் உள்ள ஒரு சில வாசிப்பாளர்கள் மட்டுமே சென்னைக்கு வந்து புத்தகக் காட்சியில் கலந்து கொள்ளவும் ஏனையோர் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையும் இருந்தது. தற்போது, திருப்பூர், பெரம்பலூர் போன்ற சிறு நகரங்களில் நடத்தப்படும் புத்தககாட்சிகள் வரவேற்புக்குரியது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் புத்தகக் காட்சிகள் நடத்துவது, தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் தமிழ் மொழி குறித்தும், இன்றைய இளைய தலைமுறை அறிந்ததுகொள்வதற்கு மிகவும் உதவும்

சிறப்புப் பகுதி
 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் இக்கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. அது குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழுக்கு எதிரானது இது என்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக ஆங்கில வழிக் கல்வியைப் பெறுவார்கள் என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கல்வி தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து கவனப்படுத்திவரும் காலச்சுவடு இப்பிரச்சினை குறித்து கல்வியாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிடுகின்றது  சிறப்புப் பகுதி: தற்காலிகத் திருப்தி தரும் ஏற்பாடு சிறப்புப் பகுதி: ஆங்கிலவழியில் அரசநடை சிறப்புப் பகுதி: சமூகவிளிம்பை நோக்கித் தமிழ் வழிக்கல்வி சிறப்புப் பகுதி: சமூகத்தின்

சிறப்புப் பகுதி
பெருமாள்முருகன்  

நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி விளம்பரம் ஒன்றைக் கேட்டேன். ‘தமிழ் மீடியத்துல படிக்கறது நம்ம நாட்டு நாணயம் மாதிரி. உள்நாட்டுக்குள்ளதான் செல்லுபடியாகும். இங்கிலீஷ் மீடியத்துல படிக்கறது முத்திரைப் பவுன் மாதிரி. உலகத்துல எங்க போனாலும் செல்லுபடியாகும்.’ தனியார் ஆங்கில வழிப் பள்ளி ஒன்றிற்கான விளம்பரத்தில் வரும் வாசகம் அது. ஏற்கனவே நிலவுவதும் தற்போது வலுப்பெற்றிருப்பதுமான பொதுப்புத்தி சார்ந்த கருத்து இது. இந்நிலையில் எல்லா மக்களையும் ஈர்க்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் இவ்வாண்டு முதல் தொடங்கப்படும் என அறிவித்து இப்போது மாணவர் சேர்க்கையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல், ஆறு, பதினொன்று ஆகியவற்றில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிறப்புப் பகுதி
ச. தமிழ்ச்செல்வன்  

நாம் வாழும் இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகத்தில் உலகளாவிய தொடர்புகளுக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் ஆங்கிலமொழியறிவு தேவை. தபாலாபீஸ் பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்தை தார்பூசி அழித்ததுபோல ஆங்கிலத்தை அழிப்பது சாத்தியமல்ல. அது இன்று நம் வேலையல்ல. அவசியமுமல்ல. ஆங்கில மொழியறிவு இன்று ஓர் அடிப்படைத் தேவை. அதற்காக பயிற்றுமொழியாக ஆங்கிலம் வேண்டும் என்று கூறுவது தொலைநோக்கில்லாத குருட்டுத்தனமான கண்ணோட்டமாகும். முந்தைய திமுக அரசும் சரி, இன்றைய அதிமுக அரசும் சரி, தமிழ்தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அரசின் சமீபத்திய அறிவிப்புகளுக்காக கண்டன அறிக்கை விடும் கலைஞர் தன் ஆட்சியின்போது சமச்சீர் கல்வி கொண்டுவர எத்தனை தடை போட்டார் என்பதும், சமச்சீர் கல்விக்காகப் போராடிய மா

சிறப்புப் பகுதி
பூமா சனத்குமார்  

மாணவர்களுக்கான கல்வியாண்டுகள் பிரச்சினைகளுடன் தொடங்குவதாகவே அமைந்து வருகின்றன. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டிய தயக்கம், பாடப்புத்தகங்களை வழங்குவதில் தாமதம், தனியார் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்துவதில் தொடரும் சிக்கல், ஏழை எளியோருக்கு பயனளிக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதில் அக்கறையின்மை ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தும் தமிழக அரசின் சமீபத்திய இரண்டு அறிவிப்புகள் மாணவர்களிடையேயும் தமிழ் ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளன. அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆங்கிலத்திலேயே உள்தேர்வுகளை எழுதவேண்டும் எனும் உயர்கல்வி மன்றத்தின் உத்தரவை எதிர்ப்புகளுக்கிணங்கி தமிழக அரசு ரத்து செய்தது. அ

சிறப்புப் பகுதி
முனைவர் பாலாஜி சம்பத்  

கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தனியார் பள்ளி சிறந்ததா அல்லது அரசுப் பள்ளி சிறந்ததா என்று கேட்டால் அனைவரும் கூறும் பதில் அரசுப் பள்ளி என்பதே. ஆனால் உங்கள் குழந்தைகளை எங்கு படிக்க வைக்கின்றீர்கள் என்று கேட்டால் மேலே குறிப்பிட்டுள்ள அனைவரின் குழந்தைகளும் தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருவார்கள். இதேபோல் தமிழ் வழிக் கல்வி மூலம் பயில்வது முக்கியமா அல்லது ஆங்கில வழிக் கல்வி மூலம் பயில்வது சிறந்ததா என்று கேட்டால் பல கல்வியாளர்கள் கூறுவது தமிழ் வழிக் கல்வி மூலம் பயில்வது சிறந்தது என்பார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியின் வாசனை கூடத் தெரியாமல் CBSC மற்றும் ICSE போன்ற கல்வித் திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். சொற்ப

சிறப்புப் பகுதி
சுகிர்தராணி  

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி தமிழ்மொழிக் கல்விக்கு ஆதரவாகவும் அரசின் முடிவுக்கு எதிராகவும் விவாதங்களும் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மக்கள் மத்தியில் அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் அற்ற மனநிலையே நிலவுகின்றது. எவற்றையும் கருத்தில் கொள்ளாத தமிழக அரசு, இக்கல்வியாண்டு முதலே அரசுப் பள்ளிகளில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் துவக்கியுள்ளது. இவ்வாறு துவக்கப்பட்ட ஆங்கிலவழி வகுப்புகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாணவர்கள் சேர்ந்து வருவதாகக் கல்வித்துறை தெரிவிக்கிறது. இம்மாதிரியான திட்டம் கொண்டுவர பரிசீலனையில் இருக்கும்போதே அதன் அத்தனை சாதக பாதகங்களை அரசு ஆராய்ந்திர

கட்டுரை
சேரன்  

2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடியுரிமை பெற்றவர்கள். இவர்களில் ஒருவருக்கு 25

பத்தி
வே. வசந்தி தேவி  

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராக 2002 முதல் 2005வரை மூன்று ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். அன்றைய அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என்று வந்துகொண்டிருந்த வழக்குகள், ஆணையம் குறித்த செய்திகள் பரவியபோது, பெரும் எண்ணிக்கையில் குவிந்தன. ஆணையத்தின் கதவுகளை வந்து தட்டிய ஒவ்வொரு மனுவின் பின்னும் ஒரு பெண்ணின் ஆற்றுப்படுத்த முடியாத கண்ணீர், கதறல், வேதனை, அவமானம், ஆதரவின்மை; ஆணாதிக்கச் சமுதாயத்தின் அபலைக் குரல்கள்; ஆயிரம் ஆண்டுகள் கடந்து தொடரும் பழம்பெரும் பாதகங்கள், நவீன இந்தியாவின் புதிய விகாரங்கள். அபயம் என்று என் வாசல் தேடி வந்த பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட என் ஆணையத்திடம் என்ன வலு இருந்தது? சட்டத்தின் அதிகாரம் ஆணையத்திற்கு என் காலத்தில் அள

அஞ்சலி
அ. பரஞ்சோதி  

தமிழ்த் திரையிசையில் தாரகைகள் உதிரும் பருவம் இது. கொஞ்சநாள் முன்பு மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி. பி.பி. ஸ்ரீனிவாஸ் பின் தொடர்ந்தார். இப்போது டி.எம். சௌந்தரராஜன் அமரராகியிருக்கிறார் - தொண்ணூறாம் வயதை எட்டிவிட்டு. பல பத்து ஆண்டுகள் தமிழ்த் திரைப்பாடல்களின் பேரரசராகத் திகழ்ந்த டி.எம். எஸ்ஸின் மரணம் தமிழ்த் திரையிசையின் பால்ய நினைவுகளை மீட்டியிருக்கிறது. டி.எம்.எஸ் அடைந்த மகத்தான வெற்றிக்கு அவருடைய திறனே முழுமுதல் காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், சில உபரிக் காரணங்களும் அவருக்கு உதவின - தமிழ்த் திரையுலகில் நேர்ந்த மாற்றங்களும், அவை உருவாக்கியிருந்த பதநிலையும். எம்.கே.டி பாகவதருடைய குரலின் மயக்கத்திலிருந்து தமிழ் ரசிகர்கள் முழுமையாக விடுபட்டிராத காலகட்டம். சி

அஞ்சலி
அசோகமித்திரன்  

‘பாகவதர் போலவே பாடுகிறவர் ஒருவர் மதுரையில் தோன்றி இருக்கிறார்’ என்று ஒரு செய்தி அப்போது பரவிக்கொண்டிருந்தது. நான் கேட்ட ஒன்றிரண்டு பாட்டுகள் எனக்கு பாகவதரை நினைவூட்டவில்லை. ‘தூக்குத்தூக்கி’ என்ற படம் 1954ல் வந்தது. அப்படம்தான் தமிழகம் டி.எம்.எஸ் என்ற பாடகரைக் கவனிக்க வைத்தது. அப்படமும் அதன் கதையும் மிகவும் ஆட்சேபகரமானவை. ஆனால் அது ஓடு ஓடுவென்று ஓடியது. அந்த ஆண்டில் பாட்டுக்காகவென்று ஓடிய ஒன்றிரண்டு படங்களில் அது ஒன்று. (என் கணிப்பு டி.எம்.எஸ்ஸை விட அப்படத்தின் ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே’ என்ற பாடல்தான் பல விதங்களில் உயர்ந்தது, மக்களைக் கவர்ந்தது.) சிவாஜி கணேசனோடு பாடகரும் சேர்ந்து உரத்துப் பாடுவார். ஆனால் அன்று அந்த உரத்தப் பாடல்கள் மிகவும் ரஸிக்

திரை
கருணா வின்சென்ற்   

அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவி கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த திரைப்படம் 1973 நவம்பரில் ‘மீனவப்பெண்’ என்று பெயர் மாற்றம் பெற்று

சிறப்புப் பகுதி
 

ஊழல் குற்றச்சாட்டுகள் கிரிக்கெட் ஆட்டத்திற்குப் புதிதல்ல. ஆனால் அண்மையில் அம்பலமாகியுள்ள முறைகேடுகள் ஆட்டத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்யக்கூடியவையாக உள்ளன. கணிக்க முடியாத அம்சங்கள் நிறைந்த இந்த ஆட்டத்தின் வித்தியாசமான அழகியல் இன்று சீரழிக்கப்பட்டு வருகிறது. கோடானுகோடி ரசிகர்களின் ஆர்வம் பண முதலைகளால் குரூரமாகச் சுரண்டப்படுகிறது. ஆட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நுணுகி ரசித்தவர்கள் அதே ஆட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சந்தேகப்படத் தொடங்கியுள்ளார்கள். இந்த நோயின் மூல காரணங்களையும் அவற்றைக் களையும் வழிகளையும் ஆராய வேண்டிய தருணம் இது. கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு அல்ல என்பதால் இதுபற்றிய விவாதத்தைப் பொதுவெளியில் எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலில் இந்த வ

சிறப்புப் பகுதி
அரவிந்தன்  

இந்திய கிரிக்கெட் ஒரு பெரிய நெருக்கடியில் இருப்பதான தோற்றம் கடந்த இரு மாதங்களாக ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் கிரிக்கெட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பதையும் அது குறித்த விவாதங்களில் (வழக்கம்போல) ஈடுபடுவதையும் வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். இளைஞர்களையும் புதியவர்களையும் கொண்ட இன்றைய இந்திய அணி, கிரிக்கெட் பிறந்த இங்கிலாந்து மண்ணில் நின்றபடி இந்திய கிரிக்கெட்டின் தரத்துக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. அண்மையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் எழுந்த நெருக்கடி. அதன் பேராசை மிகுந்த ஒரு திட்டத்துக்கு எழுந்த நெருக்கடி. இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) என்னும் போட்ட

சிறப்புப் பகுதி
பத்ரி சேஷாத்ரி  

கடந்த மாதம் ஆறாவது ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து முதன்முதலாகக் கோப்பையை வென்றது. தெண்டுல்கர் அத்துடன் ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் இவையெல்லாம் சுவாரசியம் இல்லாத உப்புச் சப்பான விஷயங்கள். இவற்றைத் தாண்டிப் பல சம்பவங்கள் நடந்திருந்தன. ஒரு கட்டத்தில் நாட்டின் பிற செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அனைத்துச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலும் ஐ.பி.எல் தான் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். பின

சிறப்புப் பகுதி
யுவன் சந்திரசேகர்  

என் உறவு வட்டாரத்தில் கிரிக்கெட் ஆராதகர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்களில் இருவரைப் பற்றி மட்டும் இப்போது - ஐ.பி.எல்.ஐ முன்வைத்து. முதலாமவர் எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்.தனியார் நிறுவனத்தில் மேல்நிலை அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நடமாடும் அருங்காட்சியகம் என்று சொல்லலாம். முழுக்க நரைத்த தலையை ஆட்டி ஆட்டி, விஜய் மெர்ச்சண்ட், ஸோல்க்கர், கேரி ஸோபர்ஸ் என்று கொண்டாட்டமாகப் பேசுவார். இன்ன வருடத்தில், இன்ன ஊரில், இன்ன ஆட்டத்தில், இன்னார் அடித்த கவர் ட்ரைவ் மாதிரி இன்னொன்று கிரிக்கெட்டில் நடப்பதற்கேயில்லை என்கிற மாதிரி உறுதியான வாக்கியங்களை உதிர்ப்பார். அவரும் என் மகனும் தோழர்கள். அவன்தான் அந்த இரண்டாவது நபர். அவர்களுடைய உரையாடலில் யதேச்சையாக

ஓவியங்கள்: ரோஹிணி மணி  

முதல் கல் உன் மலைப் பயணத்தின் இடர்ப்படும் முதல் கல் நான் உடன் வரும் இருபது பேரும் ஆண்கள் கழிப்பறை குளியலறை வசதி கிடையாது அனைத்தையும் துறந்த அருவிக் குளியல் வந்தாலும் வாய்க்காது எனக்கு என்னைச் சுமக்கத் தயாரில்லை நீ வனாந்தர மலைப்பாதையில் உணவு கிடைக்குமா என்னும் கவலையற்று உண்கிறேன் கதவைப் பூட்டிவிட்டு உள்ளடைந்த குளியலறையில் குளிக்கிறேன் அனைத்துச் சன்னல்களும் கதவுகளும் அடைபட உறங்கச் செல்கிறேன் கூடவே பெரும் நில அதிர்வில் இவ்வீடு சிதைந்து என் ஊனத்தைப் போக்காதா எனவும் விழைகிறேன். கனவு வானம் ஸ்தூல சரீரம் விட்டுச் சூக்குமமாகிட என் உடலைச் செதுக்குகிறேன் இரத்தம் வற்றி நீரேறிய தசைகளை அறுத்துக் குவிக்கிறேன் எலும்பற்ற உரு வளைந்து நெளிகிறது விறைத்து நீண்ட கூடு அரித்து மட்கட்டுமென வான்வெளியில்

சிறுகதை
 

மற்ற இசைக் கலைஞர்கள் போல ஒரு சாண் சரிகை போட்ட பட்டுப்புடவையும் நகைகளும், முகப் பூச்சும் மல்லிகைப் பூவுமாய் மேடையில் ஏற மாட்டாள் பிரமரா. பருத்திப் புடவையோ, கதர்ப் புடவையோதான். நல்ல மரத்தில் கடைந்த தன் வீணையைக் கையில் சாய்வாக ஏந்தியபடி அவள் மேடையில் வந்து அமர்வதுதான் வழக்கம். முதல் வரிசையில் அவள் தந்தையும் குருவுமான பன்மொழிப் புலவர் கந்தவேளும் அவள் தாய் கனகவல்லியும் அவள் இசைக் குரு சுகவனம் ஐயரும் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அருகில் பிரமராவின் உயிர்த்தோழியான இவள். இவள் கச்சேரி செய்யும்போது அவர்கள் அருகில் பிரமரா இருப்பாள். இருவரும் இணைந்து கச்சேரி செய்யும்போது மேடையின் இரு பக்கத்திலிருந்தும் இருவரும் வீணையை ஏந்தி வரும்போதே கச்சேரி களைகட்டிவிடும். அவள் பிரமரா. வண்டு. இவள் நிதிலா. முத்

நிகழ்வு
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா டொடொன்ரோவில் ஜூன் 15ம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என பல இலக்கிய வகைபாடுகளில் இயங்கியவர். இவர் தன்னுடைய ஏற்புரையில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், கோவை ஞானி போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட விருது தனக்கும் வழங்கப்படுவதால் தான் பெருமையடைவதாகக் கூறினார். அத்துடன் தமிழ் இலக்கியத் தோட்டம் உலகப் பொதுவாக வெளிப்படையாக இயங்கி விருதுகள் வழங்கும் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட

பதிவு
என்னெஸ்  

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூலான ‘பட்டு’ நாவலை எழுதிய இத்தாலிய எழுத்தாளர் அலெசான்ட்ரோ பாரிக்கோவுடனான சந்திப்பாக, காலச்சுவடின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவின் முதல் நிகழ்ச்சி அமைந்தது மகிழ்ச்சிகரமானது. பிரகிருதி ஃபவுண்டேஷன் ஒருங்கிணைத்த நூல் அறிமுகம் - எழுத்தாளருடனான சந்திப்பு கடந்த ஜூன் 1ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டை அமெதிஸ்டில் நடைபெற்றது. பிரகிருதி ஃபவுண்டேஷனின் பொறுப்பாளர் ரன்வீர் ஷா நிகழ்வைத் தொடங்கிவைத்தார். ‘பட்டு’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் சுகுமாரனின் அறிமுக உரை, இத்தாலி, ஆங்கிலம், தமிழ் மூன்று மொழிகளிலும் நாவல் பகுதி வாசிப்பு, நாவலாசிரியர் பாரிக்கோவின் ஆங்கில உரை, அவருடன் வாசகர்கள் கலந்துரையாடல் என்று நிகழ்வுகள் அமைந்தன. &ls

வாசிப்பு
நித்ய ஸந்யாஸ்  

நினைவு வெளி சசி. வித்தியானி இலவசப் பிரதிகளுக்கு: Wonderland Book Shop, 405, Trinco Road, Batticaloa, கால எல்லைகளைக் கடந்தும் உயிர்த்திருத்தல் படைப்பாளிக்கு சாத்தியமாகிறது. அவரது படைப்பின் பாதையில் மேற்கொள்ளும் பயணத்தில் அவரின் உரையாடலின் குரலைக் கேட்க முடிவது மட்டுமல்லாமல், வாசிப்பின் அசாதாரண நிழலொதுங்களில் கணநேரக் காட்சியாக அவரை தரிசிக்கவுமியலும் என்பது ஒருவரது ஆழ்ந்த ஈடுபாட்டை பொருத்து அமையும். கடந்த 2012 (சித்திரை 20)இல் மறைந்த ஈழப் படைப்பாளி சண்முகம் சிவலிங்கம் அவர்களை நினைவு கூறும் விதத்தில், வெளியிடப்பட்டுள்ள ‘நினைவு வெளி’ என்னும் மலரில் அவரைக் குறித்து அவரது உறவினர்களும் ஈழப்படைப்பாளிகளும் சில நினைவனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘என் நண்பர் சசி

மதிப்புரை
மா. அரங்கநாதன்  

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் (கவிதைகள்) கதிர் பாரதி வெளியீடு: புது எழுத்து, 2/205 அண்ணா நகர் காவேரிப்பட்டினம் 635 112, தொ.பே. 98426 47101. ரூ. 60 பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்று சொன்னார் அரிஸ்டாட்டில். அன்றும் சரி இன்றும் சரி அவர்தான் வானவியலின் தந்தையாக மதிக்கப்படுகிறார். அதெப்படி, பையன்களுக்குக்கூடத் தெரியுமே இந்தப் பூமி சூரியமண்டலத்தின் ஒரு கிரகம். சூரிய மண்டலமே பிரபஞ்சத்தின் தூசிக்குச் சமம். அப்படி இருக்க, எப்படி இந்த அரிஸ்டாட்டில் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் வானவியலின் தந்தையாக இருக்கிறார். அரிஸ்டாட்டிலின் ஞாபகத்தை ஏற்படுத்தியது கவிஞர் கதிர்பாரதி செய்த வேலை. பத்திரிகைத் துறையில் இருப்பவர்கள் சிரத்தை எடுத்துக்கொண்டு கவிதையில் நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பதைப் பொய்யாக

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

பயங்கரவாதம் ஒரு பண்புப் பெயர் அல்ல. நம் வாழ்வில் நாளாந்தம் அனுபவிக்கும் கொசுக் கடி, மின்சார வெட்டுபோல் உயிர்த்தோற்றமுள்ள ஒரு மெய்மை என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நகரின் தெருவிலோ அல்லது சந்தையிலோ அரசியல், மத, கருத்தியல் காரணங்களுக்காகக் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும். ஐந்து வார இடைவெளியில் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள். ஒன்று அமெரிக்காவின் பொஸ்டன் நகரம். மற்றது ஐக்கிய ராச்சியத்தின் லண்டன். ஐக்கிய ராச்சியத் தெருக்களுக்குப் பயங்கரவாதம் 9/11க்குப் பிறகு வந்ததல்ல. இஸ்லாமிய குண்டுதாரிகளுக்கு முன்பு 70களிலும் 80களிலும் ஐரிஷ் விடுதலை இயக்கமான ஐ ஆர் ஏ கட்சி எண்ண மிகுதியாக வன்முறைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஏன் சரித்திரத்தை

எதிர்வினை
கண்ணன் - காளிங்கராயன்  

வெள்ளைக் கனவான்கள் எமது மண்ணில் சாலைகள் அமைத்தார்கள். அவற்றின் வழியே ஏழ்மையையும் மரணத்தையுமே கொண்டுவந்தார்கள். Makuxi (Brazil) த.நா. மின் நுகர்வோர் சங்கத் தலைவர் திரு. டி. பாலசுந்தரம் அவர்களின் கருத்துக்கள் தலைப்பிற்கு மாறாக அவரது மின்காணல் தமிழக / இந்திய மின்சார நிலைமைகள் குறித்து குழப்பம் நிறைந்த சித்திரத்தையே நமக்கு வழங்குகிறது. குறிப்பாக, ஸ் மத்திய அரசு சரியான அளவு மின்சாரத்தை தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிக்கிறது. ் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் மின் வெட்டு குறையும். ் எதிர்காலத்தில் மின் சாரத்தின் விலை கூடிக்கொண்டே போகும். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ் மின்னுற்பத்தியில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். ் மின்வாரியத்தின் நிதி இழப் பிற்கு காரணம் இலவச

நாடக நிகழ்வு
வெளி ரங்கராஜன்  

இந்திரா பார்த்தசாரதியின் ‘ராமானுஜர்’ நாடகத்தை பாண்டிச்சேரி நாடகப் பள்ளி மாணவர்களைக் கொண்டு (மே 19 கூத்துப் பட்டறை) ஒரு செறிவான அரங்க அனுபவமாக மாற்றியிருக்கிறார் பேராசிரியர் ராமானுஜம். பெரிதும் வார்த்தைகளால் நிரம்பியிருந்த ஒரு பிரதியை ஒரு வளமையான நாடக இயக்கத்தின் மூலம் காட்சி அனுபவமாக மாற்றியதில் ராமானுஜத்தின் நாடகமாக்கல் திறன் செயல்பட்டிருக்கிறது. முக்கியமான ராமானுஜரின் தத்துவப் பயணத்தை வடிவமைக்கும் முயற்சியில் நம்முடைய கலாச்சார வரலாற்றுக்குள் ஊடுருவிப் பார்க்கவும், அதை மறுவாசிப்பு செய்வதற்குமான சாத்தியங்களை நாடகம் முன்வைப்பதோடு செறிவான மனித அசைவுகள் மூலம் ஒரு அரங்கின் இருப்பை உறுதி செய்கிறது. சடங்கு மனநிலைகளைக் கடந்து வைணவம் ஒரு மானுட தர்மத்தைப் பேணுகிற உலகளாவிய தத்துவப

கண்ணன்  

தங்கைக்குப் பிறந்த நாள் அன்று அண்ணன் சால்வை அணிவித்து வாழ்த்துகிறார். இது புகைப்படத்துடன் கூடிய தலைப்புச் செய்தி. மகனும் தந்தையும் சந்திக்கிறார்கள். மீண்டும் தலைப்புச் செய்தி. தங்கை வெளி ஊருக்குச் செல்கையில் ஒரு அண்ணனின் அணி வரவேற்கிறது. மற்றொரு அண்ணனின் அணி புறக்கணிக்கிறது. இதை காக்கை, ஆந்தை, கழுகு, சாமியார் ஆகியோர் அலசுகிறார்கள். தங்கை கட்சிக்குள்ளேயே ஒரு அண்ணன் பக்கம் இருந்து மற்றொரு அண்ணன் பக்கம் சராசரியாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அணி மாறிக்கொண்டேயிருக்கிறார். காலத்திற்கு ஏற்ப ஒரு அண்ணி புன்னகை பூக்கிறார்; மற்றொரு அண்ணி முகம் சுளிக்கிறார். தலைவர் மனைவி வீட்டில் அரைநாள், துணைவி வீட்டில் அரைநாள் வாழ்கிறார். தலைவர் சதம் அடிப்பார் என்பதே பரவலான கருத்து. பிப்ரவரி 14 காதலர் தினத்தன

உள்ளடக்கம்