தலையங்கம்
 

ஆவணப்படுத்தும் குணம் தமிழர்களிடம் இயல்பாக இல்லை என்றே தோன்றுகிறது. அதேசமயம் இது மேற்கத்திய கொடை என்றும் சொல்ல முடியவில்லை. சோழ அரசாங்கத்தில் ‘ஆவணக் களறி’ இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழர் பங்களிப்பிருந்த திருவிதாங்கூர் சமஸ்தான நிருவாகத்தில் ஆங்கிலேயர் பங்கேற்பதற்கு முன்பே ஆச்சர்யம் தரும் வகையில் ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்திருப்பதை இன்றைக்குப் போனாலும் திருவனந்தபுரம் மதிலகத்தில் பார்க்க முடியும். எப்படியோ தொடர்ச்சி இல்லாதொழிந்தது. 1909இல் பிரிட்டீஷ் அரசாங்கம், அரசு ஆவணங்களைப் பாதுகாக்க சென்னை ஆவண அலுவலகம் (Madras Record Office) என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியது. அது பின்னர் சென்னை மாநில ஆவணக்காப்பகம் என்று மாறியது. 1969 முதல் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும்

 

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவது பற்றிய கட்டுரைகளைப் படித் தேன். தலைமுறைகளைப் பாதிக்கக்கூடியதும், தமிழ்நாட்டின் அடையாளத்தையே மாற்றக் கூடியதுமான ஒரு முடிவை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாது, வல்லுநர் குழு ஏதும் அமைத்துக் கருத்துப் பெறாது நடைமுறைப்படுத்தப்படும் இம்முடிவு சர்வாதி காரத்தின் உச்சகட்டமாகும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை வெளிப்படுத்துகின்றது. பட்டி தொட்டியெல்லாம் மெட்ரிக் பள்ளிகள் வந்ததும் ‘எங்களுக்கு இல்லையா ஆங்கிலம்’ என்ற குரல் எழும்பியதும் எல்லாப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுமென்று அரசு ஆணையிட்டது. ஒரு ஆசிரியர் பணியிடமும் உருவாக்கப்படவில்லை. எந்தப் பயிற்சியும் ஆசிரியர்க்கு அளிக்கப்படவில்லை. அன்றைய நிலை

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஓராண்டுக்கும் மேலாகக் காதலித்து கடந்த ஆண்டு (2012) அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்ட போது தொடங்கிய திவ்யா, இளவரசன் மற்றும் குடும் பத்தினரின் வாழ்க்கைப் போராட்டம் கடந்த மாதம் ஜூலை 4 அன்று இளவரசனின் உயிரற்ற உடல் தண்டவாளத்தின் அருகே கிடந்ததோடு ‘முடிவு’க்கு வந்திருக் கிறது. தலித் சாதி ஆணை வன்னியர் சாதி பெண் மணந்துகொண்டார் என்ற காரணத்தினால் திவ்யாவின் தந்தையார் சாவு, மூன்று தலித் கிராமங்கள் சூறை, கடைசியாக மணம் புரிந்துகொண்ட இளவரசன் பலி என்று தொடர்ந்து பெரும் விலை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திருமணத்தை கட்சிப் பிரச்சனையாக எடுத்துக்கொண்ட பாமக தொடர்ந்து செயற்பட்டு தாயின் மூலம் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து நீதிமன்றத்திலும் ஊடகங்களிடமும் திருமண முடிவுக்கு எதிராக அவரை

கட்டுரை
கோ. ரகுபதி  

(அ)தர்மபுரி, மரக்காணம் போன்ற பகுதிகளில் வன்னியர் பெண் - தலித் இளைஞர் காதல் புறமணத்தைத் தொடர்ந்து அனைத்து சாதி பாதுகாப்புப் பேரவை என்ற போர்வையில் உருவாக்கப்பட்டிருக்கும் தலித் வெறுப்பரசியல் இயக்கம் காதல் திருமணம் குறித்து முன்வைத்திருக்கின்ற கருத்துக்கள் அனைத்து சாதிப் பெண்களையும் இழிவுபடுத்துகின்ற. இவை அவர்களின் விடுதலைக்கும் அரசியல் சாசனம் தந்திருக்கின்ற பெண் ஆண் தனிமனித சுதந்திரத்திற்கும் எதிராக இருந்த போதிலும் அதற்கெதிரான குறிப்பிடும்படியான போரட்டங்களோ விவாதங்களோ நிகழவில்லை. தலித் வெறுப்பரசியல் இயக்கம் தலித்துகளை குறிவைத்து வன்முறையை ஏவுவதால் அது தலித், தலித்தல்லாதோர் சிக்கல் என்ற நோக்கில் விவாதங்கள் முன்வைக்கின்றது. தலித் வெறுப்பரசியல் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் பாமக, வன்னியர்

கட்டுரை
சு.கி. ஜெயகரன்  

ஆப்பிரிக்காவின் தென்கோடியில், திராட்சைத் தோட்டங்களால் போர்த்தப்பட்ட, தட்டையான டேபிள்மலை (Table Mountain)யின் அடிவாரத்தில் பரந்துள்ளது கேப்டவுன் நகரம். ஓர் இளவேனிற் காலையில், இங்குள்ள எழிலார்ந்த வளைகுடாவில் அமைந்துள்ள விக்டோரியா ஆல்பெர்ட் துறைமுகத்தில் எட்டு கிமீ தொலைவிலுள்ள ரொபன் (Robben)தீவிற்குச் செல்லவிருந்த ஒரு படகில் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் ஏறியமர்ந்தேன். கடல் அலையற்றிருப்பதால் அரைமணிநேரத்தில் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று அறிவித்தார் மாலுமி. அந்தத் தீவில் காலடியெடுத்து வைத்த டச்சு கடலோடிகள், கடற்கரையில் பல சீல்களைக் கண்டதால், தம்மொழியில் இந்தக் கடல்வாழ் விலங்கைக் குறிக்கும் ‘ரொபன்’ என்ற சொல்லையே அந்தத் தீவிற்குப் பெயராக வைத்தனர். ஐரோப்பியாவிலிருந்து கடல்வழி வந்தவ

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்  

தமிழகக் கல்வி வரலாற்றில் - ஏன், இந்திய வரலாற்றிலும் - மிக முக்கியமான, வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு, தனியார் பல்கலைக்கழகமான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றிருப்பது. அதற்கானச் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அண்மையில் நடந்த (மே 2013) சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி, 85 ஆண்டு கால ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் - 1928’ அகற்றப்பட்டு, அதற்குப் பதில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் - 2013’ செயல் வடிவம் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பல்கலைக்கழகம்; முதல் தனியார் பல்கலைக்கழகம்; அரசு மானியம் பெறும் ஒரே தனியார் பல்கலைக்கழகம் போன்ற சிறப்புகளை தாண்டி சமூகத்தில் சில பத்தாண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெற்

பத்தி மாற்றுப் பாலியல் அரசியல்
அனிருத்தன் வாசுதேவன்  

சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக ‘சென்னை வானவில் விழா’ நடைபெற்று வருகிறது. 2009ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஜூன் மாதமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த விழாவை ஒழுங்கு செய்துகொண்டு வருகிறோம். சர்வதேச மொழியில் லிநிஙிஜி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் சமூகத்தினரே நாங்கள் - Lesbian, Gay, Bisexual, and Transgender / Transexual persons. தமிழில் ‘ஓரினப்புணர்ச்சி’, ‘அலி’, ‘ஒன்பது’, ‘பொட்டை’ போன்ற கேலிச் சொற்களை நிராகரித்து, எங்களைச் சுட்டும் புதிய மொழியை ஏற்று நிற்கிறோம் - ஒரு பாலீர்ப்பு கொண்டோர், இரு பாலீர்ப்பு கொண் டோர், பால் நிலை கடந்தோர். தொடர்ந்து எங்களால் வெவ்வேறு விதங்களில் கற்பனை செய்துகொள்ளப்படும் மொழியில் சொல்ல வேண்டு

கட்டுரை
தியடோர் பாஸ்கரன்  

இந்திய உபகண்டத்தின் மீது பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசு தன் ஆக்டோபஸ் பிடியைப் பரப்பி இறுக்கிக்கொண்டிருந்த காலம். ராணுவத்தளபதி ஜெனரல் சார் லஸ்நேப்பியர் சிந்துப் பகுதியைத் தனது தகிடுதத்த வேலையால் முகமதிய அரசர்களிடமிருந்து கைப்பற்றிய பின், கல்கத்தாவிலிருந்த வைஸ்ராய்க்கு தந்தி ஒன்றை அனுப்பினார். அந்த தந்தியின் வாசகம் peccavi என்ற ஒரே சொல். இயேசு மக்களுக்குச் சொன்ன கெட்ட குமாரன் கதையில், செல்வத்தை ஊதாரித் தனமாகத் தொலைத்துவிட்டு திரும்பி வந்து தனது தந்தையின் காலில் விழுந்து. ‘பாவம் செய்துவிட்டேன்’ என்பதை லத்தீன் மொழியில் ‘பெக்காவி’ என்கிறான். அதாவது ஆங்கிலத்தில் ‘I have sinned’ என . . . இதே சொல்லை தந்தி மூலம் அனுப்பிய நேப்பியர் ‘இப்போது சிந்து பகுதி

நிகழ்வுப் பதிவு
ப்ரேமா ரேவதி  

கவிதை, கவிஞர்கள், வாசிப்பு இவற்றிற்கும் கஃபே என்று மேற்குலகில் துவங்கி இப்போது நம்முடைய மாநகரங்களிலும் பரவி வரும் காப்பிக்கடைகளுக்கும் ஒரு தொடர்பு இருந்து வந்துள்ளது. கவிஞர்கள் கொண்டாடப்படும் நாடுகளில், பல காப்பிக்கடைகளில் அங்கு வந்து கவிதை வாசித்த கவிஞர்கள் பற்றிய குறிப்பு அல்லது அவர்கள் கையொப்பமிட்ட சுவர் இன்னமும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. கவிதைகளை வாசிப்பது ஒரு அரசியல் செயல்பாடாகவும் பல நாடுகளில் இருந்திருக்கிறது, இருக்கிறது. அதுபோன்ற காப்பிக்கடைகளுக்குச் செல்லும் போதெல்லாம் கவிதைகளை நேசிப்பவர்களுக்கு ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சில்வியா பிளாத்தின் கவிதைகளை ஒரு காப்பிக்கடையில் கேட்பேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. அப்படி ஒரு அனுபவம் காலச்சுவடு ஒருங்கிணைத்தது. &lsqu

குவாண்டனமா கவிதைகள்
தமிழில்: மண்குதிரை  

இறப்புக் கவிதை ஜும்மா அல் தொசாரி என் குருதியை எடுத்துக்கொள்ளுங்கள் என் சவப்போர்வையை நீக்கி உடலின் எச்சங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் கல்லறைத் தோட்டத்தில் தனித்துக் கிடக்கும் என் சடலத்தைப் புகைப்படம் எடுங்கள் அவற்றை உலகிற்குக் கொண்டு சேருங்கள் நீதிமான்களிடம் மனசாட்சியுள்ள மக்களிடம் நியாயமானவர்களிடமும் நெறிபிறழாதவர்களிடமும் கொண்டு சேருங்கள் இந்த அப்பாவி ஆன்மாவுக்காக ‘அவர்கள்’ உலகின் முன்னிலையில் பாவங்களைச் சுமக்கட்டும் ‘அவர்களின்’ குழந்தைகளின் முன்னால் வரலாற்றின் முன்னால் பாவங்களைச் சுமக்கட்டும் இந்த நலிவுற்ற, குற்றமற்ற ஆன்மாவுக்காக அமைதியின் காவலர்கள்’ கைகளால் காயம்பட்ட இந்த ஆன்மாவுக்காக. அவர்கள் அமைதிக்காகப் போரிடுகிறார்கள் ஷகீர் அப்துர்ரஹீம் அமீ

புத்தகப் பகுதி
 

அவனும் இபெக்கும் கார்ஸ்ஸில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழப்போவதாக முடிவெடுத்து சரியாக ஏழு நிமிடங்கள் கழித்து, கா பனி கவிந்த தெருக்களின் வழியே நேஷனல் தியேட்டர் நோக்கி விரைந்துகொண்டிருந்தான். யுத்தப் பிரதேசத்துக்குத் தனியாகச் செல்பவனைப் போல அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அந்த ஏழு நிமிடங்களில் எல்லா விஷயங்களும் அதனதற்கேயுரிய தருக்கத்தின் வேகத்தில் மாறிவிட்டிருந்தன. துர்குத் பே தொலைக்காட்சியில் நேஷனல் தியேட்டர் நிகழ்ச்சிக்கான சானலை திரும்பவும் மாற்றியபோதுதான் அது நடந்தது. பார்வையாளர்களிடமிருந்து எழுந்த ஆரவாரக்கூச்சல் அப்போது அசாதாரணமாக ஏதோ நிகழ்ந்திருப்பதை உணர்த்தியது. கார்ஸ் நகர மக்களின் சுவாரஸ்யமற்ற நாட்டுப்புற நடைமுறைகளிலிருந்து ஒரேயொரு இரவுக்கு தப்பித்து வெளியே வந்திருக்கும் ச

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
ஓவியம்: செல்வம்  

சுவர் வரைந்த சித்திரம் அதி நவீனச் சித்திரங்கள் அலங்கரித்தன அரசு சுவர்களை கண்கவர் காட்சியை போகிற வருகிற புன்னகைகள் கடக்கத் தொடங்கின பிறர் மகிழ வரையப்பட்ட ஓவியங்களால் தன்னை இழந்த சுவர் உள்ளூர அழத்தொடங்கியது மெல்ல மெல்லத் தெளிவுற்று தன் மீதிருக்கும் வண்ணங்களை ஓவிய நளினத்தோடு உதிர்க்கத் தொடங்கின சுவர்கள் சித்திரங்கள் உதிர்ந்த இடத்தையும் எஞ்சிய சித்திரத்தையும் வைத்து சுவர் தனக்கான சுவடுகளை தானே தீட்டிக் கொண்டது அதை ஓவியமென்றும் கூறலாம் இதை நீங்கள் கவிதையென்று சொல்வதைப் போல. நீர்ப் பாறை ஆதியில் அவள் பாறையென்றிருந்தாள் நீலக்கடல் சூழ்ந்து நித்தம் அவளை அலைஅலையாய்க் கொஞ்சிக் கொண்டிருந்தது சிறிதும் இரக்கமில்லை கடல் மீது பெருமிதம் கொண்டிருந்தாள் கவலையற்ற கடல் மெல்ல தின்னத் தொடங்கியது பாறை

நிகழ்வுப் பதிவு
 

தமிழில் அதிகம் எதிர் பார்க்கப்பட்ட காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் மொழிபெயர்ப்பு ஜூன் 30 அன்று எளிமையாக சென்னை டிஸ்கவரி புத்தகக் கடை அரங்கில் வெளியிடப்பட்டது. இந் நாவல் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குள் விற்றுத் தீர்ந்துள்ளது. ‘அதிகம் எதிர்பார்க்கப்பட்ட’ என்று காலம்காலமாக சொல்லப்பட்டுவரும் சொற்கள் இந்த விற்பனை மூலம் அர்த்தப்படுகிறது எனலாம். சுகுமாரன் தன் உரையில் குறிப்பிட்டதுபோல மனிதர்கள் நிறைந்த, மானுடத்தன்மையுடைய நாவல் இது. அரசியல், காமம், காதல், போர் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்நாவல் ஒரு காப்பியத்தன்மை கொண்டது. விழாவின் தொடக்கமாக தியேட்டர் சீ குழுவினர் வாசிப்பு நிகழ்வு நடந்தது. வாசிப்பின் மூலம் சொற்கள் உயிர்பெற்றன. அடுத்ததாக விழாவி

புத்தக மதிப்புரை
அரவிந்தன்  

சென்னை தினக் கொண்டாட்டங்களை ஒட்டி, சென்னை நூலகச் சங்கம் நடத்திய கூட்டத்தில் 'சென்னையும் நூல்களும்' என்னும் தலைப்பில் பேச வேண்டியிருந்தது. உரையைத் தயார் செய்வதற்காகச் சில நூல்களைத் தேடியபோது ஆ. இரா.  வேங்கடா சலபதியின் 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை' என்னும் நூலில் இடம்பெற்றிருந்த சில கட்டுரைகள் நினைவுக்கு வந்தன. அந்நூலை எடுத்துப் படிக்கையில் அண்மையில் அவர் எழுதிய ஆங்கில நூல் ஒன்றின் தலைப்பு நினைவுக்கு வந்தது. ‘The Province of the Book’ என்னும் அந்த நூலை உடனடியாக வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். எதற்காகப் படிக்க ஆரம்பித்தேன் என்பது மறந்துபோகும் அளவுக்கு விறுவிறுப்பாக இருந்த அந்த நூலில் இருந்த பல தகவல்கள் என்னுடைய உரைக்குப் பயன்பட்டன என்பது முக்கியமல்ல. தமிழ் நூல்களின்

சிறுகதை
 

பத்மாவதி படுக்கையிலிருந்து எழுந்து நிலைக்கண்ணாடியின் மேலிருந்த குழல் விளக்கைப் போட் டாள். ஏற்கனவே உணர்ந்த உண் மையை மேலும் தெரிந்து கொள் பவளைப்போல கண்ணாடியில் தன் முகத்தை அசையாமல் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தாள். கண் ணாடியின் பிம்பம் இன்னொருத் தியைப் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த ஐம்பத்து நான்கு வருடங்களில் நாளுக்கு நாள் ஏற்பட்டுவரும் மாற்றத்தில் சமீபமாக ஏதோ ஒரு விரும்பத்தகாத மாறுதல் இருந்தது. (அது இத்தனை வருடங்களும் இருந்த ஒன்றுதான்.) கண்களின் கீழே மேலும் கீழும் விரல்களால் மென்மையாகத் தடவிப் பார்த்தாள். அவள் தன் கடந்த காலத்தில் கைவிட்டிருந்த எல்லா விதமான நினைவுகளாலும் ஆக்கிர மிக்கப்படும் குழப்பமான அந்த வினாடிகளில் தனது முழு உடலையும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

அஞ்சலி
திலிப் குமார்  

மூத்த பதிப்பாளரும், ‘ஈஸ்ட் வெஸ்ட் ப்ரெஸ்’ (East West Press) மற்றும் ‘வெஸ்ட்லேண்ட்’ (Westland) ஆகிய பதிப்பகங்களின் நிறுவனருமான திரு. கே. எஸ். பத்மனாபன் அவர்கள் அண்மையில் காலமானார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக புத்தகங்களோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த பத்மனாபன் தனது தனித்துவமான பார்வையாலும், எளிய ஆனால் மதிப்பு மிக்க பணிகளாலும் இந்திய - ஆங்கில பதிப்புலகில் மிக முக்கியமான ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் அசாதாரணமானது; மிகுந்த வேதனையளிப்பது. இளைஞனாக, மும்பையில் ஒரு புத்தகக்கடையில் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திரு. பத்மனாபன், கொல்கத்தா, புது தில்லி என்று பணியாற்றி, எழுபதுகளின் மத்தியில் சென்னையில் நிலைபெற்றார். பதிப்

கட்டுரை
கே. பாரதி  

நூல்புடவையும் வண்ணம் தவிர்த்த ரவிக்கையும் நகையணியாத தோற்றமும் அவரது தனித்த அடையாளம். வயதையும் அனுபவத்தையும் பறைசாற்றும் வெண்பட்டுக் கேசம். கூர்மையான அவரது பார்வை எதிரில் இருப்பவர்களை வேகமாக அளந்துவிடும். அவர் பெயர் பத்மினி கோபாலன். தமிழின் மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் அவரைத் தெரியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருவார். “பலவீனமாக உணர்ந்த தருணங்களில் ஜெயகாந்தனின் உரையைத் தேடிச் சென்று கேட்பேன். புதிய பலம் உணர்ந்திருக்கிறேன்” என்று சொல்வார். நிறைய வாசிப்பு அனுபவம் உள்ளவார். உண்மையைப் பேசுவதும் நேர்மையாக விவாதிப்பதுமான அவரது இயல்பு. கற்பூரச் சிமிழில் மிஞ்சியிருக்கும் வாசமாக அவரிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் அடையாளம் அவரது தாத்தா ரைட் ஹானரபி

புத்தக மதிப்புரை
அனார்  

‘புறப்படும் அவசரம் உனக்கு என்னையும் பறக்கச் சொல்கிறாயா பெண்ணே? ஒரு பாடல் முடிந்து மறுபாடல் தொடங்கும் ஒலி நாடாவின் இடைவெளியில் என் குரல் உறைந்திருப்பது உனக்குத் தெரியாதா? பின் ஏன் என்னைப் பாடச் சொல்கிறாய்?’ உமாவரதராஜனின் இந்தக் கவிதையை முதன் முதலில் மூன்றாவது மனிதன் இதழில் நான் படிக்க நேர்ந்ததில் இருந்து, காலப்போக்கில் அவரது சிறுகதைகளுக்கு வாசகியாகினேன். கதைகள் என்பவை என்ன? அது நமக்குள் இருந்து உருவாகின்ற ஒன்றா? அல்லது பிறரிடம் நாம் காண்கின்றவைகளா? இல்லையென்றால், நம்மிடமும் இல்லாமல் பிறரிடமும் இல்லாமல் ஒரு அரூபப் பிசாசுபோல கதை ஊரெல்லாம் அலைகிறதா? கதை என்பது ஒரு வகை திண்மமா? திரவமா? அதனால் தானா அவை நம்மை கரையச்செய்கின்றன? அதனால் தானா நமக்குள் பாரமாய் கனக்கின்றன? இந்த வகையா

நாடக நிகழ்வு
வெளி ரங்கராஜன்  

முருகபூபதியின் நாடகங்கள் ஒரு நிலவெளி அரங்கின் துடிப்புடன் மண்ணுடனும் தொன்மை வடிவங்களுடனும் உறவுகொண்டு, இயற்கை நுண்ணுயிர்களின் மொழிபேசி, இக்காலத்தின் நுண் அரசியலை உரையாடுகின்றன. ஆதி இன மக்களை அவர்களுடைய நிலங்களிலிருந்து இடம் பெயர்த்து அரசு நடத்தும் போர் அரசியலை எதிர்கொள்வதற்கான புனைவு உத்திகளை முருகபூபதியின் ‘குகைமரவாசிகள்’ நாடகம் முன்னெடுக்கிறது. மலைகளில் கனிமங்கள் உண்டு என்பதால் குகையிலிருந்து துரத்தப்பட்டு குகைமரத்தின் அதிசயங்கள் திருடு கொடுக்கப்பட்டவர்களாய் நாடக மனிதர்கள் நிலமெங்கும் அலைகிறார்கள். ஒருபுறம் பயிர்வளர்க்க முடியாத விவசாயிகள் தற்கொலை, வாழ்வு தேடிப் புறப்பட்ட உள்நாட்டு அகதிகள் அரசாங்கக் கொலைகளால் மரண பயத்துடன் ஓடி வறுமையில் பாரம் சுமப்பவர்களாய் சுரங்கத் தொ