தலையங்கம்
 

விடுதலைக்குப் பின்பு இந்தியாவின் நிலவரைபடம் பெருமளவுக்கு மாற்றி வரையப்படும் தருணம் இப்போது நேர்ந்திருக்கிறது. பரப்பளவின் அடிப்படையிலும் மக்கள் தொகை சார்ந்தும் நாட்டின் ஐந்தாவது பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்படப் போகிறது. இருபத்தொன்பதாவது மாநிலமாக தெலங்கானா மாநிலம் அமையவிருக்கிறது. இதற்கு முன்னரும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 1947 முதல் இன்றுவரையும் தேசப்படத்தின் எல்லைகள் மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்திய உதாரணங்கள் - 2000ஆவது ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டிஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட் போன்ற சிறு மாநிலங்கள். அந்தப் பிரிவினைகளுக்கு மூலமாக இருந்த நியாயமான அரசியல் காரணங்கள் மங்கலாக்கப்பட்டு நிர்வாக வசதிக்காக என்ற ‘நடுநிலை’க் காரணமே பகிர

கண்ணோட்டம்
க. திருநாவுக்கரசு  

வரலாற்றிலிருந்து நாம் அறிவதெல்லாம் வரலாற்றிலிருந்து மனிதர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதைத்தான்’ என்று ஜெர்மன் தத்துவஞானி ஹெகல் சொன்னது எல்லோருக்கும் பொருந்துவதைப் போலவே வரலாற்று வளர்ச்சியின் விதிகளைக் கண்டறிவதில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட கார்ல் மார்க்ஸின் வழிவந்ததாக கூறிக்கொள்பவர்களுக்கும் பொருந்துவது ஒரு முரண்நகைதான். சமீப காலங்களில் உலக அரங்கில், இந்தியாவில், மற்றும் தமிழகத்தில் நடந்துவரும் சில நிகழ்வுகள் மற்றும் போக்குகள் காட்டுவது இதைத்தான். எந்த அடிப்படைவாதமாக இருந்தாலும் அது மனிதகுல வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதே வரலாறு நமக்கு அளிக்கும் எளிய பாடம். அதிலும் மத அடிப்படைவாதம் மிகவும் ஆபத்தானது. ஆனால், சமூக - பொருளாதார - அரசியல் பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக அ

 

எல்லா மனிதருக்குள்ளும் சாதிஉணர்வு இருக்குமென்பது நெருக்கடியான நிலைமையில் வெளிப்படும். ஆதிக்க சாதியில் உள்ளவர்களிடம் உரிமைக்காகப் போராடினால் ஒருவன் வன்முறையாளனாகப் பார்க்கப்படுகிறான். விண்வெளியில் கால்வைத்த சம்பவத்தைப் பெருமையாகப் பேசும் நாம் இன்னும் சகமனிதனை மலம் அள்ளச்சொல்கிறோம் என்ற கசப்பான உண்மையை ஏற்க மறுக்கிறோம். பேசுவதாலும் எழுதுவதாலும் சாதி போகாது. நம்மைப்போல் சகமனிதருக்கு உணர்வு, உரிமை உண்டு என மனதால் நினைத்தால் மட்டுமே சாதி போகும். சிம்மாசனம் எமக்கு, சீரழிவு உமக்கு என்ற கொள்கையை தலித் அரசியல்வாதிகள் தகர்க்கும் போதுதான் அதை ஆதிக்க உணர்வு கொண்டவர்களால் ஏற்க முடியவில்லை. சாதி எப்போது போகும்? மனிதர் திருந்தும்போது . . . மனசாட்சி பேசும்போது . . . மனசாட்சி எப்போது பேசும்? இந்தக

அறிக்கை
 

சென்னைப் பல்கலைக் கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து ஒழுங்கு செய்த நிகழ்வில் ‘இஸ்லாம், பாலியல் மற்றும் சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் அமெரிக்க இஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையாளரான ஆமீனா வதூத் நிகழ்த்தவிருந்த கவுரவ விரிவுரை ரத்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். அதனைத் தொடர்ந்து ‘பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்கவிருந்தது. இதுவும் காவல்துறையின் உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்ற காவல்துறையின் வேண்டுகோள் காரணமாக அவரின் கவுரவ விரிவுரை மற்றும் வட்டமேசை கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டிரு

பத்தி
வே. வசந்தி தேவி  

“இந்தியக் குற்றவியல் நீதியமைப்பு பெண் கைதிகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. ஒரு வகையில் இந்தியச் சமுதாயம் பெண்களிடத்தில் காட்டும் அலட்சியத்தின் நீட்சியே இது. அலட்சியத்தின் இந்த இரு முகங்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ஆகும்”. “தற்போதுள்ள சட்டங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தி, சட்டத்திலும் தண்டனை முறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் பெண்கள் தேவையற்று, அர்த்தமற்று, சிறைப்படுத்தப்படுவதைத் தடுக்க இயலும்.” “இந்த அமைப்பைத் தூய்மைப்படுத்தி, மனிதநேயமும் உணர்வும் கொண்டதாக மாற்ற இயலும்.” - திரு.வி.ஆர்.கிருஷ்ண ஐயர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. 2002 - 2005 : மகளிர் ஆணையத் தலைவர் பொறுப்பு என்னிடமிருந்த காலம். தமிழ் நாட்டில் பெண் கைதிகள் குறித்த ச

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

எழுத்துத் திருட்டு பற்றிய கட்டுரைகளில் கட்டாயமாகச் செய்துதீரவேண்டிய காரியம் ஒன்று உண்டு. டி.ஸ். எலியட் கூறிய ஒரு வசனத்தை எப்படியாவது கட்டுரையில் தக்க இடத்தில் செருகிவிட வேண்டும். அதை நான் முதலிலேயே செய்துவிடுகிறேன். அவரின் Waste Land நூலில் இப்படி ஒரு வாக்கியம் வரும்: ‘முதிராத கவிஞர்கள் அசலை அப்படியே நகல் எடுப்பார்கள், முதிர்ந்த கவிஞர்கள் பக்குவமாகத் திருடுவார்கள்’. இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இங்கே நான் சொல்லப்போவதெல்லாம் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. இந்தக் கட்டுரையின் உட்பொருளுடன் ஒத்துப்போக நான் அங்கங்கே கேட்டவற்றையும் படித்தவற்றையும் திருடி, திருத்தி, உருமாற்றி எழுதியிருக்கிறேன். ஆங்கிலப் பாதிரியார் William Ralph Inge (1860-1954) சொன்னதுபோல எல்லா அசல் ஆக்கங்களுமே ம

 

குமாரநந்தன் கவிதைகள் உமா வரதராஜன் கவிதைகள் ரவிஉதயன் கவிதைகள் ஜி. எஸ். தயாளன் கவிதைகள் மா.காளிதாஸ் கவிதைகள்

அறிமுகம்
ஹெச்.ஜி. ரசூல்  

இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தி விவாதிக்கும் இதழ் இது. உலகின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கவனப்படுத்தும் வகையில் சமூக நோக்கு தன்னை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இருமொழி சார்ந்து எம். பௌசரை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு லண்டனில் இருந்து அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூது தர்வீஷின் கவிதைக் குரல் அட்டை முகப்பில் இடம்பெற்றுள்ளது. ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த காஷ்மிர் சிறுகதை மட்டும் ஒரு துளி இலக்கியமாக இவ்விதழில் காண முடிகிறது. இலங்கை முஸ்லிம்கள் தொடக்க காலத்திலிருந்தே எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முதன்மையானது முஸ்லிம் - பவுத்த பண்பாட்டு முரண் என மதிப்பிடலாம். பிரிட்டீஷ் காலனியாக இ

சிறுகதை
 

நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது; வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்துகொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய் உறைபனியால் போர்த்தப்பட்டுள்ளன; தன்னிடம் உதவியைத் தேடும் எவருக்கும் எதிராக ஒரு வெள்ளி அரணைப்போல வானம். எனக்கு நிலக்கரி அவசியம் வேண்டும்; விறைத்துப்போய் இறப்பதற்கு என்னால் முடியாது; எனக்குப் பின்னால் இரக்கமற்ற அடுப்பு, முன்னால் இரக்கமற்ற வானம்; எனவே, இரண்டுக்கும் இடையே ஒரு பயணத்தை நான் மேற்கொள்ள வேண்டும்; பயணத்தின் முடிவில் நிலக்கரி விற்பனையாளரிடம் உதவி கோர வேண்டும். ஆனால், சாதாரணக் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்பதை அவர் ஏற்கனவே நிறுத்திவிட்டார்; என்னிடம் ஒரு துணுக்கு நிலக்கரிகூட மி

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

மனிதனின் உலகம் மாறக் கூடியது, மகாசமுத்திரங்கள் மல்பெரிக் காடுகளாகின்றன. - மாசேதுங் 1.தொங்கும் சவப்பெட்டி யாங்சே (Yangtze) நதி உலகின் பெரிய நதிகளில் மூன்றாவது. நமது பிரம்மபுத்திராவை விட இருமடங்குகளுக்கும் மேல் பெரியது. மத்திய சீனாவில் இந்த நதி இருபுறங்களிலும்நெருக்கி நெடிதாக நிற்கும் மலைகளின் நடுவே, Three Gorges என்று அழைக்கப்படும் மலைப்பிளவுகளைக் கடந்து, செல்லும் பயணம் உலகின் மறக்கமுடியாத காட்சிகளில் ஒன்று. நதியின் பயணம் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதன் இருபுறங்களிலும் போ (Bo) என்று அழைக்கப்பட்ட மக்கள் பிறந்து, வாழ்ந்து மடிந்துகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்று இல்லை. அவர்களது சந்ததிகள் இருக்கிறார்கள் என்று சீனப் பயணப் புத்தகங்கள் சொல்கின்றன. கண்ணில் தென்படவில்லை. ஆனால

சிறுகதை
 

ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப் புறப்படும் அவசரத்தில் அவர் அடித்துவிடுவார். பின்னர்

கட்டுரை
 

திருமணமான புதிதில் ஒருநாள் மனைவியுடன் குதியுந்தில் சென்றுகொண்டிருந்தேன். முன்னே போய்க்கொண்டிருந்தவர் முட்டாள்தனமாக வண்டியைத் திடுமெனத் திருப்பினார். தன்னியலாக என் வாயிலிருந்து தேவார, திருவாசகங்கள் புறப்பட்டன. நேர்வு தவிர்க்கப்பட்டதைவிட என் மனைவிக்கு அதிக அதிர்ச்சி தந்தது என்னிடமிருந்து வெளிப்பட்ட வசவு. கெட்ட வார்த்தைகள் கல்வியற்றவர்களின் பாற்பட்டதென்றும் கற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்துவது தகாது என்பதும் (தமிழ்) பண்பாடாகக் கருதப்படுகின்றது. ‘படித்தவன் மாதிரியா பேசுகிறான்/ய்?’ என்பது அன்றாடம் நம் காதில் விழும் வினா. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரும் இடைவெளி உள்ள தமிழ் மொழியில் கல்விக்கும் கெட்ட வார்த்தைக்கும் இடையே இறுக்கம் நிலவுவதில் வியப்பில்லை. தஞ்சை மாவட்ட வ

புத்தக மதிப்புரை
க. பஞ்சாங்கம்  

தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்த

புத்தகப்பகுதி.
பிரேம்  

சென்ற நூற்றாண்டின் அதிசய மனிதர்களில் ஒருவரான காந்தியின் வாழ்வில் ஒரு துன்பியல் பாத்திர மாக மாறியவர் அவரது மகனான ஹரிலால். ஒரு மாமனிதர் என்றும் மகாத்மா என்றும் புத்தருக்குப் பிறகு இந்திய மண்ணில் தோன்றிய மகான் என்றும் ஏசுவுக்கு இணையான ஒரு அவதாரப் புருஷரென்றும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்ட காந்தியின் வாழ்வில் இறுதிவரை ஒரு துயரமாகவே இருந்து முடிந்தவர் ஹரிலால். காந்தியின் தனிப்பட்ட வாழ்வில் வேறு எவரும் இந்த அளவுக்கு அவரை அலைக்கழித்த, நிம்மதி குலைத்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதில்லை. காந்தியின் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிர்ச் சொல்லாக, ஒவ்வொரு கோட்பாட்டுக்கும் எதிர்க் கோட்பாடாக, காந்தி போதித்த வாழ்நெறிகள் அனைத்திற்கும் எதிர்நிலையாகத் தம்மை வைத்துக் கொண்டவர் ஹரிலால். காந்தி அடைந்த புகழ், ப

தொடரும் விவாதம்
D. பாலசுந்தரம்  

மின்சாரத்துறையில் இருக்கும் அரசியலைப் பற்றியதல்ல என்னுடைய வினா விடை கட்டுரை. தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையைப் பற்றியே நான் எழுதியிருந்தேன். பெரும்பாலும் தகவல்களையே கொண்ட என் கட்டுரையின் இறுதியில் மட்டுமே நான் சில கருத்துகளை கூறியிருந்தேன். அவை ‘குழப்பம் நிறைந்த சித்திரத்தையே’ தருகின்றன, அவை ‘அடிப்படை ஆதாரமற்றவை’ என்றும், கூறுகின்றார் கண்ணன் காளிங்கராயன். அவர்கள் தந்துள்ள தகவல்தான் தவறானது. மின்வெட்டு என்பது தமிழகத்திற்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. இந்தியாவிலேயே அதிகமான மின்பற்றாக்குறையினால் பாதிப்பிற்குள்ளாவது வடகிழக்கு மண்டல மாநிலங்கள்தான் (18.5% என்கிற அளவில், ஆனால் தென்மாநிலங்களில் 6.3% மட்டுமே பற்றாக்குறை உள்ளது . . . (2010-11 ஆண்டுக் கணக்கின்படி