தலையங்கம்
 

நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்; அரசே நீதிபதிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மத்தியில் சட்ட அமைச்சர் கபில் சிபல், நீதித்துறை நியமனக் கமிஷன் மசோதா, 2013 மற்றும் அரசியலமைப்புச் சட்ட திருத்த (120) மசோதா ஆகியவற்றை அண்மையில் நடந்து முடிந்த, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் இறுதிநாட்களில் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இம்மசோதா ‘புதிய பானையில் பழைய கள்’ என்ற வகையில்தான் உள்ளது. ஒருவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கே அரசியல் பின்புலம் வேண்டும். இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ ஒருவர் நியமிக்கப்பட பல சமயங்களில் ஆட்சியாளர்களின் தயவு தேவைப்படுகிறது. நெடுங்காலம

 

பன்னாட்டு நிறுவனங்களால் மென்பானங்களுக்கு இணையாகத் தண்ணீரும் சந்தைப்படுத்தப்பட்டு இரு பத்தாண்டுகள் கடந்துவிட்டன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கும் பொட்டாசியம், சோடியம், சல்ஃபேட், பைகார்பனேட், சிலிக்கான் முதலிய தாதுக்கள் கூட்டப்பட்ட குடிநீருக்கும் எந்த வேறுபாடும் உணர்த்தப்படாமலேயே பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்ட நீர், பொதுமக்களின் சமகால நாகரிக அடையாளக் குறியீடுகளில் ஒன்றாகிவிட்டது. காய்ச்சி வடித்துப் பயன்படுத்த வாய்ப்புள்ள உணவகங்கள் போன்ற இடங்களில்கூட நீரை விலைகொடுத்து வாங்கவேண்டி வருகிறது என்பது சந்தைப்படுத்தலின் வெற்றி. அரசியல் சாசனத்தின்படி தண்ணீர் மாநில அரசின் பட்டியலில் வருகிறது. மக்களின் அடிப்படை உரிமையான குடிநீருக்கு வரி விதித்துவிட்டுச் சுகாதாரமற்ற நீரையே அரசு வழங்கிவரு

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் 1989 அக்டோபரில் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ‘குர்ஆனை அணுகும் முறை’ குறித்து எழுதியுள்ள சில வாசகங்கள்: “சித்தாந்தங்களையும் கருத்தோட்டங்களையும் எடுத்துக் கூறும் ஒரு நூலல்ல இது. சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய வேதமல்ல இது. பொதுவாக மதத்தைப் பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படியுள்ள ஒரு மதநூலன்று இது . . . மாறாக ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும் இது. ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூலாகும் இது.” மேலும் அது கூறுகிறது: “எல்லாவித அசத்தியங்களுக்கும் எதிராகப் போர்க்குரல் எழுப்புமாறு அவரைத் தூண்டிற்று.” (பக். 33-34) ‘அவர்’ என்று சுட்டப்படுவது ஒரு முஸ்லிம

கடிதங்கள்
 

இஸ்லாம் அடிப்படைவாதத்தின் மேல் இடதுசாரிகள் கொண்டுள்ள தவறான அணுகுமுறை பற்றி மிகச் சரியான ஒரு பதிவை எழுதியிருக்கும் திரு. திருநாவுக்கரசு நாசுக்கான இவ்விஷயத்தை நடுநிலையாக நின்று ஆய்வு செய்திருக்கிறார். அடிப்படைவாதம் என்றால் என்ன என்பதில் வேறுபட்ட பல கருத்துக்கள் இருப்பதால் அதைப் பற்றிய ஒரு சிறு விளக்கம். {ஒரே மாதிரியான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் அரசியல், சமூகம் மற்றும் ஜாதி குறியீடுகளின் அடையாளங்களில் உருவாகும் இந்துத்துவ அடிப்படைவாதமும் வெவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை} கட்டுரையின் பரப்பை விரிவுப்படுத்தியிருக்கும். தவறாக, பக்கம் 7இல் இரண்டாம் பத்தியின் முதல் வாக்கியம், “மேற்கு வங்க இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்தி செய்வதற்காக” என

சுரா நினைவுகள்
சுந்தர ராமசாமி  

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் செயலாற்றும் என் ஆசிரிய நண்பர்களுக்கும் பிற ஆசிரியர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழியல் துறை சார்பிலும் பாரதிதாசன் அறக் கட்டளை சார்பிலும் இங்கு நடக்கவிருக்கும் ‘நவீன தமிழ்க் கவிதை: வேர்களும் விழுதுகளும்’ என்னும் கருத்தரங்கத்தின் தொடக்கவுரையாற்ற வேண்டுமென்று கருத்தரங்கப் பொறுப்பாளர்களான என் நண்பர்கள் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முதலில் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க் கவிதையை வரலாற்றுக் கண் கொண்டு பார்க்கிறபோது அதை மிகப்பெரிய கவிதைப்பூங்கா என்றுதான் சொல்ல வேண்டும். உல

சுரா நினைவுகள்
சுந்தர ராமசாமி  

சென்று சேராப் படிமம் சென்று சேராப் படிமம் ஒன்று இன்று காலையில் என்னைத் தாக்கிற்று. சவரம் முடித்து விரல் நுனிகள் செய் நேர்த்தியைத் தடவிக் கொண்டிருந்தபோது, கண்ணாடிக்குள்ளிருந்து பாய்ந்தது போல் அந்தப் படிமம் என்னைத் தாக்கிற்று அதன் சிடுக்கையும் பின்னல் அழகையும் பிடிக்க என்னிடம் மொழி இல்லை. அந்தரத்தில் பாயும் ஒளியை அணைக்க முன்னுவதுபோல் பாய்ந்து சரிகிறது என் மனம். அதைக் கூறத் தெரியாது போனால் அது என்னைக் கொன்று விடும் அதைக் கூறத் தெரிந்துவிட்டால் காலத்தின் கோலம் என்னை அழிக்கும் சென்றடையாப் படிமங்களைச் சென்றடையச் செய்வதும் சென்றடையச் செய்த பின் தற்காத்துக் கொள்வதும் கூடி வரவில்லை எனக்கு       காற்றற்ற கோணம் என் அலுவலகத்தில் எனக்கு மின் விசிறி இல்லை இருப்பினும் கோப்புக்கள் திணிக்கப்

| காலச்சுவடு |
கமலா ராமசாமி  

சாரங்கன் பெங்களூரிலிருந்து செமஸ்டர் விடுமுறைக்கு நாகர்கோவில் வரப்போகிற தேதி உறுதிப்பட்டதும் எங்கு உல்லாசப் பயணம் செல்லலாம் என்பது பற்றி வீட்டில் பேச ஆரம்பித்து விட்டோம். முகுந்தனுக்கும் சரஸ்வதி பூஜை விடுமுறைதான். கண்ணனும் மைதிலியும் அவர்கள் அலுவலகப் பணியிலிருந்து நேரத்தை ஒதுக்கி, எல்லோருமாக இரண்டு நாள் பிரயாணமாக கோட்டயத்தின் அருகிலிருக்கும் குமரகம் செல்லலாமென்று தீர்மானித்தோம். கோட்டயத்தில் சாரங்கன், முகுந்தனின் தாத்தா(சுரா) வளர்ந்த வீடு, வீட்டின் அருகிலிருக்கும் கோவில் ஆகியவற்றையும் பேரன்களுக்கு காட்டிவிட்டு வருவோம் என்று கண்ணன் சொன்னதும் என் மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது. சுரா எட்டு வயதுவரை வாழ்ந்த வீடு. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலின் கதாபாத்திரங்களில்

சுரா நினைவுகள்
செல்வம் அருளானந்தம்  

‘கூட்டம் வைக்கிறதைத் தவிர வேறை என்னத்தைக் கண்டீங்கள்?’ இது என் வீட்டில் அடிக்கடிக் கேட்கிற வசனம். நான் நாட்டை விட்டு ஓடி வந்தது கூட்டம் வைக்கத் தானோ என நானே எண்ணும் வண்ணம் இதுவரை ஆயிரக் கணக்கான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், புத்தக வெளியீடுகள், அஞ்சலி நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சிகள் எனப் பல பெயர்களில் கூட்டங்களில் பங்குபற்றி இருக்கிறேன், ஐநூறுக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நானே ஒழுங்கும் செய்திருக்கிறேன் பாரிசில் ஒரு இயக்கக் கூட்டத்தை ஒழுங்கு செய்தோம். அக்கூட்டத்தில் பேசுகின்ற அத்தனை பேச்சாளர்களையும் அந்தக் கூட்டத்திற்குச் செல்லாமல் இன்னொரு தமிழ் அரசியல் இயக்கம் மறித்தது. அத்தனைக்கும் இரண்டு இயக்கங்களுக்கும் வித்தியாசம் ஒரு ஆர் என்ற எழுத்தும் ஒரு எஸ் என்ற எழுத்தும்

சுரா நினைவுகள்
நெய்தல் கிருஷ்ணன்  

அந்த வீட்டில் ஒரு கதவு ஒருக்களித்திருந்தது. அழைப்புமணியை அழுத்திவிட்டு, ஒருக்களித்திருந்த கதவைத் தள்ளிக் கொண்டு சாய்வாக நுழைந்தேன். அடுத்துப் பெரியகூடம். உணவுமேசையில் சுந்தர ராமசாமி, கண்ணன், இளைஞன் ஒருவன். கமலாம்மா பரிமாறிக் கொண்டிருந்தார். ‘இவரைப் பார்த்துட்டு ஆட்டோவா, காரான்னு முடிவுசெய்யுங்கள்’ எனக் கண்ணன் சொல்ல, இளைஞன் திரும்பி என்னைப் பார்த்தான். ‘சந்தேகமே இல்ல, கார்தான்’ என்றான். ‘வாங்க கிருஷ்ணன் உங்களைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். இவர் புதுவையிலிருந்து வந்திருக்கிறார், பெயர் இளவேனில்’. சிரித்த முகத்துடன் என்னையும் அறிமுகம் செய்தார் சுந்தர ராமசாமி. ‘கி. ராஜநாராயணனைப் புகைப்படம் எடுத்து ஒரு ஆல்பம் கொண்டுவந்திருக்கிறார். தொடர்ந்து ச

காலச்சுவடு 150- தொடரும் பயணம்
கே.என். செந்தில்  

ஒன்றரை மணி நேரம் என்பது அவ்வளவு சலிப்பூட்டக்கூடிய கால அளவு அல்ல. எனினும், அது தினமும் தொடரும் ஒரு பயண நேரமெனில் அது அசதியையும் மந்தத் தன்மையையும் ஏற்படுத்திச் சலிப்பூட்டுமொன்றாக மெல்ல மாற்றிவிடும். அவிநாசிக்கு அண்மையிலிருக்கும் திருப்பூரி லிருந்தும் கோவையிலிருந்தும் சேர்க்கைக் கடிதங்கள் வந்திருந்தபோதும் கல்லூரிக்கென கோபிச்செட்டிபாளையம் சென்றதை தர்க்கரீதியாக விளக்கக் காரணிகள் ஏதும் என்னிடமில்லை. முன்னிருக்கைகாரிகள் தங்கள் புன்முறுவலை மறைக்கத் தெரியாமல் மறைத்து திரும்பிப் பார்க்கும்போது முடி காற்றில் பறக்க படிக்கட்டுகளில் ஒற்றைக் காலில் தொங்கி சில சாகசங்கள் செய்தவாறு செல்லும் காலைநேரப் பயணங்களைவிட உற்சாகம் வடிந்துபோன மாலை நேரப் பயணங்கள்தான் எரிச்சலைத் தரும். பேருந்தில் கல்லூரித் தோழனு

 திரை
செல்லப்பா  

சமூகச் சிக்கல்களின் மையத்திலிருந்து தனது முதல் திரைப்படமான கற்றது தமிழின் ஆதி இழையை இயக்குநர் ராம் தேர்ந்தெடுத்திருந்தார். மென்பொருள் துறையினரால் சமூகத்தில் ஏற்பட்டிருந்த அழுத்தமான தாக்கத்தை உள்வாங்கியிருந்த கற்றது தமிழ் முழுமையான திரைப்படமாகப் பரிமளிக்கவில்லை. சில குறைகளைக் கொண்டிருந்தபோதிலும் சமகாலத்தின் ஒரு பிரச்சினையை அந்தத் திரைப்படம் அலச முற்பட்டது. தங்க மீன்கள் ராமின் இரண்டாம் படம். இதன் வெளியீடு தொடர்பாக நாளிதழ்களில் பிரசுரமாகியிருந்த விளம்பர வாசகங்கள் இதை அதீதப் புனைவு வரிசைப் படமாக எண்ணவைத்திருந்தன. ஆனால் திரைப்படத்தை எதிர்கொண்ட மனத்தில் இப்படம் உருவாக்கிய அதிர்வுகள் அசாதாரணமானவை. நிசப்த அரங்கின் திரையில் அலைந்துகொண்டேயிருந்த தங்க மீன்கள் இதுவரையான தமிழ்த் திரைப்படங்கள்

பத்தி மாற்றுப் பாலியல் அரசியல்
அனிருத்தன் வாசுதேவன்  

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மாற்றுப் பாலியல் கொண்டோரது உரிமைக்கான அரசியல் பல நிலைகளில் செயல்பட்டு வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்துடனான ஒரு தொடர் போராட்டமாக அது உருவெடுத்திருப்பதும் இந்த ஆண்டுகளில்தான். இந்தக் குறிப்பிட்ட போராட்டத்தின் வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம். இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 377: எவரொருவர் தன்னிச்சையாக ஆண், பெண் அல்லது விலங்குடன் இயற்கைக்கு மாறான புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ, அவருக்கு வாழ்நாள் முழுதிற்குமான சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டுச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். “இயற்கைக்குப் புறம்பான குற்றங்கள்” (Unnatural Offences) என்ற பிரிவின் கீழ் வரும் இந்தத் தண்டனைச் சட்டம் 1860ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் லார்ட் மெ

சிறுகதை
 

கோஞ்சி ரயில் நிலையத்தில் சூவோ மார்க்கத்திலிருந்து வரும் அதிவிரைவு ரயிலில் டெங்கோ ஏறினான். பெட்டி காலியாக இருந்தது. அன்றைய தினத்தை செலவழிப்பதற்கான எந்தத் திட்டமும் அவனிடம் இல்லை. எங்கே செல்வது என்பதோ, என்ன செய்வது என்பதோ (அல்லது செய்யாமல் இருப்பதோ) முழுக்க முழுக்க அவன் விருப்பம். காற்று வீசாத கோடைத் தினம் ஒன்றின் காலை பத்துமணிக்கு வெயில் உக்கிரமாகவே இருந்தது. ரயில் ஷிஞ்சூகு, யோட்சுயா, ஒச்சானோமிசு நிலையங்களைக் கடந்து இறுதியில் டோக்கியோ சென்ட்ரல் ஸ்டேசனில் வந்து நின்றது. எல்லோரும் இறங்கியபின் கடைசியாக இறங்கினான். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து எங்கே போவதென யோசித்தான். “எங்கு வேண்டுமானாலும் நான் போகலாம்” என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான். “இன்று வெயில் அதிகமாக இருக்கு

புத்தகப் பகுதி
நோம் சாம்ஸ்கி  

‘மக்கள் தொடர்பை’ ஒரு தொழிலாக முன்னெடுத்ததில் அமெரிக்கா ஒரு முன்னோடி. மக்கள் தொடர்பின் முன்னோடித் தலைவர்கள் குறிப்பிட்டபடி, ‘பொதுமக்களின் மனம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என்பது அவர்களுடைய வெளிப்படையான முடிவு. 1920களில் கொஞ்ச காலத்திற்கு வியாபாரிகளின் ஆட்சிக்கு மக்களை முழுமையாக அடிபணியச் செய்வதில் ‘மக்கள் தொடர்பு’ வெற்றி பெற்றது. 1930களில் காங்கிரஸ் குழுக்கள் புலன் விசாரணை செய்யுமளவுக்கு இது பச்சையாக நடந்தது. அவ்விசாரணையிலிருந்துதான் நமக்கு அவசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன. ‘மக்கள் தொடர்பு’ ஒரு மாபெரும் தொழில். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக அவர்கள் பல ஆயிரம் கோடிகளைச் செலவிடுகிறார்கள். ‘பொதுமக்கள் மனங்களைக் கட்டுப்படுத்துவது’தான்

 

சில்வியா பிளாத் கவிதைகள் அனார் கவிதைகள் அழகுநிலா கவிதைகள் சக்திஜோதி கவிதைகள் தேன்மொழி தாஸ் கவிதைகள் ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

அஞ்சலி
 

1995ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு பெற்ற அயர்லாந்துக் கவிஞர் ஸீமஸ் ஹீனி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி மறைந்தார். மறைவின் போது அவருக்கு எழுபத்து நான்கு வயது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய எழுபதாம் பிறந்த நாளை ஒட்டி எடுக்கப்பட்டத் தொலைக் காட்சி ஆவணப் படத்துக்காக அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளில் ஒன்று மரணத்தைப் பற்றியது. “உங்கள் கல்லறையில் என்ன வாசகம் எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”. தனது நண்பரும் நோபெல் பரிசு பெற்றவருமான போலிஷ் மொழிக் கவிஞர் செஸ்லாவ் மிலோஸுக்கான இரங்கற் செய்தியாகச் சொன்ன வாசகமே தனக்கும் எழுதப்பட வேண்டும் என்று பதில் அளித்தார் ஸீமஸ் ஹீனி. சோஃபாகிளிஸின் ‘ஈடிபஸ்’ நாடகத்தில் வரும் வாசகம் அது. கிரேக்க மொழியிலிருந்து அதை ஸீமஸ்தான