தலையங்கம்
 

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நவம்பர் 15முதல் 17வரை நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டுமா வேண்டாமா என்பது பற்றிக் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக ஒரு பன்னாட்டு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்துத் தீர்மானம் எடுக்க முடியாமல் இந்திய அரசு தடுமாறும் சூழ்நிலை உருவாகியிருப்பது ஒருவேளை வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டார்கள். அந்தக் கொடூர அழித்தொழிப்புப் போர் நடந்து ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த இனம் அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற முடியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவ

கடிதங்கள்
 

பத்தாண்டுக்கு முன்பு சு.ரா.வின் நவீன தமிழ்க் கவிதை பற்றிய பதிவு காலத்தால் நிலைத்து நிற்பது (சு.ரா. நினைவுகள்). ‘கவிஞர்கள் கவிதைக்குள் மௌனங்களை வைத்துக்கொள்ள பெரும் விருப்பம் கொண்டவர்கள்’ என்பது உச்சம். காலத்திற்கு ஏற்ற கட்டுரை. மாற்றுப் பாலியல் அரசியல். LGBT, MSM, என்று எத்தனையோ சொல்லாடல்களைப் பயன்படுத்தி, ஒருபாலீர்ப்பாலர்களை அடையாளப் படுத்தினாலும் ‘இயற்கைக்கு மாறான புணர்ச்சி’ என்கிற அச்சுறுத்தும் குற்ற உணர்வைச் சமுதாயம் வெறுக்கவே செய்யும். அழகு நிலா கவிதைகளில் ‘நச்’ இருந்தது. அயர்லாந்துக் கவிஞர் சீமஸ் ஹீனி விரும்பும் கல்லறை வாசகம் “அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் மகத்துவமானவராகவே சென்றார்” என்பது, சாகாவரம் பெற்ற அனைத்துக் கவிஞர்

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

சிலநாட்களுக்கு முன்னால் டென்னிஸ் ஹட்ஸன் எழுதிய ‘கடவுளின் உடல்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் பரமேச்வர விஷ்ணுக் கிருஹம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள்கோயிலைப் பற்றிய புத்தகம் அது. கோயிலில் இருக்கும் சிற்பங்களில் முக்கியமான ஒன்று நந்திவர்ம பல்லவனின் மேற்பார்வையில் இருவர் (ஒருவர் தலைகீழாகக் கழுவேற்றப்படுகிறார்) கழுவேற்றப்படுவதைக் காட்டுகிறது. கழுவேற்றத்தைப் பற்றிய முதல் தமிழ்ப்படைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்தச் சிற்பத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பேசப்படும் மற்றொரு கழுவேற்றத்தைப் பற்றிய நினைவு வந்தது. எட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தி தமிழில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. வாயில்

கட்டுரை
என்னெஸ்  

நோபெல் இலக்கியப் பரிசு பெறும் சாத்தியமுள்ள எழுத்தாளர்கள் என்று வாசகர்கள் பந்தயம் கட்டும் பெயர்களில் ஒன்றாகக் கனேடிய எழுத்தாளர் ஆலீஸ் மன்றோவின் பெயர் முன்வைக்கப்பட்டதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மான் புக்கர் சர்வதேசப் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. அதை முகாந்திரமாக வைத்து, கனேடிய இலக்கியத்துக்கு நோபெல் பரிசு அளிக்கப்படுமானால் அது நிச்சயம் ஆலீஸ் மன்றோவுக்குத்தான் என்று ஆரூடம் சொல்லப்பட்டது. நோபெல் பரிசளிப்பு நடவடிக்கைகள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படுபவை. அதனால் இலக்கிய ஆர்வலர்களின் முன்அறிவிப்புகள் பெரும்பாலும் தவறாகவே அமைந்து விடுகின்றன. 2013ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என்று வாசகர்கள் முன்மொழிந்த பெயர்கள் ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி, சிரியாவைச் சேர்ந்த அரபு

பத்தி
வே. வசந்திதேவி  

2003 ஆகஸ்ட் மாதம் ஒரு நாள். ஆணையத்தில் எனது அலுவலறைக்குள் முப்பது பெண்கள் கொண்ட ஒரு கூட்டம் நுழைந்தது. வயலில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, பஸ் ஏறி வந்தது போல் இருந்தது. நகரத்தின் நிழலே படாத மக்கள். பயணத்தின் களைப்பு, தூசு படிந்த, கலைந்த கூந்தல், கசங்கிய உடை, புதிய இடம் அளித்த மிரட்சி, சோகமும் ஆத்திரமும் கொப்பளித்த முகம். முப்பது குரல்களும் பிரச்சினையின் அறிமுகத்தைச் செய்தன. அவர்கள் கடலூர் மாவட்டத்தின் ஒரு கோடியில் ஒதுங்கியிருந்த கிராமத்தினர். கிராமத்தின் பெயர் நான் அதுவரைக் கேட்டதில்லை; அதற்குப் பின் மறந்ததில்லை. பல்லவ மன்னன் ஒருவனின் துணைவியின் பெயர் கொண்ட கிராமம். ஒரு நாளில் ஒரே முறை வரும் பேருந்துதான் வெளி உலகுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு. அனைவரும் தலித்

பதிவு
ஸ்டாலின் ராஜாங்கம்  

 நண்பர்களோடு கரையாம்பட்டி நடுப்பட்டி என்னும் ஊரில் சென்று இறங்கியதும் எங்களுக்கு மேலே மரத்தில் கட்டப்பட்டிருந்த கேமராவை நண்பர் ஒருவர் காட்டினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் பிரிந்து சென்றால் இவ்வூரை அடைந்து விடலாம். அன்றைக்கு வழியெங்கும் போலீஸ் நின்றாலும் ஊருக்குப் புதியவர்களான எங்களை ஏதும் அவர்கள் கேட்கவில்லை. ஏனெனில் அவர்களைவிட துல்லியமாக கேமரா எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. நடுப்பட்டியைச் சேர்ந்த 350 தலித் குடும்பங்கள் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மொத்தமாக ஊரைக் காலி செய்துவிட்டு அருகிலிருந்த சங்கால்பட்டி மலையில் குடியேறும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது தமிழ் நாளேடுகளில் உள்ளூர் பக்க

பகிர்வு
எம். பௌசர்  

வடக்கு மாகாணத் தேர்தல் அறிவிப்பு வெளியானது தொடக்கம் தேர்தல் முடிந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல், ஊடகவெளி அதீத உணர்ச்சியாலும் எதிர்/ஆதரவு கருத்துகளாலும் அறிக்கைகளாலும் நிரம்பி வழிகிறது. இத்தேர்தல் முடிவுகளின் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பது குறித்த மதிப்பீட்டை முன்வைப்பது மட்டுமே இப்பத்தியின் நோக்கமாகும். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முற்றாக அழித்தொழித்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களை இனப்படுகொலை செய்துவிட்டு, தமிழ் மக்களுக்கு எந்த அதிகாரப் பகிர்ந்தளிப்பையும் வழங்க முடியாது என அறிவித்தது இலங்கை அரசு. அடக்குமுறைக் கூறுகளுடன் அதிகார மேலாண்மையும் கர்வமும் கொண்டு கருத்தியல் அடிப்படையிலும் நடைமுறையிலும் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வரும் இலங்கை அரசாங்கத்தின்

கட்டுரை
தொ. பத்திநாதன்  

இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஏராளமான அகதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர். ஜூன் 20ஆம் திகதி அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவுகூரப்பட்டது. பின்னர் 2000ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி ‘உலக அகதிகள் தின’மாக அறிவிக்கப்பட்டது. தம் நாட்டில் பல்வேறு மோதல்களில் சிக்கி வாழமுடியாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்த, பல்வேறு இன்னல்களுடன் வாழும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அகதிகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அகதி என்பது இனம், சமயம், தேசிய இனம் ஆகிய குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாக குற்றம் சாட

நிகழ்வு
வெ. முருகன்  

நம்முடைய இன்றைய வாழ்வும் வாழ்வு பற்றிய புரிதலும் கடந்த காலத்தின் தொடர்ச்சியில் அமைந்திருக்கிறது. இந்தியா, குறிப்பாகத் தமிழகம் இன்று பெற்றிருக்கும் அடையாளங்களின் உருவாக்கத்தினைக் காலனிய காலத்தில் கண்டுணர முடிகிறது. எந்தவொன்றிலும் மரபின் தொடர்ச்சி இருக்கின்றது எனினும் இன்றைய பொருளிலான மாற்றங்களுக்கான விவாதங்களும் நிலைபேறும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருமளவு நடந்தன. அதன் விளைவுகளைச் சாதகமாகவோ, பாதகமாகவோ நாம் சந்தித்து வருகிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டைப் புரிந்துகொள்வதற்கான ஆவணங்கள் தமிழில் அண்மைக்காலமாக நிறைய வெளிவந்துள்ளன. இந்தப் பின்னணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பியல் மையமும் காலச்சுவடு இதழும் இணைந்து 2013 செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் மத

வாசிப்பு
நித்யஸந்யாஸ்  

பழந்தமிழ்க் கலைகளும் நீட்சியும் பதிப்பாசிரியர்: முனைவர் தே.வே. ஜெகதீச்ன பக்கம்: 230; விலை: 200/- வெளியீடு: காவ்யா 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் சென்னை 600 024 தொ.பேசி: 044 23726882 ஆடல், பாடல், இசை ஆகிய கலை வடிவங்கள் மொழிக்கும் முந்தைய தொன்மை உடையவை. வழிபாடு மற்றும் கேளிக்கைகளுக்காக உருவான கலைகள் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு அவற்றின் உன்னதமான மேன்மையை அடையும் விதமாக, நுட்பமான இலக்கணங்கள் அவற்றிற்கு வகுக்கப்பட்டு அவை ஒழுங்கமைவு உடைய வடிவ நேர்த்தி கொண்டன. ‘பழந்தமிழ்க் கலைகளும் நீட்சியும்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் சங்ககால தமிழ் பண்பாட்டுப் பரப்பை அறிய உதவும் நுழைவாயில்களாக அமைந்து, தமிழ் நிலத்தின் பழமையான ஆடல்கள், கூத்துகள்

கட்டுரை
பிரசாந்திசேகர்  

இனி இந்த இரவு தீர்ந்து போகாது! என்னை வரைகிறேன். உன்னையும் வரைகிறேன். எனக்கு ஒரு இதயம் வரைகிறேன். உனக்கும் ஒரு இதயம் வரைகிறேன். ஒரு நரம்பு வரைகிறேன். அது என்னையும் உன்னையும் இணைக்கிறது. உனக்கும் எனக்கும் உள்ள உறவு இந்த நரம்பு. இதனூடே பேசிக்கொள்வோம். சிரிப்போம். அழுவோம். வாழ்வோம்! வா, ஃப்ரீட ஃப்ரீடா ஒரு முறை சொன்னாள்: “இந்த உலகில் நான் மட்டுமே விசித்திரமானவள் என்று நினைத்ததுண்டு. ஆனால் இந்த உலகில் எத்தனை மனிதர். அதில் யாரோ ஒருவர் என்னைப்போல இயல்பை மீறி குறைகளுடன் இருப்பார். நான் அந்த ‘ஒருத்தியை’ நினைத்துப் பார்ப்பேன். வெளியில் இருந்தபடி அவளும் என்னைப் பற்றி நினைப்பாள். சரி, அந்த ‘அவள்’ நீயானால், இதைப் படிப்பாயானால், இது உண்மை. நான் இங்கு இருக்கிறேன்! உன்

உரை
சக்கரியா  

சாகித்திய அக்காதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னக இளம் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொள்வதில் மிகுந்த பெருமையும் கௌரவமும் அடைகின்றேன். குறிப்பாக, சாகித்திய அக்காதெமியின் துணைத் தலைவராக விளங்கும் இலக்கிய மேதை, முனைவர் சந்திர சேகர கம்பார், திரு. கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, திருமதி. கரபி தேகா, மற்றும், வடகிழக்கு மற்றும் தென்னக மாநிலங்களிலிருந்து வந்திருக்கின்ற திறமிக்க இளம் தலைமுறை எழுத்தாள அணியினர் முன்னிலையில் உரையாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். இங்கே வந்திருக்கும் பிற இலக்கிய ஆளுமைகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மதுரைப் பெரு நகரில் சக இந்திய எழுத்தாளர்களைச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளும் அரிய வாய்ப்பை

சிறுகதை
சந்திரா இரவீந்திரன்  

மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களின் முன்னால் நகர்ந்துகொண்டிருந்தன! கண் இமைக்கும் நே

கவிதைகள்
 

தாலிபான் என்ற சொல், இன்று தீவிரவாதத்துக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் மறுபெயராக மாறியுள்ளது. தமது நாட்டின் மீதும் அதன் வாயிலாகப் பண்பாட்டின் மீதும் அந்நிய சக்திகள் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிரான பாதுகாப்பு இயக்கமே தாலிபான். ‘மனிதர்களுக்காவே மதம்’ என்ற அடிப்படையை வசதியாக மறந்து ‘மதத்துக்காவே மனிதர்கள்’ என்ற ‘நம்பிக்கை’யைக் கொள்கையாகக் கொண்ட இந்த இயக்கம், அதை நிலைநாட்டுவதையே தனது குறிக்கோளகக் கருதியது. மனித உயிர்களைப் பலிகொண்டது; பலி கொடுத்தது. அப்படிப் பலியானவர்களும் பலியாகத் தயாராக இருந்தவர்களுமான ‘முஜாஹித்தீன்கள்’ கவிதை எழுதுபவர்களாகவும் இருந்திருப்பது வியப்பளிக்கும் முரண். முதலில் சோவியத் ஆக்கிரமிப்பின்போதும் தொடர்ந்து அமெரிக்க முற்று

புத்தக மதிப்புரை
மலர்விழி ஜெயந்த்  

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் (சித்திரங்களில் அம்பேத்கர் வாழ்க்கைச் சம்பவங்கள்) தமிழில்: அரவிந்தன் பக்.: 108; விலை: 245 வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகாகோவில் 629 001. அம்பேத்கரின் வாழ்வைச் சொல்ல எத்தனிக்கும் எந்த எழுத்தும் வெறும் ஒரு மாமனிதனின் வாழ்கை சரித்திரமாக இருக்க வாய்ப்பில்லை. நிகழ்காலத்தில் தொடரும் அம்பேத்கரிய அரசியலை சாதி ஹிந்து மதத்தின் இணைபிரியா அங்கமாய் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியதை - இவ்வாறாக ஒரு அரசியல் விமர்சனத்தை முன்வைப்பதாக மாத்திரமே அமையக்கூடும். அம்பேத்கர் என்ற ஒரு தனிநபரின் சரித்திரத்தின் மூலம் அம்பேத்கரிய அரசியலை விவரிக்க முற்படும் பீமாயணத்தில் அந்தக் கதையைச் சொல்லும் விதத்திலும் அந்த அரசியலை முன்னெடுக்க முயற்சி செய்கிறது. படங்கள் மூலம

புத்தக மதிப்புரை
குலசேகரன்  

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் (கவிதைத் தொகுப்பு) பெருமாள்முருகன் காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை நாகாகோவில் 629 001. பக்கங்கள் 96; விலை75 பெருமாள்முருகனின் கவிதைகள், சாதாரணமாக நேரும் அனுபவங்களின் வாயிலாகப் பெரும் தரிசனங்களை அடைவதைக் கவித்துவமாகக் கொண்டவை என்று சொல்லலாம். அன்றாட வாழ்க்கையில் கிடைக்கப்பெறும் எளிய சம்பவங்கள், காட்சிகள், எண்ணவோட்டங்கள் பாடுபொருட்களாயிருக்கின்றன. எழுதியவரின் தீர்க்கமான பார்வை கலந்த அசலான அனுபவங்களுள்ள கவிதைகளாயிருக்கின்றன. இவற்றில் மனிதனின் வாழ்தலுக்கான இயல்பூக்கம் உள்ளுறைந்திருக்கிறது. அதற்கான வழிமுறைகளாக இயற்கையோடு இயைந்திருக்க முனைதல், இளமைக்காலத்தை மீட்டெடுத்தல், அரசதிகாரத்தையும் பெரும் பொருளாதாரச் சக்திகளையும் பழித்தல் போன்ற செயல்பாடுக

பதிவு
கிருஷ்ண பிரபு  

நவீன உலக கிளாசிக் வரிசை’யில் ஓரான் பாமுக்கின் ‘பனி’ நாவலையும் (தமிழாக்கம்: ஜி. குப்புசாமி) ‘கிளாசிக் தன்வரலாறு வரிசை’யில் ஹினெர் சலீம் எழுதிய ‘அப்பாவின் துப்பாக்கி’ நினைவுக் குறிப்புகளையும் (தமிழாக்கம்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்) காலச்சுவடு பதிப்பகம் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 20ஆம் தேதி சென்னையில் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இசைக்கலைஞர் சுனந்தா கலந்துகொண்டு, கர்நாடக மெட்டில் இசையில் தமிழ் பாடலைப் பக்கவாத்தியங்கள் இன்றி இனிமையாகப் பாடித் துவக்கிவைத்தார். பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா . . .” பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. ஃப்ரெஞ்சு

கட்டுரை
யோபேன்  

பேயோன் ஆனந்தவிகடனில் எழுதிவந்த பத்தி நின்றுவிட்டது. பலபேர் எழுதுபவை, பல பத்திரிகைகளில் நின்றிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் எனக் கேட்கலாம். நகைச்சுவையான எழுத்து நகைச்சுவையான பத்திரிகையில் தொடராததுதான் ஆச்சர்யம். இந்த எழுத்து, அதனோடு முரணிவிட்டது எவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. பொதுத் தமிழ்ச் சமூகம் நகைச்சுவையை அணுகும் முறை பற்றி சிந்திக்க இது தூண்டி உள்ளது. ஆனால் இக்கட்டுரை அது பற்றி அல்ல, பேயோனின் நகைச்சுவையைப் பற்றி மட்டும் இது பேசுகிறது. சிந்திப்பது சிந்தனையாளர்கள் வேலை, மற்றவர் வேலையில் தலையிடுவது தவறு மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். குற்றம் செய்தால் தண்டனை உண்டு என்று சும்மாவாவது சொல்லி வைக்க வேண்டும். பயந்தவர்கள் செய்யாதிருப்பார்கள். அதுவரை லாபம். எப்போதும் நகைச்சு

குறுக்கெழுத்து
சுகுமாரன்  

மேற்கோள் - 1 “உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது” என்றார் கடவுள். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையிலிருந்து. அறிவுசார் சொத்துரிமை வழக்கில் கடவுள்களுக்குத் தொடர்பு உண்டா? கேள்வி சிக்கலானது. பதில் எளிமையானது. உண்டு. பின்வரும் சம்பவம் ஆதாரம். சம்பவத்தில் இரண்டு தேவியர்கள் மோதிக் கொண்டார்கள். ஆற்றுகால் அம்மையும் சக்குளத்து அம்மையும். திருவனந்தபுரம் ரயில் நிலையத் திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஆற்றுகால் பகவதி ஆலயம். மதுரையை எரித்துச் சாம்பலாக்கிய கண்ணகி கோபம் தணிந்து கன்னியாகுமரி மார்க்கமாக மதுரைக்குச் செல்லும் பயணத்தில் கிள்ளியாற்றங்கரையில் இளைப்பாற நின்ற இடத்தில்தான் ஆலயம் அமைந்தி

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

இந்தக் கட்டுரை பதினொரு மாதம் பிந்தி வெளிவருகிறது. இந்த ஆண்டு சுவாமி விவேகானந்தர் பிறந்து 150 வருடங்கள் ஆகின்றன. அவர் பிறந்த தினம் ஜனவரி 12, 1863. இங்கே நீங்கள் வாசிக்கப் போவது சுவாமி விவேகானந்தர் பற்றிய ஒரு விசாலமான கூர்ந்தாராய்வு அல்ல. ஆனால் அவர் கலந்து கொண்ட ஒரு சர்வதேசக் கூட்டம் பற்றியது. விவேகானந்தர் என்றதும் ஞாபகத்திற்கு வருவது அவர் 1893இல் சிக்காக்கோ நகரில் சமயங்களின் பிரதிநிதி சபையில் (Parliament of Religions) ஆற்றிய அந்தப் பேருரை. எழுபது வருடங்கள் கழித்து ‘ஒரு நாளைக்கு நாங்களும் விடுபடுவோம்’ என்று மார்டின் லூதர் கிங் ஜுனியர் வாஷிங்டனில் ஆற்றிய உடல் சிலிர்க்கச் செய்கிற, மின் ஊட்டும் பிரசங்கம் ஏற்படுத்திய செயல்விளைவு சுவாமிகளின் பேச்சுக்குச் சரிநிகரானது. ஒன்று, அ

உள்ளடக்கம்