தலையங்கம்
 

2011 செப்டம்பர் 11 இல் பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் கூடிய தலித்துகள்மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் ஆறு பேர் கொல்லப்பட்டனர். எளிமையாக கையாண்டிருக்கக்கூடிய சாலை மறியலை பலரின் உயிரைப்பறித்து கலைத்தது காவல்துறை. தொடர்ந்து அரசாலும் அரசியல் கட்சிகளாலும் ஒருதலைப் பட்சமாக நடத்தப்படுவதாக உணரும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் அரசியல் பிரக்ஞையின் அடையாளமாக இம்மானுவேல் நினைவுநாளில் கூடுகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக அங்கு திரளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் அத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதன் காரணமாக உருவான எதிர்ப்புணர்வைத் தணிப்பதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்தது. இந்த விசாரணைக் கமி

கண்ணோட்டம்
கண்ணன்  

காமன்வெல்த் மாநாடு எதிர்பாராத திருப்பங்களோடு முடிவுக்கு வந்திருக்கிறது. மாநாட்டில் பங்கேற்பது அல்லது புறக்கணிப்பது என்ற எதிர்நிலைகள் முக்கியத்துவம் இழந்து பங்கேற்பது எப்படி அல்லது புறக்கணிப்பது எங்ஙனம் என்ற நடைமுறைச் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. எப்படி ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கலாம் என்பதைப் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் செய்து காட்டியிருக்கிறார். எப்படி அறைகுறையாகப் புறக்கணிக்கக் கூடாது என்பதை இந்தியா நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இலங்கை அரசு இந்த மாநாட்டை நடத்தியதின் நோக்கங்கள் புரட்டிப் போடப்பட்டுவிட்டன. ராஜபக்ஸ எதிர்பார்த்தது போலக் காமன்வெல்த் மாநாடு அவரைப் போர்க் குற்ற வரலாற்றிலிருந்து விடுவிக்கவில்லை. போர்க் குற்றத்திற்கும் இனப்படுகொலைக்கும் பூந்திரையாக இ

கட்டுரை
ய. மணிகண்டன்  

மகாகவி பாரதியின் எழுத்துகள் அவர் பணிபுரிந்த ‘சுதேசமித்திரன்’ இதழிலும் அவர் முன்னின்று செயல்பட்ட, நடத்திய ‘இந்தியா’ முதலிய இதழ்களிலும் இடம்பெற்றன. வி.கிருஷ்ணசாமி ஐயர் உதவியாலும் பரலி சு.நெல்லையப்பரின் வெளியீட்டு முயற்சியாலும் சுதேசமித்திரன் புத்தக சாலைப் பிரிவின் முயற்சியாலும் அவர் படைப்புகள் குறுநூல்களாக அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்தன. இறுதிக் காலத்தில் தமது படைப்புகளையெல்லாம் தொகுத்து நாற்பது தொகுதிகளாகத் ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ என்னும் அமைப்பின் வாயிலாக வெளியிட பாரதி மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை. பாரதியின் மறைவுக்குப் பிறகு, 1925ஆம் ஆண்டைய மதிப்பில் நூறு ஏக்கர் நிலம் வாங்கக்கூடிய அளவிற்குப் பணம் தந்து அவருடைய படைப்புகளையெல்லாம் வெளியிடும் உ

நாடகம்
ஸி. சுப்பிரமண்யபாரதியார்  

நாடகப்பாத்திரங்கள் சூரியகோடி - அமரபுரத்துஅரசன் வஜ்ரி - அந்த அரசனுடைய ஒரேகுமாரன் நித்தியராமன் - அமரபுரத்தில் ஒரு பெருஞ்செல்வன் ரணதீரன் - அந்த நாட்டுக் குதிரைப்படைத் தலைவரில் ஒருவன் சாத்தான் - அமரபுரத்துக் காளிகோயில் பூசாரி. சந்திரவர்மன் - அங்கதேசத்து அரசன்மகன்; வஜ்ரிக்குத் தோழன் வஜ்ரலேகை - நித்தியராமன்மகள்; வஜ்ரியின் காதலி மந்திரிகள், சேனாதிபதிகள், வேலையாட்கள், தோழிகள் முதலியோர். காட்சி - 1 [அமரபுரத்தில் மிகக் கீர்த்தியும் செல்வமும் உடைய காளிகோயிற் புறத்தே விரிந்த பூஞ்சோலை; சுனைகளும் தடங்களும் நீரோடைகளும் நெருங்கி ஒளிர்வது. அங்கு ஒரு லதாமண்டபத்தில் வஜ்ரலேகை தனியே வீற்றிருக்கிறாள். முன் மாலைப்பொழுது; மிக அழகிய வெயிலொளி.] வஜ்ரலேகை : (தனக்குள்ளே பேசிக்கொள்ளுகிறாள்.) நல்லையடா நீ! விதியே, நல

அறிக்கை
சி.லட்சுமணன், ஸ்டாலின்ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம்  

சாதிசார்ந்து உருவாகி வரும் சமகால மாற்றங்களை உள்வாங்கி சாதி இன்று என்ற விரிவான அறிக்கையை தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் (Intellectual Circle for Dalit Action, ICDA) சார்பாக சி.லட்சுமணன், ஸ்டாலின்ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். விரைவில் வெளிவரவிருக்கும் அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள். தமிழ்ப் பகுதி சார்ந்து சாதிகளின் தோற்றம் காலம் தோறும் அவை பெற்று வந்த மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்த ஆய்வுகள் ஏதும் இல்லை. திராவிட இயக்கம் உருவாக்கித் தந்த பிராமணர் ஜ் பிராமணரல்லாதார் என்ற எளிமைப்படுத்தப்பட்ட எதிர்வுதான் சாதி பற்றிய புரிதலாக இன்று வரையிலும் செல்வாக்கோடு நிலவி வருகிறது. சாதியின் இன்றைய எதார்த்தத்தை முழுமையாகப்

திரை
ரதன்  

முப்பது வருடங்களுக்கு முன்பு அகதியாக மொன்றியலில் உள்ள மிராபல் விமான நிலையத்தில் தை மாத முற்பகுதியில் வந்திறங்கியபோது காலை பத்து மணி. அகதி விசாரணைகள் முடிந்து அங்கிருந்த ஒரு கறுப்பின மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் மொன்றியல் நகருக்கு வந்தபோது மாலை நான்கு மணி. நான் மொன்றியல் நகரில் இறங்கியபோது குளிர் பூச்சியத்துக்கு கீழே 27 பாகை எனப் பேருந்து நிலைய அறிவித்தல் பலகை காட்டியது. அப்போது என்னால் அந்தக் குளிரின் கொடூரத்தை உணரமுடியவில்லை. என்னிடம் அப்போது இருந்தது இரண்டு கனடிய டொலர்கள். அங்கு நின்றவர்களிடம் விலாசத்தைக் காட்டி அரைகுறை ஆங்கிலத்தில் வினவி மற்றொரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். புதிய இடம், கடும் குளிர், புதிய மொழி நான் அணிந்திருந்த ஆடைகளோ உஷ்ணப் பிரதேசத்துக்குரியவை. அறிவித்தல் விளம்ப

ஆடுகளம்
எஸ். கோபாலகிருஷ்ணன்  

இந்திய கிரிக்கெட் அணி 1983இல் உலகக் கோப்பையை வென்றது. அதுவரை சோப்ளாங்கியாக இருந்த அணி உலக கிரிக்கெட் அரங்கில் முதலிடம் பிடித்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அதன்பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பும் பின்னரும் இந்தியாவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்களே ஒழிய அது மிகச் சிறந்த அணியாக இருந்ததில்லை. 80களில் சுனில் காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், திலிப் வெங்சர்க்கார் போன்ற மிகச் சிறந்த மட்டையாளர்களும் கபில்தேவ், மொஹீந்தர் அமர்நாத், மனோஜ் பிரபாகர் போன்ற ஆல்ரவுண்டர்களும் இருந்தார்கள். சந்தீப் பாட்டீல், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இந்தியர்களுக்குப் பழக்கமில்லாத அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் அரங்கில் காட்டிப

கட்டுரை
பழ. அதியமான்  

‘தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் பெருமக்கள் பெயரிலான விருதுகளைப் பெற, தகுதியுடைய அறிஞர்கள் தமிழ்வளர்ச்சித் துறை அலுவலகத்தில் கிடைக்கும் தன்விவரக் குறிப்புப் படிவத்தை நிறைவு செய்து நவம்பர் மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். விருதுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள குழு அந்தப் படிவங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும்’ அண்மையில் வெளிவந்த தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறைச் செய்திக்குறிப்பு மேற்கண்ட வாறு கூறுகிறது. அறிஞர்களை பரிசுக்கு அலையும் ‘தருமி’களாக அரசாங்கம் கருதுகிறது என்பதற்கு இந்தக் குறிப்பு ஒரு வெளிப்படையான அடையாளம். இதற்கு தினமணி தவிர வேறு எங்கும் எதிர்ப்பு வெளிப்படாததற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம். இந்த அறிவிப்பு அறிஞர்கள

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

"விருதுகள் சராசரிகளைச் சிறப்பிக்கிறது, உயர்ந்தவர்களை வெட்கமடையவைக்கிறது, தாழ்ந்தவர்களால் அவமானத்திற்குள்ளாகிறது’’, என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் வரிகளைவிட விருதுகளின் ‘பெருமையை’ சிறப்பாக கூறிவிட முடியாது. விருதுகள் மனிதர்களை கௌரவிப்பதைவிட மனிதர்கள்தான் (சில சமயங்களில்) விருதுகளை கௌரவிக்கிறார்கள். மகத்தான மனிதர்கள் யாரும் அவர்கள் பெற்ற விருதுகளுக்காக மக்களால் போற்றப்படுவதோ நினைவுகூரப்படுவதோ இல்லை. ஆனாலும், பொதுமக்கள் மத்தியிலும் சில சமயங்களில் அறிவுஜீவிகளில் மத்தியிலும் விருதுகள் பெரும் சலசலப்பை உண்டாக்குகின்றன. விருதுகளால் கிடைக்கும் ஒரே பலன், சில சமயங்களில் சரியாக வழங்கப்படுகிறபோது அதிகம் பிரபலமாகாத மகத்தான மனிதர்களை அவை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவதுதான்.

சிறுகதை
மு. குலசேகரன்  

இதுவரையில் மற்றவர்களால் அதிகம் அறியப்படாத எங்களூருக்கு ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் வைஜெயந்தி வந்தார். வழியில் காத்திருந்து அவர்களை வரவேற்றேன். ஆட்டோவை அனுப்பிவிட்டு வைஜெயந்தி “நல்லாயிருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாகுது . . .” என்றார். “ஆமா, கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில கடைசியா சந்திச்சது” என்றேன். நண்பர் நடத்திய அந்தக் கூட்டத்தில் படமெடுத்து முடித்ததும் ஒளிப்பதிவாளரை அனுப்பிவிட்டு வைஜெயந்தி முழு நாளும் கலந்துகொண்டார். அவர் சார்ந்த தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கவிதைப் புத்தகம் வெளியிடுவதைக் கொஞ்ச நேரம் காட்டினார்கள். வெவ்வேறு ஊர்களில் நடந்த பல கலைஇலக்கிய நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்தோடு வைஜெயந்தி பங்கேற்றார். ஆறுமுகத்தை நேரிலும் ஒருதரம் அறிமுகப்பட

அனுபவம்
கோகுலக்கண்ணன்  

இளையராஜாவின் “தேர்கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி” என்ற பாட்டைக் கேட்கும்போதெல்லாம் நாராயணனின் ஞாபகம் வரும். நான் எங்கே இருந்தாலும், உதட்டோரம் ஊறும் எச்சிலை விழுங்கக்கூட மனம் வராது அந்தப் பாட்டைப் பற்றி நிறுத்தாமல் பேசும் நாராயணனின் ஞாபகம் வரும். இளையராஜாவின் எந்தப் பாடலைக் கேட்டாலும் அவனுடைய ஞாபகமே வந்து நிற்கும். செக்காவ்ஸ்க்கியைக் கேட்டால் மனோஜின் ஞாபகம்! என் பெண் செக்காவ்ஸ்க்கியை பியானோவில் பயிற்சி செய்வதைக் கேட்கும்போதும் ஹாஸ்டலில் மனோஜ் அறையில் காஸெட் போட்டுக் கேட்ட ஞாபகம் பியானோ ஓசையை மீறி எழும்பும். அதேபோல் பீட்டில்ஸைக் கேட்டால் பி.ஜே. ஆனந்தே மனதுக்குள் வருவான். பி.ஜே. ஆனந்திடம் சான்யோ வாக்மேன் இருந்தது. அவனுடைய முதுகு சற்று கூன்விழுந்து இருக்கும். முகத்

பதிவு
செந்நெல் கூத்தன்  

இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், விருது வழங்கும் வைபவங்கள் பெரும்பாலும் சென்னையிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் உன்னதமான இலக்கியப் படைப்பாளிகளை தந்திருக்கும் ஊர் மட்டுமல்லாது, ஒப்பீட்டளவில் அதிக எழுத்தாளர்களைக் கொண்டது, இந்தச் சிறிய மாவட்டம் (கன்னியாகுமரி). ‘நெய்தல்’ இலக்கிய அமைப்பு 2013ஆம் வருடத்திற்கான இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது, முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் விருது ஆகிய விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியை நாகர்கோவில் எ.பி.என். பிளாஸாவில் அக்டோபர் 27ஆம் நாள் நடத்தியது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் முக்கிய படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழாவில் பார்வையாளர்களாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.

புத்தகப் பகுதி
நிர்மல் வர்மா  

திடீரென்று காற்று வீசியது. அறைக்கு மேலே நிலவின் பாதி உருவம் குபானி மரத்தோடு ஒட்டிக்கொண்டு நகர்ந்து வந்திருந்தது. ஒரு மரம் அசைந்தது. பிறகு இன்னொன்று. காற்றின் சமிக்ஞை கிடைத்தது போன்று காடு மொத்தமும் சலசலக்கத் தொடங்கியது. மிஸ் ஜோசுவாவின் தபால் பெட்டியின் கதவு திடுக்கென்று திறந்துகொண்டது. லண்டனிலிருந்து வரும் சஞ்சிகைகள் அவற்றில் நிரம்பியிருந்தன. எத்தனை நாட்களாக மிஸ் ஜோசுவா அவற்றை வெளியில் எடுக்காமல் இருக்கிறாள் என்று தெரியவில்லை. காற்றடிக்கும்போது தபால்பெட்டியின் கதவு திறந்துகொள்ள கடகடவென்று தாளம் ஒலிக்கிறது. பிறகு அமைதியடைகிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் தாளம் போட்டுப் பிறகு அமைதியாகிறது. அவள் கைகளை நீட்டி கதவைப் பற்றினாள். அறை மொத்தமும் காற்றில் உடைந்த கூண்டுபோல ஆடத் தொடங்கிற்று.

பத்தி
அனிருத்தன் வாசுதேவன்  

இந்தியாவில் மாற்றுப் பாலியல்புகள் குறித்த விவாதங்களை முன்வைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு சில எதிர்வினைகள் தவறாமல் தொடுக்கப்படுகின்றன. ஒருபாலீர்ப்பு மேற்கிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதி, பண்பாட்டுச் சீரழிவு என்ற கருத்துக்கள் வரலாறு குறித்த ஏதோ ஒரு கற்பிதத்தின் பெயரில் வெகு எளிதாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட மறுதலிப்புகளுடன் உரையாட வரலாற்றுத் தரவுகளும் ஆய்வுகளும் தேவைப்படுகின்றன. இந்திய வரலாற்றில், இலக்கியங்களில், சட்ட ஆவணங்களில் மாற்றுப் பாலியல்பு குறித்த தருணங்களை இனம் கண்டுகொண்டு ஆய்வுக்கு உட்படுத்தும் பணி குறிப்பாக கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகளுள் பல கட்டுரைகளாகவும் நூல்களாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவற்றை துணையாகக் கொண்டு இந்திய வ

மதிப்புரை
ஷங்கர் ஆர்மன்ட் (ஃபிரான்ஸ்)  

அம்மாவின் ரகசியம் (குறுநாவல்) ஆசிரியர் : சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001. பக்கங்கள்: 72 | விலை ரூ.55 அம்மாவின் ரகசியம்’ எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள ‘உடவளவ’ எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970களிலும் 1980களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராகப் புரட்சி செய்த தென்னிலங்கையைச் சார்ந்த புரட்சி அமைப்பான 'ஜனதா விமுக்தி பெரமுன'விற்கு எதிராகப் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்னணியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது. வறிய குடும்பமொன்றில் பிறந்

எதிர்வினை
 

பி.ஏ. கிருஷ்ணனின் ‘சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?’ (காலச்சுவடு நவம்பர் 2013) கட்டுரை மிக எளிதாக வைதீகர்களின் (இந்துக்களின்) கொலைகார அரசியலை மூடி மறைக்க முயல்கிறது. “வைதீக சமயங்களும் அரசர்களும் சமண மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்புரிந்திருக்கலாம். ஆனால் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு” என்கிறார் கட்டுரையாளர். வைதீக சமயங்கள் அவ்வளவு புனிதத் தன்மையானவைகளா? வைதீகத்திற்குள்ளே நடந்த வன்முறைகளே உண்டல்லவா? “விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென்றிவர்கள் மதியிலாதா ரென்செய்வாரோ” (தேவாரம்) என்று சமண புத்த வழியினரை இழிவுபடுத்துபவர்கள் எப்படி நிதானமான எதிரியாக இயங்கியிருக்க முடியும். “சம்பந்தர் துன்னிருஞ் சமணனைக் கழுமுனை யேற்ற