தவையங்கம்
 

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலும் தமிழகத்தில் நடந்த துணைத் தேர்தலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் சாத்தியங்கள், தேர்தல் கணிப்புகள், எதிர்பார்ப்புகள் எனச் சூடுபறக்கும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி கண்ட பாஜக வெற்றிக் கனியைப் பரிபூரணமாக ருசிக்க முடியவில்லை. தில்லி முதல்வர் பதவி இந்தியாவிலேயே அதிகாரம் குறைந்த பதவி. இம்மாநிலத்தின் எம்.எல்.ஏக்களைச் சராசரியாக ஒரு மாநகரத்தின் கவுன்சிலருடன் ஒப்பிடலாம். தில்லி தேர்தலில் பெரும்பான்மை பெறாமல் 28 இடங்களில் மட்டுமே வென்ற ஆம் ஆத்மி கட்சி (சாதாரண மக்கள் கட்சி)யின் மீது இன்று முழு கவனமும் குவிந்துள்ளது. எல்லா விவாதங்களின் மையத்திலும் ஆஆக இருக்கிறது. பாஜக வெற்றி நாயகர் நரேந்திர மோடியைத் தேர்தலுக்குப் பின் தொலை

தலையங்கம்
 

பரஸ்பர சம்மதத்துடன் ஆண்களுக்கு இடையிலோ பெண்களுக்கு இடையிலோ நடைபெறும் உடலுறவு, சட்டப்படி குற்றமே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். 18 வயதைக் கடந்த நபர்களின் பாலியல்பையும் வன்முறையற்ற அதன் வெளிப்பாட்டையும் குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 377இன் இருப்பை உறுதி செய்யும் இத்தீர்ப்பு எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நமது தனிப்பட்ட பாலியல் விருப்புகளும், சமய-பண்பாட்டுக் கருத்துக்களும் எப்படியிருப்பினும், அவற்றைக் கடந்து, மாற்றுப் பாலியல் இச்சைகள் மற்றும் வெளிப்பாடுகள் குறித்து சிந்திக்க தக்க தருணம் இது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ‘இயற்கைக்குப் புறம்பான குற்றங்கள்’ என்ற விவரிக்கப்படாத தலைப்பின் கீழ் இயங்குகிறது. 2001 ஆம் ஆண்டு இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து

விருது 2013
 

ஜோ டி குரூஸ் எழுதிக் காலச்சுவடு வெளியீடாக வந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்த கொற்கை நாவல் 2013ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருதைப் பெற்றிருக்கிறது. விருது பெறும் ஜோ டி குரூஸுக்குக் காலச்சுவடு இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும். புதிய நூற்றாண்டில் தமிழில் வெளியான குறிப்பிடத்தகுந்த நாவல்களில் கொற்கை முக்கியமான படைப்பு. ஆழி சூழ் உலகு என்ற தனது முதல் நாவல் மூலம் இலக்கிய உலகில் சலனத்தை ஏற்படுத்திய ஜோ டி குரூஸ் தனது இரண்டாவது நாவலான கொற்கையில் தன்னை நம்பிக்கைக்குரிய நாவலாசிரியராக நிலைநிறுத்திக் கொண்டார். ''நான் கண்டு கேட்டு அறிந்து வாழ்ந்த பரதவர் சமூகத்தை அடையாளப்படுத்த விரும்பினேன். அந்தச் சமூகத்தின் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டவும் அந்தச் சமூகத்தின்

நேர்காணல்: யோகேந்திர யாதவ்
மொழியாக்கம்: க. திருநாவுக்கரசு  

ஆம் ஆத்மி கட்சியால் (ஆ.ஆ.க.) இன்று மக்களின் மனதில் உருவாகியிருக்கும் புதிய இந்திய அரசியல்வாதி என்ற கருத்தின் குறியீடாகத் திகழ்கிறார் யோகேந்திர யாதவ். வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தில் (Centre for the Study of Developing Societies) மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் இவர் ஓர் அரசியலறிஞர் மற்றும் கருத்துக் கணிப்பு நிபுணர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருக்கும் இவர் மொண்ணையாக நடக்கும் அரசியல் விவாதங்களில் அறிவுபூர்வமான வாதங்களை வைப்பவராகத் திகழ்கிறார். புதிதாக உருவாகியிருக்கும் ஆ.ஆ.க.வில் சேர முடிவெடுக்க இவருக்கு ஒரு வருடம் ஆனது. இக்கட்சியில் சேர்ந்ததன் விளைவாகப் பல்கலைக்கழக மானியக் குழுவில் இவர் வகித்துவந்த கௌரவப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பல விஷயங்களைப் பற்றி ஏஜாஸ்

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

பொது இடங்கள் மற்றும் பேருந்துகளிலும் பொதுப் போக்குவரத்து சாதனங்களிலும் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் வன்முறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் பாலியல் வன்முறைகளில் ஏறக்குறைய 90 சதவிகிதம், பாதிக்கப்படும் பெண்ணிற்குத் தெரிந்தவர்களால் (உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள், சக பணியாளர்கள் போன்றவர்கள்) நிகழ்த்தப்படுபவை எனப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. தினம் தினம் ஆயிரக்கணக்கான பாலியல் வன்முறைகள் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்டபோதிலும் இந்தியச் சமூகமோ அரசாங்கமோ இதைப் பெரும் சமூகப் பிரச்சினையாகப் பார்த்ததில்லை. 2012 டிசம்பர் 16 (16/12) அன்று டெல்லியில் மருத்துவ மாணவிமீது நடந்த கொடூரமான கும்பல் பாலியல் வன்முறைதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதே போன்று, இதைவிடக் கொடூரமான பாலியல் வன

கட்டுரை
பிரேமா ரேவதி  

கடந்துபோன ஆண்டு பல வகைகளில் நம்மைப் பாலியல் வன்முறை பற்றிய புரிதலை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. சட்ட வரையறைகளின் போதாமைகள் பற்றியும் பொதுபுத்தியின் கயமைகளைப் பற்றியும் ஊடகங்களின் பரபரப்புச் செயல்பாடுகளைப் பற்றியும் அது நம்மை விவாதிக்க வைத்துள்ளது. ஏராளமான மக்கள் தெருவில் இறங்கிப் பாலியல் வன்முறைக்கு எதிராகத் தங்கள் குரலை உயர்த்தினார்கள். இரு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இவை முக்கியமானவை. குறிப்பிட்ட சில சம்பவங்களில்தான் இப்படிப்பட்ட போராட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்ற ஆதங்கமும் கோபமும் பலருக்கும் இருந்தாலும் இந்த விவாதம் வன்முறைக்கு எதிரான பெண்களின் வரலாற்றுப் போராட்டத்தில் அதனளவில் ஒரு முன்னோக்கிய அடி என்பதை நாம் மறுக்க முடியாது. இந்தப் புரிதலைப் பல பெண

கட்டுரை
சேரன்  

இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வரும் சிங்கள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவர். இவர்களுள் சிலர் புலமையாளர்களாகப் பல்கலைக்கழகம் சார்ந்து இயங்குபவர்க

பாஷண அபேவர்த்தன  

இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ஆம் ஆண்டு அமெரிக்காவின் குரல் (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983இல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைந்தது. அக்காலகட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளைத் தீவிரமாகப் பயன்படுத்துகிற தளம் அமெரிக்காவுக்கு இலங்கையில்தான் இருந்தது. 1982இல் வெளியான அமெரிக்க அரச அறிக்கை ஒன்றில் தென்னாசியப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக்குத் தேவை ஏற்படுகிறபோதெல்லாம் பயன்படுத

சேரன்  

இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், இனப்படுகொலை தொடர்பாகச் சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும் இப்போது எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாகவே அமைந்துள்ளது. மூன்று வெவ்வேறான ஆனால் தமக்குள் இணக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக் கிறேன். முதலாவது தளம்: ஊடகவியலாளர் என்பது. 1984 - 1987 வரை முழுநேரப் பத்திரிகையாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Revi

அஞ்சலி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

எண்பதுகளில் ஆங்கிலப் பல்கலைக்கழக மாணவர் விடுதி அறைகளில் இரண்டு தலைவர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கும். ஒன்று சே குவேரா மற்றது நெல்சன் மண்டேலா. இந்த இரண்டுபேருமே அந்த நாட்களில் மாணவர்களிடையே புரட்சியின் திரு உருக்களாகக் கருதப்பட்டார்கள். மண்டேலாவின் பெயரைக் கேட்டதும் அவரை வர்ணிக்க வார்த்தைகளுக்கு அலைய வேண்டியதில்லை. திரும்பத் திரும்ப மனதில்படும் ஒரே ஒரு பதம் பெருந்தன்மை. தூர இருந்து என்னைப் போல் அவரை அவதானித்தவர்களைவிட மண்டேலாவை அருகில் இருந்து கவனித்த பேராயர் டேஸ்மண்ட் டூடூவும் இதையே சொல்லியிருந்தார். மண்டேலா சாலச் சிறந்த உத்தமப் புத்திரர் அல்ல. எல்லாத் தலைவர்களைப் போலவே அவருக்கும் களிமண் கால்கள் உண்டு. மண்டேலா பிறந்தபோது எத்தியோப்பியா, லைபிரியா தவிர மற்றைய ஆப்பிரிக்கக் கண்டத்தி

சினிமா
தியடோர் பாஸ்கரன்  

திரைப்படமொன்றின் தாக்கம் ஆழமானதாக அமைய வேண்டுமானால் அதில் நம்பகத்தன்மை அடிநாதமாக இருக்க வேண்டும். அந்தத் தன்மையின் அடிப்படை யதார்த்தம். Realism என்ற ஆங்கிலப் பதத்தையும் மனதில் கொண்டால் இந்தப் பொருள் விளங்கும். படத்தின் தாக்கம் நன்றாக அமைந்தால், இயக்குநர் சொல்லவரும் கருத்து பார்வையாளர்கள் மனதில் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தும். அரசு எந்திரத்தின் நிர்தாட்சண்யமான அணுகுமுறை, லஞ்சப்பேய் இவற்றின் மத்தியில் அல்லலுறும் மத்தியதர மக்களின் நிலையை உணர்த்திய பாலுமகேந்திராவின் வீடு (1988) படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த யதார்த்தவாதக் கோட்பாடும் அதன் பாதிப்பும் புலப்படும். திரைப்பட இயக்குநர் உருவாக்கும் உலகினுள் பார்வையாளர் நுழைந்து வசதியாகக் சஞ்சரிக்க யதார்த்தவாதம் கைகொடுக்கின்றது. திரைப்படம் ஒன்ற

சினிமா
சொர்ணவேல்  

இயக்குநர் தாதாசாஹேப் பால்கேயின் படமான ராஜா ஹரிஷ்சந்திரா 40 நிமிடம் ஓடக்கூடிய புராணப்படமாக 1913 மே மாதம் பம்பாய் கொரொனேசன் சினிமாவில் வெளியிடப்பட்டது. ஹரிச்சந்திரப் புராணத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட பால்கேயின் படத்தை முதல் படமாகக் கொள்வோமானால் இந்திய சினிமா தனது 100வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. பேசாமொழிப்படம் என்பதால் பால்கேயின் படத்தைத் தமிழுக்கும் முதல் படமாகக்கொள்ளலாம். ஆர். நடராஜ முதலியாரின் கீசகவதம் (1916) என்கிற பேசாமொழிப் படத்தை முதல் தமிழ்ப்படமாகக் கொண்டோமென்றால் இது தமிழ் சினிமாவுக்கு 98வது வயது. இந்த இதிஹாசத் தருணத்தில் சினிமாவைப் பற்றிய எண்ணங்கள் என் மனதில் பெருமழை பெய்தபின் வாய்க்காலில் கலங்கலாகப் பாயும் குளத்து நீரைப் போல் ஓடிக்கொண்டிருக்கின்றன. சினிமாவி

சினிமா
செல்லப்பா  

தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடியவை. அந்தத் திரைத்துறை ஆளுமை ஒரு படத்தில் பங்களித்

சினிமா
எஸ்.ஆனந்த்  

வேலியின்மேல் அமர்ந்திருக்கும் மரியா அவள் வீட்டுக்கு வரும் வழியை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மனதிலிருக்கும் ஏக்கம், வலி, கனம் அனைத்தையும் அவள் முகம் பிரதிபலிக்கிறது. ஒருவர் அவ்வழியே வருகிறார். மருத்துவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். மரங்களில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சற்படுக்கையில் படுத்திருக்கும் மகன்கள் இருவரும் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். புகைத்துக்கொண்டிருப்பவளிடம் சிகரெட்டைக் கேட்டு வாங்கிப் பற்றவைத்துக்கொண்டு அவரும் வேலிமீது அமர்கிறார். கனம் தாங்காது வேலி உடைகிறது. இருவரும் விழுகின்றனர். உடைகளைச் சரிசெய்துகொண்டு கிளம்புகிறார். வழியில் ஒரு இடத்தில் நின்று திரும்பி அவளைப் பார்க்கிறார். திடீரெனக் காற்று ஓங்கி வீசுகிறது. ச

சினிமா
யுவன் சந்திரசேகர்  

எங்கேயோ படித்த ஒரு சம்பவம். அரியக்குடி ராமானுஜ அய்யங்காரும் எம்.கே.டி. பாகவதரும் ரயில்நிலைய மேடையில் சந்தித்துக்கொண்டார்களாம். பாகவதர் மிகவும் பணிவாக வணக்கம் சொன்னார். அய்யங்கார், ‘இதிலென்னப்பா இருக்கு. நாங்கள் மேடையில் செய்கிறதை நீ சினிமாவில் செய்கிறாய்’ என்றாராம். உண்மை அதுதான். பாகவதரின் ‘ராஜன் மகராஜன்’ என்ற பாடல், முழுமையான கீர்த்தனை மாதிரி இருக்கும். வயலினின் வருகைக்கு முன்னால் வீணைதான் வாய்ப்பாட்டுக்குப் பிரதான பக்கவாத்தியமாக இருந்தது. சினிமாவுக்காக சி.ஆர். சுப்புராமன் இசையமைத்த ‘சின்னஞ்சிறு கிளியே’ இன்றுவரை கர்நாடக இசை மேடைகளில் ஒலிக்கிறது. தனிப்பாடலாகத் தண்டபாணி தேசிகர் மெட்டமைத்த ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்ட

சினிமா
 

இந்தியத் திரைப்படத் துறை தனது சிசுப் பருவத்தைக் கடந்திருக்கும் தருணமிது. இந்தத் தருணத்தில் கௌரவமான மகளிர் திரைப்படத்தில் பங்கெடுத்துக்கொள்வதை அனுமதிக்கலாகுமா என்று பலரும் கேட்கிறார்கள். அப்படி ஒரு நிலை, ஒழுக்கமில்லாத பெண்கள் நிறைந்த திரை உலகைத் தூய்மைப்படுத்துவதாக அமையும் என்ற நம்பிக்கையில் அதை ஊக்கப்படுத்துவது சரியாகவே இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதில் உள்ள மனோரஞ்சிதமான முரண்நகை என்னவென்றால், திரை உலகை மட்டுமே தங்களால் தூய்மைப்படுத்த முடியும். நிஜ உலகம் மாறவே மாறாது என்பதை வெள்ளித்திரையை உன்னத எண்ணங்களோடு தூய்மைப்படுத்த விரும்பும் ஆர்வலர்கள் மறந்துவிட்டதுதான். பாலியல் தொழிலாளரைத் திரைப்படத் தொழிலகங்களிலிருந்துதான் வெளியேற்ற முடியுமே தவிர, வெளியுலகிலிருந்து அவர்களை ஒழித

சினிமா
அம்ஷன் குமார்  

இந்தியாவில் திரைப்படங்களைப் பற்றி ஆரம்பம் முதலே விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் ராஜ்கபூரின் பாபி (1973 ) படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு படங்களைப் பற்றிச் சமூகவியல் கட்டுரை கள் எழுதப்படும் போக்கு அதிகரித்தது. எதனால் ஒரு படம் அதிக மக்களால் விரும்பப்படுகிறது என்பதற்கான காரணங்களைத் திரைப்படங்களிலேயே தேடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக அவற்றைத் தோற்றுவிக்கும் சமூகத்தை விசாரணை செய்வதன் வாயிலாகப் புரிந்துகொள்கிற போக்கு இது. மேற்கில் இது மௌனப்படக் காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்திருக்கிறது. தனிப்பட்ட திரைப்படங்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் பற்றிய சமூகவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முக்கியமானது எமிலி அல்டென்லோ (Emilie Altenloh) என்பவரின் சமூகவியல் ஆய

சினிமா
இசை  

தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்த

சினிமா
நேர்காணல்: எம். ரிஷான் ஷெரீப்  

பிரபல ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் 1940ஆம் ஆண்டு, ஜூன் 22ஆம் திகதி பிறந்த இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், புகைப்படக் கலைஞர், ஓவியர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த இவர் ஒரு வரைகலை நிபுணராகத் தனது பணியை ஆரம்பித்திருக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் Palme d’Or விருதினை வென்ற முதல் ஈரானியத் திரைப்படமான ‘Taste of Cherry’ (1997) எனும் திரைப்படத்தை இயக்கிய பெருமை இவரைச் சேர்கிறது. இதுவரையில் நாற்பதுக்கும் அதிகமான திரைப்படங்களையும் குறும்படங்களையும் இயக்கியுள்ள, தற்போது 73 வயத

சிறுகதை
அ. முத்துலிங்கம்  

இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது மனைவி தன்னந்தனியாகக் கொழும்பிலிருந்து வருகிறாள். அவள் வரும்போது அவன் அங்கே நிற்க வேண்டும். 13 மாதத்திற்குப் பிறகு மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்தபோது மனது குறுகுறுவென்று ஓடியது. காரை மூன்றாவது தளத்தில் நிறுத்திவிட்டுத் தரிப்புச் சீட்டில் காரை நிறுத்திய இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டான். புது மனைவியுடன் திரும்பும்போது காரைக் கண்டுபிடிக்க அலையக் கூடாது. வருகைக்கூடத்தில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் நிற்பவருடன் பேசக்கூட

கட்டுரை: ஓவியர் ஆதிமூலம் ஆறாம் ஆண்டு நினைவு
நெய்தல் கிருஷ்ணன்  

‘உங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. என்னைப் பிரிய உங்களுக்கு மனமில்லை. இடைவெளி ஆறுமணி நேரம்தானே, கடற்கரையில் நாம் சந்திப்போம்'. மூன்றாம்முறை முதலமைச்சராகக் கலைஞர் கருணாநிதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பதவியேற்றதும் கோட்டத்திற்கு வெளியே அண்ணாசிலை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நின்று நிறைவாகச் சொன்னது. பீறிட்ட உற்சாகம் அந்தப் பகுதி முழுவதும் வியாபித்திருக்கக் கூட்டம் கலையத் தொடங்கியது. என்னை அறியாமல் உடல் சிலிர்த்திருந்தேன். கபிலனுக்கு அந்த இடத்தைவிட்டு நகர மனமில்லை. ‘கடற்கரையில் சந்திக்கலாம்னு கலைஞர் சொல்லிட்டார்லா, கிளம்பலாம்’ என்றேன். ‘சாயங்காலம் செமக்கூட்டம் இருக்கும். கடற்கரைக்கு இப்பமே போனா மேடைக்கு முன்னால இடத்தைப் பிடிச்சிருலாம்’ என்றான். ‘எனக்க

மதிப்புரை
ராஜ் கௌதமன்  

சுமைகளிலெல்லாம் பெருஞ்சுமை அன்னியனைச் சுமப்பது’’ (மெகாலே பிரபு) என்ற வாக்கியம் இங்கே எல்லாச் சாதிகளாலும் அன்னிய சாதிகளாக்கப்பட்ட தலித்துகளுக்கே உரிய வாசகமாகும். தமிழக நெடிய வரலாற்றில் தெலுங்கரின் ஆட்சிக்குப் பின் வந்த ஆங்கிலேயே வணிகமுதலாளிய காலனியாட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துச் சாதிய அமைப்பாலும் பிரிட்டனின் வணிக முதலாளியத்தின் ஏகாதிபத்தியக் கொள்ளையாலும் தலித் மக்கள் சுமந்த பெருஞ்சுமையையும் வெற்றுச்சடலங்களாக மடிந்து மக்கிப்போன பேரவலத்தையும் ஜெயமோகனுடைய வெள்ளையானை (எழுத்து 2013) என்னும் வரலாற்று நாவல் காலம், இடம், கருத்தியல் மற்றும் அரசியல் பிரக்ஞையோடு படைத்துக் காட்டுகின்றது. இந்தப் படைப்பு தனியாக இன்றிப் படைப்புக்குள்ளே வாசகன் இருக்கிறான் என்றுதான் கூற வ

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

ஒரு காலச்சுவடு இதழில் அந்த ஆண்டு படித்த நூல்களைப் பற்றி எழுதியபோது முழுமையாகப் படித்த புத்தங்களைவிடப் படிக்காமல் சில பக்கங்களுடன் அல்லது பாதியில் விட்ட நூல்கள் அதிகம் என்று எழுதியிருந்தேன். இந்தப் பத்தியை அசோகமித்திரன் வாசித்திருக்கிறார். பிறகு ஒருநாள் நான் அவருடன் பேசியபோது நீங்கள் முழுதும் படிக்காமல் அரைப்பாதியில் விட்டுவிட்ட நூல்களையும் ஏன் அவற்றை நிறுத்திவிட்டீர்கள் என்ற காரணத்தையும் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றார். சென்ற ஆண்டு வெளிவந்த நூல்களைப் பற்றிய இந்தப் பத்தியில் பாதியில் விட்ட ஒரு நூலுடன் ஆரம்பிக்கிறேன். நூலின் பெயர் Wave. எழுதியவர் சிறிலங்காவைச் சேர்ந்த சொனாலி திரனியாகலா. இது 2004 டிசம்பர் ஆசிய ஆழிப்பேரலையினால் பாதிக்கபட்ட ஒரு தனி மனுஷியின் உண்ம

பதிவு
விஜயபாஸ்கர் விஜய்  

'தனிமைத் தளிர்' திறனாய்வு நிகழ்வு ஆர்.சூடாமணியின் ‘தனிமைத் தளிர்’ (காலச்சுவடு வெளியீடு) நூலின் திறனாய்வுக் கூட்டமும் கே.எஸ்.கருணா பிரசாத் நடத்திய நாடகமும் நவம்பர் 30, 2013 அன்று நடைபெற்றன. கூட்டத்தையும் நாடகத்தையும் முன்னின்று நடத்தியது சென்னை திருவான்மியூர் ‘பனுவல்’ புத்தகக்கடை. ஆர்.சூடாமணி எழுதிய 63 சிறுகதைகளையும் ‘தனிமைத் தளிர்’ நூலாகத் தொகுத்த தொகுப்பாசிரியர்களான சீதா ரவி, கே.பாரதி ஆகியோருடன் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டார். வரவேற்றுப் பேசியவர் பனுவல் புத்தகக்கடையின் மேலாளரும் பரிசல் வெளியீட்டின் நிறுவனருமான பரிசல் சிவ.செந்தில்நாதன். கே.எஸ் கருணா பிரசாத், சூடாமணியின் ‘நான்காவது ஆசிரமம்’ சிறுகதையை நாடகமாக நடித்துக் காட்டின

எதிர்வினை
 

திரு. ஸ்டாலின் அவர்களின் கடிதம் ஓர்அரசியல் துண்டுப்பிரசுரம். அதற்கும் வரலாற்றிற்கும் தொடர்பு இல்லை. நானே பல 'வன்முறை’ப் பாடல்களை மேற்கோள்காட்டியிருக்கிறேன். ஆனால் பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு வரலாற்றை எழுத முடியாது. இரத்தம் குடிப்பது, தசைக் குவியல்கள்மீது கோவில் கட்டுவது, கழுத்தறுப்புகள் போன்ற சொற்றொடர்கள் திரைப்பட வசனங்களில்கூட இப்போது வருவதாகத் தெரியவில்லை. பௌத்தர்களும் சமணர்களும்தான் தலித்துகள் ஆனார்கள் என்ற கூற்றோடு எனக்கு உடன்பாடு இல்லை. இதைப் பற்றித் தேவைப்பட்டால் விரிவாக விவாதிக்கலாம். திரு. பொ. வேல்சாமி தனது எதிர்வினையில் குறிப்பிடுவது: 1. நான் கழுவேற்றம் நடந்ததை மறுக்கிறேன். 2. கழுவேற்றம் குறித்து நடக்கும் விழாக்களை அர்த்தமற்றது என்று சொல்கிறேன். 3. இத்தகைய செய்தி

உள்ளடக்கம்