தலையங்கம்
 

அண்மையில் நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் காட்சியில், ஆரவாரங்களுக்கு நடுவே விலகி அமர்ந்திருந்த ஒரு மௌன எரிமலையைப் பார்க்க முடிந்தது. திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் அமைப்பின் அரங்கில் பரிதவிப்பு தெரியும் விழிகளுடனும் உருக்குலையாத மனதுடனும் அந்தத் தாய், அறுபத்து ஏழு வயதான அற்புதம் அம்மாள் உட்கார்ந்திருந்தார். ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் வாழ்வைத் தொலைத்த பேரரறிவாளனின் அன்னை. மகனைத் திரும்பவும் பார்த்துவிடும் தவிப்பில் இருக்கும் அவர் ஓசையில்லாமல் தனது போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அவர் அப்படி அமர்ந்திருந்த அதே நாட்கள் ஒன்றில்தான் உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பும் வெளியானது. வீரப்பன் கூட்டாளிகள் என குற்றம்சாட்டப்பட்ட ஞானப்பிரகாசம், சைம

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியை வர்ணிக்க முடியாது என்றாலும் இந்திய அரசியலில் அது ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளை யாராலும் மறுக்க முடியாது. அண்ணா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிராக இந்தியா’ இயக்கம் ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்படும் இயக்கமாகப் பலரால் பார்க்கப்பட்டது. ஊடகங்களுக்கு வெளியே, பொதுமக்கள் மனநிலையில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. இந்த இயக்கத்தில் பலதரப்பட்ட அரசியல் சார்புகளைக் கொண்டவர்கள் இருந்தாலும் அரசியலை வெறுப்பவர்களும், அரசியலுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் நிறையவே இருந்தனர். இந்நிலையில் ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் அரசியலுக்கு வெளியிலிருந்து அதை எதிர்ப்பதைவிட ஓர் அரசியல் கட்

சென்னை புத்தகக் காட்சி
என்னெஸ்  

இது காலச்சுவடின் வெள்ளிவிழா ஆண்டு. அதைச் சிறப்பிக்கும் வகையில் இலக்கியம், சமூகம் சார்ந்த அக்கறைகளை வெளிப்படுத்தும் விதமாகப் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதையொட்டி 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே குறிப்பிடத் தகுந்த பல நூல்களின் வெளியீடுகள் நிகழ்ந்தன. அவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது 2014 ஆம் ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சி. புத்தகக் காட்சியின் 37 ஆம் ஆண்டில் காலச்சுவடின் பதிப்புப் பணிகள் இதுவரைக் கண்டதை விட மிகப் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி ஒரு கலாச்சார நிகழ்வாக உருமாற்றம் பெற்றிருப்பதும் புதிய தலைமுறை வாசகர்களின் வருகையும் இதன் காரணங்கள். அவற்றுடன் கால் நூற்றாண்டு காலமாக ஒரு பதிப்பகம் வாசிப்பில் புதிய சலனங்களை உருவாக்கி

கே.என். செந்தில்  

வெறும் இரண்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நாளிலேயே, அதே தொகையை முன்பணமாகப் பெற்று,தோள் பையை இறுகப் பற்றியபடி, நொடிக்கொருதரம் பணத்தைத் தொட்டுப்பார்த்து முன்னெச்சரிக்கையாக ஆட்டோக்காரர்களிடமும் புதிய முகங்களிடமும் பேச்சுக் கொடுக்காமல் சென்னையின் அழகையும் அழுக்கையும் அவசரத்தையும் நெரிசலையும் பிளந்த வாயுடன் அந்நியன் போல வேடிக்கைப் பார்த்தபடி சென்று வந்த முதல் புத்தகச் சந்தை அழியாத நினைவாக இன்றுமுள்ளது.ஏறக்குறைய பத்து வருடங்களாக இடையறாது புத்தகச் சந்தைக்குப் போய் வருகிறேன்.நடத்தப்பட்ட இடங்கள், சூழ்நிலைகள் மாறியிருக்கின்றனவேயன்றி மாறாதிருப்பது முந்தைய ஆண்டைத் தோற்கடித்து முன்னேறும் வாசகர்களின் எண்ணிக்கையும் உயரும் நூல்களின் விற்பனைச் சதவீதமும். சில ஆண்டுகளாக நூலக ஆணை சர

உரை
கோ. ரகுபதி  

தீண்டாமை, நிறப்பாகுபாடு ஆகிய கருத்தாக்கங்கள் மனிதர்களை வேறுபடுத்துவதோடு ஒருவர் மற்றொருவர்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஒருவர் பொருளியல் வாழ்வில் ஏகபோகமாய் வாழ்வதற்கும் மற்றவரின் வாழ்வில் ஏதுமற்றதாய் இருப்பதையும் நியாயப்படுத்துகின்றன. இக்கருத்தாக்கங்கள் விளைவிக்கின்ற இன்னல்கள் வெவ்வேறானவை என்றபோதிலும் அவை பொதுக்களனில் தங்களின் ஏகபோகத்தை நிறுவி அதைப் பிறர் புழங்குவதைத் தடுப்பதில் ஒன்றுபடுகின்றன. பொதுக்களன் குறித்து விவாதிக்கிறபோது ஹைபர்மாஸ் முன்வைத்த பொதுக்களம், உரையாடல் போன்ற கருத்தாக்கங்களைப் புறக்கணித்துவிடமுடியாது. பொதுக்களத்தில் நிகழ்த்துகிற உரையாடல் நிர்பந்தம் செய்வதற்குப் பதில் ஒப்புதலைப் பெற்று மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது ஐரோப்பியச் சூழலில் அவர் முன்வைத்த கருத்து. ஆ

கட்டுரை
சி. இராஜாராம்  

ஒரு மனிதன் விடுதலை பெற்றுக் கடவுளை அடைய வேண்டுமானால் அவன் முங்கி இருக்கிற மலங்களிலிருந்து வெளிவர வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை. இந்த மலங்களை உதறி எழாத எந்த மானுடப்பிறவியும் கடவுளை அண்ட முடியாது. ஆனால் மலங்களை உதறவும் கடவுளின் புனிதப் பார்வை வேண்டும். இன்னொருபுறம் இடுப்புக்குக் கீழுள்ள எந்தப் பகுதியும் அசுத்தமானது. மலம் சார்ந்தது. அதனைக் கைகள் தொட்டுவிட்டால் கூட மீண்டும் சுத்தம் செய்யாமல் கடவுளை வணங்க முடியாது என்பவையும் வைதீகக் கோட்பாட்டின் மையமான பகுதியாகும். தமிழ் இலக்கணங்களில்கூட சமூகத்தில் சிலவற்றைப் பற்றியப் பேச்சு வரும்போது அவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்வது என்பன போன்றவற்றுக்கு மங்கல வழக்கு, இடக்கரடக்கல், குழூஉக்குறி, அவையல்கிளவி என்று

கட்டுரை
பிரசாந்தி சேகர்  

இதுவெல்லாம் தெரியாது போனதுவே! ஈர மனதில் பாசி படர்வதும். உள்ளுக்குள் புகுந்து உடம்பெல்லாம் நிரம்பும் சக்தியாவதும். தேகமெல்லாம் காய்ச்சல் காண்பதும். அது தீயெனக் காய்வதும். திகட்டத் திகட்ட இனித்துப்போவதும். மீறமீற மெய்யாகிப்போவதும். சுவரில் சாய்ந்தபடி முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்து விசித்திரமான உணர்வுகளுடன் ஊசலாடி அலையுறுவதும். கண்மூடி வண்ணங்களுக்குள் தோய்ந்துகிடப்பதும். அவை வசந்தமாய்ப் பூப்பதும். அதுவே வாழ்வாகிப் போவதும். அந்த வாழ்வில், ஒரு கணத்தில், மெய்மறந்த மகிழ்வில், இன்பத்தின் உச்சத்தில் பொசுங்கிவிட மனசு துடிப்பதும் . . . பிரியம் வைப்பது என்பது இதுதானா? இன்னொரு உசிரின்மேல் உசிரை வைத்துப் பிரிந்துபோவது இதுதானா? இதுவெல்லாம் மேலுக்கும் மெய்யுக்கும் தெரியாது போனதுவே! மனதில் த

பத்தி : காற்றின் கலை
பி. ரவிகுமார்  

பெரும் இசைக் கலைஞரான கே.எஸ். நாராயணசாமியைப் பற்றி நினைவுகூரும் போது வீணையில் புராதன முழக்கங்கள் ஞாபகத்தில் உயர் ந்தெழுகின்றன. நாராயணசாமி சார் மிக நீண்ட காலமாகத் திருவனந்தபுரத்திலேயே வசித்திரு ந்திருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாமல் போய் விட்டது. அதுவரை அவரது கச்சேரிகளை மட்டுமே கேட்டிரு ந்தேன். 1989 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்தான் அவரைச் சந்தித்தேன். அன்று அவருக்கு வயது ஏறத்தாழ எழுபத்தி ஐந்து. தைக்காடு சாஸ்தா ஆலயத்துக்கு அருகில் சந்தடி குறைவான ஓர் இடத்தில் வசித்திருந்தார். வீட்டின் முன்பக்கத்தில் ஒரு கொட்டியம்பலம்*. கொட்டியம்பலத்தைத் திறந்து ஏராளமான படிக்கட்டுகளில் இறங்கித்தான் வீட்டை அடைய முடியும். முற்றத்தில் பரவலாகக் கிருஷ்ண துளசிச்செடிகளும் மல்லிகைப் புதர்களும். ஓடு வேய்ந்த, வெள்ளை

பத்தி
வே. வசந்தி தேவி  

மகளிர் ஆணையத்தில் என் பொறுப்புக்காலத் தொடக்கத்திற்குப் போக விரும்புகிறேன். நான் எடுத்துவைத்த முதல் அடி தமிழ்நாட்டின் முக்கிய மாதர் அமைப்புகள், மக்கள் அமைப்புகளுடன் நடத்திய கலந்தாய்வு. ஆணையத்தின் செயல் திட்டம் தன்னிச்சையாக உருவாகாமல், களப்பணியில் ஆழ்ந்திருக்கும், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அமைப்புகளிலிருந்து உருவாக வேண்டும் என்பது என் நம்பிக்கை. என் பணிக்காலம் முழுதும் எடுத்த அனைத்து முயற்சிகளும் சிவில் சமூக அமைப்புகளின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்ததனால்தான் சாத்தியமாயின. எனது பலமே இந்தத் தோழமையில்தான் வேரூன்றியிருந்தது. அவர்களுக்கு என் நன்றிக்கடன் தீர்க்க இயலாதது. அதன் மறுபக்கம், எதிர் சக்திகளாகப் பார்க்கப்பட்ட மக்கள் இயக்கங்களுடன் ஆணையத்திற்கு இருந்த உற

உரை
கே. சந்துரு  

ரேன்மாதேவி - குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் (பழ. அதியமான்), சாதியும் நானும் - அனுபவக் கட்டுரைகள் (பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன்) ஆகிய இரு நூல்களையும் ஒரே நேரத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரு நூல்களுக்குமிடையேயும் ஒரு பொதுவான கருத்திழையுண்டு. சேரன்மாதேவி குருகுலம் சர்ச்சை 1925லேயே முடிவுற்றதென்றாலும் சாதிப் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பெருமாள்முருகனின் தொகுப்பு நிரூபிக்கிறது. அனைத்துச் சாதி மாணவர்களுக்கும் ஒரே பந்தியில் உணவளிக்க (சமபந்தி போஜனம்) மறுத்தது ஒரு நாடு தழுவிய பிர ச்சினையானது. 90 வருடங்களுக்குப் பிறகும் அதைவிடப் பெரிய சாதிக்கொடுமைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவதும் சாதிக்கட்டுமானப் படிநிலை இடைநிலைப்பட்ட ம

இயல் விருது
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது இவ்வாண்டு (2013) சு. தியடோர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது. சினிமா, சூழியல் துறைகளில் தமது முன்னோடி எழுத்துக்கள் வாயிலாகச் சிந்தனைத் தடத்தை உருவாக்கியவர். 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி முயற்சி. தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதைப் பெற்றார். தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராகவும் பணியாற்றியவர். நாற்பதாண்டுகளாக சுற்றுச்சூழல் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். சூழியல் என்ற சொல்லே அவர் தமிழுக்கு அளித்த பங்களிப்பு தான். ‘இன்னும் பிறக்காத தலைமுறைக

விளக்கு விருது
 

சமகால இலக்கியத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான பெருமாள் முருகனுக்கு 2012ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பின் சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது.

கட்டுரை
க.சீ. சிவகுமார்  

இந்ந்தக் கட்டுரையில் வரும் ஆட்டோக்காரர்கள் ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களின் வகைமாதிரி அல்ல. அவ்வண்ணமே இதில் வரும் அப்பாவும் வகைமாதிரியோ உன்னத மாதிரியோ அல்ல.. எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் உண்டு. எந்த மாதிரி விலக்குகள் எப்படித் தேடிக்கொண்டு பரஸ்பரம் சந்தித்துக்கொள்கின்றன என்கிற விதி தெளிவுபெற முடியாதவண்ணமே இருக்கிறது. பெங்களூரில் இருந்து டி.வி பார்த்ததிலும் சில செய்திகள் படித்ததிலும் கொஞ்சம் விசுவாசம் வளர்த்திவிட்டேன். சென்னையில் சரியான மீட்டர் கட்டணம் வாங்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன. பயணிகளுக்குத் தூர அட்டவணைகள் வழங்கப்படப்போகின்றன, என ஆரம்பித்த செய்திகள் ஆட்டோவில் இருந்தே ஆர்.டி.ஓவைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அளவுக்குக் கனவுகளை எனக்குள் தூவிவிட்டன. இம்முறை சென்னை ச

சிறுகதை
சயந்தன்  

02.12.2012 பனிகொட்டிய காலை தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும் இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை. அவன் மழையின் ஓசையைத் திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச் செல்லத்தான் அலுப்பாயிருந்தது. விழிப்பு வந்துவிட்டதால் இனிஅலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல நேற்றிரவு கட்டிலில் விழுந்தபோது ஒருமணி. நேற்றென்றில்லை, அத

மதிப்புரை
அம்ஷன் குமார்  

சினிமா: சட்டகமும் சாளரமும் ஆசிரியர் : சொர்ணவேல் வெளியீடு : நிழல் 31/48 இராணி அண்ணா நகர், சென்னை 600 078. பக் : 198, விலை ரூ. 175/-& பல ஆண்டுகளுக்குமுன் சொர்ணவேலின் ஐ என் ஏ டாகுமெண்டரி படத்தைப் பார்த்தபொழுது தமிழ் அரசியல் டாகுமெண்டரி முதிர்ச்சியை எட்டியிருப்பதைக் காண முடிந்தது. சுபாஷ் சந்திர போஸ் தலைமையின்கீழ் இயங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு உகந்தாற்போல் உணரப்படாத ஒன்றாக இருந்து வந்தது. போஸுடன் நெருங்கிப் பழகியவர்களின் நேர்காணல்களுடன் ஏற்கனவே தமக்குக் கிடைத்த கோப்புக் காட்சிகளையும் இணைத்து எழுச்சிமிக்க ஒரு காலகட்டம் பற்றிய டாகுமெண்டரியைச் சொர்ணவேல் அதில் உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் அவருடைய தங்கம், வில்லு ஆகிய படங்களையும் பார்த்தபொழுது அவர் தமிழின் முக்கிய

மதிப்புரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

அப்பாவின் துப்பாக்கி (தன்வரலாறு) ஆசிரியர் : ஹினெர் சலீம் தமிழில் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் வெளியீடு : காலச்சுவடு பதிப்பக 669,?கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001. பக்கங்கள் : 112 | விலை ரூ.90 காடு என்கிறபோது அடர்ந்திருக்கும் மரங்கள், செடிகொடிகள், புதர்கள் காட்சிகளாக விரிகின்றன. அண்மையிற் சென்று பார்க்கிறபோது அவ்வடர்ந்த மரங்கள் தனித்தனிமரங்களாக கிளைகள், சிறுகிளைகள், கொம்புகள், இலைக்கூட்டங்கள் என்றிருக்கின்றன. இன்னும் சிறிது நெருங்கி, கூர்ந்து அவதானித்தால் அம்மரங்களுக்கிடை செடிகொடிகளும் முட்புதர்களும் புற்களும் காளான்களும் நின்றும் படர்ந்தும் இருப்பது தெரியவரும். இயற்கைச்சமூகத்தின் நலிந்த இப்பிரிவி னர் சுதந்திரமாய் அவரவர் உயிர் வாழ்க்கைக்கு, வளர்ச்சிக்கு, ஆரோக்கியத்திற்குத் தேவையானவ

உள்ளடக்கம்