தலையங்கம்
 

உலகப் புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் 2009ஆம் ஆண்டு, தான் வெளியிட்ட ஒரு நூலைத் திரும்பப் பெற்றிருக்கிறது. நூலின் பிரதிகள் சந்தையில் வாசகர்களுக்குக் கிடைக்காத வகையில் புத்தகத்தை மீண்டும் காகிதக் கூழாக மாற்ற முடிவு செய்திருக்கிறது. இந்துத்துவ அமைப்பான ‘சிக்ஷா பச்சாவோ அந்தோல’னின் கோரிக்கைக்குப் பணிந்து அல்லது அச்சுறுத்தலுக்குப் பயந்து பெங்குவின் இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறது. ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டாகப் புத்தக வெளியீட்டுத் துறையில் செயல்படும் பெங்குவின் இதுவரை ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டிருக்கிறது. மகத்தானவையும் குறிப்பிடத் தகுந்தவையுமான நூல்கள் மூலம் சிந்திக்கும் மனிதர்களுக்குத் துணையாக இருந்திருக்கிறது. உடன்பாடான கருத்துகளும் மாற்றுக் கருத்துக்களும் கொண்ட நூல்கள்

கட்டுரை
தேவிபாரதி  

திருச்சியில் பிப்ரவரி இரண்டாம் வாரம் நடைபெற்ற திமுக மாநாட்டுக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்தக் கட்சியால் இனி ஒருபோதும் 1980களுக்கு முன்பு போல போர்க்குணம் மிக்க ஒரு கட்சியாகச் செயல்படவே முடியாது எனத் தோன்றியது. சிறப்புப் பேச்சாளர்களின் வரிசையில் நடிகை குஷ்புவுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தைக் கண்டோ தப்பும் தவறுமான தமிழில் அவர் ஆற்றிய எழுச்சியுரையைக் கேட்டோ ஏற்பட்ட எண்ணம் அல்ல இது. குஷ்பு தனது உரையில் எங்கெல்லாம் ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிட வேண்டியிருந்ததோ அங்கெல்லாம் திரும்பத் திரும்ப ஒரு சொல்லைப் பயன்படுத்தினார். தமிழில் அதற்கு முன் அப்படியொரு சொல்லைக் கேட்டிராத நான் அது என்னவெனக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். அது அதிகம் என்ற சொல்லை ஒ

கட்டுரை
சாவித்திரி கண்ணன்  

இரண்டாவது அலைக்கற்றை 2ஜி ஏல விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்கள், தரகர் நீரா ராடியாவுடன் கருணாநிதி குடும்பத்தினர் நடத்திய உரையாடல்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கெனவே வெளியாகி விவாதிக்கப்பட்டுவிட்டன. ஆனபோதிலும், தி.மு.க தரப்பில் தாங்கள் எந்தவிதமான பேரங்களிலும், ஊழலிலும் சம்பந்தப்படவில்லை என்றும் மத்திய அரசின் கொள்கை முடிவையே ஆ.ராசா அமல்படுத்தினாரென்றும் கனிமொழியும் ஆ.ராசாவும் செய்யாத தவறுக்காகவே தண்டனை அனுபவித்தார்கள் என்றும் பேசப்பட்டு வந்தன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் டெல்லியில் சென்ற பிப்ரவரி 4ஆம் தேதி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 2ஜி அலைக்கற்றை ஊழலில் கலைஞர் தொலைக்காட்சி அடைந்த ஆதாயங்கள், அதை மறைக்கச் செய்யப்பட்ட மோசடிகள் ஆகியவற்

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

"நன்றி கடவுளே, ஒரு கொடுங்கனவு முடிவுக்கு வந்தது’’ என்றார் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி. ஜன் லோக்பால் மசோதா டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதை பாஜகவும் காங்கிரஸும் தடுத்ததையடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதாக அறிவித்தவுடன், ஜெட்லி வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இதுவரை டெல்லியில் அமைந்த ஆட்சிகளிலேயே ஆக மோசமானது (தங்களைக் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவிடாது தடுத்துவைத்திருந்த தங்களது பரம எதிரியான ஷீலா தீட்சித்தின் ஆட்சியை விடவும் மோசமானது) என்று அவர் கூறியிருப்பதன் மூலம் பாஜகவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சி எத்தகைய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது

அஞ்சலி: ரா.அ. பத்மநாபன் (2.4.1917 - 27.1.2014)
ஆ. இரா.வேங்கடாசலபதி  

‘பாஞ்சாலி சபதம்’, ‘குயில்’, ‘கண்ணன் பாட்டு’ ஆகியவற்றைப் பாரதியின் முப்பெரும் பாடல்கள் என்று சுட்டுவதுண்டு. பாரதியின் வாழ்நாளில் இவற்றுள் ஒன்று மட்டும்தான் முழுமையாக நூலாக்கம் பெற்றது என்ற செய்தி பாரதியின் அகால மரணத்தின்பொழுது பாரதி கருவூலம் எவ்வளவு முழுமையற்றதாக இருந்தது என்பதற்குச் சான்றாகும். பாரதியின் வாழ்நாளில் அவனுடைய ஒரு புகைப்படமும் வெளிவந்ததில்லை. இன்று ஐந்து படங்கள் தமிழுலகில் உலவுகின்றன. பாரதி என்ற பேராளுமையின் சித்திரம் பெருமளவு பொலிந்துள்ளதென்றால் ரா.அ. பத்மநாபன் என்ற தனிமனிதரின் பேருழைப்பு அதன் அடித்தளத்தில் அமைந்துள்ளது. 1917இல் பிறந்த ரா.அ.ப.வின் இயற்பெயர் வங்கிபுரம் புளியஞ்சேரி ராமஸ்வாமி அனந்த பத்மநாபன்.வங்கிபுரம் என்பது குடும்பப

பத்தி
கண்ணன்  

நண்பர் கோம்பை எஸ்.அன்வரின் ‘யாதும்’ ஆவணப்படத்தை சமீபத்தில் நாகர்கோவிலில் பார்த்தேன். ஆவணப்படங்கள் பற்றிய நுண்ணறிவு எனக்கு இல்லை என்றாலும் மிகுந்த உழைப்பைச் செலுத்தி அருமையாக எடுத்திருப்பதாகவே பட்டது. சில ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைச் கவனத்தில் கொண்டு அன்வர் திட்டமிட்டிருக்கும் இரண்டாம் பகுதியை மேலும் சிறப்பாகக் கையாள்வார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த மாதம் இந்த ஆவணப்படத்தை சென்னையில் பார்த்துவிட்டு நெக்குருகி வந்த கொடிக்கால் அப்துல்லா இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு நானும் ஒரு காரணம் என்று அன்வர் குறிப்பிட்டதாகச் சொன்னதும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். இந்த ஆவணப்படம் பற்றி ஒரு முறை கூட நான் அன்வரிடம் பேசிய நினைவில்லை. இருந்தாலும் கேட்கத் தயக்கம். நீண்ட உரையாடல் நடத்

உரை
பெருமாள்முருகன்  

நான் விரும்பிய வகையில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு எனக்குப் பெரிதாக அமையவில்லை. பேருந்துப் பயண ஒவ்வாமை எனக்கு உண்டு. அதனால் எப்போதாவது அரிதாகப் பேருந்தில் செல்ல நேரும் சமயங்களில்கூட என்னை எங்கும் அழைத்துச் செல்லமாட்டார்கள். இளவயதுப் பயணம் என்பது என் ஊரைச் சுற்றி அதிகபட்சம் பத்துக் கல் தொலைவுவரை இருக்கும். அருகில் சற்றே பெரிய நகரங்களாக இருந்த ஈரோடு, சேலம், நாமக்கல், ராசிபுரம் ஆகியவற்றைப் பதினான்கு பதினைந்து வயதிலேயே பார்த்தேன். எங்கள் தேவைகள் மிகவும் குறைவு. திருச்செங்கோட்டுச் செவ்வாய்ச் சந்தையும் சிறுகூடையும் போதும். என் அத்தையின் ஊர் அணிமூர். எங்கள் ஊரிலிருந்து ஐந்து கல் தொலைவு. அடிக்கடி செல்வது அங்கேதான். அத்தையின் கணவரை நான் பார்த்ததில்லை. அத்தைக்குத் திருமணமாகி மிகச் சில ஆண்டுகளி

கட்டுரை
சஞ்சயன்  

வாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள். நான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனதுக்கு ஆறுதலைத் தரும் அதேவேளையில், வாழ்க்கை தனது வீரியத்தை மனிதர்களிடத்தில் எவ்வாறெல்லாம் காட்டிப்போகிறது என்பதை அறியவும் தர

அஞ்சலி: பாலுமகேந்திரா (20.5.1939 - 13.2.2014)
தியடோர் பாஸ்கரன்  

இருபெரும் முதன்மை நடிகர்களின் காலம் அஸ்தமித்துக்கொண்டிருந்த ஆண்டுகளில், எழுபதுகளின் பிற்பாதியில், பெரிய ஸ்டுடியோக்கள் இழுத்து மூடப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், தமிழ்த் திரைவானில் சில நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் தோன்றின. இவர்களது படைப்புகள் நட்சத்திர ஆதிக்கத்தில் உருவான படங்களிலிருந்து உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் வேறுபட்டிருந்தன. அவர்களில் ஒருவர் புனே திரைப்படக் கல்லூரியிலிருந்து, சினிமாவை முறையாகக் கற்று தமிழ்த்திரைக்கு வந்தவர் பாலுமகேந்திரா. இலங்கையில் இவர் படித்த பள்ளியில் திரையிடப்பட்ட விட்டோரியா டி சிகாவின் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ படம் சினிமாவைப் பற்றிய ஒரு சிறு பொறியைப் பாலுமகேந்திரா மனதில் ஏற்றிவைத்தது. அதேசமயம் பிரிட்டீஷ் இயக்குனர் டேவிட் லீன், கண்டிக்கு அருகில் &

திரை
உமா வரதராஜன்  

பிறர் மனங்களின் அந்தரங்க அறைகளுக்கான சாவி தங்களிடம் இருப்பதாகப் பலரும் எண்ணிக்கொள்வதுண்டு. கிணற்றுநீரின் அடியில் ஒளிந்து கிடக்கும் பொருட்களை ஒரு மேலோட்டமான பார்வையில் அறிந்துகொள்வது சாத்தியமான காரியமா? வாழ்க்கைப் பயணம் என்பது நாம் தயாரித்துக் கொண்ட வரைபடத்திற்கு அமைவாக ஒருபோதும் இருப்பதில்லை.. நாம் கடக்கவிருக்கும் ஒவ்வொரு நிமிஷங்களும் நம்மால் முன் கூட்டியே ஊகிக்க முடியாத திசைகளைக் கொண்டிருக்கின்றன.. ஈரானின் முக்கிய இயக்குனர் அப்பாஸ் கியரோஸ்தமியின் சமீபத்திய [2012] திரைப்படமான லைக் சம்வன் இன் லவ் [Like Someone in love] ஐப் பார்த்தபோது இந்த எண்ணங்களே வலுப்பெற்றன. சப்தங்களாலும் இருளாலும் திரை நிறைந்திருக்கின்றது. காட்சி துலக்கம் பெறும்போது நம் முன்னே தெரிகின்ற அந்த இடம் இரவுக் களியாட்ட

சிறுகதை
வாஸந்தி  

எதிரில் விரிந்திருந்த அந்த வயலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த கிருஷ்ணதாஸின் கண்ணுக்கு அங்கு வெடிக்கக் காத்திருக்கும் பருத்திப் பூக்களோ அந்த வயல்காடோ தென்படவில்லை. வயலுக்கு அப்பால் தொலைவில் கேஜ்ரி மரக்காடு கண்ணில் பட்டது. அருகில் சென்றால் அவனை ஆட்கொள்ளுவதைப்போலப் படர்ந்து விரிந்த அடர்ந்த காடு. யாரும் வெட்டத் துணியாத மரங்கள். பிஷ்ணோய்களின் தெய்வம். அவர்களது கல்ப தரு - கற்பக விருட்ஷம். பிஷ்ணோய் சரித்திரம் பிறந்ததே அதை ஒட்டித்தான். அந்தச் சரித்திரமே இன்று பாரமாக முதுகில் அமர்ந்திருந்ததுபோல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் காட்டில் எத்தனையோ ஜீவராசிகள். புள்ளி மான்கள், அபூர்வமான சிங்காரா மான்கள், பல நிறப் பறவை இனங்கள். அந்த மரத்தையும் அவற்றையும் காப்பது பிஷ்ணோய் குலத்தின் தருமம். அவற்றை ரட்சிக்

சுரா பக்கங்கள்
 

மிகப்பெரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டுவிட்டேன். என், ‘ஒரு புளியமரத்தின் கதை’ யிலேயே ஆதிலட்சுமியை ஜொலிக்கும் கதாபாத்திரமாக உருவாக்கி எல்லோரையும் கிறங்கடித்திருக்க முடியும். என்ன செய்வது? துணிச்சல் இல்லை. அவள் அந்த நாவலில் அவளுக்குரிய இடத்தைப் பெறவில்லை என்றாலும் நுட்பமாக அதைப் படித்த வாசகர்களும்-வாசகிகளும்-பெண்மையின் ஜுவாலையை, கொழுந்துவிட்டு எரியும் அதன் வீரியத்தை நாவலில் வரிகளுக்கிடையில் கண்டுபிடிக்கத்தான் செய்தார்கள். இது என் கற்பனை அல்ல. உதாரணமாக, என் இலக்கிய நண்பன் வாய்விட்டுப் புலம்பினான். ‘பெண்மையின் நறுமண ஜுவாலையை ஏன் கண்ணில் காட்டாமல் ஒளித்து வைத்தாய்’. இவன் சிறுகச் சிறுக அழிந்து என் 47ஆவது வயதில் இல்லாமல் போனவன். அவன் பெயர் முக்கியம் இல்லை. ‘வெக

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

ஒருவிதத்தில் பார்க்கப்போனால் கிறிஸ்தவ வேதாகமம் மேற்கு ஆசியாவில் உருவான நூல். புதிய ஏற்பாட்டில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் எல்லாம் மேற்கு ஆசியாவில்தான் நிகழ்ந்தன. இயேசுவின் பிறப்பு (பெத்லகேம்), அவருடைய ஊழியம் (கலிலேயா), மரணம் (எருசலேம்) போன்றவை மேற்கு ஆசிய நகரங்களிற்தான் நடந்தன. ஏன் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கூடக் கிழக்காசிய நகரமான அந்தியோகியா-வில்தான் முதன்முதலாக உபயோகிக்கப்பட்டது. கிறிஸ்தவ வேதாகமம் காலனிய உச்ச நாட்களில் கீழைத் தேசங் களுக்கு அழையாது உட்புகுவு செய்தபோது மேற்கு ஆசியாவின் நூலாக அறிமுகமாகவில்லை. ஆங்கில ஆட்சியை உறுதியிடும் வெள்ளையரின் வீரகாவியக் கருவியாகத்தான் வந்தடைந்தது. ஆனால் இங்கிலாந்தை விட இந்தியாவுக்குக் கிறிஸ்தவ விவிலியத்தில் நெருங்கிய தொடர்பு உண்டு. அது பற்றிச்

மதிப்புரை
க. பஞ்சாங்கம்  

க. வை. பழனிசாமி ஆதிரை (நாவல்) காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் - 629 001 பக்.184 ரூ.140எடுத்துரைப்பில் அடிப்படையாக இரண்டு வகையான போக்குகள் இயங்குன்றன. ஒன்று, யதார்த்தத்திற்குள் இருந்து புனைவுகளை நோக்கி நகர்த்திச் செல்வது. இரண்டு, புனைவுகளின் ஊடே யதார்த்தங்களைச் சித்திரிப்பது. க.வை. பழனிசாமியின் ‘ஆதிரை’யில் இரண்டாவது போக்குப் பின்பற்றப்பட்டுள்ளது. சமூக வெளியில் மக்களை அவர்கள் சம்மதத்தோடேயே கொளுத்தி அந்த நெருப்பில் குளிர் காயும் ஆதிக்க சக்திகளின் நுண்ணரசியலைப் புரிந்துகொண்டு, அதே நேரத்தில் அந்த அதிகார சக்திகளுக்கு எதிராக, எதிராகக் கூட வேண்டாம்; அவற்றைப் பரவவிடாமல் ஒரு தடைச்சுவரை எழுப்ப ஒரு செங்கல்லைக்கூடத் தொட முடியாத அளவிற்குத் தனிமனிதர்களும் இயக்கங்களு

திரை
ரதன்  

மதிய உணவிற்காக விடுதி சாப்பாட்டுக் கூடத்துக்குச் செல்லும் போது அந்த ஹெலிகப்ரரைக் கண்டேன். எமது பாடசாலை விளையாட்டு மைதானத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. எமது பாடசாலைக்கு ஏன்? என்ற கேள்வி மனதினுள் எழ மைதானத்தையொட்டியுள்ள பாதையின் ஊடாக உணவு மண்டபத்தை அடைந்தபோது சாப்பிடுவதற்கான மூன்றாவது மணியும் அடித்துவிடவே உள்ளே சென்றுவிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மைதானத்துக்குள் இறங்கிய ஹெலியில் இருந்து இராணுவ அதிகாரிகள் இறங்கினார்கள். எனது சக மாணவர்கள் மத்தியில் இவர்கள் இங்கு ஏன் என்ற கேள்விகள் எழுந்தபோதும் இலகுவாக எங்களுக்கு விடையும் கிடைத்துவிட்டது. எமது பாடசாலைக்கு அடுத்துள்ள “பழைய பூங்கா”வினுள் இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டி ருந்தது. எமது பாடசாலையையும் பூங்கா

பதிவு
சுகுமாரன்  

நவீனத் தமிழ்க் கவிதை அல்லது புதுக்கவிதை உரத்த குரல் வாசிப்புக்குப் பொருத்தமானதல்ல. புதுக் கவிதையின் தோற்றத்துக்கான காரணங்களில் ஒன்று மரபுக் கவிதையின் யாப்புக்குக் கட்டுப்பட்ட முழக்கம். கவியரங்க மேடைகளில் வெற்றான சில வரிகளை இரண்டு முறை அழுத்திச் சொல்லி விட்டால் அது கவிதையாக்கும் என்ற பாவனையைக் கொடுத்து விடுகிறது. அதற்கு எதிரானதாகத்தான் புதுக்கவிதை உருவானது. பெரும்பாலும் உரைநடை சார்ந்து எழுதப்படும் புதுக் கவிதைகள் மௌன வாசிப்புக்குப் பொருந்துபவையே தவிர மேடைகளில் வாசிக்கப் பொருத்தமற்றவை. கவிதை வாசிப்புப் பற்றி எனக்கிருந்த கருத்துகள் இவை. இந்தக் கருத்துகள் அவ்வப்போது ஆட்டம் காணவும் செய்திருக்கின்றன. பிறமொழிக் கவிஞர்கள் பங்கேற்கும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணங்களில்