தலையங்கம்
 

குடிநீர் ஒரு விற்பனைச் சரக்கு என்பது புதிய முதலாளியத்தின் கருத்து. உண்மையில் அது குடிமக்களின் உரிமைப் பொருள் என்பதே சட்டம். குடிமக்களின் அடிப்படை உரிமையான இயற்கை வளங்கள் பொருட்கள் அனைத்தையும் நுகர்வுக் கலாச்சாரம் அபகரித்து வருகிறது. கானகம், கனிமப் பொருட்கள், காற்று, நிலம்,நீர் - அனைத்தையும் புதிய வணிகக் குத்தகைகள் கபளீகரம் செய்து வருகின்றன. மக்களின் இயல்பான வாழ்வுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசுகளே அதற்குத் துணை போகின்றன என்பது வேதனைக்குரியது. அரசுகளின் இந்த நடவடிக்கை வேதனையானது மட்டுமல்ல மக்களின் அடிப்படை உரிமையை மீறுவது என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கிறது. மக்களுக்கு உரிய இயற்கை ஆதாரங்களை அரசே குத்தகைகளுக்கு ஒப்புக் கொடுப்பது அவர்களை மீளாத் துன்பத்தில் தள்ளிவிடுவதாகும் என்கிறத

கண்ணோட்டம்
கண்ணன்  

2012இல் அம்பேத்கர் கார்ட்டூன் பற்றிய விவாதம். இப்போது புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’, ‘பொன்னகரம்’ சிறுகதைகள் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரம். இரண்டுமே அடிப்படையில் கருத்துச் சுதந்திரம் பற்றியவைதான். அம்பேத்கர் கார்ட்டூன் விஷயத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வெளிவந்த அரசியல் கருத்துப்படத்தைப் பல தலித் அறிஞர்கள் வாசித்தவிதம், புதிய வெளிச் சத்தின் பாய்ச்சலாக இருந்தது; வாசிப்பின் சாத்தியங்களை வெளிப்படுத்தியது. சங்கர் என்ற கே. சங்கரன் பிள்ளையால் தீட்டப்பட்ட கார்ட்டூனை (ழிசிணிஸிஜி) பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதேநேரம் அந்தக் கார்ட்டூன், ஒரு வகுப்பில், நமது சாதிய அமைப்பில் தோய்ந்த மாணாக்கரால்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஒருமுறை ‘படர்தாமரை’ என்ற தலைப்பில் அன்பாதவன் எழுதிய கவிதையைத் தலித் படைப்புக்கான உதாரணமாகக் காட்டி வகுப்பறையில் விளக்கிக்கொண்டிருந்தேன். அக்கவிதையில் இடம்பெறும் சில வசைச் சொற்களைத் தலித் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி விவாதித்துக்கொண்டிருந்தபோது “பல சாதியினரும் இதுபோன்ற கெட்ட வார்த்தை பேசும்போது இதைத் தலித்துகள் வாழ்க்கையாக மட்டும் எப்படிச் சொல்ல முடியும்?” என்று மாணவர் ஒருவர் இடைமறித்தார். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் புழங்கும் வகுப்பறையில் சாதிய அமைப்போடு ஏதோவொரு விதத்தில் தொடர்புடைய படைப்பை நடத்தும்போது மாணவர்களில் ஒவ்வொரு தரப்பும் எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதை யோசிக்க வைத்த தருணம் அது. அதேபோலப் பெண் வாசத்திலும் கள் வாசத்திலும் மூழ்கிக் கிடப்பதான &ls

சுரா பக்கங்கள்
சுந்தர ராமசாமி  

நம் படைப்புச் சாதனையாளர்களோடு புதுமைப்பித்தனை ஒப்பிட்டுப் பேசும் பார்வைகள் பலவும் இன்று இருப்பது போன்ற தோற்றம் நமக்கு இருக்கலாம். தொ.மு.சி. ரகுநாதன், கைலாசபதி, க.நா.சு. போன்ற பலரும் தங்கள் மதிப்பீடுகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். சமீபகாலமாகத் தலித் பார்வைகளும் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால், ஆழ்ந்து பார்த்தால் இரண்டு பார்வைகளே இன்று வரையிலும் பொது அம்சங்கள் அதிகம் இல்லாமல் உருத்திரண்டு வந்திருப்பது தெரியும். பிற பார்வைகள், நான் குறிப்பிடவிருக்கும் இரண்டு பார்வைகளில் ஏதோ ஒன்றின் வகைபேதமே என்பதும் புலப்படும். புதுமைப்பித்தனைப் பற்றிய தலித் பார்வை இன்னும் வலிமையும் செழுமையும் பெறவில்லை. அ. மார்க்ஸின் பார்வை இலக்கிய அனுபவம் சார்ந்த செழுமை இல்லாதது. மேற்கத்திய கருத்துகளை எந்

கட்டுரை
தேவிபாரதி  

ஜனநாயகத்தில் உச்ச அதிகாரம் பெற்றவர்கள் மக்களே என்பது ஒரு வழமையான நம்பிக்கை. இது நவீன யுகத்தின் மூடநம்பிக்கைகளில் ஒன்று; அதே அளவுக்குப் பழமையானது. ஆனால் இந்த இரண்டு கூற்றுக்களில் எந்த ஒன்றையும் உடனடியாக மறுக்க முடியும். அல்லது ஏற்க முடியும். கடந்த காலங்களில் நமது ஜனநாயக அமைப்பின் மீதான பிடியை இந்திய வாக்காளர்கள் பலமுறை நிரூபித்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தியத் தேர்தல்களின் கதையை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தாலே போதும். நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒரு கட்சியின் அதிகாரத்தை வெறும் இருபதே ஆண்டுகளில் ஆட்டம் காண வைத்து தமது ‘நன்றிகெட்டதனத்’தைக் காட்டிக்கொண்டவர்கள் இந்தச் சாமான்ய இந்திய வாக்காளர்கள். 1967இல் தமிழகம் உட்பட எட்டு மாநிலங்

நேர்காணல்
 

பொ. கருணாகரமூர்த்தி, ஈழத்திலிருந்து (புத்தூரிலிருந்து) 1980 இல் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து அங்கேயே வாழ்கிறார். ஈழத்தின் புனைகதையாளர்களில் பொ. கருணாகர மூர்த்திக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கதை சொல்வதில், சுவாரஷ்யத்தை அளிப்பதில் அ. முத்துலிங்கத்தைப்போல வல்லாளர். இவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் முதன்மை யானவர். வாழ்க்கை எதிர்கொள்ளும் சவால்களை, மனித நடத்தைகள் உருவாக்கும் நன்மை தீமைகளை பொ. கருணா கரமூர்த்தியின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. 1985இல் கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற “ஒரு அகதி உருவாகும் நேரம்’’ மூலம் கவனிப்பைப் பெற்ற பொ. கருணாகரமூர்த்தி, இன்று தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இதுவரையில் கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத்

அம்பேத்கர் - காந்தி முரண்பாடு
 

அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழித்தல்’ (Annihilation of Caste) கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முந்தைய, நிகழ்த்தப்படாத உரை. முதல் முறை அதைப் படித்தபோது ஒரு மங்கலான அறையினுள் யாரோ வந்து ஜன்னல்களைத் திறந்து விட்டதுபோல உணர்ந்தேன். டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரைப் படிப்பது, பெரும்பாலான இந்தியர்கள் பள்ளிகளில் படித்து நம்புகின்றவற்றிற்கும், நாம் நம்முடைய தினசரி வாழ்க்கையில் பார்க்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளிகளை இணைக்கும் வல்லமை கொண்டது. என்னுடைய தந்தை ஒரு இந்து. பிரம்மசமாஜத்தவர். வளர்ந்து பெரியவளாகும்வரை அவரை நான் சந்திக்கவேயில்லை. நான் கம்யூனிச ஆட்சியின் கேரளத்தில் ஒரு சிறு கிராமமான அய்மனத்தில் என்னுடைய தாயுடன் ஒரு சிரியன் கத் தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்தேன். ஆனாலு

சிறுகதை
மணி ராமலிங்கம்  

டெமொல்லோ மேடம் அறை விசாலமாயிருந்தது. கௌரி முதல் முறையாய் அங்கு வருகிறாள்; மெல்லிய பதற்றம். தாமன் - அவளது மகன் - பதற்றப்படாமலிருந்தான். ரெட் கார்டைக் கையில் வைத்திருந்தான். அதைச் சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தான். கௌரி அவனை முறைத்துப் பார்த்தாள். உடல்மொழியைச் சரி செய்து பவ்வியமாக்கு என்பதன் பொருள் அது. அவனிடம் எந்த மாற்றமுமில்லை. அம்மாவின் பார்வைக்கு மதிப்புக் கொடுக்கும் வண்ணம், ரெட் கார்டைச் சுழற்றுவதை மட்டும் நிறுத்திக்கொண்டான். நின்றுகொண்டிருந்த தனது சக உதவியாளரை அனுப்பிவிட்டு, தாமன் பக்கம் திரும்பினார். “ஹலோ ஏஞ்சல், எப்படியிருக்கிறாய்.. நான் உனக்கு என்ன சேவை செய்யட்டும்..” என்று சிரித்தபடி கேட்டார். “இந்த அறைக்கு வரும்வரை நன்றாகத்தானிருந்தேன்.. மேடம்.. அம்ம

பயணம்
கமலா ராமசாமி  

ஜம்போ, போலே, போலேபோலே போன்ற ஆப்பிரிக்கப் பழங்குடிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வார்த்தைகள் சுற்றுலா முடிந்து வந்து வாரங்கள் ஆன பிறகும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. என் இரண்டாவது மகள் தைலா விடமிருந்து ஈமெயில் ஒன்று வந்தது. “அம்மா, பிறந்த நாள் பரிசாக ராமும் நானும் உன்னை கென்யா அனிமல் சஃபாரிக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். தம்பி கண்ணனிடம் தெரியப்படுத்து. தடையில்லாமல் லகுவாக, மகிழ்ச்சியாக பிரயாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏஜென்சி மூலம் செய்யவேண்டும். சிறிது காலம் பிடிக்கும். உனக்கான டிக்கட்டை இந்தியாவில் போடுவதுதான் வசதி என்பதால் தேதி உறுதிப்பட்டதும் கண்ணனிடம் பேசுவேன்” என்று. அன்று என் பிறந்தநாள். அருமையான பிறந்த நாள் ப

மதிப்புரை
செல்வ புவியரசன்  

எழுபதையொட்டிய ஆண்டுகளில் சென்னை மாநகரில் ஏற்பட்ட தண்ணீர்ப்பஞ்சத்தின் பின்னணியில் சகோதரிகள் இருவருக்கு இடையிலான இணக்கமும் பிணக்கமுமான உறவையும் அதற்கான காரணங்களையும் பற்றி அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ நாவல் வெகுவாக அறியப்பட்டது. மனித உறவுகளுக்குள் எழும் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சாமர்த்தியங்களையும் சமாதானங்களையும் பற்றிய அந்நாவலில் தண்ணீரின் பொருட்டு மனிதர்கள் இரவும் பகலுமாய்க் கையில் குடங்களோடு அலைந்து திரிந்த காட்சிகளை விரிவாகவே விவரித்திருப்பார் அசோகமித்திரன். சென்னை போன்ற மாநகரமொன்றில் தண்ணீர் தேடி அலையும் மனிதர்களிடத்தில் சொந்த வீடு வைத்திருப்பவர், வாடகை வீட்டில் வசிப்பவர் என்ற பாகுபாடுதான் முதன்மை பெறுகிறது. ஆனால் கிராமங்களிலோ சாதி, மதப் பிரிவினைகள் வெள

பத்தி
வே. வசந்தி தேவி  

முன் குறிப்பு: எனது சென்ற பத்தியை நினைவுகூர வேண்டுகிறேன். பெண் சிசுக் கொலை, கருக் கொலை தொடர்பான பொது விசாரணையை ஆணையம் நடத்த விடாமல் தமிழக அரசு தடை செய்ய முயன்றது. பிரச்சனை கள் குறித்து பதில் அளிக்க வேண்டிய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அரங்கத்திற்கு வராமல் தடுக்கப்பட்டனர் என்பதைச் சொல்லியிருந்தேன். அந்தக் கசப்பான, ஏமாற்றமான அனுபவத்திற்குப் பின், என் திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பல யுக்திகளைக் கையாள வேண்டியிருந்தது. எனது பணிக் காலத்தில் தமிழக மகளிர் ஆணையத்திற்குச் சட்ட அதிகாரம் அளிக்கப்படவில்லை. நான் பொறுப்பேற்றபொழுது ஒரு சில நாட்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளுமே கிடைக்கவில்லை. என் பொறுப்பு முடிந்த உடனே சட்ட அதிகாரம் அளிக்கும் ஆணை பிறப

மொழிபெயர்ப்பு
தமிழில்: யுவன் சந்திரசேகர்  

2011 ஜனவரி முதல் இரண்டு வாரங்களில், பெங்களூரில் சங்கம் ஹவுஸ் பன்னாட்டு எழுத்தாளர் முகாமில் பங்கேற்றேன். நான் அங்கிருந்து கிளம்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் வந்து சேர்ந்தார் ஜோஆ. ஐரோப்பிய உயரமும், நிறமும். மழிக்கப்படாத ஒருவாரத் தாடியும் வழக்கமாக ஐரோப்பிய முகங்களில் காணக்கிடைக்காத தயக்கமும் மிளிரும் முகம். தமது ஆங்கிலம் குறித்து மெல்லிய போதாமை உணர்வு கொண்டவர் - என்னைப்போலவே - என்பது பின்னர் உரையாடும்போது தெரியவந்தது. அவர் ஐரோப்பியர் அல்ல என்பதும்தான்! அனைவரும் கூடித் தத்தமது படைப்புகளை வாசித்தளித்த சிறு வைபவமொன்றில், முதன்முறையாக ஜோஆவின் ’தம்பதியர்’ கதையைக் கேட்டேன். ஜோஆ பிரெசீலிய மொழியில் வாசித்தார். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் திருமதி உஷா ராஜகோபாலன் ஆங

பத்தி
சுகுமாரன்  

தாயன்பு, தந்தைப் பாசம், சகோதர நேசம், ரத்த பந்தம், ஒட்டுறவு இவையெல்லாம் பிறவிக் குணங்கள் என்று நம்பிய காலமிருந்தது. தலைமுறை தலைமுறையாகக் குருதியில் கொப்பளிக்கும் ஆதார உணர்வுகள் இவை என்ற நன்மார்க்கச் சிந்தனை இருந்தது. இவையெல்லாம் மரபணுவில் இரண்டறக் கலந்திருந்து தொடர்பவையல்ல, நாமாக உருவாக்கி நமது சுயநலத்துக்காகப் பேணிக்காப்பவைதாம் என்பது. வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒன்று; அண்மையில் நேர்ந்த அனுபவம் இந்தத் திருத்தல்வாதக் கருத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் இருக்கின்றன. பாம்பின் நிறத்தில் பெண்ணும் கருஞ்சாந்து நிறத்தில் ஆணுமான இந்தப் பூனைகளைக் காலச்சுவடு வாசகர்கள் 160ஆவது இதழில் சந்தித்திருப்பதை நினைவுபடுத்த விரும்ப

உள்ளடக்கம்