மாற்றுப் பாலினத்தவரை மூன்றாம் பாலினம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 15ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில் அங்கீகரித்திருக்கிறது. இந்திய சமூக, சட்ட வரலாற்றில் இது ஒரு திருப்புமுனைத் தீர்ப்பு. சமூக அளவிலான இந்த நீதித்துறை ஏற்பளிப்பு, பண்பாட்டு அடிப்படையிலும் மிகுந்த கவனத்துக்குரியது. மனித குலம் ஆண், பெண் என்று உயிரியல் ரீதியாக வேறுபடுத்திப் பார்க்கப்பட்ட முதல் தருணத்திலிருந்தே இந்த இரு பாலினத்திலும் சேர்க்கவியலாத மாற்றுப் பாலினமும் சமூகத்தின் அங்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்தியப் பண்பாட்டுப் பெட்டகமாகப் போற்றப்படும் மகாபாரதக் காவியத்திலும் புனித நூலான விவிலியத்திலும் இஸ்லாமிய இலக்கியத்திலும் நபும்சகர், அலி, ஹிஜரா என்ற பெயர்களில் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கி

கண்ணோட்டம்
கண்ணன்  

ஜோ டி குருஸ், மோடிக்கு ஆதரவாக முகநூலில் வெளியிட்ட அறிக்கை எழுப்பிய விவாதம் முக்கியமானது. படைப்பாளிக்கும் படைப்புக்குமான உறவு, எழுத்தாளரின் கருத்துரிமை, மொழி பெயர்ப்பாளரின் உரிமை, பதிப்பாளரின் உரிமை தொடர்பான முக்கியமான பல கருத்துகள் இவ் விவாதத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இவை எழுப்பியிருக்கும் விவாதப் புள்ளிகளைப் பற்றித் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தக் குறிப்பு இவ்விவாதம் எழுப்பிய மேற்படி பிரச்சனைகள் தொடர்பானது அல்ல. இந்துத்துவத்திற்கு எதிரானதாகக் கருதி மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று பரிசீலிப்பதே இக்குறிப்பின் நோக்கம். ஜோ டி குருஸ் மேற்படி அறிக்கை வெளியிட்ட ஓரிரு நாட்களில் அவருடைய ‘ஆழி சூழ் உலகு’ நாவலை ஆங்கிலத்தில்

கட்டுரை
சு.கி. ஜெயகரன்  

பனியுகங்களின் போதும், கற் காலத்தவர் வாழ்ந்த காலத்திலேயும், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன் வரையிலும், இலங்கை அன்று இந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இருந்தது. சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த ஆதிமனிதயினத்தவர், அன்றிருந்த தென்னிந்திய - இலங்கை ஒன்றுபட்டிருந்த நிலப்பரப்பில் பரந்திருந்த சதுப்புநிலக்காடுகள், புல்வெளிகள், மணல்வெளிகள் எங்கும் திரிந்து, வேட்டையாடியும், உணவு தேடியும் அவ்வப்போது அங்கு தங்கியும் வாழ்ந்திருந்தனர். கடைசிப் பனியுகத்திற்குப்பின் கடல் மட்டம் உயர்ந்து, இலங்கை தலைநிலத்திலிருந்து அறுபட்டுத் தீவாக உருவாகியது. அதற்குப்பின், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிறுசிறு அலைகளாக, சிறுசிறு குழுக்களாக தரை வழியாக வந்து கொண்டிருந்த ஆதிமனிதக் குடியேற்றங்கள் நின்றுபோயின. அதற்குமுன் அங்கு சென்

தேர்தல் சிறப்புப் பகுதி
பி.ஏ. கிருஷ்ணன்  

ஓட்டுச்சாவடியை எங்கள் வீட்டுவாசலிலிருந்து பார்க்க லாம். அவ்வளவு அருகில் இருந்தது அது. நானும் எனது மனைவியும் சாவடிக்குச் சென்றபோது கூட்டம் அதிகம் இல்லை. நான் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டேன்; எனது மனைவி பாரதீய ஜனதா கட்சிக்கு. எனக்குத் தெரிந்து காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டவன் நான் ஒருவன்தான். அஜய் மாக்கனுக்கு ஓர் ஓட்டு நிச்சயம். எனது காலனியில் வசிப்பவர்கள் எல்லோரும் பாரதீய ஜனதா கட்சிக்குத்தான் ஓட்டுப்போட்டிருப்பார்கள். எங்களுக்கு உதவிசெய்யும் பணியாளரின் காலனியில் எல்லோரும் ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் ஓட்டுப்போட்டார்களாம். எனது காரோட்டியும் ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் ஓட்டுப்போட்டார். தில்லியில் உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப்போட்டதாகத் தெரியவருகிறது. யார் ஆட்சிக்

தேர்தல் சிறப்புப் பகுதி
ஸ்டாலின் ராஜாங்கம்  

பெரும்பான்மைவாதம் என்றாலே அவற்றை மதத்தோடு தொடர்புபடுத்தி மதப் பெரும்பான்மைவாதம் என்ற சொல்லாக மட்டுமே புரிந்துக்கொள்ளும் போக்கு இங்கிருக்கிறது. ஆனால் சாதிப்பெரும்பான்மை வாதம் என்ற ஒன்றும் உண்டு என்பதோ, அதுவே இன்றைய தேர்தல்முறையில் அரசியல் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் அழுத்தமான காரணியாக இருக்கிறது என்பதோ பலருக்கும் தெரிவதில்லை. இந்தியத் தேர்தல்முறையின் பெரும்பான்மைவாதம் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அம்பேத்கர் சொல்வதைப்போல, இந்தியாவின் சனநாயகம் வகுப்புப் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்தியா முழுக்க எண்ணிக்கையில் அதிகமுள்ள சாதியென்று எதுவும் கிடையாது. எனவே ஒவ்வொரு பகுதியிலும் எண்ணிக்கையில் பலமுள்ள சாதியாக எது இருக்கிறதோ அது அப்பகுதியின் அரசியல் அ

தேர்தல் சிறப்புப் பகுதி
க. திருநாவுக்கரசு  

சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் என்பது மக்களாட்சியின் ஒரு அம்சம் மட்டுமே. பெரும் பான்மையானவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது ஒன்று மட்டுமே மக்களாட்சியின் அம்சம் அல்லது தலையாய அம்சம் என்றால், ஹிட்லரின் ஆட்சி உட்பட பல கொடூரமான அரசுகளை நாம் மக்களாட்சி என்று அங்கீகரிக்க வேண்டியிருக்கும். கருத்துச் சுதந்திரம், பாலின சமத்துவம், சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவது, குடிமக்களின் அனைத்துப் பிரிவினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் அவர்களுக்குச் சம வாய்ப்புகளை உறுதிபடுத்துதல், சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டுதல் ஆகியவை மக்களாட்சியின் பிற தலையாய அம்சங்கள். ஆக, இன்று இந்தியாவில் உறுதியாக நிலைகொண்டிருக்கும் மக்களாட்சி அரைகுறையானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. ஆனாலும்

தேர்தல் சிறப்புப் பகுதி
ச. கோபாலகிருஷ்ணன்  

இந்திய நாட்டின் 16ஆவது மக்களவைத் தேர்தல், இந்த மாதம் தொடங்கி 15 கோடி புது வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 2004லிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சி இந்த முறை மிகப் பலவீனமாகத் தேர்தலை எதிர்கொள்கிறது. ஊழலும் விலைவாசி உயர்வும் தலைவிரித்து ஆடுவது அக்கட்சியின் ஆட்சி மீதான மக்களின் கோபத்துக்கு வித்திட்டுள்ளன. காங்கிரசுக் கட்சி தன் பலவீனத்தை உணர்ந்திருப்பது தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி, நடப்பு நிதியமைச்சர் ப. சிதம்பரம், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தேர்தலில் போட்டியிடாததிலிருந்து தெரிகிறது. இதைவிட காங்கிரசைத் தலைமுறை தலைமுறையாகத் தலைமை தாங்கிவரும் நேரு குடும்ப வாரிசும் அக்கட்சியின் துணைத் த

அஞ்சலி: தி.க. சிவசங்கரன் (30.03.1925 - 25.03.2014)
ஆ. சிவசுப்பிரமணியன்  

தி.க.சி என்று நண்பர் குழாமாலும், எழுத்தாளர்களாலும் உரிமையுடனும் அன்புடனும் அழைக்கப்பட்ட தி.க. சிவசங்கரன் 25.03.2014இல் மறைந்தது தீவிர வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வருத்தமளித்த செய்தியாக அமைந்தது. திருநெல்வேலி நகரில் 30.03.1925ஆம் ஆண்டில் பிறந்த தி.க.சி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் மாணவராக இருந்த காலத்திலேயே இடதுசாரி இயக்கத்துடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ‘இளந்தமிழர்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நண்பர்களின் துணையுடன் நடத்தத் தொடங்கியது அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சியின் தொடக்கம். திருநெல்வேலியில் செயல்பட்டு வந்த தாம்கோஸ் வங்கியில் பணியில் சேர்ந்த இவர் வங்கிப் பணிக்குள் மட்டுமே நின்றுவிடவில்லை. தீவிர வாசகராகச் செயல்பட்டதுடன், இடதுசாரிச் சிந்தனைய

கட்டுரை
 

அதற்கும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியின் மகாத்மியம் இந்திய தேசிய இயக்கத்தின் காற்றோட்டத்தில் ஒரு பாய்மரமாக உயர்ந்து அலைவீசியிருந்தது. அவர் உலகின் கற்பனையை ஈர்த்திருந்தார். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களை நேரடிக் களச்செயல்பாட்டிற்குள் ஈடுபடுத்தியிருந்தார். அவர் அனைவரின் கண்களுக்குமான ஈர்ப்பு. தேசத்தின் குரல். 1931இல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தி முழுமையான நம்பிக்கையுடனும் நிதானமாகவும் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதி என்று அறிவித்தார். பொதுவெளியில் அம்பேத்கருடனான அவருடைய முதல் மோதல் (தீண்டப்படாதவர்களுக்குத் தனித் தொகுதிகள் கேட்கும் அம்பேத்கரின் திட்டம் குறித்து) நிகழ்ந்த அந்த மாநாட்டில் இப்படிப் பேச காந்தியால் முடிந்தது, “நான்

திரை
அம்ஷன் குமார்  

கோம்பை எஸ். அன்வர் தான் மட்டுமின்றித் தன்னைப்போன்ற எண்ணற்ற முஸ்லீம்களும் தங்களது வேர்களைத் தேடிப் போகிறார்கள் என்பதை ‘யாதும்’ விவரணப்படத்தின் முகவாயிலில் தெரிவிக்கிறார். உலகம் முழுவதிலும் இஸ்லாம் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையில் அன்வரின் இந்த முயற்சி அணுகப்படவேண்டும். அன்வர் இஸ்லாமிற்கு எதிரான விமர்சனங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்கவில்லை. எவர்மீதும் வேறுபாடான கருத்துகளையும் முன்வைக்கவில்லை. வேர்கள் எங்கும் கிளைத்து ஊடுருவியுள்ளன. தனக்கான வேர்கள் எவை என்பதைத் தேடுவதிலேயே ஒருவரின் விவேகம் வெளிப்படுகிறது. இஸ்லாம் எந்தெந்தக் காலக்கட்டங்களில் எவ்வாறெல்லாம் தென்னிந்தியாவில் நுழைந்தது என்பனவற்றிற்கெல்லாம் ஆவணச்சான்றுகள் தந்துகொண்டே சென்றாலு

அஞ்சலி: காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (06.03.1927 - 17.04.2014)
சுகுமாரன்  

எழுத்தாளர்கள் சிலர் மீது வாசகர்கள் சிலர் கொள்ளும் காதல் சில சமயம் விசித்திரமானது. தர்க்கங்களுக்குள் அடங்காதது. ஆனால் இலக்கிய அடிப்படையிலானது. தற் செயலாகவோ அல்லது ஆர்வம் ததும்பிய தேடலின் விளைவாகவோ வாசகன் முதலில் தான் கண்டடையும் எழுத்தாளனின் படைப்புகளால் ஈர்க்கப்படுகிறான். தொடர்ந்து வாசிக்கிறான். வாசிப்பின் ஏதோ தருணத்தில் அந்த எழுத்தாளனின் செல்வாக்கு வாசகனின் சிந்தனையிலும் உணர்விலும் கலக்கிறது. அந்த எழுத்தாளன் வாசகனின் வாழ்க்கைக் கணங்களைத் தீர்மானிக்கும் ஆளுமையாக மாறுகிறான். கடந்த முக்கால் நூற்றாண்டில் வாசகர்களை அவ்வாறு பாதித்த எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். அவரைவிடவும் ஆழமான எழுத்தாளர்கள் உண்டு. அவரைவிடவும் கருத்தாக்கப் பிடிப்புள்ள படைப்பாளிகள் உண்டு. அவரைவிடவும் ஜனரஞ்சகம

சிறுகதை
 

ஒரு நாள் காலை ஒன்பது மணிக்கு, பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், ஹவானா ரிவேய்ரா ஹோட்டலின் மேல் தளத்தில் நாங்கள் காலை உணவை அருந்திக் கொண்டிருந்தபோது கடலிலிருந்து ஒரு பேரலை எழுந்து தடுப்புச் சுவரையொட்டிய சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார்களையும் நடைபாதையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் தூக்கி எறிந்தது. அவற்றில் ஒரு கார் ஹோட்டல் பக்கமாக வந்து பதிந்தது. அந்த மோதல் கட்டடத்தின் இருபது தளங்களிலும் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது போல பீதியை விளைவித்தது. நுழைவாயிலில் இருந்த பிரம்மாண்டமான கண்ணாடி ஜன்னலைத் தூளாக்கியது. தளத்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் அமர்ந்திருந்த இருக்கைகளோடு காற்றில் வீசியெறியப்பட்டார்கள். கண்ணாடியின் ஆலங்கட்டி மழைச் சிதறலில் சிலர் படுகாயமடைந்தார்கள். அந்தப் பேரலை வலுவா

சிறுகதை
யுவன் சந்திரசேகர்  

கேப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் இறந்துவிட்டதாக இணையதளத்தில் வதந்தி பரவியபோது, உலகம் முழுவதும் உள்ள அவரது வாசகர்கள் பதறியிருப்பார்கள். வெயிலுமுத்து ஒருபடி அதிகமாகப் போனார். மார்க்கெஸ் நினைவாக ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டும் என்றும், தேர்வாகும் பத்துக் கதைகளைத் தொகுப்பாக வெளியிடலாம் என்றும், ஒரே பரிசாகத் தங்கமுலாமிட்ட குபேரன் பொம்மை (laughing Buddha என்றும் சொல்கிறார்கள்) வழங்குவது என்றும் முடிவெடுத்தார். எதனால் அப்படியொரு பரிசைத் தீர்மானித்தார் என்று நாங்கள் கேட்கவில்லை; வெயிலுமுத்துவின் மனம் செயல்படும் விதம் அப்படி. நல்ல மழைகொட்டிய நாளில் வெயிலின் அவசியத்தை வலியுறுத்தி அவர் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னால் காரணம் புரியும். உலகம்னு நாம நம்பிக்கிட்டிருக்கிறதே வெயிலைத் தாங்க. யோசிச்சு

நாவல் பகுதி
 

இறந்த உடலில் இருந்து வரும் துர்நாற்றம் திருமணமாகாத அருட்தந்தை ஸோசிமாவின் உடலை அடக்கம் செய்வதற்காக, எப்போதும் கடைபிடிக்கப்படும் திருச்சபையின் சட்டப்பூர்வமான சடங்குகளை வழக்கப்படி செய்துகொண்டிருந்தனர். துறவிகளின் உடல்களும் கடுந்துறவறத்தை மேற்கொள்ளும் துறவிகளின் உடல்களும் வழக்கப்படி குளிப்பாட்டப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்திருந்த விஷயமே. ‘துறவிகள் கடவுளைச் சரணடையும்போது (பிரார்த்தனைப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது) அதற்காக நியமிக்கப்பட்ட துறவி மட்டும் முதலில் அவர்களுடைய உடலை மென்துணியால் வெந்நீர் கொண்டு துடைத்துவிட்டுப் பிறகு புருவத்திற்கு மேல், கை, கால், பாதங்களில் சிலுவைக் குறியிட வேண்டும்; அதற்கு மேல் எதுவும் செய்யக் கூடாது’ என்ற காரணத்தால் இந்தச் சடங்குகளையெல்ல

பத்தி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

அகிலத்தை அசத்தும் செய்தியாக இல்லா விட்டாலும் உங்கள் புருவங்களை சற்றுக் கிளர்ச்சியடைச் செய்யும் சங்கதி ஒன்று சொல்கிறேன். நவீன இயேசுநாதர் வரலாறு கிறிஸ்துவத்தைத் தழுவிய ஐரோப்பாவிலோ, அல்லது கிறிஸ்தவர்களுக்காகவோ எழுதப் படவில்லை. பல சமய, பல இன நாடான இந்தியாவில் எழுதப்பட்டது; அதுவும் ஒரு இஸ்லாம் மதத்தினருக்காக. எழுதப்பட்ட மொழிகூட இந்திய மொழியில் அல்ல; அன்று ஆட்சியிலிருந்த அன்னிய பாஷையான பாரசீக மொழியில். இந்த வரலாற்றை உருவாக்கியவர் பிரபல ஜேசு சபை (Society of Jesus) பாதிரியார் பிரான்சிஸ் சவரிராயரின்(1506 - 1552) உறவினரான ஜெரோம் சவரிராயர்(1549 -1617). இவரின் மொழியைச் செம்மைப்படுத்தியவர் லாகூரைச் சேர்ந்த Abdul-Sattar b. Qasim. இது எழுதப்பட்ட ஆண்டு 1602. இந்த இயேசு பற்றிய சரித்திர வரலாறு உருவாக

 

சாதி இன்று: 'சாதியும் நானும்' பார்வை - 1 சாதி இன்று: 'சாதியும் நானும்' பார்வை - 2

உள்ளடக்கம்