தலையங்கம்
 

நடாளுமன்றத் தேர்தலில் தான் பெற்றிருக்கும் அமோக வெற்றியை நரேந்திர மோடியே எதிர்பார்த்திருக்கமாட்டார். இந்த வெற்றி அவரது ஆதரவாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒரே சமயத்தில் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மோடியை முன்நிறுத்தித் தேர்தலைச் சந்தித்த பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுவோம் என்று நம்பியதே தவிர ‘வரலாறு காணாத வகையில்’ வெற்றி பெறுவோம் என்று கிஞ்சித்தும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. கட்சிக்குள் மோடியின் விமர்சகர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், எம்.எம்.ஜோஷி போன்றவர்கள் தேர்தல் நாட்களில் மோடி மீது காட்டிய இளப்பத்தையும் வெற்றிக்குப்பின் காட்டும் தழுதழுப்பையும் பார்த்த யாரும் இதை எளிதில் உணர முடியும். மோடி எதிர்ப்பாளர்களும் ஒருவேளை அவர் வெற்றி பெற்று ஆட்சியமைக்கலாம் என்று ஊகித்திர

தேர்தல் 2014
க. திருநாவுக்கரசு  

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முழுநேர அரசியலில் இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிந்த போது நரேந்திர மோடி பிரதமராகக்கூடிய வாய்ப்புகள் பற்றிப் பேச்சு வந்தது. அடுத்த முறை பாரதீய ஜனதா கட்சியிலிருந்து யாருக்காவது பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது எனில் அது மோடியே என்று நண்பர் வாதிட்டார். அதை முழுமையாக மறுத்த நான் மோடி போன்றதொரு தலைவர் ஒருக்காலும் இந்தியாவின் பிரதமராக முடியாது என்று பின்வரும் காரணங்களை அடுக்கினேன். 2002 கலவரத்தில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருக்கும் பங்கு அவருக்கு மிகப் பெரும் தடையாக இருக்கும். பாஜக, சிவசேனா, அகாலி தளம் கட்சிகள் தவிர்த்த பிற கட்சிகள் சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காகவாவது அவரை நிராகரிக்கும். மேலும் அவர் சர்வாதிகாரப் போக்குக் கொண்டவர். இயக்

தேர்தல் 2014
ச. கோபாலகிருஷ்ணன்  

16ஆவது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழகத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன, வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பவை குறித்த கேள்விகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான கே.சந்துரு அளித்த பதில்கள் இங்கே. காலச்சுவடுக்காக மின்னஞ்சல் மூலம் அவருடன் நேர்காணல் நடத்தியவர் ச. கோபாலகிருஷ்ணன். தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருந்தது? இதைப் பற்றிக் கூறுவதற்குமுன் சில விஷயங்களை நினைவுகூர வேண்டும். தேர்தல் நடத்துவதற்கான விசேஷக் கண்காணிப்பு அதிகாரம் ஆணையத்திற்கு அரசமைப்பு சட்டத்தின் 324ஆவது ஷரத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி

தேர்தல் 2014
மணா  

தேர்தல் ஆணையம் 1950இல் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வளவு மதிப்புமிக்க தேர்தலைச் சந்தித்திருக்குமா என்பது தெரியவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகச் செலவழித்த தொகையே 3426 கோடி ரூபாய். அதிகாரப்பூர்வமற்ற முறையில் செலவழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தொகை முப்பதாயிரம் கோடியையும் தாண்டுகிறது. இது தில்லியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கணக்கு. இந்தக் கணக்கெல்லாம் இந்திய அளவில். தமிழக அளவில் இன்னும் விசேஷக் கணக்கெல்லாம் இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை தேர்தல் முறைகேட்டில் ‘முன்னணியில்’ இருப்பதாகப் பீஹாரையோ மற்ற மாநிலங்களையோ சொல்வார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டைச் சொல்கிறார்கள். அந்த அளவுக்குத் தொடர்ந்து முறைகேடுகளில் முன்னணி. தொடர்ந்து என்

தேர்தல் 2014
சாவித்திரி கண்ணன்  

‘அதிகாரம் இருக்கும், ஆனா இருக்காது’ என்பதற்கு உதாரணமாக நமது அரசு அமைப்புகள் சிலவற்றைச் சொல்லலாம். அதில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டியது தேர்தல் கமிஷன். இதற்கு சுயசார்புத் தன்மையும் தனி அதிகாரமும் உண்டென்றாலும் இது முழுக்க முழுக்க மத்திய மாநில அரசுகளின் கட்டமைப்புகளையும் ஊழியர்களையும் பயன்படுத்தித்தான் எதையுமே செயல்படுத்த வேண்டி உள்ளது. அந்த வகையில் ஏராளமான பலவீனங்களைக் கொண்டே இந்த அமைப்பு இயங்குகிறது. வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் ஆராய்ந்து கேள்விக்குட் படுத்தும் ஒரு விஷயத்தைத் தேர்தல் கமிஷன் முழுமையாகச் செய்திருந்தாலே தமிழ்நாட்டில் பிரதான அரசியல்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் போட்டியிடும் தகுதியையே இழக்க நேர்ந்தி

நேர்காணல்
ச. கோபாலகிருஷ்ணன்  

35 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளராக, சமூக செயற்பாட்டாளாராக, அரசியல் விமர்சகராக தேர்தல் அரசியலைக் கவனித்துவந்த ஞாநிக்கு நடந்து முடிந்த 16ஆவது இந்திய மக்களவைத் தேர்தல் மிகவும் புதிது. காரணம் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராக இணைந்து ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார். இத்தனை நாள் தேர்தல் அரசியலை வெளியிலிருந்து அலசி வந்த ஞாநி இப்போது உட்புகுந்து அலசியிருக்கிறார். இது குறித்த அனுபவங்களைப் பகிந்துகொள்வதற்காக அவரைச் சந்தித்தோம். தேசிய அரசியலில் பாஜக இந்த அளவு வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

அரச உண்மைகளுக் கும் மக்களின் உயிர்களுக்கும் உள்ள நேரடித் தொடர்பு பேரிடர் மேலாண்மையின் முக்கிய அம்சம். கடந்த மே 8, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிப் ‘பூவுலகின் நண்பர்கள்’ தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அரசும் அரசுத் துறைகளும் ஆவன அனைத்தும் செய்வார்கள் என்ற தனது அதீத நம்பிக்கையையும் நீதிமன்றம் பதிவுசெய்தது. ஆனால் ஒரே வாரத் துக்குள் மே 14, 2014 அன்று மதியம் 12:30 மணியளவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தது. அவர்களின் கூற்றுப்படி, அணுஉலையின் கொதிகலனுக்கு நீராவி கொண்டு செல்லும் குழாயில் ‘திடீரெனக் கசிவு ஏற்பட்டதில்’ ஆறு தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் அதில் இரண்டு

கட்டுரை
பெருமாள்முருகன்  

மாடு என்னும் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்று பொருளுண்டு. மாட்டுக்கும் மனிதர்களுக்குமான உறவுகள் பற்றிப் பல செய்திகள் வரலாறு நெடுகிலும் உள்ளன. மாடுகளைப் பழக்கி வேளாண்மையில் ஈடுபடுத்தியதாலேயே மனிதன் நிலைகொள்ள முடிந்தது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு மாடுகளும் அவற்றின் உழைப்பும் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பசுக்களும் எருமைகளும்கூட வேளாண் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன எனினும் அவற்றின் முதன்மையான உற்பத்திச் செயல்பாடு பால் வழங்குவதுதான். இன்றைக்கும் பால் பெரும் விற்பனைப் பொருள்களுள் ஒன்று. எருமைக் கிடாக்கள் உழவுக்கு இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. எனினும் உழவு, ஏற்றம், வண்டி, தாம்பு முதலிய வேலைகளுக்குக் காளைகளே ஏற்றவை. காயடிக்கப்பட்டபின் எருது என்னும் பெயர் பெறும் அவற்றின் உழைப்பை எல

பத்தி
வே. வசந்தி தேவி  

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பொது விசாரணை வாயில்லாதோர், கதியில்லாதோர், ஆதரவில்லாதோர் கிடைத்துவிட்டால் ஆழ்மனதில் பதுங்கிக் கிடக்கும் எத்தனை குரூரங்கள் வெளிப்படுகின்றன! அதிலும் அவர்கள் பெண் குழந்தைகளாகவும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்துவிட்டால் வக்கிரங்கள் எடுக்கும் அவதாரங்களுக்கு எல்லையோ எண்ணிக்கையோ இல்லை. பலியானவர்களுக்கு அன்றி, குற்றவாளிகளுக்குச் சாதகமான சாதி-வர்க்க-சட்ட-அரச-அதிகாரச் சூழல் குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு ஆயிரம் கதவு களைத் திறந்து வைத்திருக்கிறது. தெரியாத தகவல் அல்ல; உறைந்துபோன உண்மைதான். ஆயினும் ஒரே அரங்கில், ஒரே நேரத்தில், கண் முன்னால் அணிவகுக்கும் போது, குதறிச் சிதைக்கப்பட்ட சின்னஞ் சிறுமியர் ஒவ்வொருவருக்கும் இழைக்கப்பட்

பத்தி
பி. ரவிகுமார்  

சுந்தராம்பாள் ஒவ்வொரு பாட்டுப் பாடும்போதும் அழுதுகொண்டேயிருக்கிறார். சுந்தராம்பாளின் பாட்டை முதன் முதலாக எப்போது கேட்டேன் என்பது நினைவில்லை. ஆனால் நினைவு பின்னோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது நான் ஸ்ரீநிவாசன் என்ற நபரிடம் போய்ச் சேருகிறேன். ஸ்ரீநிவாசன் சுந்தராம்பாளின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பழைய நாட்களுக்குப் போய்ச் சேருகிறேன். எங்களுடைய உறவினரான ஸ்ரீநிவாசன் அந்தக் காலத்தில் எப்போதாவது வீட்டுக்கு வருவார். இரண்டோ மூன்றோ நாட்கள் எங்களுடன் தங்குவார். ஸ்ரீநிவாசனை நாங்கள் பாகவதர் என்றுதான் அழைப்போம். கொஞ்சம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள் ஆகியவர்களின் பாட்டுகளை ஸ்ரீநிவாசன் பாடுவார

சுரா பக்கங்கள்
சுந்தர ராமசாமி  

முதலில் கலைஞன் பதிப்பகம் உரிமையாளர்கள் திரு. மாசிலாமணி அவர்களுக்கும் திரு. நந்தன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். சென்ற நூற்றாண்டில் தமிழ்ப் படைப் பிலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ள ஒரு சில சகோதர எழுத்தாளர் களின் தொகுப்புகளுடன் ‘சுந்தர ராமசாமியின் படைப்புகள்’ என்ற தலைப்பில் என் தொகுப்பொன்றையும் வெளியிட திரு. மாசிலாமணி அவர்களும் திரு. நந்தன் அவர் களும் விருப்பம் தெரிவித்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் சாதனையாளர்களுக்கு இணையாக என்னையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பதிப்பாளர்கள் என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. வித்தியாசமான இந்த இலக்கிய விழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆசையுடன் இருந்தேன். இடையில் குறுக்கிட்ட என் பயணம் அத

சிறுகதை
ப்ரேமா ரேவதி  

உறக்கமும் உறங்க முடியாத மனதின் தவிப்பும் கலந்த இரவு. நீர்க்குமிழி ஒன்று மூக்கிலிருந்து வெளியேறியது. மெல்ல மெத்தென்று தண்ணீருள் மூழ்கும் லேசான உடல். பயமற்று மூழ்குதல் எவ்வளவு அழகு. இச்சையின் மடிப்புகளைப் போல நீரின் பாதை. ஏரியின் மடி கடல்பாசிபோலச் சில்லென்று மிருதுவாய் உடலை வாங்கிக் கொண்டது. மீன்குஞ்சுகள் சிதறி ஓடி மீண்டும் நெருங்கிவந்து தேகமெங்கும் முத்தமிட்டன. உடைகளற்ற வெற்றுடல்மீது நீர்க்கொடிகள் ஓடிச் சிலிர்ப்பேற்படுத்தின. சூரியன் எங்கோ உலகின் எதிர் எல்லையில் உதிக்க, உக்கிரமான அந்தக் கிரணம் வெளிதாண்டி, வான்தாண்டி நீர் ஊடுருவி ஆழத்தில் மூடியிருந்த விழிகளைத் தொட மெல்ல விழித்தது உடல். ஏரியின் மடியில் திளைத்துக் கிளர்ந்து நீந்துகிறது உடலைக் கொஞ்சும் கொடிகளுடன் விளையாடி... வாயில் வெளிய

கட்டுரை
ஜெ. பாலசுப்பிரமணியம்  

1913 மார்ச் 12 தேதியில் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில் (1907-1914) “பரிதாபக் கொலை! பரிதாபக் கொலை!! பரிதாபக் கொலை!!!, பறையனென்றழைக்கப்பட்ட ஒருவனைச் சில ரெட்டிகளென்போர் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள்” என்று தலைப் பிட்டு அயோத்திதாசர் எழுதிய கட்டுரை வெளியானது. “தென் ஆற்காடு டிஸ்டிரிக்ட் திண்டிவனந் தாலுக்காவில் விட்லாபுரம் கிராமத்தில் ப.இராகவனென்னுமோர் குடியானவனிருந்தான்” என்று தொடங்கும் அக்கட்டுரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்த இராகவன் என்னும் பறையர் தனது நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு நாளொன்றுக்கு இரண்டணா கூலி கொடுத்து வந்தார். ஆனால் அதே கிராமத்தில் உள்ள ரெட்டியார்கள் நாள் முழுவதும் வேலை வாங்கிக் கொண்டு ஓரணா மட்டுமே கூலி கொடுத்து வந்த

உரை
கண்ணன்  

அனைவருக்கும் மாலை வணக்கம். பாரீஸ் நண்பர்களுடன் பேசும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திய லக்ஷ்மிக்கும் பௌசருக்கும் நன்றி. பாரீஸ் என் மனதுக்கு நெருக்கமான நகரம். இதுவரை நான் பயணித்திருக்கும் நகரங்களில் ஆகப் பிடித்தமானது என்றாலும் மிகை இல்லை. 2002இல் முதல் முறையாக இங்கு வந்தேன். கலைச்செல்வன், வாசுதேவன் ஆகியோருடன், அதிலும் குறிப்பாகக் கலைச் செல்வனுடன் இரவு பகலாகப் பாரீஸில் சுற்றி அலைந்தேன். மிகப் பெரிய அனுபவம். பேருவகையில் இருந்தேன். நகரம் ஏற்படுத்திய கிளர்ச்சியுடன் கலைச்செல்வனுடன் ஏற்பட்ட ‘கண்டதும் காதல்’ போன்ற நட்புறவும் காரணம். மொத்தமாகப் பழகியது மூன்றே நாட்கள்தான் எனினும் கலைச் செல்வன் நெருங்கிய நண்பராக மனதில் இருக்கிறார். அதன் பின்னரான பாரீஸ் பயணங்கள் இன்னும் ஈடுசெய்ய முடியாத அவ

மதிப்புரை
பாவண்ணன்  

ஒவ்வொரு ஆண்டும் அறுபது அல்லது எழுபது புத்தகங்களை வாங்குகிறேன். சில புத்தகங்களை உடனடியாகப் படித்துவிடுவேன். இன்னும் சில புத்தகங்களைச் சற்றே தாமதமாகவாவது படித்து முடித்துவிடுவேன். எந்தக் காரணமும் இல்லாமலேயே பத்து அல்லது பதினைந்து புத்தகங்கள் அடுக்குகளிலேயே தங்கிவிடும். வேறொரு தருணத்தில் எடுத்துப் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் உட்கார முடியாதபடி வேலைகள் பிறிதொரு திசையை நோக்கி என்னை இழுத்துச் சென்றுவிடும். பத்தாண்டுகளுக்கு முன்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியில் நான்கைந்து பைகள் நிறையப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ‘பதிமூன்று மீன்கள்’ என்கிற சிறுகதைத் தொகுதியும் இருந்தது. அந்த ஆண்டில் அந்தத் தொகுதியைத்தான் முதலில் படித்தேன். ஒரேநாளில் படித்து முடித்துவிட்

மதிப்புரை
ந. ஜயபாஸ்கரன்  

‘சொல் எனும் தானியம்’ என்ற வார்த்தைக் கூட்டம் பல்வேறு வகையான அர்த்த தளங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்லக்கூடியது. தானியம் என்ற பதமே இனப்பெருக்க வீரியம், அறுவடை, உறக்கம், புத்துயிர்ப்பு போன்ற அர்த்த சாயைகளை உள்ளடக்கியது. (பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே’ என்ற தொல்காப்பிய வரியை இங்கு நினைவு கூரலாம்). சொற்களை மடியில் ஏந்தி நிற்கும் தானியக்காரி ஆகக் கவிஞர் சக்தி ஜோதி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ‘என்னிலிருந்து துவங்குகிற என் காதல் / பறவையைப் போல் திசை எங்கும் பறந்து / அன்பின் முதிர் தானியத்தை விதைக்கிறது’ என்றும், ‘பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட தானியங்களையே நாம் உண்ணுகிறோம்’ என்றும் தொடர்ந்து சொற்களை விதைத்துச் செல்கிறார் சக்தி ஜோத

மதிப்புரை
சுகுமாரன்  

சுரேஷ்குமார இந்திரஜித் தன்னுடைய மொத்தக் கதைகளின் தொகுப்பான ‘மாபெரும் சூதாட்ட’த்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார். ‘ஒரு எழுத்தாளனின் மொத்தக் கதைகளை மொத்தையாகப் பார்ப்பது அலுப்பாகவே இருக்கிறது. உதிரியாகப் படிக்கும்போது பிடித்த கதைகள் மனதில் அதிகமாகத் தங்கும். மொத்தமாகப் படிக்கும்போது பிடித்த கதைகள் பிடிக்காத கதைகள் ஆகியவற்றின் கலப்பு ஏற்படுத்தும் மாறுதலுக்கு மனம் தயங்குகிறது.’ ஆனால் என் வாசிப்பு அனுபவம் இதற்கு மாறாகவே இருக்கிறது. சராசரியான கதை படிக்கும் வாசகனாக அல்லாமல் கவனமான வாசகனாக வாசிக்கும்போது இந்த வரிகளை மறுக்கவே தோன்றுகிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவருகிறார். ஏறத்தாழ எழுபது கதைகள்வரை எழுதியிருக்கலாம். இந்த எழுபது கதைகளை மொத

மதிப்புரை
செ. மகேஸ்வரி  

காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் செந்தியின் இக்கவிதைத் தொகுப்பு வடிவ-உள்ளடக்க அமைப்பில் கவிதையைத் தேடிக் கண்டடைதல் எனும் தனித்துவ அடையாளத்தின் குறியீடாகவும் அமைகிறது. புற அகத்தை ஆண்பேச்சாக்கித் தர்க்கித்து வளரும் கவிதையின் அழகியல், புறவயத்தில் மிகக் கச்சிதமான சுழிவுத் தன்மையைப் பெற்றுள்ளதைச் செந்தியின் அடையாளமாக இக்கவிதைகள் இனம் காட்டுகின்றன. உள்ளதை உள்ளவாறே பேசும் கண்ணாடி வழியாக மாயத்தை நிகழ்த்துவதில் சுவையரும்ப வைப்பது இவரின் பங்களிப்பு. புறவயமான முயற்சிகளுக்கு முன்னோடிகளை அடுக்குவது சுலபம்; வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறாத் தன்மையுடைய இப்புறவயம் இருண்மை அழகியலுக்கு நிகரான-நிறைவடையும் கேள்விச் சுவையையும் பெறுகின்றது. இக்கேள்வியும் - தர்க்கமும் வலிகளின் பாற்பட்டது. பனிமூட்டத்த

மதிப்புரை
அனார்  

பெண் ஏன் கவிதை எழுதுகிறாள், ஏன் அவள் தற்கொலை செய்கிறாள் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூற முடியும்? இரண்டும் வேறு வேறல்ல என்பதே என் முன்னுள்ள ஒரே பதிலாகும். கவிதைகளை எழுதிவிட்டு ஒருவேளை அவள் தற்கொலை செய்யாதுவிட்டால், வாழ்க்கையில் பலவிதங்களில் அவள் கொல்லப்படுவதைத் தாங்கிக்கொள்ள நேரிடும். உயிரோடிருப்பதே அதிசயமாகிப்போன உலகில் வாழ்வதற்காகக் கவிதை எழுத வந்த, எழுதுகிற பெண்களின் அனுபவங்கள் பலவும் இவ்விதமானவையாக அமைந்திருக்கின்றன. ஒரு பெண் தன்னை வெளிப்படுத்தவும் மறைத்துக் கொள்ளவும் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறாள். நடை பிணமாக வாழ்வதிலிருந்து தப்பிப்பதற்காகத் தற்கொலை செய்கிறாள். மரணித்தல் ஒரு கலை மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச்சிறப்பாகச் செய்கிறேன் நான் அதை நரகம்போல் செய்கிறேன் நான் அதை நி

புத்தகப் பகுதி
 

விழிப்பதற்கும் எழுந்துகொள்வதற்கும் இடையில் உள்ள அந்தக் காலமற்ற அரை மணி நேரம், பரிச்சயமான ஆடையைப் போல் ஆலிஸை அணைத்துக்கொள்கிறது. கற்பனையான ஒரு கருவறையில் மிதந்து கொண்டு அவள் புதிய நாளை நோக்கி அமிழ்ந்து அமிழ்ந்து நகர்கிறாள். படுக்கையின் வெதுவெதுப்பான மடிப்புகளில் அவள் உடல் தளர்கிறது. அவள் தசைகளும் மூட்டுகளும் எடையற்று இருக்கின்றன. அவள் மனம் வெறுமையாக இருக்கிறது. ஜூல்ஸின் வாசனை - ஆவியாகிப்போன மதுவின் வாடை, ஜாதிக்காய், வயோதிகன் இவையெல்லாம் - கருநிழலாய் அவளுக்குப் பின்னால் கிடக்கிறது. எப்போதும்போல் சமையலறையில் காலையுணவைத் தயார் செய்துகொண்டிருக்கிறார் அவர்; அவள் நினைவுக்குத் தெரிந்து வீட்டு வேலைகளில் அவரது ஒரே பங்களிப்பு. ஒவ்வொரு நாள் காலையிலும் சரியாக எட்டு மணிக்கு அவர் இந்தச் சடங்கைத்

பதிவு
ரெ. மகேந்திரன்  

காலச்சுவடு இதழின் 25ஆம் ஆண்டு நிறைவை யொட்டிப் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. அதன் பகுதியாக 17, 18-05-2014 ஆகிய இருநாட்கள் சிறுகதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது. சூடாமணி நினைவு அறக்கட்டளை, கூடு ஆய்வுச் சந்திப்பு, காலச்சுவடு இணைந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பயிலரங்கை நடத்தின. அழகிய பெரியவன், பாவண்ணன் ஆகியோர் கருத் தாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ஒருங்கிணைப் பாளராகப் பெருமாள்முருகன் பங்கு பெற்றார். பயிலரங்கின் முதல் நாளில் மூவரும் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். ‘சிறுகதை வாசிப்பு முறை’ என்கிற தலைப்பில் பாவண்ணனும் ‘சிறுகதை எழுதுதல்: அனுபவமும் பயிற்சியும்’ என்ற தலைப்பில் அழகிய பெரியவனும் ‘சிறுகதை அமைப்பும் மொழியும்’

கண்ணோட்டம்
கண்ணன்  

ராஜபக்ஷேவை அழைக்க வேண்டாம் என்று மோடியிடம் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைப்பது படுஅபத்தமானது. இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒரு தலைவர் மற்றொரு இனப்படுகொலைக் குற்றவாளியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோருவதில் இருக்கும் முரண்நகை யாருக்கும் உறைப்பதாகத் தெரியவில்லை. நம் நாட்டு மக்களைக் குஜராத்தில் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரை, உத்திரப் பிரதேசத்திலும் அசாமிலும் படுகொலைகளைத் தூண்டியதாகக் கருதப்படுபவரின் பதவி ஏற்பை இதற்காகப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கைகூட வைக்கத் திராணியற்ற ‘மதச்சார்பற்ற’ கட்சிகள், பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து அதிகார ஊழல்களில் பங்காளியாகத் துடிப்பவர்கள், இலங்கைத் தமிழருக்காகக் குரல்கொடுப்பது கொடுமையான முரண்நகை. மோடியை நீதிமன்றம

உள்ளடக்கம்