தலையங்கம்
 

கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டக் கிராமமொன்றில் ஐந்துபேர் கொண்ட கும்பலால் சிறுமியர் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். சில வாரங்களுக்குள் ஆஸம்கர் மாவட்டம் சராய்மீர் பகுதியில் 17 வயதான பெண், நான்குபேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டார். பிஜ்னோர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். முசாபர் நகரில் ஏழு வயது சிறுமி மூன்றுபேர் கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டார். சுமேர்பூரில் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட கணவனைக் காணச் சென்ற பெண்ணை லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காகப் பிற காவலர்கள் உதவியுடன் காவல்துறை உதவி ஆய்வாளர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார். உத்தரப்பிரதேசத்தில்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

கடந்த 2014 பிப்ருவரி மாதத் துவக்கத்தில் நமது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஜம்முவில் நடந்த ‘அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள்’ (Innovations in Science and Technology for Inclusive Development) எனும் தலைப்பிலான ‘இந்திய அறிவியல் காங்கிரசு’ நிகழ்வைத் துவக்கிவைத்தார். அப்போது தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு ரூ. 1450 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார். இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கும்போது, அத்திட்டம் கொண்டுவரப் போகும் நலன்களைப் பற்றியெல்லாம் இங்கே தமிழகத்துக்கு வந்து மக்களிடம் விளக்கிப் பேசி அறிவித்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தமிழர்கள் தலையில் கட்டும் திட்டத்திற்காகக் காஷ்ம

க. திருநாவுக்கரசு  

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டத்தைச் சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தரப்பை சுப்பிரமணியன் சுவாமியும் ஆர்.எஸ்.எஸ். தரப்பை (பாஜக தரப்பை அல்ல) எஸ். குருமூர்த்தியும் பேசினர். (இடதுசாரிகளின் தரப்பைப் பேச வேண்டிய என். ராம் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை) விவாதத்தை நெறிப்படுத்துபவராக இருந்தவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசுவாமி. விவாதத்திற்குப் பின்னர் கேள்வி நேரத்தில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் விவாதிக்கப்பட்ட கருத்து என்ன, தான் என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு ஏதுமில்லாமல் கேள்வி என்ற பெயரில் நீளமாகப் பேசிக்கொண்டேயிருந்தார்.

கட்டுரை
எம். ரிஷான் ஷெரீப்  

இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை 2009ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு மட்டுப்பட்டு பேரினவாதிகளின் பார்வை இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள்மீது திரும்பியிருக்கின்றன. ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்குத் திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும். பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொது பலசேனா’ எனும் இயக்கமானது ஊர் ஊராகக் கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந்நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்

கட்டுரை
ஸர்மிளா ஸெய்யித்  

சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களை இன அழிப்பு செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தியுள்ளது. அழுத்கம - பேருவளை வன்முறைச் சம்பவங்கள் இதனை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன. அட்டவணைப்படுத்தப்பட்ட ஒழுங்குடனேயே இந்த இனச் சுத்திகரிப்புக்கான முஸ்தீபு அரங்கேறியிருக்கிறது. எட்டு உயிரிழப்புகள், 80 பேர் காயம், 5000 மக்கள் அதிகள், 200 வீடுகளும், 40 வியாபாரத் தளங்களும் தீக்கிரை, 17 பள்ளிவாயல்கள் சேதம் என்பதாக வன்முறைத் தாண்டவம் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து இழப்புக்களின் பெறுமதி 580 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2009 போர் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு, குறிப்பாக 2012 பௌத்த கடும்போக்குவாதம் பேசுகிற பொதுபலசேனா, ராவண பலய, சிஹல உறுமய போன்ற அமைப்புகள் தோற்றம் பெற்றன. பொதுபலசேனா என்ற அமைப்

விவாதம்
பேச்சிமுத்து  

பெருமாள்முருகன் தொட்டுக்காட்டியவற்றில் சில விளக்கப்பட வேண்டியவையாகவும் விடுபட்ட செய்திகள் எடுத்துக்காட்ட வேண்டியவையாகவும் உள்ளன. வேட்டைச் சமூகத்தில் விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தும் கால்நடைச் சமூகம் உருவாகிய நிலையில் “மாடு வளர்ப்பையே தம் பிரதான தொழிலாகக் கொண்ட முல்லை நிலத்தில்தான் ‘ஏறு தழுவுதல்’ என்னும் வீர விளையாட்டு நடந்திருக்கிறது” என்ற கட்டுரையாளரின் கருத்துக்குக் கலித்தொகைச் சான்று அரண் செய்கிறது. அதோடு, “இதன்பின் இலக்கியப் பதிவுகள் இல்லை என்றாலும் ஏறு தழுவுதல் நடந்தவையைக் காட்டும் பருண்மைச் சான்றுகளாக நடுகற்கள் விளங்குகின்றன” என்னும் கட்டுரையாளரின் முடிவு வியப்பளிக்கிறது. ஏனெனில், மூன்று நூல்களில் ஏறு தழுவிய வீர விளையாட்டுப் பற்றிய பதிவுக

அஞ்சலி
தொ. பரமசிவன்  

நாங்குநேரி திருமடத்தின் இருபதாவது பட்டம் கலியன் எதிராஜ வானமாமலை ஜீயர் சாமிகள், ஏப்ரல் 30, 2014 அன்று திருநாட்டிற்கு எழுந்தளினார் என்ற செய்தி கிடைத்தபோது ஓர்கணம் இதயம் கனத்துப்போனது. முன்னாள் பேராசிரியரான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி ஆகிய நான்கு மொழிகளிலும் புலமையாளர். திருமடங்களுக்கேயுரிய ‘பந்தா’ இல்லாமல் இல்லறத்தாரைப் போல எளிமை யானவர். இரண்டு, மூன்று முறை அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. “திருப்பதிக்கு இராமானுசர் ஒரு வழிப்போக்கர் மட்டுமே” என்று காஞ்சி சங்கராச்சாரியார் திருவாய் (?) மலர்ந்தருளினார். அதனைக் கண்டித்து, அதிரப் பேசாத மரபுகளையுடைய ஜீயரின் சினம் பொங்கும் தொலைக்காட்சிப் பேச்சு ஆன்மீக வல்லாண்மைக்கு எதிரான சிங்க முழக்கமாகத் தோன்ற

கட்டுரை
பிரசாந்தி சேகர்  

சொல்லித் தீராத் துயர் ஒன்று என் கைகளுக்குள். எழுதி மாளா கனம் ஒன்று என் நெஞ்சுக்குள். இட்டு நிரப்ப நீ வேண்டும். உன்னிடம் பகிர்ந்து நான் மீளவேண்டும். மரித்தாலும் மறக்கா நெடுந்துயரின் பதிவு இது. உயிர்த்தாலும் துரத்தும் கொடுங்கனவின் பதற்றம் இது. எரித்தாலும் எரியாச் சிறு கூட்டின் வாழ்வு இது. இரவொன்று வேண்டும் இந்த ஒளியைப் புரிந்திட. அவ்வாறான இரவு இது. ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள் மின்னக்கண்டேன், அங்கும் இங்கும். சரசரக்கும் இலைகளுக்குள், சடைத்த மரக்கொப்புகளுக்குள், அடர்ந்த காடுபோல் அமைந்த இந்த ரயில் நிலையத்தினுள், துருப்பிடித்து மணக்கும் இந்தக் காற்றினுள், மின்னும் உறுப்பை வால்பகுதியில் கொண்ட இந்தச் சிறுபூச்சிகள் கூட்டமாய்ப் பறந்து, விட்டுவிட்டு மின்னியும் விடாது மின்னியும் முடிச்சுப் போ

சுரா பக்கங்கள்
 

சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, சுகிர்தராணியின் ‘இரவு மிருகம்’, லதாவின் ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ ஆகிய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் படைப்பு சார்ந்து பெண்களின் விடுதலை இயக்கத்தை மதிப்பிடும் வகையில் ஒருசில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் ஆண்கள் கலைகளைப் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே பெண்களும் படைக்கத் தொடங்கியிருப்பார்கள் என்று நம்புவதே பகுத்தறிவுப் பார்வைக்கு இசைவாக இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உடல் ரீதியான வேறுபாடுகள் சில இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை முன்னிறுத்தித்தான் பெண்களை மிகுந்த தாழ்வுக்கு ஆண்கள் ஆளாக்கி இருக்கிறார்கள். பெண்கள் படிப்படியாகத் தங்கள் உரிம

 

ஓடும் இருள் அறை இருளும் தெரு இருட்டும் தனித் தனியாக இருப்பது வசதியாக இருக்கிறது ஓடிப்போகும் நாயைவிடப் பெரிதாக ஓடுகிறது அதன் சத்தம் நாய்களின் குரைப்புகளால் அதிர்ந்தசையும் கறுப்பில் தனியே நடந்து போய்க்கொண்டிருக்கிறேன் அப்போதும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை நாய் துரத்திப்போன தூக்கம் அறைக்கு எப்போது திரும்பும் கவிழ்ந்திருக்கும் மினரல் வாட்டர் சிலிண்டரில் ‘க்ளக்’ அசைநிலை அசையாதிருப்பதை இலையிடம் கற்றேன் சூரியன் அமர்கிறது சந்திரன் அமர்கிறது பனியும் பல கண்ணும் எதற்கும் அசைவில்லை மேல் எத்தனை நிறம் விழுகின்றது எதுவும் தெரியாமல் படிகிறது தூசி சிலசமயம் ஊர்கின்றன பூச்சியும் எறும்பும் சிலந்தியோ புழுவோ வீடு பின்னிவைத்திருப்பதும் உண்டு சிறு காற்றில் ஆனால் அசைந்துபோகிறது இலை நானும் ப

மதிப்புரை
இசை  

இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் இது குறித்து எழுதவும் அடிப்படைத் தகுதியொன்று அவசியம் என்று நினைக்கிறேன். அது தானும் ஒரு வகையில் திருடன்தான் என்கிற புரிந்துணர்வே. சமூகக் கட்டுப்பாட்டைக் குலைக்கும் திருட்டு என்கிற குற்றம் தண்டனைக்குரியதாகிறது. இது போலவே சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற ஒழுங்குகளைக் குலைக்கிற பலவும் தண்டனைக்குரிய குற்றங்களே என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடர்கள் “க்ளவுஸ்” அணிந்துகொள்ளும் போதும் எங்கேனும் ஓரிடத்தில் தன் கைரேகையைத் தவற விட்டுவிடுகிறார்கள். ஆனால் வெடிகுண்டைச் சத்தமில்லாமல் வெடிக்க வைப்பதில் சமத்தர்களான நாம் வெகு நிதானமாக, வெகு நுட்பமாக, தேர்ந்த கைகளால் குற்றங்களைச் செய்கிறோம். தனிமையில் நம் சிந்தை அடிக்கிற கூத்துக்களை நாமே அறிவோம

சிறுகதை
உமா வரதராஜன்  

அவள் ஆற்றங்கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள். மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்லக் கறுப்பாகிக் கொண்டிருந்தது. கரையோரம் வரிசையாக நின்ற தென்னை, சவுக்கு, கற்றா, போகன்விலா மரங்களின் மறைவில் ஒளித்துக் கொண்டிருப்பது போலவும் மஞ்சள் வெயிலின் வெளிச்சத்துக்குக் கண்கூசும் ஒரு பாதாளச் சிறைக்கைதி போலவும் அவள் தங்கியிருந்த அந்த விடுதி தோன்றியது. அவளுக்கு அந்த நகரம் புதியது. முதல் தடவையாக அங்கே வந்திறங்கியபோது நீரின் நடுவே நிற்பது போல் உணர்ந்தாள். கடலாலும் ஆறாலும் வளைக்கப்பட்ட நீராலான நகரம்போல் அது இருந்தது. கடல் நீரேரிக்குக் குறுக்காக ஆங்காங்கே சில, சிறு நிலத் திட்டுகள் பொன்னாலான திமிங்கிலங்களின் முதுகுகள்போல் தெரிந்தன. இந்த நகரத்துக்கு வர

அஞ்சலி: மாயா ஆஞ்சலு (04 ஏப்ரல் 1928 & 25 மே 2014)
ஆர். சிவகுமார்  

மாயா ஆஞ்சலுவைப் போன்ற பெண் படைப்பாளர் ஒருவரை இந்தியச் சூழலில் கற்பனை செய்துபார்க்க முடியுமா என்பது சந்தேகமே. ஒரே தன்மையுடைய பெரும்பாலான சமூக நெருக்கடிகளை (பெண், கருப்பர் /தலித் என்ற இரட்டைப் பாதகங்கள்) அவருடைய சரிநேர் இந்தியப் பெண் எழுத்தாளர் ஒருவர் சந்தித்தாலும் அவருடைய வெளிப்பாட்டுச் சுதந்திரம் நம்மவருக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. கருப்பின எழுத்தாளர்கள், குறிப்பாக அவர்களில் பெண்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு எவ்வளவோ அதே அளவு அங்கீகாரமும் அவர்களுக்குக் கிடைத்ததுதான் அமெரிக்கச் சூழலின் முரண்நகை. 1773இல் பிரசுரம் பெற்ற முதல் ஆஃப்ரிக்க-அமெரிக்கப் பெண் கவிஞரான ஃபிலிஸ் வீட்லி (1753-1784) தொடங்கி 1993இல் நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசன் வரையிலான பயணம் இதை உறுதி செய்யும். கருப

கிருஷ்ணபிரபு  

முன்னோடி எழுத்தாளர்களது படைப்புகளின் நுட்பமான பரிமாணங்களைக் கலந்துரையாடல் மூலம் பரிமாறிக்கொள்ளும் வாசகப் பகிர்வை முன்னெடுக்கும் நிகழ்வு (கடந்த ஜூன் 7ஆம் தேதி) சென்னை மைலாப்பூரிலுள்ள ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடந்தது. நிகழ்வின் முதல் ஆளுமையாக அசோகமித்திரன் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரது படைப்புகளைப் பற்றிய வாசித்தல் நிகழ்வு இரண்டு அமர்வுகளில் முழுநாளும் ஏற்பாடாகியிருந்தது. இந்திய அல்லது தமிழக வாழ்வில் இரண்டறக் கலந்த சினிமாவுடன் தொழில்முறையாகத் தொடர்புடைய மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை அசோகமித்திரன் தமது படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறார். ‘கரைந்த நிழல்கள், புலிக்கலைஞன், மானசரோவர்’ போன்ற படைப்புகள் உதாரணம். சினிமா சார்ந்த உதிரி மனிதர்களைப் பற்றிய பதிவுகளை அம்ஷன்குமார் த

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நீங்கள் இங்கே படிக்கப்போவது இப்போது பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பை பற்றியதல்ல. இதற்கு முன் நடந்த போட்டிகள் பற்றியது. முதல் உலகக் கோப்பைக்கான போட்டி 1930இல் உருகுவேயில் நடைபெற்றபோது எல்லா அணிகளும் ‘மனோகரா’ படத்தின் வசனம் சொல்வதுபோல் அழைத்து வரப்படவில்லை, இழுத்துவரப்பட்டார்கள். இன்றைக்கு உதைப்பந்தாட்டம் குறித்து நாடுகளிடையே இருக்கும் ஆர்வம் அப்போது இருக்கவில்லை. இவ்வளவுக்கும் பயண, விடுதிச் செலவுகளைத் தாமே ஏற்றுக்கொள்வதாக உருகுவே உறுதி செய்திருந்தது. இப்போது போல் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகைமை (qualifying) ஆட்டங்கள்கூட இல்லை. ஆனால் பல நாடுகள் தயங்கின. இதற்கு ஒரு காரணம், பிரயாணத் தூரம். உலகமயமாக்கலின் நற்கனிகளில் (நீங்கள் சூழலியல் ஆதரவாளராயிருந்தால்

புத்தகப்பகுதி
 

மும்தாஜை வளர்த்ததில் இக்ஸானுக்கும் அவன் மனைவிக்கும் முக்கியப் பங்கு உண்டு. மும்தாஜின் அப்பாவும் அம்மாவும் சில வாரங்கள் இடைவெளியில் ஒருவர்பின் ஒருவராக இறந்துபோனபோது, இக்ஸான்தான் அவனை எடுத்து வளர்த்தான். மஸீதை விட்டால் இக்ஸான், இக்ஸானை விட்டால் மஸீத் என நூரனோடு அவனுக்குப் பரிச்சயம் ஏற்படும் வரையிலும் அவனது வாழ்க்கை கிட்டதட்ட அவர்களோடே கழிந்தது. இக்ஸான் அவனுக்குத் தந்தையும் ஆசானுமாக இருந்தான். மஸீதிற்கு உடல்நிலை தேறியபிறகு மும்தாஜ் இரண்டு ஆண்டுகள் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டபோது அங்கும் இக்ஸானின் தாக்கம் அவனுக்குள் தொடர்ந்தது. மனதைத் திசைதிருப்பும் பல்வேறு ஈர்ப்புகள் நிறைந்த அந்தப் புதிய சூழலிலும் அவன் சீரழியாமல் இருந்ததற்கு இக்ஸானின் வழிகாட்டுதல் ஒருவிதத்தில் காரணம். இதனால் அவன் நேரத்தை

கட்டுரை
 

நீங்கள் நேசித்து வாசிக்கும் மிலன் குந்தேராவை எழுதியது யார்? விடை: மைகேல் ஹென்றிஹைம். அறிவார்ந்த எழுத்தாளர் என்று கருதப்படும் ஓரான் பாமுக்கை? (அவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த) மௌரீன் ஃப்ரீலி. கற்பனை வளம் கூடிய, பாண்டித்யம் மிக்க ராபர்ட்டோ கலாஸ்ஸோ? ம்ஹ்ம். நான்தான். தன் வேலையை முடித்துவிட்ட பிறகு மொழி பெயர்ப்பாளன் காணாமல் போய்விட வேண்டும். படைப்புத் திறன் மிகுந்த, கவர்ச்சிமிக்க, பேரெழுத்தாளர் மட்டுமே புவியெங்கும் வியாபித்து நிற்க விரும்புவார். அவருடைய வாசகர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் ‘அவருடைய எழுத்தை’ வாசிப்பதில்லை எனும் யதார்த்தத்தை அவரால் ஜீரணிக்க முடியாது. அவருடைய வாசகர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள். அவர்கள் அசலான மேன்மையோடுதான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்

மதிப்புரை
பா. ராஜா  

மனிதனின் மன இயல்புகள் ஏராளமான சிக்கல்களையும் சிடுக்குகளையும் ஒரு சேரக் கொண்டு, அடுத்த கணம் அதன் செயற்பாட்டைக் கணிக்கவியலா வண்ணம் இருக்கிறது. அது மதில்மேல் அமர்ந்திருக்கும் பூனை என்றுகூடச் சொல்லலாம். மனதினூடாக ஏற்படும் சில உணர்வுகளானது சமயங்களில் குதூகலமானவையாகவும் அலாதியானவையாகவும் இன்னும் சில குரூரமானவையாகவும் குழப்பம் நிரம்பியவையாக இருக்கின்றன. சில நேரங்களில் ஏனென்று தெரியாத அளவிற்கு, வார்த்தைகளால் விவரிக்கவியலாப் பரவச நிலையையும் அது அடைகிறது. ஓர் அழகிய மலரென இருக்குமது, சின்னஞ் சிறிய ஒற்றைக் கடுஞ்சொல்லின் நெருடல் தாளாமல் வாடிப்போவதும் சொல்லினால் பூரிப்படைவதுமாய் அதன் விநோதங்கள் வாழ்வு நெடுகவே விரவியிருக்கின்றன. குரூரங்களைச் சுமந்தலையும் மனமானது எக்கணமும் தன் வாளினைக் கூர்ப்பித்து

பத்தி
யுவன் சந்திரசேகர்  

காதல் கவிதைகள் எழுதப்படாத மொழியோ, காலகட்டமோ இருக்க முடியுமா என்ன? மொழிக்கு அப்பாற்பட்ட, மொழிக்கும் முந்திய உணர்வுகளை, சிமிழில் பூதத்தை அடைப்பதுபோல எழுதிப்பார்ப்பது, கவிஞர்கள் தாமாகவே மேற்கொள்ளும் சவால்களில் ஒன்று அல்லவா? எழுத ஆரம்பித்த நாட்களில் நான் மொழிபெயர்த்த ஜப்பானியக் கவிதை ஒன்று பிரசுரம் ஆனது. பிரதி கைவசம் இல்லை. ‘நங்கூரத்தின் காதில் கிசுகிசுக்கிறது கடற்பறவை’ என ஆரம்பிக்கும் என்பது நினைவிருக்கிறது. திடீரென்று, நங்கூரம் கடலுக்குள் இறங்கும். ‘ஒரு சொல்லும் சொல்லாமல்’ அது இறங்கியதில் அதிர்ச்சியுற்ற கடற்பறவை விதிர்விதிர்த்துப் பறந்துபோகும். ‘அதன் அலறல் திசையெங்கும் எதிரொலிக்கிறது’ என்கிற மாதிரிக் கவிதை முடிந்த நினைவு. உறவுநிலையின் இரண்டு முனைகளை,

உள்ளடக்கம்