தலையங்கம்
 

ஜூலை மாதம் ஏழாம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் கையில் பூக்களோடு காக்கவைக்கப்பட்டிருந்தனர். ‘கல்வித்தாயே’, ‘எங்கள் அம்மாவே’ என்கிற வாசகங்களோடு ஆளுயர படங்களுடன்கூடிய பேனர்கள் சாலையில் அமைக்கப்பட்டிருந்தன. சரவெடி, மேளதாளம், கேக்வெட்டுதல் ஆகியவற்றுடனும் கும்பமரியாதை வைபவத்தோடும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்கள் தொடர துணைவேந்தர் வரவேற்கப்பட்டார். வாழ்க கோஷங்கள் பலமாக முழங்க அந்த வரவேற்பைத் துணைவேந்தர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். பண்பாட்டு வீழ்ச்சியாகக் கருதப்பட வேண்டிய தமிழக அரசியல் கலாச்சாரம் சிறிதும் கூச்சமின்றி இங்கு துணைவேந்தரின் ஆசியோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கல்வியால் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா? அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல் லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். ஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது எ

கட்டுரை
த. சுந்தரராஜ்  

இந்தி: தமிழகத்தின் அரசியல் மொழி மத்திய உள்துறை அமைச்சகமும், அலுவல் மொழித்துறையும் (10-03-2014, 27-05-2014)ஆகிய நாட்களில் மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கைகள் எப்போதும் போல தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. “அரசு அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாகக் கையாளும் சமூக வலைத்தளங்களில் (டுவிட்டர், ஃபேஸ்புக், பிளாக் முதலியன) கட்டாயம் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தும்போது இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்பதே சுற்றறிக்கைகளின் உள்ளடக்கம். மத்திய அரசு இது போன்ற உத்தரவுகளைப் பலமுறை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் இந்திக்கு ஆதரவான பல்வேறு அரசாணைகளையும், சுற்றறிக்கைகளை

 

  30, மார்ச் 1965 அன்புள்ள நண்பர் ஸ்ரீ க.நா.சு. அவர்களுக்கு, நமஸ்காரம் தங்கள் 24/3 கடிதம் கிடைக்கப்பெற்றேன். 28வது இதழ் வெளியிட அவசரமில்லை என அறிந்தது ஆசுவாசமாக இருக்கிறது. எனக்குச் சிறிது கால அவகாசம் கிடைத்திருப்பது நல்லதுதான். பழைய கதை கைக்கு அகப்படவில்லை. புதுக்கதை ஒன்று எழுதிவிடலாமென்று இருக்கிறேன். சாத்தியம் என்றால் ஒரு கட்டுரையும் தயார் செய்கிறேன். எல்லாம் ஏப்ரல் 10ஆம் தேதி வாக்கில் தங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமென்று நினைக்கிறேன். ஷேக்ஸ்பியர் மலருக்கு எழுத எனக்கு விசேஷமாக ஒன்றுமில்லை. typing tamil நல்ல முயற்சிதான். சந்தா சேரக்கூடிய சில விலாசங்களை அடுத்த கடிதத்தில் தருகிறேன். அன்புள்ள சுந்தர ராமசாமி. 18, ஏப்ரல் 1965 அன்புள்ள நண்பர் ஸ்ரீ க.நா.சு. அவர்களுக்கு,

கட்டுரை
சேரன்  

கன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும். சரியாகப் பதினோராவது நிமிடம் உங்களுடைய வீடு ஏவுகணையால் தகர்க்கப்படும்.” இஸ்ரேல் படையினரிடமிருந்து தொலைபேசியில் இந்த எச்சரிக்கை வந்ததும் மைஸா சலீம் தர்ஸாவின் மாமா, மாமி, உறவினர்கள், குழந்தைகள் என இருபது பேர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். மைஸாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஹமாஸ் அமைப்புடனோ அல்லது காஸாவில் இயங்கும் மற்றொரு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கும் எத்தகைய உறவும் இல்லை. காஸாவில் இருப்பவை வீடுகள் அல்ல. பெரிய கட்டிடத் தொகுதிகளில் தொடர் குடியிருப்புகள். மாடியிலிருந்து இறங்கித் தெருவுக்கு வருவதற்கே ஆறு அல்லது ஏழு நிமிடங்களாகி விடும். உலகிலேயே மக்கள் தொகை மிகவும் அடர்ந்து, செறிந்த இடங்களில

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எஸ்பிஜி எனப்படும் விவிலிய பரப்புக்குழு சார்பாகத் தமிழ்ப்பகுதியில் கிறித்தவ மறைபரப்பாளராகப் பணியாற்றிய ராபர்ட் கால்டுவெல் (1814-1891) பிறந்த இருநூறாவது ஆண்டு இது. அதேபோலத் தமிழ் தலித் சிந்தனை மரபின் முன்னோடியான அயோத்திதாசரின் (1845-1914) நினைவு நூற்றாண்டாகவும் இவ்வாண்டு அமைந்திருக்கிறது. இயல்பாக அமைந்த இத்தொடர்பு மட்டுமல்லாது இருவரின் சிந்தனைகளிலும் கூடத் தொடர்பும் தாக்கமும் இருக்கிறது. பல்வேறு நூல்களை எழுதியிருப்பினும் கால்டுவெல்லின் அறியத்தக்க நூலாக இருப்பது ‘A Comparative Grammer of the Dravidian or south Indian Family of languages’ என்கிற நூல் தான். நவீன தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று எழுதுமுறையையும் அதனூடாகச் சமூக அரசியல் பண்பாட்டு வெளியையும்

எதிர்வினை
எஸ். பிரசன்னா  

ஒரு மாணவன் தேர்வு எழுதுவதற்காகத் தென்னை மரத்தைப் பற்றி ஆழமாகப் படித்திருந்தானாம். ஆனால் தேர்வில் பசுமாட்டைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்லிவிட்டார்கள். புத்திசாலியான அந்த மாணவன் தென்னை மரத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் விரிவான கட்டுரை எழுதிவிட்டு இறுதியாக, அப்படிப்பட்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கட்டுவார்கள் என்று முடித்திருந்தானாம். அம்பேத்கரின் நூலுக்கு அருந்ததி ராய் எழுதிய முன்னுரையைப் படிக்கும்போது இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது. அருந்ததி ராய்க்கு அம்பேத்கர் குறித்து அதிகம் தெரியாது என்று நான் கூறவரவில்லை. அருந்ததி ராய் கற்பனையான காந்தியவாதிகளுக்கு எதிராகப் போரிடுகிறார். இந்திய வரலாற்றில் நவீன, தார்மீக, அறிவார்த்தமான மனசாட்சியைத் தோற்றுவிக்க முயன்ற அம்பேத்கருக்கு

சிறுகதை
அ. முத்துலிங்கம்  

பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படிச் சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம்... அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ஆம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். எங்கள் ஊர் ஏஜன்டைப் பிடித்துப் பணம் கொடுத்து என்னை எப்படியும் கனடாவுக்கு அனுப்பிவிடும்படி சொன்னார். எங்கள் கிராமத்திலிருந்து ஏற்கனவ

கட்டுரை
அம்ஷன் குமார்  

அதுநாள்வரை சினிமா உலகத்தைப் பற்றி எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் அதைக் கவர்ச்சிக்குரியதாக, வாசகர்களைப் பொருந்தாத கற்பனைக்கெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு மாரீசக் களனாக மாற்றி விட்டிருந்தார்கள்; அதே சமயம் அதைப் பழித்தலுக்கும் கேலிக்கும் வெறுப்பிற்குமுரிய ஓர் உலகமாகவும் அவர்களால் காட்ட முடிந்தது. பெரும்பாலும் பத்திரிகை எழுத்தாளர்கள்தான் இவ்விரண்டையும் ஒரு சேரச் செய்து கொண்டிருந்தார்கள். இலக்கிய எழுத்தாளர்கள் எப்பொழுதும் அதை நிந்தனைக்குரிய உலகமாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதன்முறையாக, எங்கேயும் காணப்படுகிற அதே ஆசாபாசங்கள் கொண்ட மனிதர்கள்தாம் சினிமா உலகிலும் இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் காட்டியது ‘கரைந்த நிழல்கள்’ நாவல். அந்நாளில் ‘தீபம்’ இதழ

அஞ்சலி: நடீன் கோர்டிமெர் (1923 - 2014)
ஜி. குப்புசாமி  

மற்றொரு முதிய எழுத்தாளர் மறைந்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடீன் கோர்டிமெர், இலக்கியத்துக்காக 1991இல் நோபல் பரிசு பெற்றவர். ஒரு விதத்தில் அரசியல் பிரிவின் கீழ் அமைதிக்காகவும் அப்பரிசு வழங்கப்பட்டதாகக் கருதலாம். பரிசு வழங்கப்பட்ட வருடம் முக்கியமானது. 27 வருடச் சிறைவாசத்திற்குப்பிறகு மண்டேலா விடுதலை செய்யப்படுகிறார். 91இல் டி கிளெர்க் இனவேற்றுமை அரசியல் சட்டத்தை மாற்றி, ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் மீதான தடையை விலக்குகிறார். தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்து வரும் இந்த ஆச்சரியகரமான, வரவேற்கத்தகுந்த மாற்றங்களை உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில், தன் வாழ்நாள் முழுக்கக் கருப்பின மக்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகித்து வரும் வெள்ளையின ஆட்சியாளர்

அஞ்சலி: ஸோரா சேகால் (1912 - 2014)
நிமி. ரவீந்திரன்  

ஜூலை மாதம் ஸோரா சேகால் காலமானார். இந்த நூற்றாண்டின் மூத்த கலைஞர் என்ற பெருமையுடன் 102 ஆவது வயதில் நிகழ்ந்த மரணம். மதக் கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமியக் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே தாயை இழந்தார். ஒரு வயதாக இருக்கும்போது பார்வையைப் பறி கொடுத்தார். மரபுகளை மீறிக் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். திருமணம் செய்து பர்தாவின் இருளில் வாழ விரும்பாமல் நடிப்புக் கலை பயின்றார். இந்தியக் கலைகளின் மறுமலர்ச்சி அமைப்பான இந்திய மக்கள் நாடக அரங்கில் (இப்டா - IPTA) நடிப்பை மேற்கொண்டார். நடன மணியாக உதய சங்கரின் குழுவில் சேர்ந்தார். இந்திய எதார்த்தக் கலை சினிமாக்களில் ஒன்றான ‘தர்த்தி கே லால்’ மூலம் திரையுலகில் புகுந்தார். மதப் பற்றாளர்களின் எதிர்ப்பை ம

வாசிப்பு
பிரபஞ்சன்  

நான் அண்மையில் படித்த முக்கியமான புத்தகம், கே. பாரதி எழுதிய ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ (விகடன் பிரசுரம்). பாதி வானத்தைத் தாங்குபவர்கள் என்றும் பாதி பூமியை நிரப்புபவர்கள் என்றும் நீட்டி முழக்கி ஆடம்பரமாகச் சொல்லப்படும் பெண்கள், நம் தமிழ் சினிமாவில் என்ன மாதிரி சித்தரிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வே இந்தப் புத்தகம். பெண்கள் பற்றி எழுதுவது என்பதும் சினிமாவில் சித்தரிப்பது என்பதும் பெண்கள் பற்றியது மட்டுமல்லாமல் மானுடம், மனிதகுலம் பற்றியது என்பதே உண்மையாகும். சினிமா பேசத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து அண்மைக்கால, இன்றைய தமிழ் சினிமா பெண் பாத்திரங்களுக்குக் கொடுத்த இடம், பாத்திரங்களாகச் சித்தரித்த முறை, பெண்களின் மனம், சிந்தனை ஆளுமை வெளிப்படுத்தப்பட்ட பாங்

பதிவு
கிருஷ்ணபிரபு  

தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் யாவும் உலகின் பிரதான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ‘The Contemporary’ இதழில் வெளியான ‘Poor Folk’ (1844) என்ற நாவலே தஸ்தயேவ்ஸ்கியின் முதல் படைப்பு. எனினும் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமாஸவ் சகோதரர்கள்’ ஆகியனதான் அவருடைய பிரம்மாண்ட படைப்புகள். அவை அவருக்கான இலக்கிய அந்தஸ்தை உலக அளவில் பெற்றுத் தந்தன. நாவல் இதுவரை பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்களால் பதினாறு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தொலைக் காட்சித் தொடராகவும் எடுத்திருக்கிறார்கள். நூறு ஆ

பத்தி: காற்றின் கலை
பி. ரவிகுமார்  

ஷெனாய் ஒரு மங்கல வாத்தியம். ஆனால் பிஸ்மில்லாகான் ஷெனாய் வாசிக்கும் போது, அதற்குள்ளிருந்து சோக ஸ்வரங்கள் புறப்படுகின்றன. 1992 அக்டோபர் பதினாறாம் தேதி திருவனந்தபுரம் கவின்கலைக் கல்லூரியின் மேல்தளத்திலுள்ள கலையரங்கில்தான் பிஸ்மில்லாகானை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். ஏறத்தாழ நண்பகலை நெருங்கிய பொழுது. பிஸ்மில்லாகானும் குழுவும் கல்லூரி வாசலுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். படுகிழவரான பிஸ்மில்லாகான் காரை விட்டு மெதுவாக வெளியே இறங்குகிறார். அங்கே திரண்டு நின்றவர்களைப் பார்த்துத் தலை தாழ்த்திக் கை கூப்புகிறார். ஒரு குழந்தைபோலச் சிரிக்கிறார். மூத்த மகன் நய்யார் ஹுசேன், இளைய மகன் நாஸிம் ஹுசேன், இருவருடைய தோள்களையும் பற்றிக்கொண்டு பிஸ்மில்லாகான் மெல்ல நடக்கிறார். மேல்தளத்துக்குச் செல்லும் ப

கட்டுரை
சை. பீர்முகம்மது  

[1996ஆம் ஆண்டு ஜூன் 27, 28ஆம் தேதி ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் நடந்த ‘நீதியுடன் கூடிய சமாதானம்’ என்ற உலக மாநாடு நடந்தது. ஆஸ்திரேலிய மனித உரிமைக்கழகமும், ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கங்களின் பேரவையும் நடத்திய அந்த இரண்டு நாள் மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து பல பேராளர்கள் கலந்து கொண்டார்கள். மலேசியாவிலிருந்து அம்மாநாட்டில் கலந்துகொண்டு நான் விரும்பிய தலைப்பில் பேச அழைத்தார்கள். ‘தமிழ் முஸ்லீம்களும் தமிழீழமும்’ என்ற தலைப்பில் நான் வாசித்த கட்டுரையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியது. இக்கூட்டத்திற்கு அமெரிக்க ஐ.நா சபையின் பொறுப்பாளர் ஜெர்சன் பார்க்கர் தலைமையேற்றார். இம்மாநாட்டில் நான் கலந்து கொண்டு பேசிய பிறகு, அக்கட்டுரையின் ஆங்க

மதிப்புரை
செந்தூரன் ஈஸ்வரநாதன்  

வடகிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்காகப் பல காலங்களாகத் தொடர்ச்சியாய் குரல் கொடுத்து வருபவர் பசீர் சேகுதாவூத். 1991 முதல் 2011வரையிலான காலப்பகுதிகளில் பசீரின் உரைகள் அடங்கியதாக விளிம்பு பதிப்பகத்தால் ‘சோர்விலாச் சொல்’ என்கிற தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகான இனப்பிரச்சினையின் கோரங்களைப் பற்றியும் அமைப்பின் தான்தோன்றித் தனமான, அரசியல் பிரக்ஞை அற்ற குழுக்கள், அரசு, விடுதலை இயக்கங்களின் போக்குகளை முன்வைத்து முஸ்லிம் சிறுபான்மையினரின் இருப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பசீர் சேகுதாவூத்தினால் உரையாற்றப்பெற்ற உரைகள் அடங்கிய தொகுப்பு இது. இவ்வுரைகள் தனித்தன்மைகளையுடைய சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகம் தொடர்ந்து அரசு மற்றும் ஆயுதக் குழுக்களால் அச்சுறு

யுவன் சந்திரசேகர்  

மொழித் தளத்தில் எவ்வாறாயினும், அனுபவத் தளத்தில் அனைத்துச் சொற்களும் சமானமானவை அல்ல. மனித உடலில் உள்ள எல்லா அங்கங்களின் பெயர்களும் வசைச்சொற்கள் ஆகின்றனவா! தன்னளவில் அதிகமான எடை சுமக்கும் சொற்கள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ‘காலம்’ என்ற சொல். வெறும் பெயர்ச் சொல்லாக மீந்துவிடாது, அனுபவத்தின் பல்வேறு இழைகளைத் தன்னுள் கொண்ட, ஏகப்பட்ட உள் அடுக்குகள், விரிவுகள் கொண்ட இது போன்ற சொற்கள் அநேகம் இருக்கின்றன. ‘அனுபவம்’ என்ற சொல்லேகூட அப்படியானதுதான். அனுபவம் கொள்ளும் தனி மனம் வரித்துக் கொள்ளும் கால- இடச்சூழலுக்கு ஏற்பப் பொருள்படக் கூடியது. இன்னொரு உதாரணமான ‘ஆன்மீகம்’ என்ற சொல், அநேகமாய், மதத்தின் பின்புலம் இன்றிப் பொருள் கொள்ளப்படுவதே இல்லை. இந்தியச் சூ