தலையங்கம்
 

நீதித்துறை இன்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குக் குற்றச்சாட்டுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. பாலியல் தொந்தரவு, லஞ்ச லாவண்யம், சாதி வெறி, சமய அடிப்படைவாதம் என்று குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சாமானிய மனிதனின் கடைசிப் புகலிடமான வழக்காடு மன்றங்களின்மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது நாட்டின் குடியாட்சித் தத்துவம் எவ்வளவு தூரம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இன்று இந்தியச் சமூகத்தின் ஒவ்வொரு துறையும் எளிய மக்களின் எதிரியாகிவிட்ட நிலையில் நீதித்துறையும் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. இது பொதுமக்களுக்கு நீதித்துறைமீது இருந்த சிறு நம்பிக்கையையும் தகர்த்துவிட்டிருக்கிறது. இந்திய நீதித்துறை ஏன் இப்படி ஓர் அவல நிலைக்குத் தள

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

நடப்பு ஆண்டு 2060 எனக் கொள்க! கூடங்குளம், கல்பாக்கம், கொவாடா, பதி சோனாப்பூர், ஹரிப்பூர், கைகா, ஜைதாப்பூர், தாராப்பூர், மித்தி விர்தி என அனைத்து அணுஉலைப் பூங்காக்களிலிருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களினால் நாட்டைச் சுற்றியிருக்கும் கடல் மோசமாக மாசுபட்டிருக்கிறது. ஒவ்வொரு அணுஉலையிலிருந்தும் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 700 கோடி லிட்டர் சூடான, கதிர்வீச்சு - கனிமங்கள் தோய்ந்த தண்ணீர் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கடலுக்குள் கொட்டப்பட்டது. அதேபோல, அத்தனை அணுமின் நிலையங்களின் திரவக் கழிவுகள், தாழ்தரக் கழிவுகள் அனைத்தும் கடலுக்குள் கொட்டப்பட்டன. ஏராளமான அனல்மின் நிலையக் கழிவுகள், கப்பலுடைக்கும் தளங்களின் கழிவுகள், தொழிற்சாலைகளின் பல்வேறு கழிவுப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள் மற்று

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பது தேர்தல் கூட்டணிக்கு மட்டுமே பொருந்தும் வாதமல்ல. அது இப்போது எந்தத் தலைவருக்கும் எந்த அடையாளமும் நிரந்தரமாகச் சொந்தமில்லை என்பதாகவும் மாறிவருகிறது. 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமுதல் ஜெயலலிதா தமிழ் சார்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இவற்றிற்கான அண்மை உதாரணங்கள். தனி ஈழத்திற்கு ஆதரவு, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடைவிதித்தல், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை, காவிரி முல்லைப் பெரியாறு நதிநீர் பிரச்சனைகளில் வந்த குறிப்பிடத்தக்க முடிவுகள், இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க மறுப்பு, வேட்டி தடைக்கு எதிரான சட்டம், கில்லி, பல்லாங்குழி உள்ளிட்ட வட்டார விளையாட்டுகளுக்கு ஊக்கம் போன்ற ஜெயலலிதாவின் செயற்பாடுகளை இங்கு உடனட

கட்டுரை
சாவித்திரி கண்ணன்  

இந்தியா சுதந்திரமடைந்து 67ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்றைய நமது ஆட்சியாளர்கள் மக்களாட்சியின் மாண்புகளைப் பேண விரும்பாதவர்களாகவே உள்ளனர். ஜனநாயகம், சமத்துவம், கூட்டுச் செயல்பாடு போன்ற சொற்களேகூட அவர்களை எரி¢ச்சலடைய வைக்கின்றன. கட்சியானாலும், ஆட்சியானாலும் அது ஒற்றை அதிகார மையமாகவே இங்கே இயங்குகின்றது. சுதந்திரத்திற்குப் பிறகான முதல் இருபதாண்டு களில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நாட்டு நிர்மாணத் திட்டங்கள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன. அதுவும் தமிழகத்தில் அக்காலகட்டத்தில் நிறுவப்பட்ட நீர் ஆதாரத் திட்டங்களும் மின் உற்பத்தித் திட்டங்களும் தொழில்துறைத் திட்டங்களுமே இன்றுவரை இவ்வளவு சீர்கேடுகளுக்கிடையிலும் தமிழகத்தைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தை

எதிர்வினை
 

ஏற்கச் செய்வது நியாயமல்ல: எம். கோபாலகிருஷ்ணன் ஒரு மொழியைத் திணிப்பதன் மூலம் அதை மாநில மொழியாகவோ அல்லது தேசிய மொழியாகவோ உருவாக்கிவிட முடியாது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு அவற்றை இணைப்பதற்கான மொழியாக இந்தியைப் பிரகடனப்படுத்திய காலத்திலிருந்தே, இந்தியைத் தேசிய மொழியாகக் கொண்டு வருவதற்கு, மத்திய அரசு தொடர்ந்து நிதானமான நுட்பமான செயல் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள் என்று பல்வேறு தளங்களில் அதன் முயற்சிகள் கணிசமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு இணையாக இந்தி நிலைபெற்றுள்ளது. ஆனால், இப்போது இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போன்று ஏதேனும் ஒரு அறிவிப்போ, அமைச்சரின் பேட்டியோ வெளிவரு

பத்தி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்-7
வே. வசந்தி தேவி  

வரலாற்றின் ஆதிமுதல் தொழில்; அவள் முதல் தொழிலாளி. ஹோமகுண்டத்திலிருந்து பத்தினிப் பெண் உதித்தெழுந்தபோது, அவளுடன் இணைந்து பிறந்தவள். ஆணின் இச்சைக்கென்று உருவாக்கப்பட்ட இரட்டையர் மனுவும், வாத்ஸ்யாயனாவும். சங்க இலக்கியங்களும் பக்கம் பக்கமாக அவளுக்கு அர்ப்பணித்திருக்கின்றன. இந்தியச் சமுதாயத்தின் கலாச்சாரப் போலித்தனங்களும், கள்ளப் புனிதங்களும் எத்தனை போர்வை போர்த்தினாலும் மறைக்க இயலாமல் திமிறிக்கொண்டு நிற்பவள். இன்று ‘பாலியல் தொழிலாளர்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டாலும், சமூகத்தில் அவளது ஸ்தானம் மாறவில்லை. சட்டத்திற்கு அப்பால் சுழலும், வெளிச்சம் தொடாத இருள் உலகின் அந்தப் பிரஜையும் பெண்தான். அவளைச் சொல்லொணா சுரண்டல்களுக்கும், வேதனைகளுக்கும், வெட்கக் கேடுகளுக்கும், வக்கிரங்களுக்க

சுரா பக்கங்கள்
 

உங்களைப் பாதித்த - விரும்புகிற - ரசிக்கிற - 1. பழைய மற்றும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் பல வருடங்களாயிற்று தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து. தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி, நடிகர்களைப் பற்றி, நடிகைகளைப் பற்றி, இயக்குநர்களைப் பற்றி என் மூளையில் பதிந்திருக்கும் அபிப்பிராயங்களை ஒளிவு மறைவில்லாமல் சொல்லத் தொடங்கினால் தெருவில் போகும்போது தாக்கப்படுவேன் என்று அஞ்சுகிறேன் (திரைப்படம் தவிர வேறு பல விஷயங்கள் பற்றியும் இதே பயம் இருக்கிறது). சிவாஜி கணேசன் ஒரு நாடக நடிகர் மட்டுமே. திரைப்பட நடிகர் அல்ல. எம்.ஜி.ஆர். ஒரு ஸ்டண்ட் நடிகர் மட்டுமே. ஸ்டண்ட் நடிகருக்குரிய கவுரத்தை மட்டுமே அவருக்கு அளிக்க முடியும். கே. பாலச்சந்தர் மிக மோசமான மனவக்கிரம் கொண்டவர். கலாச்சாரத்தைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அவர

உமா மகேஸ்வரி  

ஊரிலில்லாத... ஆவணி நள்ளிரவில் அத்தனை நட்சத்திரங்களும் இருளைத் துளைத்து ஏராளமாகக் கொப்புளித்து, என்னிலும் முளைத்து, நெருஞ்சியாய் உறுத்துகின்றன. இருக்கிறது புத்தகங்களின் ஈர வாசனை எப்போதும் அருகிலேயே. இருந்தாலும் வறண்ட விழி நுனி தகிக்க, இன்னும் ஊர் திரும்பாத உன்னைத் தேடியபடி நான். நம்முடைய நேரங்களில் நீ திற, திற எனினும் எளிதில் இறங்கி விடும் என் இமைகளை ஹாங்கரில் உறங்கும் உன் சட்டைக் காலரில் தேய்க்கிறேன். திட்டு வாயென்று... கவனமாக மைக் கறை படாமல் இப்போது நட்சத்திரங்களின் விரிந்த விட்டம் என் மீது பதிகிறது நகர்த்த முடியாப் பெருந்தேரின் நாற்சக்கரமாக. இந்த ஆகாயம் கரிந்து கமறுகிறது; இப்போது அது எரியும் அடுப்பில் வைத்து மறந்த கிண்ணம். இரவு கடந்து போய் என்னிடம் இன்னொரு காலையைக் கொடுக்கிறது. இன்ற

சே. பிருந்தா  

கடவுளைப்போல அறியப்படாத தொலைவு நீ இத்தனை தொலைவிலிருக்கிறாய் ஒரு முத்தமிட்டு என் அன்பைத் தெரிவிக்க முடியாத தொலைவு உள்ளங்கை வெப்பம் கடத்தி என் ஆறுதலைச் சொல்ல முடியாத தொலைவு கனிந்த பார்வையில் ஒரு மன்னிப்புக் கோரலைப் பகிர முடியாத தொலைவு கோபித்துச் சண்டையிட முடியாத தொலைவு கோபத்தைச் சண்டையில் தீர்க்க முடியாத தொலைவு சமாதானத்தை நெகிழ்ந்தறிய முடியாத தொலைவு கையெட்டத்தில்தான் நீயிருப்பதாக யாரையும் வெறுத்தறியா மெய்நிகர் உலகின் சமிக்ஞைகள் உன் விருப்பப் பூ பூத்தலைத் தொடருகையில் எஞ்சி நிற்கும் வெறுமை சில சமயம் அது நீதானா நீயேதானா நீ என்பதொரு கற்பனையோ சொல்லித் தீராதது இந்தக் கவிதை இன்னும் அளந்து முடிக்கப்படாதது இந்த அன்பு கடவுளைப்போல அறியப்படாதது நம் தொலைவு இன்னும் எழுதி முடிக்கப்படாத எதுவ

கட்டுரை
க.சீ. சிவகுமார்  

மிதி வண்டிகள் அருகிப் போய்விட்டன. அழிந்து போய்விடவில்லை. மாணாக்கர்களுக்கெனச் சொல்லப்பட்டு, இலவசமளிக்கப்படுகிற வெளிர் பச்சைநிறச் சாயப் படலித்தினைத் தண்டுகளில் கொண்ட சைக்கிள்களை, பிளஸ் டூ பெண்ணின் / ஆணின் கொத்தனார் வகைத் தந்தைமார்கள் ஓட்டி அலைவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனினும் முக்கியமாக இளநீர் வியாபாரத்துக்கும் பழைய பேப்பர் எடுப்பதற்கும் மிதிவண்டிபோலத் தோதான வாகனம் இதுவரை வாய்க்கப்பெறவில்லை. பழைய பேப்பர் எடுக்கிற ஒருவரை முந்தாநாள், ஒரு தேநீர்க்கடையில் நின்று கொண்டிருக்கும்போது பார்த்தேன். பேப்பரை வரிசையடுக்கிக் கட்டுவதற்கு, கேரியரும் கொச்சைக் கயிறும் போதுமானது. எடை போடும் ராத்தல் அல்லது தராசுக்கு முன் பகுதி ஹேண்டில் பார் போதுமானது. ஆனாலும், அவரது சைக்கிள் கேரியரின் இரு

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன்
சந்திப்பு: தேவிபாரதி, சுகுமாரன்  

சீரிய இலக்கிய வாசகனைக் குதூகலப்படுத்தும் எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்துக்கு இணையாகவே கட்டுரைகளும் வாசிப்புக்கு உகந்தவை. அதைப்போலவே அவரது மேடைப் பேச்சுகளும் உரையாடலும் உத்வேகத்தையும் புதிய தகவல்களையும் நுட்பமான நகைச்சுவையையும் தருபவை, அவரது புனைகதைகளை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளத் துணைசெய்பவை. படைப்பெழுத்துக்கு நிகராகப் புதிய உலகைத் திறந்து வைப்பவை அவரது நேர்காணல்கள். ‘காலச்சுவடு’ இதழுக்காக அசோகமித்திரனுடன் நேர்காணல் நடத்துவது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. கண்ணன் முன்வைத்த யோசனையை அப்போதைய பொறுப்பாசிரியர் தேவிபாரதி தெரிவித்து நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யலாம் என்று திட்டமிட்டார். நீண்ட தாமதத்

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன்
அசோகமித்திரன்  

சரவணன் வாசலில் நின்றுகொண்டிருந்தான். சரவணன் என் மகனின் மகள் வித்யாவைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று திரும்பக் கொண்டுவிடும் வான் உரிமையாளன். “என்ன?” என்று கேட்டேன். “இந்த மாசம் பணம் தரலையே? தேதி மூணு ஆறது.” “மூணாந்தேதிதானே?” ‘‘என்ன மூணாந்தேதிதானே? டீசல் எல்லாம் சும்மா வந்துடுமா?’’ “நீ எப்படி வந்திருக்கே?” “பைக்லே.” “என்னை இந்தத் தெருக்கோடிக்குக் கொண்டுபோய்க் கொண்டுவந்து விடறியா? மகன் ஊர்லே இல்லை. நான் ஏடிஎம்லேந்து எடுத்துக் கொடுத்துடறேன். எவ்வளவு?” “ஆயிரம் ரூபாய்” “எழுநூத்து அம்பது இல்லே?” “அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போச்சு.” நான் சிறிது சிரமப்பட்டுத்தான் மோட்டா

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன்
பெருமாள்முருகன்  

‘நயம்’ என்னும் சொல்லுக்கு நுட்பம், நுணுக்கம் எனப் பொருள் உண்டு. ‘நவில்தொறும் நூல்நயம்’ என்னும் குறள் (783) தொடருக்குப் ‘கற்குந்தோறும் இன்பம்’ என உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர். இது அத்தனை பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. நவில்தல் என்பதற்குச் சொல்லுதல் எனப் பொருள். இன்றும் ‘நன்றி நவிலல்’ என இச்சொல்லைக் கையாள்கிறோம். எடுத்துச் சொல்லுதல், வாய்விட்டுச் சத்தமாகச் சொல்லுதல் ஆகியவை பொருந்தும். நவில்தல் என்பது கற்றல் அல்ல. கற்பித்தல் என்று சொல்லலாம். பிறர்க்கு எடுத்துச் சொல்லுதல் என்பது கற்பித்தலாகிய செயல். நூலுக்குரிய பத்து அழகுகளைப் பட்டியலிடும் இலக்கணம் அதில் ஒன்றாக ‘நவின்றோர்க்கினிமை’ என்பதையும் கூறுகின்றது. இதற்கும் &lsqu

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன்
பெருந்தேவி  

நவீனம், நவீனத்துவம் பற்றிய முக்கியச் சிந்தனையாளரும் கோட்பாட்டாளருமான மார்ஷல் பெர்மனின் வரையறையோடு இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்: “நவீனத்துவம் என்பது நவீன ஆண்களும் பெண்களும் நவீனமயமாக்கத்தின் மாந்தர்களாகவோ பொருட்களாகவோ ஆவதற்கான யத்தனம்; நவீன உலகத்தில் பிடிமானத்தைப் பெற, தங்களை அவ்வுலகத்தில் பொருத்திக்கொள்ள அவர்களின் யத்தனம்.” நவீனமயமாக்கத்தின் மாந்தர்களாதல், பொருட்களாதல் என்றால் என்ன? நவீன வாழ்வை ஒரு சுழலாக உருவகிக்கிறார் பெர்மன். இச்சுழலுக்கான ஆதார விசைகளென அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றைத் தொழில்நுட்பத்தோடு இணைக்கும் தொழில்மயமாக்கம், நகரத்துக்கு இடம்பெயர்தல், நகரமயமாக்கம், நவீன தேசிய அரசுகளின் உருவாக்கம், அகதிகளின் உருவாக்கம், கூட்டங்களாகப் புலம்பெயர்தல், முதலீட்டியச்

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன்
பி.கே. ஸ்ரீநிவாசன்  

அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவலுக்கு இப்போது வயது ஏறத்தாழ ஐம்பது. தமிழில் வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகே அது மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘தண்ணீர்’ அவரது இரண்டாவது நாவல். முதல் நாவல் ‘கரைந்த நிழல்கள்’. சிறுகதை வடிவத்தில் தொடங்கிய கதைக்கரு நாவலாக மாறியது என்று முதற்பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பிற படைப்புகள் பலவற்றிலும் நேர்ந்தது போலவே அந்தக் கதைக்கரு வேறொரு தளத்தில் வளர்ந்து விரிவடைந்திருக்கிறது. ‘தண்ணீர்’ நாவலின் உள்ளடக்கத்திலுள்ள இரண்டு புதுமையான அம்சங்கள்தாம் அதை மொழிபெயர்ப்புக்கு எடுத்துக் கொண்டபோது என்னைக் கவர்ந்தன. ஒன்று: சென்னை நகரம் எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பஞ்சம். இரண்டு: சினிமாவின் மோக வளையத்து

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன்
விமலாதித்த மாமல்லன்  

இப்பொ வந்தோமில்லியா வாசல் கேட்டைத் தாண்டி, இத கதைல எழுதவேண்டி வந்தா, கேட்டைத் திறக்கும்போது வெதர் எப்படி இருந்ததுன்னு எழுதியே ஆகணும் எனக்கு’’ 1982இல் முதன்முதலாக சுந்தர ராமசாமியைச் சந்திக்கச் சென்றிருந்த பொழுது, அவர் வீட்டில் தங்கியிருந்த இரண்டாவது அல்லது மூன்றாவது நாள், அவரும் நானும் ஜவுளிக் கடையிலிருந்து அவர் வீட்டின் கேட்டைத்தாண்டி மதிய உணவுக்காக வீட்டுக்குள் நுழைகையில் இவ்வாறு கூறினார். எழுத்தில் தகவல் அளித்தல் மற்றும் நுட்பமான விவரங்கள் கொடுப்பதன் அவசியம் தொடர்பாகப் பேசிக்கொண்டு நடந்துவந்த உரையாடலின் ஒரு துணுக்குதான் மேற்குறிப்பிட்டது. கை கழுவிக்கொண்டு சாப்பாட்டு மேசை முன்னால் அமர்ந்தபடி, ‘‘கேட்டைத் திறக்கும்போதெல்லாம் எனக்கு அசோகமித்திரனோட ‘பார்வை

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

கவனத்தின் மூன்று நிலைகளான விழிப்புநிலை, உறக்கநிலை மற்றும் கனவுநிலையில், மூன்றாவது நிலைக்கு ஒரு சிறப்புத்தன்மை உண்டு. அதில் மட்டுமே பிற இரண்டு நிலைகளின் அழுத்தமான சாயல்கள் நிலவுகின்றன - விழித்திருக்கும்போது அனுபவமாகும் நடைமுறை உலகம் தத்ரூபமாக மலர்வது ஒரு புறம். உறங்கும்போது உடல்கொள்ளும் செயலின்மை மற்றும் நிகழ்வின்மீது கட்டுப்பாடின்மை மறுபுறம் என. அதன் காரணமாகவே, நான் எழுதுவதை நீங்கள் வாசிக்கும் இக்கணத்தில், நீங்கள் ஒரு கனவுக்குள் இல்லை என்பதற்கு நிரூபணம் உண்டா என்ற கேள்வியும் எழுகிறது! தத்துவமும் சரி, கவிதை உள்ளிட்ட புனைவுலகமும் சரி, கனவின் தாழ்வாரத்தைத் தமது இலக்குகளை அடைவதற்கான கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றன. சுவாங் சூ என்று ஒரு தா ஓ முனி. சுவாங்ட்ஸு என்றும் குறிப்

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

ஈழத் தமிழின் நவீனக் கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார் - கவிஞர் சேரன். தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன - கவிஞர் சுகுமாரன். கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கள் தொகுப்புகளைக் கொடுத்தார்கள். வேறுசிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளைக் கொடுத்தபோது இவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தமிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள். மற்றவர்களும் தமது படைப்புகளூடாகத் தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகள் குறித்து எனது கருத்துகளை முன்வைப்பதி

பதிவு
செந்தூரன் ஈஸ்வரநாதன்  

16.4.2014 புதன் காலச்சுவடு நாகர்கோவில் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. எம்.எஸ். முன்னிலையில் கொடிக்கால் சேக் அப்துல்லா திறந்து வைக்க, கமலா ராமசாமி மற்றும் மைதிலி சுந்தரம் குத்துவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். திறப்பு நிகழ்விற்கு இலக்கியம் அரசியல் சார்ந்தும், சாராமலும் பலர் வருகை தந்திருந்தனர். அலுவலகத் திறப்பு நிகழ்விற்குப்பின், கொடிக்கால், எம்.எஸ்., ஆ. பத்மநாபன் ஆகியோர் சுராவோடான தங்களின் நட்பு, காலச்சுவடு இதழின் உருவாக்கம் குறித்தான ஓர் உரையாடல் தற்செயல் நிகழ்வாய் அமைந்தது நிகழ்விற்குப் பொருத்தமாயும் இருந்தது. அ.கா. பெருமாள் காலச்சுவடு எப்படியிருக்க வேண்டும், அதன் பணி, காலச்சுவடின் அமைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பன பற்றியும் காலச்சுவடு உருவானவிதம் பற்றியு

பதிவு: இயல் விருது விழா- 2013
 

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு ஆண்டு தோறும் தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, மாணவர் கல்வி, தமிழ்க்கணிமை ஆகிய துறைகளில் உலகெங்கும் தொண்டாற்றி வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டுகிறது. 2013ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரனுக்கு 28 ஜூன் 2014 அன்று டொரொண்டோவில் ராடிஸன் விடுதியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. கனடிய எழுத்தாளர் ஷ்யாம் செல்வதுரை விருதை வழங்கினார். தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலரான தியடோர் பாஸ்கரன் இந்த விருதைப் பெறும் 14வது ஆளுமையாவர். தனது ஏற்புரையில் தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமா, சூழலியல் போன்ற துறைகள் வளர தமிழில் அதற்கான புதிய கலைச் சொற்கள் உருவாக்குவதன் அவசியத்

உள்ளடக்கம்