தலையங்கம்
 

2004 டிசம்பர் 26ஆம் நாளன்று அறிவிப்பே கொடுக்காமல் நம்மை வந்து தாக்கிய ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் நம் ஞாபகங்களிலிருந்து இன்னும் கரைய மறுக்கின்றது. அது உருவாக்கிய நாசங்களும் உயிர்ச்சேதங்களும் அளப்பரியன. அந்த பாதிப்புக்கு ஆளாகாத இதர பகுதி மக்களையும் அந்தப் பேரழிவு மருள வைத்தது. அதன் பின்னரே ‘சுனாமி’ என்ற உலக வழக்குச் சொல்லை நாம் அறியலானோம். நம் கதைகளிலும் தொன்மங்களிலும் மாத்திரம் நாம் பேசிவந்த அந்தக் கடல்கோள் வெறும் கற்பனையல்ல என்கிற உண்மைக்குள் நாம் உறைந்து போயிருக்கிறோம். நம் பிரியத்துக்குரிய கடலும் கடற்கரையும் பொழுதுபோக்கு மையங்களாகவும் குழந்தைகளின் விளையாட்டுக் களமாகவும் இருந்தவை. 2004 டிசம்பர் 26க்கு பின் கடல் இன்னொரு பலிபீடமாக மாறிவிட்டது. இதையொட்டி கடற்கரையின் மீத

எதிர்வினை
அம்பை  

ஐம்பதுகளில் பெங்களூரில் நான் பள்ளியில் படித்தபோது கான்வென்ட் அல்லாத பள்ளிகளில் ஆறாவது வகுப்புவரை தாய்மொழி பயிற்றுமொழியாக மட்டுமின்றி ஓர் இரண்டாம் மொழிப் பாடமாகவும் இருந்தது. அத்துடன் மாநில மொழியும் ஹிந்தியும் கட்டாயப் பாடங்களாகவும் இருந்தன. ஏழாவது வகுப்பிலிருந்து ஆங்கிலவழிக் கல்வி இருந்தது. பள்ளி இறுதிவரை தாய்மொழி இரண்டாம் மொழியாகவும் ஹிந்தி கட்டாயப் பாடமாகவும் இருந்தது. எங்கள் பள்ளியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி என்று இரண்டாம் மொழியாகத் தாய்மொழியைப் படிக்கும் வசதி இருந்தது பள்ளி இறுதிவரை. ஏழாம் வகுப்பிலிருந்து ஆங்கிலவழிக் கல்வி கற்காமல் கன்னடவழிக் கல்வி கற்பதற்கும் வாய்ப்பு இருந்தது. இதனால் பல மொழிகள் பற்றி அறியும் வாய்ப்பு மட்டுமல்ல, மற்ற மொழிகளை மதிக்கும் குணமும்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது தமிழ்ச் சொலவடை. தவறான விழுமியங்களும் புரிதலும் அணுகுமுறையும் கொண்ட ஒருவர் இனிமேல் சித்திரம் வரையப்போவதில்லை என்று முடிவெடுப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சுவரையே இடித்து தரைமட்டமாக்கி செங்கற்களையும் விற்றுவிடப்போகிறேன் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? “பாலைப் பொழிந்துதரும் மாடு - அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா” எனக் கொண்டாடுகிறோம். அந்தப் பசுவின் மடியையே அறுத்து எடுத்துவிடத் துடிப்பது எத்தனை மடமை? தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான். இந்த காவிரி டெல்டா பகுதி தற்போது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இந்த உணவுப் பெட்டகத்தைக்

கட்டுரை
சாவித்திரி கண்ணன்  

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தல், ஆளும்கட்சி அதிகார பலத்தை சகல பரி¢மாணங்களிலும் அராஜகமாகப் பிரயோகித்த நிகழ்வாயிற்று. அந்தரங்கச் செயல்திட்டங்கள், அதிரடி அறிவிப்புகள் என்ற பாணியிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. உள்ளாட்சி இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் தரவியலாதவண்ணம் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 18ஆம் தேதி என்று உள்ளாட்சி இடைத்தேர்தல் அவசரமாக அறிவிக்கப்பட்டதற்கு, செப்டம்பர் 20இல் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கிலான தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதும் ஒரு காரணமாக அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டது. எளிய மக்கள் தங்கள் சுற்றத்தைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் இத்தேர்தலைத் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிக

அஞ்சலி
நஞ்சுண்டன்  

அனந்தமூர்த்தியை நான் முதன்முதலில் சந்தித்தது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சாகித்திய அக்காதெமியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில். அதில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த தமிழவனோடு நானும் சென்றிருந்தேன். அனந்தமூர்த்தி சில மாதங்களுக்கு முன்பு சாகித்திய அக்காதெமியின் தலைவராகியிருந்தார். கருத்தரங்கத்தைத் தொடக்கிவைத்து அவர் ஆற்றிய உரை இன்னும் என் நினைவிலிருக்கிறது. தேநீர் இடைவேளையின்போது என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அப்போது அவரோடு அதிகம் பேச முடியவில்லை. கருத்தரங்கிற்கு வந்திருந்த கோமல் சுவாமிநாதன் சுபமங்களாவுக்காக அனந்தமூர்த்தியை நேர்காணல் செய்தார். அப்போது உடனிருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ‘What made yo

கட்டுரை
பழனி. கிருஷ்ணசாமி  

பல ஆண்டுகளாகத் திறக்காமலிருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த பெருமையில் திளைத்துக் கொண்டிருந்தார் எடியூரப்பா. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக முதல்வர் கருணாநிதி அல்சூரை (நிகழ்ச்சி நடந்த தமிழர்கள் அதிகமாக வாழும் இடம்) ஒரு கலக்குக் கலக்கிவிட்டுப் போயிருந் தார். அப்போது யு.ஆர். அனந்தமூர்த்தியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ‘இவர்கள் ஏன் இதற்குப் போய் இப்படிக் குதிகுதியென்று குதிக்கிறார்கள்? இந்த இரண்டு சமூகத்தினரும் இந்தியப் பண்பாட்டின் சக்தியை உணரவில்லையா? மொழி என்ற குறுகிய எல்லையைக் கடந்துபோக முடியவில்லையா? அப்படிப்போயிருந்தால் கன்னடியர்களே திருவள்ளுவருக்குச் சிலை வைத்திருப்பார்கள். யாரும் சொல்லாமலே அவரை நகரத்தின் ஒரு மையப்பகுதியில் அலங்கரித்து

அஞ்சலி
எஸ். ஆனந்த்  

ஆகஸ்ட் 24, 2014 அன்று லண்டனில் மரணமடைந்த ரிச்சர்ட் அட்டன்பரோ அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் காமெராவுக்கு இருபுறமும் இயங்கியவர். திரைப்படத் தயாரிப்பாளரும் கூட. தொய்வு ஏற்பட்டு மந்தநிலையில் உழன்றுகொண்டிருந்த பிரிட்டனின் திரைப்படத் தொழில் நசிந்துவிடாது தொடர்ந்து இயங்குவதற்குக் காரணமான அவருடைய அயராத உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பிரிட்டிஷ் திரையுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா என இருநாடுகளில் உருவான திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அட்டன்பரோவை நமது நாட்டுடன் இணைப்பது இரு திரைப்படங்கள். ஒன்று அவருடைய இயக்கத்தில் உருவாகி அகில உலகப் புகழையும், பாராட்டுகளையும் பெற்றுத்தந்த ‘காந்தி’. அடுத்தது சத்யஜித் ரா

அஞ்சலி
அம்பை  

இரண்டு மாதங்களுக்கு முன் சு. கிருஷ்ணமூர்த்தி எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “முதுமை கொடுமை. முதுமையில் தனிமை அதனினும் கொடுமை. என் அம்மா சொல்லுவாள்: ‘நடந்தால் உலகம் எல்லாம். கிடந்தால் தானும் தன் பாயும்தான்’ என்று எழுதியிருந்தார், தன் முதுமை பற்றி. நேரத்தை ‘கொல்ல’ பக்கத்தில் இருக்கும் ஒரு வாசகசாலையில் சேர்ந்திருப்பதாகவும், எழுதியும் படித்தும் வருவதாகவும் எழுதியிருந்தார். கடந்த ஆண்டு அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்த கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துவிட்டார். அவர் மகளுடன் வசித்து வந்தார். அவர் முதுமைபற்றி எழுதியிருந்தது என்னை வெகுவாக உறுத்தியது. காரணம் இதே தொனியில் சில ஆண்டுகளுக்கு முன் ராஜம் கிருஷ்ணனும் எனக்கு எழுதியிருந்தார். மனவருத்தத்தைப் பகிரக்கூடிய நபராக நான்

அஞ்சலி
குவளைக்கண்ணன்  

பல கைலாசம், தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தவர். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் வரலாற்றில் முன்னோடித் திகில் தொடர்களின் தயாரிப்பாளராக விளங்கியவர். தமிழன் மெகா தொடர்களுக்கும் முன்னோடி இவராகத்தான் இருப்பார்; ‘சினிமா, காரம், காஃபி’ போன்ற சினிமாவைத் தொடர்புபடுத்தி நடந்த தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பாளரும் இவர்தான். சென்னை டான் பாஸ்கோவில் பள்ளிப் படிப்பையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பையும், பின்னர் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பையும் தொடர்ந்தவர். இவருடைய முதல் டாக்குமெண்டரி ‘தொம்மங் கூத்தாடிகள்’ என்று அறியப்படும் கயிறுமேல் நடப்பவர்களைப் பற்றியதாக இருந்தது. பின்னர் ‘மின் பிம்பங்கள

அஞ்சலி
மத்யமாவதி  

உப்பாள ஸ்ரீநிவாஸின் இசையுலக நுழைவு எல்லாவகைகளிலும் மரபை மீறிய ஒன்று. கர்நாடக இசைக்கு முற்றிலும் அந்நியமான இசைக் கருவியைக் கையாளுவதின் நிபுணத்துவம். தந்தையிடம் கற்றுக்கொண்ட ஆரம்பப் பாடங்கள், அவர் வைத்திருந்த மாண்டலின் வாத்தியத்தை வாசித்துப் பழகியே பெற்ற பயிற்சி. பத்து வயதுகூட நிரம்பாத பருவத்தில் முழுமையான மேடைக் கச்சேரிக்கான வாய்ப்பு. சௌகரியமான பின்புலம் இல்லாமல் கலையின் மேன்மை காரணமாக மட்டுமே கிடைத்த உடனடியான அங்கீகாரம். ஸ்ரீநிவாஸின் இசையுலகப் பிரவேசம் நிச்சயமாக அபூர்வமானதுதான். ஆனால் இசை வரலாற்றில் அவ்வப்போது தோன்றும் பிறவி மேதைகளைப் பொறுத்தவரை இந்த அபூர்வம் சாதாரணமானதும்கூட. கர்நாடக இசையுலகில் அப்படிப்பட்ட அபூர்வங்கள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையின் கண்ணிதான் மாண்டல

பதிவு
கிருஷ்ண பிரபு  

குகை ஓவியங்கள் முதல் பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள்வரையுள்ள மேற்கத்திய ஓவியப் படைப்புகளிலிருந்து, சிறப்பான ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் உருவாக்கியிருக்கும் நூல் ‘மேற்கத்திய ஓவியங்கள் ஓர் அறிமுகம்.’ ஓவியர்களின் வாழ்க்கை, பலநிற வண்ணங்களுடன் கேன்வாசில் உறைந்திருக்கும் ஓவியங்களின் சிறப்புகள், அவைபற்றிப் பிரபல விமர்சகர்கள் முன்வைத்த நுட்பமான கருத்துகள் என்று ஒவ்வொரு ஓவியத்தைப் பற்றியும் இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகளில் பேசி இருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூலை சென்னை ‘புக் பாயின்ட்’ அரங்கில் செப்டம்பர் 13 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்படக் கலைஞர் கம

பதிவு
தேஜு க்ருஷ்ணா  

தமிழில் மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கான இடம் மிகமுக்கியமானது. படைப்பிலக்கிய நூல்களுக்குச் சமமான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன; வரவேற்பைப் பெறுகின்றன. தமிழில் மட்டுமே படிக்கத் தெரிந்த வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் புதிய பார்வைகொண்டு உலகைப் பார்க்க ஏதுவாக பெரும் சாளரத்தைத் திறக்கின்றவையாக இருக்கின்றன. 13 செப்டம்பர் 2014 சனிக்கிழமை அன்று ஈரோடு நகரில் காலச்சுவடுடன் இணைந்து ஈரோடு இலக்கியச்சுற்றம் அமைப்பு நடத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் கருத்தரங்கில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த அறிமுகமும் படைப்பிலக்கியவாதிகள் சுகுமாரன், யுவன் சந்திரசேகர் ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன. இலக்கியச்சுற்றம் துணைச் செயலாளர் விஸ்வம் வரவேற்புரை வழங்கினார். தொடர

சுரா நினைவுகள்
 

‘எனது கொடி பறக்கிறது அடிவானத்துக்கு அப்பால்’ சுந்தர ராமசாமி மறைந்து இந்த அக்டோபருடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. தனது இறுதிக் காலத்தில் அவர் எழுதிய ‘காலமே உன் பெயர்’ என்ற கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘முடிவாக சுடர் என்று நான் அதை அழைத்தபோது / முகமற்ற புன்னகையாக அது மாறியிருந்தது / இனியில்லை சொல் என்று கத்தினேன் / சொல்லிவிட்டாய் என்று என்னைத் தழுவிக்கொண்டது அது’. காலத்தின் சொல்லாக அவர் மாறி வாழும் இன்றைய தருணத்தில் கவிதை மேலும் பொருள் பொதிந்ததாக இருக்கிறது. இருந்தபோது நினைக்கப்பட்டதற்கு இணையாகவே இன்றும் தொடர்ந்து நினைக்கப்படுபவராகவே இருக்கிறார் சுரா. வெகு தீவிரமான எந்த இலக்கியத் தருணங்களிலும் அவரை நினைவு கூராமல் கடந்து செல்ல முடிவதி

சுரா நினைவுகள்
அ.கா. பெருமாள்  

சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தபின் (1972 ஜூன்) ஆறுமாதம் கழித்துதான் நெருக்கமாய் நட்புடன் பேசும் சூழல் உருவானது. பேரா. பத்மநாபன் சுராவைப் பற்றி ஏற்படுத்திய பிம்பம் அப்போது ஆழமாய் மனதில் பதிந்துவிட்டது. நானும் சுராவும் 74 - 75 அளவில், அவரது நூல்நிலையப் புத்தகங்களின் பட்டியலைத் தயாரித்தோம். ஒரு டைரியில் நூல்களின் பெயர் விபரங்களை எழுதினோம். பெரும்பாலும் சுராவின் மூத்தமகள் சௌந்தரா இந்தக் காரியத்தைச் செய்தாள். சுதர்சன் கடை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் இந்தக் காரியம் நடந்தது. அப்போதே 2000க்கு மேல் புத்தகங்கள் இருந்ததாக நினைவு. நிறைய புத்தகங்கள் தொலைந்துவிட்டன என்றார் சுரா. புத்தகம் பெற்றுக்கொண்டு கொடுக்க மறந்தவர்களின் பெயர்களையும்கூடச் சொன்னார். கிருஷ்ணன் நம்பிக்கு இதில் முதலிடம் உண

கட்டுரை
 

காரைக்குடியிலிருந்து வீட்டிற்குத் திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தது. “ஜகதா மாமி வந்துட்டு இப்போத்தான் போறா. கலெக்டரோட அம்மாவாமே. பாயாசம் பச்சடியோடு சமையல் பண்ணிப்போட்டேன். அடுத்த மாதம் கல்யாணத்துக்குக் காரைக்குடி வரவேண்டியிருக்கு. நிச்சயமா திரும்ப வருவேன்னு சொல்லிட்டுப் போறா. உங்க பேரிலுள்ள அபிமானத்தால இரண்டு வருஷம் உங்களுக்குச் சமையல் பண்ணிப் போட்டாளாமே. தங்கப்பொண்ணு சொன்னா எனக்கு உசிரு. எனக்கு அக்கா மாதிரி... அந்த அன்புக்காகத்தான் ரண்டு வருஷம் அங்கே இருந்தேன் அப்படின்னு சொன்னா. உங்கள் எல்லாரையும் பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்தபடி இருந்தா... எங்களுக்கும் அந்த மாமியைப் பிடிச்சுது. அதுதான் கூப்பிட்டுச் சொல்லுவோம்னு தோணித்து” என்றார் கோமதி மாமி. ‘‘இங்கிருந்து போய

சுரா நினைவுகள்
கே.என். செந்தில்  

உண்மையின் சிறுகீற்றுகூட பரவசம் ஊட்டக் கூடியது” என்று எழுதிய படைப்பாளி சுந்தர ராமசாமி. அடிப்படையில் இளைய தலைமுறை என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதா அல்லது எழுதவந்த காலத்தைப் பின்னணியாகக் கொண்டதா? ஜோசே சரமாகு பற்றிய அஞ்சலிக் கட்டுரையை (காலச்சுவடு இதழ் - 128, ஆகஸ்டு 2010) படித்தபின் தோன்றிய குழப்பம் இது. சரமாகு தன் 23ஆம் வயதில் முதல் நாவலை எழுதினார். ஆனால் அப்பயணம் தொடரவில்லை. வெவ்வேறு பணிகளைச் செய்தபின் தன் 57ஆம் வயதில் முழுநேர எழுத்தாளராகி உலகப்புகழ் பெற்றார். அப்படியெனில் அவர் இளைய தலைமுறையா? காசியபனின் ‘அசடு’ அவரது ஐம்பதையொட்டிய வயதில் வெளியாயிற்று. பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ இப்போதுதான் வந்தது. நாவல் உலகில் இவர்களை இளைய தலைமுறை என அழைக்கலாமா?

பத்தி: காற்றின் கலை
பி. ரவிகுமார்  

கர்நாடக இசைத்துறைக்கு கேரளத்திலிருந்து அறிமுகமான குறிப்பிடத்தகுந்த இசைக் கலைஞர்களில் ஆகக் கடைசியானவர் நெய்யாற்றின்கரை வாசுதேவன். வாசுதேவனுக்குப் பிறகு, வாசுதேவன் அளவுக்குத் திறமையான பாடகர் உருவாகவில்லை. இனி கேரளத்திலிருந்து அவரைப் போன்ற இசைக் கலைஞர் ஒருவர் பிறந்துவர வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஹிந்துஸ்தானி இசையுடன் ஒப்பிட்டால் கர்நாடக சங்கீதம் இன்னும் மேல்வர்ணத்தவர்களின் பிடியிலும் தீவிர வைதீகர்களின் கட்டுப்பாட்டிலுமே சிக்கியிருக்கிறது. காலத்துக்கு முன்னரே நடந்துசென்ற திறமையாளர்களான பல இசைக் கலைஞர்களையும் இருட்டடிப்புச் செய்ய முயன்றவர்கள்தாம் கர்நாடக இசைத்துறையிலுள்ள இந்த மேல்வர்ணத்தினர். நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. முற்றிலும் எதிர்மறையான சூழ்நிலைகளிலிருந்து வந்து யார்

கட்டுரை
பக்தவத்சல பாரதி  

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ச அரசானது இந்தியாவின் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் தலைமையோடு மிகவும் நெருக்கத்தைக் கொண்டிருந்தது. இப்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோடும் தொடர்ந்து நெருக்கத்தைப் பேண விரும்புகிறது. இப்போதைய அரசோடு கொண்டிருக்கும் உறவு சார்க் அமைப்பின் உறுப்பு நாடு, அண்டைய நாடு என்று ஒருபுறம் கூறிக்கொண்டாலும், இனம்சார்ந்த, மொழிசார்ந்த வகையில் வடஇந்தியாவோடு பூர்வகால உறவைக் காட்டிச் சொந்தம் கொண்டாட மறுபுறம் முனைகின்றது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் உயர் அதிகாரி (உயர்ஸ்தானிகர்) பிரசாத் காரியவசம் (ஹரியவாச) பலமுறை வடஇந்தியாவுக்கும் சிங்கள மக்களுக்குமான இனம் சார்ந்த, மொழி சார்ந்த உறவினை நினைவுபடுத்தி வந்திருக்கிறார். இக்கருத்தை இ

மதிப்புரை
ப. சகதேவன்  

இருபதாம் நூற்றாண்டின் கர்நாடக அரசியல், சமூக, பண்பாட்டு வரலாற்றில் அழிக்க முடியாத இடம்பெறுபவர் பல்யாடா லங்கேஷப்பா (பி. லங்கேஷ், 1935 - 2000). இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்த பேந்த்ரே, குவேம்பு, காரந்த் போன்றோரின் எழுத்துகள் மறுமலர்ச்சி மற்றும் செவ்வியல் பண்புகளைக் கொண்டிருந்தபோது சுதந்திரத்திற்குப் பிந்தைய எழுத்துகள் கனவுலகத்திலிருந்து மீண்டு வந்தவையாக இந்திய வாழ்க்கையின் பன்முகப் பண்புகளை வெளிப்படுத்துபவையாக அமைந்தன. இந்தியப் பொது நீரோட்டத்திலிருந்து கன்னட அறிவுலகமும், படைப்புலகமும் விலகியிருந்ததற்கு முக்கியக் காரணங்களாக லோகியாவாதத்தையும், உயிர்த் துடிப்புள்ள நாடகமேடையையும் சொல்லலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தப் படைப்பாளி பசவண்ணர் ஒரு தீவிரமான மறுபரிசீலன

 

ஒன்று ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு கைகூடும் கனவு அது. 1957இல் பிறந்த, அப்போதைய கோவை மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமொன்றில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த, தன் சக ஆசிரியர்களால் கே.என். எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட நல்லமுத்து ஆசிரியர் - முத்தம்மாள் தம்பதியின் மூத்தமகன் எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியொன்றில் குமாஸ்தாவாக இருப்பவன், 1993இல் எழுதி வெளியிட்ட ‘பலி’ என்னும் தமிழின் புகழ்பெற்ற தலித் சிறுகதை 2012இல் கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ரானடே ஆடிட்டோரியத்தில் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்றுநாள் கொண்டாட்டங்களில் ஒரு ம

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
 

வரலாறு நேர்கோட்டிலானது, நடந்த எதுவும் மீண்டும் நடப்பதற்கில்லை என்பது ஒரு நடைமுறைப் பார்வை. இந்த நாளும் கிழமையும் வருடமும் இதே அடையாளத்துடன் மறுபடியும் வருவதற்கில்லை. கடந்து சென்ற விநாடி, கடந்ததுதான் என்பது.நடந்ததேதான் மீண்டும் மீண்டும் நடக்கிறது; வடிவங்கள்தாம் புதிதாய்த் தென்படுகின்றனவே தவிர, கருப்பொருள் புதிதல்ல என்பது ஆன்மிகவியலின் விதிவாதப் பார்வை - மீபொருண்மை வாதிகளும் கிட்டத்தட்ட இதையேதான் சொல்கிறார்கள். தத்துவம் மற்றும் சமூகவியலின் தலையாய கருதுகோள்களில் ஒன்று ‘வரலாறு திரும்பும்’ என்பது. ஆனால், வரலாற்றின் நிகழ்தன்மை எதுவாக இருந்தபோதிலும், அது தனிமனித மனத்தை மின்கம்பிச் சுருள்போலச் சுற்றியிருக்கிறது என்பது தவிர்க்கவியலாத உண்மை. மனிதமனம் கொள்ளும் தன்னடையாளம் இந்த மின