தலையங்கம்
 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தண்டனையும் சிறைவாசமும் பல்லாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் தமிழக அரசியல் சூழலுக்குப் புதிய சாத்தியங்களைக் கொண்டு வந்துள்ளன. அதேநேரம் ஜெயலலிதா சிறைவாசத் தைக் கொண்டாடி திமுக உண்ட இனிப்பு அதன் தொண்டையில் மீன் முள்ளாகச் சிக்கி மௌனத்தில் திணறடிக்கிறது. ஜெயலலிதாவின் சிறைவாசம் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை கொள்ளையடித்த ஆண் தலைவர்களுக்கு கிடைக்காத தண்டனை ஒரு பெண்ணுக்குக் கிடைத்துள்ளதாக அவர்கள் நினைக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் ஒவ்வொரு ஷரத்தின் கீழும் குற்றமிழைத்துள்ள அரசியல் குடும்பங்களில் - ஜெயலலிதாவுக்கு சாத்தியப்படாத வன்பாலுறவுக் குற்றங்களும் இதில் அடங்

 

இளைய தலைமுறை வாசகர்களான எங்களுக்கு சு. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தெரியாது. ஏனென்றால், மொழிபெயர்ப்பாளர்களை நாங்கள் படைப்பாளிகளாக ஒப்புக்கொள்ள மறுதலித்ததுதான். மொழிபெயர்ப்பும் ஒருவகையில் படைப்புதான் என்பதை வெகுதாமதமாகவே அறிந்துகொண்டோம். ஒரு படைப்பை அதன் மூலமொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு அதன் உயிர் மாறாமல் கொண்டுவருவது என்பது சாதாரண காரியமன்று. மொழிப்புலமையோடு இலக்கியத்தேர்ச்சியும் அதற்கு அவசியம். அவ்வகையில் ஒரு மொழிபெயர்ப்பாளர் வெறுமனே மொழிமாற்றமோ மொழிபெயர்ப்போ செய்வதில்லை. மாறாக, ஒரு படைப்பை அதன் மூலமொழியிலிருந்து பிறிதோர் மொழிக்கு ஜீவன் மாறாமல் கொண்டுவரப் பார்க்கிறார். அங்கு மொழிப்புலமை ஓரளவே பயன்தரும். விரிவான இலக்கிய அனுபவங்களே மொழியாக்கத்தைச் செழுமைப்படுத்தும்.

கட்டுரை
கே. சந்துரு  

மெரினா கடற்கரைப் பக்கம் கடந்தவாரம் சென்றபோது அங்கு உயர்நீதிமன்ற தடையையும்மீறி சில ப்ளெக்ஸ் விளம்பரத்தட்டிகள் நடைபாதையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ‘‘நீதிக்கே அநீதியா?” என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டுநாட்கள் கழித்து பெரம்பூரில் ஜெ. பேரவையின் சார்பில் விசித்திரமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கண்ணைக் கறுப்புத்துணியில் கட்டிக்கொண்டு துலாக்கோலைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் நீதிதேவதையின் படத்துடன், ‘‘காசு பணம் துட்டு மணி மணி” என்ற வரிகளும் காணப்பட்டன. இந்தச் சுவரொட்டிகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல. ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்வருக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும் ரூ100 கோடி

தேவிபாரதி  

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது தமிழகமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கொசுத்தொல்லைக்கு முடிவு கட்டுவதற் காகத் தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமொன்றுக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தது பற்றிய செய்தி கண்ணில்பட்டது. அவரது இதயதெய்வம், புரட்சித்தலைவி, மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் கடந்த மூன்று வாரங்களாகச் சிறையில் இருந்துகொண்டிருக்கும்போது கொசுத்தொல்லை பற்றிச் சிந்திக்க அவருக்கு முடிந்திருப்பது ஆச்சரியமானதாக மட்டுமல்ல நம்ப முடியாததாகவும் இருந்தது. எட்டு அம்சத் திட்டமொன்றின் மூலம் கொசுக்களை ஒழிப்பதற்கு தான் மேற்கொண்டிருக்கும் சூளுரையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெற்றிபெறக்கூடுமானால் அது நிச்சயமாக மக்களின் முதல்வரது பரிபூரணமான நம்பிக்கையைப் பெற்ற, சாதுவான, எந்த ஒளிவட்டத்தாலும் சூழப்

மலாலா யூசுபாஃஸாய்  

நள்ளிரவில் பிறந்த ஒரு நாட்டிலிருந்து நான் வருகிறேன். ஏறக்குறைய நான் இறந்துபோனபோது அது ஒரு நண்பகல் நேரம். ஒரு வருடத்திற்கு முன் பள்ளிக்குக் கிளம்பிச்சென்ற நான் பின் வீடு திரும்பவே இல்லை. தாலிபான்களின் தோட்டாக்களால் சுடப்பட்டு, சுயநினைவில்லாமல் பாகிஸ்தானிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டேன். சிலர் இனி நான் வீடு திரும்பப் போவதில்லை எனக் கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக நான் நாடு திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நேசிக்கும் நாட்டைவிட்டுப் பிரிந்துசெல்லும் கொடுமை எவருக்குமே நேரக்கூடாது. ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதெல்லாம், என் பொருட்களால் நிறைந்த, தரையெங்கும் என் உடைகள் இறைந்து கிடக்கின்ற, என் பரிசுகளால் நிரம்பிய அலமாரி நிற்கும் என் பழைய அறையைக் காண மனம் ஏங்குகிறது. ஆனா

நோபெல் அமைதிப் பரிசு 2014
சுப. உதயகுமாரன்  

கடந்த 1990களின் துவக்கத்தில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது, ஓர் எண்ணம் எனது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கவேண்டும்; அது சாதாரண பள்ளிக்கூடமாக இருக்கக்கூடாது; உண்மையிலேயே பள்ளிக்கூடம் செல்லமுடியாத, படிக்கமுடியாத குழந்தைகளுக்கானதாக இருக்க வேண்டும்; அந்தப் பள்ளியில் முற்பகலில் விவசாயம் சொல்லித்தந்து, அதில் கிடைக்கும் வருமானத்தை அந்தக் குழந்தைகளுக்கே கொடுத்துவிட்டு, பிற்பகலில் பள்ளிக்கல்வி நடத்தவேண்டும் என்று விரும்பினேன். செங்கல்சூளைகளிலும் கட்டுமானத்தொழிலிலும் வேலை செய்துகொண்டிருந்த குழந்தைகள்தான் என் மனதில் இடம்பிடித்திருந்தார்கள். அந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளிகள், அவர்களின் நிலை, பிரச்சினைக்குத் தீர்

பத்தி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்-8
வே. வசந்தி தேவி  

பணியிடங்களில் பாலியல் வன்முறைகளும் துன்புறுத்தல்களும் காலங்காலமாக, பரவலாக நடந்துவரும் - வெளிச்சத்திற்கு வராத கேவலங்கள்தாம். பலியாகும் பெண்களின் கதியின்மை, பலமின்மை, குற்றமிழைப்போரின் அதிகார ஆணவம், ‘இது என்ன பெரிய விஷயம்?’ என்று ஆணாதிக்க சமுதாயம் அளிக்கும் அலட்சிய அங்கீகாரம் ஆகியவற்றில் ஒட்டிக்கொண்டு தழைக்கும் அசிங்கம். சமீபத்தில் இரு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளும், புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டு, நாட்டுமக்கள் முன் அவமானப்பட்டு நின்றபோதுதான், அரசு விழித்தெழுந்தது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பும் தீர்ப்பும்), Sexual Harassment of Women (Prevention, Prohibition and Redressal) Act, 2013 என்ற சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. உச்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

இலவசத்தை இன்பமுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை “ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” எனும் சொலவடைமூலம் எள்ளி நகையாடுகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு வட்டார விவசாயி கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நெய்யாற்றுத் தண்ணீர் கேரளா நமக்கு இலவசமாகத் தரும் நெய் அல்ல; அது இப்பகுதி விவசாயிகளின் பாரம்பரிய உரிமை. திருவனந்தபுரத்திலிருந்து மேற்குப் பக்கம் சுமார் 30 கி.மீ. தொலைவில் மலையின் அடிவாரத்திலுள்ள கள்ளிக்காடு எனுமிடத்தில் திருவிதாங்கூர் - கொச்சி அரசால் திட்ட மிடப்பட்டதுதான் நெய்யாறு அணை. விடுதலைக்குப் பிறகு 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1958ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் வலதுகரை சானலின்மூலம் நெய்யாற்றங்கரை வட்டத்திலுள்ள சுமார் 10,000 ஏக்கர்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் (1888 - 1975) பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது கூட்டிணைவுடைய ஒரு சொற்கூறு: அரசியல் மேதை - தத்துவஞானி. சென்ற நூற்றாண்டில் இந்து சமயத்தை ஒரு தனியாளின் பணித்திட்டமாக, முக்கியமாக மேற்குலகிற்கு அறிமுகப்படுத்துவதிலும், அந்த மதம்மீதான அவர்களின் அவதூறுகளைத் திருத்துவதிலும் மிக மும்முரமாயிருந்தார். அவருடைய காலத்தில் வேறு இந்தியர்கள் இந்து மத மீளுருவாக்கத்திற்காக உழைத்தாலும் இராதாகிருஷ்ணனிடம் இருந்த கெட்டித்தனமும், பலமான அறிவியல் எண்ணப்படிவமும், தத்துவ ஞான விரைவூக்கமும், மதங்களில் அவருக்கிருந்த கூர்மையான அறிவுத்திறனும், அவரின் வாசக தோழமையான எழுத்துநடைப் பாணியும் அவரை மற்றவர்களிடமிருந்து சற்று வேறுபடுத்தின. அவர் எழுதிய கட்டுரைகள

சுரா பக்கங்கள்
 

01.03.03 அன்புள்ள ஆனந்தவிகடன் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ஒரு சில விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இக்கடிதம் எழுதுகிறேன். என் உணர்வுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அலுவலகத்திலிருந்து 10.02.03 அன்று என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தவிகடனில் பிரசுரிப்பதற்காக நான் சில கேள்விகளுக்குப் பதில் தரவேண்டுமென்று கேட்டார்கள். பதில்களை எழுதித்தர எனக்கு இரண்டுநாட்கள் அவகாசம் வேண்டும் என்று சொன்னேன். இதழில் சேர்க்கவேண்டிய தேதி நெருங்கிவிட்டதால் ஒருநாள் அவகாசத்தில் எழுதித் தந்தால் உதவியாக இருக்கும் என்று சொல்ல, நானும் அதை ஏற்று, தொலைபேசி வழியாகவே மூன்று கேள்விகளைத் தெரிந்துகொண்டு மறுநாளே (11.02.03) கேள்விகளுக்கான பதிலை உங்களுக்கு அனுப்பிவைத்தேன்.

 

அனார் கவிதைகள் செந்தி கவிதைகள்

திரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

'மெட்ராஸ்’ படத்தில் முற்போக்கான அரசியல்மாற்றத்தை விரும்பும் அன்பு என்ற இளைஞன், தங்கள் சமூகத் தலைவருக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்கிறான். அவன் வாழும் பகுதியிலிருக்கும் சுவரொன்றில் அரசியல் பலம்கொண்ட ‘வேற்றுத் தலைவரின்’ படம் வரையப்பட்டிருக்கிறது. அது அவன் விரும்பும் தற்சார்பான அரசியலுக்கு எதிரானது. அக்குறியீட்டை மாற்றித் தங்களுக்கான தலைவரின் படத்தை வரைவதே அப்பகுதியின் அதிகாரம் தங்களுக்கு கைமாறியதற்கு ஒப்பானதாகும் என்று நினைக்கிறான். ஆனால் ஏற்கனவே சுவரில் வரையப்பட்டிருக்கும் வெளித்தலைவருக்கு ஆதரவான குழுவும் அவன்பகுதியிலே இருக்கிறது. இது தொடர்பாக இரண்டுதரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நடக்கின்றன. அன்புவின் நண்பன் காளி படித்துவிட்டு நிறுவனம் ஒ

கதை
 

கதிற்குள் குளவி புகுந்து பறப்பதுபோன்ற சத்தம் கேட்டு யசோதா பயந்து, ஊளை எழுப்பி, தலையை வேகமாக உலுக்கியபடி வெளியே வந்து நிலைப்படியில் நின்று விருந்தாளிக்காகக் காத்திருப்பது போன்ற பாவனையில் வீதியின் இருபுறத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். கைவிரல்கள் புதையுமளவிற்குப் பள்ளம் விழுந்திருந்த கழுத்தெலும்புமீது கிடந்த சாயம்போன பாசிமணியை வாயில் வைத்துக் கடித்தபடியிருந்தாள். அம்மாவின் கட்டில் அசைவை, குரல் கனைப்பைக்கேட்டுக் குரோதத்துடன் உள்ளே திரும்பி பார்த்தபின் பாசிமணிகளில் ஒன்று நொறுங்க பற்களைக் கடித்துக் காறித்துப்பினாள். பட்டியிலிருந்து திறந்து விடப்பட்டவைபோல ஒன்றையொன்று இடித்துத் தள்ளி முட்டி மோதியபடி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சொற்கள் அவளிடமிருந்து தெறித்து விழுந்தன. திராவகத்தைக் குடித்து

உரை
க.வை. பழனிசாமி  

பனி (நாவல்) ஓரான் பாமுக் தமிழில்: ஜி. குப்புசாமி காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001 பக். 575 விலை 450 மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த அரங்கு இது. மொழிபெயர்ப்பின் அவசியம் குறித்து இந்த இடத்தில் சொல்லாதிருக்க முடியாது. நாவலை மொழி பெயர்க்கும்போது அந்த நாவலை மூலப்பிரதிக்கு இணையாக மொழிபெயர்க்க முடியாது என்பது காலந்தோறும் பேசப்படும் கருத்து. எனக்கு அதில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. நாவல் எழுதப்பட்டிருக்கும் மொழியைத் தெரிந்தவன் ஒருபோதும் மொழியாக்கப்பிரதியை வாசிப்பதில்லை. வாசகன் தனது பிரதியைத்தான் வாசிக்கிறான். ஆக மொழிபெயர்ப்பும் ஒரு வாசகப்பிரதிதான். அக்கறை கலந்த வாசகப்பிரதி என்று கூடுதலாகச் சொல்லலாம். ஓரான் பாமுக்கின் எழுத்து தமிழ் வாசகன் அறிந்திராத எழுத்து. பொதுவ

மதிப்புரை
வி.என். ரமேஷ்  

வீணையின் குரல் (வாழ்க்கை சரிதம்) விக்ரம் சம்பத் தமிழில்: வீயெஸ்வி காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001 பக். 440 ரூ. 350 ‘வீணையின் குரல்’ என்ற இந்த நூல் வீணைக் கலைஞர் மறைந்த எஸ். பாலசந்தரின் வாழ்க்கை சரிதம் ஆகும். வாழ்க்கை சரிதம் என்று சொல்லும்பொழுது ஏதோ ஒரேநாள் இரவில் உச்சத்திற்கு வந்த ஒரு திரை நட்சத்திரத்தின் வாழ்க்கையில் நடந்த அதிரடி திருப்பங்களும் திகில்களும் நிறைந்த வாழ்க்கை சரிதமல்ல இது; அல்லது பெயரும் புகழும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்து சமூகத்தின் அதிகாரத்தின் உச்சியில் நிற்கும் அரசியல்வாதியின் வாழ்க்கை சரிதமும் அல்ல. மாறாகச் சுயமாக உருவாகி இயல்பாகவே கர்நாடக இசையின் நாதத்தால் ஈர்க்கப்பட்டு தன்னை உணர்ந்து, தன்னையே தன் அனுபவ ஞானத்தால் ச

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் பிரபந்தத் திரட்டு தேவபாகமும் மானுடபாகமும் பதிப்பு: காங்கேயம் நீலகண்டன் செல்லத்துரை சுதர்சன் புலவரில்லம், இமையாணன் - உடுப்பிட்டி, யாழ்ப்பாணம் இலங்கை பக். 593 தமிழில் பிரபந்தங்கள் 96 என்றாலும் அவை எல்லா வகைமையும் கிடைக்கவில்லை. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் சிற்றிலக்கியங்களைப் பாடியவர்களும் அருகிவிட்டனர். 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் யாப்பை இறுக்கமாகக் கையாண்டு பிரபந்தம் பாடியவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இன்னொருவர் யாழ்ப்பாணம் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர். பிரபந்த ஆசிரியர்களின் தொகுப்பு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது குமரகுருபரருக்குத்தான். அடுத்துச் சொல்லும்படியானது சிவசம்புப் புலவருக்கு. யாழ்ப்பாணம் காங்கேயன் நீலகண்டனும் செல்லத்துரை சுதர்

நோபெல் இலக்கியப் பரிசு 2014
நாகரத்தினம் கிருஷ்ணா  

‘நோபெல் பரிசும் பிரெஞ்சு இலக்கியமும் இணைபிரியாதவை; ஏனெனில் பிரெஞ்சு இலக்கியம், நோபெல் பரிசு என்கிற ஒளிப்பிரபைக்குள் வருகிறது’’ - என ‘பத்ரிக் மொதியானொ’வின் பெயரை 2014ஆம் ஆண்டு நோபெல் இலக்கியப் பரிசுக்குத் தேர்வுசெய்து முடிவை அறிவித்த தினத்தில் பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். அவருடைய நாட்டின் இலக்கியப்புகழ் குறித்து பெருமிதம்கொள்ள அமைச்சருக்குக் காரணங்கள் இருக்கின்றன. உலக நாடுகளில் நோபெல் பரிசை அதிகம் வென்ற நாடுகளில் பிரான்சு முதலாவது இதுநாள்வரை பதினைந்து பரிசுகள். அமெரிக்காவும் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. 1964ஆம் ஆண்டு தமக்களிக்கப்பட்ட பரிசை ழான் போல் சார்த்ரு மறுக்கவில்லையெனில் பரிசுபெற்றவர்களின் எண்ணிக்

பத்தி
 

எழுத்திலக்கிய வடிவங்களிலேயே குறைந்த இடவசதி கொண்டது கவிதை. நாவல்போல அகண்டாகாரமான மைதானமோ, சிறுகதைபோலத் தாராளமாக நடமாடும் வசதிகொண்ட இடமோ அல்ல அது. அதிலும் நவீனத்துவ கவிதை வழங்கும் பரப்பு இன்னும் குறுகலானது - ‘ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் என்றால் நிற்க மட்டுமே முடியும்’ என்கிற அளவு! அதன் காரணமாகவே, உரைநடை போலின்றி கவிதைக்குள் வரும் சொற்களுக்குப் பிரத்தியேகமான கனம் தொற்றிவிடுகிறது. நடைமுறை வாழ்வின் அலகுகளில் சகஜமாகவும் சரளமாகவும் சாமான்யமாகவும் புழங்கும் அநேகச் சொற்கள், கவிதைக்குள் நுழைந்த மாத்திரத்தில் விசேஷமான அழுத்தம் கொள்கின்றன. இதேபொருள் தரும் வேறு பலசொற்கள் இருக்கும்போது, கவிஞன் இந்தக் குறிப்பிட்ட வார்த்தையைத் தேர்ந்தது எதனால் என்ற கேள்வி பிரதானமாகி விடு

கட்டுரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

கடவுள் என்ற கருத்துநிலை உருவாகி, பின்னர் அதற்கென ஓர் உருவம் வடிவமைக்கப்பட்ட பின்னர், சில பொருட்களை அதன் முன்னர் படைத்து வழிபடும் வழக்கம் தோன்றியது. சங்க இலக்கியங்களில் இடம்பெறும் நடுகல் வழிபாட்டிலும் முருக வழிபாட்டிலும் படையல் பொருளாக இறைச்சி இடம்பெற்றிருந்தது. நடுகல் வழிபாட்டில் கள்ளும் படையல் பொருளாக இருந்துள்ளது. சங்க காலத்தில் அறிமுகமான வடபுலத்தின் வைதீக சமயம் வளர்ச்சி பெறத் தொடங்கியபோது கோவில் என்ற அமைப்பு உருவாகி வளரத் தொடங்கியது. பல்லவர் காலத்தில் இது வளர்ச்சியுற்றுப் பின்னர் சோழர் ஆட்சிக்காலத்தில் ஒரு நிறுவனமாக மாறி நின்றது. இதன்பின்னர் வைதீக சமயங்களான சைவமும் வைணவமும் இறைவனின் உருவத்திற்குமுன் படைக்கும் பொருட்கள் எவை என்பதை வரையறுத்தன. இவ்வரையறையின் படி இறைச்சியும் கள்ளும்

பதிவு
வீரா  

பாத்திமாபாபு தன் இயக்கத்தில் ஐந்து முத்தான நாடகங்களை ‘பஞ்சரத்தினம்’ என்னும் பெயரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மயிலாப்பூர் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அரங்கேற்றினார். சிரிப்பூட்டக்கூடிய வழமைகளைத் தவிர்த்து ரசிகர்களின் சிந்தனைத் தளத்தையும் ரசனைத் தகுதியையும் உயர்த்தும் படியாகப் படைப்புகளை உருவாக்கி இயக்கியிருந்தார். ‘கூடிவாழ்ந்தால்’ என்னும் முதல்கதை, ஒரு நடுத்தர வர்க்க கணவன் மனைவிக்குள் நிகழும் அன்றாடச் சண்டை சச்சரவுகளை வைத்துப் பின்னப்பட்டது... நம் வீட்டிலோ அல்லது நம் அண்டை வீடுகளிலோ நடக்கும் இவ்வகைச் சண்டைகளைப் பார்த்தால் அடுத்தநாள் காலையில் விவாகரத்துக்கு ஓலை அனுப்பிவிடுவார்கள் என்றுதான் எண்ணக்கூடும். அவ்வளவு உக்கிரமாக நடக்கும் கணவன் மனைவிக்க

கட்டுரை
சர்வோத்தமன் சடகோபன்  

பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வார்வாரா என்ற பெண்மணியை இருபது வருடங்களாகக் காதலிப்பார். வார்வாரா அவரைப் பொருட்படுத்துவதேயில்லை. அவ்வவ்போது ஸ்டீபன், வார்வாராவுக்குத் தீவிரமான ஆவேசமான கடிதங்களை எழுதுவார். அவரது நண்பர் அவற்றைப் படித்துவிட்டு இவற்றைத் தயவுசெய்து அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுவார். ஆனால் ஸ்டீபன் அனுப்புவார். அதைப் படிக்கும் வார்வாரா எந்தச் சலனமும் இல்லாமல் மடித்துவைத்துவிடுவார். அவர் என்ன நினைக்கிறார் என்று ஸ்டீபனுக்கு புரிவதே இல்லை. நாவல் ஆரம்பிக்கும்போது ஸ்டீபனுக்கு ஐம்பத்து மூன்று வயது. முப்பத்து மூன்று வயதிலிருந்து வார்வாராவை காதலிப்பார். இறுதியில் மரணப்படுக்கையில் ஸ்டீபன், வார்வாராவிடம் ‘நான் உன்னை எவ்வளவு தீவிரமாகக் காதலித்தேன்’ என்று கதறுவார். வார்வாரா

உள்ளடக்கம்