தலையங்கம்
 

சில முழக்கங்களால் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார் பிரதமர் மோடி. மக்களின் கவனத்தில் பதிகிற மாதிரி சில கவர்ச்சி அம்சங்களையும் அதனோடு சேர்க்கிறார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘தூய்மை இந்தியா’ ஆகியன அவருடைய செயல் திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது அனுபவ உண்மைகளால் நாம் அறிந்திருக்கிறோம்- முழக்கங்களால் இந்தியா வென்றதில்லை. மோடியின் அவசரத் திட்டங்கள் முன் வரலாற்றினைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய இரண்டு திட்டங்களும் அனுபவச் செறிவு கொண்டவை அல்ல; இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ புதிய பொருளாதாரக் கொள்கையின் கடைசி இதயத் துடிப்பாக இருக்கக்கூடும். ராஜீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்

தலையங்கம்
 

கடந்த மாதம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் என்ற ஊரில் தான் காதலித்த தலித் இளைஞனை மணக்க விரும்பிய வட்டார பெரும்பான்மை சாதியை சேர்ந்த விமலாதேவி என்ற பெண்ணை அக்குடும்பத்தினரே கௌரவக் கொலை செய்ததாகப் புகார் எழுந்தது. இப்போது அவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இம்முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தின் வெவ்வேறு இடங்களிலும் இரண்டு கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அந்த அளவிற்குத் தமிழகத்தில் கௌரவக் கொலைகள் இயல்பாகிவிட்டன. கடந்த 20 மாதங்களில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மட்டும் 32 கௌரவக் கொலைகள் நடந் திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. புனையப்பட்ட சாதிப் பெருமிதத்திற்காகப் பெற்று வளர்த்த வாரிசு களையே கொல்லலாம் என்று நம்முடைய

தலையங்கம்
 

இந்தியச் சமூகம் மதுவுடன் மாறுபட்ட உறவைக் கைக்கொள்ள வேண்டும்; மதுவிலக்கும் தீர்வல்ல, கட்டுப்பாடற்ற விற்பனையும் தீர்வல்ல. கேரள அரசு, மதுவைத் தடைசெய்ய முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள், மக்களிடையே ஆளும் கூட்டணிக்கு உள்ள அபிமானம் சரிவதை நிறுத்தும் ஆசை என்று இதற்கு உந்துதல் எதுவாக இருந்தாலும், மது அருந்துதல், மதுப் பழக்கம், குடும்ப வன்முறை, மதுவிலக்கு, மாநில அரசுகள் நிதி ரீதியாக மது விற்பனையைச் சார்ந்திருத்தல் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புள்ள சிக்கலான பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்வதற்கான தருணம் இது. மது அருந்துதல் - குறிப்பாக அது குடிநோயாகும்போது - பல இந்தியக் குடும்பங்களின் சாபக்கேடு. அது பல சமயங்களில் வன்முறைக்கு வித்திடுதல், நிதி ரீதியான அழி

கண்ணோட்டம்
களந்தை பீர்முகம்மது  

நாம் நன்கு அறிந்திருந்த வாரன் ஆண்டர்சன் இறக்கும்போது அவருக்கு வயது 30 . அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 29இல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் இறந்தது அக்டோபரில் தெரிய வந்தது. வாரன் ஆண்டர்சனை ஒசாமா-பின்-லேடனுடன் ஒப்பிடுவதில் தயக்கம் தேவையில்லை. நீதிதேவதையின் ஒரு கண் திறந்தபோது ஒசாமா-பின்-லேடன் கொல்லப்பட்டார். மறு கண் திறக்க மறுத்தது, ஆண்டர்சன் தானே இறந்தார். 1984 டிசம்பர் 2,3 தேதிகளில் போபாலில் ஒரு புதுவிதமான யுத்தப் பிரகடனம்; அப்பாவிகள் எதிரிகளாகக் கருதப்பட்டு நச்சுவாயுவான மெதில் ஐசோ சயனைடில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆண்டர்சனின் யூனியன் கார்பைட் நிறுவனம் அதுவரை பேட்டரிகளையும் பூச்சிக்கொல்லிகளையும் தயாரித்து வந்தது. மேலே சொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்கு அது வேறு வடிவம் எடு

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

முல்லை பெரியாறு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது. கேரளாவில் பலராலும் ஜீரணிக்கப்பட முடியாததாக இருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” எனக் குரல்கொடுக்கும் சிபிஐ கட்சியைச் சார்ந்த கேரள சட்டமன்ற உறுப்பினரும் அவரது சகாக்களும் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் வாக்குவாதம் செய்து, அவர்களைத் தாக்கி, பேபி அணையைச் சேதப்படுத்த முயன்றுள்ளனர். அண்மையில் அணைப்பகுதியில் அதிக மழை பொழிந்ததாலும், நீர்வரத்து அதிகமானதாலும், கேரளாவெங்கும் பதற்றம் நிலவியது. தமிழகம் அணையிலிருந்து குறைவான அளவே தண்ணீர் எடுப்பதால்தான் அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கேரள அரசு குற்றம

கட்டுரை
பா. செயப்பிரகாசம்  

கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை பதினெட்டு ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அப்போது தமிழக முதல்வராயிருந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து அளித்த தீர்ப்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவரது முதல்வர் பதவி பறிக்கப்படுவதற்கும் காரணமாயிற்று. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாகக் கடையடைப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் அவர் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட பிரார்த்தனைகளுக்கும் குறைவில்லை. முன்பு டான்சி நிலபேர வழக்

பத்தி: காற்றின் கலை
பி. ரவிகுமார்  

1986ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முதன்முதலாக மாண்டலின் ஸ்ரீநிவாஸின் வாசிப்பைக் கேட்கிறேன். ஸ்ரீநிவாஸ் தனது பதினாறாவது வயதில் நடத்திய கச்சேரியின் ஒலிப்பதிவு அது. அந்தக் கச்சேரிக்கு சிக்கில் பாஸ்கரன் (வயலின்), தஞ்சாவூர் உபேந்திரன் (மிருதங்கம்), பாலக்காடு சுந்தரம் (கடம்) ஆகியவர்கள் பக்க வாத்தியம் வாசித்திருக்கிறார்கள். ‘சரசிஜாக்ஷ’ என்ற காம்போஜி வர்ணத்துடன் கச்சேரி தொடங்குகிறது. இந்த காம்போஜி வர்ணத்தின் முதல் ஸ்பரிசத்திலேயே எம்.எஸ். கோபால கிருஷ்ணனின் அற்புதமும் மந்திரத் தன்மையும் கொண்ட முதிர்ச்சியை பதினாறு வயது ஸ்ரீநிவாஸ் அடைந்திருக்கிறார் என்று அனுபவித்து உணர முடிந்தது. தொடர்ந்து மைசூர் வாசுதேவாச்சாரின் ‘தேவாதி தேவ, ஸ்ரீ வாசுதேவ’ என்ற சுநாதவினோதினி ராகக் கீர்த்தனை

கதை
 

உறக்கம் வராமலிருப்பது சமீப நாட்களாகவே ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருந்தது. வயது செல்லச் செல்ல இப்படித்தானோ என்று மனதைச் சாந்தப்படுத்த தனக்குத்தானே சொல்லிக் கொண்டபோதும் காரணம் வேறாக இருக்குமோ என்றும் சம்சயிக்கும்படியான நிகழ்வுகள் சலனப்படுத்திக்கொண்டேயிருந்தன. இரவு மெல்ல நீண்டுசெல்வதான தோற்றம் தினந்தோறும் விஸ்தாரமாகிக்கொண்டே போகிறது. சில்வண்டுகள் துணையைத்தேடி விடுக்கும் அழைப்புகள் அபாயமணிகளாகக் காதுகளில் ரீங்கரிக்க, சாரனை இழுத்துக் கவட்டுக்குள் சொருகியவாறு மெல்லப்புரண்டு, தலையணை ஓரத்தில் மடித்துவைத்திருந்த வெள்ளை சால்வைக்குக் கீழே விரல்களைச் செலுத்தித் துழாவிக் கைக்கடிகாரத்தை எடுத்து அதன் கண்ணாடிப்பரப்பை உள்ளங்கையால் தேய்க்க, ரேடியத்தின் ஒளியில் நேரம் பளிச்சிட்டது. பனிரெண்டே மு

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
 

கவிதையைப் படிப்பதும், படித்த கவிதையைப் பின்னர் அசைபோடுவதும் மனத்தின் வேறு வேறு செயல்பாடுகள் என்று தோன்றுகிறது. இரண்டாவது பகுதியை முதலில் குறிப்பிடலாம். நாளதுவரை வாசக மனம் சேகரித்திருக்கும் அறிவை, தர்க்கத்தை உபயோகித்துக் கண்டறியும் நுண்முனைகளைத் தொகுத்துக்கொள்வது அது. முதலாவது பகுதி கொஞ்சம் மர்மமானது. முதன்மையானதும்கூட. ஆய்வுபூர்வமான சிந்தனை தொடங்குவதற்கு முன்பாகவே அனுபவித்துத் துய்க்கும் உணர்கொம்புகள் கொண்டது அது. இதன் காரணமாகவே முதல்வாசிப்புக்குப் புரியாத பல கவிதைகள் மீண்டும் மீண்டும் மறு வாசிப்புக்கு அழைக்கும் வசீகரம் கொண்டவையாக இருக்கின்றன. அதாவது, கவிதை பிடித்திருக்கிறது, ஆனால் புரியவில்லை என்ற உணர்வு தட்டுகிறது. இன்னொரு வகைக் கவிதைகளை விவரிக்கவே வேண்டாம் - அவை முதல் வாசிப்பிலேய

சுரா பக்கங்கள்
 

நாகர்கோவில் 28.1.81 சுந்தர ராமசாமி, அன்புள்ள சீனி. விசுவநாதன் அவர்கட்கு. உங்கள் 25.1.81 கடிதம். உங்களிடமிருந்து கடிதம் வருவது எனக்கு தொந்தரவு ஆகுமா? ஒரு நாளும் ஆகாது. எப்போதும் சந்தோஷத்தைத் தரக்கூடியதே அது. பாரதியின் பெயர்ப்பட்டியல் தாமதமாக அச்சாவதில் ஆயாசத்திற்கு இடமில்லை என்று தோன்றுகிறது. மிகவும் சிரமமான பணி இது. என்னால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறது. திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு மேலும் எவ்வளவோ சிரமங்கள் இருக்கும். 367 நூல்களுக்கான விவரங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்று அறியும்போது மலைப்பாக இருக்கிறது. பாரதி மீது நம்மவர்கள் காட்டியுள்ள அக்கறை எவ்வளவு அதிகமானது என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் உங்களிடம் நேரில் கூறியபடி பாரதி பற்றி

பதிவு
பழ. அதியமான்  

கடந்த ஓராண்டாக தென் சென்னையில் இயங்கும் ‘பனுவல்’ புத்தக விற்பனை நிலையமும், இருபத்தைந்தாவது ஆண்டில் நடையிடும் காலச்சுவடு இதழும் இணைந்து ‘பாரதி 93’ என்ற இலக்கியப் பகிர்தல் தொடரை செப்டம்பர் 2014இல் நடத்தின. பாரதி நினைவு நாளையொட்டி, அத்தொடர் நிகழ்விற்கு அப் பெயர் வைக்கப்பட்டது. பனுவல் ஏற்கெனவே ஏப்ரலில் சமூகநீதி மாதம் எனக் கொண்டாடியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் பேச சில மாலைநேரங்களைப் பயன்படுத்த எண்ணமிட்டதன் விளைவு ‘பாரதி 93’. செப்டம்பர் மாதத்தின் அனைத்து சனி, ஞாயிறு மாலைகளிலும் நவீன இலக்கியத்தைக் குறித்து பாரதியை மையமிட்டு உரைகள் திட்டமிடப் பட்டன. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக பங்களூரு நீதிமன்றத் தீர்

ஓவியங்கள்: செல்வம்  

உமிழ்நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது எனக்காகச் செய்யப்பட்டவை யாருக்கும் மாறுபடலாம் நிமிடத்திற்குத் தோன்றும் முகபாவனைகளை யாருக்கும் மாற்றிக் கொள்வாய் எனக்கானது உனக்கானவை உனக்கானது எனக்கானவை என்றும் நமக்கானவையாக இருக்காது சமரசமின்றிப் பிரிவதும் சேர்வதும் உடனுக்குடன் நிகழ்கின்றன கேள்விகளே நேரம் முடிந்து கேள்வியே தொடர்கின்றன விடைகளைத்தான் காணோம் சூட்சுமத்தின் வீழ்ச்சி எதிர்மறையாய் பிரதிபலிக்கலாம் தொடக்கமே நீட்டிப்பின் தொடரப்பட்டவை விடப்படலாம் துண்டிக்கப்படலாம் ஏமாற்றத்தின் பெரும்வீழ்ச்சி நொடிக்கு நொடி உயிர்பிரிக்கும் எனக்கு உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்கின்றன முடிவுகள் முடியும்வரை. பொருந்தாத் திணை அகத்திற்கும் புறத்திற்கும் பதிலின்றி நழுவிச் செல்கிறது வார்த்தைகளின் சொல்லாடல் யார் பெரியவர்க

அஞ்சலி
ஆ. சிவசுப்பிரமணியன்  

1977ஆம் ஆண்டு செப்டம்பரில் எட்டையபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்திய பாரதி விழாவில்தான் ராஜம் கிருஷ்ணனை முதல் முறையாகச் சந்தித்தேன். தோழர் அழகிரிசாமி வீட்டில் தோழர் எஸ்.எஸ். தியாகராசன் அவரை அறிமுகம் செய்து வைத்தார். உரையாடிக்கொண்டே காலை உணவை உண்டு கொண்டிருந்தோம். குறிப்பிட்ட நிலம் சார்ந்து இலக்கியத்தை வகைப்படுத்தலாமா என்ற விவாதம் அப்போது உருவானது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள அய்ந்து திணைகளில் தொடங்கி கரிசல் இலக்கியம்வரை பல கருத்துக்கள் விவாதத்தில் இடம்பெற்றன. நானும் என் பங்கிற்கு நெய்தல் திணை சார்ந்த சங்க இலக்கியப் படைப்புகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் நெய்தல் நிலப்பகுதியை மைய மாகக் கொண்டு பெரிய அளவில் இலக்கியங்கள் உருவாகாமை குறித்த என் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன். உ

அஞ்சலி
கே. சந்துரு  

நவம்பர் 10ஆம் தேதியன்று ஊடகங்கள் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மறைவு குறித்து செய்தியை வெளியிட்டவுடன் பலருக்கும் யார் இந்த மனிதர் என்ற கேள்வி எழுந்தது. அவரது மறைவைத் தொடர்ந்து தமிழ் அச்சு ஊடகங்களில் அரைப்பக்கக் கட்டுரைகளும், முகநூலில் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளும் தோன்ற ஆரம்பித்த பின்னர்தான், 35 ஆண்டுகள் தமிழகத் தில் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த அவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுந்தது. மும்பையிலிருந்து வெளிவரும் முக்கியமான ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ என்ற வார இதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகளை அவர் எழுதிவந்துள்ளதை அறிவுஜீவிகள் அறிவர். இந்து ஆங்கில நாளிதழில் அவரது காரசாரமான நடுப்பக்கக் கட்டுரைகள் சில வருடங்களுக்கு முன்புவரை வெளியிடப் பட்டன. இந

அஞ்சலி
நல்லுசாமி  

‘அவள் அப்படித்தான்’ என்னும் படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் பிடித்துக்கொண்டது என்னும் வாக்கியத்தை ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் கேட்க முடிந்திருப்பதே அப்படத்திற்கான பார்வையாளர்களின் அங்கீகாரம்.ஷ் நானும் ருத்ரய்யாவும் நண்பர் களானதும், ஒரேவிதமான கனவுடனும் லட்சியத்துடனும் சுற்றித் திரிந்ததும் கண்முன்னால் காட்சிகளாக எப்போதும் விரிந்துகொண்டே இருக்கின்றன. எனது நினைவுகளில் ‘அவள் அப்படித்தான்’, ‘கிராமத்து அத்தியாயம்’ உள்ளிட்ட ருத்ரய்யாவின் படமாக்கப் பணிகள் அனைத்தும் அழுத்தமாகப் படிந்துவிட்டன. சேலம் மாவட்டம் உலிபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நானும் அதே சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ருத்ரய்யாவும் 1972 ஆம் ஆண்டில் சென்னை அடைய

அஞ்சலி
ரவிசுப்பிரமணியன்  

எனது இருபத்து மூன்றாம் வயதில் அழகு கிருஷ்ணன் என்ற தமிழ்ப் பேராசிரியரோடு தேனுகா என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்திருந்தார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. அப்போது ஒரு விபத்தில் கால்முறிந்து படுக்கையில் இருந்தேன். ‘‘நல்ல மனிதர். மென்மையானவர். எல்லோர்க்கும் உதவுபவர். ஓவியங்கள், சிற்பங்கள், இசைபற்றி எழுதுபவர். தமிழைப் புரியாமல் எழுதுவது என்று சில எழுத்தாளர்கள் கிளம்பி இருக்கிறார்கள்; அவர்களில் தேனுகா ஒருவர்.” என்றெல்லாம் கல்லூரி நாட்களில் அவரைப்பற்றி என் தமிழ்ப் பேராசிரியர்கள் வழியாகக் கேள்விப்பட்டவாறு இருந்தேன். அவரும் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருக்கிறார். தன்னைவிடப் பதின்மூன்று வயது இளையவனான என்னை, நேரில்வந்து சந்தித்து நட்புகொள்ள அவருக்கு எந்த மனத்தடையும் இ

கட்டுரை
பிரபஞ்சன்  

என் சட்டைப் பையில் இருந்த செல்லுக்கு அழைப்பொன்று வந்தது. அப்புறம் ஒலி அடங்கியது. மாலை நடையை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். செல்லைப் பார்த்ததும் தேனுகாதான் அழைத்தார் எனத் தெரிந்தது. தெரு, இயந்திரங்களால் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குப்போய் நிதானமாகப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டேன். வழியில் அடுத்த நாளுக்கான காய்கறிகள் வாங்க வேண்டி இருந்தது. வீடு திரும்பும்போது காலனியே இருட்டில் இருந்தது. எல்லா வெட்டுகளும் இப்போதெல்லாம் பழகிவிட்டது. எந்தக் குந்தகமும் இல்லாத நாள் என்பது ஏது? இருட்டிலேயே தேனுகாவை அழைத்தேன். ‘தொந்தரவு செய்துவிட்டேனா’ என்றார். ‘நிச்சயமாக இல்லை. சொல்லுங்கள். நலம்தானே, வீட்டார் எல்லாரும் நலம்தானே?’ ‘எல்லாரும் நலம். வரும

கட்டுரை
கருணாகரன்  

இலங்கையின் மலையகத்தில் உள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த ஆகிய இடங்களில் சென்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண் சரிவினால் இரண்டு கிராமங்கள் முற்றாகவே அழிந்து போய்விட்டன. இதில் எத்தனை பேர் மாண்டு போனார்கள் என்ற சரியான கணக்கு இன்னும் (மண்சரிவு நடந்து 40 நாட்கள் ஆனபின்னும்) தெரியவில்லை. மீட்புப்பணிகளின்போது 32 சடலங்கள் எடுக்கப்பட்டன. இருபத்து இரண்டு நாட்கள் மீட்புப்பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து மீட்புப்பணியைச் செய்ய முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது உலகெங்கும் உள்ள வழமை. ஆனால் மலையகத்தில் ஏற்பட்ட பாதிப்பில் எத்தனைபேர் பலியாகினர், என்னமாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அறியமுடியாத நிலை, தங்களுக்கு ஏற்ப

உரை
கே. சந்துரு  

தமிழில் புத்தகப் பண்பாடுள்ள நிலையை ஆராய வேண்டுமென்றால் எத்தகைய சூழ்நிலைகளை அது கடந்து வந்துள்ளதென்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்ப் புத்தகப் பண்பாட்டின்மேல் விழுந்த அழுத்தங்களையும், தற்பொழுதைய அதன் நிலைமைக்கான அக, புற காரணிகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எழுத்தாளரும் அரசியல் விமர்சகரும் மசாசூ செட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் தத்துவத்துறை பேராசிரியருமான நோம் சாம்ஸ்கி, ஊடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:- ‘‘எந்தமாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்பு கிறோம், எந்த மாதிரியான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தே ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய இயலும். அதாவது சமூகத்தை ஜனநாயகமாக

உரை
கண்ணன்  

இந்தியாவில் இந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்ட முதல் நூல் ஒரு தமிழ்நூல் ‘தம்பிரான் வணக்கம்’. கோவாவில் 1578 இல் அச்சடிக்கப்பட்டது. இது தமிழுக்குக் கிடைத்த ஒரு வரலாற்றுப் பெருமை. மொழி, பண்பாடு சார்ந்த இத்தகைய பெருமிதங்கள் மிக அவசியமானவை. நாம் வாய்ப்பு கிடைக்குமிடங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் தவறாமல் குறிப்பிடும் பெருமிதங்கள் இதுபோலப் பல உண்டு. ஆனால் இத்தகைய பெருமிதங்கள் அனேகம் வரலாற்றுப் பெருமிதங்களாகவே இருப்பது சிந்திக்கத்தக்கது. குட்டன்பர்க் புரட்சி எனப்படும் அச்சுப் பொறியின் கண்டுபிடிப்பு 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்டது. இன்றுவரை அச்சு/பதிப்பு துறைகளில் ஜெர்மனி உலகில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. அதேபோல முதல் அச்சு நூல் தமிழ் நூல் எனும்போது இன்று இந்திய மொ

 

இந்திய தத்துவ ஞானத்தை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தியதில் முன்நின்றவர் என்றாலும் ஆசிரியர் தினத்திற்குரியவர் என்பதாகவே இராதாகிருஷ்ணனை நம்மவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அவரின் தத்துவ ஆய்வுப்பணிகள் கூர்மையாக இருந்தாலும், வேதாந்த வைதீக அடிப்படையில் அமைந்ததால் பரவலான வாசிப்புக்கு வரவில்லை. இந்து எனும் சொல் இந்தியர்களைக் குறிப்பதற்காக வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் 1799லிருந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதை இராதாகிருஷ்ணன் அறியாதவராய் இருக்க முடியாது. என்றாலும், இந்து என்றால் வேத, உபநிடதங்களை ஒப்புக்கொள்பவர்கள் என்கிற தளத்திற்கு அதன் பொருளை நகர்த்திச் சென்றது ஏன் என்பது பதிலில்லாக் கேள்வியாக இன்றும் இருக்கிறது. இந்திய தத்துவ ஞானம் குறித்து எழுதும்போது அவர் அத்வைத வேதாந்தத்திற்குக்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்காகத் தமிழ் - ஆங்கில பொதுஅறிவு மாதஇதழாக வெளிவரும் ‘பொது அறிவு’ இதழில் (ஜூலை 2014) அயோத்திதாசர் பற்றி இரண்டு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இரண்டும் அயோத்திதாசரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி (1914-2014) அவரை அறிமுகப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளன. ஒரு கட்டுரையை ‘பண்டிதர் அயோத்திதாசர் 100’ என்னும் தலைப்பில் கோவி. லெனின் எழுதியுள்ளார். அயோத்திதாசரின் எழுத்துக் களே நேரடியாகப் பயன்படுத்தப்பட்ட கட்டுரை மற்றொன்று. அயோத்திதாசரை அறிமுகப்படுத்திய விதத்திலும் ‘பொது’ வாசகர்களுக்கான வரையறைக்கேற்பவும் எழுதப்பட்ட கட்டுரை என்ற விதத்தில் கோவி. லெனின் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையில் புலப்படும் பார்வைக் குறைபாடு தலித்துகள் பற்றி

கட்டுரை
பெருமாள்முருகன்  

கு.ப.ரா. சிறுகதைகள் நூலின் முதல் பதிப்புக்கும் இரண்டாம் பதிப்புக்குமான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு ஆர்வமூட்டிய முக்கியமான ஒரு விஷயம் அவர் கதைகளில் காணப்படும் பாட வேறுபாடுகள் ஆகும். பாட வேறுபாடு தொடர்பான எதையும் பின்னிணைப்பில் கொடுக்கவில்லை. அதற்கான காரணங்களைப் பதிப்புரையில் வெளிப்படுத்தியிருந்தேன். எனினும் பாட வேறுபாடு தொடர்பான கவனம் பல சுவாரசியங்களை எனக்கு வழங்கியது. நவீன இலக்கியத்தைப் பதிப்பிக்கும் ஒருவரும் பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களைப் போலவே பாட வேறுபாட்டு ஆய்விலும் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். அது தவிர்க்க இயலாதது. கு.ப.ரா. எழுதிய ஒரு கதையின் தலைப்பு ‘சிறு கதை’ என்பதாகும். 1935ஆம் ஆண்டு மணிக்கொடி இதழில் இக்கதை வெளியானபோதும் பின்னர் ‘கனகாம்பரம்&

உள்ளடக்கம்