தலையங்கம்
 

தமிழகத்தில் மீண்டும் கருத்துரிமை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. அண்மையில் தமிழ் அரசியல்களத்தில் வெவ்வேறு தளங்களில் கருத்துரிமையை மறுக்கும் போக்கு காணப்பட்டது. ‘கத்தி’ திரைப்படம் தொடர்பான பிரச்சினைகள், ‘மாவீரர் தினம்’ கொண்டாட மதிமுக எடுத்துக்கொண்ட முயற்சிகள், மோடியின்மீது வைகோ வைத்த விமர்சனங்களுக்கு எதிராக பாஜக ஹெச். ராஜா விடுத்த மிரட்டல், ‘லிங்கா’ படம் குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா, அருண்மோ தெரிவித்த கருத்துகளினால் அவர்களுடைய முகநூல் முடக்கப்பட்ட விவகாரம் என்று தமிழகத்தின் அரசியல், சமூகக் களங்கள் அனைத்திலும் தமிழ் மனத்தின் சகிப்பின்மைப் போக்குகள் தீவிரம் பெற்றுள்ளன. ஒன்றுக்கொன்று பரமபதம் விளையாட்டுக்களில் ஈடுபட்டு மேலேறுவதும் கீழிறங்குவதுமாக வேடிக

கட்டுரை
யதீந்திரா  

இலங்கை அரசை, அடுத்து வரவுள்ள ஆறு ஆண்டுகள் வழிநடத்தவுள்ள அந்த மனிதர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான திகதி நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. புதிய தை பிறப்புடன் அந்த மனிதரும் பிறப்பார். அடுத்த ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி, இலங்கைவாழ் மக்கள் அந்த மனிதர் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது வாதப்பிரதிவாதங்களையும் சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்திருக்கிறது. இலங்கையில் மட்டுமன்றி, இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச ராஜதந்திரிகள் மத்தியிலும் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. இன்னும் சில நாட்களில் தெற்கின் முகம் வன்முறைகளால் சிவக்கக் கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பல ஜ

கட்டுரை
சாவித்திரி கண்ணன்  

எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள்; இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள். விறுவிறுப்பான நடை, நினைத்ததைத் தயக்கமின்றிப் பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி... இடையிடையே கொஞ்சம் சிரி¢ப்பு... இவைதாம் 80 வயதாகும் கே.ஆர். ராமசாமி என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையாளங்கள். பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்க் குணமிக்க க்ஷத்திரி¢யன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சினைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள்வரை 500க்கும் மேற்பட்ட பொது வழக்குகள் தொடுத்தவர். ‘‘யார்தான் இதைத் தட்டிக் கேட்பது?’’ என்று மக்கள் ஆதங்கப்படும் பல்வே

முன்னோட்டம்
கண்ணன்  

இந்நூலுக்கு நான் முதலில் எழுத நினைத்த பின்குறிப்பு வேறு. தகவல் அடிப்படையிலான குறிப்பு அது. ஆனால் நண்பர் சலபதி1 தன் கோப்புகளைத் தேடி அவருக்கு பாண்டியன் தொடர்பாக நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாகப் பிரதியெடுத்து மின்னஞ்சலில் அனுப்பியதும் பல புதிய செய்திகளை அவற்றில் கண்டேன். முற்றிலும் மறந்த விஷயங்கள் புதிய செய்திகள்தானே. அக்கடிதங்கள் பல நினைவுகளைத் தூண்டின. வரலாற்றாசிரியர்கள் என் கடிதங்களை எல்லாம் சமகாலத்திலேயே ஆவணப்படுத்தி வருவார்கள் என்று நினைத்ததில்லை! வாழ்க அவர்தம் பணி! 1993 மார்ச்சில் எனக்குத் திருமணம். மைதிலிக்கு ஊர் சென்னை. எனவே அடிக்கடி சென்னை பயணிக்கத் தொடங்கினேன். காலச்சுவடு இதழை மீண்டும் த

அஞ்சலி
ச. பாலமுருகன்  

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கடந்த நவம்பர் மாதம் தனது நூற்றாண்டு பிறந்தநாளைக் கொண்டாடிய பின்பு டிசம்பர் மாதம் மறைந்துவிட்டார். சனநாயக மற்றும் உரிமைசார்ந்த செயல்பாட்டாளர்களின் மாபெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்த அவரின் மறைவு நீடித்த துயர் நிறைந்தது. வி.ஆர். கிருஷ்ணய்யரின் பன்முக ஆளுகைக்கு உதாரணமாக வேறு ஒருவரைக் குறிப்பிடவே முடியாது. 15.11.1915ஆம் தேதி கேரளாவின் பாலக்காட்டிற்கு அருகில் வைத்தியநாதபுரத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். அதன் பின்னர் மலபார் பகுதிக்குக் குடிபெயர்ந்தது அவர் குடும்பம். தந்தை ராமைய்யர் கொயிலாண்டியில் பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்தார். கிருஷ்ணய்யர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்க

அஞ்சலி
சேரன்  

நிலத்தையும் காலத்தையும் வென்ற ஆகாயத் தாமரைகள்போல அலைந்தாலும் சிறகு வலிமை பெற்றன அன்னை பிழிந்தெடுத்த உயிர் உனக்கு தீயை மிதிக்கலாம் காற்றை எதிர்க்கலாம் வாழ்க்கையை இழக்க முடியாது எனது நெடுநாளைய நண்பர், இலங்கையில் பெண் விடுதலை அமைப்புகளின் பெரும் உந்து விசையாக அமைந்த சுனிலா அபேசேகரா. அவருடைய இழப்பில் விளைந்த பெருந்துயரில் நான் எழுதிய கவிதையின் சிலவரிகளே மேலுள்ளவை. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு செல்வா மொழிபெயர்த்த கடைசிக் கவிதை பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்க வேண்டும். கவிதையை அவரிடம் மொழிபெயர்ப்புக்காக அனுப்பியபோது மாலை எட்டுமணி இருக்கும். கோடைக்காலம் என்பதால் வெயிலும் பகலும் ஒளிமயமாக இருந்தன. கவிதையைத் திருப

முன்னோட்டம்
எஸ். றஞ்சகுமார்  

தீ (நாவல்) எஸ். பொன்னுத்துரை வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில். பக்கம்: 136 விலை: ரூ. 120 தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றும்’ என்று ரைக்கப்பட்ட பொதுப்புத்தியில் உழல்வதே சராசரித் தமிழ்மனம். ஒரு தளத்தில் மட்டிட்டு நோக்குகையில் இது மகா வாக்கியம் ஒன்றே. தீண்டும் இன்பத்தை இவ்வாறு அழகுறப் பிரசித்தப்படுத்தியவனும் இலேசுப்பட்டவனல்லன். தீண்டும் இன்பத்தைப் பற்றியதொரு விசாரமாக ‘தீ’ வெளியாகியபோது, கலையும் இலக்கியமும் தீண்டாமை, தீட்டு என்பன பற்றியதாக இருத்தலே சாலச் சிறந்ததும், காலப் பொருத்தமும் என்ற ஆக்ஞைகளுடனும் ஆய்க்கினைகளுடனும் ஈழத்து இலக்கியப் பரப்பு &l

திரை
எம். ரிஷான் ஷெரீப்  

ஐந்து வயது ஏழைச் சிறுமி. அவளைச் சூழவும் துப்பாக்கிகள் குறிபார்த்திருக்கின்றன. அவளது நெஞ்சளவு குழி தோண்டப்பட்டு அதில் பலவந்தமாக இறக்கி விடப்படுகிறாள். கற்களாலெறிந்து கொல்லப்பட தீர்ப்பளிக்கப்படுகிறாள். அவ்வாறு செய்யப்பட அவள் செய்த குற்றம்தான் என்ன? அவள் சிறைசெய்யப்பட்ட இடத்தில் இன்னும் சில சிறுமிகள். ஆளுக்கொரு குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அவர்களது கண்களும் வாயுமிருக்குமிடத்தில் மட்டும் துளைகளிடப்பட்ட பைகளால் முகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. புதிதாக அங்கே கொண்டு வந்து விடப்பட்ட ஐந்து வயதுச் சிறுமி அவர்களைப் பார்த்துக் கேட்கிறாள். ‘அந்தப் பையை எடுத்து விடுங்கள். நீங்கள் யாரென்று நான் பார்க்க வேண்டும்.’ ‘முகத்தை

நேர்காணல்
ஹனா மெக்மல்பஃப் & எம். ரிஷான் ஷெரீப்  

ªஹ்ரானில் பிறந்த ஹனா மெக்மல்பஃப் (1988), தனது தந்தையான மூஸின் மெக்மல்பஃப்பின் ‘A moment Of Innocence’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் 7வது வயதில் திரையுலகில் பிரவேசித்தார். எட்டாவது வயதில் கையடக்க கேமரா மூலம் ‘The Day My Aunt Was il’ எனும் குறும்படத்தை எடுத்து சாதனை படைத்தார். 1997 ஆம் ஆண்டு, இக் குறும்படமானது, லொகார்னோ சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்டு, உலகின் கவனத்தை ஈர்த்தபோது ஹனாவுக்கு வயது ஒன்பது. தனது பதினான்காவது வயதில் எடுத்த ‘Joy of Madness’ எனும் ஆவணத் திரைப்படம், 2003 ஆம் ஆண்டு வெனிஸ் சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை வென்றது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட

திரை
நம்பி கிருஷ்ணன்  

“I saw a Rohmer film once. It was kind of like watching paint dry.” Harry Moseby in the movie Night Moves 1. முதலில் ரோமெரைப் பற்றிய சில அவசியக் குறிப்புகள்: எரிக் ரோமெர் (இயற்பெயர் Jean Marie Maurice Scherer) 1923இல் மத்திய பிரெஞ்சுப் பகுதியான லிமூஸான் (Limousin) பிராந்தியத்தில் டூல் (Tulle) நகரத்தில் பிறந்தார். இளம்வயதில் சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், பாரிசில் படித்துக் கொண்டிருக்கையில் ‘ஃபிலிம் கிளப்’ இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ழாக் ரிவெட் (Jacques Rivette) மற்றும் ழான் லூக் கோதா (Jean Luc Godard) போன்ற நண்பர்களுடன் 1950இல் La Gazette du Cinema என்ற திரைப்பட ஆய்விதழ்

கதை
தி. ஜானகிராமன்  

குன்றின் அடிவாரத்தில் சைன்யம் சூழ நின்ற சுல்தான் எல்லையில்லாத பூரிப்படைந்தான். குன்றின்மேல் கோட்டை. கோட்டைக்கு நடுவில் ஓங்கி நின்ற மூன்று மாடி அரண்மனை. அதன் திறந்த மூன்றாம் மாடியில் கைப்பிடிச் சுவரோரமாக இரு கைகளையும் உயரத் தூக்கி நின்றாள் கனோராவின் அரசி. அந்தச் சரணாகதியை ஏற்றுக்கொண்டு “நில்” என்று மலைவெளி அதிர, ஒரு சத்தம் போட்டான் சுல்தான். “ராணியை வென்றுவிட்டேன்” என்று மறுபடியும் கோஷமிட்டான் அவன். வியூகம்கலைந்த சைன்யம் ஜயகோஷம் செய்துவிட்டு அடங்கியது. கான் திரும்பவும் மேலே பார்த்தபோது, மொட்டை மாடி மொட்டையாக இருந்தது. அங்கே கனோராவின் வீரசக்தியைக் காணவில்லை. உடனே மெய்க்காப்பாளர்களையும் தளபதியையும் மட்டும் அழைத்த

கதை
அ. முத்துலிங்கம்  

ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்? யாழ்ப்பாணத்தில்

குறுநாவல்
யுவன் சந்திரசேகர்  

ஆறே அத்தியாயங்கள் கொண்ட நாவல் ஒன்று எழுதத் திட்டமிட்டிருந்தேன். ரஷ்ய எழுத்தாளர்களில் சிலர் எண்பது பக்கங்கள்வரை நீளும் சிறுகதைகள் எழுதும்போது, மிகச் சுருக்கமான நாவலையும் எழுதிப் பார்த்தால்தான் என்ன என்பதுதான் முதல் தூண்டுதல். வடிவம் மற்றும் உருவம் தொடர்பான வரையறைகளைத் தாண்டுவதும் ஓர் எழுத்தாளனின் முக்கியமான கடமை அல்லவா? நாவலின் கரு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டாலும், ஆரம்பத்தில் சற்றுத் தெளிவில்லாமல் இருந்தது.அது ஒரு புத்தகத்தைப் பற்றியதா. ஒரு வாசகனைப் பற்றியதா. அல்லது ஒரு சகோதரனைப் பற்றியதா, அல்லது நாகரிகத்தின் வளர்ச்சிப் பாதையில் கைநழுவி நொறுங்கிய சகோதரத்துவம் பற்றியதேதானா என்று குழப்பம். நான்குமே ஒன்றுக்கொன்று சமமானவையாக, எளிதில

உரை
கி. ராஜநாராயணன்  

தமிழ் இலக்கிய உலகில் எந்த மனைவியாவது காலம்சென்ற தனது கணவரைப்பற்றி இப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் நான் அறிய, இல்லையே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இது பெண்கள் எழுதும் காலம் என்று வந்துவிட்டது. அதிசயப்பட ஒன்றுமில்லை. காலச்சுவடு கண்ணன், “இப்படி அப்பாவைப் பற்றி அம்மா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள்” என்றதும், உடனே படிக்கணுமே என்று தோன்றியது. புத்தகம் ஆக்குவதற்கு முன்னால் டி.டி.பி.யை அனுப்பி வைத்தார். ஆற அமர சாவகாசமாக வைத்துப் படித்தேன். கம்பன் வீட்டுக் கட்டுத்தரை மட்டும்தான் கவி பாடுமா? 1 சுராவின் மனைவியின் பேனாவும் விசயங்களை ரசமாகச் சொல்லுகிறது. தொடக்கத்தில், ஒரு வடநாட்டு ராகத்தின்

மனப்பதிவு
பிரசாந்தி சேகர்  

மிஸ்ட்றல் (Mistral). எத்தனை அழகான ஒரு வார்த்தை. காற்றுக்கு இப்படியும் ஒரு பெயரா? வடக்கில் இருந்து குளிர்ந்து வீசும் காற்றின் பெயர் அது. இப்போ அடிக்கடி அது இங்கு வீசுகிறது. மனதுக்கு இது சுகம். உடலுக்கு இது மருந்து. எனக்கு இது வாழ்வு. வெயிலுடன் விழித்து, வெயிலுடன் சாய்கிறேன். சுற்றிலும் நிமிர்ந்து நிற்கும் சூரியகாந்திப்பூக்களைப் போல. பகல்கள் எல்லாம் பரந்து விரிந்த கோதுமை வயல்களுடன். அறுவடைக்காலம் இது. முத்தி வெடித்த கோதுமைக்கதிர்கள் தங்கமும் மஞ்சளுமாய் மின்னி அசைகின்றன. அந்தச் சரசரப்பே போதும் நான் வாழ. தொலைவில் திண்பச்சை மலைத்தொடர்கள். வானமெங்கும் துண்டு மேகம் அற்று வெண்ணிற உலோகத்திலிருந்து பிரிந்த நீலம். மாலையானால் செம்மஞ்சள்

முன்னோட்டம்
தேவிபாரதி  

கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முந்தைய நூற்றாண்டிலும் இருந்ததைப் போல வரலாற்றின் மீதான குருட்டு நம்பிக்கைகள் இப்போது இல்லை. இதுவரை எழுதப்பட்ட எல்லா வரலாறுகளுமே சந்தேகத்துக்குரியவையாக மாறிக் கொண்டிருக்கின்றன. கழுதையோடும் மற்ற எல்லா வினோதமான விலங்குகளோடும் அருவருப்பான புழுக்களோடும்கூட வரலாற்றை ஒப்பிட்டாகிவிட்டது. வழிபாட்டுக்குரிய பீடத்திலிருந்து அது முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது என்பது இதற்குப் பொருள் அல்ல. வரலாறு என்பது தர்க்க ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பொய். அது சாக மறுக்கும் பிசாசு. கற்பனை செய்து பார்க்கமுடியாத மாயத்தோற்றங்களுடன் எங்கெங்கும் அலைந்து திரிவதற்கான வரத்தைப் பெற்றிருப்பது. நம் எல்லோரையும் வசீகரிக்கும் பெருங்கத

புத்தகப் பகுதி & இஸ்தான்புல்
 

இது ஒரு வாழ்க்கைக் குறிப்பு என்பதால் அவள் பெயரை நான் சொல்லாமல் மறைத்தாக வேண்டும். திவான் கவிஞர்*களின் பாணியில் அவளை சங்கேத மொழியில் அழைத்தேனென்றால், இதற்குப் பின்வரும் இக்கதையைப் போலவே அதுவும் தவறாகப் பொருள் கொள்ளப்படலாம். அவள் பெயருக்கு பாரசீக மொழியில் கருப்பு ரோஜா என்று அர்த்தம். ஆனால் அவள் சந்தோஷமாகக் கடலில் குதித்து நீச்சலாடும் கடற்கரைப் பகுதியை சேர்ந்தவர்களுக்கோ, அவளுடைய பிரெஞ்சு லீஸே பள்ளித் தோழிகளுக்கோ இது தெரியாது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். அவளது நீண்ட பளபளப்பான கூந்தல் கருப்பு அல்ல, தவிட்டு நிறம். அவளது பழுப்புநிற விழிகள் சற்றுக் கருமை கலந்தே இருக்கும். எனது அறிவுப்புலமையைக் காட்டிக் கொள்வதைப்போல அவள

மொழிபெயர்ப்பு
டிம் பார்க்ஸ்  

மனிதகுலம் மொத்தத்தையும் மேம்பட வைப்பதற்கு மனிதர்களின் பழக்கவழக்கங்களில் ஒரேயொரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால் அது என்னவாக இருக்க முடியும் என்று யாரோ உங்களிடம் கேட்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். “அவர்கள் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு புத்தகங்களைப் படிக்கத் தொடங்க வேண்டும்’’ என்று நீங்கள் அதற்குப் பதில் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்? ஆனால் அத்தகையதொரு எளிய பழக்கம் மிக நல்ல பலன்களை அளிக்குமென்று நான் உறுதிபடச் சொல்வேன். சொற்கள் நம்மீது செலுத்தும் ஆதிக்கத்தைக் குறித்த பிரக்ஞை இல்லாமலேயே அச்சில் வந்திருக்கும் சொல்லிற்கு அபரிமிதமான மரியாதையை அளிக்கிறோம். அவை உண்டாக்கக்கூடிய விளைவுகளைப் பற்றிக் கவலை

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

சென்ற ஆண்டில் நான் வாசித்த ஆங்கிலக் கதைப் புத்தகங்களைவிட அபுனைவுப் (non-fiction) புத்தகங்களே எனக்குப் பிடித்திருந்தன. ஆங்கில நாவல்களில் பரிசு பெற்று அதிகம் பரவலாகப் பேசப்படாத நாவல்களில் இரண்டை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இவை இரண்டும், த கார்டியன் பத்திரிகை பல எழுத்தாளர்கள், கலாச்சார அவதானிகள், விமர்சகர்களை விசாரித்துப் பிரசுரித்த 2014ஆம் ஆண்டின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம்பெற்றவை அல்ல. அதுமட்டுமல்ல சீன -அமெரிக்க எழுத்தாளரான Celeste Ng இன் Everything I never told you என்ற நாவல் த கார்டியனின் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை. இவ்வளவுக்கும் இந்த நாவல் பிரபல ஆங்கிலக் கதாசிரியர்களான Stepen King, Hilary Mantle நூல்களைவிடச்

கடிதங்கள்
 

சாதிப்பாகுபாட்டிற்கு எதிராகக் கலகக் குரலெழுப்பியவர்களில் முக்கியமானவர் அயோத்திதாசர். தீவிர வைணவ நம்பிக்கை கொண்டவரான ஈ.வெ. ராமசாமியைப் பெரியாராக்கியதும் காசியில் நடந்த அதுபோன்றதொரு சம்பவம்தான் என்பது உலகறிந்ததே. மேலும், புத்தர் பலி விழாவான போதிப்பண்டிகையைத்தான் பார்ப்பனர்கள் போகிப்பண்டிகையாக மாற்றிவிட்டனர் எனத் தொடர்ந்து பேசியவரும் அவரே. 1891லேயே சாதி ஒழிப்பை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு சாதியற்ற திராவிட மஹாஜன சபையை நிறுவியவர் அயோத்திதாசர். ஆனால் தந்தை பெரியாரைக் கொண்டாடும் அளவுக்குத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரைக் கொண்டாடுவதில்லை. அப்படிக் கொண்டாடும் சூழலிலும் அவ்விழாக்கள் பெயரளவிலேயே இருக் கின்றன. திராவிட இயக்கங்

எதிர்வினை
அ. யேசுராசா  

டிசம்பர் இதழில் கவிஞர் கருணாகரன் எழுதிய ‘மலையகத்துயரம் 2014’ கட்டுரை படித்தேன். அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த மண்சரிவு பற்றியும் அரசாங்கத்தினதும் பெருந்தோட்ட நிறுவனங்களதும் மலையக அரசியல் தலைமைகளதும் அலட்சியப் போக்கே இந்தப் பெரும் அவலங்களுக்குக் காரணம் என்பதையும் விஸ்தாரமாகச் சொல்லப்போகிறார் என நினைத்தேன்; அவரோ அதனைத் தவிர்த்துப் பழைய வரலாறுகளைச் சொல்கிறார். அதிலும் நிறையக் குளறுபடிகள். இக்குளறுபடிகளுக்குக் கட்டியங்கூறுவதுபோல்தான், “இலங்கையின் மலையகத்தில் உள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த ஆகிய இடங்களில் சென்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் இரண்டு கிராமங்கள் முற்றாகவே அழிந்துபோய்விட்டன

பதிவு
கிருஷ்ண பிரபு  

லயோலா கல்லூரியும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு என்ற முழுநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. அதனை முன்னிட்டுப் பல்வேறு அமர்வுகளில், தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழிக்கு ஆற்றிய அரும்பணிகளைக் குறிப்பிட்டுக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். “தனது முப்பதாவது வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழ்மொழியின் செழுமைக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் தனிநாயகம் அடிகளார் பணிகளைச் சுட்டும் ஆளுமைச் சித்திரம் சொல்லிக்கொள்ளும்

மதிப்புரை
ஜனகப்ரியா  

ஆவிகள் எப்போதும் பௌதீக உடல்கொண்டு தாம் வாழ்ந்த காலத்தின் நிராசைகளைக் குறித்து அக்கறைகொண்டு, தம் விருப்பங்களின் நிறைவேறாமைக் கான காரணியங்கள் எவை எனக்கண்டு அவற்றின்மீது எதிர்வினை புரிவதாக நம்பிக்கைகள் உலவுகின்றன. அவ்வாறாயின், மனிதகுலம் முழுவதும் தம்மைப் பிணித்துள்ள அனைத்துத் தளைகளிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டு, சுதந்திரவாழ்வு வெளி சமைக்க உரிய வழிகளைக் கண்டுணர்ந்து செயலில் இறங்கும் பேரவாவுடன் இயங்கிய ஓர் ஆவியுடன் நிகழும் உரையாடல்களாகக் கிளர்ந்துவரும் மொழி, சூழலைக் குறித்துக் கவலையுடன் சிந்திக்கத் தூண்டுகிறது. ‘பொருளாதாரம், தத்துவம் சார்ந்த கையெழுத்துப் படிகள்’ என்ற புகழ்பெற்ற நூலை மார்க்ஸ் எழுதி முடித்து ந

மதிப்புரை
மதுமிதா  

சாகசக்காரி (கவிதைகள்) தான்யா வெளியீடு: வடலி லட்சுமிபுரம், வடபழனி, சென்னை. பக்கம்: 64 விலை: ரூ.50 கட்டமைப்புகளால் கரைந்து போன சொர்க்கத்தை எப்போதுமே திரும்பப் பெற இயலாது உன்னால் தான்யாவின் இந்தக் கவிதையை வாசித்தபின்பு எதையும் வாசிக்க இயலவில்லை. என்னை மீள்பார்வை பார்த்துக்கொண்டதொரு உணர்வு. மெல்லிய வெட்கம் கவிழ / அவன் முகத்தைத் தேடினேன்/ விழிகள் முட்ட/ சந்தோஷம் கொண்டு/ தோற்றத்தை உள்ளிழுத்து/ நிரப்பி/ பூரித்து/ சொக்கி / மயக்கமுற்று/ தொடராமல் வெட்டும்/ காலங்கள் புரிந்தும் புரியாமலும்/ ஏமாற்றும் என் இளகல்கள் நாளாக வரும் தனிமை/அடக்கிய காமம்/ எழுத முடியாத குழந்தையாய்/ நகர்கிறது பேனா.

நேர்காணல்
டயான் ப்ரோகோவன் / ஆனந்த்  

ஆனந்த்: உங்கள் பின்னணி பற்றியும் நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள் என்பது பற்றியும் சுருக்கமாகச் சொல்லுங்கள்: டயான் ப்ரோகோவன்: நான் ஆண்ட்வெர்ப் நகரில் 1946இல் பிறந்தேன். என் இருபதுகளில் நான் நெதர்லாந்து சென்று, அங்கு ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றினேன். இப்போதும்கூட ஒரு செய்தித்தாளின் புத்தகப் பகுதியில் இதைச் செய்து வருகிறேன். எனக்கு மூன்று குழந்தைகள் ஆனபிறகு (இரண்டு மகன்களும் வங்காள தேசத்திலிருந்து சுவீகாரம் எடுத்துக்கொண்ட ஒரு மகளும்) நான் 1981இல் என் முதல் குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதினேன். உடனே அதற்காக எனக்கு ஒரு இலக்கிய விருதும் கிடைத்தது. அது எனக்கு மேலும் எழுதுவதற்குப் பெரும் உந்துதலை அளித்தது. 30 வருடங்கள் ஹாலந்தில் கழித்த பிறகு, மீண்டும் என் சொந்த ஊரான ஆண்ட்வெர்ப்பு

நிழற்கலை
செந்தூரன்  

திருவனந்தபுரம் அலையன்ஸ் ஃப்ரான்ஸேஸில், ஜோர்ஜஸ் கெஸ்தே (Georges Gaste, 1869 - 1910யின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களின் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புகைப்படங்களில் தெரியும் நிழலுருக்கள் இந்திய மண்ணின் சங்கேத மொழிகளை வறுமை, சடங்குகள், கூட்டுவெளிப்பாடுகள் என, கேன்வாஸூகளுக்குள் காட்சிப்படுத்தியிருந்தன. புகைப்படங்களில் ஊடாடுகிற முகங்களும் காலமும் நிலங்களும் பன்மைத் தன்மைக்குட்பட்டிருந்தன. ஆக்ராவில் குளத்தின் முன் வேடிக்கை பார்க்கும் பெண் குழந்தை, சந்தைகள், விகாரை முன்னிற்கும் புத்த பிட்சு, ஜட்கா வண்டிகள், புழுதியேறிய மனிதர்கள், நடனங்கள் ஆடுகிற கழைக்கூத்தாடிகள், மொகலாய நகரங்கள், கட்டடங்கள், கழுதைகள், வாரணாசி, கங்கை நதி,

உள்ளடக்கம்