தலையங்கம்
 

தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பரப்பு குறைந்துபோயுள்ளது அதன் ஆளுமையும் சரிந்துள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தால்தான் வெளியே நின்று சாதிக்கவும் செயல்படவும் முடியும் என்ற நிர்ப்பந்தம் எந்தக் கட்சிக்கும் கிடையாது. ஆனால் திமுக தன் வரலாற்றில் முதன்முறையாக முடங்கிப் போய் நிற்கிறது. இன்று திமுகவின் இருப்பை நாம் பேசிக் கொண்டிருப்பது, மக்களின் பிரச்சினைகளின் பொருட்டாக அல்ல. திமுக தனக்குள்ளேயே ஒரு ஆளும் தரப்பையும் எதிர்த் தரப்பையும் கொண்டு முட்டி மோது வதன் காரணமாகத்தான். அதன் சுவாசத்தில் படபடப்பும் காலூன்றி நிற்க முடியாத தளர்வும் தெரிகிறது. ஜெயலலிதாவின் அரசியல் முடக்கப்படும் நிலையில் திமுக ஒரு வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் திமுகவின் வெற்றிகளை

கண்ணோட்டம்
கண்ணன்  

கருத்துரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து வரும் அனைத்து அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துச் சுதந்திரத்தை விரும்பும் அனைவரின் நன்றியும் உங்களுக்கு உரியது. பெருமாள்முருகன் எழுத்தாளராகத் தனது மரணத்தை அறிவித்தது உலகெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இலக்கிய ஆர்வலர்களைக் கொந்தளிப்பு மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது. பெருமாள்முருகன் இந்த முடிவை எடுத்தது மிக ஆழமாக மனம் புண்பட்ட நிலையில்தான் என்பது என் அவதானம். இந்த முடிவுக்கு முக்கியக் காரணி சாதி மத அடிப்படை வாதம், அவற்றின் வன்முறையான செயல்பாடுகள். இணைக் காரணி ஒருசில எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகள். இவற்றுக்குக் காலமும் வரலாற

கட்டுரை
சுகுமாரன்  

கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக... இராமலிங்க வள்ளலார் (திருவருட்பா -பாடல்: 3768) ‘தொருபாகன்’ நாவல் விவாதப் பொருளாவதற்குச் சில நாட்கள் முன்பாக பெருமாள்முருகன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு (4 ஜனவரி 2015) நேர்காணல் அளித்திருந்தார். அதில் ‘நீங்கள் கல்லூரி ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறீர்கள். இதில் எது உங்கள் அடையாளம்; எழுத்தாளரா இல்லை ஆசிரியரா?’ என்ற வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதில் அளித்திருந்தார். ‘எழுத்து என் ஜீவிதம் ; ஆசிரியப் பணி என் ஜீவனம்.’ இந்த நேர்காணல் வெளியான ஒரு வாரத்துக்குள்ளாகவே தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார். ‘எழுத்தாளன் பெருமாள்ம

கட்டுரை
 

மாதொருபாகன்’ நாவல் பற்றியும் பெருமாள்முருகன் எதிர்ப்பு பற்றியும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் பேசுவது ஒருபுறமிருக்க, இத்தகைய எதிர்மறைச் சூழல் எவ்வாறு உருவானது, அவற்றின் வேர்கள் எவை என்றெல்லாம் பேசிப்பார்ப்பது மறுபுறமாக அவசியப்படுகிறது. ஆனால் இவ்வாறான தேடலின் போது சந்திக்க நேரும் கசப்பான உண்மைகளும் பிரச்சனையின் விளைவுகளும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. ஆரம்பத்தில் இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு என்றறியப்பட்ட இப்போராட்டம், சாதியமைப்புகளின் பலத்திலேயே நிலைகொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது அதை விளங்கிக் கொள்வதற்கு நம்மிடம் போதிய உபகரணங்கள் இல்லாமல் போய்விட்டன. இப்போதாமை சாதிகளின் ஓட்டுகளை நம்பியிருக்க வேண்டிய கட்சிகள

கட்டுரை
யதீந்திரா  

மிகவும் பதற்றத்துடன் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், எவ்வித அசம்பா விதங்களுமின்றி நிறைவுற்றிருக்கிறது. அதாவது ‘ஒப்பிரேசன் மகிந்த’ வெற்றிகரமாக நிறைவுற்றிருக்கிறது. நேற்றுவரை அதிகாரத்தின் சுவையை அனுபவிப்பதில் தனக்கு நிகர் தானேயென்னும் இறுமாப்பிலிருந்த மகிந்த ராஜபக்ச, அந்த அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றார். அவரது எல்லையற்ற குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. மகிந்தவின் ஒரு சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச் சருமான பசில் ராஜபக்ச, தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்திருக்கின்றார். பசில் ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையை பெற்றிருப்பவர் என்பதும் குறிப் பிடத்தக்கது. மகிந்தவின் பிரிதொரு சகோதரரும், மகிந்தவிற்கு அடுத்து மிகவும் சக்திவாய

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

அமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக் காகப் போராடிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமுறை சொன்னார்: “இந்தத் தலைமுறையில் நாம் வருத்தப்படவேண்டியது தீய மனிதர்களின் பாவச் செயல்களுக்காக அல்ல, மாறாக நல்ல மனிதர்களின் கள்ள மௌனத்திற்காகத்தான்.” இயற்கை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குருவி சேர்ப்பதுபோல் அரிய கனிமவளங்களைப் பொறுமையாக, நிதானமாகத் தொடர்ந்து சேமித்து நமக்குக் கனிவோடு வழங்குகிறது. பேராசைப்படாமல், பொறுமையிழக்காமல் பொன் முட்டையிடும் இந்த வாத்தைப் பேணிப் பாதுகாத்து அதன் முட்டைகளை நிதானமாக ஒவ்வொன்றாக எடுத்து ஒரு நல்வாழ்வை நமக்கென நாம் அமைத்துக்கொள்வதுதான் இயற்கையின் திட்டம். ஆனால் வளர்ச்சி என்கிற பெயரில் அந்தப் பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கசக்கிப் பிழிந்த

கதை
 

அந்த வீட்டின்மேல் மௌனமாயும் தனிமையாயும் ஒரு இருண்மை தொங்கிக்கொண்டு இருப்பதாய்ப் பட்டது அவருக்கு. அங்கிங்கொன்றாகவும், மரக்கூடலுள் மூடுண்டு வெளியற்றும் கிடந்த வீடுகளும், தென்திசை ஓடி ரொறன்ரோ ஏரியில் கலக்கின்ற செந்நதியுடன் சேர விரைந்த சிற்றாற்றின் கரையை ஒட்டியிருந்த செடிகளும் மரங்களும் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்தினவா அல்லது அந்த வீடே இயல்பில் மௌனத்துக்கும் தனிமைக்குமாய் விதிக்கப்பட்டதாவென யோசித்தவேளைகளிலும் அவருக்குப் புரிபடாதிருந்தது. உண்மையில் குருசாமியினது அல்லாட்டத்தின் காரணம்தான் என்ன? மனித அரவமற்ற அந்தச் சூழலா, அல்லது மரக் கவிவினால் ஒரு மர்மத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதுபோல் தோற்றம் காட்டிய வீடுகளா என்பது அறியப்பட முடியாததாய் இருந்தது. மொத்தத்தில் மனிதர் ஒரு மாறுபாடான சூழலின் வதைபா

பத்தி: காற்றின் கலை
பி. ரவிகுமார்  

சில பாட்டுகள் நாம் அறியாமலே நமக்குள் புகுந்துவிடும். அவை உள்ளே நுழைந்து மெல்ல மெல்ல நமது உதிரத்தில் கரையும்; நமது கலாச்சாரமாகப் பரிணாமம் அடையும். பால்ய காலத்தில் கேட்ட பல பாட்டுகளும் அப்படி உள்ளே புகுந்து என் ரத்தத்தில் கரைந்து போயிருக்கின்றன. கே.பி. சுந்தராம்பாள், எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் நானறியாமல் என்னுள் புகுந்தவர்கள். பால்ய காலத்தைக் கடந்த பின்பே எம்.டி. ராமநாதனின் பாட்டைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ராமநாதனின் முழங்கும் குரல் எனக்குள் நுழைந்தது மட்டுமல்ல, என்னைப் புரட்டியும் போட்டது. மரணம் வரைக்கும் அது என்னைப் பின்தொடர்ந்து கொண்டுமிருக்கும். ஒவ்வொரு நிமிடமும் அது என்னைச் சுத்திகரித்துக் கொண்டேயிருக்கிறது. ராமநாதனின் நிலத்த

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

கண்திறந்தால் தெரிவது காட்சி என்பது ஓர் எளிய சூத்திரம். ஆனால் பார்வைகொண்ட அனைத்துக் கண்களுக்கும் பொதுவாய்த் திறந்து கிடக்கும் காட்சிகளும் அவை விளைவிக்கும் உணர்வுகளும் ஒரே தளத்திலானவைதாமா? உடனடி உதாரணங்கள் சில தோன்றுகின்றன: 1. ஜன நெரிசல் உள்ள கடைத்தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். சுற்றிலும் ஏகப்பட்ட மனிதர்கள், சகமனிதனின் இருப்பைக் கணக்கில் கொள்ளாமல் இடித்தும் மிதித்தும் புறங்கையால் அனிச்சையாக ஒதுக்கியும் விரைகிறார்கள். நீங்கள் அங்கே இடைப்பட்டதன் நோக்கமே மறக்கும் அளவு எரிச்சல் மூள்கிறது... இந்நிலையில், எதிரேபோகும் பெண்ணின் தோளில் கிடந்தபடி, அவளுடைய முதுகுப்புற உலகைக் கண்டுகளிக்கும் குழந்தை திடீரென்று உங்களைப் பார்த்துப் புன்னகைக்கிறது - கீழ்ப்பல் இரண்டு மட்டும் முளைத்த ஈறு தெரிய.

கட்டுரை
தேனுகா  

எல்லா இசங்களும் திடீரென்றுதான் கி.பி. 1900க்கு முன்னும் பின்னும் என்று ஒரு 80 வருடங்களுக்குள் கொட்டித் தீர்ந்தன. மாடர்ன் இசங்கள் என்று அழைக்கப்பட்ட cubism, futurism, surrealism போன்ற நவீனம் சார்ந்த எல்லா இசங்களும், புதிய அறிவுத் தளங்களில் இயக்கம் கொண்டு உணர்வுப் பிரவாகத்தை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு வந்த ஓவியங்களை மாடர்னிசம் எனும் நவீனம் சார்ந்ததாகவே எல்லோரும் அழைத்து வருவது விந்தையாக உள்ளது. போஸ்ட்மார்டன் என்ற ஒரு புதிய இயக்கம் உருவாகியது. இவ்வியக்கம் மாடர்னிச இயக்கத்தை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் நங்கூரம் பாய்ச்சிய இசமாகவே திகழ்ந்தது. இருப்பினும் மாடர்னிசம் புதிய போஸ்ட்மாடர்னிசத்தைத் தழுவியும், மேற்சென்றும் இன்றும் தம் இருப்பினைக் காட்டிக்கொள்வதைத் தவிர

கட்டுரை
பழ. அதியமான்  

நன்றியின் அடையாளமாக உப்பு, மானத்தின் குறியீடாக ஆடையைத்தரும் இராட்டை, மனசாட்சியின் பிரதிபலிப்பாகச் சத்தியம் ஆகியவை விடுதலைக் கால இந்தியரின் மூன்று போராட்ட ஆயுதங்கள். அக உணர்வைத் தூண்டும் தன்மைகொண்ட அவை இந்தியர்களிடம் எழுச்சியை உருவாக்கின. காந்தி இவ்வெழுச்சியை வெற்றியாக மாற்றினார். இந்தியாவின் பிதாவானார். விடுதலையடைந்த இந்தியாவில் உப்பும் இராட்டையும் பல மாற்றங்கள் பெற்றன. வைரம்போல மின்னும் கல்உப்பு உடைந்து தூளாகி இன்று அயோடின் கலந்து ஆரோக்கியத்தின் அடிப்படையாகி விட்டது. பெரு நிறுவனங்களும் அரசாங்கமுமே அதன் விற்பனையிலும் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன, ‘கோவளங்களைக் கட்டியாண்ட பழம் அரசுகள்போல’. இராட்டைகள் பெரும் தொழிற்சாலைகளில் ராட்சச வடிவம் எடுத்து துணிகளை நெய்து தள்ளுகின்றன

பதிவு
அம்பை  

7 டிசம்பர், 2014, ஸ்ரீராம் குழுமத்தின் தலைவரான ஆர். தியாகராஜன் நிறுவியிருக்கும் ஸ்பாரோ இலக்கிய விருது முதன்முதலாக 2014ஆம் ஆண்டுக்குத் தேர்வு செய்த விருதுகள் 27 டிசம்பர் அன்று வழங்கப்பட்டன. அம்பை, கண்ணன் சுந்தரம், என். சுகுமாரன் ஆகிய மூவரும் இருந்த நடுவர் குழு தமிழில் ஒரு பெண் எழுத்தாளர், ஓர் ஆண் எழுத்தாளர், தமிழ் அல்லாத வேறு மொழியில் எழுதும் பெண் எழுத்தாளர் என்று மூவரைத் தேர்வு செய்தது. சு. தமிழ்ச்செல்வி, கே.என்.செந்தில், மேகனா பேட்டே என்ற மூவரும் விருதுகளைப் பெற்றுக்கொண்டு ஸ்பாரோவைக் கௌரவித்தார்கள். பிரபல எழுத்தாளர் சாந்தா கோகலே விருதுகளை வழங்கி உரையாற்றினார். சு. தமிழ்ச்செல்வி தன் ஏற்புரையில் ஔவையார், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார், நச்செள்ளையார், காரைக்கால் அம்மையார், ஆண்

பத்தி
வே. வசந்தி தேவி  

மேக் அப்’ என்பதே பெண்களின் உலகம் என்று கருதப்படுகிறது. அவர்கள் மேக்அப் கலைஞராகக் கூடாது என்று சொல்வது யார்? ஒரு மாதத்திற்குமுன், 2014 நவம்பர் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலிவுட் திரைப்படங்களில், பெண் மேக் - அப் கலைஞர்கள் பணிபுரிவதைத் தடைசெய்யும் விதத்தில், சங்கங்கள் விதித்திருந்த 60 ஆண்டு காலக் கட்டுப்பாடுகளை நீக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் மேக் - அப் கலைஞர் சங்கங்கள், தங்கள் சங்கங்களில் பெண் மேக் - அப் கலைஞர்கள், பெண் சிகை அலங்கார நிபுணர்கள் உறுப்பினர்களாக ஆவதற்கு தடை விதித்திருந்தன. இதனை எதிர்த்து, மேக் - அப் கலைஞர் சாரு குரானாவும் மற்றோரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்  

இந்தியாவின் அறிவியல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பிரிட்டனைச் சார்ந்த வேதியியல் அறிஞர்களான ஜே.எல். சைமன்சென், பி.எஸ். மேக் மாஹன் ஆகியோரின் முனைப்பில் உருவான அமைப்புதான் இந்திய அறிவியல் சங்கம மன்றம் (இ.அ.ச.ம). Indian Science Congress Assocition இங்கிலாந்தில் இயங்கிவந்த British Association for the Advancement of Science எனும் அமைப்பு தந்த உந்துதலால் உருவாக்கப்பட்டது. 1914 முதல் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் அறிவியல் சங்கமத்தை நடத்தி வருகிறது இ.அ.ச.ம. முதல் சங்கமம் கல்கத்தாவில் நடத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளில் அறிவியல் சங்கமம் நடத்தப்பட்டாலும், அனைத்துப் பிரிவு அறிவியலாளர்களும் பங்கேற்கும்வகையில் பாடவாரியாகத் தனித்தனி இணை

புதிய பத்தி: எதிர்க்காற்று
எம். தமிமுன் அன்சாரி  

பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட துயர நிகழ்வு உலக அளவில் விவாதிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் இரண்டு முஸ்லிம்களும் உண்டு. எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அந்தப் பயங்கரவாதத்தை எல்லோரையும்போல உலக அளவில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களும் கண்டிக்கிறார்கள். பள்ளிவாசல்களில், மதரஸாக்களில், பல்கலைக் கழகங்களில் இதுபோன்ற பயங்கரவாதத்தைக் கண்டித்து உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிகைகளிலும் இதர ஊடகங்களிலும் கண்டனங்கள் பதியப்பட்டுள்ளன. ஜனவரி 11, 2015 அன்று பாரிஸில் 10 லட்சம்பேர் பங்கேற்ற கண்டனப் பேரணியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உள்ளிட்ட 50 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் ப

மதிப்புரை
சு.கி. ஜெயகரன்  

பதினேழாம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மாலுமி ராபர்ட் நாக்ஸ் (ஸிஷீதீமீக்ஷீt ரிஸீஷீஜ்) இலங்கையில் கரையிறங்கியபோது கண்டி அரசனால் சிறைபிடிக்கப்பட்டு 19 1/2 ஆண்டுகள் தடுத்து வைக்கப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து இங்கிலாந்திற்குப் பயணித்தபோது அவர் எழுதிய குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். அன்றைய இலங்கைபற்றி நேரில் கண்ட ஒருவர் எழுதிய முதல் ஆங்கிலப்பதிவு என்பதால், இந்நூல் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. 330 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழில் படைக்கப்படுவதால் இந்நூலை ஒரு முக்கிய வரவாகக் காண்கிறேன். இங்கிலாந்திலிருந்து 1658இல் தன் தந்தையின் கப்பலில் புறப்பட்ட நாக்ஸ், அரபு நாடுகள் கடந்து வணிகம் செய்யும் நோக்குடன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு வருகிறார். மசூலிப்பட்டினம் அருக

அவதானிப்பு
களந்தை பீர்முகம்மது  

இலங்கையின் இனப்பிரச்சினை தனித்துவம் வாய்ந்தது. மலையகத் தமிழர்களின் ஆற்றாமை பேசப்படுவதில்லை. முஸ்லிம்களின் துயரமும் அவ்வாறே. எல்லோரும் தனித்தனியாய் இருக்கிறார்கள்; துயரங்களும் அலாதியான சிக்கல்களும், இலங்கைப் பேரினவாதிகளை எதிர்கொள்வதில் உள்ள அபாயங்களும் இன்னும் அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றன; இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாளதுவரை ஒன்றுசேர்ந்து கோரிக்கை களை வென்றெடுப்பதற்கான உத்திகள் ஆராயப்படாமலும் இருக்கின்றன. இவையெல்லாம் அதிகாரத்தையும் அடக்குமுறையையும் இன்னும் கூடுதலாகப் பிரயோகிக்க இனவாத அரசுக்கு வழிசெய்கின்றன. தமிழர்களுக்கிடையே வெறும் கோபதாபங்கள் மட்டும் அல்லாமல், நிரந்தரமான மனப்பிளவுகள் இருப்பது இனரீதியான பாசத்தைக் கொண்டிருக்கிற நமக்கு எண்ணற்ற குழப்பங்களையும் கவலைகளையும

மதிப்புரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

கூலித் தமிழ் (கட்டுரைகள்) மு. நித்தியானந்தன் வெளியீடு: க்ரியா புதிய எண்: 2, பழைய எண்: 25, 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை & 600 041. பக்கம்: 179 விலை: 400 இலங்கையின் மத்தியப் பகுதியான மலைநாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்கள் ‘மலையகத் தமிழர்கள்’ என்ற பெயரைத் தாங்கி நிற்பவர்கள். இவர்களது பூர்வீகம் இந்தியாதான். இதன் காரணமாகவே இவ்விரு நாடுகளின் அனைத்து அரசியல் இயக்கங்களின் (தமிழ்த் தேசிய இயக்கங்கள் உட்பட) புறக்கணிப்புக்கு ஆளானவர்கள். ஆங்கிலக் காலனிய ஆட்சியின் வேளாண் கொள்கையினாலும் வறட்சியினாலும் கடன்பிடிக்குள்ளும் நிலவுடைமைக் கொடுமைக்குள்ளும் வறுமைக்குள்ளும் சிக்கித்தவித்த தமிழ்க் குடியானவர்களின் புகலிடமாக ஆங்கிலக் காலனியாட்சிக் காலத்தில் இ

மதிப்புரை
அனார்  

பனி (நாவல்) ஓரான் பாமுக் தமிழி: ஜி. குப்புசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் & 629 001. பக்கம்: 575 விலை: ரூ.450 நவீன உலக இலக்கியத்தின் பல்வகைமையான எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. சமகாலத்தின் மிக முக்கியமான மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி. குப்புசாமி தொடர்ச்சியாக உலக எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஓரான்பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’, அதற்கடுத்து ‘பனி’ ஆகிய நாவல்களை ஜி. குப்புசாமியின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் மிக நேர்த்தியாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ‘பனி’ மொழிபெயர்ப்பு, அனுபவ ஊற்றுகளைத் திறந்துவிடுகிறது. அந்தக் கடவுள் நம்மிடையே இல்லை.

மதிப்புரை
செந்தீ நடராசன்  

சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட ‘செழிய, செழியன்’ நாணயங்கள் (கட்டுரைகள்) இரா. கிருஷ்ணமூர்த்தி வெளியீடு: கார்னெட் பப்ளிஷர்ஸ் ஜி7/1, காவேரி சாலை, சென்னை&90 பக்கம்: 131 விலை: ரூ. 400 சமீபகாலமாகப் பண்பாட்டு ஆய்வாளர்களின் கவனம் தொல்லியல்துறை பக்கம் திரும்பி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ஆய்வுகளில் அதிக நம்பகமான தரவுகளைத் தருவன தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளே. அகழாய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்காசுகள் போன்றவை நமது வரலாற்றை மீளக் கட்டமைப்பதில் பெரும்பங்கு வகித்து வருகின்றன. பழைய நாணயங்களைச் சேகரிப்பதில் ஏராளம்பேர் ஈடுபடுகின்றனர். ஆனால் ஆய்வுநோக்குடனும் வரலாற்று உணர்வுடனும் அதில் ஈடுபட்டிருப்பவர்கள், எண்ணிக்கையில் மிகமிகக் குறைவானவர்களே. அவர்களுள் குறிப

கடிதங்கள்
 

டிராபிக் ராமசாமி என்றாலே ‘பொதுநலவழக்குப் புலி’ எனச் சொல்லிவிடலாம். வெகுமக்கள் தளத்தில் அவரை அறியாதவர்கள் நாளிதழ் படிக்காதவர்களாகவே இருப்பர். குறிப்பிட்ட இலட்சியவாதத்தால் ஈர்க்கப்பட்டு அவர் தனது செயல்பாடுகளைத் துவங்கவில்லை. என்றாலும், இராஜாஜியின் சிறு அறிவுரையொன்றே தன்னை இயக்குவதாக அவர் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சாவித்திரி கண்ணனின் கட்டுரை மேலோட்டமானதாக உள்ளது. கட்டுரைக்காக ராமசாமியைச் சந்தித்து அவரோடு சிலமணி நேரங்கள் செலவிட்டிருந்தால் அது ஓரளவு முழுமையான வடிவம் பெற்றிருக்கும். முட்டாள்கள் தினம் எனச் சொல்லப்படும் ஏப்ரல் 1இல் பிறந்தவர் அவர். எவ்விதக் கூச்சமும் இன்றி அதை ஒப்புக்கொள்ளும் அவர் “எவனோ முட்டாள் தினம்னு சொன்னா நாம அப்படியே ஏத்துக்கிடறதா?&

பதிவு
ஸர்மிளா ஸெய்யித்  

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளிகள் ஒன்றுகூடி உரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை இந்த ஆண்டு (2015) புத்தகத் திருவிழா ஏற்படுத்தித் தந்தது. கருணாகரன், நிவேதா உதயராஜன், தேவகாந்தன், நோயல் நடேசன், சாத்திரி, இளங்கோ டிசே, ஹஸீர் உட்பட்ட ஒரு சிறுகுழு 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் புத்தகத் திருவிழா வளாக முன்றிலில் கூடினோம். இந்தச் சந்திப்பு முன்கூட்டித் திட்டமிடாதது என்பதனால் அன்றைய தினம் புத்தகத் திருவிழாவில் சந்திக்க நேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடிந்தது. எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிரான இந்துத்துவச் சக்திகளின் செயற்பாடுகள் குறித்தும், படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடுகளைப் படைப்பாளி எதிர்கொள்வது குறித்ததுமாகவே உரையாடல் தொடங்கியது. ஒரு படைப்பாளி தன்னைச

உள்ளடக்கம்