தலையங்கம்
 

அண்மையில் சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகப் பணியாற்றிவரும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். கிறிஸ்தவ மதப் பிரசங்கத்தில் ஈடுபடுவதை அடுத்து விவாதங்கள் எழுந்துள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரி அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து, ஆட்சிப் பணிக்குரிய கடமையைச் செய்வதில் தவறிவிட்டார், பதற்றமான பகுதிகளில் அடிக்கடி மதப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார், ஆகையால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை குமரி மாவட்டம் மேற்கு பரசேரி இந்து சாம்பவர் சமுதாயத் தலைவர் எழுப்பினார். இதற்காக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இதன் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே. ஞானதேசிகன், “அகில இந்தியப் பணி விதிகள் 1968இன்படி அதில் கூறப்படாத ச

கட்டுரை
தொ. பத்தினாதன்  

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் ஓய்ந்திருந்த அலை, இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றவுடன் மீண்டும் சலசலக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சலசலப்பு வளமைக்கு மாறாக இம்முறை தமிழுகத்திலுள்ள ஈழஅகதிகள் குறித்துப் பேசியமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்வாதிகளின் அறிக்கைப் போரும் அக்கப்போரும் மீடியாக்களுக்கு நல்ல விருந்தாக அமைந்து போயின. தமிழகத்தில் அகதிகள் இருந்தாலும் ‘ஈழத்தமிழர்’ விவகாரங்களே நல்ல கச்சாப்பொருளாக, விற்பனைப் பொருளாகப் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. தற்போது தமிழக அரசு அவசரப்பட்டு அகதிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று எடுத்த முடிவு அகதிகளின் மனநிலையுடன் ஒத்துப்போவதை அவதானிக்க முடிகிறது. யாரும் கண்

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

'தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும்; மறுபடியும் தர்மம் வெல்லும்’ என்ற வாசகத்தை மேற்கோள் காட்டாத அரசியல் வாதியே கிடையாது. ஆனால் மிக அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இது பொருத்தமாக அமைகிறது. அத்தகைய ஒரு சந்தர்ப்பம்தான் 2015 டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்தான வெற்றி. 2013 இறுதியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றிபெற்றபோதிலும் 28 இடங்கள் பிடித்து காங்கிரசின் ஆதரவுடன் ஆஆக ஆட்சியமைத்தது. ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து பிறந்த தங்களின் மிக முக்கியமான வாக்குறுதியான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததைக் காரணம் காட்டி தார்மீக அடிப்படையில் அர்விந்த் கெஜ்ரிவால் பதவி விலகியது மிகப

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

அண்மையில் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மண்ணார்க்காடு நகரக் கல்லூரி ஒன்றில் பேச அழைத்திருந்தார்கள். அப்போது ஹம்சா மற்றும் முகமது எனும் இரண்டு மாணவர்களுடன் அட்டப்பாடி பகுதிக்குச் சென்றேன். மண்ணார்க்காடு வட்டத்தில் சுமார் 745 சதுர கி.மீ. பரப்பும், அட்டப்பாடி ஒன்றியத்தின் 249 சதுர கி.மீ. பரப்பும்கொண்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைத்தான் அட்டப்பாடி என்று அனைவரும் குறிக்கின்றனர். அட்டப்பாடியில் சுமார் 192 குக்கிராமங்கள் இருக்கின்றன. முடுகர்கள், இருளர்கள், குறும்பர்கள் போன்ற ஆதிவாசி மக்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். கடந்த 1970ஆம் ஆண்டு கேரள மாநில திட்டக் குழு இந்தப் பகுதியை மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக அறிவித்து, ஒருங்கிணைந்த ஆதிவாசிகள் வளர்ச்சித் திட்டம் ஒன்றைத

அஞ்சலி
சந்தோஷ் நாராயணன்  

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் என்கிற பெயரின் சுருக்கமே ஆர்.கே. லக்ஷ்மண். படைப்புச் சுதந்திரத்தின் காட்சி அடையாளமாகத் திகழும் அரசியல் கார்ட்டூன்களில், இந்தியாவின் கடந்த ஐம்பதாண்டுகளின் சமூக அரசியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்த லக்ஷ்மணின் பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ராசிபுரம் எங்கே இருக்கிறது எனத் தேடினேன். ஒரு நாவலின் பெயரால் அதன் எழுத்தாளனை முடக்க முனைந்து, படைப்புச் சுதந்திரத்தைக் கேலிப்பொருளாக்கிய திருச்செங்கோட்டுக்கும் ராசிபுரத்துக்கும் அதிகம் தூரமில்லை என்பதை அறிந்து வியப்பாக இருந்தது. லக்ஷ்மண் பற்றிய இந்தப் பதிவை இப்படி ஆரம்பிப்பது எனக்கு ஒரே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது. ஏனென்றால், நெருக்கடி நிலையின்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த தேவ்காந்த் பருவாவின்

அஞ்சலி
ஞாநி  

இந்த வருடம் ஜனவரி 19 அன்று தன் 87வது வயதில் காலமான பேராசிரியர் ரஜினி கோத்தாரி, இன்று இந்தியா, குறிப்பாக தமிழகம் சந்திக்கும் குண்டர் அரசியல், சாதிய அரசியல் அனைத்தின் அறிகுறிகளையும் சுமார் 40 ஆண்டுகள் முன்பே அடையாளம் காட்டி, இதற்கான மாற்றுகள் என்ன என்பதைத் தொடர்ந்து அக்கறையுடன் ஆராய்ந்த சமூக அரசியல் அறிஞர். முதலில் பரோடாவில் விரிவுரையாளராகவும் பின்னர் தேசிய சமூக வளர்ச்சி நிலையத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ரஜினி கோத்தாரி ஆரம்ப வருடங்களிலேயே தன் அரசியல் ஆய்வுக்கட்டுரைகளின் வழியே அறிவுலகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர். 1961இல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் ஆறு பகுதிகளாக அவர் இந்திய அரசியல் பற்றி எழுதிய கட்டுரைகள் அன்றைய ஆய்வுகளின் போக்கையே மாற்றத் தூண்டின. அதையடுத்து தன

கட்டுரை
எம்.ஏ. நுஃமான்  

நவீன மொழியியலுக்கு ஒரு நூற்றாண்டுக் கால வரலாறுதான் உண்டு. 1916இல் வெளிவந்த, ஃபேடினன் டி சசூரின் பொதுமொழியியல் பாடநெறி (A Course in General Linguistics) என்பதுதான் இத்துறை சார்ந்த முதல் நூல். அவ்வகையில் சசூர்தான் நவீன மொழியியலின் முன்னோடி. இவர் 19ஆம் நூற்றாண்டு முழுவதிலும் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த ஒப்பியல், வரலாற்று மொழியியல் (Comparitive and Historical Linguistics) புலமை வழிவந்தவர். ஒப்பியல், வரலாற்று மொழியியல் ஆய்வுகள்தாம் நவீன மொழியியலுக்கு வித்திட்டன. 20ஆம் நூற்றாண்டு முழுவதிலும் நவீன மொழியியல் சிந்தனைகள் பெருவளர்ச்சி பெற்றன. பல்வேறு மொழியியல் கோட்பாடுகளும் சிந்தனைப் பள்ளிகளும் கிளைகளும் வளர்ந்தன. கடந்த ஒரு நூற்றாண்டுக் கால மொழியியல் வளர்ச்சியில் ஏராளமான சிந்தனையாளர்கள் பெரிது

கட்டுரை
த. சுந்தரராஜ்  

இந்தியாவின் இரட்டைக் குழந்தைகளான தமிழையும் சமஸ்கிருதத்தையும் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆட்சியமைத்த எந்த மத்திய அரசுக்கும் இல்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு முன்பும் மொகலாயர்களைத் தவிர்த்துப் பிற இந்தியப் பேரரசுகளிடமும் இதே மனநிலைதான் நிலவியது. சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த மனநிலை, ஆர்எஸ்எஸ், பாஜக முதலிய இந்துத்துவக் கூட்டணிகளின் ஆட்சியில் அரசின் கொள்கையாகவே பரிணமித்துள்ளது. தமிழை சமஸ்கிருதத்திற்கு நிகராக வைக்க அவர்களுக்கு இரண்டு தடைகள் இருக்கின்றன. முதலாவதாக, சமஸ்கிருதத்திற்கு வேதமரபு கற்பித்துள்ள ‘தேவபாஷை’ என்னும் பிம்பம். இது இந்தியச் சமூகத்தின் விஷவிருட்சமாக வளர்ந்திருக்கும் வர்க்கம், மதம் முதலிய பின்புலங்களில் உருவான வலிமையான

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

எல்லாப் பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம் நடைபெறும் தொழுகை மிகவும் விசேஷமானதாகும். அன்றாடம் தொழ முடியாமல் தவிப்பவர்கள் அன்றேனும் ஓடோடி வந்து தொழுகையில் கலந்துகொள்வார்கள். வாய்த்த சந்தர்ப்பங்களை ஒட்டி நான் பல ஊர்ப் பள்ளிவாசல்களுக்கும் இந்த நேரத்தில் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் அமைந்துள்ளன. வெள்ளியன்று பள்ளிவாசலில் தொழுகையை முன்நின்று நடத்திவைக்கும் அதே பள்ளிவாசல்களின் இமாம்கள் பிரசங்கம் புரிவார்கள்; அல்லது வெளியூர்களிலிருந்து மார்க்க அறிவுஜீவிகள் வந்து பிரசங்கம் புரிவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் அரபி மொழியில் விற்பன்னர்களாக இருப்பார்கள். நாக்கு வளைந்து புரண்டு நெளிந்து அரபுச் சொல்லை - வசனங்களை உச்சரிக்கும்போது கேட்கவே மிக ரசனையாக இருக்கும். தமிழையும் நன்கு கற்றவர்களாக இ

அஞ்சலி
பழ. அதியமான்  

தமிழ்ப் பேராசிரியர் இரா. இளவரசு காலமாகி விட்டார். அறிஞர், செயற்பாட்டாளர், பாரதிதாசன் இலக்கியத்தின் நிபுணர், தனித்தமிழ் நோக்கினர் எனக் கல்வியுலகில் அறியப் பெற்றவர். பாவேந்தரின் 125ஆம் பிறந்தநாள் நெருங்கிவரும் சமயத்திலும், தனித்தமிழ் இயக்கத்திற்கு நூற்றாண்டு அண் மிக்கும் வேளையிலும் பேராசிரியரின் இழப்பு நேர்ந்திருக்கிறது. இதனால் இவ்விரு கொண்டாட்டங்களின் பெறுமதிகள் சற்று குறையும். இளவரசுவின் மரணச் செய்தியைத் தொலைபேசியில் அறிந்த அடுத்த சில நிமிடங்களில் கண்ணில்பட்ட ஒரு இளம் தமிழ் விரிவுரையாளரிடம் ‘இளவரசு போய் விட்டாராம் தம்பி’ என்றேன். அப்படியா என்று கேட்ட அவர், அவசரமாய் நகர்ந்து விட்டார். மாலையில் மீண்டும் எதிர்ப்பட்ட அவர், என்னிடம் ‘இளவரசு என்று நீங்கள் சொன்னது நடிகர் இ

ஜான்சுந்தர்  

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கசியும் பாடல் கர்ப்பிணிப்பெண்ணின் முலைகளென பூரித்த கருணையோடு அரவணைத்துக்கொள்கிறது நேயாய்மை இந்தக் கதகதப்பு தனிமையில் உறைந்த விரல்களுக்கு எத்தனை ஆதூரமாயிருக்கிறது உறக்கத்திற்கும் மரணத்திற்கும் தியானத்திற்கும் ஊடான குறுக்குவெட்டுப் பாதையில் பயணிப்பது பரமசுகம் இல்லையா உன்னோடு பேசுவதை உளறல் என்றால் வா நாம் கோமாவுக்குப் போவோம் வினோதமாய் நிறம் மாறும் இவர்களிடையே என்னை மீளக்கையளித்துவிடாதே என் அன்பே பட்டினத்தார் காலத்தில் லெகின்ஸ் பயன்பாட்டில் இல்லை முன்னோடும் வண்டியின் பின்னிருக்கை திரட்சிக்கு கால்களுக்கிடையிருந்து முன்னோக்கிப்பாயும் நமது ஸ்ப்ளெண்டர் நமது ஸ்ப்ளெண்டராயில்லை பட்டினத்தாரே மதன்மித்ரா பீமபுஷ்டி பல்ஸராகிப் பாய்கிறதே பட்டினத்தாரே

ஷஸிகா அமாலி முணசிங்க  

வாழ்வென்பதன் ஒத்த கருத்து ஜீவிதத்துக்கென இருக்கும் ஒத்த கருத்துச் சொல் மரணம் யாரும் உனக்குக் கற்றுக் கொடுக்காத நீ தனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய முடிவற்றது மரணத்தினூடான வாழ்க்கை அவ்வாறே மரணத்தினூடான மரணமும் எனில் இரண்டிற்குமிடையே ஏது வேறுபாடு ஒத்த கருத்தன்றி இக் கணத்தின் யதார்த்தம்சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு பருத்த ஆண்கள் பேரூந்தில் ஏறுகையில் தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன் பேருந்தின் கர்ப்பத்துக்குள் மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன் வியர்வையில் தெப்பமாகி இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன் விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன் சரிகிறேன் எழுகிறேன் சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே நான் சிந்திக்கிறேன் ‘யார் நான் கவிஞரா மிக அழகிய இளம்பெண்ணா அவ்வாறும் இல்

கட்டுரை
சு. தியடோர் பாஸ்கரன்  

உன்னதமானதாக நான் கருதும் ஒரு படத்தைப் பற்றி யாராவது மோசமான கருத்தைக் கூறினால் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி ‘எங்கே, எப்படி அதைப் பார்த்தீர்கள்?’ என்பதுதான். வீட்டில் டிவிடிமூலம் பார்த்ததாகப் பதில் வந்தால், நான் பேச்சைத் தொடருவதில்லை. ஒரு திரைப்படத்தைக் குறுவட்டு இயக்கிமூலம் வீட்டில் சின்னத்திரையில் பார்ப்பதற்கும், இருண்ட அரங்கில் அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பதற்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு. இவை இரண்டும் அடிப்படையிலேயே மிகவும் வேறுபட்ட அனுபவங்கள். ஒரு திரைப்படத்தை உள்வாங்குவதிலும் எதிர்கொள்வதிலும் புரிந்துகொள்வதிலும் இந்த வேறுபாடுகளின் தாக்கம் இருக்கும். மேலோட்டமான ஒப்பீடுமூலம் இதை விளக்க முயல்கிறேன். கச்சேரியில் ஒருவரின் இசையை நேரிடையாகக் கேட்பதற்கும் ஒலிப்பதிவு

கலை
 

பிழைப்பின் நிமித்தம் கலைஇயக்குநராக வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் ஜே. கே. வை ஓவியங்கள் அழைத்தபடி இருக்கின்றன. அவரும் அந்தக் குரலுக்கு விசுவாசமான பணியாளின் பவ்யத்தோடு வந்துவிடுகிறார். பின்தொடர்கிறார். கட்டளைகளை நிறைவேற்றுகிறார். திடீரென எங்கோ காணாமல் போய்விடுகிறார். இந்த ஒட்டுறவும் விட்டுப் பிரிதலுமான ஊடாட்டம்தான் அவர் படைப்பின் தொடர்ச்சியை, பலத்தை, சென்றடைந்த விதத்தைத் தீர்மானிக்கிறது. சமீப வருஷங்களில் அவரது சில அக்ரலிக் வண்ண ஓவியங்களை நான் கவனித்து வருகிறேன். 2013இல் அவர் வரைந்த வண்ணப்படங்களில் ஒரு விதமாய் நான் ஊகித்து சிறந்ததாய்ச் சொன்ன அவரது ‘டிரான்ஸ்ஃபர்மர்’ ஓவியம் 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்தவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 24ஆம் தேதி டெல

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

முதலில் ஒரு திருத்தம். ஏளன ஓவியப் பத்திரிகை சார்லி எப்டோ முதல் பெருமாள்முருகன்வரை நடந்த சமீபத்தியக் கருத்துச் சுதந்திரச் சர்ச்சைகளில் தாராளவாதிகளால் அடிக்கடி பிரான்சின் ஞானபாரகன், சிந்தனையாளர் வால்டையருடைய (Voltaire) ஒரு வாசகம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. அந்த வாக்கியம் : “நீ சொல்வதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஆனால் நீ அதைச் சொல்வதற்கு என் உயிரையும் கொடுப்பேன்”. இது உண்மையில் அவர் சொல்லவில்லை. இந்த வசனத்தின் சொந்தக்காரர் The Friends of Voltaire (1906) என்னும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய Evelyn Beatrice Hall (சொந்தப் பெயர் S. G. Tallentyre). வால்டையரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இந்த வசனத்தை அந்த நூலில் புகுத்தியிருந்தார். அதுவே வால்டையர் சொன்னதாகப் பொதுப்புழக

எதிர்வினை
அ. யேசுராசாவுக்கான பதில் - கருணாகரன்  

காலச்சுவடு டிசம்பர் இதழில் வெளியாகியிருந்த ‘மலையகத் துயரம் - 2014’ என்ற என்னுடைய கட்டுரைக்கு தவறானதோர் எதிர்வினையை அளித்திருக்கிறார் அ. யேசுராசா. அந்த எதிர்வினை சுத்தமான யாழ்ப்பாண மையவாதத்திலிருந்து எழுதப் பட்டிருக்கிறது. உண்மை யைத் தெரியாமல், அறியாமல் பேசுவது வேறு; உள் நோக்கத்துடன் திட்டமிட்டு மறைப்பது வேறு. இந்த இரண்டாவது வேலையைத்தான் யேசுராசா செய்திருக்கிறார். அது மட்டுமல்ல கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் என்மீதான அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறார். யேசுராசா தன்னுடைய விருப்பத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் உரியவாறு கட்டுரை அமையவில்லை என்கிறார். இது ஒரு கட்டுரையை, ஒரு படைப்பை, ஒரு கருத்தை எதிர்கொள்ளும் மனத்தடையையும் ஆத

கதை
 

நிஜமாக நடந்து முடிந்தது எல்லாமே வரலாறுதானே. அந்த வகையில் இது வரலாற்றுக் கதையேதான். இந்தக் கதைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதை இப்போது சொல்ல வேண்டாம்.நெஞ்சை அடைக்கும். கதை முடியட்டும். சாவகாசமாகச் சொல்கிறேன். சொல்லி முடித்தபின் யாராவது ஒருவர் கிளம்பலாம் - ‘இதெல்லாம் வரலாற்றுக்கதையில் சேர்த்தியில்லை, மர்மக்கதை என்று வேண்டுமானால் சொல்லலாம்’ என்று. வகைபிரிப்பது எழுதுகிறவனின் வேலையில்லை.வாசிக்கிறவரின் பார்வைக் கோணத்தைப் பொறுத்த விஷயம். சடையன் சம்பந்தமாக அம்மா அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்று உண்டு. கைக்குழந்தையாக இருந்தபோது, எனக்கு வேற்றுமுகம் ஜாஸ்தியாம். அந்நியர்களைக் கண்டால் அழுது ரகளை செய்யத் தொடங்கிவிடுவேன் என்பாள். அந்தமுறை சடையன் ஊருக்கு வந்திருந்தபோது வழக்கம்போல வீட்டு வ

பத்தி: எதிர்க்காற்று
எம். தமிமுன் அன்சாரி  

இந்தியாவின் 66வது குடியரசுதின நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து டெல்லி மாநிலத் தேர்தல் முடிவுகளும் புதிய திருப்புமுனைகளை உருவாக்கி இருக்கின்றன. மதவாத அரசியலின் அபாயம் குறித்தும், அதற்கு எதிரான விளைவுகள் குறித்தும் கருத்தோட்டங்கள் ஆழமாக எதிரொலிக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒருவர் முதன்முதலாகக் குடியரசுதின விழா ஒன்றில் விருந்தினராகக் கலந்துகொண்டது சர்வதேச அரசியலின் அணிமாற்றத்தைத் தெளிவாக விளக்கியது. அவரது வருகையை இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்திக் கொண்டாடிய போக்குகள், நமது அடிமை மனோபாவத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. இந்நிகழ்வுகளில் தன்னை அமெரிக்க அதிபருக்கு இணையான தலைவரென்ற தோற்றத்தை உள்நாட்டில் உருவாக்க மோடியின் விளம்பர மற்றும் ஆலோசனைக் குழு பெருமுயற்சி எடுத்துக்கொண்டது. ‘பாரக் ஒ

மதிப்புரை
குணா கந்தசாமி  

அரூப நெருப்பு (சிறுகதைகள்) கே.என். செந்தில் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில்& 629 001 பக்கம்: 167 விலை: ரூ. 135 எட்டு நெடுங்கதைகளைக் கொண்ட கே.என். செந்திலின் ‘அரூப நெருப்பு’ தொகுப்பின் கதைகள் மனித உறவுகளில் சமூகத்தால் விலக்கப்பட்டிருக்கும் நடை முறைகளைப்பற்றிப் பேசுபவையாகவும் புனிதம் என்னும் மேற்திரையை விலக்கி மனங்களுக்குள் அடிப்பிடித்திருக்கும் கசடுகளைக் காண்பவையாகவும் இருக் கின்றன. தொகுப்பின் முதல் கதையான ‘தங்கச் சிலுவை’யைத் தவிர்த்த ஏனையவை குடும்பங்கள் மற்றும் தனிமனிதர்கள் சிதைவுறும் வாழ்வின் இருண்ட பக்கங்களைச் சித்தரிக்கின்றன. இக்கதைகள் பலவற்றிலும் வழக்கமற்ற பால்யத்தைக்கொண்ட சிறார்களும் இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். குடு

மதிப்புரை
க.வை. பழனிசாமி  

கண் புகா வெளி (கவிதைகள்) ஷாஅ வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் 629 001 பக்கம்: 96 விலை: ரூ.90 கவிதை மீதான உரையாடல்கள் நம்மிடம் அபூர்வமாகவே நிகழ்கின்றன. ஒரு கவிதை ஏன் பிடிக்கிறது என்பதற்கான ரசனை தோய்ந்த வாசிப்பு அனுபவங்களை நாம் பகிர்ந்துகொள்வதில்லை. பேச முற்படும் சிலரும் கவிதையைப் பொருள் சார்ந்தே அணுகுகிறார்கள். ஆன்மாவைத் தீண்டும் பரவசம் கவிதை. பேருயிரில் மூழ்கி அலைவது கவிதை. நவீனக் கவிதை சிறிய எல்லைக்குள் சிறைபட்டிருக்கிறது. பரந்த வாசிப்புக்கு நவீனக் கவிதை சென்றடையாத காரணம் கவிதைமீது நாம் அதிகம் உரையாடுவதில்லை. உரைநடையின் அற்புத அழகு நவீனக் கவிதைதான். நவீனக் கவிதை குறித்து முன்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் சி. மணி, சுந்தர ராமசாமி மற்றும் பிரமிள். இப்போது பேச

மதிப்புரை
கே.என். செந்தில்  

அந்தக் காலம் மலையேறிப்போனது (கவிதைகள்) இசை வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில்& 629 001 பக்கம்: 78 விலை: ரூ. 75 சங்கீதத்தைக் கணக்குகளாக அணுகும் மனங்களுக்கு அது அளிப்பது வெறும் சூத்திரங்களைத்தான். அது போலவேதான் கவிதையும். அதை ஒரு மொழி சார்ந்த விளையாட்டாகத் தன் புத்திசாலித்தனத்தின் களமாகக் காண்பவர்களைக் கவிதை கைவிட்டுவிடுவதை அவர்கள் அறிவதேயில்லை. தன்னைச் சுற்றிப் பின்னிக் கிடந்த தளைகள் தெறித்து விழுந்தபோதுதான் மண்ணில் குப்புற விழுந்தது கவிதை. அதன் திகைப்பு அடங்குவதற்குள் அதைத் தூக்கிவிட நாலாபுறமிருந்தும் வந்த புலவர்களைக் கைநீட்டி அப்படியே நிற்கச் செய்தது. அதன் மனதை உருகவைக்க யாப்பிலும் வெண்பாவிலும் கலிப்பாவிலும் செய்யுள்களைப் பாடியபடி அப் புலவர் கூட்டம் ந

 

பெருமாள்முருகன் பிரச்சனையில் அவருடைய கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவிட்டதாக எண்ணி இருந்தேன் . ஆனால் பிப்ரவரி 2015 காலச்சுவடில் வெளியாகியுள்ள சுகுமாரனின் ‘மாதொருபாகன் பிரச்சனை: எழுத்தை ஆள்வது யார்?’ கட்டுரையை படித்தபின் பெருமாள்முருகன் இன்னும் சற்று கவனத்துடன் பின்வரும் வரிகளை எழுதி இருக்க வேண்டுமென எண்ணுகிறேன். ‘இறக்கத்துக் கோவிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்கு கூட்டமே இல்லை. அந்தப்பெண்கள் நன்றாக சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்’. (மாதொருபாகன் பக் 87) சுகுமாரன், இந்தக் கருத்தை கதாபாத்திரத்தின் கருத்து எ

கட்டுரை
மினி கிருஷ்ணன்  

பைசா கோபுரத்தை, மன்ஹட்டன் நகரத்தின் மையத்துக்கு மாற்றி அதுதான் பொருத்தமான இடம் என்று நம்ப வைப்பதைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்; அதுதான் இந்த சவாலின் அளவு - டிம் பார்க்ஸ் (ராபர்ட்டோ கலாஸோவின் மொழிபெயர்ப்பாளர்) இலக்கியப் பெருநகரங்களில் நிராகரிக்கப்பட்ட வர்க்கமான, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய இந்தக் கட்டுரையை எழுத எனக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பரந்த வாசிப்புள்ள தோழி ஒருத்தி சொன்ன ஆச்சரியமூட்டும் வகையில் ‘நுண்ணுணர்வில்லாத அபிப்பிராயம்’ முதல் காரணம். அவள் சொன்னது “மொழிபெயர்ப்பாளர்களுக்கு மறைமுகமானவர்களாக இருக்கும் அடக்கம் வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி அவர்கள் மொழியாக்கம் செய்த படைப்புதான். அந்த உச்சபட்ச உணர்வே அவர்களுக்குத் திருப்தி அளிக்க வேண்டும்.&rdq

பதிவு
 

சௌத் இந்தியா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ‘எங்கள் பார்வையில் காலச்சுவடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கன்னியா குமரியில் 25.12.2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குமரிமுனை கோவளம் சாலையிலுள்ள அமைதி இல்ல வளாகத்தில் கிறிஸ்துமஸ் அன்று மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. அமைப்பின் தலைவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய உரையில், “1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய முஸ்லிம் சமூகமானது ஆட்சியாளர்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் நிறைய நெருக்கடிகளையும் அறைகூவல்களையும் சந்திக்க தொடங்கியது. அந்த நேரத்தில் காலச்சுவடானது பெரும்பான்மை வகுப்புவாதத்தை எதிர்த்து ஆணித்தரமாகப் போராடியது. இதனால் காலச்சுவடு பல பிரச்ச

உள்ளடக்கம்