தலையங்கம்
 

நாட்டின் அரசியல், பண்பாடு, வளர்ச்சி போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் குழப்பவாதிகள் ஒரு சீரான நிலையில் இயங்கிக்கொண்டு வருகிறார்கள். அரசு நிர்வாக முறைகளிலும் விழிப்புணர்வு மங்கிவருகின்றது; கடந்த சில வாரங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற சம்பவங்களைப் பெரிய பட்டியலாகத் தயாரிக்க முடியும். - 2013 டிசம்பர் மாதம் புதுடெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மகேஷ்சிங்கின் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் · முகேஷ்சிங்கின் பேட்டி அடங்கியுள்ள ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்திற்கு இந்திய அரசு விதித்துள்ள தடை · மகாராஷ்டிரா, ஹரியானா அரசுகள் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடைக

கண்ணோட்டம்
கண்ணன்  

எழுத்தாளர் புலியூர் முருகேசன் பிப்ரவரி 25, 2015இல் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள், கொங்கு வெள்ளாளர் சமூகத்தை அவர் புண்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்கள். ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற முருகேசனின் சிறுகதைத் தொகுப்பில் ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்’ என்ற மூன்றாம் பாலினம் பற்றிய சிறுகதையே பிரச்சனையின் மையம். கரூரில் இக்கதைக்கு எதிராகப் போராடியவர்கள் கரூர் திருச்சி ரோட்டில் மறியல் செய்தார்கள். நகரில் ஆங்காங்கே கல்வீச்சும் நடத்தப்பட்டதாகச் செய்தி. முருகேசனின் கூற்றுப்படி “நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்’ என்கிற தலைப்பில், ஒரு திருநங்கை எப்படி தொடர்ந்து பாலியல் சுரண்டல் வன்முறைகளுக்கு ஆளாகிறார் என்பதையு

கட்டுரை
லாவண்யா மனோகரன்  

பெருமாள்முருகனின் மாதொரு பாகன் நாவலை முன்வைத்து எழுந்த சர்ச்சையின் காரணமாக, அதனை இணையம் வழி மின்நூலாகப் படிக்க நேர்ந்தது துரதிர்ஷ்டம். பெருமாள்முருகன் மீது தமது சுயநலங்களுக்காக ஒரு தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை, சமூகத்தில் குழந்தையில்லாத தம்பதியினரில் பெண்ணை மலடி என்றும் ஆணைக் கையாலாகாதவன் என்றும் எள்ளி நகையாடும் வன்முறைக்குச் சற்றும் குறைந்தது அல்ல. ஒரு குறிப்பிட்ட சமூத்தினரை இந்த நாவல் இழிவு செய்கிறதென எடுத்துரைக்கப்படும் கூற்றை முற்றாக மறுக்க வேண்டியுள்ளது. அந்தப் பதினான்காம் நாள் திருவிழாவிற்குச் செல்லும் பொன்னா தனக்கான சாமியாக காளியையே தேடுகிறாள். அவள் சென்றுவிட்டாள் என்று தெரிந்த காளி கிட்டத்தட்ட இறந்து போகிறான். பொன்னாவையும் காளியையும் அப்படி முடிவெடுக்க வைத்தது அ

பதிவு
கண்ணன்  

புதுதில்லியில் பிப்ரவரி 17, 2015 அன்று SAHMAT அமைப்பினர் நடத்திய பெருமாள்முருகன் ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பிப்ரவரி 18 அன்று நடப்பதாக இருந்த சந்திப்பு அன்று ரோமிலா தாப்பர் அவர்களுக்கு வசதிப்படவில்லை என்பதாலும் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் ஆர்வம் தெரிவித்ததாலும் பிப்ரவரி 17க்கு மாற்றிவைக்கப்பட்டது. அன்று மதியம் நேஷனல் புக் டிரஸ்ட்டும் புனித ஸ்டீபென்ஸ் கல்லூரியும் இணைந்து நடத்திய மொழிபெயர்ப்பு பற்றிய கருத்தரங்கில் பதிப்பாளர் அமர்வில் பங்கெடுத்துவிட்டு அவசரமாகக் கிளம்பி சஹ்மத் போகும்படி ஆனது. ஒரு கூட்டத்திலிருந்து இன்னொரு கூட்டத்திற்கு பறக்கும் நட்சத்திரப் பதிப்பாளர் அல்ல நான், இன்று ஏதோ இப்படி ஆகிவிட்டது என்று அவையோரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சஹ்மத் போகும்போது மணி ஆறு. இந்த

சிறப்புப் பகுதி: திராவிட அரசியலின் நாகரிகம்
க. திருநாவுக்கரசு  

விடுதலை ஏட்டில், பிப்ரவரி 23ஆம் தேதி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி எழுதிய அறிக்கையின் சுருக்கத்தை தினமணி நாளிதழ் வெளியிட்டிருந்தது. நீண்ட அறிக்கையின் ஓரிடத்தில் அவர் குறிப்பிடுவது என்னவெனில் “திராவிட இயக்கத்தின் பிறப்பிற்குப்பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும்” என்கிறார். அரசியலில் உள்ளவர்கள் எல்லாம் நட்பாகப் பழகாமல், பகையுடன் பார்ப்பதை ஆசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். அந்த அறிக்கையை வெளியிடுவதற்குக் காரணமாக முலாயம் சிங் யாதவின் பேரனுக்கு, லாலு பிரசாத் யாதவின் மகளை மணம்முடித்த சம்பவம் அமைந்தது. அந்த மண விழாவிற்குப் பிரதமர் மோடி சென்றிருந்தார். வட இந்தியாவில் அரசியலில் உள்ளவர்களின் உறவுநிலை இப்படியிருக்க, தமிழகத்தில் இருக்கும் சூழல் தலைகீழாக இர

சிறப்புப் பகுதி: திராவிட அரசியலின் நாகரிகம்
வாஸந்தி  

‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாடியவர் தமிழ் மண்ணில் பிறந்த மகாகவி. ‘பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே’ என்றார். இப்போது புகை நடுவில் தீயும் கண்ணுக்குத் தெரிவதில்லை, பகை நடுவில் பரமனும் இருப்பதாக எவரும் நினைப்பதில்லை. முக்கியமாக இன்றையத் தமிழக அரசியல் உலகில் - பகைவர்களாகத் தாம் நினைக்கும் நபர்களை அழிக்க பகிரங்கமாக அந்தப் பரமன் சன்னிதிக்கே போய் அமர்ந்து துஷ்ட சம்ஹார ஹோமம் செய்யப்படுகிறது புராணங்களிலும் தொன்மங்களிலும் கேள்விபட்டதுபோல. அரசியல் நாகரிகமா? அது காணாமல் போய் இரு மாமாங்க காலத்துக்குமேல் ஆகிறது. அரசியல் கட்சிகளிடையே வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒரு பகைமை உணர்வு தமிழ்நாட்டில் வெளிப்படுவது மிக விநோதமான காட்சிதான். அதற்க

சிறப்புப் பகுதி: திராவிட அரசியலின் நாகரிகம்
ஆர். முத்துக்குமார்  

வடநாட்டு அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரையொருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்கவீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும், தயங்கும்நிலை அல்லவா இங்கு இருக்கிறது என்று வேதனைப்பட்டிருக்கிறார் கி.வீரமணி. முக்கியமாக, திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப்பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும் வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். திராவிட இயக்கம் பின்பற்றிவரும் “அரசியல் நாகரிகத்துக்கு” அதன் மூத்த தலைவர் வீரமணி கொடுத்துள்ள தெளிவான ஒப்புதல் வாக்குமூலம் இது என்று ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும் விமரிசகர்களும் சொல்கிறார்கள். ந

சிறப்புப் பகுதி: திராவிட அரசியலின் நாகரிகம்
மணி மணிவண்ணன்  

“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்ற எண்ணத்தை அரசியலுக்கும் கொண்டு வந்தது ஒரு திராவிட இயக்கம்தான். ஆனாலும், உலகெங்கும் ‘அரசியல் பண்பாடு’ என்ற கருத்தே ஒரு முரண்நகை. தேர்தல் அரசியலில் மட்டுமல்ல, பன்னாட்டு அரசியலிலும்கூட மாற்றுக்கருத்தைக் கொண்டவர்களையும் எதிராளிகளையும் மட்டம் தட்டுவதையும் அவமதிப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்திருக்கிறார்கள். வெறும் மூலைக்கடை எள்ளலையும் தரக்குறைவான வசையையும் அருவருப்பானவையாகப் பார்க்கிறார்கள் என்றாலும், மறக்கமுடியாத சொல் விளையாடல்களையும், நகைச்சுவையான எள்ளல்களையும் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். கரடுமுரடான அரசியலில் இதெல்லாம் இயல்புதான் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியினராகப் பார்க்கும் தன

சிறப்புப் பகுதி: திராவிட அரசியலின் நாகரிகம்
அஜிதா  

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணியின் கூற்று நீண்டகாலம் கடந்து கூறப்பட்டாலும் உண்மையானதுதான். அரசியல்ரீதியாக தெளிவான கருத்துவேறுபாடுகள் இருக்கக்கூடிய இயக்கங்களின் தலைவர்கள் அரசியல் கருத்துவேறுபாடுகளை உறுதியாகப் பற்றிக்கொண்டே நட்பு பாராட்டியும் வந்துள்ளார்கள் என்பதை வரலாறுமுழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் - ராஜாஜி நட்புறவின் மூலமாக அறிகிறோம். தேசிய விடுதலை இயக்கத்தில் அதேபோல, எதிரும்புதிருமான அரசியல் கருத்துமுரண்பாடுகள் நிலவிய சூழலில்கூட, காந்தியும் முகமது அலி ஜின்னாவும், காந்தியும் அம்பேத்கரும்கூட கடுமையான கருத்துமோதல்கள் இருப்பினும் பேசிக்கொள்ளும் அளவில், நேரில் பார்த்துக்கொள்ளும்போது நலம் விசாரித்துக் கொள்ளும்அளவில் நட்புறவு இருந்தது என்றே அறிகிறோம். அதேபோல,

சிறப்புப் பகுதி: திராவிட அரசியலின் நாகரிகம்
க. திருநாவுக்கரசு  

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் இந்த ‘ஒப்புதல் வாக்குமூலம்’ ஆச்சர்யத்தை அளிக்கிறது. மிகவும் மனம்நொந்து சொல்லியிருக்கிறார். அரசியல் நாகரிகம் என்பது நேரெதிர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுஇடங்களில் சந்தித்துக்கொண்டால் ஒருவருக்கொருவர் முறுவலிக்க, பேசிக்கொள்ளக் கூட முடியாது போவது மட்டுமல்ல. அத்தகைய குறுகியபொருளில் மட்டும் வீரமணி அதைச் சொல்லியிருக்க முடியாது. ஏனெனில் அத்தகையநிலை தமிழக அரசியலில் உருவானது 1970களுக்குப் பிறகே. ஆனால், இதற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பிராமணரல்லாதார் இயக்கமும் அதன் வழித்தோன்றலுமான திராவிடர் கழகமும் தமிழக அரசியலில் மிகவலுவாக இருந்துவந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்நிலை இல்லை. அண்ணாதுரையின் தலைமையில் திமுக இருந்தவரையிலும்கூட

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

1960களில் காங்கிரஸ் கட்சியின் ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வட இந்திய ஆதிக்கம் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்த திமுகவினரின் மேடைப் பேச்சுகளைக் கேட்டபோது, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு சிறப்பான ஆட்சியைத் தருவார்கள் என்று நம்பினேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்பது பிற்காலத்தில் புரிந்தது என்று அப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த ஒருவர் எழுதியிருந்ததைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்க நேர்ந்தபோது ஒரு ஐ.ஏ..எஸ். அதிகாரி எப்படி திமுகவினர் வெற்று வாய்ச்சவடால்களை நம்பியிருக்க முடியும் என்று ஆச்சர்யப்பட்டேன். இருண்ட இந்திய அரசியல் வானில் ஒரு சிறிய ஒளிக்கீற்றாகத் தோன்றிய ஆம் ஆத்மி கட்சியினர் (ஆஆக) சமீபகாலமாகத் தந்துவரும் ஏமாற்றங்களைப் பார்க்கிறபோது அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி திமுகவின

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

செவ்விந்தியர்களின் நிலங்களை 1800களில் அமெரிக்க அரசு விலைக்கு வாங்க எத்தனித்தபோது, சுகுவாமிஷ் இந்தியர்களின் தலைவரான சியாட்டில் எழுதியதாக ஒரு கடிதம் நீண்டகாலமாக பொதுத்தளத்தில் உலா வருகிறது. அதில் ஒருசில பகுதிகள் நிலம் கையகப்படுத்துதல் சட்ட விவாதத்தைப் புரிந்துகொள்ள மிகவும் உதவும். சியாட்டில் சொல்கிறார்: “வாஷிங்டனிலிருக்கும் அதிபர் எங்கள் நிலங்களை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார். ஆனால் எப்படி உங்களால் வானத்தையும் நிலத்தையும் வாங்கவோ விற்கவோ முடியும்? இந்தக் கருத்தே எங்களுக்கு விநோதமாக இருக்கிறது. காற்றின் சுகந்தத்தையும் நீரின் மினுக்கத்தையும் நாம் சொந்தமாக்க முடியாதபோது, இவற்றை எப்படி வாங்க முடியும்?” “இந்தப் பூமியின் ஒவ்வோர் அங்கமும் என் மக்களுக்குப் புன

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

கடுமையாகத் தாக்கப்பட்டுக் கால் ஒடிந்த நிலையிலும் தன் பேச்சைக் கேட்காத தமிழ்ச் செல்வியை இரவு இரண்டு சக்கர வாகனத்தில் அமரவைத்துக் கொண்டு எரின் காட்டுப்பகுதிக்கு சென்றார் அப்பா ரங்கராஜ். தமிழ்ச்செல்வியை கொன்று விடுவதென்ற முடிவோடு ஏற்கனவே வரவழைக்கப்பட்டிருந்த உறவினர்கள் சிலரும் அங்கு காத்திருந்தனர். உடனே மரத்தில் கட்டிப்போட தமிழ்ச்செல்விக்கு நடக்கப்போவது புரிந்து விடுகிறது. எரிப்பதற்காக விறகுக்கட்டைகள் அடுக்கப்படுகின்றன. தான் கெஞ்சுவதாலோ சத்தம் போட்டு பிறரை அழைப்பதாலோ விட்டுவிட மாட்டார்கள் என்பது தெரிகிறது. தன் கண்ணெதிரிலேயே தனக்கான மரணம் நெருங்கிக் கொண்டிருக்கும் அசாதாரண தருணத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர தமிழ்ச்செல்விக்கு வேறு வழியில்லை. அத்தருணத்தில் தந்தையிடம் “என்னை எரிக்கப் போக

பதிவு
 

கன்னியாகுமரியில் 25.12.2015 அன்று நடைபெற்ற ‘எங்கள் பார்வையில் காலச்சுவடு’ கலந்துரையாடலில் எழுதிச் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துகள்: கே.எஸ். முகம்மத் ஷூஐப், காயல்பட்டினம்: · அமரர் சுந்தர ராமசாமியின் ஆசிரியத்துவத்தில் முதலில் வெளிவந்த காலச்சுவடின் எட்டு இதழ்கள் எனக்கு கருப்பா சிவப்பா என்று தெரியாது. ஆனால் அன்னாரின் பொறுப்பில் 1991ஆம் ஆண்டில் வெளிவந்த காலச்சுவடு சிறப்பிதழ் முதல், இதோ இப்போதைய 180வது இதழ்வரை சில இதழ்கள் தவிர பிற எல்லா இதழ்களையும் வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழகத்தின் சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றை ஒருவர் அறிய விரும்பினால் கடந்த கால காலச்சுவடு இதழ்களைப் புரட்டினாலே போதும். தமிழகம், இந்தியா, உலகம் இம்மூன்றையும் சரிவிகித அளவில் பிரதிநிதித்

பதிவு
சாமிநாதன் நூல் அறிமுக விழா  

சென்னை மாநிலக் கல்லூரியில் 25.2.2015 புதன் அன்று ப. சரவணன் பதிப்பித்த ‘சாமிநாதம் - உ.வே.சா. முன்னுரைகள்’ நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பேரா. ஆ. இரா. வேங்கடாசலபதி தலைமையேற்க, ‘இலக்கிய வீதி’ இனியன் வரவேற்புரை வழங்கினார். முனைவர் த. பிரம்மானந்தப் பெருமாள் முன்னிலை வகிக்க முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி, பேரா. பா. ரா. சுப்பிரமணியன் ஆகியோர் உ.வே.சா.வின் பணிகள் பற்றியும் ப. சரவணனின் பதிப்புப் பணிகள் பற்றியும் கருத்துரை ஆற்றினர். ‘சாமிநாதம்’ நூலின் பதிப்பாசிரியர் ப. சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் உரையாற்றிய பக்தி இலக்கிய ஆய்வாளர் ஐ.கே.எஸ். சுப்பிரமணியம்: “முன்னோடிப் பதிப்பாசிரியரான ஆறுமுக நாவலர், உ.வே.சா., சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரைப

 

1- காப்பி அருந்துவதும் ஒரு கலை என்று சொன்னவன் யாரென சொல்லத் தேவையில்லை, மாபெரும் தத்துவஞானியாக இருக்கிறானே, அவன்தான் அவனைப் பொறுத்தவரையில், காப்பி அருந்துவது உடலுறவுபோன்றதாகும் சூடாக இருக்கவேண்டும், ஆயினும் தொண்டையைச் சுட்டுவிடக்கூடாது இனிப்பாய் இருக்கவேண்டும், ஆயினும் அளவு அதிகமாகிவிடக்கூடாது அளவோடு இருக்கவேண்டும், ஆயினும் போதவில்லை என்றும் தோன்றிவிடக்கூடாது காப்பிக் கோப்பையை உதட்டருகில் வைக்கும்போது அது நினைவிலெழுந்து மெய்சிலிர்த்தது அவனைப் பொறுத்தவரையில் உடலுறவு என்பது ஒரு கலை உடலுறவு என்பது காப்பி அருந்துவதைப் போல சூடாக இருக்கவேண்டும், ஆயினும் தொண்டையைச் சுட்டுவிடக்கூடாது இனிப்பாய் இருக்கவேண்டும், ஆயினும் அளவுக்கதிகமாக போய்விடக்கூடாது அளவோடு இருக்கவேண்டும், ஆயினும் போதவில்லை என

கதை
 

அவமானத்தின் அஸ்தமன நிழலாய், தலைமுறைகளைத் தாண்டி நீளவிருக்கும் அந்தச் சம்பவத்தை அன்று நடத்திவைக்கவே அந்தப் பாடல்பெற்ற கோவில் இருந்த சிற்றூரை நோக்கி அவனை விதி தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந் தது என்பதை அந்த நாடோடிக் குருட்டு ஓவியன் அறிந்திருக்க இருந்த அற்ப சொற்ப வாய்ப்புகூட அந்த ஊர் மக்களுக்கு இருக்கவில்லை. திரித்து முறுக்கேறியிருந்தாலும் பிரிபிரியென கரடுமுரடாய் இருக்கும் திருஷ்டிக் கயிறு போல இருந்தான் அவன். அவனைப் போலவே தண்ணீரைப் பார்த்தறியாது வலதுதோளில் நீளமாய்த் தொங்கிக்கொண்டு இருந்தது துணிப்பை. அதில் இருந்த அலுமினியத்தட்டும் நசுங்கிய குவளையும் சில கரித்துண்டுகளுமே அவனது உடைமைகளாக இருந்தன. அநாமத்தாய் வளர்ந்த தாடியும் விழிகளற்ற குழிகளுமாகச் சேர்ந்து அவன் வயதைக் கூட்டிக்காட்டின. கூடவே,

அஞ்சலி: கி.பி. அரவிந்தன் (1953 & 2015)
தேவகாந்தன்  

தொடர்ந்தேர்ச்சியான சில முக்கிய ஆளுமைகளின் மரணங்களைக் கடந்த சில காலமாக இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்துவருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 08, 2015இல் நிகழ்ந்த கி.பி. அரவிந்தனின் மரணமும் இதன் முக்கியமானதொரு இழப்பாகக் கருதப்பட முடியும். இழப்புகள் ஏற்படுத்தும் கனிவுகளில் இறந்தவர்களின் தகைமைகள் ஒளிவட்டங்களாய்க் கீறப்படும் சூழலில், கி.பி.அரவிந்தனின் மறைவு நியாயமான அதிர்வுகளைக்கூட இலங்கைத் தமிழ்ச் சமூகத்திடையே ஏற்படுத்தவில்லையென்பது ஆச்சரியமான விசயமல்ல. 1970களில் தொடங்கி 2009இல் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற இலங்கையின் இனப் போராட்டம்பற்றி கி.பி. அரவிந்தனின் அவதானங்களில் வெளிப்பட்ட கருத்துகள் அச்சமூகத்தில் பரவசங்களை உருவாக்கக்கூடியவையாய் இருக்கவில்லையென்பது இதன் காரணமாய் இருக

அஞ்சலி: வினோத் மேத்தா (1941 &2015)
சுகத ராஜு  

சரியாகச் சொல்வதென்றால் வினோத் மேத்தா ஒரு நாட்குறிப்பாளர். சுருக்கமான, விவரணங்களும் கிசுகிசுக்களுமுடைய சிக்கனமான ஆனால் ஆற்றலுடைய பாணி அவரது எழுத்தினது மட்டுமல்ல, அவரது சிந்தனை முறையே அப்படித்தான் அமைந்திருந்தது. அப்படித்தான் அவர் இந்த உலகத்தை அது வெளிப்படுத்திய அறிவைப் புரிந்துகொண்டார். அலங்காரமற்ற எழுத்தை, புனிதங்களைத் தகர்க்காத எழுத்தை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. மூளைபெருத்த அறிவுசார் உலகம் ‘கண்ணோட்டம்’ என்று பெரிதாய் அழைத்தவற்றை அவர் நிராகரித்தார். ஆனால் பன்னோக்குடைய வண்ணமயமான எழுத்தை நிச்சயம் விரும்பினார். கடைசி பதிற்றாண்டில் வினோத்தின் விருப்பமான சொற்றொடர் எதுவென தேர்ந்தெடுக்க வேண்டுமானால் ‘கருத்தியல் நபும்சகர்’ என்பதை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கலாம். &lsqu

மார்க்கேஸ் நினைவு - கதை
 

அழகாக ஒல்லியாக இருந்த அவள், மென்மையான அப்பத்தின் நிறமுள்ள சருமமும், பச்சை வாதுமை போன்ற கண்களும், தோள் வரை நீண்டிருந்த நேரான கறுத்த கூந்தலும் கொண்டிருந்தாள். ஆண்டியன் எனக்கூடிய அளவு இந்தோனேசியன் பண்டைய வம்சத்தின் ஒளியோடிருந்தாள். ஒரு லின்க்ஸ் ஜாக்கெட், பச்சை பட்டில் நுண்ணிய மலர்கள் நெய்யப்பட்ட ஒரு மேல்சட்டை, இயற்கை லினன் கால்சராய்கள், போகன்வில்லா நிறத்தில் நேர்க்கோடுகள் போடப்பட்ட காலணிகள் என தேர்ந்த ரசனையுடன் உடையணிந்திருந்தாள். நியூயார்க் செல்லும் விமானத்துக்காக பாரிஸின் சார்ல்ஸ் தெ கால் விமான நிலையத்தின் அனுமதிச் சாவடி வரிசையில் நின்றுகொண்டிருக்கையில், ஒரு பெண்சிங்கத்திற்குரிய பதுங்கும் நடையுடன் அவள் என்னைக் கடந்துபோனபோது நினைத்துக் கொண்டேன் “நான் இதுவரை பார்த்தவர்களிலேயே மிக

மார்க்கேஸ் நினைவு - கட்டுரை
என்னெஸ்  

காபோ, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டிருந்தார்; இறந்தபின்னும் இருந்து கொண்டேயிருக்கிறார். இருந்தபோதைவிடவும் இறந்தபின்னர் மிக அதிகமாகச் செய்திகளில் விவாதிக்கப்படுகிறார். ஆளுமையாக அவரது இயல்புகள் பேசப்படுகின்றன. படைப்பாளியாக அவரது எழுத்துகள் வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. அவர் பெயரில் இருக்கும் இணையதளத்தில் காபோ தொடர்பாக ஏதாவது புதுத்தகவல் வாரத்துக்கு ஒருமுறையாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகள் பற்றிய சொல்லப்படாத செய்திகள், அவரது செயல்களைப் பற்றிய விவரங்கள் என்று கண்டுபிடிப்பின் சுவாரசியத்துடன் ஏதாவது ஒன்று பகிர்ந்துகொள்ளப்படுகிறது. லத்தீன் அமெரிக்க இதழ்களிலும் அவற்றின் இணையப் பதிப்புகளிலும் காபோ முன்னர் சொன்ன கருத்துகள் இன்

கட்டுரை
ச. அனந்த சுப்பிரமணியன்  

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாகக் கிடைக்கும் சமணத் தடயங்களால் தமிழகத்தின் பிற பகுதிகள் போன்று இங்கும் சமணம் மிகப் பொலிவுடன் விளங்கியது தெளிவுபடுகிறது. குறிப்பாகத் திருக்கோட்டாற்று நாகராஜாகோயில், திருச்சாரணத்துமலை (சிதரால்), குரத்தியறை, திருநந்திக்கரை குடைவரைக் கோவில், சிவகிரி (ஆழ்வார் கோவில்), குறண்டி, பள்ளிக்கல், பள்ளியாடி, பூதப்பாண்டி, துவரங்காடு, திற்பரப்பு, மருந்துவாழ்மலை, மலையடி, தேவேந்திரன் பொத்தை, வௌவால்குகை, வேளிமலை, பார்த்தவசேகரபுரம் கோட்டவிளை ஊர், கோட்டாறு, புத்தேரி, முப்பந்தல் ஆகிய ஊர்கள் மற்றும் கோயில்கள் பற்றிய செய்திகள் பல சமணத்துடன் இணைகின்றன. இந்திரன் சமணத்தில் மதிப்புக்குரியவன், தேவர்களின் அரசன். இந்திரன் வாய்க்கால், மகேந்திரகிரி, சுசி -இந்திரம் (சுசிந்திரம்),

பத்தி: காற்றின் கலை
பி. ரவிகுமார்  

எந்தத் தாலாட்டுப் பாடலைக் கேட்டாலும் நான், இறந்து போய்விட்ட என் முத்தச்சியை நினைத்துக் கொள்கிறேன். எல்லா முத்தச்சிகளும் கதை சொல்லுபவர்கள்தாம். ஆனால் என் முத்தச்சி எனக்கு ஒரு கதைகூடச் சொன்னதில்லை. நெற்றியில் முத்தமிட்டோ, கட்டியணைத்தோ, பக்கத்தில் கிடத்தி உறங்கவைத்தோ அன்பைப் பரிமாறியதில்லை. இப்படியெல்லாமிருந்தாலும் குழந்தைகளாக இருந்தபோது எங்களையெல்லாம் முத்தச்சி தாலாட்டுப் பாடித் தூங்கவைப்பதைக் கேட்டிருக்கிறேன். முத்தச்சி, சின்னம்மாவின் வீட்டில்தான் இருந்தார். என் அம்மா முத்தச்சியின் மூத்த மகள். எனது மூத்த சகோதரிகளின் பிரசவ காலங்களில்தான் பொதுவாக முத்தச்சி எங்கள் வீட்டுக்கு வருவார். நாங்கள் வீட்டில் பேசுவது தமிழில். எனவே முத்தச்சியை நாங்கள் பாட்டி என்றுதான் அழைப்போம். அடர்ந்த நிறமுள

அறிமுகம்
மு. நித்தியானந்தன்  

கதை தயாரிக்கும் அவசரமோ, எழுதியதை உடனடியாக அச்சுவாகனத்தில் ஏற்றிப்பார்க்கும் அந்தரமோ, வெளிவந்த கையோடு அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடும் நிர்ப்பந்தமோ, அடிக்கடி எழுதி வாசகர் மனதில் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ளும் அக்கறையோ இல்லாத எழுத்தாளர், ஸ்ரீதரன். நாவலாக எழுத ஆரம்பித்து, பின் நீண்ட கதையாகப் பிய்த்துக்கொண்டு வந்திருக்கும் ‘கமலம்’ எழுதிமுடிக்கப்பட்டு, பிரசுர உலகத்தையே காணாமல் ஆண்டுகள் உறங்கிக்கிடந்து, இந்தத் தொகுப்பிலேதான் அது பிரசுரம் பெறுகிறது. ஸ்ரீதரன் இலங்கையில் இருந்தபோது எழுதிய எட்டுக் கதைகளும், 1977இல் சிறிது காலம் டெல்லியிலிருந்தபோது எழுதி, பின் கணையாழி இதழில் வெளியான ‘நிர்வாணம்‘ எனும் நெடுங்கதையும், புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கு

உள்ளடக்கம்