தலையங்கம்
 

தமிழ் இலக்கியத்தினை ஒவ்வொரு கட்டமாக முன்னெடுத்து வந்த பல ஆளுமைகளில் ஜெயகாந்தனும் ஒருவர். புதுமைப்பித்தனை அடியொற்றி வந்ததைப்போல் தோன்றினாலும் தனக்கான பாணியை அவர் உடனே வடிவமைத்துக் கொண்டார். கம்யூனிஸ முகாமிலிருந்து வந்தது அவருக்கு யானை பலத்தை அளித்தது. தமிழ் வாழ்வின் ஒவ்வொரு மூடுண்ட பக்கத்தையும், அவர் பேனா எடுத்துவரவும் அது உதவியது. அதனால் குறுகிய காலத்தில் அநேகக் கருத்து முரண்பாடுகளும் மோதல்களும் அவரின் படைப்புகளின் வழியே நிகழ்ந்தன; என்றபோதும் அவரின் ஆளுமை சீர்குலையவில்லை; தன் ஆளுமையைத் தானே காத்துக்கொண்டார் என்றும் சொல்வதற்கில்லை. அவர் படைப்புகளே அவரின் அரண்களாக இருந்தன. ஆனந்த விகடனில் அவர் பிரவேசம் செய்தது அவரின் எழுத்துக்குத் தங்குதடையில்லாத களத்தை அமைத்துக்கொடுத்ததுடன் தமிழ் இலக்

தலையங்கம்
 

தமிழகத்தின் அரசியல் பண்பாடு மாறிவருகிறது. கடந்த இருபதாண்டுகளாக சாதீய அரசியலை முன்னெடுத்து வரும் தமிழகம் மீண்டும் சாதீயக் கொலைக் களமாகி வருவதை அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் கவனித்து வருகிறார்கள். குறிப் பாகச் சொல்வதெனில் தென்மாவட்டங்கள் சாதீயத்தின் பிடிக்குள் சிக்கியிருப்பது வெளிப் படையானது. சட்டமன்ற விவாதங்களின்போது தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதாக முதல்வர் முதற்கொண்டு அமைச்சர்கள் ஈறாகப் பதிலளித்து வருகிறார்கள். அதற்கு நேர்மாறாகப் பட்டப் பகலில் திரளான மக்களின் மத்தியில் அதிகமான கொலைகள் நடந்துவந்துள்ளன. பல்வேறு கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் அக்கொலைகளை நடத்தியவர்களின் அடையாளங்களும் தெரிய வந்துள்ளன. சான்றுகளும் சாட்சிகளும் பலமாக இருந்தும் கொலையாளிகள் சிக்குவதில்லை.

 

ஏப்ரல் இதழில் வெளியான ‘இரண்டு தலைகளுடன் ஒரு பயணம்’ எனும் தலையங்கம் கண்டேன். பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் ஒன்று, உரிமைகளை இழந்த அடிமைகள்போல் வாழ வேண்டும்; அல்லது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற கேவலமான நிலைதான் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆளாளுக்கு விதவிதமான, நகைப்புக்குரிய விளக்கங்களை அள்ளிவீசிவருகிறார்கள். இவ்வாறு, அரசியல் சாசன விதிகள், அறிவியல் தீர்மானங்கள், சமயக் கருத்துகள் என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து, ஊடக பலத்தைவைத்து நாட்டாண்மைத்தனம் செய்வதைத் தாங்க முடியவில்லை. மற்றொரு பக்கம், ஆலயங்கள்மீது தாக்குதல், சிறுபான்மையினர்மீது திட்டமிட்டு ஏவப்படும் கலவரம், கலவரங்களைத் தூண்டும் விதமான நாகரிகமற்ற அமிலப் பேச்சுகள், சாதி-

கட்டுரை
 

கார்ல் மார்க்ஸின் அதிகமாகப் பயன் படுத்தப்பட்ட (துஷ்பிரயோகமும் செய்யப்பட்ட) மேற்கோள்களில் ஒன்று ‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாவது ப்ரு மெய்ர்’ என்ற அவரது முக்கியமான கட்டுரையில் வரும் வரி “உலகின் மகத்தான வரலாற்று உண்மைகளும் ஆளுமைகளும் இரண்டுமுறை தோன்றுவதாக ஹெகல் எங்கோ குறிப்பிடுகிறார். அவர் சொல்ல மறந்தது: முதல்முறை துயரமாகவும், மறு முறை கேலிக்கூத்தாகவும்”. கிழவர் இன்று வரை இருந்திருந்தார் என்றால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆஆகவை இந்தப் பார்வைக்கான எடுத்துக்காட்டுகளின் பட்டியலில் சேர்த்திருப்பார். அரசிடம் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்பேற்பையும் வலியுறுத்தும் முதல் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜேபி இயக்கம். அது கொடுமையான அவசரநிலைக் கால கட்டத்தைச் சமாளித்து சர்வாதிகார இந்த

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடல் கரையோரத்திலுள்ள குளச்சல் எனும் ஊரில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் நீண்டநாள் விருப்பம். ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த அனைத்து வேட்பாளர்களும் இந்த வாக்குறுதியைத் தவறாது கொடுப்பார்கள், தவறாது மறப்பார்கள். வேடிக்கை என்னவென்றால், மக்கள் மீன்பிடித் துறைமுகக் கனவிலிருந்தனர்; அரசியல்வாதிகள் வர்த்தகத் துறைமுகக் கண்ணாமூச்சி காட்டினர். ஆளாளுக்கு எதையெதையோ பேசிக் கொண்டிருந்தாலும், எதுவும் நடக்கவில்லை. “மீன்பிடித் துறைமுகம் கட்டுங்கள், மீன் பதனிடும் நிலையம் கட்டுங்கள், எங்கள் மீனுக்கு அதிக விலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்பதுதான் மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நமது அதிகார வர்க்கம் க

கட்டுரை
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்  

ஒரு கட்சியை, கொள்கையை வளர்க்கப் பல வழிகள் உள்ளன. கொள்கைகளைச் சொல்லி அதனால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி மக்களைத் தம்பக்கம் ஈர்ப்பது ஒரு வழி. இந்த வழிமுறைக்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும். மற்றொரு வழி மிக எளிய வழி! ஒரு பொது எதிரியை அடையாளம் காட்டி வெறுப்புப் பிரச்சாரம் செய்து மக்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கவைத்து அணி திரட்டுவதுதான் அந்த எளிய வழி! ஐரோப்பாவில் நீண்ட காலமாக யூதர்களை எதிரிகளாகக் காட்டி அரசியல் நடத்தினர். அதன் உச்சக் கட்டமே ஹிட்லரின் யூத விரோதப் போக்கும் படுகொலைகளும். பின்னர் கம்யூனிசத்தைப் பொது எதிரியாகச் சித்திரித்து மக்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஊட்டி அரசியல் நடத்தினர். இப்போது இஸ்லாத்தைப் பொது எதிரியாகச் சித்திரிக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது நாட்

கட்டுரை
வா. மணிகண்டன்  

சமீபமாக இணையத்தில் ஒரு விவகாரம் சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறது. இணைய சமத்துவம். Net neutrality என்கிற இந்தச் சொல் உருவாக்கப்பட்டு தசாப்தம் கடந்தாகிவிட்டது. நமக்குத்தான் இதுவரைக்கும் அதைப்பற்றிப் பேச பெரிய அவசியம் உருவாகியிருக்கவில்லை. இப்பொழுது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மிகப்பெரிய காரண மிருக்கிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட அலைபேசிப் பெருந்தலைகள் சில தில்லாலங்கடி முஸ்தீபுகளில் இறங்கியிருக் கின்றன; இத்திட்டத்தின்படி இவற்றின் வாடிக்கையாளர்கள் சில இணையதளங்களை மட்டும் தங்களது அலைபேசி வழியாக இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற தளங்கள் அல்லது செயலிகளைப்(கிறிறி) பெற வேண்டுமானால் தனியாகக் காசு கட்ட வேண்டும். எதற்காக இப்படியொரு பாரபட்சத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்ப

அஞ்சலி (ஜெயகாந்தன் 1934 - 2015)
அசோகமித்திரன்  

நான் ஒருமுறை புகையிலை பயன்படுத்துவோர் பற்றிக் கணக்கெடுப்பொன்றை எடுக்க வேண்டியிருந்தது. (இதை வைத்து ஒருவர் என்னை எழுத்து மூலமாகக் கேலி செய்தார்.) நான் சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் ஒவ்வொரு வீடாகச் சென்று தகவல் எழுதி வந்தபோது ஒரு வீட்டில் ஜெயகாந்தன் இருந்தார்! அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார். நாங்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஒரு காரணமாகத்தான் தன் வெளிப் பிம்பத்தைக் கடுமையான சொரூபியாக வைத்துக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் மிகவும் சகஜமாக இருக்கக் கூடியவர். ஜெயகாந்தனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு கல்பனா என்ற மாத இதழ் 1966-67ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு இரு மாதங்களுக்குள் என்னை ஒரு சிறு நாவல் எழுதக் கேட்ட ஆர். கே. கண்ணன், ஜெயகாந்தனின் ஒரு குரு என

அஞ்சலி (ஜெயகாந்தன் 1934 - 2015)
தேவிபாரதி  

பதின்பருவ தொடக்க ஆண்டுகளில் ஜெயகாந்தனின் எழுத்துகள் எனக்குப் பரிச்சயமாயின. அப்போது நான் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியராக இருந்த என் தந்தையின் வற்புறுத்தலை ஏற்று அநேகமாக நாள்தோறும் நூலகம் செல்ல வேண்டியிருந்தது. பள்ளிநேரம் முடிவுற்றதும், தான் பணிபுரிந்துகொண்டிருந்த தொடக்கப்பள்ளியிலிருந்து நேராக நான் பயின்ற உயர்நிலைப்பள்ளிக்கு வந்து கையோடு அழைத்துக்கொண்டு போவார். நூலகத்தில் அவரது கண்பார்வையில் உட்கார்ந்தபடி வாசிக்க வேண்டும். நினைத்த படியெல்லாம் வாசிக்க முடியாது. நான் வாசிக்க வேண்டிய பருவ இதழ்களையும் புத்தகங்களையும் அவரேதான் தேர்வுசெய்து தருவார். கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, சோவியத் நாடு என அவர் தேர்வு செய்து தரும் இதழ்களை விரித்து வைத்துக்கொண்ட

அஞ்சலி (ஜெயகாந்தன் 1934 - 2015)
ஜி. குப்புசாமி  

கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள் கதையைச் சொல்லுகிறேன் ஜெயகாந்தனின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகள் பலவற்றில் இலக்கிய பெருமரம் வீழ்ந்துவிட்டதென்றும் தமிழ்இலக்கிய வானில் இருள் சூழ்ந்துவிட்டதென்றும் எழுதப்பட்ட உணர்ச்சி மேலிட்ட வரிகளை ‘incurable optimist’ என்று தன்னை வர்ணித்துக் கொண்டிருந்த ஜெயகாந்தன் மேலுலகில் படிக்க நேர்ந்தால் எப்படியெல்லாம் கோபப்பட்டிருப்பார் என்று கற்பனை செய்து பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. ஜெயகாந்தன் ஒரு நிரந்தர வெளிச்ச விரும்பி. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் இந்தியாவில் நிலவிவந்த நிச்சயமற்ற எதிர்காலக் கனவுகளுக்கும் விரக்திக்கும் கொந்தளிப்புகளுக்கும் அவநம்பிக்கைகளுக்கும் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சாளரமாக இருந்ததைப்போல சு

அஞ்சலி (ஜெயகாந்தன் 1934 - 2015)
கண்ணன்  

ஜெயகாந்தனின் முக்கியத்துவத்தை மதிப்பிடுகையில் அவர் படைப்பு, புகழ், கம்பீரம், அரசியல், பேரன்பு, உரையாற்றும் திறன் எனப் பல பரிணாமங்கள் பேசப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தாலும் ஜெயகாந்தனின் ஆளுமையின் தாக்கத்திற்கு அவை ஈடாவதில்லை. இவற்றோடு மக்களின் அறிஞர், திரைப்பட இயக்குநர் என்று சேர்த்துக்கொண்டாலும் பெரிய இடைவெளி எஞ்சுகிறது. இன்னும் உரிய கவனம்பெறாத அவர் பங்களிப்பு என்ன? கருத்துச் சுதந்திரம் என்பது தமிழர்களுக்கு உவப்பானது அல்ல. கருத்துச் சுதந்திரம்பற்றி ஒரு தமிழன் பேசுகையில் தன் கருத்தைச் சொல்லும் சுதந்திரம், அதிகாரம் மிக்கோர் தமது கருத்தைச் சொல்லும் சுதந்திரம், தனக்கு உவப்பான கருத்தைப் பிறர் சொல்லக் கேட்கும் சுதந்திரம், பெரும்பான்மையின் கருத்துக்கான சுதந்திரம் என

அஞ்சலி (ஜெயகாந்தன் 1934 - 2015)
அரவிந்தன் கண்ணையன்  

ஜெயகாந்தனின் படைப்புலகுக்குள் நான் நுழைந்த வாயில் ‘பாரீஸுக்குப் போ’. படைப்பாளியாக அவரின் பலம் மற்றும் பலவீனம் தெளிவாகத் தெரியும் படைப்பு அது. வெகுஜனப் பத்திரிகையில் தொடராக வெளிவந்ததால் அதற்கே உரித்தான திடுக் திருப்பங்கள், நேரிடையான பாத்திரப் படைப்பு, எளிமையான கதை சொல்லல், கொஞ்சம் அங்குமிங்குமாக அலைந்த கதை, ஒரு கிளைமாக்ஸ் என்று முடிந்துவிடும். ஆனால் செறிவான தத்துவ விசாரணைகள் ஊடும் பாவுமாய் அந்தக் கதைக்கு ஒரு ஜெயகாந்தன் முத்திரையைக் கொடுத்திருக்கும். ‘மோக முள்’ளில் ‘integral’ என்று சொல்ல முடியாத இசை, ‘பாரீஸுக்குப் போ’வில் பிரிக்கமுடியாமல் கதையோடு பின்னிப் பிணைந்து ஊடாடியிருக்கும். பாபு ஒரு சிறந்த மேஸ்திரியாகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு

தென்பாண்டியன்  

துயரகணம் மனம் கசந்த பொழுதுகளில் பெறப்படும் எவ்வித முத்தமும் தித்திப்பதில்லை. நிறமிழந்த துயரத்தை கோடுகளும் புள்ளிகளுமின்றி சித்திரமாக்குகையில் பிசாசுகள் கண் விழிக்கின்றன ஆலகாலம் தேங்கிய ஆழிப்பேராழத்தில் மூழ்கி கிடக்கையில் கிளிஞ்சலென கரையொதுக்கி போகிறது அப்பேரலை. சித்திரக்காரி மகள் நல்ல சித்திரக்காரி கோடுகளையும் வண்ணங்களையும் நுட்பமாக இணைத்து சித்திரம் வரைய கற்றுத்தேர்ந்திருக்கிறாள் அவள் பறவைகளை வரையும்போது அகண்ட வானத்தையும் அவை அமர்வதற்கேற்ற கனி மரங்களையும் வரைந்து விடுகிறாள் அவள் வரையும் ஆறுகளிலும் குளங்களிலும் நீர் வற்றுவதே இல்லை நீர்ப் பறவைகளை வரையும்போது நீருக்குள் மீன்களையும் வரைந்து நீந்த விடுகிறாள் நிலக்காட்சிகளை வரைய திட்டமிடும்போது பசும்புல்வெளிகளை தீட்டிய பின் கால்நடைகளை வரைந்

இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு
கீதா சுகுமாரன்  

கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில் அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி பிடி மண்ணுமற்றலையும் என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர் - சுஜந்தன் (அகதிமுகாம்) குருதியோடிய கூந்தலில் வீழ்ந்தொட்டின இலையான்கள் மண்ணுண்டு கிடந்தது கிழித்தெடுத்த முலைகள் கருகி யோனி குகை பிளந்து உளுத்திருந்தது எறும்படுக்க பார்த்தேன் - பா. அகிலன் எரிகணை பட்டுத் தெறிக்க, காயம்பட்ட இரண்டரைவயதுக் குழந்தையின் கைகளை மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன் இக்கணம் கடவுள் நீரற்ற விழிகளுடன் அலறும் தாய் ஒரு பிசாசு - சேரன் பிணக்குவியலில் தடுக்கி விழுந்தெழுந்து இறுகிய விழிகளை உன் பக்கம் திருப்புகிறேன் கழுத்திலிருந்து குருதி வழிய வருகிறாய் நீ நிமிர்ந்த உன் நெஞ்சு உனை அடையாளப்படுத்திய தெனக்க

இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு
அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்னாண்டோ  

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்கள் நினைவுகள் 2009 இற்குச் சென்றுவிடும். இலங்கையில் மக்களுக்காகக் குரல்கொடுத்த பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்; பலர் காணாமற் போகச் செய்யப்பட்டார்கள். மகிந்த இராஜபக்சவும் அவரது சகோதரர்களும் தமிழர்களை மட்டுமல்ல, அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள சிங்களவர்களையும் அழிப்பார்கள் என்று எழுதிய லசந்த விக்கிரமதுங்க 2009 சனவரி 8இல் கொல்லப்படுகிறார். விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த வன்னிப் பெருநிலத்தின்மீது மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இந்த நூற்றாண்டின் இரகசியக் கொலைக்களங்களை விட்டுச்சென்ற, மக்களுக்கெதிரான மிகவும் வெட்கக்கேடான யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதை வெளிப்படுத்தியவரும் லங்கா ஈ நியூஸ் இணையதளத்தில் பத்தி எழுத்தாளராகவும்

கதை
 

அம்பேத்கர் சர்க்கிளிலிருந்து வலதுபக்கமாகத் திரும்பி சிறிது தூரம் சென்றால் சாலை அதுவாகவே இடதுபக்கம் திரும்பும். அங்கேதான் ஷெர்கான் மசூதி இருப்பதாகக் காய்கறிக் கடைக்காரர் சொன்னார். சிறிது தூரம் சென்ற உடன் அங்கே ஒரு மசூதியும் அருகில் ஒரு தகரப்பலகையில் அதன் வரலாற்றுச் சிறப்பும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். மசூதியின் சுவரோடு ஒட்டிக் கட்டப்பட்டிருந்த வீட்டின் வெளியே ஒரு வெள்ளை நிறப் பூனையும் அதன் குட்டிகளும் விளையாடிக்கொண்டிருந்தன. பச்சை நிறத்திலான கதவு லேசாகத் திறந்திருந்தது. ஒரு முதியவர் வெளியே வந்தார். நான் தகரப்பலகையில் எழுதப்பட்டிருந்ததைப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த முதியவர் இது எழுதப்பட்டு இருபது வருடங்கள் ஆகின்றன என்று சொன்னார். நான் பஷீரை பார்க்க வந்திருப்பதாகச் சொன்

அஞ்சலி (குந்தர் க்ராஸ் (1927 - 2015)
சுகுமாரன்  

மிக அதிகம் பேசப்பட்ட குந்தர் க்ராஸின் ஆக்கம் அவரது தன் வரலாறுதான். மூன்று பாகங்களாக எழுதப்பட்ட சுய சரிதைத் தொகுப்பின் முதல் பாகமான ‘வெங்காயத்தை உரித்தல்’ ( Peeling the Onion) 2006ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு அடுத்த ஆண்டே வெளிவந்தது. க்ராஸின் புகழ்பெற்ற நாவலான ‘தகரப் பறை’ Tin Drumக்குப் பின்னர் இலக்கிய உலகில் பரவலாக விவாதிக்கப்பட்ட நூலாக அவரது வாழ்க்கை வரலாறு அமைந்தது. அறுபது ஆண்டுக் காலமாகத் தனக்குள் சுமந்திருந்த குற்ற ரகசியமொன்றைச் சுயசரிதையின் பக்கங்களில் பகிரங்கப்படுத்தியிருந்தார் க்ராஸ். ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களிலும் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார். தனது படைப்புகள் அனைத்திலும் உலகப் போர் மானுடச் சூழலில் நிகழ்த்திய பே

அறிமுகம்
ஆ.இரா. வேங்கடாசலபதி  

1988ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புது தில்லி நேரு நினைவு நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் சுதேசமித்திரன் நாளிதழின் நுண்படச் சுருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது 5 மே 1920ஆம் நாளிட்ட இதழின் முதல் பக்கத்தில் கண்ணுற்ற விளம்பரம் இது. துப்பறிதலின் புதுச்சுவை ததும்பிய அற்புதமான இனிய தமிழ் நாவல். தமிழ்நாட்டுக்கு வழிகாட்டிய முதல் முதல் பத்து வருஷங்களுக்கு முன் வெளியான துப்பறியும் நாவல் கதை இனிமையாயும், வாசகங்கள் அழகாயும், வார்த்தைகள் அர்த்தபுஷ்டியுள்ளன வாயுமிருக்கின்றன. தமிழ் மொழியிலே தற்காலக் கதைகளுக்குள்ளே சுவையிலும் சிறப்பிலும் மற்றெதற்கும் பின் வாங்காதது பரிமளாவே என்று ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதியவர்கள் தெரிவித்துள்ளார் விலை ரூ. 1. வி.பி.யில் ரூ. 1-2-0. வி.கி. நெல்லைய

அஞ்சலி (நாகூர் ஹனீஃபா (1925 - 2015)
நெய்தல் கிருஷ்ணன்  

அன்றிரவு எட்டு மணி. அந்த வீதிக்கு சூரியனைத் தன் வெண்கலக்குரலால் அழைத்தார். ‘ஓடி வருகிறான் உதய சூரியன்’ என்று இசைமுரசு ஒலிக்கத் தொடங்கியதுதான் தாமதம். கரகோஷம் ‘உதயசூரியனை’ மறைத்தது. என்போன்ற உடன்பிறப்புகளின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது; உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பாடல்களில் லயித்தோம். அதைவிடக் கழகம், உதயசூரியன், அண்ணா, கலைஞர் போன்ற எங்கள் உயிர்ச் சொற்கள் வரும்போது உற்சாகத்தில் திளைத்தோம். எங்களை அறியாமல் கைதட்டினோம். ‘தொல்லைகளுக்கிடையே முல்லைச் சிரிப்பு’ பாடலுக்கு மழை தூறத்தொடங்கியது. மீண்டும் நனைந்தோம். மழைத்தூறலில் கூட்டம் கலையவில்லை. உடன்பிறப்புகள் ஆடத்தொடங்கினர். உற்சாகத்தில் நாகூர் ஹனீபாவும் மழைத் தூறலைமீறி சில பாடல் களைப் பாடினார். சிறுவயதி

அஞ்சலி
ஜான்சுந்தர்  

விடியற்காலை ஆறரை மணிக்கெல்லாம் ஹாஜியார் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவீர்கள். குழந்தைகளைத் தூங்கவைப்பதொரு கலையென்றால், தூக்கத்திலிருந்து வலிக்காமல் பிரித்து எழவைப்பது வேறொரு வகை. விழி மூடிக்கிடக்கும் எங்கள் செவியுள்ளிறங்கி, திருமறையின் அருள்மொழியில் விளைந் திருப்பது என்ன? இறைத்தூதர் நபி பொன்மொழியில் குவிந்திருப்பது என்ன? அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கேட்க ராணியம்மாவோடு சேர்ந்து பதில் சொல்லும் முனைப்பில் நீரிருக்கும் தாமரைபோல் நெஞ்சம் மலர எழுவோம். படுக்கையிலிருந்து நகைமுகமாய் எழுந்துகொள்ள உங்களைப் போன்றவர்களின் வரவுதான் மிகச்சரியான வழியாக இருக்க முடியுமென்று பக்கத்துவீட்டு லத்தீப்பின் உம்மாவும் கோயமுத்தூர் வானொலி நிலையக்காரர்களும் சேர்ந்து முடிவு செய்த

பத்தி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்: 10
வே. வசந்தி தேவி  

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் நான் தலைமைப் பொறுப்பேற்றிருந்த மூன்று ஆண்டுகளின் (2002 - 2005) பிரச்சனைகளைப் பற்றியும், ‘பிரதாபங்களைப்’ பற்றியும் இதுவரை ஒன்பது பத்திகள் எழுதி இருக்கிறேன். இது பத்தாவது. பத்து என்பது முத்தாய்ப்பு வைக்கும் சம்பிரதாய எண். அதனால் இதை முடிக்கிறேனா? மூன்று ஆண்டுகாலம் குவிந்த அனுபவங்களில் இதற்குமேல் எழுத ஒன்றும் இல்லையா? நிறையவே இருக்கின்றன; ஒவ்வொரு ஆண்டும் கனமான ஆண்டறிக்கை உருவாக்கி அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அறிக்கையை அரசு மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று ஆணையத்தை உருவாக்கிய ஆணை சொல்கிறது. எந்த ஒரு ஆண்டும் சமர்ப்பிக்கப்படுவதில்லை. சம்பிரதாயத்திற்கேனும், விவாதத்திற்கு இடம் கொடுக்காமல்கூட சமர்ப்பிக்கப்படுவதில்லை. என் பணி

சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

இந்த வருடத்துடன் நான் ஐக்கிய இராச்சியத்துக்கு வந்து முப்பத்தைந்து ஆண்டுகளாகின்றன. 1980ஆம் ஆண்டு சித்திரை மாதம் 30ஆம் நாள் மிதமான குளிர்ச்சியான வசந்தகால மாலைப் பொழுதில் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (இந்தியத் தமிழில் முனைவர் பட்டம்) பார்மீங்கம் விமான நிலையத்தில் வந்திறங்கினேன். அன்றைய பார்மீங்கம் விமான நிலையக் கட்டிடத்தை அதிநவீன மாட்டுக்கொட்டகை என்றுதான் சொல்ல வேண்டும். பயணிகளுக்குத் தோழமையானது அல்ல. இன்றைய விமானநிலையம் அதே வளாகத்தில் இன்னுமொரு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. பழைய கட்டிடம் சர்வதேசச் சரக்குத் தரிப்பிடமாக மாறியிருக்கிறது. அன்றைய குடிநுழைவு அதிகாரிகள் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சீருடையணிந்து பயணிகளைப் பயமுறுத்தவில்லை. சாதாரண உடையில் தான் இருந்தார்கள். எல்லா

பத்தி: எதிர்க்காற்று
எம். தமிமுன் அன்சாரி  

செம்மரக் கொலைகள்! விலை மதிப்புள்ள செம்மரங்கள் விலை மதிப்பில்லாத 20 தமிழக உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றன. சட்டவிரோதத் தொழிலைத் தடுக்கிறோம் என்ற பெயரில் சட்டவிரோதமான போலி மோதலில் ஆந்திரக் காவல்துறையினரின் தோட்டாக்கள் 20 தமிழர்களைச் சடலமாக்கியுள்ளன. தமிழகத்தைத் தாண்டியும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு செம்மர மாஃபியா உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. சந்தன மரம், தேக்கு மரம்போன்ற விலை உயர்ந்த மரங்களைத்தான் கடத்துவார்கள் எனப் பலரும் அறிந்துள்ளோம். ஆனால் ‘செம்மரம்’ சர்வதேசச் சந்தையில் பெறும் முக்கியத்துவம் இப்போதுதான் அறியப்படுகிறது. தமிழகத்தை ஒட்டிய ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் உள்ள செம்மரங்கள் உலகப் புகழ் பெற்றவை என்றும் இப்போது நமக்கு தெரிகிறது.

கண்ணோட்டம்
களந்தை பீர்முகம்மது  

‘சிறகு முளைத்த பெண்’ ஸர்மிளா ஸெய்யிதின் கவிதைத் தொகுப்பு. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம், ஸர்மிளாவின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும்போதில் பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகளும் கவிதைக்குள் இருப்பதை வெளிப்படுத்தினார். ஸர்மிளா ஸெய்யித் இலங்கை மட்டக் களப்பில் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பொன்றை நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டவர். அவரை கவிஞராகவும் நாவலாசிரியராகவும் சூழல் ஆக்கிவைத்திருந்தது. இதன் அடிப்படையில் அவர் ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவும் உருவானார். இறுக்கமான இஸ்லாமியச் சமூகத்திலிருந்து பேனாவோடும் கவிதைகளோடும் ஒரு பெண் வெளிவருவதைச் சமூகம் அவ்வளவு சுமூகமாக ஏற்றுக்கொள்ளாது. நம் சல்மாவுக்கு நேர்ந்ததும் இது

உள்ளடக்கம்