தலையங்கம்
 

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டியதாகச் சொல்லி 20 தமிழக அப்பாவிகள் ஆந்திர மாநிலக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது இந்தியாவெங்கும் பரபரப்பை உருவாக்கியது. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணங்களாக ஆந்திர காவல்துறை முன்வைத்தவை நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தன. சம்பவம் நிகழ்ந்த இடம், காட்சிப்படுத்தப்பட்ட செம்மரங்களின் உயிர்ப்பற்ற தன்மை, கொல்லப்பட்டவர்களின் உடல்களில் காணப் பட்ட காயங்கள் மற்றும் குண்டு பாய்ந்ததற்கான தூரங்களின் அளவு மற்றும் செம்மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் அவர்கள் பயணத்தில் இருந்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தும்

 

மே 2015 இதழில் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் ‘விஷம் விதைக்கும் வெறுப்பு வணிகர்கள்’ கட்டுரை கண்டேன். நாடு முழுவதும் விஷம் விதைக்கும் முயற்சியில் இந்துத்துவத் தலைவர்களுக்குச் சமமாக முஸ்லிம் தலைவர்களும் ஈடுபடுகின்றனர் என்று கட்டுரையாளர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், இந்த முயற்சியில் இந்துத்துவத் தலைவர்களின் பங்கு முதல்வினையாகும், அதன் எதிர்வினையே முஸ்லிம் தலைவர்களின் செயல்பாடு என்பது உலகறிந்த உண்மை. முதல்வினை என்பது தவறு. எதிர்வினை என்பது உசிதமானதல்ல என்றாலும் அது தவறாகாது. அதனாலேயே காவல்துறையினர் செய்யும் மோதல், கொலை சட்டத்தின் பார்வையில் குற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. குஜராத் கலவரத்தின்போது அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, “ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண

அஞ்சலி: குவளைக்கண்ணன் (1964 -2015)
கண்ணன்  

விட்டேத்தியான மனோபாவம் கொண்டிருக் கையில்தான் ரவியை முதலில் சந்தித்தேன். 1992இல் தண்டபாணியைப் பார்க்கச் சென்னையில் அவன் அறைக்குச் செல்கையில் அறைத் தோழன் ரவி, மருத்துவப் பிரதிநிதி. அப்போது, அறியப்பட்ட கவிஞனாகவில்லை. ஆனால் குவளைக்கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. நகைச்சுவை யுணர்வு, குதர்க்கம் எல்லாம் தாராளமாக இருந்தன. உடன் எனக்குப் பிடித்துப்போனது. காலச்சுவடின் மறுபிறப்பு வெறும் திட்டமாக இருந்த காலகட்டம். வியாபார நிமித்தமாகச் சென்னை, சேலம் செல்கையில் ரவியைச் சந்திப்பது வழக்கமாயிற்று. பல சமயங்களில் நான் சென்றிறங்கியவுடன் ரயில் நிலையத்திலேயே சந்தித்து மீண்டும் ரயில் ஏறும்வரை ஒன்றாக இருந்ததும் உண்டு. கொள்முதலுக்குப் போகும்போதுகூட கூடவே இருப்பான். வியாபாரிகளுக்கு இது பு

கட்டுரை
தேவிபாரதி  

பதினெட்டாண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து பெங்களூரு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் போல் சர்ச்சைக்குள்ளான, அரசியல் பதற்றத்தை உருவாக்கிய நீதிமன்றத் தீர்ப்பு வேறொன்று இருக்க முடியாது. அப்படியொன்றைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால்1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவித்த ஜக்மோஹன்லால் சின்ஹாவின் தீர்ப்பைத்தான் சொல்ல முடியும். சுதந்திர இந்தியா வின் வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாக நிலைபெற்றுவிட்ட அவசரநிலைப் பிரகடனத்தைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை இட்டுச் சென்றது அந்தத் தீர்ப்பு தான். ஜெயலலிதாவுக்கும் அவ ரோடு இ

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

கூடங்குளம் அணுஉலை திட்டமிடப்பட்ட 1988-89 காலகட்டத்தில் நாகர்கோவில், கோட்டாறு பகுதியைச் சார்ந்த நண்பர்கள் சிலரும் நானும் “சமாதானகரமான இந்தியப் பெருங்கடலுக்கான குழு” (Group for Peaceful Indian Ocean) எனும் அமைப் பினை நடத்திக்கொண்டிருந்தோம். கூடங்குளம் அணுஉலை, மீன் உணவை நச்சாக்கும் என்றறிந்த நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு, “மீன் உணவை உண்ணாதீர்கள்” என்று ஒரு துண்டறிக்கை அச்சடித்து விநியோகிக்க முடிவெடுத்தோம். எனது நண்பனும் இயக்கத் தோழனுமாகிய அகமது கபீரின் பெரியப்பா அந்தக் கூட்டத்துக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இப்படி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும்வகையில் தலைப்பிடக்கூடாது என்று அவர் எங்களைத் தடுத்தார். அன்று தொடங்கிய இந்த மீன் உணவை இழக

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

1990களில் தமிழகத்தில் உருவான தலித் எழுச்சி, தலித்துகளின் அரசியல் உரிமைகளைக் கோரியது மட்டுமல்லாமல், சாதிபற்றி வழமையான நோக்கில் நம்பவைக்கப்பட்டு வந்த கருத்தியல்களையும் பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக இதுவரை சொல்லப்படாதிருந்த தலித்துகளின் கடந்தகாலப் போராட்ட மரபைத் தொகுத்தெடுக்கும் முயற்சியும் கால்கொண் டது. ஆனால் இந்தப் போராட்ட மரபை அங்கீகரிப் பதுகூட சாதிபற்றிய பழைய நம்பிக்கைகளை மாற்று வதாகிவிடும் என்பதால் தலித் அடையாளத்தை அங்கீகரிப்பது போன்று முயற்சிகள் நடந்தாலும் அவற்றைப் பிராமணரல்லாதோர் அரசியலின் அங்கமாக்கும் முயற்சி தொடர்ந்து பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் படி தலித் வரலாற்றியல் முன்வைக்கும் புதிய வாதங்களை முற்றிலுமாக மறைக

கட்டுரை
அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்ணான்டோ  

முள்ளிவாய்க்கால் இப்போதும் பத்திரிகை யாளருக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசம். ஊருக்குப் புதியவர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வீதியில் நடந்து சென்றால் அரைகுறைத் தமிழ் பேசும் சிவில் உடையணிந்த புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுவர். முகாமுக்கும் அழைத்துச் சென்றுவிடுவர். அவர்கள் அடையாள மற்றவர்களெனின் காணாமற் போய்விடுவர். கமராவுடன் தெருவில் நடமாட முடியாது. 2015 மே மாதம் முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம் முதலான பகுதிகளுக்குச் சென்றபோது பொதுமக்களுடன் உரையாடிப் பதிவு செய்தவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 மே மாதத்தை நினைவுகூர்ந்த மக்களின் கதைகளே இவை. பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் பெயரைக் குறிப்பிடாது கதை மட்டும் பகிரப்படுகிறது. இரட்

அஞ்சலி: கோபுலு (1924 - 2015)
சந்தோஷ் நாராயணன்  

“ஓவியன் எப்போதும் கண்ணையும் காதையும் மட்டுமே திறந்துவைக்க வேண்டும், வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும்”- கோபுலு. மாதவன், மாலி, மணியம் போன்ற தமிழ் வெகுஜனப் பத்திரிகை ஓவியர்களின் வரிசையில் கோபுலுவின் இடம் தனித்துவமானது. ஓவியர்கள் எப்போதும் தங்களுக்கென்று ஒரு பாணியைப் பின்பற்றினார்கள். ஆனால், கோபுலுவின் ஓவியங்களில் முக்கியமாக மூன்று வெவ்வேறு பாணிகளைப் பார்க்கமுடிகிறது. இது ஒருவகையில் அரிதான பன்முகத்தன்மை. பெரும்பாலான ஓவியர்களுக்குக் கை கூடாதது. பாணி ஒன்று: அந்தக் காலத்தில் நகைச்சுவைத் துணுக்குகளில் பெரும்பாலும் இடம்பெற்றிருந்த நர்ஸ் - டாக்டர், வேலைக்காரி - முதலாளி, டைப்பிஸ்ட் - மேனேஜர் என்பது போன்ற சற்றுக் கீழான பார்வைகொண்ட, வழக்கமான ஹாஸ்ய

அஞ்சலி: எட்எடுவர்டோ காலியானோ (1940 - 2015)
ப்ரேமா ரேவதி  

எழுத்தாளர் சாண்ட்ரா சினெராஸ் தனது மானசீகக் குருவான காலியானோவை ஐந்து அல்லது ஆறு முறைகள்தான் சந்தித்திருப்பதாக ‘போரின் காதலின் பகல்களும் இரவுகளும்’ என்ற காலியானோவின் மகத்தான புத்தகத்திற்கானத் தனது முன்னுரையில் கூறுவார். எனது ஆதர்ச எழுத்தாளரான காலியானோவைப் பார்க்க நான் விரும்பியதில்லை; சாத்தியமில்லை என்பது ஒரு புறம். வரலாறும் புனைவும் தன் மண்ணின் தொன்மக் கதைகளும் அவை அனைத்தின் ஊடாக அசைக்கமுடியாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வுமான எழுத்துப் பிரவாகத்தின் பின்னால் ஒரு சாதாரண மனிதரை ஒற்றை நபரைக் கற்பனை செய்து பார்க்க முடிந்ததில்லை என்பதுதான் உண்மை. ஆனால் காலியானோ தன்னைப் பற்றிய மகா பிம்பங்களைக் கட்டியமைத்த எழுத்தாளரல்ல. தனது வாழ்வின் மிகச் சாதாரணமான தருணங்களைப் பதிவு செய

திரை
சாளை பஷீர்  

"பொய்யை ஊதிப் பெருக்கிடு. அதை எளிமையாக்கிடு. தொடர்ந்து அந்த பொய்யைச் சொல்லிக்கொண்டே இரு. இறுதியில் அதை மக்கள் நம்பி விடுவார்கள்” - அடால்ஃப் ஹிட்லர். சக மனிதன் மீதான வெறுப்பு, பொய், பொற் காலப் பெருமிதம், பேரினவாத மேட்டிமை, சொல் விளையாட்டு, பரப்புரை உத்தி, ஊடக வலிமை போன்றவற்றைச் சரிவிகிதத்தில் பிசைந்து உண்டாக்கப்பட்ட வெடிமருந்துக் கலவை ஒன்றை உலகிற்கு அளித்தன நாஜிஸமும் ஃபாஸிஸமும்.முற்றதிகாரத்தையும் கெடுபிடி அரசையும் மனித உரிமை நசுக்கலையும் இனப்படுகொலைகளையும் தவிர வேறு எதனையும் இந்த வெறுப்புச் சூத்திரம் மனித குலத்திற்குத் தந்து விடவில்லை. ஆட்சி அதிகாரத்தை நோக்கிய போட்டியில் எழுச்சியும் வீழ்ச்சியும் பெறுகின்ற குறைபாடுடைய அரசியல் சித்தாந்தங்களின் தாக்கமானது சமூகத்தின் சில பகுதிகளைத்

புத்தகப் பகுதி
 

சென்ற ஆண்டு நவயானா வெளியிட்ட டாக்டர் அம்பேத்கரின் ‘Annihilation of Caste’ நூலிற்கு அருந்ததி ராய் ‘Doctor and the Saint’ எனும் தலைப்பில் எழுதிய 153 பக்க முன்னுரைக்கு எதிர்வினையாக ராஜ்மோகன் காந்தி ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ எனும் சிறுநூலை எழுதி வெளியிட்டார். அருந்ததி ராயின் குற்றச்சாட்டுகளில் சிலவற்றிற்குப் பதிலுரைக்க முயலும் நூலின் மொழியாக்கம் சர்வோதய இலக்கியப் பண்ணை (மதுரை)யில் வெளியீடாக வரவிருக்கிறது. நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்... அருந்ததி ராயின் முன்னுரையின் முக்கிய பகுதிகள் காலச்சுவடு இதழ்கள் 172, 173இல் வெளிவந்துள்ளன. முனைவரும் புனிதரும்’ கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒரு குற்றச்சாட்டை எடுத்துக்கொள்ளலாம் “(காந்தியின்

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

எதிர்முனைகள் எப்போதுமே எதிரெதிராய் இருக்க வேண்டுமென்பதில்லை. கண்ணாடி முன் பொருளும் பிம்பமும்போல, ஒரே தளத்தில் அவை இருக்கும் சந்தர்ப்பங்கள் அநேகம். ‘எதிரெதிர் நிலைப்பாடுகள் கொண்டிருந்தாலும், ஏற்பும் மறுப்புமாய் நின்று வாதித்தாலும், ஆத்திகமும் நாத்திகமும் எந்நேரமும் கடவுள் சிந்தனையில் அமிழ்ந்திருப்பவைதாம்’ என்று சொன்னார் ஒரு நண்பர். அவர் கேலியாகச் சொன்னார் என்றாலும், ‘முனைப்பு’ என்ற பின்னணியில், பொருட்படுத்த வேண்டிய தர்க்கம்தான் என்றே பட்டது. இந்தத் தொடரில் ஒரு கட்டுரையை இப்படி முடித்திருந்த நினைவு வந்தது எனக்கு - ‘வாசக மனதின் பரப்பில் பேதம் எதுவும்கொள்ளாத எதிர்முனைகள் அவை’ என்று. அதே தன்மைகொண்ட மற்றொரு ஜோடிக் கவிதைகள் பற்றிப் பேசலாம். காலத்திலும்

பதிவு
தொகுப்பு: களந்தை பீர்முகம்மது  

சௌத்இந்திய முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் சார்பாக கன்னியாகுமரியில் 25.12.2014இல் நடைபெற்ற ‘எங்கள் பார்வையில் காலச்சுவடு’ கலந்துரையாடலில் எழுதிச் சமர்பிக்கப்பட்ட கருத்துக்களின் இறுதிப் பகுதி. சாளை பஷீர்:- காலச்சுவடானது கலை, இலக்கியம், திரைப்படம், ஓவியம், கவிதைகளின் புதிய வீச்சுகளையும் முன்னெடுப்புகளையும் பதிவு செய்வதோடு அந்தத் துறைகளில் புதிய செல்நெறிகளையும் கவனப்படுத்துகின்றது. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஈரானியத் திரை ஆளுமை அப்பாஸ் கியோரஸ்தமியின் நேர்காணலை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மீண்டும் மீண்டும் கற்கத்தூண்டும் வரிகள் அவை. பல ஊர்களில் காலச்சுவடும் பிற நிறுவனங்களும் இணைந்து நடத்தும் கருத்தரங்குகளும் அது பற்றிய பதிவுகளும் சமூகத்தின் அன்றாட தளத்திற்குள் அற

திருமாவளவன்  

1. பசி குளிர் முற்றி வனம்பற்றி எரியுமித் துருவகனாக வெளியில் தனித்திருக்கிறேன். தனிமைக் கொடுநோயில் உடல் தகிக்க ஒற்றைச் சிறுகுருவியுமிலா ஆகாசத்தை விழித்திருக்கிறேன் அனலெனச்சுடுமிக் குளிர்நாளில் என் சாம்பல் பட்சியின் நினைவு குதிர்கிறது. அருந்தலாய் ஒரு இளவெயிற் பொழுதில் வந்தமர்ந்ததென் வளவில். சம்பர்பூசிப் படர்ந்த பசிய விலோமரத் தூவலிற் இழைத்தாற்போல் தோகையும் சிறு புலுனிக் குஞ்சின் கீச்சுக்குரலிலெழு பாடலும்; மிரள் கருமணி வீச்சிலும் சிந்தை சிதற வீழ்ந்தேன். சிலகாலம் என் கபாலக் கிடங்கில் குடிவந்த கரும்பூனைச் சிறு விலங்கின் அல்லல் அறுந்து ஆனந்தமாகியது இன்று தனித்தேன் சிறுபொழுதே எனினும் கரும்பூனையின் ஒற்றைச் சிறுவிழியும் சாம்பற் சிறுபறவை நினைவும் துரத்த துயிலின்றி குளிர்பற்றி எரியும் இக் கானகவெள

புத்தகம்
ஆ.இரா. வேங்கடாசலபதி  

1940கள் அளவில் தமிழ்ச் சமூகத்தில்உருப்பெற்றுவந்த பொதுக்களத்தில் (public sphere) பாரதியின் எழுத்துக்கள் இன்றியமையாததும் தவிர்க்க முடியாததுமான ஓர் இடத்தைப் பெற்று விட்டன. பாரதியின் எழுத்துகளுக்கு வணிக மதிப் பும் ஏற்பட்டது. அவனுடைய பாடல்களைப் பயன் படுத்திக்கொள்வதற்குப் ‘பாரதி பிரசுராலயம்’ கட்டணம் விதித்ததே இதற்குப் போதிய சான்றாகும். ‘விண்ணப்பதாரரின் தன்மையைப் பொறுத்து, பாரதி பாடல்களின் சிலவரிகளையும், சில செய்யுட்களையும் பாடநூல்களில் பயன்படுத்திக்கொள்வதற்குச் சில சமயங்களில் கட்டண மில்லாமலும் சில சமயங்களில் பெயரளவுக்கு ராயல்டி விகிதப்படியும் அனுமதியளித்து வந்ததாக’க் கூறிய பாரதி பிரசுராலயம், இந்தியப் பணியாளர் சங்கம் போன்ற பொதுநல அமைப்புகள்தாமே பாரதியின் தேர்ந்தெடுத

கட்டுரை
எம்.ஏ. நுஃமான்  

தான் இறப்பதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டார். 1990க்குப் பிறகு அவர் அதிகம் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். அவர் எழுதுவதை நிறுத்தும் முன்னரே, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தனை வாசிப்பதைப் பெரிதும் நிறுத்திவிட்டேன். 1975க்குப் பிறகு நான் ஜெயகாந்தனை வாசித்தது மிகவும் குறைவு. இன்று பேசப்படுகின்ற ஜெயகாந்தனின் முக்கியமான படைப்புகள் எல்லாம் 1955க்கும் 1975க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்தவைதான். அக்காலகட்டத்தில் வெளிவந்த அவருடைய படைப்புகள் அனைத்தையும் நான் விரும்பிப் படித்திருக்கிறேன். கற்பித்தல், விமர்சனம் போன்ற வெவ்வேறு தேவைகளுக்காக அன்றி, புதுமைப் பித்தன்போல் ஓர் இலக்கிய அனுபவத்துக்காக மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எ

கதை
கே.என். செந்தில்  

மருந்துச்சீட்டுகள் நைந்து போய்க் கையோடு வந்து விடும் என்று பட்டது. இன்னும் ஒன்றிரண்டு முறை திருப்பினால் அது இரண்டாகவும் நான்காகவும் கிழியக்கூடும். வீட்டுக்காரம்மாவின் கண்டிப்புகளையும் மீறி அடிக்கப்பட்ட ஆணியில் தொங்கவிடப்பட்டிருந்த அழுக்கேறிய பையினுள் அவர்களுக்கு மிச்சசொச்ச நம்பிக்கைகளை அளித்தபடி நோட்டீஸ்கள்போல அவை குவியலாகக் கிடந்தன. கையிருப்பைக் காலிசெய்து கடன்காரர்களைச் சம்பாதித்துத் தந்த அந்த மருந்துப் பட்டியல்கள் தங்கள் தலைவிதியின் கையெழுத்துக்களாக அவர்களுக்குத் தோன்றின. ஒரு பிண்டம்போல அசைவேதுமின்றி மனோகரனின் கிழிந்த லுங்கியின் மேல் பையன் கிடந்தான். அந்த எண்ணம் எழுந்த அதே கணத்தில் மின்சாரம் போனது. ராதாவின் மனம் சட்டென இருண்டு விட்டது. நொடியும் தாமதிக்காமல் வேகமாகப் போய் வற்றிப்

கட்டுரை
அம்பை  

இன்னும் வராத சேதி (ஊர்வசி), எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை (ஔவை), ஒவ்வா (ஸர்மிளா ஸெய்யித்), யாக்கையின் நீலம் (ப்ரேமா ரேவதி), மகளுக்குச் சொன்ன கதை (சே.பிருந்தா), ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை (கீதா சுகுமாரன்) என ஆறு கவிதைத் தொகுப்புகள். போரால் உருவாகும் வாழ்க்கையிலும், போராகவே போகும் வாழ்க்கையிலும், பெண்ணாக இருத்தலும் வாழ்தலும் குறித்தும், அதனால் வதைபடும் உடல் மற்றும் மனங்கள் குறித்தும், அதனால் உருவாகும் மொழியை உள்வாங்கி வெளிப்பாட்டுப் பிரதேசததில் அதைக் கொண்டுவரும் முயற்சியாகவும் உள்ள தொகுப்புகள். இந்தத் தொகுப்புகளில் உள்ள கவிதைகளுள் புகும் முன்பு சம்பிரதாய நாடக அரங்குகளில், பின்னால் ஓவியங்கள் வரையப்பட்ட திரைச்சீலை ஒன்றை நாடகத்தின் தறுவாயைக் குறிக்கக் காட்டுவதுபோல இந்தக் கவிதை

பத்தி
பி. ரவிகுமார்  

ஆனந்தபைரவி ஒரு தாலாட்டுப் பாடலாக நம்மைத் தழுவுகிறது. பால்யத்தின் ஊஞ்சலில் ஏற்றிவைத்துக் கடந்த காலத்தின் பசுமையான பக்கங்களைப் புரட்டிக்காட்டுகிறது. ராக அதிர்வுகளில் கருணையாகப் படர்கிறது. மலைச் சிகரங்களில் பூக்கும் நீலக் குறிஞ்சிகளில் தேன் துளியாகத் தளும்புகிறது. காடுகளின் இரவுகளில் நிலாவாக நிறைகிறது. கிராமத்துப் பாதைகளில் நீண்டுசெல்லும் மாட்டு வண்டிகளில் மணியோசையாக ஒலிக்கிறது. காவடிச் சிந்துகளில் பக்தியாக சன்னதம் கொள்கிறது. குறத்தியின் பாட்டில் வருங்கால நன்மையின் ஆரூடமாகிறது. தேவராகங்களில் மந்திரமாக முழங்குகிறது. நடபைரவியின் (இருபதாவது மேளகர்த்தா ராகம்) ஜன்யமான ஆனந்தபைரவி ஆதி ராகங்களில் ஒன்று. வேங்கடமகியின் காலத்தில் உபாங்க ராகமாக இருந்த ஆனந்தபைரவி பிற்காலத்து வாக்கேயகாரர்களின் படைப்

நேர்காணல்
 

பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவல் பிரச்சினையில் எழுத்தாளருக்கு உறுதுணையாக நின்றவர் வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன். மாவட்ட ஆட்சியர் ஜனவரி 12, 2015 அன்று ஒழுங்கு செய்த ‘அமைதி’ப் பேச்சுவார்த்தையில் பெருமாள்முருகனுடன் கலந்துகொண்ட சுவாமிநாதன் காலச்சுவடு இதழுக்கு அளித்த நேர்காணல் இது. உங்கள் அரசியல் மற்றும் இயக்கத் தொடர்புகள் யாவை? எனக்கு அரசியல் என்று ஏதுமில்லை. என்னுடைய அக்கறைக்குரியதாக அது இல்லை. ஆனால் நான் 1984ஆம் ஆண்டிலிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர். ஒன்றரை வருடம் முழுநேரப் பிரச்சாரகராகவும் இருந்திருக்கிறேன். சட்டத்துறையில் உங்களின் முன்னோடிகள் யாவர்? நீதிபதி கே. சந்துருதான். அவ்வாறு கருதுவதற்கு எனக்குத் தடை இல்லை. நேர்மை, தைரியம், சக்தி கொண்ட அவரை நான் முன்னோட

பத்தி: எதிர்க்காற்று
எம். தமிமுன் அன்சாரி  

இந்தியாவிற்கு வெளியே நான் நேசிக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. குறிப்பாக சிங்கப்பூரின் அரசியல், சமூகம், பொருளாதார வளர்ச்சி ஆகியன குறித்த ஆழமான பார்வை எனக்கு உண்டு. கடந்த 25 ஆண்டுகாலமாக அந்நாட்டிற்குச் சென்று வருபவன் என்ற வகையில் அந்நாட்டின் தந்தை லீ க்வான் யூ பற்றி நிறைய அறிந்திருக்கிறேன். கடந்த மார்ச் 23 அன்று அவர் தனது 91வது வயதில் மரணம் எய்தினார். சிங்கப்பூர் முழுக்க துக்கத்தின் தாக்கம் சூழ்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தங்கள் வீட்டில் ஒருவர் மரணித்ததைப் போன்ற உணர்வோடு பெரும்பான்மை சிங்கப்பூரார்கள் வருந்தியதையும், மூத்த குடிமக்கள் தங்கள் தோழரைப் பறிகொடுத்த துயரத்தில் திளைத்ததையும் பார்க்க முடிந்தது. அவர்மீதான அரசியல் பகைமை கொண்டவர்களும், த

மதிப்புரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் அன்றைய சென்னை மாகாணம், 18ஆம் நூற்றாண்டில் 1783 தொடங்கி 19ஆம் நூற்றாண்டில் 1854 முடிய, ஆறு கொடிய பஞ்சங்களை எதிர்கொண்டது. 1857இல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி முடிவுற்றபின் ஏழாவது பஞ்சம் தோன்றியது. இப்பஞ்சங்கள் அனைத்தையும் விஞ்சிய பஞ்சம் 1876இல் தொடங்கி 1890 வரை நீடித்தது. இப்பஞ்சம் தொடங்கிய காலத்தையத் தமிழ் வருடம் தாதுவருடம் என்பதால் ‘தாதுவருடப் பஞ்சம்’ என்று மக்கள் இப்பஞ்சத்தை அழைத்தனர். இப்பஞ்சத்தின் விளைவுகளை ஆங்கில அரசின் ஆவணங்களும், கிறித்தவமறைத் தளத்தின் ஆவணங்களும் நாட்டார் பாடல்களும் பதிவு செய்துள்ளன. மற்றொருபக்கம் ‘தாது வருடத்துக் கரிப்புக் கும்மி’, ‘தாதுவருடத்துப் பஞ்சக்கும்மி’, ‘பஞ்சலட்சணத்

அறிமுகம்
 

மலையாளப் பண்பாட்டு உலகில் நவீன சிந்தனைகளுக்கு விரிவானகளம் அமைத்தவர் எம். கோவிந்தன். இலக்கியவாதியாகவும் கலை ஆர்வலராகவும் சிந்தனையாளராகவும் செயல்பட்ட பன்முக ஆளுமை அவருடையது. ‘சமீக்ஷா’ என்ற பெயரில் அவர் தொடங்கி நடத்திய காலாண்டு இதழ் மலையாளச் சிறு பத்திரிகை இயக்கத்தின் நிகரற்ற முன்மாதிரியாக கருதப்படுகிறது. புதிய படைப்புகளுக்கும் புதிய கலைமுயற்சிகளுக்கும் ஆழமான சிந்தனைகளுக்கும் அடையாளமாக இன்றும் ‘சமீக்ஷா’ இதழ் குறிப்பிடப்படுகிறது. கோவிந்தனேகூட ‘சமீக்ஷா’ கோவிந்தன் என்றே பரவலாக அறியப்பட்டவர். 1960-70 காலப் பகுதியில் வெளிவந்த ‘சமீக்ஷா’ சில சிறப்புப் பதிப்புகளையும் வெளியிட்டது. 1974ஆம் ஆண்டு மகாகவி குமாரன் ஆசான் நூற்றாண்டை ஒட்டி வெளிவந்த &lsqu

உள்ளடக்கம்