தலையங்கம்
 

சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்ட மாணவர் அமைப்பான அம்பேத்கர்- & பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் நீக்கப்பட்ட பிரச்சனை உணர்ச்சிப் பிரவாகங்களுடன் மிதந்து சென்றிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் பார்வையில் சென்னை ஐ.ஐ.டி குறித்து ஏற்கெனவே உருவாகியிருந்த அபிப்ராயங்களை இச்சம்பவம் இன்னும் ஆழமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மனநிலையில் மறைமுகமாக இயங்கும் ஒழுங்குப்பிரகாரங்களுக்கு மாற்றாகச் சென்ற ஆண்டு உருவானது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (அ-பெ.ப.வ). இந்தியாவின் தற்காலப் பிரச்சினைகளான (மோடி அரசின்) வலதுசாரிச் செயல்பாடுகள், வேளாண்மையின் மீதான தாக்குதல், சம்ஸ்கிருத மயமாக்கல், தொழில் தகராறு சட்டம் போன்ற பலவற்றை ஆழமாக விவாதிக்கும் அமைப்பாக இவ்வட்டம் செயல்பட்டு வரு

எதிர்வினை
ஆ.இரா. வேங்கடாசலபதி  

காலச்சுவடு’ மார்ச் 2015 (183) இதழில் எம்.ஏ. நுஃமான் ‘தமிழ்ப் பகைவரும் தமிழ் வெறியரும்’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். காலம் பிந்தினாலும் அதில் இடம்பெற்றுள்ள சில கருத்துகளுக்கு எதிர்வினையாக இதை எழுதுகிறேன். பாவாணர் பற்றியும் தனித்தமிழ் இயக்கம் பற்றியும் அவர் எழுதியவற்றுக்கு நான் எதிர்வினையாற்ற முயலவில்லை. இதில் புதியதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் வேறு சில செய்திகளுக்குப் பதில் சொல்வது இன்றியமையாதது. நுஃமான் கட்டுரையின் சாரத்தைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன மொழியியல் என்ற அறிவுத்துறை தோற்றம் பெற்றது. இது மொழி பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்கியுள்ளது. இதன் காரணமாக மேலை உலகின் உயர் கல்வி அமைப்புகளில் மொழியியல் என்ற அறிவுப் ப

எதிர்வினை
க. பஞ்சாங்கம்  

நுஃமானின் ‘தமிழ்ப் பகைவரும் தமிழ் வெறியரும்‘ (மார்ச் 2015 இதழ்) என்ற கட்டுரை வியப்பை ஏற்படுத்தியது. மார்க்சிய அணுகுமுறை கொண்ட ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட ‘குற்றம் மட்டுமே சுமத்தும்’ கட்டுரையை எதிர்பார்க்கவில்லை; நுஃமான் என்றவுடன் ஆர்வத்தோடு படித்தும் அந்த ஆர்வத்தின் அளவிலும் அதிகமான ஏமாற்றத்தோடு படித்துமுடித்த கட்டுரையாகத் தென்பட்டது. முதலில் நூறு விழுக்காடு தூய்மையான அறிவியல் அணுகுமுறை கொண்டது நவீன மொழியியல் என்று மொழியியலைக் கொண்டாடுவதிலேயே ‘பிரச்சினை’ தோன்றிவிட்டது. மனிதம் சார்ந்த எதிலும் அப்படியான ஒன்று இல்லை என்பது எனது அனுபவமாக இருக்கிறது. மொழியியல்துறையின் தோற்றமே காலனித்துவத்தின் ஆளும் அதிகார அரசியலில் வேர்கொண்டுள்ளது என்பதுதானே உண்மை. &

உரை
கண்ணன்  

நண்பர்களே, வணக்கம். கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் நிகழ்வில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, கௌரவம். இரண்டு காரணங்கள்; சுந்தர ராமசாமியுடன் இளைஞர்களாகப் பழகி இறுதிவரை நட்பைப் பேணியவர்கள் நால்வரே இன்றும் நம்முடன் உள்ளனர். எம். சிவசுப்பிரமணியன், பேரா. அ. பத்மநாபன், மைக்கேல் ராஜு மற்றும் கொடிக்கால். அத்தகைய ஒரு நண்பரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இரண்டாவதாக 65 ஆண்டுகள் பொதுச்சேவை என்பது அபூர்வத்திலும் அபூர்வம். இங்கு சில முதிய அரசியல்வாதிகளின் நினைவு நமக்கு வரலாம். தன் சேவை, தன் குடும்பச் சேவை, அதிகாரத்திற்கான விழைதல் வேறு; பொதுச் சேவை என்பது வேறு. அப்படிப் பார்க்கையில் இது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆக இன்று ஒரு பார்வையாளராக மட்டும்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

தண்ணீர்தான் வாழ்வின், அந்த வாழ்வு போற்றும் உறவுகளின் அடிப்படை. வீட்டுக்கு வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து உபசரிப்பது உலகின் பல கலாச்சாரங்களில் முக்கியமான அம்சமாக விளங்குகிறது. சமூகத்திலும் பல்வேறு பிரிவினர்களின் நல்லுறவு தண்ணீர்ப் பகிர்வினால் அளக்கப்படுகிறது. பிறவி எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேகூட தண்ணீர்ப் பிரச்சினை எழாமல் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு அவை கடிதில் போற்றப்படுகின்றன. ஆனால் இந்திய மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. காவிரிப் பிரச்சினை இவற்றுள் முக்கியமான ஒன்று. மேகேதாட்டுவில் இரண்டு அணைகள் கட்டப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்த கர்நாடக அரசு தற்போது நான்கு அணைகள் கட்டுவதற்குத் திட்டமிடுகிறதாம். அதாவது 48 டிஎம்சி கொள்ளளவு கொண்

திரை
வெற்றி-செந்தூரன்  

நகரத்துக்கு உள்ளே இருக்கும், ஆனால் நகரம் பார்க்க மறுக்கும், சுரண்ட விழையும், திடீரென முளைக்கும், திடீரெனச் சிதைக்கப்படும் திடீர் நகரின் மாரியம்மன் கோவிலருகே வசிக்கும் இரண்டு சிறுவர்கள். தூக்கத்தில் மூத்திரம் போகாமல் இருந்தால் டிவி கிடைக்கும் என்று அம்மா சொன்னாலும் டவுசர் நனைந்துபோய்விட, அதை அவளுக்குத் தெரியாமல் சட்டியில் மறைத்துவைக்கும் சின்னவன், என்ன நடக்கிறதெனச் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் அண்ணனை நம்பி அவனோடே நடக்கிறான். ரயில்வே ட்ராக்கில் வேலை பார்க்கிற ‘பழரச’மும் அபார்ட்மெண்ட் பையனும் சொல்லும் கதைகளை வியந்து கேட்கிறான். கனவுகள் நிறைந்த பெரிய கண்களுடன் “ஐயாம் சின்ன காக்கா முட்டை” என்கிறான். ஜெயிலில் இருக்கும் அப்பா, தனி ஆளாகப் பாட்டியையும் தங்களையும

தீபச்செல்வன்  

நாடற்றவரின் கடல் தொழவும் தெரியாத குழந்தை பலியிடப்பட்டிருக்கிறது புத்தருக்காய் இன்னும் ஒரு வார்த்தையேனும் பேசியிராத குழந்தை கொல்லப்பட்டிருக்கிறது அல்லாவை பழி தீர்க்க நடுக்கடலில் மிதக்கின்றன குட்டிப் பர்தாக்களும் தொப்பிகளும் வாளோடும் துப்பாக்கிளோடும் துரத்த வேண்டாம் அவர்களாகவே தம்மை அழித்துக்கொண்டனர் நாடற்றவர்களாக புறப்பட்ட வேளையில் கரையற்றிருக்கின்றன கண்ணீராலும் இரத்தத்தாலும் ஆன படகுகள் கருணைக்காய் தவிக்கும் ஒரு ரோஹிங்ய குழந்தைக்காய் வன்முறையாளர்களிடம் அகப்பட்டுப்போன புத்தரால் என்ன செய்யவியலும்? பசியோடு மடியுமொருவரின் மரணத்திற்கும் மியன்மர் இராணுவத்திற்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக கரைகளுக்காய் கையேந்தி கடலில் புதையுண்டவருக்கும் பவுத்த வெறியர்களுக்கும் தொடர்பில்லை எனச் சொல்லுக எ

பத்தி: எதிர்க்காற்று
தமிமுன் அன்சாரி  

வலியிலும் வலியானது தாய்மண்ணைப் பிரிந்து அகதிகளாய்ப் புலம்பெயர்வது. ஆக்ரமிப்புப் போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், இனஅழிப்பு வன் முறைகள் ஆகியவற்றின் காரணமாக உயிர் வாழும் உரிமைக்காகச் சொந்தநாட்டை விட்டு வெளியேறு பவர்கள் அகதிகள் என அழைக்கப்படுகின்றனர். அகதிகள் குறித்த வரைவிலக்கணம் ஐக்கிய நாட்டுச் சபையால் 1951ஆம் ஆண்டுதான் ஒழுங்குபடுத்தப்பட்டது. இன்று உலகம் முழுக்க சாதிய, இன, மத, மொழிப் பாகுபாடுகள் காரணமாகவும், அரசியல் பழிவாங்கல் மற்றும் யுத்தங்கள் காரணமாகவும் சுமார் ஐந்து கோடி பேர் அகதிகளாக உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீன மற்றும் தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் உலகமெங்கும் அகதிகளாய்ப் பரவி உள்ளனர். அவர்களில் கணிசமானோர் குடியேறிய நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். பல ஐரோப

அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டு
ஸ்டாலின் ராஜாங்கம்  

தற்காலத்தில் அயோத்திதாசர் சிந்தனைகளாக வெளிக்கொணரப்பட்டிருக்கும் எழுத்துகள்யாவும் அவர் 1907ஆம் ஆண்டு முதல் 1914ஆம் ஆண்டுவரை நடத்திய தமிழன் என்ற வார ஏட்டில் எழுதியவையாகும். சிறிதும் பெரிதுமான கட்டுரை கள், சங்கைத் தெளிவுகள், இலக்கிய விளக்கங்கள், அறிவிப்புகள் உள்ளிட்ட சிறுகுறிப்புகள் என்றெல் லாம் எழுதி வந்த அவர் நீண்டத் தொடர்களையும் எழுதினார். தாம் கட்டியெழுப்ப விரும்பிய பௌத்த அடையாளத்திற்கான பண்பாட்டு விளக்கங்களையும் வரலாற்றுப் பொருத்தங்களையும் இத்தகைய நீண்ட தொடர்கள் மூலமே அவர் செய்ய விரும்பினார். இரண்டாம் பக்கம் இதழின் இலச்சினை பதிக்கப்பட்டு அதன்கீழ் இத்தொடர்கள் வெளியாயின. அதற்கேற்ப இவை சாக்கைய பௌத்த சங்கங்களின் தலைமை குருவாகவும் இதழாசிரியராகவும் விளங்கிய அயோத்திதாசர் எழுதியவையாக மட்

அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டு
ஆ. திருநீலகண்டன்  

நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட நாளிதழ் திராவிடன். திராவிடர் இயக்கத்தின் முதல் தமிழ் நாளிதழும் இதுவே ஆகும். இதன் முதல் ஏடு 1.6.1917இல் வெளியிடப்பட்டது. இவ்வாண்டில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த திராவிடன் இதழ்கள் பலவற்றில் அயோத்திதாசர் குறித்த பதிவுகள் உள்ளன. அவற்றை நேரே ஆராயுமுன்பு, சென்னை மாகாண அளவில், ஒடுக்கப்பட்ட சாதிகளின் நோக்கினூடாகக் காணலாகும் சமூக-அரசியல் சூழ்நிலைகளை மேலெழுந்தவாரியாக முதலில் தொகுத்துக்கொள்வோம். பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடைபெற்ற அந்நாளில் சமூகம், சமயம், கல்வி ஆகிய தளங் களிலும் அரசியல் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் ஆகியனவற்றிலும் பார்ப்பன உயர்சாதியினரே ஆதிக்கம் பெற்றுத் திகழ்ந்தனர்.

கட்டுரை
ஞா. ஸ்டீபன்  

தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது. தற்கால வழக்கில் தாலி என்பது திருமண நிகழ்வின் மையமான ஒரு கூறாக உள்ளது. மண

 

சொல் 01 ‘தம்பியென்றால் சகோதரன்’ என்றான் அண்ணன் ‘தம்பி என்றால் குகன்’ என்றான் ராமன் ‘தம்பியென்றால் எங்கள் வீட்டின் வேலைக்காரப் பையன்’ என்றாள் பெரிய வீட்டுப் பெண். ‘தம்பி என்றால் இளையவன்’ என்றார் ஆசிரியர் ‘தம்பி என்றால் பிரபாகரன்’ என்கிறார் வைகோ. ‘தம்பி என்றால் என் படைத்தளபதி’ என்றான் மன்னன் தம்பி என்றால் யாரென்று நீங்கள் சொல்லுங்கள்? 02 ‘அம்மா என்றால் உயிரின் வேர்’ என்றாள் அக்கா. ‘அம்மா என்றால் அன்னை, தாய், பெற்றவள், பாசம் நிறைந்தவள்...’ என்றெல்லாம் விழித்துரைத்தார் ஆசிரியை ‘அம்மா என்றால் இரக்கம் நிறைந்தவள்’ என்றான் பிச்சைக்காரன் ‘அம்மா என்றால் உயிரின் வாசம்’ என்றான் மக

கதை
 

பெரியவர் ஆதியின் மகன் குருவும் மருமகளும் வெளியூருக்குச் சுற்றுலா சென்றிருந்தார்கள். அவர்களுக்குக் கல்யாணம் முடிந்து சில வாரங்களே ஆகியிருந்தன. பெரியவரைத் தனியாக விட்டுச் செல்வது குறித்து இருவருக்கும் கவலை இருக்கவே செய்தது. அவள் பெரியவருக்காக சில உணவு வகைகளைச் செய்து வைத்துவிட்டுப் போயிருந்தாள். மகன் அடுத்த வீட்டுக்காரர்களிடம் அவரைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். சேர்ந்து செல்லும் முதல் பயணம் என்ற கிளர்ச்சி இருவருக்கும் அவரைப் பற்றிய கவலைகளை அசாதாரணமான அளவிற்கு மாற்றியது. பெரியவர் கூடத்தில் போட்டிருக்கும் கட்டில்மேல் அமர்ந்திருந்தார். எதிரில் இருந்த மூடிய அறைக் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல் அவர்மேல் ஒரு கரிய நிழல் படிந்தது. அந்தக் கரிய நிழல் நீண்டு அவருக்குள

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
 

பெண் கவிஞர் ஒருவரைப்பற்றி, ‘தனது எல்லாக் கவிதைகளையும் சிலுவையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு எழுதுகிறவர்’ என்று சொன்னார் ஒரு நண்பர். குழுமியிருந்தவர்கள் சிரித்து வைத்தோம். எனக்குள் ஒரு குறுகுறுப்பு. தமிழ் நவீன கவிதையில் பெருவாரியானவை அப்படியொரு துக்கத்தைச் சுமந்துதானே இருக்கின்றன - புகார்ப் பெட்டிபோல அல்லது கண்டனக் கணைகளாக. இதில் ஒரேயொரு வரை மட்டும் பிரித்து ஏன் பார்க்க வேண்டும் என்று பட்டது. நவீன கவிதை என்பதும், நவீனத்துவக் கவிதை என்பதும் ஒரே பொருள் தரும் சொற்றொடர்கள் அல்ல. ஒவ்வொரு காலகட்டத்தினுடையவும் சம காலக் கவிதையை நவீன கவிதை என்று சொல்லலாம் என்றால், நவீனத்துவம் என்ற இலக்கிய வகைமை சார்ந்து எழுதப்படும் கவிதை நவீனத்துவ கவிதை. தமிழைப் பொறுத்தமட்டில், கவிதை விளக்கம் அல்ல

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நான் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் படித்தபோது ஆங்கிலப் பாடப் புத்தகமாக Jerome K Jeromeஇன் ‘Three Men in A Boat’ என்ற நாவல் இருந்தது. அதில் ஒரு கதாபாத்திரம் வாசகசாலைக்குச் செல்வார். அவர் கண்ணில் ஒரு வைத்தியக் கலைக்களஞ்சியம் தென்படுகிறது. அதை வாசிக்கும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வியாதிகளும் தனக்கு இருப்பதுபோல் படுகிறது. இப்படி ஒரு மோசமான நோயாளியா தான் என்று பதறிப்போய்விடுவார். இப்போது கலைக்களஞ்சியம் தேவை இல்லை. எந்தத் தொடுதிரை கணினியையோ அல்லது அலைபேசியையோ ஒரு வியாதிபற்றி மெலிசாகத் தொடுங்கள், உங்கள் சாதாரண தலைஇடி அல்லது தும்மல் ஏதோ எப்போலா (ebola) முதல் இன்று தென்கொரியர்களைப் பீதிக்குள்ளாக்கியிருக்கும் ஒட்டகக் காய்ச்சல் (MERS virus) வரை உங்களுக்கு இருப்பதாகத

மதிப்புரை
கே.என். செந்தில்  

அலெக்ஸாண்டர் என்ற கிளி (சிறுகதைகள்) வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 669, கே.பி. சாலை சென்னை - 629 001 பக்கம்: 168 விலை: ரூ.140 “வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்வது தத்துவம். வாழ்க்கையையே சொல்வது, அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.” -புதுமைப்பித்தன் ‘அலெக்ஸாண்டர் என்ற கிளி’ என்னும் எஸ். செந்தில்குமாரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு மொத்தம் பதினேழு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. இக்கதைகளில் வரும் மனிதர்கள் தங்களது அடிப்படை இச்சைகளுடன் உழல்பவர்களாகவும், ஆசையை அடக்கிக் கொள்ளத் தெரியாது தவிப்பவர்களாகவும், தோல்விகளால் சூழப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். கதைக்களன்கள் வாழ்விலிருந்தும் அனுபவத்தி லிருந்தும் உருவானவை. சில அனுபவங்களின் குளிர்ச்சி தரும் ஆசுவாசத்தை விடவும் வாழ்க்

நினைவு
ஷாஅ  

அன்பார்ந்த உள்ளங்களே! முதலில் குவளைக்கண்ணனுடைய ஒரு கவிதையைப் படித்துவிடுகிறேன். நான் என்ன கேட்டேன்? நீ என்ன தந்தாய்? புரியாததெல்லாம் புரியக் கேட்டால், புரிந்ததெல்லாம் புரியாதுபோக வரம் தருகிறாய்? (வரம் - கண்ணுக்குத் தெரியாததன் காதலன் டிச-2011 பக்: 29) பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பது என்பது எவருக்கும் உவப்பான விஷயமாக இருக்காது; எனக்கும் அப்படித்தான். ஏனென்றால் இது விழாவோ மகிழ் சந்திப்போ கிடையாது. இங்கு நாம் யாரைப்பற்றிப் பேசுகிறோமோ அவர் நம்மோடு இப்போது இல்லை. பெருத்த சங்கடம் இது. பாரமான மனத்துடன்தான் அனைவரும் அமர்ந்திருக்கிறோம். நமக்கு நன்கு பரிச்சயமானவர், நெருக்கமாகப் பழகினவர், அடிக்கடி சந்தித்துக்கொண்டு இருந்தவர் இப்போது நம்மிடையே இல்லை. இல்லாத ஒரு நபர் இருந்ததைப்பற்றியும்

நினைவு
அ.மு. கான்  

படைப்பாளியின் மறைவிற்குப் பின் அவரது படைப்புகளை மீள் வாசிப்பு செய்வது எப்போதும் தம்மை சிரமத்திற்குள்ளாக்குவது. மறைந்த நண்பரும் கவிஞருமாகிய குவளைக் கண்ணனின் கவிதைகளை இப்போது வாசிக்கையில் அவருடனான கவிதைபற்றிய உரையாடல்களும், கவிதையில் எதைச் சொல்லலாம் எவ்வாறு சொல்லலாம் என்பது பற்றிய அவரது கருத்துக்களும், பொதுவான இலக்கியம், இசை, மற்றும் சமகாலக் கவிதைகள் பற்றிய அவரது ஆழ்ந்த கவனமும் நினைவில் வந்துகொண்டேயிருப்பது தவிர்க்க இயலாதது. அவரது கவிதைகளில் பெரும்பாலும் பெண்கள், குறிப்பாகச் சிறு பெண் குழந்தைகள், நகர்ப்புற வாழ்வு தரும் அவஸ்தைகள், அதன் அபத்தங்கள், இழந்தவற்றின் ஏக்கம், வனம், நாடோடிக் கதைகளின் சாரம், இசை பற்றிய நாட்டம் ஆகியவை பாடுபொருளாக இருக்கின்றன. சிக்கலான பழமைகள் தர்க்கங்கள் அதனைச் சா

கட்டுரை
மு.கி. சந்தானம்  

காலமாகிப்போன ஜெயகாந்தனைப் பற்றிய ஆழமான, அன்னியோன்யமான மற்றும் தயவுதாட்சண்யமற்ற கட்டுரைகளை ‘காலச்சுவடு’ இதழில் வாசித்தேன். பெங்களூரில் வசிக்கும் எனக்கு சமீபத்தில் மறைந்த இலக்கிய ஆளுமையான யு.ஆர். அனந்தமூர்த்தி குறித்து இங்குள்ள ஊடகங்கள் வெளியிட்ட புகழாரங்களும் விமர்சனங்களும் நினைவில் எழுந்தன. இருவருக்கும் பிரகாசமான பக்கமும் பிரகாசமில்லாத பக்கமும் உண்டு என்பதை இருதரப்புக் கட்டுரைகளும் வெளிக் கொணர்ந்துள்ளன. தமிழ்ச் சூழலில் ஒரு எழுத் தாளரின் மரணம் இத்தகைய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தியதில்லை என்றே சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல என்பதே இதற்குக் காரணமாகவும் இருக்கக்கூடும். நீருள்ள ஆறு ஓடிவரும்போது அந்தந்த ஊர் ஆற்றங்கரைக்காரர்கள் அது தங்களூர் ஆறு என்று பாவித்த

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

ஜிகாதி (பதுங்குகுழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்) ஹெச்.ஜி. ரசூல் வெளியீடு: பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை. சென்னை - 629 001 பக்கம்: 120 விலை: ரூ.80நிகழ்கால முஸ்லிம்கள், வல்லரசுகளாலும், சொந்த இஸ்லாமிய இயக்கங்களாலும் தொடர்ந்து இன்னல்களுக்கும் சாவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு வரும் சூழலில் முக்கிய வரவாக இருக்கிறது இந்நூல். முஸ்லிம் சமூகத்தின் மீது ஒருபுறம் பரிதாபமும், மறுபுறம் வெறுப்பும் இருப்பதால் கட்டுரையாளர் சமூகவியல் நோக்கில் செயல்பட்டுள்ளார். வெறுப்புணர்வு கொண்டவர்களை இந்நூல் கண்டிப்பாக மாற்றும்; பரிதாப உணர்வில் இருப்போர் தங்களுடைய வலிமையான கருத்தியலை மேலும் வலுப்படுத்திக் கொள்வார்கள். ரசூல் தன் கருத்துக்களைப் பதிவது ஒருபுறமிருக்க, ஊர்ஜிதப்படாத தகவல்கள் வரும்போது அ

கதை
 

பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் வெளியே உலாவரும் பன்றிகள், நரிகள், முயல்கள், கீரிகள், முள்ளெலிகள் வளவினுள் நுழைந்

பதிவு
ரவிச்சந்திரிகா  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா ரொறொன்ரோ ராடிஸன் ஹொட்டலில் யூன் 13ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் ஜெயமோகன் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன. சுந்தர ராமசாமி நினைவாக காலச்சுவடு அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ‘கணிமை விருது’ முனைவர் முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அண்ணாமலை அமெரிக்காவில் பாஸ்

பதிவு
 

கருத்துரிமைக்கு எதிரான போக்கு எங்கும் எப்போதும் இருந்து வருகிறது என்றாலும் தமிழகத்தைப் பொறுத்த அளவில் பெருமாள்முருகன் பிரச்சினை அதில் குறிப்பிடத்தக்கத் திருப்பத்தை ஏற்படுத்தியது. பெருமாள்முருகன், அவரைத் தொடர்ந்து பிரச்சினைக்கு ஆளான துரை குணா, ம.மு. கண்ணன் மற்றும் அண்மையில் தாக்கப்பட்ட புலியூர் முருகேசன் போன் றோருக்கு ஆதரவாக எழுந்த விவாதங்களில் கருத் துரிமை தொடர்பாக நம்முடைய புரிதலை விரிவாக்கி புதிய விவாதங்களுக்கான சாத்தியங்களையும் உருவாக்கின. பல்வேறு சக்திகளின் எதிரும் புதிருமான கருத்துக்கள் வெளியிட்ட இந்த விவாதங்கள் ஒருவகையில் ஆரோக்கியமான போக்கின் அறிகுறிகளே. இதுவரை யோசித்துப் பார்த்திராத திசைகளிலிருந்து கருத்துரிமை தொடர்பான

நூல்பார்வை
அரவிந்தன்  

'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் கோட்டயத்தில் 1937, 38, 39இல் நடந்த கதை. இந்த நாவலில் ஐந்து குடும்பங்கள் வருகின்றன. தலைப்புக்குப் பொருத்தமாகக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் பற்றிய கதையாக நாவல் விரிகிறது. கதை என்று சொல்வதைவிடவும் கதைகள் என்று சொல்வதே பொருத்தமானது. பல பாத்திரங்கள், பல வாழ்க்கைகள், பல கதைகள் கொண்ட நாவல் இது. பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் கோட்டயம் இந்த நாவலின் களம். நாவலின் காலம் 1937, 38, 39 ஆகிய ஆண்டுகள். ஐந்து குடும்பங்களின் பின்னணியும் அவற்றின் உறுப்பினர்களின் வாழ்க்கையும், குடும்பங்கள் மாற்றம் கொள்ளும் விதமும் விரிவாகச் சொல்லப்படுகின்றன. கதை என்று எதுவும் இல்லை. ஒரு சில நிகழ்வுகள் மட்டும் தொடர்ச்சியாகச

சச்சிதானந்தன்  

நான் இரவின் எசமானன் என் கண்ணுக்கு எட்டியதெல்லாம் என்னுடையவை நதியைப் பொன்னாக்கும் நிலவொளி என்னுடையது ஏதோ யுகத்திலிருந்து பாயும் நட்சத்திர வெளிச்சம் என்னுடையது உறங்கும் மிருகங்களும் உறங்காத விருட்சங்களும் மூடாத கண்ணுள்ள இந்த உலகத் தலைவனுடையவை. எனது முனகல் ஒரு மொழி ஒற்றை முனகல் இரவின் வரவேற்பு இரட்டை முனகல் மழையின் அறிவிப்பு மூன்று முனகல் புயற்காற்றின் ஆரூடம் நான்கு முனகல் பூகம்பத்தின் அறிக்கை ஐந்து முனகல் பிரளயத்தின் சாமியாட்டம் பகலில் நான் அடிமை, கறுப்பன் துரத்தி விரட்டப்படுபவன்-& குருவிகள்கூட வேட்டையாடக் கூடிய இரை நகங்களுக்கும் அலகுகளுக்கும் பயந்து நான் ஒளிந்திருக்கிறேன் அவை என்னைத் தனிமைப் படுத்துகின்றன& காக்கைகள் கூட, நான் பறவையே அல்ல என்பதுபோல, பூனை என்பதுபோல எனது பெருமிதம் என்ன

உள்ளடக்கம்