தலையங்கம்
 

சாதி கடந்து காதலித்ததற்காக மற்றுமொரு கொலை நடந்திருக்கிறது. கடந்த ஜூன் 25ஆம் தேதி திருச்செங்கோடு பள்ளிப்பாளையம் ரெயில் தண்டவாளத்தில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தார். தந்தையை இழந்து, அம்மா அண்ணன் ஆகியோரை மட்டுமே கொண்ட எளிய குடும்பத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் படிப்பை நிறைவு செய்த பட்டதாரி. சாதி தாண்டிய காதலில் பெண் ஆதிக்க சாதியாக இருந்தால், உறவினர் ஊரார் மற்றும் சொந்த சாதியினர் அழுத்தத்தால் குடும்பமே அப்பெண்ணை கொலை செய்யும். அத்தகைய கௌரவக் கொலைகளே இங்கு அதிகம். மாறாக ஆண் ஆதிக்கசாதியாக இருக்கும்பட்சத்தில் அரிதாகவே இதுபோன்று நேரும். ஆணதிகாரம் இயல்பாக இருக்கும் நம் சமூகத்தில்

கண்ணோட்டம்
களந்தை பீர்முகம்மது  

கனவில் சாத்தியப்பட முடியாத விஷயங்களைக்கூட சாத்தியப் படுத்திவிட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இத்தகைய கனவு, நிகழ்வாக வேண்டுமானால் அங்கே நம்மைத் தவிர வேறு எவருமில்லாத கிரகம் ஒன்று வசப்பட வேண்டும். ஆனால் பொதுச் சமூகம், நிஜ வாழ்க்கை என்ற எதிர்கொள்ளலில் வரும்போது நம்முடைய எல்லா விருப்பங்களும் ஓர் அடைப்புக்குறிக்குள் வந்து குவிந்துவிடாது. கொடுப்பதும் எடுப்பதுமான இழைப்பின்னல்கள் வண்ணமயமாக ஊடுருவி வருவது பொதுச் சமூகத்தின் இலக்கணம். அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் மட்டுமல்ல மனித மனங்களின் ஒருங்கிணைப்புக்கும் அறிவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் எனச் சிலவற்றை ஏற்றுக் கொள்வதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடாது.

 

‘நீரின்றி அமையாது உறவு’ என்ற கட்டுரைத் தலைப்பு ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறள் வரியின் உலகளாவிய பொதுச்சிந்தனையின் பிரதிபலிப்பாகும். அந்த ‘உறவு’ என்ற ஒரு சொல் தமிழகத்திற்கும் அதன் அண்டை மாநிலங்களுக்குமிடையே நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நீராதாரமான வாழ்வாதாரப் பிரச்சனையின் உட்பொருளை மிகவும் கூர்மைப்படுத்தியுள்ளது. ‘இந்திய தேசிய ஒருமைப்பாடு’ என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தனது மனம், மொழி, மெய் மூன்றின் உட்சுவாசமாக ஏற்றுச் செயல்பட வேண்டுமென்ற நமது அரசியல் சாசனத்தின் ஆணிவேர், மேற்கண்ட நதிநீர்ப்பிரச்சினையால் ஆட்டம் கண்டுகொண்டிருப்பதை நமது ஆட்சியாளர்கள் கண்ட

கட்டுரை
எஸ்.வி. நாராயணன்  

அரசியல் - பொருளாதார மாற்றம் என்பது, ஒரு சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தனக்கு அனுகூலமான அரசியல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தித் தன்வயப்படுத்தும். அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவச் சமூகம், 15ஆம் நூற்றாண்டு முதல் பல வடிவங்களில் உலாவரும் முதலாளித்துவச் சமூகம்வரை அனைத்திலும் இதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். உற்பத்தி முறை மற்றும் அதன் இயல்புகள், சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் தனது குணங்களை ஒன்றிணைக்கும். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் பின்புலமாகவும் கூட்டாளியாகவும் இருந்த கத்தோலிக்க மதநெறிகளுக்கு எதிராக, அரசியல் - பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உருவான ப்ரொடஸ்டண்ட் பிரிவு, முதலாளித்துவ அமைப்பின் தன்மைகளை உள்வாங்கியதை மாக்ஸ் வெ

கட்டுரை
பெருந்தேவி  

தமிழகத்தில் காதலுறவு மற்றும் மணவுறவு சார்ந்து தலித் மக்களுக்கெதிராக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை மற்றும் படுகொலைகள் பற்றிய சொல்லாடல்களை விவாதிக்கிறது இக் கட்டுரை. முதலில் என்னுடைய சமூக-பண்பாட்டு இடத்தைச் சொல்லவேண்டும். என்னுடைய பார்ப்பனப் பிறப்படையாளம் சாதிப்படிநிலையில் ஆக்கிரமிக்கும் ‘பயன்மிக்க இடம்’ இருவகையுணர்வுகளில் என்னை ஆழ்த்துகிறது. ஒன்று, சாதிப்படி நிலையில் ஆகவுயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிற சாதி என்பதால் சாதியின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு வன்முறையிலும் எனக்கும் என் சாதிக்கும் பங்குண்டு என்கிற குற்ற உணர்வு; இன்னொன்று, பால்படிநிலையில் ஒடுக்கப்படுகிற இடத்தில் இருப்பதால், சில ஒடுக்கு மு

கட்டுரை
ஞாநி  

இனி வந்தாலும் எதிர்க்குமா? ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது மன்னன் நீரோ வயலின் வாசித்த கதைபோல, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட அன்று நான் ஆல் இந்தியா ரேடியோ நிகழ்ச்சிக்கான இசைப் பயிற்சியில் பாங்கோஸ் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 21. எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக ஆவதுதான் என் லட்சியமாகப் பள்ளி நாளிலிருந்தே இருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் என் அப்பா மூத்த பத்திரிகையாளராக இருந்தார். ஆனால் அங்கே எனக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. காரணம் அப்பாதான். அவர் நிர்வாகத்துக்கும் வேண்டாதவராக இருந்தார், தொழிலாளர்களுக்கும் வேண்டாதவராக இருந்தார். காரணம், ஒரு வேலை நிறுத்தம். பத்திரிகையாளன் என்பவன் வேலை நிறுத்தமே செய்யக

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

செண்பகவல்லி அணை திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, சங்கரன்கோவில் வருவாய் வட்டங்களில் சுமார் 12,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் வழங்கி வந்தது. இந்த அணையைக் கட்டி அதன் தண்ணீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சிவகிரி ஜமீனுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 1733ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் சிவகிரி அருகே அமைந்திருந்தாலும் கேரள மாநில எல்லைக்குட்பட்டிருந்தது. 1965ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்துவிட்ட நிலையில், அந்த உடைப்பை காரணமாகக் காட்டி, தமிழகம் அங்கே மீண்டும் அணை கட்டுவதைக் கேரள அரசு தடுத்து வந்தது. உடைந்த அணையினை மீண்டும் கட்டுவதற்கு ரூ. 10,29,732 செலவாக

அஞ்சலி: எம்.எஸ். விஸ்வநாதன் (1928- 2015)
அ. பரஞ்சோதி  

சில நாட்களுக்கு முன் யதேச்சையாய் யூட்யூபில் துழாவிக் கொண்டிருந்தபோது, ஒரு நாதஸ்வர இசைத்துணுக்கு கேட்கக் கிடைத்தது. அமரர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் வாசித்தது. ஆபோகி ராக ஆலாபனையில் தொடங்கி அமர்க்களமாகத் தொடர்ந்தது. பாடலுக்கு வந்து சேர்ந்தபோது இனிய அதிர்ச்சியை உணர்ந்தேன். ஆமாம், விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான ‘கலைக்கோயில்’ படத்தில் இடம்பெற்ற ’தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் அது! ஆமாம். எம்.எஸ். விஸ்வநாதன் என்ற இசை விஸ்வரூபம், திரையிசையோடு மட்டும் மீந்துவிடுவது அல்ல. திருவுருக்களின் மரணத்தையொட்டி அஞ்சலிக் கட்டுரைகளும் இழப்பின் பெறுமானத்தால் கனத்த பாராட்டு மொழிகளும் பொங்கிப் பிரவகிப்பது இயல்புதா

அஞ்சலி: ஒமார் ஷரிஃப் (1932 - 2015)
எஸ். ஆனந்த்  

ஒமார் ஷரிஃப் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர். அவர் நடித்த ‘Lawrence of Arabia’, ‘Doctor Zhivago’ ஆகிய இரு படங்களும் உலகத் திரையரங்கில் மங்காத புகழும் உலகளாவிய ரசிகர்களும் அவர் பெறக் காரணமாயின. ஊடுருவும் கண்களும் மிடுக்கான நடையும் அரசகுமாரன் போன்ற தோற்றமும் கொண்ட ஒமார் ஷரிஃப் வழக்கமாக நாம் அறிந்திருக்கும் ஹாலிவுட் நடிகர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுபவர். ஒமார் ஷரிஃப் கத்தோலிக்கக் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர். லெபனானிலிருந்து புலம் பெயர்ந்து எகிப்தில் குடியேறி வாழ்ந்த வசதியான குடும்பம். இயற்பெயர் மிகாயில் டிமித்ர

அஞ்சலி
ஸ்டாலின் ராஜாங்கம்  

டி.எம். உமர் பாரூக் என்றறியப்பட்ட டி.எம். மணி என்ற தலித் தலைவர் கடந்த ஜுன் மாதம் 5ஆம் தேதி நெஞ்சுவலியால் காலமானார். கும்பகோணம் திருப்பனந்தாள் வட்டாரங்களில் செயல்பட்டு வந்த ‘நீலப்புலிகள்’ இயக்கத்தின் தலைவர் அவர். சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் அமைப்புகளும் எல்லா இடங்களிலும் அந்தந்த வட்டாரச் சூழலுக்கேற்ப செயற்பட்டு வந்திருக்கின்றன. இந்தவகையில் நாம் பார்க்கத் தவறிய, பார்த்தும் உரியவிதத்தில் பொருத்திப் புரிந்துகொள்ளத் தவறிய பல்வேறு கடந்தகால அனுபவங்கள் இங்கிருக்கின்றன. ஒடுக்கப்பட்டோரின் போராட்ட மரபில் எழுச்சியும் தேக்கமும் இருந்திருக்கின்றன என்றாலும் அவற்றை அறுபடாமல் காத்து வந்தவை வட்டார அளவிலான இத்தகைய அமைப்புகளே. இந்த வட

நேர்காணல்: அஷிஸ் நந்தி
 

பொதுத்தளத்தில் வெகுசிலர்தான் நீங்கள் கிறிஸ்தவர் என்று அறிவார்கள், உங்கள் பெயரைக் கொண்டு உங்கள் மத அடையாளத்தை அறிவதும் சாத்தியமற்றது. கிறிஸ்தவ சமூகத்தின் மீதான தாக்குதல்கள் உங்களைப்போன்ற ஒரு நபரைத் தனிப்பட்ட முறையில் எவ்வாறு பாதித்திருக்கின்றன? அவை என்னை வருத்தத்துக்குள்ளாக்கியிருக்கின்றன, ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல்கள் இவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது கொஞ்ச காலமாகவே நடந்துவருகிறது. மக்களில் ஒரு பகுதியினர், அவர்களுடைய சமூகம் இந்திய மக்கள்தொகையில் 2.5 அல்லது 1.5 சதவீதமே இருந்தாலும் பாதுகாப்பாக உணரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இது நம் அரசியல் பண்பாட்டின் மீதான துன்பம் நிறைந்த விமர்சனம். வேறுபாடுகளை ஏற்க இயலாமை தற்

உரை
கண்ணன்  

(ஏப்ரல் 28, 2015 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கில் ஞானக்கூத்தன் தலைமையில் நடந்த, ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை) வணக்கம். கிருஷ்ணா ஸ்வீட்ஸும் இலக்கிய வீதியும் இணைந்து இன்று மாலை இந்த நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது. இனியவனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்விற்கு ஒரு பார்வையாளனாக மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன். அதே நேரம் மேடையில் தயக்கத்துடனேயே ஏறியிருக்கிறேன். காரணம் ஒரு எழுத்தாளனை, வாசகரும் விமர்சகரும் மதிப்பிடும் இடத்தில் குடும்பத்தாருக்கு எந்த இடமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இருப்பு இடையூறானது என்று சொல்லலாம். ஒரு கணவராக,

 

கதைகளின் காடு நேற்றும் அவள் உன் கதவுகளைத் தட்டினாள். நீண்ட பாதையும் பாதையெங்கும் அபினித் தாவரங்களும் முளைத்த அதன் மறுபுறத்தினுள் கையில் ஒரு ஆயத்தக் கவிதையுடன் உன் அனுமதியின்றியே நுழைந்து தாளிட்டுக்கொண்டாள். சோகை நிலவொளியின் கீழ் தன் செம்முனை விரல்களைக் கொடுத்துக் கதைகளின் காட்டிற்குள் தன்னை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டாள். விரல்களின் வனத்திலிருந்து முளைத்தெழும் வார்த்தைகள் ஏற்கெனவே நீ அறிந்தவையெனப் பிரமை கொள்ளும்படி அவற்றிலிருந்து எழுந்தனர் புதிய கதை மனிதர்கள். அவர்களை நீ எழுப்பியதாகவே உன்னை நம்பச் செய்து புன்சிரிப்புடன் அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். உன் குரல் வழியே உருவாகும் தனித்த வெளியும் காலமும் அவளுடைய மௌனச் செவியுறலின் மோசமான மொழிபெயர்ப்புகளென்பதை அறிந்துகொள்ளாமலேயே கதை

பத்தி: மாற்று அடையாளங்களைத் தேடி...
அனிருத்தன் வாசுதேவன்  

அந்த சன்னலைத் திற, நான் கடலைப் பார்க்க வேண்டும் -- ரொஸாலியா தெ காஸ்த்ரோ ஸ்பெயின் நாட்டின் வடமெற்குப் பகுதியில் உள்ளது கலீஸியா. அழகிய மலைத்தொடர்களையும், எண்ணற்ற வளைவுகளையும், கடலால் குடைந்தெடுக் கப்பட்ட குறுகிய நீர்க்குகைளையும் கொண்ட கலீஸியாவின் நீண்ட கடற்கரை அட்லாண்டிக் கடலைத் தழுவி நிற்கிறது. சமீபத்தில், ‘Implicadas No Desenvolvemento’ என்ற பெண்ணிய அமைப்பின் விருந்தினனாக கலீசியாவில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. மொழி, இலக்கியம், கலை, அரசியல் குறித்துப் பலருடன் விவாதிக்கவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக இப்பயணம் அமைந்தது. இன்று ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கலீஸியாவில், கலீஸிய நிலம், கலீஸிய மொழி, கலீ

கதை
 

வேலு கரும்புத்தோட்டத்திலிருந்து வெளியேறி கோவிலுக்குப் போகும் ரோட்டுப்பாதைக்கு வந்து நின்றான். தூரத்தில் தப்பட்டைகளின் ஓசையும் அதைத்தொடர்ந்து குலவையிடுகிற சத்தமும் கேட்டன. அதிகாலைக் குளிர் தெரியவில்லை. ஊரே கதகதப்பாக இருப்பது போலிருந்தது. ஊரைச்சுற்றிலும் அக்னி எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. முல்லையாற்றுத் தண்ணீர் தீச்சட்டியில் தனது நிறமாறி ஓடிக்கொண்டிருந்தது. செம்மணலோடும் கருத்த கரையோடும் அதன் உடம்பு நீண்டு கிடந்தது. கொதிப்பு ஏறிக்கொண்டிருந்தது. தன்னிடம் முங்கிக் குளித்து எழுபவர்களின் வேதனையைத்தான் தன்மேல் படர்த்தி ஓடுகிறதுபோல. வேலு சாலையின் இருபுறத்தையும் பார்த்துக்கொண்டான். இன்னமும் விடியவில்லை. இருபுறத்திலும் கடைகள் வி

கட்டுரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

சோழர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும், தமிழர்களின் சமூக வாழ்வில் சைவ, வைணவ சமயக்கோவில்கள் மிகுந்த செல்வாக்குடன் விளங்கின. வழிபடும் இடமாக மட்டுமின்றி, விளைநிலங்களுடனும் கால்நடைகளுடனும் கலை, கல்வி, மருத்துவம் ஆகியனவற்றுடனும் நெருக்கமான பிணைப்பு கொண்டிருந்தன. இதன் அடிப்படையில் சைவ, வைணவ சமயக்கோவில்கள் பொருளியல் நிறுவனமாகவும், பண்பாட்டு நிறுவனமாகவும் ஒருசேர விளங்கின. பொருளியல் நிறுவனம் என்ற நிலையில் பெரிய நிலவுடைமையாளராகக் கோவில் காட்சியளித்தது; கோவில் நிலங்களை உழுது பயிரிடும் உழுகுடிகள், கோவிலைச் சார்ந்தே இருந்தனர். இவர்கள் செலுத்திய குத்தகை, கோவிலின் முக்கிய வருவாயினமாக அமைந்தது. மன்னர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள், பெருநிலக்

விவாதம்
இ. அண்ணாமலை  

‘கரைஒதுங்கிய திமிங்கலம்’ (காலச்சுவடு, ஜூலை, 2015) என்ற தலைப்பில் ஆ.இரா. வேங்கடாசலபதி, எம்.ஏ. நுஃமானின் ‘தமிழ்ப் பகைவரும் தமிழ் வெறியரும்’ என்னும் கட்டுரைக்கு (காலச்சுவடு, மார்ச் 2015) எழுதியுள்ள எதிர்வினையில் “நவீன மொழியியலும் தமிழ் மரபு இலக்கணமும் உரையாடி இருந்தால் எவ்வளவோ புலமை உண்மைகள் வெளிப்பட்டிருக்கலாம்” என்று எழுதுகிறார். நுஃமான் கட்டுரையின் கருத்தும் இதுவேதான். அவ்வாறு உரையாடல் நிகழாததற்கு நுஃமான் காரணம் சொல்கிறார். தமிழ்த் தேசியவாதம் இதற்குக் காரணம் என்பதை மரபுத் தமிழறிஞர்களுக்கு மொழியியல்மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியைச் சான்றுகாட்டி விளக்குகிறார். இந்த நிலைக்குத் தமிழ்த் தேசியவாதம் முழுக் காரணம் இல்லையென்றாலும், அது முக்கியமான காரணம் எ

விவாதம்
எம்.ஏ. நுஃமான்  

காலச்சுவடு 183 (மார்ச் 2015) இதழில் வெளியான ‘தமிழ்ப் பகைவரும் தமிழ் வெறியரும்’ என்ற எனது கட்டுரைக்கு தமிழ்ப் பழமைவாதிகள் மத்தியிலிருந்து தீவிரமான எதிர்ப்பு வரக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைபோல நான் எதிர்பார்த்திராத வகையில் இன்றைய தமிழ்நாட்டின் முக்கியமான ஆய்வறிவாளர்களுள் இருவர் எனக் கருதப்படுகின்ற நண்பர்கள் ஆ. இரா. வேங்கடாசலபதி, க. பஞ்சாங்கம் ஆகியோரிடமிருந்து தீவிரமான எதிர்வினைகள் வந்திருக்கின்றன (காலச்சுவடு 187, ஜூலை 2015). தமிழ், தமிழ்ப்புலமை, தமிழ் வளர்ச்சி என்று வரும்போது ‘கொம்பனான’ ஆய்வறிவாளர்கள்கூட தமிழ்த் தேசியவாதத்தால் காயடிக்கப்பட்டு கூர்மழுங்கிப்போய்விடுகிறார்கள் என்பதற்கு இவர்களின் எதிர்வினைகள் தகுந்த

அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டு
ஆ. திருநீலகண்டன்  

1917 ஜூலை முதல் அக்டோபர்வரையிலான கால அளவிற்குள் ‘திராவிடன்’ நாளேட்டில் அயோத்திதாசரின் சிந்தனைப் பதிவுகள் சிலவற்றையும் கண்டடைய முடிகின்றது. இவ்வகையில் ஏழு பதிவுகள் உள்ளன. இவை அனைத்தும் அயோத்திதாசர் தொடங்கி நடத்திவந்த ‘தமிழன்’7 வார இதழில் 1907 முதல் 1912 வரை அமைந்த பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதியவை. ஆனால், அயோத்திதாசர் மறைந்த (1914) பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்துத் தொடங்கப்பெற்ற ‘திராவிடன்’ இதழில் இவை மீள் பதிவாகியுள்ளன. இக்கட்டுரைகளை மீள்பதிவு செய்தவர்கள் இவற்றைத் தம் சொந்தப் படைப்புகள் என்பதாகவே பதிவுசெய்துள்ளனர். கிடைத்துள்ள எந்த ஒரு கட்டுரையிலும் மூலக்கட்டுரையாளரான அயோத்திதாசரது பெயரோ அல்லது மூலக்கட்டுரைகள் வெளிவந்த ‘தமிழன்&rs

மதிப்புரை
க.வை. பழனிச்சாமி  

பயணம் (நாவல்) வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் - 629 001 பக்கம்: 390 விலை: ரூ.350 தமிழில் நிறையவே நாவல்கள் வந்துகொண்டி ருக்கின்றன. நாவல், மரபான வார்த்தைகளும் புதிய வார்த்தைகளும் சேகரமாகும் இடமாக மாறுகிறது. மொழியின் பல்வேறு சாத்தியப்பாடுகளை அரங்கேற்றும் தளம்தானே இலக்கியம். நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. நல்ல நாவல்கள் என்று சிலவற்றையே திரும்பத் திரும்பச் சொல்வது. நிகழ்காலத்தில் காலூன்றாதவர்களின் புலம்பல் அது. வாசிக்காதவர்கள்தான் புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். சங்க இலக்கியங்களிலிருந்து இன்று வரையிலும் உள்ள புத்தகங்களில் வாசிக்கப்படாத புத்தகங்களே அதிகம். ‘பயணம்’ நாவலை வாசிக்க அதற்கான மனம் வேண்டும். அக்கறையோடு வாசித்தால் அந்த மனம் தானாக உ

பத்தி: காற்றின் கலை
பி. ரவிகுமார்  

ஆண்டு 1993. ஆகஸ்டு மாதத்தில் ஒரு மூட்டமான குளிர் விடியல். மழை மந்த காலத்தில் பெய்து கொண்டிருந்தது. இரவில் கொஞ்சம் கூடத் தூங்கவில்லை. ஏதோ துர்க் கனவுகளால் உறக்கம் முறிந்து போயிருந்தது. என்னுடைய மூத்த சகோதரி மரணத்தைக் காத்துக் கொண்டு கிடக்கிறார். மருத்துவர்கள் கைவிட்டிருந்தார்கள். புற்றுநோய் அவருக்கு. இதயத்தையும் சுவாசப் பைகளையும் கல்லீரலையும் கேன்சர் விழுங்கியிருந்தது. மிச்ச மிருந்தவை உணர்வு மங்கிய மூளையும் கறுத்து மெலிந்து அகோரமாகியிருந்த உடலும் மட்டுமே. அக்காவுக்கு என்னிடம் மிகுந்த அன்பு. எல்லாருக் கும் இளையவன் என்பதனாலாக இருக்கலாம். நான் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும்போது பஷீரைப் பற்றியும் கேசவதேவைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தது அவர்தான். பாத்துமாவின் ஆடு, பால்யகால சகி ஆகியவற்றை வாச

புத்தகப் பகுதி
பயணி  

How many people speak the same language even when they speak the same language? - Russell Hoban மொழிபெயர்ப்பின் நுண்ணிய சிக்கல்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம். அடிப்படையில் அவை மொழிகள் தோன்றியது பற்றிய புரிதலை வேண்டுகின்றன. அவை மூல மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களுக்கு ஈடான சரியான சொற்களை வேறொரு மொழியில் கண்டுபிடிப்பது பற்றிய சிக்கல்கள் அல்ல. ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள ஒரு மனித சமூகத்தின் கூறுகளை இன்னொரு சமூகத்துக்கு எடுத்துச் செல்லுவதில் உள்ள சிக்கல்கள் அவை. இதைச் செய்துவிட முடியாது என்பதும் ஆனாலும் செய்தாக வேண்டும் என்பதும்தான் மொழிபெயர்ப்பின் இரு முக்கிய நிஜங்கள். இதனால்தான் மொழிபெயர்ப்பின் வரிகள் பேரார்வத்திலும் நிராசையிலும் அவநம்பிக்கையிலும் மூர்க்கவெறியிலும் தோய்த்து

உள்ளடக்கம்