தலையங்கம்
 

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தில் தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்டதோடு அம்மக்கள் இழுக்கவிருந்த மாரியம்மன் கோவில் தேரும் எரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரிலும் விழுப்புரம் மாவட்டத்திலும் பதற்றம் நிலவி வருகிறது. வெவ்வேறு சூழல்களை ஒட்டித் தமிழகத்தில் பரவலாக நடந்து வரும் சாதிய தாக்குதல்களுக்கான வரிசையில் சேஷ சமுத்திரம் என்கிற பெயரும் இப்போது சேர்ந்துள்ளது. தொடர்ச்சியான இப்போக்கில் ஆக்கபூர்வமான தலையீடு ஏற்படாமல் வன்முறைகள் தொடர்வதும் அதிகரிப்பதும்தான் இன்றைய சிக்கல். இதுபோன்ற நிகழ்வுகளின்போது மௌனம் காக்கப்படுகிறது அல்லது பெயரளவில் பேசிவிட்டு அடுத்த பிரச்சினைக்கு அவசரமாக நகர்ந்துவிடும் அடையாள அரசியல் நடக்கிறத

கண்ணோட்டம்
கண்ணன்  

மதுவின் தீமைகள் தமிழ்ச் சமூகத்தை மிக ஆழமாகப் பாதித்துள்ளன. வருமானத்திற்காக மதுவைப் பரப்புகிறது அரசு. சொந்த வருமானத்திற்காகவும் கட்சி நிதிக்காகவும் அரசியல் தலைவர்கள் மதுவைத் தயாரிப் பதிலும், மது அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் உள்ளனர். ‘இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்மது’ என அழைக்கப்படும் ரசாயன சாராயம் தமிழக அரசியலில் இன்றியமையாத இடத்தைப் பெற்று வேரூன்றியுள்ளது. மதுவிலக்கு கோரும் போராட்டங்கள் அதன் பாதிப்பை நமக்கு உணர்த்துகின்றன. மதுவால் சமூகத்தில் ஏற்படும் சரிவுகளை ஆழ்ந்த கரிசனத்துடன் நோக்கி, தீர்வுகளை நுட்பமான தளங்களில் விவாதித்து ந¬ முறைப்படுத்த வேண்டியது மிக அவசியம். இத்தீங்குகளை எதிர்கொள்ள வேண்டிய முறைமைகள் பற்றிய விவாதம் இன்னும் தொடங்கப்படாமலேயே முடங்

கட்டுரை
கருணாகரன்  

தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 50,98,927 வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களுடன் முன்னிலை வகித்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பலத்தைப் பெறவில்லை. ஆகவே ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. தம்மோடு இணங்கக் கூடிய சக்திகளோடு கூட்டு வைத்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆசனங்களைப் பெற்றது. குறிப்பாக மலையகக் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் இந்தத் தடவை அது தன்னுடைய பங்காளிகளாகக் கொண்டிருந்தது. எனவே இதற்கு அப்பால் புதிய ஆதரவுச் சக்திகளைத் தேடிப்பிடிக்க வேண்டும். அப்படியென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை நாட வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குப்

அஞ்சலி
தனபாலன் பத்மநாபன்  

2003ஆம் வருடம் பட்டாம்பூச்சி என்ற குழந்தைகளுக்கான மின்னிதழை நடத்திக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் பள்ளி மாணவர்களுடன் உரையாடும்போது, அப்துல் கலாம் என்ற மனிதர் குடியரசுத் தலைவர் என்ற பிம்பத்தைத் தாண்டி மாணவர்களின் மனதுக்கு நெருக்கமான ஓர் ஆதர்சத் தலைவராக உருவாகி வருவதைக் கண்கூடாக அறிந்தேன். பட்டாம்பூச்சி மின்னி தழில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் எழுத முடியுமா என்று அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பத்து கேள்விகளை அனுப்புங்கள் என்று அவரிட மிருந்து மறுநாள் பதில் வந்தது. அவருடனான எனது நட்பு இப்படித் துளிர்த்ததுதான். அதிகாரவர்க்கம் மூர்க்கமாக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், கடைக்கோடியில் இருக்கும் இளைஞனுக்கு ஒரு மின்னஞ்சல் வழியாக ஜனாதிபதியுடன் துளிர்த்த நட்பை, 12 வர

அஞ்சலி
சுப. உதயகுமாரன்  

எளிமை, இனிமை, பொதுவாழ்வில் தூய்மை என வாழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல் கலாம், மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகப் போற்றுதலுக்கு உரியவர் தான். இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளை, பட்டங்களைப் பெற்ற அவரோடு சராசரி மனிதர்களாகிய நமக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கோபதாபங்களோ, விருப்பு வெறுப்புகளோ இருக்க முடியாது, இல்லவும் இல்லை. ஆனாலும் பொதுவாழ்வில் இருந்தவர் என்கிற முறையில் அவரது எண்ணங்களோடு, கருத்துக்களோடு, அணுகுமுறைகளோடு, செயல்பாடுகளோடு நமக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. மரணித்து விட்டார் என்பதற்காக மட்டுமே அவற்றை மறக்கவோ மறைக்கவோ முடியாது, கூடாது. அப்துல் கலாம் போன்றோரின் வாழ்க்கையை, பங்களிப்புகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்

அஞ்சலி
சாவித்திரி கண்ணன்  

2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாத மத்தியில் தமிழகத்தில் மதுவின் தாக்கம் குறித்த கள ஆய்வில் நான் ஈடுபட்டிருந்தபோது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கவேலு, “எங்க ஊர்க்காரர் சசிபெருமாள் என்று ஒருவர் ஜனவரி 30அன்று சென்னை மெரினா காந்தி சிலை முன்பு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்தார்.அவரைக் கைதுபண்ணி புழல் சிறையிலேயே வச்சிருக்காங்க. இப்பவும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடலை...” என்றார். நான் அதிர்ச்சியுடன், “இப்ப 18 நாளுக்கு மேலாயிடுச்சே... இன்னுமா உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அப்ப அவரைப் பார்க்கணும். இந்த புத்தகத்திற்காக மட்டுமில்ல. அவரது உண்ணாவிரதத்தை இந்த உலகத்திற்கு தெரிவிப்பதற்காகவும் தான்” என்றேன். என் ஊடக நண்பர்கள் பலருடன் இந்த ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொண்டேன். ஆயி

கட்டுரை
பெருந்தேவி  

சென்ற இதழில் வெளியான ‘கௌரவக் கொலை எனும் பயன்பாடு’ கட்டுரையின் இரண்டாம் பகுதி புராணக்கதை: மாரியம்மன் அவபுருஷனைத் தின்னுட்டு மெர மனைக்குப் போனாங்க. ‘மெர மனை’னா என்னனு தெரியுமா? அதாங்க சத்தாபரணம் (சேலம் பகுதியில் மாரியம்மன் திருவிழாவின் இறுதியில் நடக்கும் அம்மன் ஊர்வலம் இது). ஏன் அப்படிச் சொல்றாங்கனு தெரியுமா? மாரியம்மன் கவுண்டர் சாதியில் பிறந்தவ. அவ சிறு குழந்தையா இருந்தப்பவே அம்மா, அப்பா இறந்துட்டாங்க. ஒரு பறையர் அவளை எடுத்து வளத்தாரு. அவ வளர்றா. அவளை வேற யாருக்கும் கல்யாணம் செஞ்சி கொடுக்க அவருக்கு விருப்பமில்ல. தானே அவளுக்குத் தாலி கட்டினாரு. அவளுக்காக வீடு கட்டினாரு, பொருளெல்லாம் வாங்கித் தந்தாரு.ஞ் கல்யாணத் தன்னிக்கு சாயந்திரம் அந்தப் பொண்ணு சமைக்கலாம்னு நி

தியாகு  

தேவன் வானுலகிலிருந்து ஏவிய மழையில் தொடங்கி, வலுத்து வெளியே தெருக்கள்தோறும் புரளும் பெருவெள்ளம்.நோவாவின் பேழையென மிதந்திருக்கும் பலமற்ற அஸ்திவாரத்திலான ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த வீட்டில் உறைந்திருக்கிறோம் பிழைத்து, நீ நான் குழந்தைகள் சுவரில் பல்லி சிலந்தி மற்றும் தரையில் சிற்றெறும்புகள் சில. கூரை விரிசலில் ஒழுகி, சரியாக நெகிழியில் சரியும் நீர், சற்றுமுன்தான் சந்தையில் துள்ளி இந்த சமையலறையில் விழுந்த மீன்களை, நீந்தப்பண்ணிவிட பரபரப்பதை கவனித்தாயா... நிலவை குடைந்து செய்த கோப்பையோடு நீ பரிமாறிய நீர்ம இரவில் போதாமை என்கிறேன் சிறு கரண்டி துருத்திக்கொண்டிருக்கும் கிண்ணத்தை என் பக்கமாக நகர்த்துகிறாய் கொஞ்சமும் நக்ஷத்திரங்களைச் சேர்...

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

“இலக்கியம் மனிதனது மோகனமான கனவு. ஆனால் பயனற்ற கனவு என்று கொண்டுவிடுவது சரித்திரத்திற்குப் பொருந்தாத கூற்று. இலக்கியம் பிறக்கிறது, புதிய விழிப்பு மக்களிடையே பிறக்கிறது. பிரெஞ்சு புரட்சியே இதற்கு ஆதாரம். புதிய ‘உதயக்கன்னியை’ முதன்முதலாக வரவேற்பவன் கவிஞன்தான். அவனது தரிசனம் மக்களிடையே ஓர் புதிய சமுதாயத்தை சிருஷ்டித்துவிடுகிறது.” - புதுமைப்பித்தன் “திராவிடக் கட்சிகளின் போராட்டங்களால் விரட்ட முடியாத இந்தியை இளையராஜாவின் இசை விரட்டியடித்தது ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையாகும்” என்று நூலொன்றுக்கு வழங்கிய முன்னுரையில் (அ. ராம சாமியின் ‘ஒளி நிழல் உலகம்’, டிசம்பர் 2004, காலச்சுவடு பதிப் பகம்) எழுதியிருப்பார் ரவிக்குமார். இளையராஜா பற்றிய இக்கூற்றை

கட்டுரை
 

‘தமிழ் மொழி வளர்த்தல் அல்லது தமிழ் பாஷையை அபிவிர்த்தி செய்யும் மார்க்கங்கள்’ என்றொரு நெடுங் கட்டுரையைப் ‘புலமை’ ஆய்விதழ் முப்பது ஆண்டுகளுக்கு முன் (1983 ஜூன்) மறு வெளியீடு செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்றப்பட்ட ஒரு பொதுச் சொற்பொழிவே அக்கட்டுரை. தமிழை வளர்ப்பதற்குப் பல வழிகளை முன்வைத்த அவ்வுரை ‘சுயபாஷையில் கல்வியை வளர்க்குதல் யாவருக்கும் இனிதே’ என்று தொடங்கியது. வடமொழி சிறந்த அறிவு மொழியேயாயினும் அது பண்டித மொழி என்றும், மாறாகத் தமிழோ ‘முற்காலத்தைப் போல இப்பொழுதும் ஜனங்களுக்குத் தாய்ப் பாஷையாக இருக்கிறது’ என்றும், ‘நம்மைப் பெத்ததும் தமிழ், வளர்த்ததும் தமிழ், நம்மைத் தாலாட்டி தூங்கவைத்ததும் தமிழ்’ என்றும், &

கட்டுரை
எம். பௌசர்  

துரைராஜா தம்பிமுத்து (1915 - 1983) “எல்லோரிடமும் கவிதை குடிகொண்டுள்ளது. பிரபஞ்சம் பற்றிய மனதின் விழிப்புணர்வே கவிதை. அது அனைத்தையும் அரவணைக்கிறது. எங்கும் நிறைந்த அச்சக்தி கடவுளைக் கண்டுகொள்ள முடியாததைப்போன்று தோன்றிடினும் அது சிந்தையைச் சதாகாலமும் இயக்குகிறது. வாழ்வின் ஆதாரங்களுக்கு இட்டுச் செல்வது கவிதை” 1938இல் இலங்கையிலிருந்து தனது இருபத்துமூன்றாவது வயதில் இங்கிலாந்துக்குக் கப்பலில் வந்து சேர்ந்த ஒரு இளம் கவிஞன், ஆண்டு காலத்திற்குள் ஆங்கிலக் கவிதை உலகினுள் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல கவிதை இதழொன்றின் ஆசிரியராகப் பரிணமித்து இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் அறியப்பட்டார் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வன்று. அதுவொரு வரலாறு, தேடிக் கண்டடையப்பட

திரை
ப்ரஸன்னா ராமஸ்வாமி  

நானொரு ஆசியன் கடவுளர்களின் கண்டத்தைச் சேர்ந்தவன் சமுத்திரங்களின் சொர்க்கத் தீவில் வடகுடாவின் வெப்பத் தெருக்களில் காட்டுப்பறவை. நீங்கள் அறியீர்கள் என்னை கட்டப்பட்ட புனைகதைச் சுவடிக்குள் சிறையிடப்பட்டது எனது வரலாறு, உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நான் உங்கள் தாழ்வாரங்களை நிரப்பும் வேண்டப்படாத அசுத்த விருந்தினன், தேசங்களின் எல்லைகளைத் திருட்டுத்தனமாகக் கடக்கும் கள்ளக் குடியேறி, சமரசமின்றி இறப்பை ஏந்திச் செல்லும் முரட்டுப் போராளி. . . அறியீர்கள் நீங்கள் வரலாற்றின் மூத்தவேர்களில் எனக்கொரு வீடு இருந்ததை கவர்ந்து, எனது தெருக்கள் தூக்கிலிடப்பட்டதை. . . (பதுங்குகுழி நாட்கள், பா. அகிலன்) தீபன் திரைப்படம் பார்த்த பின்னர் உணவகம் ஒன்றின் புறத்தில் இருந்து, எதிரே சாலையின் தடுப்பானில் பொங்கிக் கொண்டிருந்த நீ

நேர்காணல்
 

இந்த வாய்ப்பு எப்படி வந்தது? ஆடிஷன் நடந்ததா? அதில் என்ன நடந்தது? தீபன் பாத்திரத்திற்காக காஸ்டிங் இயக்குனர் பிலிப் எல்கோபி ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தபோது புதுச்சேரி நாடக இயக்குநர் குமரன் வளவன் மூலம் என்னைக் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டார். ஆடிஷன் நடந்தது. கொஞ்சம் நடித்துக் காட்டச் சொன்னார். அடுத்த சந்திப்பு இயக்குநர் ஜாக் ஓடியாரோடு. அவரும் நடித்துக்காட்டச் சொன்னார். அவ்வளவுதான். நான் தேர்வானபிறகு சில வாரங்கள் ஓர் ஆசிரியர் சினிமா நடிப்பு சொல்லிக்கொடுத்தார். ஒரு நடிகராக மேற்கொண்டு உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதுபற்றியெல்லாம் எந்தத் திட்டங்களோ கனவுகளோ இல்லை. எனது திட்டங்களும் கனவுகளும் இலக்கியம்மீது தான். மேற்கொண்டு நடிக்க வாய்ப்பு வரும்போது பார்க்கலாம். படத்துக்கும் உங்களுட

நேர்காணல்
தீபா ராஜ்குமார் - செந்தூரன்  

இந்திய அளவிலான தீவிர மேடை நாடகக் குழுக்களில் இயங்கிக் கொண்டிருப்பவர் காளீஸ்வரி. சென்னையில் வசிக்கிறார். நாடகத் திரைப்படக் கலைஞர். மாற்று நாடக அரங்குகளில் சாத்திரமான பங்களிப்புகளைக் செய்தவர். காலச்சுவடு பதிப்பகத்தின் கலை-பண்பாட்டுச் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்பவர். 2015 கான் திரைப்பட விழாவில் ‘Palme d’Or’ விருதுபெற்ற தீபன் படத்தில் நடித்திருப்பவர். மழைநாளொன்றில் தீபா ராஜ்குமாரின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் பதிவு இது. மேடை நாடகங்களிலிருந்து நாம் உரையாடலைத் தொடங்கலாமா? என்னுடைய கல்லூரி நாட்களில் தான் முதன்முறையாக மேடை நாடகங்கள்பற்றி அறிந்து கொண்டேன். அதுவரை நாடகங்கள் என்று எண்ணியிருந்தது தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் கிரேஸி மோகன் போன்றவர்களின் சபா நாடகங்களை

நபீல்  

அறைகள் புகை எட்டிப் பார்க்கிறது ஏறிநின்று மரங்கள் மேலே பொறுக்க ஏலாமல் கண்கள் அரிக்கின்றன சுறுசுறுப்படைந்த துளிர்கள் மீது வாடலை எறிகிறது நிரம்புகிறது வானமெங்கும் வெளிச்சத்தில் வழிகளில் திரும்பும் திசைகளில் அது அடர்கிறது பனிக்கால அடுப்பறையில் யாரோ சமைத்துக்கொண்டிருக்கிறார்கள் விரல்கள் குவிந்து கண்கள் தீ மிதிக்கும் முதல் ஒத்திகை ஒரு புகையை இன்னொரு புகை அணைக்கிறது புழுக்கம் நிறையும் கழிவறைகளில் போலியாக விடுகிறார்கள் மந்தை மந்தையாக மேய்ச்சல் தேடி அலைகிறது சிரிப்பில் பற்றி எரியும் குழந்தைகள் புகையை விரித்துக்காட்டி விடுகிறார்கள் எரிபொருள் திரவத்தின் தூரம் எதுவோ அதுவரை பயணிக்கிறது கொத்திக் கொத்திச் சிற்பி செதுக்கும் மா மலையிலும் தன்னைத் தானே அலங்கரிக்கிறது கோப்பையில் நிரம

கதை
 

கடைசியாக அவன் வீடு மாற உத்தேசித்தபோது வீட்டில் அவனும் அவளும் இரண்டு பிள்ளைகளும் கூடவே நான்கு பூனைகளும் இருந்தனர். அவன் பூனைகளுக்குத் தனியாகப் பெயர் வைத்திருக்கவில்லையென்றாலும் வெள்ளையன், கருப்பி, சின்ன வெள்ளையன், புலி என்பது தான் அவற்றின் அடையாளப் பெயர்களாக இருந்தன. கருப்பியின் பிள்ளைகளான சின்ன வெள்ளையனும் புலியும் குட்டிப் பூனைகள். வெள்ளையன் ஆண் பூனை என்பதால் கருப்பியைப்போல தனியாக அதற்குக் குடும்பமில்லை. ஆனாலும் வெள்ளையனும் கருப்பியும் அண்ணன் தங்கையாக இருந்ததால் அவர்கள் அனைவரும் ஒரு குடும்பம் தான். வெள்ளையன் மற்றும் கருப்பியின் அம்மா பூனையான பெரிய புலியை ஒரு பகல்பொழுதில் நாய் கடித்துக் கொன்றிருக்காவிட்டால் வெள்ளையனுக்கும் கருப்பிக்கும் இன்னும் பல சகோதர சகோதரிகள் இருந்திருப்பார்கள்.

பதிவு
பிரளயன்  

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘சக்திக்கூத்து’ நாடகம், சென்னை அலியான்ஸ் பிரான்சேஸ், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலை யிலுள்ள ‘ஸ்பேஸஸ்’ சென்னை அய்யப்பா நகரிலுள்ள கூத்துப்பட்டறையின் அரங்கம் ஆகிய மூன்று இடங்களிலும் நிகழ்த்தப்பட்டது. இருமுறை இந்நிகழ்வினைகாணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முத்துசாமி தீட்சிதர், பாரதியார் எனத்தொடங்கிச் சமகாலக் கவிஞர்கள் சுகுமாரன், சேரன், அகிலன், திருமாவளவன், அவ்வை ஆகியோரது கவிதை வரிகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருந்தது இந்நிகழ்வின் பிரதி. ‘கவிதா நிகழ்வு’, இசையிடைப்பட்ட கவிதை வாசிப்பு அல்லது இசை, நடனம், ஒருங்கிணைந்த அசைவுகள், நடிப்பு இவற்றின் மூலம் எழுதப்பட்ட கவிதைகள், கீர்த்தனங்கள், இசையுருக்கள் இவற்றிற்குக் காட்சி வடிவமளி

பாரதி நினைவு
 

தந்தை சின்னச்சாமி ஐயர் உயிருடன் இருந்த நேரத்தில் பாரதி எட்டயபுரம் ஜமீனுக்கு எழுதிய கடிதம் முதல், இறப்பதற்குச் சிறிது காலத்துக்கு முன் குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை 23 கடிதங்கள் இந்நூலில் உள்ளன. இயைந்த வரை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். பாரதி தன் பதினைந்தாவது வயதிலேயே கல்விக்காக உதவி கேட்டு ஜமீனுக்கு எழுதிய கடிதம் ஒரு கவிதைக் கடிதமாகும். 24.1.1897இல் எழுதிய அக்கடிதம் 15வது வயதில் எழுதப்பட்டுள்ளது. பிற்காலத்து பாரதியின் கவிதையில் காணப்படும் எளிமை இக்கடிதத்தில் இல்லை. பாரதியின் ஆரம்பக்காலப் பண்டித நடையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாகப் பஞ்சாலை ஆரம் பித்து நடத்தியவர் சின்னச்சாமி ஐயர். 1892இல் எட்டயபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அப்பஞ்சாலை வெள்ளையரின் நசுக்குதல் கொள

புத்தகப் பகுதி
 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நேர நெறிமுறை நிலையம்’ துருக்கி நாவலுக்கு பிரபல எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ரா விரிவான முன்னுரை அளித்துள்ளார். அந்த முன்னுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த துருக்கிய நாவலாசிரியர் என்று அஹ்மத் ஹம்தி தன்பினாரை (1901 - 62) ஒரான் பாமுக் வர்ணித்திருக்கிறார். இந்தப் பெருமைக்கு தன்பினார் தகுதியானவர்தான். இதற்கு ‘நேர நெறிமுறை நிலையம்’ என்ற இந்த நாவலும் அவருடைய மற்றொரு நாவலான ‘ஹுஸுரும்’ (A Mind At Peace) சாட்சி பகருகின்றன. பழைய ஆட்டமன் பேரரசு காலகட்டத்தில் பிறந்து கல்வி பெற்ற தன்பினார், நிச்சயமாக ஒரு பெரும் கலைஞர், சிந்தனையாளர் என்பதில் சந்தேகம் இல்லை. அவரால்

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

கவிதை விமர்சனத்தில் பெரிதும் பயன்படும் சொற்களில் ஒன்று மிகையுணர்வு. ‘உள்ளதை உள்ள படியே சொல்வதற்குக் கலை என்ற தளம் எதற்கு? ’என்ற எதிர்க் கேள்வியினடியாகப் பிறப்பது மிகையுணர்வு. எழுபதுகளில் தீவிரமாகச் செயல்பட்ட வானம்பாடி இயக்கத்தின்மீது சுமத்தப்பட்ட புகார்களில் முதன்மையானது. கவிதைக்குள் மிகையுணர்வு இயங்கலாமா கூடாதா என்பதற்கெல்லாம் நிரந்தரமான வரையறை எதுவும் இருக்க முடியாது. சமகாலத்தில் எழுதப்படும் கவிதைகளில் இவ்வுணர்வு இல்லாதவை சொற்பமே. அதாவது, வானம்பாடிகளை விமர்சித்து ஒதுக்கியவர்களின் வாரிசாகத் தம்மை விளம்பிக் கொள்கிறவர்கள் வானம் பாடிக் கவிதைகளை எழுதும் முரண்நகையின் காலம் இது என்று சொல்லலாம். ஆனால், மிகையுணர்வுக் கவிதைகள் கவிதையின் ஒருவகை. அவற்றின் பொதுக் குணம், அதீதத் தழு

மதிப்புரை
க. இந்திரசித்து  

சில்வியா பிளாத்தின் கவிதைகளை உள வெளிப்பாட்டுக் கவிதைகள் (confessional poetry) என்றும் பெண்ணியக் கவிதைகள் என்றும் கூறுவர். தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி கவிதை நூல் முழுவதிலும் மரணம் பற்றிய விழைவும், பாலியல் பற்றிய விருப்பமும் மேலோங்கி நிற்பதைக் காணலாம். தாய், தந்தை, கணவன், மகன் போன்ற உறவுகளையும் பெண்ணின் உடல் செயல்பாடுகளையும் தாய்மை, குழந்தை, பிறப்பு, இறப்பு, தற்கொலை, மனநலம் போன்ற இயல்புகளையும் சில்வியா பிளாத் பாடுபொருளாக்கியுள்ளார். வரலாறு, தொன்மம், பழக்கமற்ற படிமங்கள், கடினமான மொழிநடை, இருண்மை போன்ற உத்திகளை சில்வியா பிளாத் பயன்படுத்துகின்றார். முதல்முறை வாசிக்கும்போது வாசகனால் அவ்வளவு எளிதாகக் கவிதையைப் புரிந்துகொள்ள முடியாது. கவிதைகள் வாசகனை நோக்கி இயங்கவில்லை. வாசகன், படைப்

 

தொடக்கப்பள்ளிகள் தனியார் மயமாகிப்போனதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் திரைமறைவில் அரசுப் பள்ளிகளையும் தகுதித்தேர்வு என்ற பெயரில் அரசுப்பணிக்கு விழையும் ஆசிரியர்களையும் காவு கொடுத்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழுக்கு நேர்ந்த அவலம். கௌரவக் கொலைகள் பற்றித் தமிழக முதன்மை அரசியல் கட்சிகள் காத்துவரும் கள்ளமௌனம் எப்போது கலையும்? இந்திராகாந்தியால் கொண்டு வரக் கட்டாயப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலையின் நாயகர்கள் சித்தார்த் ஷங்கர்ரே, வித்யா சரண்சுக்லா, ஓம்மேஹ்தா மற்றும் சஞ்சய் காந்தி ஆவர் என்பது மக்கள் மன்றத்தில் செய்திச்சிதறல். மாபாரத யுத்தத்தில் அபிமன்யுவை சக்ரவியூஹத்தில் சிக்கவைத்து வதைத்த கொடுமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அன்றைய எதிர்க்கட்சிகள் குறிப்பாக வடபுலத்தில் ஆடிய ஆட்டத்தின்

விவாதம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

‘அயோத்திதாசரை திராவிட இயக்கம் மறைத்தது’ என்ற விமர்சனக் கூற்றின் பின்புலம் என்ன? ‘திராவிடன் இதழில் அயோத்திதாசர்’ என்ற ஆ. திருநீலகண்டனின் கட்டுரையை முன்வைத்து சில புரிதல்கள். ‘திராவிட இயக்கம் அயோத்திதாசரை திட்டமிட்டே மறைத்துவிட்டது’ என்கிற விமர்சனம் வெளிவந்த நிலையில் இக்கட்டுரை எழுதப்படுவதாகக் கூறி கட்டுரை தொடங்குகிறது. எல்லா தகவல்களுக்கும் அடிக்குறிப்பு தரும் கட்டுரையாளர் இந்த விமர்சனத் தரப்பினர் யாரென்பதற்குக் குறிப்பு தரவில்லை. தலித் தரப்பு விமர்சனமே அது என்பது பலருக்கும் தெரியும் என்றுகருதி அக்குறிப்பை அவர் தவிர்த்திருக்கலாம். அயோத்திதாசரை முன்வைத்த தலித் தரப்பின் விமர்சனத்தைத் தரவுகள் அடிப்படையில் எதிர் கொள்ள வந்த முதலாவது பதிவு இது. எனில் இந்த

உள்ளடக்கம்