தலையங்கம்
 

செந்தில் மள்ளர் எழுதிய ‘வேந்தர்குலத்தின் இருப்பிடம் எது?’ என்கிற நூலையும் குழந்தை ராயப்பன் எழுதிய ‘மதுரைவீரன் உண்மை வரலாறு’ என்கிற நூலையும் அண்மையில் தடைசெய்திருப்பதாக தமிழக அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஊடகங்களால் பரபரப்புக்கு உள்ளாக்கப்படும் செய்திகளே விவாதிக்கப்படுகின்றவைகளாக மாறிவிட்ட நிலையில் இத்தடைகள் பற்றிப் போதுமான விவாதங்கள் எழாமல் போய்விட்டன. இவ்விரண்டும் தாழ்த்தப்பட்டோர் சாதிப் பிரிவி லுள்ள தேவேந்திரகுல வேளாளர் மற்றும் அருந்ததியர் பற்றி அவர்களாலே எழுதப்பட்டிருக்கும் வரலாற்று நூல்கள். தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்தபடியே உள்ளன. பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எழுந்த எதிர்ப்பு அதன் உச்சம். ஆனால்

கண்ணோட்டம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி காவல்துறை குடியிருப்பிலுள்ள அலுவலகத்தோடு கூடிய வீட்டில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை சந்தித்தோம். ஜூன் மாதக் கடைசியில் நடந்திருந்த கோகுல் ராஜ் கொலையைப் பற்றி அறிய ‘தலித் செயற்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம்’ (ICDA) சார்பாக ஆறுபேர் அவரைச் சந்தித்துப் பேசினோம். திட்டம் ஏதுமில்லாமல் பெரும் உணர்வு நிலைக்கு ஆட்பட்டு கிளம்பிச் சென்றிருந்தோம். கோகுல்ராஜ் என்ன காரணத்தினால் கொல்லப்பட்டிருப்பார் என்று ஊகிக்க முடிந்திருந்திருந்தாலும் குறிப்பான முன்முடிவுகள் ஏதும் எங்களுக்கு இருந்திருக்கவில்லை. எல்லா அதிகாரிகளையும் பார்ப்பது எங்கள் நோக்கமில்லையென்றாலும் நாங்கள் சந்தித்த போலிஸ்காரர்கள் எல்லாம் கோகுல்ராஜ் பிரச்சனை என்று சொன்னாலே பேசமறுத்துவிட்டு

 

செப்டம்பர் இதழில் வெளியான அப்துல்கலாம் பற்றிய இரு அஞ்சலிக் கட்டுரைகளும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பு ‘நல்லெண்ணத்தின் நாயகன்’ அப்துல்கலாம் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. இன்றைய சூழலில் இந்திய மண்ணில் எல்லோரும் ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருக்கும் நேர்மையை நெறியாகக் கொண்ட, மக்கள்மேல் அன்புகொண்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட ‘இதய சுத்தி’யான ஒரு மகத்தான மனிதர் அப்துல்கலாம் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. ‘ஒரு மாணவன் இரவெல்லாம் அழுது கொண்டே அவரது உடல் வைக்கப்பட்ட வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தான்’ என்பதும் இராமேஸ்வரத்தில் ‘இரவு இரண்டுமணிக்கு 13 - 14 வயது மாணவர்கள் சீருட

அஞ்சலி: எம்.எம். கல்புர்கி (1938 - 2015)
 

கன்னடக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆய்வாளர் செழுமையான எழுத்தாளர் பேராசிரியர் எம்.எம். கல்புர்கி ஆகஸ்ட் 2015, 30ஆம் தேதி கர்நாடகத்தின் முக்கிய கல்வி கலாச்சார மையமான தார்வார் நகரத்திலுள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். பண்பட்ட தார்வார் நகரம் தினசரி வாழ்விலிருந்து இடறி அதிர்ச்சியுற்றது. ஒட்டுமொத்த கன்னட இலக்கிய உலகத்தையும், கல்புர்கியின் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களையும் மாணவர்களையும் இந்தப் பேரிழப்பு அதிர்ச்சியடைய வைத்தது. 77 வயதான மூத்த எழுத்தாளரின்மீது மாஃபியாத்தனமான தாக்குதலை யார் ஏவிவிட்டிருப்பார்கள் என்பதுபற்றி ஊகங்கள் பரவிக்கொண்டிருந்தன. கவிதைகள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டு கன்னடக் காவியப்படைப்பான கவிராஜ மார்காவின் நுட்பங்கள், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறந்த ஜைன - கன்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

சில மாதங்களுக்கு முன்னால், எனக்குப் பெரிய மாமியார் ஒருவர் கோவையில் இயற்கை எய்தியபோது, அவரது அஸ்தியைக் கரைப்பதற்காக நானும் உறவினர்கள் சிலரும் நொய்யல் ஆற்றுக்குச் சென்றிருந்தோம். கோவை நகரில் ஓர் இந்துக் கோவிலுக்கு அருகே தேங்கிக்கிடந்த கருப்புநிறச் சாக்கடையை ஆறு என்று அழைத்ததும் அதில் ஒரு மாண்புமிக்க மனித உடலின் எச்சத்தைக் கரைக்க முனைந்ததும் என்னைக் கலவரப்படுத்தின. அது நொய்யல் ஆற்றுடனான என் முதல் சந்திப்பு. அண்மையில் கோவைக்குச் சென்றிருந்தபோது, முக்கியமான நூல்களை வாங்கித் தந்து என்னைப் படிக்கவைக்கும் நண்பர் சந்திரசேகர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு வெளியிட்டிருக்கும் ‘நொய்யல் அன்றும் இன்றும்’ என்னும் விரைந்து தயாரிக்கப்பட்டிருந்த மாநாட்டு மலரைத் தந்து

கட்டுரை
 

அவர் ஒப்பற்றவர், அவர் நினைத்ததைப் பேசுவதற்குத் தயங்கவில்லை. இந்திய தேசீய காங்கிரஸால் அவரைப் புறக்கணிக்கவும் முடியவில்லை, இயக்கத்தில் ஒருவராகக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால், காலம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தச் சலுகையையாவது அளிக்கும். இந்திய விடுதலைப் போரை பல அங்கங்கள் கொண்ட, வெற்றியடைந்த துன்பியற் பெருநாடகம் என்று அழைக்கலாம். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் சிக்கலான பாத்திரங்களுக்கு ஒப்பானவர்களைக் கொண்ட அது மூன்று காட்சிகளோடு முடிந்தது -திருப்பங்கள் நிறைந்த காட்சிகள். முதலாவது காங்கிரஸின் உந்துதலால் மகத்தான எழுச்சியுற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம். சந்தேகத்திற்கே இடமில்லாமல் இந்திய மக்கள் வெள்ளை ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதில் உறுதியாக இருந்தார்கள் என்பதைக் காட்டியது

அறிக்கை
லிவிங் ஸ்மைல் வித்யா  

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சாசனம். அது குறிப்பிடும் ‘அனைவரும்’ யார் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது. இந்தியா சுதந்திரம் பெற்று 68 வருடம் முழுமையடைகிறதாம். இந்த 68 ஆண்டுகளில் எத்தனையோ பிறவி-ஆண்களும் / பெண்களும் பிறந்து அரசு / தனியார் துறையில் வெவ்வேறு நிலைகளில் உழைத்து ஓய்வு பெற்றிருப்பார்கள். ஆனால், இதுகாறும் ஒரு திருநம்பிக்கோ திருநங்கைக்கோ இந்தச் சுதந்திர நாட்டில் ஒரேயொரு அரசு வேலையும் கொடுக்கப்படவில்லை. எனில், இந்தச் சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்? இந்திய நாட்டில் இந்தியப் பெற்றோர்களுக்கு பிறந்ததால் இந்தியப் பிரஜைகளானோம். ஆனால், எந்த இந்தியப் பிரஜைக்கும் உரிய குறைந்தபட்ச உரிமைகளும் கிடைக்கப்பெறாத தாய்நாட்டு அகதிகளாகத்தா

கதை
 

வேல்சில் 1916இல் பிறந்த ரோல்ட் டால் (Roald Dahl)லின் நூற்றாண்டு இது. பல சிறுகதைத் தொகுப்புகளையும், புதினங்களையும் படைத்துள்ள இவர் இரண்டாம் உலகப்போரில் Royal Air Forceஇல் பணியாற்றினார். புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரான இவரது எழுத்துகளில் மென்மையான நகைச்சுவை இழையோடுவதை உணரலாம். 1990இல் மறைந்த ரோல்ட் டாலின் கதைகளில் எதிர்பாரா முடிவுகளுக்குப் பஞ்சமில்லை. 1977இல் வெளியான ‘Hitchhiker’ எனும் கதையின் தமிழாக்கம் இது. என்னிடம் ஒரு புதிய கார் இருந்தது. அது ஒரு அற்புதமான வண்டி. 3.3 லி கொள்ளளவு கொண்ட பெரிய பி.எம்.டபிள்யு கார். அகலமான சக்கரங்கள். மணிக்கு 129 மைல் வேகம் வரை செல்லக்கூடிய வண்டி. வேகத்தைக் கூட்ட சிறப்பான ஏற்பாடு. வெளிர் நீல நிறத்திலிருந்த வாகனத்தின் உள்ளே இருக்கைகள் கர

கதை
 

ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல், கொள்ளை அழகில் குதூகலிக்கும் இரவைத் தழுவும் தாபம். கண்கள் சுட்டெரிந்தன. வாப்பாவின் கை பிடித்து ஆமையரப்பாட்ட ஆட்டுக் குட்டி வாங்கப் போன அன்றிலிருந்து இந்த ஆற்றங்கரையை இத்தனை காலமாக அவரும் பார்க்கிறார். எத்தனை அழகு, எத்தனை கோணம், எத்தனை சிலிர்ப்பு. அவர் ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருக்க வீதியில் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அவர் ஊருக்குப் புதினம். ஊர் அவருக்குப் புதினம். தீராத புதினம். அண்ணாவி சாச்சாவின் களி கம்பு... நூகு சாச்சாவின் சிலம்பாட்டம்... அலிக்குட்டி ஓடாவியாரின் தொட்டில் ஊஞ்சல். . . ஓடக்கரை பூலாமீர்சா சாச

பத்தி: மாற்று அடையாளங்களைத் தேடி...
அனிருத்தன் வாசுதேவன்  

மன அழுத்தம் குறித்த வாசிப்புகளைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று பாகங்களைக் கொண்ட பத்தியில் இது முதலாவது. ஆன் ஸ்வெட்கோவிச்சின் ‘Depression: A Public Feeling (Duke University Press, 2012)’ நூல் குறித்த என் வாசிப்பனுபவத்தையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சி இது. மன அழுத்தத்தை - அதைப் பற்றிப் பேசுவதற்குக் கிடைக்கும் வெகுசில தளங்களில் - இன்று மனநல மருத்துவம், சிகிச்சை, மருந்து என்பவற்றோடு தொடர்புறுத்திப் பேசுகிறோம், புரிந்துகொள்கிறோம். பொதுவாக மன அழுத்தத்தைப் பற்றி நாம் வீடுகளில், கல்விக்கூடங்களில், பணியிடங்களில், சமூக அமைப்புகளில், இயக்கங்களில் அதிகம் பேசுவதில்லை. அது குறித்து நாம் பேசும்போதும் பெரும்பாலும் குறிப்பிட்ட நபர்களின் மனநலன் பற்றியும் அது தனி மனித வாழ்வ

சுரா கவிதை
 

என்னை அழைக்கிறது அந்த அடிவானம் நான் உணர்ச்சிக் கடலில் துடுப்பு பிடிக்கும்போது முன்னகர்த்தி என்னை வீசும் இந்த அலைகடல் பின்னகர்த்தி என்னைச் சரிக்கும்போது என் பயணத்தின் பயனை எனக்கு அளக்கத் தெரிவதில்லை நாளாகிற்று கரை மறைந்து முகங்கள், உறவுகள் என்னைப் எப்போதும் ஆட்படுத்தும் அந்த இலைகளின் அசைவுகள் ஆழத்தின் அழகை என் மனதில் பாய்ச்சிய பள்ளத்தாக்குகளின் கரிய நிழல்கள் இவை பின்னகர்ந்து நாளாயிற்று இப்போது இருப்பது உள் நின்றெரியும் ஒரு சுடர் பார்வை குத்திய அடிவானத் திகைப்பு என் தாய் போல் காற்று அழைத்துச் செல்லும் அது அலை என்பது காற்றின் வடிவம் என் சுடர் நின்றெரிய வேண்டும் அது அணைந்து போனால் என் தோணி போய்ச் சேரும்

சுரா நினைவுகள்
நெய்தல் கிருஷ்ணன்  

“அந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்துப் பேசியது சரி” என்றார் சுந்தர ராமசாமி. எனக்குப் புரியவில்லை. டாக்டர் வேதசகாய குமார் பணிபுரிந்து கொண்டிருந்த கேரள பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறையில் நடைபெற்ற இலக்கியவிழாவிற்கு அவர் அழைத்ததின் பேரில் சென்றிருந்தேன். சு. வேணுகோபால் பேசும்போது கூட்டத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்துக்கொண்டே “நான் வேதசகாயகுமாரை குரு என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றார். வேணுகோபால் என்னைப் பார்த்துக் கொண்டே ஏன் சொல்லவேண்டும்? யோசித்துப் பார்த்தேன்; விளங்கவில்லை. அவர் சொன்னவிதம் என் மனதைக் குடைந்துகொண்டிருந்தது. அடுத்த நாள் மாலை எப்போதும்போல சுராவைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்ததிலிருந்து அடுத்தமுறை சந்திக்கப்போவது வ

சுரா படைப்புகள்
பெருந்தேவி  

சுந்தர ராமசாமியின் சிறுகதைப் பரப்பில் என்னைக் கவர்ந்தவர்கள் இரண்டு பெண்கள்: ஒருவர் ‘சீதைமார்க் சீயக்காய்த்தூ’ளின் சுப்பம் மாள், மற்றொருவர் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ கதையின் ரத்னாபாய். மனித வாழ்க்கை குறித்த கலைபூர்வமான விசாரணை, இலக்கிய எழுத்து என்று ஒரு பரந்த வரையறையை எடுத்துக் கொண்டால், இருவரும் இந்த விசாரணையைப் பெண்மையப்படுத்தும் கதாபாத்திரங்கள். பணம், கல்வி, கௌரவம் போன்ற அச்சுகளின் ஊடாகச் சுழற்றப்படும் வாழ்க்கை ராட்டின நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் பெண்பிரதி நிதிகள். தொன்மப்புராணமும் மிகுபுனைவுக் கற்பனையும் (fantastic imagination) கலந்திருக்கும் கதையாடல்கள், இந்த இரு கதாபாத்திரங்களை உருவாக்குகிற விதம் இந்தக் கட்டுரையின் பொருள். புராணக் கதையின் ராச்சியத்துக்க

சுரா நினைவுகள்
ம. மணிமாறன்  

மனதின் மாயவித்தைகளையும், அதன் சூட்சுமங்களையும் நுட்பமாக அறிந்திடல் எளிதில்லை. ஆனாலும் காலம்தோறும் கலைஞர்கள் இந்த நூதன விளையாட்டை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். இதைத் தன்னுடைய கதைகள் எனும் கருவிகொண்டு கச்சிதமாக பரீட்சித்தவர்தான் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி எனும் தன்னுடைய பெயரிலேயே எழுபது கதைகளையும் மூன்று நாவல்களையும் ‘செம்மீன்’ போன்ற கிளாஸிக்குகளையும் மொழிபெயர்த்துத் தந்த வழிவகையினூடாக செய்துகொண்டிருந்தது, மனிதன் கற்பாறைகளில் அன்பெனும் குளிர்நீர் கசிவதற்கான புள்ளிகளும் உறைந்திருப்பதைக் கண்டறிந்து சொல்வதுதான். அதிலும் கந்தர ராமசாமியின் சிறுகதைகள் யாவும் எழுதப்பட்ட நாட்களின் மனித மேன்மைகளையும், அதன் கீழறுப்புக் குணங்களையும் காட்டித்தரும் கண்ணாடியாக வடிவம் பெற்றிருக்

சுரா கடிதங்கள்
 

28.6.85 அன்புள்ள அலி, உங்கள் 26.6.85 கடிதம். காலை வாரிவிடுவது, வீழ்ச்சி அடைந்துவிடுவது என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம் எவ்வாறோ அவ்வாறு நாம் இருந்துகொண்டிருக்க வேண்டும். முடிந்தவரையிலும் நமது எண்ண ஓட்டங்களையும் செயல்களையும் புற உலக இயக்கங்களையும் விழிப்போடு கணத்துக்குக் கணம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். விமர்சனமின்றி, மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இதிலிருந்து மேலான பலன்கள் உண்டாகும். கிருஷ்ணமூர்த்தி இதைத்தான் மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொல்கிறார். அவ்வளவுதான் விஷயம். பட்டறை, பயிற்சி என்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இதுபற்றி எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இடம் கொடைக்கானல் என்பதாலும்

சுரா நினைவுகள்
'முடவன் குட்டி' முகம்மது அலி  

1980 அக்டோபர் மாதம் நாகர்கோயில் சென்றிருந்தேன். அப்போது என் வயது 26. பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு கடையில் சுந்தர ராமசாமி பற்றி விசாரித்தேன். முகவரி தந்து, போகும் வழியையும் விளக்கமாகக் கடைக்காரர் சொன்னார். சுந்தர ராமசாமி அவர்களின் வீட்டருகே வந்தேன். ‘தமிழின் சிறந்த எழுத்தாளர் ஒருவரைப் பார்க்கப் போகிறோம். அவர் என்ன நினைப்பாரோ’ என்ற அச்சமும் தயக்கமும் மனதில் எழுந்தது. திரும்பிப் போய்விட நினைத்தேன். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படியேறி கதவைத் தட்டினேன். உயரமான சிற்பம்போன்ற ஓர் உருவம் கதவைத் திறந்தது. “என் பெயர் முகம்மது அலி. பெங்களூரிலிருந்து வருகிறேன். சொந்த ஊர் கடையநல்லூர்” என்றேன். என்னைக் கூர்ந்து பார்த்து ‘வாங்க’ என்றார். உள்ளே சென்று அ

 

அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய ‘விளக்கு’, புதுமைப்பித்தன் நினைவு இலக்கியப் பரிசொன்றை நிறுவி தமிழ்ப் படைப்பிலக்கிலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்துவரும் படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கிக் கௌரவித்து வருகிறது. 1995இல் தொடங்கி இதுவரை சி.சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, ராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், எஸ். வைதீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், எம்.ஏ. நுஃமான், பெருமாள்முருகன், கோணங்கி ஆகிய படைப்பாளிகள் விளக்கு அமைப்பால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் சி.மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எழுத்தாளர்கள் எஸ். வைதீஸ்வரன், வெளி ரங்கராஜன

பத்தி: காற்றின் கலை
 

நினைவு தெரிந்த நாள்முதல் கேட்டுக்கொண்டி ருக்கும் பாட்டு கே.பி.சுந்தராம்பாளுடையது. என் பால்ய காலத்தில் ரேடியோவிலும் கிராம ஃபோன் ரிக்கார்டுகளிலும் திரையரங்குகளிலுமெல்லாம் சுந்தராம்பாளின் பாட்டுகளை எப்போதும் கேட்க முடிந்தது. இதை எழுதும் நாள்வரையிலும் கே.பி. சுந்தராம்பாள் எனக்குள்ளே பாடிக்கொண்டுதான் இருக்கிறார். அந்தக் குரல் அம்மாவின் குரலைப் போல மிகப் பழக்கமானது; சிநேகம் நிறைந்தது. அது எப்போதும் நம்மை நேசித்துக் கொண்டேயிருக்கிறது; அது நம்மைச் சுத்திகரித்துக்கொண்டேயிருக்கிறது. அந்தக் குரல் உரத்தது; அதே சமயம் மென்மையானது. அதில் அறியப்படாத உலகங்களும் தீவிரமான மோகங்களும் முடிவின்மையைத் தொட்டுவிட விழையும் இதயமும் நிரம்புகின்றன. வளரிளம் பருவத்தைத் தாண்டும்போதுதான் கங்குபாய் ஹங்கலின் பாட்டுக

ஓவியங்கள்: சந்தோஷ், மாற்கு  

பொம்மை தாளமொன்று கேட்கப் பாம்பாக நெளிந்து கொண்டிருந்தது பிறகு துள்ளிக் குதித்துப் பறந்து வானவில்லாகியது. இசை வண்ணமயமாகிய வானத்தில் பாம்பு சிரித்துச் சிரித்து நடனமாடியது தாளமென்றால் அப்படியொரு தாளம் ஆட்டமென்றால் அப்படியொரு ஆட்டம் நதிபெருக்கெடுத்தோட மேகக் கூட்டமெங்கும் மலைக்காட்டுக் காட்சி வெள்ளிகள் குளித்துக் களித்தன அந்தர நதியில் நூலில் ஏறி ஆற்றிலே இறங்கினேன் பாம்பின் மடியில் என்னை வைத்து விளையாடக் கேட்கிறது ஒரு நட்சத்திரக் குழந்தை பொம்மையென்றால் விளையாட்டாகத்தானிருக்கும் என்பது எத்தனை உண்மை என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்! மாயம் மிஞ்சியிருக்கும் ஒரேயொரு இசைக்கலைஞனை அழைத்து வந்திருக்கிறேன் உலகத்தின் இறுதி இசையை இன்று நீங்கள் கேட்கப்போகிறீர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள் அவன் கள்

மதிப்புரை
க. பஞ்சாங்கம்  

பாரதி கவிதைகள் (கவிதைகள்) வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் & 629 001 பக்கம்: 631 விலை: ரூ. 750 தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத் திட்டக்குழுவின் தலைவராகப் பணியாற்ற வேண்டிய ஒரு சூழல். முதலில் புதிய தமிழ்ப் பாடத்திட்டம் தயாரிப்பது; தொடர்ந்து அது ஒப்புதல் ஆனபிறகு அதன்வழியில் பாடம் எழுதிப் பாடப்புத்தகம் உருவாக்குவது என்ற முறையில் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. என்னுடன் சேர்ந்து பணியாற்றப் பள்ளிக்கூடத் தமிழ் ஆசிரியர்கள் ஆறுபேர் தேர்வு செய்யப்பட்டனர். செய்யுள் புத்தகத்திற்கான பாடத்திட்டம் குறித்துக் கலந்து ஆலோசிக்கும்போது இலக்கணக் குறிப்புப் பகுதி பற்றிய பேச்சு வந்தது. அதைத் தொடர்ந்து “புணர்ச

கட்டுரை
பா. வெங்கடேசன்  

கோணங்கியின் சமீபத்திய நாவலின் தலைப்பான ‘த’ என்பது உத்தேசமாக தஞ்சாவூர், தனுஷ்கோடி மற்றும் தயாக் பட்டினம் என்கிற மூன்று நகரங்களைக் குறிப்பதாக அமைந்த முதலெழுத்து. த இசை, த அணங்கு, த விருட்சம், த ஆமை, த ஆறு, த நாயனம், த நடனம் என்று கோணங்கி பலப்பல இடங்களில் மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டே போகிறவற்றை இந்த மூன்று நகரங்களின் பின்னணியில் இருத்திப் புரிந்துகொள்வது ஓரளவிற்குத் திருப்தியான வாசிப்பைத் தருகிறது. இந்த மூன்று நகரங்களில் தயாக் பட்டினம் ஆழிச் சீற்றத்தில் அகப்பட்டுக் கடலடியில் புதைந்துபோய்விட்ட ஒரு மிகத் தொன்மையான நகரம். தனுஷ்கோடி, புயலால் தாக்கப்பட்டு பேரழிவின் சாட்சியாகப் பார்வைக்கு எஞ்சி நிற்கும் நகரம். தஞ்சாவூரைப் பொறுத்தவரை அந்தப் பட்டணத்தின் கதையோடு 1970கள் வரை அதன் தலைந

விவாதம்
பூ. மணிமாறன்  

ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘இந்தி எதிர்ப்பில் இளையராஜா’ எனும் கட்டுரையில் இளையராஜாவின் இந்தி எதிர்ப்பு வரலாறு பற்றித் தெளிவாக எடுத்துரைக்கிறார். குறிப்பிட்ட ரவிக்குமாரின் இளையராஜா குறித்த கூற்றைத் தான் தவறாகப் புரிந்துகொண்டதாகவும் பின்னர் அதனை உணர்ந்து ரவியின் கூற்றைச் சரியாகப் புரிந்துகொண்டதாகவும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராஜா, இந்தி எதிர்ப்புணர்வு என்ற பிரக்ஞையே இன்றி இசையமைத்ததாகவும் ஆனால் அந்த இசை அந்தக் காலகட்டத்தில் இயல்பாக இந்தியை விரட்டிவிட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார். எந்த ஒரு செயல்பாடும் நிகழ்வும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டு பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அமையும். அதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை. அதைவிடுத்து எவ்வித அரசியல் பண்பாட்டு

பதிவு
தாமோதர் சந்ரு  

‘தமிழினி’ மற்றும் ‘இலக்கிய சுற்ற’த்துடன் இணைந்து ‘காலச்சுவடு’ நடத்திய நூல்கள் வெளியீட்டு விழா ஜூலை 30 வியாழனன்று மாலை ஈரோடு காப்ஸ் உணவகத்தில் நடைபெற்றது. தலைமையேற்றுப் பேசிய நாஞ்சில்நாடன் தனது உரையில் சமூகத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்குப் பங்களிக்கும் நல்ல, தரமான நூல்களை இவ்விரு பதிப்பகங்களும் வெளியிட்டு வருவதாகப் பாராட்டினார். தொடர்ந்து தமிழினி பதிப்பகத்தின் ஐந்து நூல்கள் வெளியீட்டிற்குப் பிறகு காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்கள் வெளியிடப்பட்டன. முதலாவதாக கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் ‘ஆளற்ற பாலம்’ நூலை வெளியிட்டுப் பேசிய அம்பை, போராளியான கோடேஸ்வரம்மாவைத் தான் நேரில் சந்தித்து உரையாடிய தருணம் பற்றி நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். நூலைத்

பதிவு
ராஜா ராஜேந்திரன்  

மாதந்தோறும் பனுவல் புத்தக அரங்கில் ‘வாசக சாலை’ என்ற பெயரில் விமர்சன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பத்தாவது நிகழ்வாக, 20 செப்டம்பர் 2015 அன்று சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலில் இரண்டு வாசகர்களின் ‘வாசகர் பார்வை’. பார்த்திபனும் ஜீவலட்சுமியும் உரையாற்றினர். நாவலில் ஈர்த்த கதைமாந்தர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாமிய சமூகக் கூட்டுக்குள் இருக்கும் மதச்சட்ட கட்டுப்பாடுகளையும், அது பெண்களை மட்டும் ஏன் இந்தளவு கட்டுப்படுத்தி இறுக்கி வைத்துள்ளது என்றும் பேசினர். மத ஆணைகளை மதிக்க வேண்டுமென்று குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்க்கும் மதத் தலைவரின் மனைவி இடையறாத பிரசவங்களால் மரணிக்கும் பகுதியை கண்ணீர் மல்க

பதிவு
கிருஷ்ணன் பிரபு  

மதுரை புத்தகக் கண்காட்சியையொட்டி ‘காலச்சுவடு’ பதிப்பகமும் ‘புனைவு இலக்கிய அமைப்பு’ம் இணைந்து நடத்திய ஆறு நூல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 27 அன்று மதுரை ப்ரேம் நிவாஸ் அரங்கில் ஏற்பாடாகியிருந்தது. புனைவு அமைப்பின் சார்பில் செந்தி வரவேற்புரையுடன் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். அகமத் ஹம்தி தன்பினாரின் துருக்கிய நாவலான ‘நிச்சலனம்’ தி.அ. ஸ்ரீனிவாஸனின் மொழியாக்கத்தில் கடந்த ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, தன்பினாரின் இரண்டாவது நாவலான ‘நேர நெறிமுறை நிலையம்’ எத்திராஜ் அகிலனின் மொழியாக்கத்தில் வெளியான நூலின் முதல் பிரதியை கவிஞர் சுகுமாரன் வெளியிட ஆய்வாளர் அ.கா. பெருமாள் பெற்றுக்கொண்டார். “ஓரான் பாமுக்கின் எழுத்துகள்

கட்டுரை
அம்ஷன் குமார்  

ஈழத் தமிழர்களிடையே முதன்மையான செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர் என்று சொல்ல வேண்டுமென்றால் அவர் பிரபாகரன் தான். பிரபாகரனை வழிபடுபவர்கள் அவரது செயல்களை நடுநிலையுடன் அவதானிப் பவர்கள் மட்டுமின்றி அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட அவர் தங்களுக்கான போராட்டத்தை எதிரிகளால் தவிர்க்கவியலாத வண்ணம் தோற்றுவித்தவர் என்பதில் மாறுபாடான கருத்துகள் கொள்வதில்லை. அவருக்கு அடுத்தாற்போல் ஈழத்தமிழர்களின் பேரபிமானத்திற்குரிய மனிதர் யார்? உடனடியாக அவர்களுக்குப் பதில் தட்டுப்பட்டாலும் சற்று நேரம் எடுத்துக்கொண்டு பல ஆளுமைகளை மனதில் கொண்டுவந்து நிறுத்தி அசைபோட்ட பின்னரும் முதலில் யாரை நினைத்தார்களோ அவரையே மொழிவார்கள். அவர் அரசியல் தலைவர் அல்லர். மாபெரும் கவிஞரோ எழுத்தாளரோ அல்லர். சினிமா, நாடகப்பிரபலமும் அல்லர்.

 

‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ பதிப்பாளர் கருத்தரங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவாவில் நடந்துவருகிறது. இது பதிப்புலகம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்கும் நிகழ்வு. செப்டம்பர் மாதம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் சர்வதேச அளவில் பிரபலமான பதிப்பாளர்கள், பதிப்புத் தொழிலில் தொடர்புடையவர்கள் கூடி விவாதிக்கிறார்கள். கடந்த ஆண்டு முதல் ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ சார்பில் சிறந்த பதிப்பாளர், சிறந்த நூல், சிறந்த வடிவமைப்பு என விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த பதிப்பாளர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழிப் பதிப்பகம் காலச்சுவடு. கருத்தரங்கின் இரண்டாம் நாள் மாலை விருதுகள் அறிவிக் கப்பட்டன. சிறந்தபதிப்பாளர் விருது ஹார்பர் காலின்ஸ் இந்தியா (Har

உள்ளடக்கம்