தலையங்கம்
 

தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதைப் பல எழுத்தாளர்கள் திருப்பியளிப்பதன் மூலம் காட்டிவரும் எதிர்ப்பானது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், நெருக்கடிநிலைக் காலம் உட்பட, எப்போதும் நிகழ்ந்திராதது. நெருக்கடிநிலைக் காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்படாமலே அத்தகையதோர் இருண்ட காலத்தை நோக்கி இந்தியா இன்று சென்றுகொண்டிருக்கிறது. ஒரு மனிதன் / மனுஷி என்ன பேச, உண்ண, உடுத்த, யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மதஅடிப்படைவாதிகளின் கையிலிருக்கும் இன்றைய அவல நிலை இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. இந்திய வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் பூரணமான கருத்துச்சுதந்திரமோ சகிப்புத்தன்மையோ நிலவியதில்லை. (வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் கூட க

தலையங்கம்
 

இலங்கைப் போர்க்குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானம், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குச் சாதகமாகவும் நீதியை வழங்கக் கூடியதாகவும் உள்ளது எனத் தமிழ்த் தரப்பினரால் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முயற்சியிலும் எத்தகைய நன்மைகளையோ நன்மைகளுக்கான உத்தரவாதங்களையோ இலங்கைத்தமிழர்கள் பெற்றுக்கொள்ள வகையில்லை. அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை, வெளித்தரப்பு உள்ளடங்கலான கலப்புமுறை விசாரணையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமா என்பதே கேள்வி. அப்படியென்றால் இது ஒரு ஏமாற்றே. இந்தப் போர்க்குற்ற விவகாரத்தை எடுத்தது அமெரிக்க அரசாங்கம்தான். அதுதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்னின்று எழுப்பியது.

கண்ணோட்டம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

உத்தரப்பிரதேசம் தாத்ரி என்ற ஊரில் முகம்மது அஹ்லக், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இந்து அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு எதிராகப் போராட்டங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. மோடி அரசின் மதவாத அபாயத்தைச் சுட்டி எதிர்கொள்ளும் விதத்தில் இப்போராட்டங்கள் முக்கியமானவை. மாட்டிறைச்சி பற்றிப் பேசும்போது இசுலாமியர்களுக்கு இணையாக கவனத்தில் ஊடாடும் மற்றுமொரு தரப்பினர் தலித்துகள். இப்போதைய போராட்டங்களும் அவற்றின் வாதங்களும் சரியானவை என்பதிலோ, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளமே போராட்டத்தில் முன்னிறுத்தப்படும் என்பதிலோ எந்த வியப்பும் இல்லை. இருதரப்புப் பேச்சுகளும் அவற்றைக் குறிப்பிட்ட மதத்தின், சாதியின் அடையாளமாகவே முன்னிறுத்திப் பேசுகின்றன. ஆனால், இதுபோன்ற தருணத்தில் இக்குறிப்பிட்ட மதம் ம

திரை
சொர்ணவேல்  

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம்.

 

கோணங்கியின் ‘த’ நாவல் பற்றி பா. வெங்கடேசன் எழுதிய கட்டுரையில் “எகர ஒகரக் குற்றெழுத்துக்களும் வேறுபாடின்றி” என்ற தொடர் “எகர ஒகரக் குற்றெழுத் துக்களும் ஏகார ஓகார நெட்டெழுத்துக்களும் வேறுபாடின்றி” என்று இருக்க வேண்டும்.‘த’ நூலில் “சரஸ்மகால் பெஞ்சுகளில் சீகன்பால்குவும் ஸ்வாட்ஸ் அய்யரும் பெஸ்கியும் அமர்ந்திருக்கிறார்கள்” என உள்ள தொடர் காட்டப்பட்டுள்ளது. இத்தொடரில் சரஸ்வதிமகால் என்றும், ஸ்வார்ட்ஸ் என்றும் இருந்திருக்க வேண்டும்.மூவருக்கும் தஞ்சாவூர்த் தொடர்பு உண்டு. ஸ்வார்ட்ஸ் அய்யர் தஞ்சாவூரிலேயே வாழ்ந்தவர். சீகன்பால்கும் பெஸ்கியும் சம காலத்தவர்கள். ஸ்வார்ட்ஸ் அய்யர், அவர்கள் இருவரும் காலமான பின்னரே தமிழகம் வருகிறார். (பார்தலோமியோ

கட்டுரை:
சுப. உதயகுமாரன்  

எதுவும் புரியாத, யாரும் எதுவும் சொல்லித்தந்திராத இளம்பருவத்திலேயே சாதி மீதான வெறுப்பு சக்தி மிக்கதாயிருந்தது என்னுள். ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை எனது நண்பர்கள் ஒருசிலரை வீட்டுக்கு அழைத்து வந்தேன். எனது தாத்தா ஒவ்வொரு நண்பனிடமும், “நீ என்ன பிள்ளை?” என்று கேட்டார். நான் சத்தமாக “தாத்தா, சாதியெல்லாம் கேட்கக்கூடாது” என்று உரக்க, கண்டிப்பாகச் சொன்னேன். என்னையும் மீறி வெடித்துக் கிளம்பிய ஆவேசமாக அது இருந்தது. இன்னொருமுறை எங்கள் வீட்டிற்குத் துணி துவைத்துக் கொடுக்கும் செவித்தியாயி பாட்டிக்கு வீட்டிற்குப் பின்னாலிருந்த திறந்தவெளியில் தேங்காய்ச் சிரட்டையில் வைத்து கஞ்சி கொடுத்தார்கள் எங்கள் பாட்டி. நானும் தங்கையர் இருவரும் “வீட்டிற்குள்ளே வைத்து, தட்டில

விவாதம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

திராவிட இயக்கத்தைச் சிறிய அளவில் விமர்சித்தாலும் உடனே பார்ப்பனச் சோரமாகக் காட்டிவிடும் இன்றைய சூழலில் கருத்துகள்சார்ந்து விவாதித்திருக்கும் பூ.மணிமாறனுக்கு (அக்டோபர் 2015 இதழ்) முதலில் என் நன்றி. இளையராஜா கட்டுரை மீதான கேள்விகளுக்கான பதில்கள் ஏற்கனவே என் கட்டுரையில் இருப்பதாலும், வேறு கேள்விகள் கட்டுரையின் விவாத வரம்பிற்கு வெளியே இருப்பதாலும், அவை தனிக்கட்டுரைக்கானவை என்று விடுத்து அயோத்திதாசர் தொடர்பான கேள்விகளுக்கு நேரே வந்துவிடுகிறேன். முதலாவதாக அயோத்திதாசர் வழிவந்தவர்களுக்கு திராவிடன் இதழ் எழுத இடமளித்தது என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டுமென்ற மணிமாறனின் கூற்றைப் பார்ப்போம். திராவிடன் இதழை மட்டுமல்ல, எந்தவொன்றையும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியிலிருந்து மதிப்பிடுவதை ஏற்றுக்கொண்டே எ

சிறப்புப் பகுதி - பெண் மெய்
எஸ்.வி. ஷாலினி  

பெண்கள்மீது இணையம்வழி நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் குறித்த ஐநா அறிக்கை ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது. இவ்வறிக்கை, சமூக ஊடகங்களில் பயனாளராக இருக்கும் பெரும்பாலான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பதிவுசெய்துள்ளது. இணையவெளியில் பெண்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் இந்த அறிக்கை முக்கியமான விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. மாதிரி ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிக்கை முடிவின் மூலம், யதார்த்தம் இதைவிடக் கோரமான முகத்தைக் கொண்டிருக்கும் என ஊகிக்கலாம். இந்தியப் பெண்களில் 46.7 சதவீதத்தினர் தங்கள்மீது இணையம் வழியாக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் புகாரளிக்க முன்வருவதில்லை எனக் குறிப்பிடும் இந்த அறிக்கை, 18.3

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை
ஸர்மிளா ஸெய்யித்  

ஏமன் நாட்டின் வரலாற்றிலிருந்து துடைத் தெறிய முடியாத பெண், தவக்குல் கர்மான். மனித உரிமைகள் செயற்பாட்டாளர். பெண் உரிமைகளுக்கான போராட்டம், சமாதானத்திற்கான பங்களிப்பு போன்ற செயற்பாடுகளுக்காக 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். நோபல் பரிசை வென்ற முதல் அரேபியப் பெண்ணும் இவர்தான். தவக்குல் கர்மான் மனித உரிமைகளுக்கான போராளியாக, உடனடியான அங்கீகாரம் பெற்ற பெண் அல்ல. அவரது சுதந்திரக் கருத்துகள், உயிர் அச்சுறுத்தல் நிரம்பிய போராட்ட வாழ்வு, சிறைவாசம் என்பனவெல்லாம் ஏற்படுத்தித் தராத பிரபல்யத்தையும் அங்கீகாரத்தையும் உடை பற்றிய கருத்து அவருக்கு ஏற்படுத்தித் தந்தது. ஹிஜாப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குத் தவக்குல் கர்மான் இப்படிப் பதிலளித்திருந்தார்: “பண்டையகால மனிதன்

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை
பெருந்தேவி  

தண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தாத்ரியில் இஸ்லாமியக் குடும்பம் ஒன்று மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும் அதைத் தின்றதாகவும் பரவிய வதந்தியால், அக்குடும்பம் இந்துக்களின் கும்பலொன்றால் தாக்கப்பட்டது; ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வன்முறை மனிதத்தன்மையிலும் கலாச்சாரப்பன்மையிலும் சிறிதேனும் நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் தந்திருக்கும். இந்தத் தாக்குதல் மாட்டுக்கறியை முன்னிட்டு இந்துக்களையும் முஸ்லிம்களையும் அந்நியப்படுத்துகிற மதவாத அரசியலின் ஒரு பகுதி என்று அறிவுச்சமூகத்தினரால் சரியாகவே அடையாளப்படுத்தப்பட்டது. அரசியல், கலாச்சாரத் தளங்களில் இந்து, முஸ்லிம் சமூகங்களை இரு துருவங்களாக்குகிறவகையில் ஒரு பொருண்மையான குறியீடாகப் பசு முன்னிறுத்தப்படுகிற அத

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை
வே. ஜெயபூர்ணிமா  

2000க்குப் பிறகு தமிழிலக்கியத்தின் முக்கிய வரவாகப் பெண் எழுத்துகளைக் குறிப்பிடலாம். முன்பு குறைவான பெண்களே எழுதிவந்தார்கள். எனினும் 2000ஆம் ஆண்டை ஒட்டியே அதிக அளவில் பெண்கள் எழுதினார்கள். சிறுகதை, நாவல்களைவிட கவிதைகளிலேயே அவர்கள் அதிகமாக வெளிப்பட்டனர். இதேவேளையில் கவிதைகளுக்கு நிகராகப் பெண்களின் வேறு அனுபவங்களும் இக்காலத்தில் தொகுக்கப்பட்டன. இலக்கியத் தளத்திற்கு இணையாக சமூக வரலாற்றுத் தளத்திலும் செயற்பாடுகள் நடந்தால்தான் இலக்கியத் தளத்தில் உருவாகும் தனித்துவம் நிலைபெறும். இதற்கேற்ப புனைவிலக்கியத்தில் உருவாக்கிய அடையாளத்தைப் போலவே இக்காலத்தில் நாடகம், இதழ்கள், தொடர்கள், கட்டுரைகள் போன்ற வடிவங்களிலும் பெண்கள் வெளிப்பட்டனர். கவிஞர்களாக விளங்கிய பெண்கள் பலரே இம்முயற்சிகளிலும் இறங்கியதால

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை
பொ. ராஜா  

தமிழ்ச் சமூகத்தில் காலனியம் மூலம் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஊடுபொருளாக இருந்தவை அச்சுக் கருவியும் ஐரோப்பிய நவீனக்கல்வி முறையுமே ஆகும். இந்த அச்சுப்பரவலாக்கத்தின் அடுத்த பரிமாணமாக தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் இதழ்கள் தொடங்கப்பெற்றன. இவற்றில் சாதி சார்ந்த இதழ்களும் அடங்கும். பொதுவாக அன்றைக்கு இதழ்கள் யாவும் ஆண்களாலேயே நடத்தப்பட்டிருப்பதில் வியப்பில்லை. பிறகு மெல்ல மெல்லச் சில இதழ்களில் மட்டும் பெண்களுக்கான தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றை ‘ஸ்திரீகளின் பகுதி’, ‘பெண்கள் பகுதி’ என்று பெயரிட்டு அதில் பெண்களும் ஆண்களும் எழுதிவந்தனர். இவற்றிலும் கூட பெண்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்களே எழுதிவந்துள்ளமையைக் காணமுடிகிறது. இப்பத்திகள் பெரும்பான்மையும் பெண்கல்வி குறித்த ப

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கதை
 

விடிவதற்கு முழுதாய் ஏழு மணி நேரம் இருந்தது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதுகூட இல்லை. ஆறு மணி என்பதே சற்று தாராளம்தான். நிதானமாகக் குளித்துத் தனக்கான மதிய உணவு மட்டும் தயார்செய்து முதல் நாளே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் உடைக்குப் பொருத்தமாக நகைகள் அணிந்துகொண்டு காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினாலும் அலுவலகத்தில் ஒன்பது மணி அடிக்கப் பத்து நிமிடங்களுக்கு முன்பு நிற்பாள். ஒன்பது மணி ஆகிவிடுமே என்று மூச்சிரைக்க ஓடிவரும் அவளது அலுவலகத் தோழிகளின் பொறாமை பிறகு எள்ளலாக வெடிக்கும். ‘‘அவளுக்கென்ன? குழந்தையா குட்டியா? புருஷன்கூட யு.எஸ்ல இருக்கான். மாமியார் மாமனார்னு எந்தத் தொல்லையும் இல்ல. சீவி சிங்காரிச்சிக்கிட்டுக் கிளம்பறத தவிர வே

சிறப்புப் பகுதி - பெண் மெய்: உரை
 

என் நெருங்கிய நண்பனைப் பற்றிக் கூறி, இவ்வுரையை ஆரம்பிக்கிறேன். அவன் என் தெருவில்தான் வசித்துவந்தான். ஒரு மூத்த சகோதரனைப்போல் என்மேல் அக்கறை எடுத்துக்கொள்பவன் அவன். எனக்கு ஒரு பையனைப் பிடித்திருந்தால் முதலில் நான் அவனின் கருத்தைத்தான் கேட்பேன். அவன் ஏழு வருடங்களுக்குமுன், டிசம்பர் 2005 இல் நைஜிரியாவில் நடந்த விமான விபத்தொன்றில் இறந்துவிட்டான். நான் விவாதம் செய்யவும், மனம்விட்டுப் பேசவும் சிரிக்கவும் கூடிய ஒரு நபராக அவன் விளங்கினான். அவன்தான் என்னை முதன்முதலாக ஒரு பெண்ணியவாதி என அழைத்தவன். அப்பொழுது எனக்கு ஏறக்குறைய 14 வயது இருக்கும். நாங்கள் வாசித்த புத்தகங்களிலிருந்து கிடைத்த அரைகுறை அறிவுடன் பிடரி சிலிர்க்க விவாதித்துக்கொண்டிருந்தோம். அது எதைப் பற்றிய வாக்குவாதமென்பது நினைவில் இல்

சிறப்புப் பகுதி - பெண் மெய்: நேர்காணல்
 

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு அடைக்கப்படுகிறவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை அடகுவைத்துவிட்டே கண்காணிப்புக் கூடாரத்தில் வாழ ஆரம்பித்தார்கள். இந்தியா ‘டிஜிட்டல் இந்தியா’வா

சிறப்புப் பகுதி - பெண் மெய்
ஓவியம்: செந்தில் செல்வன்  

வெறி ஒவ்வொருவருக்கும் தம் கொள்கைகளைப்போல் புனிதமானவை மலமும் ஜலமும் கையேந்தும் பக்தகோடிகளின் உச்சிக்குளிர சாமியை அம்மணமாக்கி ஆடைமாற்றும் அடியோருக்கு அதிமுக்கியமானவை அபிஷேகக் கழிவுகள் அடங்க மறுத்தலைப் பொறுக்கமுடியா அத்தனை பேருக்கும் இது பொருந்தும் சாணி அமுதத்தையும் மூத்திரத் தீர்த்தத்தையும்விட லக்ஷ்மி கடாக்ஷத்திற்கு வேறேதும் கதி இருக்கிறதா உங்கள் பாதாளத்தில் செருப்பு தைக்கும் நாங்கள் ஊசியினும் கூர்மையாய் புத்தனைப்போல் அறிவை ஆயுதமாக்குகையில் பிரம்மாண்டமாய் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் கீழ் நெளியும் நீங்களோ சேர்வைக்குக் கள்ளர் சேராது பள்ளிக்குப் பறையர் ஆகாதென்று ஜாதிக்கு ஜோடி பார்க்கிறீர்கள் ஆதிப்பெண்கள் மலைக்காட்டில் வில்லம்பைக் கடாசிவிட்டு விலங்குகளுக்கும் சேர்த்து சோறு வடிக்க பாவம் நீ

சிறப்புப் பகுதி - பெண் மெய்
 

நான் நான் சூரியனாகவே இருப்பேன் என்று மல்லுக்கு நிற்கவில்லை பூமியின் மொத்த இருட்டையும் அழித்தொழிக்கும் தீபம் நான் நிச்சயமாய். என் ஒரே லட்சியம் இருட்டுடனான முடியாத யுத்தம் துக்கத்தின் புயல் காற்றும் கவலைகளின் காற்றும் அசைத்துப் பார்க்கலாம் என்னை ஆனால் ஒருபோதும் எனது சுடரை அணைத்துவிட முடியாது எரிந்தெரிந்து தானே அணையும் விதி எனது நிச்சயம் நான் அணைந்துபோவேன் ஆனால் விடியலைக் கொணர்ந்தபின்பே. ஏனெனில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது விடியலின் வாசலை எப்போதேனும் நான் சென்று சேர்வேன் இன்று இருட்டில் திரிந்து நிற்கிறேன் அதனால் என்ன? காலத்தைப் பற்றி ஒவ்வொரு பாடலின் உள்ளேயும் ஒரு சங்கதி உண்டு ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னும் ஒரு அரசியல் உண்டு என் பாவத்தைக் குறித்து என் குடும்பத்தினர் கவலைப்பட வேண்டாம். பிரகாச

சிறப்புப் பகுதி - பெண் மெய்
 

மஹா ரகசியம் சிறியதும் பெரியதுமான பல மொழிகள் சார்ந்த ரகசியங்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடின யாரும் அறியாமல் ரகசியத்தை ரகசியமாக எப்படி பாதுகாப்பது என்று ஆராய்ந்து ஓர் உறுதியான முடிவை எடுத்தே தீருவது என்று கண்காணிக்கும் கண்களில் இருந்து தப்பிக்கும் வழி தேடியபடி பல்வேறு மாறுபட்ட ஆலோசனைகளும் கருத்து ஆய்வுகளும் பேசி விவாதிக்கையில் காலம் மெதுவாகக் கரைந்தபடி இருக்க இறுதியாக ஓர் முடிவிற்கு வந்தன இயன்றவரையிலும் அதிகவனத்துடன் ரகசியத்தைப் பாதுகாப்பான வழிகளில் பத்திரப்படுத்துவது சிறகா அக்கறையில்லாதது போன்ற செயல்களால் கவனத்தைத் திசை திருப்புவது அவசியமெனில் பொய் சொல்வது பேச்சு அல்லது செயல்களின் மூலம் ஒளித்துவைப்பது இப்படிப் பலவழிகளில் மறைமுகமாக பயிற்சி கொடுப்பதன்மூலம் ரகசியங்களை பேணிக் காப்பதனால

சிறப்புப் பகுதி - பெண் மெய்
மலையாளத்திலிருந்து தமிழில்: எஸ்.வி. ஷாலினி  

தயவு செய்து வெளிச்சமே இந்த அறைக்குள் வராதே எனது மார்பில் கிடக்கும் இந்த கனமான கை நழுவிவிடக் கூடாது மொபைலே நீ ஒலியெழுப்பாதே அவனுடைய கை உன்னை நோக்கி நீளக்கூடாது இந்த சுவாசத் தாளத்தை தடை செய்யாதே என் இடுப்புடன் பிணைந்திருக்கும் இந்த கனமான கால் தரையிலிறங்கிவிடக் கூடாது இந்தப் பிணைப்பின் பியூப்பா நொறுங்கி அவன் பிறரிடம் சிதறிவிடக் கூடாது உலகமே தயவுசெய்து இங்கே வராதே எனில் என்னால் நூறாக உடைந்து சிதற முடியாது. ஜீவனாம்சம் திரும்ப வேண்டுமோ உனக்குச் சுதந்திரம்? தருகிறேன், எனில் பதிலுக்குத் தா முதலிரவில் நீ கசக்கிய பூக்களின் புதுமையை கலக்கிய அருவிகளின் தெளிவை திரும்பக்கொடு தொய்ந்த முலைகளின் பழைய அழகை உந்திய வயிற்றின் ஆலிலைப் பழமையை பதற்றம் உதிரச்செய்த கூந்தலின் பழைய கனத்தை அழித்துவிடு கண்களுக்கிடையில்

சிறப்புப் பகுதி - பெண் மெய்
Courtesy: Shanaathanan  

கொடிச்சம்பங்கியை வரைந்தால் கூட்டத்துள் வசிப்பதால் காற்றில் விரிந்து சிதறுவதில்லை இளம்பச்சையில் மிகு மஞ்சளில் சிறுமேனி குன்றாது வளைந்திருக்கும் தீண்டுமுன் துவளும் மென்குழைவற்று உற்று நோக்கும் இதழ் குறுவாள் நுனி தொடுக்க இயலா காம்பின் பருமனைக் கோர்த்தால் ஊசிமுனை மழுங்கி கீழிறங்கு நூலிழை சிறுகயிறாக்கி இறுகும் செம்பழுப்புத் தேன் அந்த வாசம் நாசித்துவாரம் கிழித்து விழிகள் ஏறிட்டு நிலைத்துக் குத்திட புரண்டுறையும் மதி அனுங்கி உயிர் மறையும் கொடிச்சம்பங்கியை வரைந்தால் பவளமல்லிகையை வரைந்தால் மென்புகையாகி அவிழும் மழையில் அந்திவெயில் கஸ்தூரி மஞ்சளேறி மங்கும் பொழுதில் அரும்புமதன் இனம்புரியா வண்ணம் பார்த்திருக்கும் பொழுதே அதரங்களில் படிந்து சிவக்கும் காது மடல் சுழித்த இதழ்களின் பிரிந்த நுனியை விரக

சிறப்புப் பகுதி - பெண் மெய்
 

"எனக்குள்ளே ஒரு சின்னஞ்சிறு பெண் எப்போதும் இருந்துகொண்டு, ஒருபோதும் மூப்படையவோ சாகவோ மறுத்தபடி வாழ்கிறாள்’’ லிவ் உல்மன்இதை வாசிக்கிற ஒவ்வொரு முறையும் எனக்குள் இப்படி ஒலிக்கும், ‘எனக்குள்ளே ஒரு சின்னஞ்சிறு பெண் எப்போதும் இருந்துகொண்டு ஒருபோதும் மூப்படையவோ சாகவோ மறுத்தபடி வாழ்கிறாள். கூடவே அவளை அதட்டி உருட்டிய படி ஒரு அம்மாவும் பாட்டியும் எப்போதும் வாழ்கிறார்கள்’.எனது ஒற்றைப் பெற்றோரின் (Single Parent) கதை என் அம்மாவில் தொடங்குவதாய்நேற்றுவரை, இந்த நொடிக்கு முன்புவரை நினைத்திருந்தேன். ஆனால் அது அம்மா பிறப்பதற்கும் முன் ஆரம்பிக்கிறது; எனது பாட்டியிலிருந்து. என் பாட்டி வேலைக்குப் போகாத ஒற்றைப் பெற்றோர். தனது தம்பி வீட்டில் பிள்ளைகளோடு இருந்தார். தாத்தா விட்டுவிட்டு

சிறப்புப் பகுதி - பெண் மெய்: சட்டம்
நிலவுமொழி செந்தாமரை  

திருமணமாகாத ஒரு பெண் தனது குழந்தைக்குத் தானே காப்பாளராய் இருக்க முடியும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை ABC (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) vs The State (Judges Vikramajit Sen J & Abhay M Sapre J) என்னும் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது.திருமணம் அல்லது திருமணமல்லாத உறவில் பிறக்கும் குழந்தைக்கு முதன்மைக் காப்பாளராய் தாய்தான் இருக்க வேண்டும். தாய்க்குப் பின் இரண்டாவதாகத்தான் தந்தைக்கு உரிமை வழங்க வேண்டும். ஆனால் குழந்தை யாருக்குப் பிறந்தது, எப்படிப் பிறந்தது போன்ற ஆணாதிக்கச் சமூகத்தின் சட்டங்கள் பெண்களுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன. ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்குக் காப்பாளராய் இருக்க யாரிடம் அனுமதி கோர வேண்டும்? பொறுப்பற்ற, குழந்தை பிறந்திருப்பதைக்கூட அறியா

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கருத்துத் தொகுப்பு
 

இணையவெளியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதைக் குறித்த ஒரு சிறிய, அதேநேரம் ஒட்டுமொத்த நிலைமையைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, வெவ்வேறு தளங்களில் இயங்கும் பெண்களின் கருத்துகள் இங்கே. . . முழுக்க முழுக்கத் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் முகநூலைவிட்டு வெளியேறினேன். சமூக வலைதளங்களில் யாரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுபோல யாரென்றே தெரியாத சிலரிடமிருந்து அபத்தமான, அர்த்தமில்லாத முகநூல் குறுஞ்செய்திகள் வரும். ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியொரு குறுஞ்செய்தி வந்தால் அவர்களை ‘ப்ளாக்’ செய்துவிடுவேன். பொதுவாக எனது புகைப்படங்களை முகநூலில் பதியமாட்டேன். ஒருவேளை பதிந்தாலும் அது குழுவா

சிறப்புப் பகுதி - பெண் மெய்: அனுபவம்
கமலா ராமசாமி  

மேடிஸனின் இரங்கல் கூட்டத்திற்கு வந்த ராஹி ஃபேக்டரைக் கட்டி அணைத்தபடி, “நான் இப்பொழுது ஃபேக்டரை விரும்புகிறேன். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை இழந்துவிட்டோம். இது வருத்தமமான விஷயம்” என்று லோரா ஜோர்டன் கூறிய செய்தி எனக்கு மிகவும் வியப்பளித்தது.எட்டு வயதுச் சிறுமி மேடிஸன் காணாமல் போகிறாள். ஒரு மணி நேரத்துக்கு முன்பாகத்தான் அவர்கள் குடியிருக்கும் டென்னரி ஆர்ட் சென்டர் காலனி மைதானத்தில் புது ஸ்கூட்டரில் மகிழ்ச்சியாகச் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறாள். அது கண்காணிப்பு காமிராவிலும் பதிவாயிருக்கிறது. அந்தச் சிறுமியின் அம்மா லோரா ஜோர்டன் “என் பெண் புத்தம்புது வெள்ளை ஸ்கூட்டரில் ரோஜா நிற கவுன், கறுப்புநிற ஹெல்மட் அணிந்து மகிழ்ச்சியாகச் சுற்றிக்கொண்டிருந்தாள்” என்று த

சிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை
உமா சங்கரி  

சமீபத்தில் ஒரு குழந்தைக்கு முடியிறக்கிக் காதுகுத்தும் விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. குழந்தைக்கு ஒரு வயது. வேற்றுமையே இல்லாமல் வந்திருந்த ஐம்பது உறவினர்களிடையே அந்தக் குழந்தை பொக்கை வாயில் முளைத்திருந்த ஒன்றிரண்டு பற்களுடன் நிறைய சிரித்துக்கொண்டு, இல்லை, இளித்துக்கொண்டு trapeze artist போல் தாவிக்கொண்டிருந்தது. டான்ஸ் ஆடு என்றால் உடனே ஆடும், பாட்டுப் பாடு என்றால் உடனே ம்ம்ம்... என்று இழுக்கும், தாத்தாவை மிரட்டு என்றால் மிரட்டும். குழந்தைக்கு வேற்று முகமே இல்லையே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். நாவிதர் வந்தவுடன் குழந்தையைத் தாய்மாமன் மடியில் உட்காரவைத்து முடியிறக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான். குழந்தை அழ ஆரம்பித்தது. சில நொடியில் கதற ஆரம்பித்தது. பிறகு கத்திக்கதறித் தீர்த்

அஞ்சலி: மனோரமா (1937 - 2015)
விலாசினி  

இந்த வருடத் தொடக்கத்தில் சமூக வலை தளங்களில் மனோரமா இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அவர் அந்தச் சமயத்தில் உடல் சுகவீனமாகவே இருந்தார். ஆனால் அந்த வதந்திக்குப் பதிலளிக்கும் வகையில், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகவும் பேட்டியளித்தார். அது போன்ற ஒரு வதந்தியாகத் தான் அக்டோபர் 11 அன்று காலையில் அவர் மரணச் செய்தியைப் படித்தபோது நினைத்தேன். ஆனால் ஒரு சில நிமிடங்களிலேயே தகவல் உண்மையென்று அறிந்தபோது பதற்றமடைந்தேன். எல்லா பிரபலங்களின் மரணமும் மனதைக் கனக்கச் செய்வதில்லை. ஆனால் மனோரமா வெறும் பிரபலமாக மட்டும் இல்லை, அதனால்தான் அவரை அன்போடு அனைவரும் ‘ஆச்சி’ என்றழைத்தனர். பத்துப் படங்கள் நடித்தவுடனேயே ஏதோ ஒரு ‘ஸ்டார்’ஐ பெ

அஞ்சலி: திருமாவளவன் (1955 - 2015)
பா. அகிலன்  

2009இல் வெ.சா எழுத்து வாழ்வின் 50 வருட நிறைவைக் கௌரவப்படுத்துவதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக ஒரு நூலைக் கொணர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் திருமாவளவன் எமக்கு அறிமுகமானார். யாழ்ப்பாணத்து வீடுகளுக்குத் தொலைபேசி இணைப்புகள் பெரிய அளவில் இல்லாதிருந்த அக்காலத்தில், ஒருநாள் ஏதாவதொரு தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து ‘இப்போது கனடாவில் என்ன நேரம்’ எனப் பார்த்து அவரை முதன்முதலில் அழைத்தமை ஞாபகத்தில் இருக்கிறது. எதிர்ப்புறத்திலிருந்து வந்த சன்னமான குரலையுடைய நபர் எடுத்த எடுப்பிலேயே நெருக்கமானார்; எப்படி அந்த நெருக்கம் நிகழ்ந்ததென்று இன்றும் சரியாகத் தெரியவில்லை. அவர் என்னைவிடப் பெரிய வராயிருந்தும், பரஸ்பரம் ஆளையாள் கிண்டலடித்துக் காலைவாரி விளையாடுமளவிற்கு அந்த

மதிப்புரை
கீதா சுகுமாரன்  

சிறு புள் மனம் (கவிதைகள்) வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் & 629 001 பக்: 360 ரூ. 375 'முன்னெப்போதும் அறிந்திராத ஊரை வசிப்பிடமாக்கும்போது நாம் மாயைகளை உதறுகிறோம். உலகைப் பற்றிய மாயைகளை அல்ல, நம்மைப் பற்றிய மாயைகளை' என்றார் புலம்பெயர்ந்த படைப்பாளிகளுள் ஒருவரான ரஷியக் கவிஞர் ஜோஸப் பிராட்ஸ்கி. அப்படி உதறிய மாயைகளும், அதன் மூலம் உருப்பெற்ற எண்ணத்தடங்களும் வாழ்வின் நிஜங்களுமே திருமாவளவனைக் கவிஞன் ஆக்கின. பொருந்த இயலாத புலம்பெயர்ந்த மண்ணின் பின்புலத்தில்தான் திருமாவளவனின் எண்ணச் சாயல்கள் கவிதைகளான ரசவாதம் நிகழ்ந்தது. 'சிறு புள் மனம்' எனும் இத்தொகுப்பு, 2000ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது முதல் கவிதை நூல் 'பனிவயல் உழவு' என்பதிலிருந்து தொடங்கி அதன்பின் வெ

உள்ளடக்கம்