தலையங்கம்
 

ஒரு மழை போதும்! நம் சமூகத்தின் சகல அவலங்களையும் அளந்துபார்க்கும் அளவுமானியாக அது மாறுகிறது! ஒரு சொட்டுத் தண்ணீருக்கும் பரிதவிக்கும் அந்த அவலத்திலிருந்து நம்மை மீட்கப்போகிறது இந்த மழை என்கிற ஆசைக் கனவுதான் மழையின் முதல் ரீங்காரத்தில் எல்லோருக்கும் இருந்தது; அடுத்த சிலமணி நேரங்களில் அது பலரின் மரண ஓலமாக மாறியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 9ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததும் தமிழகம் நிலைகுலைந்தது. மாந்த்ரீக யதார்த்த நாவல் ஒன்று விசித்திரமான காட்சிகளாக விரிவடைந்துகொண்டே போவதைப் போல மழையின் விபரீதங்கள் பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தன. மழை ஒருபக்கமும் நிர்க்கதியான மக்கள் ஒருபக்கமும், மழையோடும் மக்களோடும் மல்லுகட்டுகிற மாநில அரசின் பொருண்மையற்ற நிர்வாக

தலையங்கம்
 

‘மூடு டாஸ்மாக்கை மூடு’, ‘ஊத்திக் கொடுத்த உத்தமி’ என்கிற இரண்டு பாடல்களைப் பாடியதற்காக மகஇக அமைப்பின் பாடகர் கோவனைக் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அரசியல் ஆர்வலர்களுக்கு ஓரளவுக்கு அவர் பாடல்களின் பரிச்சயம் உண்டு. தன்னளவில் நேர்மையானவர் என்பது மட்டுமல்ல, தனிநபரை முன்னிறுத்திக் கொள்ளாத அமைப்பொன்றின் அர்ப்பணிப்புடைய கலைஞன் அவர். கடந்த பல ஆண்டுகளாகத் தான் சார்ந்த இயக்க வழிகாட்டுதலில் மேடைகளில் பாடி வந்தவர் கோவன். அக்கட்சியோடு முரண்பாடுகொண்ட பிற முற்போக்கு மேடைகளிலும்கூட அவரின் பாடல்கள் ஒலித்துவந்திருக்கின்றன. அந்த வகையில்தான் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் வெகு பிரச்சனை

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

கடந்த 1990களில் ‘வரலாற்றின் நிறம் சிவப்பு’ என்பதை மாற்றி, ‘வரலாற்றின் நிறம் பச்சை’ என்று பார்க்கும் மனப்பாங்கு உருவாயிற்று. கத்தியும் ரத்தமும் மட்டுமே வரலாற்றின் குறியீடுகளாக இருந்ததை மாற்றி, அவை ஏன் திணைகளும் பொழுதுகளுமாக இருக்கக்கூடாது என்று சிந்தித்தனர் சில வரலாற்று ஆசிரியர்கள். அதன் விளைவாக சூழல் வரலாறு (Environmental History) எனும் ஒரு சரித்திரப் பிரிவு முகிழ்த்தெழுந்தது. வந்த காலமும் வருங்காலமும் சந்திக்கும் புள்ளியை நிகழ்காலம் என்றழைக்கிறோம்.. இங்கே காலம் நிகழ்கிறது. அது ஒரு குறிப்பிட்ட சூழலில் நிகழ்கிறது. சூழல் என்பது வாழ்க்கை, மற்றும் வாழ்வை நடாத்தும் வளங்கள், இயக்கங்கள், முடிவுகள், முடிவெடுக்கும் முறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. கடந்தகாலத்தால் கட்டம

 

பெண்கள் மீது இணையம் வழி நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் பற்றிய ஐ.நா அறிக்கையின் சாராம்சத்தை முன்வைத்து எஸ்.வி. ஷாலினி எழுதியுள்ள ஒரு பக்க அறிமுகம் தீவிரமான அதிர்வுகளை எழுப்பியது. “இந்தியப் பெண்களால் 46.7 சதவீதத்தினர் தங்கள்மீது இணையவெளியில் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் புகார் அளிக்க முன்வருவதில்லை; இதைவிட மோசம், 18.3 சதவீதப் பெண்கள் தங்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்த பிரக்ஞை (கூட) இல்லாமல் இருக்கிறார்கள்” என்ற உண்மை கவலையளிப்பதாக உள்ளது. பொதுவாக, இந்திய சமூகம், (ஆண்-பெண் இருசாராருக்கும் இதில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடில்லை) தன்மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் எதுவாயினும், எவ்வளவாயினும் எதிர்வினையாற்றாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகவே இருக்

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

திப்பு மறுபடியும் பேசப்படுகிறார். சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர்; வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர்; மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர்; இந்திய வரலாற்றின் மிகப்பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர். வரலாறு என்ன சொல்கிறது? இதை அறிய நாம் சில கேள்விகளைக் கேட்கவேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச்சென்ற சுவடுகளில் தேட வேண்டும். திப்புவைப்பற்றி வெள்ளைக்காரர்கள் (பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தவர் மட்டுமல்ல, பிரெஞ்ச், போர்ச்சுகீசியர் போன்றவர்களும்) பக்கம்பக்கமாக எழுதியிருக்கிறார்கள். இவற்றில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தவர் எழுதியிருக்கும் புத்தகங்களின் நம்பகத்தன்மை

 

திப்பு சுல்தானை எதிர் நாயகனாகச் சித்திரித்ததில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு கணிசமான பங்கு இருப்பதாக பிரபல வரலாற்றாளர் வில்லியம் டால்ரிம்பில் குறிப்பிடுகிறார். 1990களின் தொடக்கத்தில் பிரஞ்சு அரசாங்கம் தனது தீவிரமான வெளிநாட்டுக்கொள்கையை அமல்படுத்த மறுகண்டுபிடிப்பு செய்த இரை திப்பு சுல்தான் என்கிறார் அவர். திப்புவை ஒரு இஸ்லாமிய சர்வாதிகாரியாகச் சித்திரிக்க பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட தந்திரத்தை பிரஞ்சு அரசாங்கம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். திப்பு சுல்தானைச் சகிப்புத் தன்மையற்றவராகவும் மதவெறியராகவும் ஐரோப்பிய எதிரியாகவும் பிரிட்டிஷ் அரசு கட்டமைத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்த பிரிட்டிஷ் அமைச்சர் ஹென்றி டுன்டாஸ் இந்தக் கட்டமைப்புக

கட்டுரை
சு.கி. ஜெயகரன்  

சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கு அடுத்து சிந்துசமவெளியில் தழைத்திருந்த, உலகிலேயே மூன்றாவது பெரிய ஹரப்ப நாகரிகம் பற்றி 1920களில் முதலாவதாக அறியப்பட்டது. அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இந்த நகர்ப்புற நாகரிகம் பற்றி மேலும் தகவல்களை ஈன்றன. இவ்வகையில் அண்மையில் ஹரியானா மாநிலத்தில் ராக்கிகர்கியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஹரப்ப நாகரிகம் சார்ந்த இரண்டாயிரம் களங்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் அறியப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஜம்மு, காஷ்மீரத்தில் ஆரம்பித்து உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும், தெற்கே மகராஷ்டிரத்தில் உள்ள தய்மாபாத் வரையிலும் பரவியுள்ளன. ஹரியான

கட்டுரை
ஜே.ஆர்.வி. எட்வர்ட்  

காலத்தைச் சற்றுப் பின்னகர்த்தி, 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் காட்சிகளை ஒருமுறை மனத்திரையில் கொண்டு வருவோம். அக்காட்சிகளை அசைபோட்டுப் பார்த்தோமென்றால், கீழ்வரும் காட்சி நம் மனத்திரையில் விரியும்: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்டிருந்த, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும் அவர் அடியார்களும் மேடைக்கு மேடை முழங்குகிறார்கள், “இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாகக் குஜராத் திகழ்கிறது; மோடிதான் சிறந்த முதல்வர்; இந்தியாவை குஜராத் போல் மாற்றிக் காட்டுவோம்...” (‘மோடிதான் சிறந்த முதலமைச்சர்’ என்ற பிரச்சாரத்துக்குப் பதிலடியாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘மோடியல்ல, இந்த லேடிதான்’ என்றும் மறுநாள் மு.க. ஸ்டாலின், ‘மோடியுமல்ல, லே

கதை
 

ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான். துப்பாக்கி சுடாதபோது தலையை உயர்த்தி சிப்பாயைச் சினத்துடன் பார்த்தான். அவன் பார்வையில் ஏளனம் இருந்தது. ‘என்ன, மறுபடியும் உன் துப்பாக்கி வேலை செய்யவில்லையா? உன்னுடைய ராணுவ அதிகாரிகள் உடைந்துபோன துப்பாக்கிகளையா சிப்பாய்களுக்குக் கொடுப்பார்கள்? அல்லது உன்னைப்போல உதவாக்கரைகளுக்குப் பழுதான துப்பாக்கிகள் போதுமென்று நினைத்தார்களா?’ சிப்பாய்க்குக் கோபம் வந்தது. ‘உன்னுடைய புத்தி கட்டையானது; ஆனால் வாய் நீளமோ அளக்க முடியாதது. இந்த துப்பாக்கியைத் திருத்தியவுடன் குண்டு உன் வாய்க்குள்ளால் பாயும். அதுவரைக்கும் ப

பாரதி இயல்
 

1916 நவம்பர் 22 புதுச்சேரி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். அன்று இரவு ஒரு பெரும்புயல் வீசியது; முழுப் புதுச்சேரியையே புரட்டிப் போட்டது. அந்தப் புயலைப் பற்றிக் கவிதையிலும் உரைநடையிலும் பாரதி பதிவு செய்திருக்கிறார். ஆலங்குப்பம் என்னும் கிராமத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த பாரதிதாசன் புயற்காற்றால் வீசியெறியப்பட்டார். அந்த நிகழ்வையும்கூட பாரதி குறித்துள்ளார். புயற்காற்று வீசிய அந்த இரவில் ஒரு கணவனும் மனைவியும் தம்முள் அரற்றிக்கொள்வது போலப் பாரதி ஒரு கவிதை எழுதியிருந்தார்: காற்ற டிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே என மனைவியும், வானஞ் சினந்தது; வைய நடுங்குது தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம். (கால வரிசையில் பாரதி பாடல்கள், ப. 655) எனக் கணவனு

புதிதாகக் கண்டறியப்பட்ட பாரதியின் கட்டுரை
 

முதலாவது குடிசைகள் வேண்டும். குடிசையில்லாமலும், பிழைப்பில்லாமலும் சில ஜனங்கள் குடியோடிப் போவதாக முத்யாலுப் பேட்டை முதலிய இடங்களிலிருந்து செய்தி கிடைக்கிறது. சில இடங்களில் தரையோடு கிடக்கும் மரங்களை வெட்டும் போது அடியிலே மனிதவுடல் அகப்படுகிறது. வெள்ளவாரிப் பக்கத்தில் மரத்தடியில் ஒரு குழந்தையின் கால் அகப்பட்டது. உடலில் மற்றப் பகுதி காற்றிலே போய்விட்டது. முத்தியாலுப் பேட்டையிலும், மரத்தை ஏலத்தில் எடுத்தவர் வெட்டிப் பார்க்கும்போது கீழே குழந்தையுடல் கிடந்தது. நெல்லித் தோப்பு நெல்லித் தோப்பு என்ற கிராமம் புதுச்சேரிக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. இங்கு புயற்காற்றுக்கு முன்னிருந்த வீடுகளின் தொகை சுமார் 450. இவற்றில் அடியோடே அழிந்துபோன வீடுகள் 50. சேதப்பட்டன பல. ஜனச்சேதம் 5பேர்.

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

தமிழ் நவீனத்துவ கவிதை ஆரம்பிக்கும் இடம் என்று தனிப்பாடல் திரட்டைச் சொல்லலாம் – என்று முன்பே குறிப்பிட்டேன். தனிநபர்த் துயரங்களும் ஆற்றாமைகளும் எதிர்மறை உணர்வுகளும் ஏச்சுகளும் எள்ளலும் கொட்டிக்கிடக்கும் கிடங்கு அது. பொதுமனத்தின் பிரதிநிதியாய் இருந்த புலவன், கூட்டத்திடமிருந்து விலகிய தன்னிலையின் குரலில் பேசத்தொடங்கியதன் சாட்சியம். எண்ணற்ற புலவர்கள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பு. இருந்தும் கவிஞர்களாக எழும்பி வருபவர்கள் மிகவும் சொற்பம். அவர்களில் மிகச் சிறப்பான இடம் அவ்வைக்கும் காளமேகத்துக்கும் உண்டு. அவ்வை என்பது தனித்ததொரு பெண்மனம் அல்ல என்று கருத்துகளும் ஆய்வுமுடிவுகளும் நிலவுகின்றன. அவ்வையின் பெயரால் விளங்கும் பாடல்களில், செய்யுள்களில், பக்திக் கவிகளில், சங்கப் பாடல்களில் இந்த ம

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

சமரன் (இதழ்கள் தொகுப்பு) வெளியீடு: தியாக தீபங்கள் 19, வங்கி ஊழியர் குடியிருப்பு, 3வது குறுக்குத் தெரு, குமரன் நகர், திருச்சி - 620 017 பக்: 600  ரூ. 400 தமிழக வரலாற்றில் உண்மையான பதிவுகள் குறைவு. அதனால் பல இடங்களில் ஊகங்களை விட்டெறிந்து சரிசெய்ய வேண்டியிருக்கிறது. பிரிட்டிஷ் காலம்வரை இந்த நிலைதான் என்று பாலபாடம் மாதிரி மாணவர்களுக்குச் சொல்லுவது வரலாற்றாசிரியர்களின் பொதுவான வழக்கம். உண்மையில் இது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியதா? இல்லவே இல்லை. எல்லாக் காலங்களிலும் உள்ளதுதான். குறிப்பாகத் தமிழக அரசியலின் உண்மை முகம் எப்போதுமே அரைகுறையாகத்தான் காட்டப்பட்டு வந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் முரண்பாடான பேச்சுகள் காலந்தோறும் அப்படியே பதிவுசெய்யப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டிருக

மதிப்புரை
சிவசங்கர் எஸ்.ஜே  

கவர்னரின் ஹெலிகாப்டர் (சிறுகதைகளும் நிகழ்வுகளும்) வெளியீடு: வம்சி பதிப்பகம் 19, டி.எம். சாரோன் திருவண்ணாமலை & 606 601 பக்: 224 ரூ. 200 “Life is always going to be stranger than fiction, because fiction has to be convincing and life doesn’t” - Neil Gaiman சிறுகதை, கவிதை, நாவல்கள் போன்ற வழமையான பிரதிகளைத் தாராளம் எதிர்கொண்டுள்ள வாசகன் புதிய வடிவிலான பிரதிகளைத் தேடி நிற்கிறான். பயண இலக்கியம், கடித இலக்கியம், சுயசரிதம், அரசியல் தத்துவார்த்த எழுத்து, பத்தி எழுத்து எனத் தேடல் தொடர்கிறது. சிறுகதைகளும் கட்டுரைகளும் ஒரே புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிற எஸ்.கே.பி. கருணா எழுதியிருக்கும் ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ தொகுதியை, இந்தச் சேர்மானம் ஆவலைத் தூண்

மதிப்புரை
பா. செல்வகுமார்  

வெல்லிங்டன் (நாவல்) வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் & 629 001 பக்: 344 ரூ. 275 “பையன் ராட்சசன். ரிப்போர்ட்டுக்குள் மலைப் பிரதேசத்தின் ஜீவனைச் சொருகப் பார்க்கிறான்” - ஜான்சல்லிவன் ‘வெல்லிங்டன்’ நாவல் ப - 34 தீண்ட முடியாத மலைநில வரைபடத்தின் குறுகிய வாசலை முட்டித்திறந்து மேலேறி அதன் தட்பவெப்பத்தை விகசித்துத் தனது நாகரிகத்தை விதைத்து அறிவியலும் அதிகாரவியலும் கலந்த கெட்டியான பொருளாதாரச் சமூக மனத்தை வீசிப்போன ஜான்சல்லிவனுக்கு அப்பால், அந்நிலவரைபடத்தில் பாபு புழுவாக ஊர்ந்து கூட்டில் வளர்ந்து சூழலில் திமிர்வது வெல்லிங்டன் நாவல் வாசிப்பின் சுருக்கப்பிரதி. நீலகிரியில் (வோட்டகமண்ட்) இங்கிலீஷ் ஆட்சியை நிலைநாட்ட, வியாபாரத்தைப் பெரு

கதை: மலையாளம்
 

உண்ணியும் அம்பிளியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அம்பிளிக்கு ஒன்றுக்கு முட்டியது. புதரைநோக்கி ஓடிப்போனாள். ஓடிய வேகத்திலேயே திரும்பி வந்தாள். ‘‘நீ ஒன்னுக்கு இருக்கலியா?’’ உண்ணி கேட்டான். ‘‘இல்ல, உக்காந்தபோதுதான் இதைப் பார்த்தேன்’’ கையில் வைத்திருந்த வாய்மூடிக் கட்டிய செம்புக் குடத்தை அம்பிளி உண்ணியின் கையில் கொடுத்தாள். ‘‘இதென்னா?’’ ‘‘எனக்குத் தெரியாது’’ குடத்துக்கு வெளியே களிம்பு வாசனையின் சிறு படலம் இருந்தது. ‘‘நாம இதெத் தொறக்கலா’’ அம்பிளிதான் சொன்னாள். ‘‘நீயே தொற’’ உண்ணி குடத்தைத் திரும்பிக் கொடுத்தான். ‘‘உனக்க

சக்திஜோதி  

1. ஆரஞ்சு வண்ண உடைகளை ஆரஞ்சு வண்ணப் பொருள்களை ஆரஞ்சு வண்ண வாகனங்களை விரும்புகிற ஒருத்தி தன்னுடைய கனவுகளிலும் ஆரஞ்சு வண்ணத்தைக் காணவே விரும்பினாள் ஆரஞ்சு வண்ணம் என்பது அவளுடைய கற்பனைகளுக்கு வசீகரத்தையும் புதுப்புது அனுபவத்தையும் தருகிறதாக நம்புகிறாள் கூடவே நினைவில் கொள்ள வேண்டிய அவளுடைய காயங்களின் ஆறாத கணங்களையும். 2. மீண்டும் மீண்டும் அவள் அந்தக் கனவைக் காண விரும்பினாள் மூடிய கண்களுக்குள் காணுதல் அவளுக்கு அறிமுகமாகிய ஒரு நாளில் உறங்கும் பொழுது கண்ட கனவுகளுக்கு அர்த்தம் அறிந்து கொண்டாள் இப்பொழுதெல்லாம் பிடிபடாமல் போவதும் தொடர்பறுந்து போவதுமான தன்னுடைய இரவின் கனவுகளுக்கு மூடிய இமைகளுக்குள் ஒளிரும் சொற்களை உணர்ந்து கொள்கிறாள் என்பதால் மீண்டும் மீண்டும் அவள் அந்தக

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன் (1931 - 2015)
தேவகாந்தன்  

சென்ற அக்டோபர் 3ஆம் தேதி, நான் லண்டனில் நின்றிருந்தபோது, என்னை இன்னும் கனடாவிலிருப்பதாக நினைத்த வெங்கட் சாமிநாதனிடமிருந்து, அப்போது திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனின் உடல் நிலையை விசாரித்து முகநூல் செய்தி வந்தது. திருமாவளவன் தனது சுகவீனம் காரணமாக அடிக்கடி வைத்தியசாலை சென்று வந்துகொண்டிருந்த நிலையில் விஷயம் எனக்குச் சாதாரணமானதாக இருக்க, வெங்கட் சாமிநாதனின் எழுத்தில் ஒருவித பதற்றமிருந்ததைக் கண்டேன். அதனால் நண்பர்களிடம் விசாரித்துத் தகவல் தெரிவிப்பதாக அறிவித்துவிட்டு நான் அந்த முயற்சியில் இருந்தபோது, 5ஆம் திகதி வெ.சா.வே எழுதினார், ‘இனி விசாரிக்கத் தேவையில்லை, தேவகாந்தன். திருமாவளவன் போய்விட்டார்’ என்று. அவரது பதற்றத்தின் உறைப்பு இன்னும் கனதியாக என்ன

அஞ்சலி: ஆ. வேலுப்பிள்ளை (1936 - 2015)
எம்.ஏ. நுஃமான்  

தமிழறிஞர், பேராசிரியர் வேலுப்பிள்ளை இன்று நம்முடன் இல்லை. நவம்பர் முதலாம் தேதி அவர் காலமானார் என்ற செய்தியை அவரது மாணவர்களும் தமிழியல் ஆய்வாளர்களும் கவலையோடு எதிர்கொண்டனர். அவர் நெடுநாள் நோய்ப்படுக்கையில் இருக்கவில்லை. அமெரிக்காவில் சன் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள தனது வீட்டில் குளியலறையில் விழுந்ததனால் ஏற்பட்ட தலைக்காயம் அவரது மரணத்துக்குக் காரணம் எனத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தவகையில் அது எதிர்பாராத திடீர் மரணம்தான். இறக்கும்போது அவருக்கு வயது 79. இன்னும் சில ஆண்டுகளாவது அவர் தன் ஆய்வுப் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அது முடியாது போனமை தமிழ் ஆய்வுலகுக்கு ஒரு இழப்புதான். யாழ்ப்பாணத்தின் மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தில் வேலுப்பிள்ளையும் ஒரு முக்கியமான கணு. யாழ்ப்பாணம் தென் பு

அஞ்சலி: செ. முஹம்மது யூனூஸ் (1924 - 2015)
மு. இராமனாதன்  

பனது பர்மா குறிப்புகள்’ புத்தகத்தில் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கிற இடத்தில் யூனூஸ் பாய் இப்படித் தொடங்குவார்: “1924ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன்.” டிசம்பர் 25 என்று தேதியைக் குறிப்பிடமாட்டார். ஒருவேளை தனது மரணச் செய்தியைத் தானே எழுதுகிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தால், “2015ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உயிர்நீத்தேன்” என்று எழுதியிருக்க மாட்டார். மாறாக, “2015ஆம் ஆண்டு திருநாளான பக்ரீத் அன்று உயிர்நீத்தேன்” என்றுதான் எழுதியிருப்பார். தன்னைச் சமூகவியக்கத்தின் அங்கமாகத்தான் யூனூஸ் பாய் எப்போதும் கருதி வந்தார். தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சகமனிதர்கள்மீது எல்லையற்ற நேசமும் அவருக்கு இருந்தது. அதனால்தான் &lsqu

அஞ்சலி: ஆசி ஃபெர்ணான்டஸ் (1957 - 2015)
வேணி  

நவம்பர் முதல் வாரம் திங்கட்கிழமை மாலை தோழர் ஆசி ஃபெர்ணான்டஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது சற்று கவலையாக இருந்தபோதிலும் அதிர்ச்சியோ ஏதோ விபரீதமாக நேரப்போகிறது என்ற சந்தேகமோ இருக்க வில்லை. ஏற்கனவே இருமுறை நடந்தது போல் ஒரு சில நாட்களில் நலமடைந்து வீடு திரும்பிவிடுவார் என்று நினைத்ததால் மருத்துவமனை சென்று அவரைப் பார்க்கக்கூட இல்லை. செவ்வாய்க்கிழமை, 18 வயதுவரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாய சம கல்வி உரிமைச்சட்ட மசோதாவை (அவரின் முன்முயற்சியாலும் பெருமளவு அவரது பங்கேற்பாலும் வரைவு செய்யப்பட்டது) இறுதி செய்வதற்காக ஒரு கலந்துரையாடலுக்கான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்த பிறகுதான் அவர் மருத்துவ மனைக்குச் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்திற்கு

கட்டுரை
தொ. பத்தினாதன்  

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்களிப்பு தமிழ்நாட்டுக்கும் உண்டு. தட்டையாக, நெட்டையாக, குட்டையாகப் பல பரிமாணங்களும் உடையன தமிழகப் போராட்டங்கள். அதேபோல் கறுப்பு - வெள்ளை என்று மட்டுமல்லாது பல வர்ணங்களையும் கொண்டது அது. இத்தொடர் போராட்டங்களை அவதானிக்கும்போது ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகத் தென்படுகிறது; அதாவது ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ஈழத்தமிழருக்குக் கிடைத்த நன்மைகளை விட போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்குத்தான் பல நன்மைகள் கிடைத்துள்ளன. விதிவிலக்காக எங்கேனும் ஈழத் தமிழருக்கு நன்மைகள் ஏற்படுமாக இருந்தால் அது உலக அதிசயம். ஏற்ற இறக்கத்துடன் வண்டிவண்டியாக எவ்வளவு உயிர்களைக்கொடுத்துப் போராடினாலும் அரசுகள் நினைத்ததுதா

அறிமுகம்
என்னெஸ்  

Tirukkural A New English Version by Gopalkrishna Gandhi Aleph Classics Aleph Book Company 7/16 Ansari Road, New Delhi - 110 002 Rs. 399 Page: 150 செவ்விலக்கியப் படைப்புகளுக்கு எழுதப்படும் உரைகளும் பிறமொழிகளுக்குச் செய்யப்படும் மொழியாக்கங்களும் பெரும்பாலும் சமகால வாசகனிடம் ஒவ்வாமையையே ஏற்படுத்துகின்றன. அந்தப் படைப்புகளைச் சமகால உணர்வுக்குப் பொருந்தும்வகையில் அணுகாததுதான் இந்த ஒவ்வாமைக்குக் காரணம். செவ்விலக்கியப் படைப்புகளைப் புரிந்துகொள்ள வாசகனிடம் குறைந்தபட்ச ஆயத்தம் தேவை என்பதை ஒப்புக் கொள்ளலாம். அப்படியான தயார் மனநிலையிலிருக்கும் வாசகனுக்கும் இந்த மறு ஆக்கங்கள் வாசிப்பு இன்பத்தை அளிப்பதில்லை. மறு ஆக்கம் செய்பவர்கள் ஒன்று, தமது புலமை இறுக்கத்தை உரையிலும் மொழிபெயர்ப்பிலும்

 

எனக்குள் ஒருத்தி எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும் ஒளிரும் காடுகள் தொலைக்காட்சி கேமராக்கள் நம்மைப் படம்பிடித்து ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன உன்னை நான் எங்கே ஒளித்துவைப்பேன்? எல்லாப் பத்திரிகையாளர்களும் உன்னை அட்டைப்படத்தில் அலங்கரிக்க ஆசைப்படுகிறார்கள் என்னைக் கிரேக்கக் கதாநாயகனாக ஆக

பதிவு
கிருஷ்ணபிரபு  

சென்னை கவின்கலைக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டாமாண்டு பயிலும் முதுகலை மாணவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில் - ஐந்துநாள் கலைத் திருவிழாவை அக்டோபர் 31ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஓவியக் கண்காட்சி, பயிலரங்கம், உரையாடல், விவாதம், ஓவியப் பயிற்சி, இலக்கியப் படைப்புகளை வாசித்தல் எனப் பல்வேறு அமர்வுகளில் விழா முன்னெடுக்கப்பட்டது. விழாவினைத் துவக்கிச் சிறப்பு செய்ய மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. இராசேந்திரனும் கவிஞர் சுகுமாரனும் ஓவியர் பழனியப்பனும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இலக்கியம், சினிமா, நாடகத் துறையில் ஈடுபாடுள்ள பார்வையாளர்கள் பலரும் வருகை தந்திருந்தனர். “தமிழில் மட்டும்தான் கலை என்ற சொல் ‘வினைச் சொல்’லாகவும் &lsq

பதிவு
 

தமிழில் குறிப்பாக இலங்கைத் தமிழ் வட்டகையில் சர்வதேச சினிமாவின் மாற்றுப் போக்குகள் பற்றியும் தமிழ் சினிமாவின் மாறுபட்ட முயற்சிகள், புகலிட சினிமாவின் கவனிப்பிற்குரிய வெளிப்பாடுகள், ஆயுதப் போராட்ட கால ஈழத் தமிழ் சினிமா மற்றும் சிங்கள சினிமா பற்றியும் அதிகமாக எழுதியவர் அ. யேசுராசா. அவரது எழுத்துகள், தமிழில் பல முக்கியமான அச்சு ஊடகங்களில் தனிக் கட்டுரைகளாகவும், பத்தி எழுத்துகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் 1970களில் இருந்து இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கின்றன. சினிமா பற்றிய அவரெழுத்துக்களின் ஒரு தொகுதி, ‘திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்’ என்னும் பெயரில், தமிழியல் - காலச்சுவடு வெளியீடாக 2013இல் வெளிவந்துள்ளது. அந்நூலின் முன்னுரையில், மிக்சிக்கன் அரசுப் பல்கலைக்கழக சின

உள்ளடக்கம்