தலையங்கம்
 

தமிழகத்தில் நவ - டிச. மாதங்களின் மழை சார்ந்த பேரழிவுகள் தொடர் அலட்சியங்களின் விளைவுகளாகும். ஒவ்வொரு மூலையிலிருந்தும் தனிநபரிடமிருந்தும் வெளிவருகிற ஆற்றாமைகளும் ஆவேசங்களும் நம்மீது பெரும் பரிசீலனைகளை நிர்ப்பந்திக்கின்றன. மழையின் சகல பரிமாணங்களையும் அலசி ஆராய வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை மட்டும் அல்ல. சென்னைப் பேரிடரை அனைத்துலகும் தக்க காரண காரியங்களோடு இந்நேரம் அவதானித்துள்ளது. ஆனால் இதை நம்நாட்டின் சூழல்களோடும் தனித்துவத்தோடும் பரிசீலிக்க வேண்டும். இதற்கு அரசும் தனியார் நிறுவனங்களும் பெரிதும் கடன்பட்டுள்ளன. ஆற்றாது அழுத கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாலும் பொதுச் சமூகத்திற்கும் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. தென்னிந்தியாவை இன்னும் ஏழாண்டு காலத்திற்கும் மேலாக இதே போன்ற பெருமழை வாட்ட

தலையங்கம்
 

“பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயப்படுத்துமானால் கூட அதற்குத் தடை இருக்கக் கூடாது. பத்திரிகைச் சுதந்திரம் உண்மையாகவே மதிக்கப்படுகிறது என எப்போது சொல்ல முடியும் என்றால், பத்திரிகைகளில் கடுமையான சொற்களால் விமர்சிக்க முடிகிறபோதும் தகவல்களைத் தவறாகக் கூட வெளியிட முடிகிறபோதும்தான். கூட்டங்களில் புரட்சித் திட்டம் தீட்டுவதற்கு முடியும்போதுதான் அதற்கான சுதந்திரம் முழுமையை அடைந்ததாகப் பொருள்கொள்ள முடியும்” - காந்தி. அனிருத் இசையில் சிம்பு எழுதிப் பாடிய ‘பீப் பாடல்’ ஆபாசம், பெண்களையும் இளைஞர்களையும் இழிவுபடுத்துகிறது என சர்ச்சை கிளம்பித் தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறுகிறது. அப்பாடல் பொருள் அடிப்படையில் தேய்வழக்கானதாகவும் தமிழ் நெடும்

மழைப்பேரிடர்
சுகுமாரன்  

சென்னை, கடலூர் உட்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அந்தப் பாடங்களும் படிப்பினைகளும் வெள்ளத்தால் போகாதவை. இதுபோன்ற இயற்கைப் பேரழிவை, மனிதப் பேரிழப்பை தமிழக மக்கள் கண்டதில்லை. 2005ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரிடரின் விளைவுகள் மக்கள் திரளின் ஒரு பிரிவினரையே கடுமையாகப் பாதித்தது. ஆனால் சமீபத்திய ஊழிப்பெருமழை அனைத்துத் தரப்பினரின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியது. அரசின் முன்னெச்சரிக்கையின்மை, நகர்ப்புற & நகர்ப்புற வளர்ச்சிக்காக இயற்கையைப் பலிகொடுத்த பேராசை, நீரையும் நிலத்தையும் விற்றுப் பிழைக்கும் வணிகவெறி எல்லாமே இவற்றுக்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அவை அப்பழுக்க

மழைப்பேரிடர்
மணி மணிவண்ணன்  

சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்துப் பேரிழப்புகளை ஏற்படுத்திய ஊழிப் பெருவெள்ளம் வரலாற்றில் மறக்கக்கூடாத ஒரு பேரிடர். இது சுனாமிபோல அறிவிக்காமல் வரவில்லை. முதல் இரு மழைகளின் வெள்ளத்தால் விளைந்த சேதங்களும், தொடர்ந்து கனமழை பெய்யப்போகிறது என்ற வானிலை எச்சரிக்கையும் பேரிடர் மேலாண்மைக்கான ஆயத்தங்களைச் செய்யப் போதுமான நேரத்தைக் கொடுத்தபின்னரே இந்த ஊழிப்பெருமழை வந்தது. இதுவே போர்க்காலம் என்றால் அபாயச் சங்குகள் ஊதியிருக்கும். கோவில்களிலும் தேவாலயங்களிலும் விடாமல் மணி அடித்திருக்கும். மசூதிகளின் ஒலிபெருக்கிகள் எச்சரிக்கைச் செய்தியைப் பரப்பியிருக்கும். வெள்ள மதகுகள் பகலில் திறக்கப்பட்டிருக்கும். கரையோர மருத்துவமனையிலிருந்து எல்லா நோயாளிகளையும் வெள்ளத்துக்கு முன்பே வெளியேற்றியிருப்பார்கள். வல

மழைப்பேரிடர்
யுவன் சந்திரசேகர்  

புத்தாண்டு வாழ்த்து சொல்கிற மாதிரி அவரவரும் வெள்ளக் குசலம் விசாரித்துக்கொண்டிருந்த வாரம் அது. பெரும் பணக்காரரும் மருத்துவருமான வாடிக்கையாளர் எங்கள் வங்கிக் கிளைக்கு வந்தார். அவரிடமும் விசாரித்தேன். எப்போதும் போலவே, சரளமான ஆங்கிலத்தில், தணிந்த குரலில் சொன்னார்: கீழ்த்தளத்தில் எட்டடி உயரத்துக்குத் தண்ணீர். மூன்று கார்களும் வீணாகிவிட்டன. படகில் வந்துதான் எங்களை மீட்டார்கள். வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்தேன். எனக்கு ஆறுதல்சொல்லும் விதமாக டாக்டர் சொன்னார்: Anyway, we are alive. So, we can survive... அப்புறம், எங்கள் கிளைக்குக் குடிதண்ணீர் வழங்குபவர். கடும் உழைப்பாளி. சொந்தமாக டெம்ப்போ வேன் இரண்டு, கார் என்று இருந்தவர். “இருவது வருசத்துக்கு மின்னாடி வெறுங்கையோடெ மெற்றாஸுக்கு வந

மழைப்பேரிடர்
ஷாஜஹான்  

நவம்பர் - டிசம்பர் 2015 மழை நூறாண்டு வரலாற்றில் இல்லாத மழை என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. அந்தப் புள்ளிவிவரங்களையோ முந்தைய மழையுடன் ஒப்பிடும் வேலையையோ இந்தக் கட்டுரை செய்யப்போவதில்லை. முன்னெச்சரிக்கைகள், பேரிடர் மேலாண்மை, சமூக வலைதளங்கள் இதை எவ்வாறு எதிர்கொண்டன என்பதை மட்டுமே இங்கே பார்க்கப்போகிறோம். நவம்பர் மாத இறுதியில் கனமழை பெய்து முடிந்தவுடனேயே அடுத்த மழை குறித்த எச்சரிக்கைகள் வந்துவிட்டன. குறிப்பாக, டிசம்பர் 3ஆம் தேதிவரை கடலோர மாவட்டங்களில் கடும் மழை இருக்கும், 6ஆம் தேதி வரை தொடரும் என்ற எச்சரிக்கைகள் வெளிநாட்டுச் செயற்கைக்கோள் ஆய்வுகள் மூலம் காட்டப்பட்டன. ஏற்கெனவே நவம்பர் மாத மழையையே எதிர்கொள்ள முடியாதிருந்த நிர்வாகம், அடுத்து வந்த பெரும் மழையைச் சமாளிக்க முடியாமல் ம

மழைப்பேரிடர்
களந்தை பீர்முகம்மது  

நம்மை அந்தகார இருள் சூழ்ந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணியிருந்தோம். நம் தமிழ் மண்ணே இப்படி ஆகுமென்றால் இதர மாநிலங்கள்பற்றி எண்ணிப் பார்க்கவும் வேண்டியதில்லை. தமிழர்கள் எல்லா நிலைகளிலும் அதன் உச்சத்தைத் தொடுபவர்கள்; இது சில சமயங்களில் புகழ்மாலையாக மணம் வீசியது; வேறு பல தருணங்களில் நம் முகங்களை மூடிக்கொள்ளலாமோ என்று மனம் கரியும் அளவில் நெடி வீசியிருக்கிறது. அரசியல் ரீதியாகப் பகிரங்கமாய் நாம் பேசியறியாத சாதிகளைப் பேசிக் குடல்களைச் சரித்தது நம் சாதனையா? மத ரீதியான இத்தனை வன்மங்கள் எங்கே ஒளிந்துகிடந்தன என்றெண்ணிக் கலங்கித் தவிக்குமளவில் காற்றிலும் நச்சு வாடை. ஒவ்வொரு மனிதரும் எந்நேரமும் எந்த இடத்திலும் உயிரிழக்கலாம் எனும் கொடிய சூழலுக்குத் தமிழகத்தின் பாசிஸக் கட்சிகள், செய்தி ஊடகங்கள்,

மழைப்பேரிடர்
சுப. உதயகுமாரன்  

மழை - வெள்ளப் பேரிடருக்குப் பின்னர் முழுவீச்சில் நடந்த நிவாரணப் பணிகள் மெதுவாக முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. நிவாரணம் என்பது நோயின் அறிகுறிகளுக்குக் கொடுக்கும் மேம்போக்கான முதலுதவிச் சிகிச்சை மட்டுமே. நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றை அறவே நீக்கி, உடல் பலம்பெற நல்ல உணவும் ஊட்டச்சத்துகளும் உடற்பயிற்சிகளும் வழங்குவது போன்றது மறுகட்டமைப்பு. தேர்ந்த மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் மூலம், அனுபவித்துக்கொண்டிருக்கும் ஓர் ஆபத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற முடியும். ஆனால் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமிப் பேரிடர் ஒரு மோசமான முன்னுதாரணமாகவே இருக்கிறது. அதை மேம்பாட்டுக்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தாது, கடலோரத்தில் ஏற்கனவே மண்டிக்கிடந்த பிற்படுத்தப்பட்ட நிலையை அப்படியே மறுகட்டம

மழைப்பேரிடர்
கிருஷ்ண பிரபு  

சென்னையைப் பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி இரண்டு மாதங்களும் கலை ரசிகர்களின் மாதங்கள். மழை ஓய்ந்து, புகைப் பனியின் குளிர் காற்றில் பரவத் தொடங்கும் இம்மாதங்களில் இலக்கியம், ஓவியம், இசை எனப் பலதுறையைச் சேர்ந்தவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். கலாச்சார நிகழ்வுகளும் அதையொட்டிய பல்வேறு சந்திப்புகளும் உரையாடல்களும் இம்மாதங்களில் ஏற்பாடாகும். தமிழ்ப் பதிப்பகங்கள் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சிக்காக நவம்பர் மாதம் முதலே தயாராவார்கள். அவர்களுக்கு இம்மழையும் புரண்டோடிய வெள்ளமும் சவாலை விட்டுச் சென்றிருக்கின்றன. வானிலை மாற்றத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொட்டித் தீர்த்த மழையும், பொதுப் பணித் துறையால் திறந்து விடப்பட்ட ஆற்று வெள்ளமும் சென்னையின் குறி

மழைப்பேரிடர்
சுந்தர் கணேசன்  

பேரிடர் மேலாண்மை என்பது சிறு நிறுவனங்கள் முதற்கொண்டு அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கையாகும். தனி நபரின் பிரச்சனையோ அல்லது ஒரு நிறுவனத்தின் பிரச்சனையோ கிடையாது. தீவிபத்து, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது சரியான பேரிடர் மேலாண்மை மூலமாக உயிர் மற்றும் பொருட் சேதங்களை நாம் கட்டுப்படுத்தலாம். அறிவுக் களஞ்சியங்களாகச் செயல்படும் நூலகங்களில் இப்பேரிடர் மேலாண்மை சரியாக நடைமுறைபடுத்தப்படாவிட்டால் அந்த தேசத்தின் அறிவுச் சொத்து அழிந்து போகும். இதை நாம் வரலாற்றில் பலமுறை கண்டுள்ளோம். பேரிடர் மேலாண்மையை நாம் நான்கு நிலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 1. நிறுவன வடிவமைப்பில் பேரிடர் மேலாண்மை குறித்த திட்டமிடுதல் 2. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் 3. பேரிடரின்போது

நேர்காணல்
செந்தூரன்  

நித்தியானந்த் ஜெயராமன், எழுத்தாளர், மனித உரிமைகள் & சூழலியல் செயற்பாட்டாளர். அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, அனல் மின், யுனிலீவர், போபால் யூனியன் கார்பைடு போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். - தொடர்ச்சியாக சென்னை கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழைப்பேரிடர் குறித்து பூவுலகின் நண்பர்கள் சூழலியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்குக்குப் பின்னர் மேற்கொண்ட உரையாடலிலிருந்து... நகரமயமாக்கலின் விளைவாகவும் இந்த மழை வெள்ளப் பாதிப்பை அவதானிக்க வேண்டியதன் அவசியம் உள்ளதா? நகரத்தை அமைப்பதில் முன்னோர்கள் கொடுத்த கவனத்தைக்கூட நாம் கொடுப்பதில்லை. நம்மிடம் செயற்கைக்கோள் மூலம் திட்டமிட்டுச் செயல்பட உபகரணங்கள் இருந்தாலும் அதைப் பயன்படுத்தாமலேயேதான் நகரத்தை உரு

அஞ்சலி: பேராசிரியர் சே. இராமானுஜம் (1935 - 2015)
வெளி ரங்கராஜன்  

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பெங்களூர் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த எனக்கு ராமானுஜத்தின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியை உருவாக்கியது. கடைசியாக ஒருமுறை அவரைப் பார்க்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பற்றவனாக இருந்தேன். ஆனால் அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாடகச் செயல்பாடு, சந்திப்பு, உரையாடல் இவற்றின் மூலமாகவே வாழ்வதற்கான உத்வேகமும் உரமும் பெற்ற ராமானுஜத்தை நாடகத்தின் எதிர்பாராத தருணம்போல சில கணங்களே நீடித்து மரணம் தழுவிக்கொண்டது. அவர் இயக்கிய ‘கடலோடிகள்’ என்ற ஐரிஷ் நாடகத்தில் ஒரு வலையின் மூலம் மரணம் தழுவும் சூழலை வடிவமைத்திருப்பார். அதுபோல ஒரு வலையென மரணம் அவரைப் பின்னிக்கொண்டது. திருக்குறுங்குடி கோவிலில் கைசிக நாடகத்தைப் பல தடங்கல்களுக்கிடையே

பத்தி
 

எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோருடன் இணைந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டுகள் என் வாழ்க்கைக்குள் புகுந்தன. இளமைப் பருவத்திற்குள் கர்நாடக சங்கீதம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் நிறைய பாட்டுகளைக் கேட்கவும் தொடங்கினேன். பெரும் கலைஞர்களாகப் புகழ்பெற்ற அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, பாலமுரளி கிருஷ்ணா போன்ற பலரின் இசையின்மேல் இருந்த ஆர்வம் காலப்போக்கில் காணாமல் போயிற்று. எனினும் இப்போதும் எப்போதும் சுப்புலட்சுமி போன்ற சிலரது பாட்டுகளை மட்டும் பிராணவாயுவாகச் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். சுப்புலட்சுமியின் மூன்று கச்சேரிகளைக் கேட்கவும் ஒருமுறை அந்தப் பெருங்கலைஞரின் திருவடிகளைத் தொட்டு வணங்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் முடிந்திருக்கிறது. எ

 

மூன்று கோழிகளும் காலையும் மூன்று கோழிகள் இந்தக் காலையை அழகாக்குகின்றன காலையிலிருந்தே நடக்கும் கோழிகளின் நிகழ்ச்சி நிரலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றைக்கு எத்தனை தடவை முற்றத்துக்கும் பின்கோடிக்குமாக நடந்து திரியும்? வயிற்றை நிரப்பிக்கொள்வதற்கு எவ்வளவு உண்ண வேணும்? அதெல்லாம் இன்றைக்குக் கிடைக்குமா? உண்பதில் எது ருசியானது? பகலில் குளிர்ந்த மரத்தடியில் எவ்வளவு நேரம் கண்தூங்கும்? கூட்டிலிருந்து நேற்றிரவு எதைத்தான் திட்டமிட்டிருக்கும்? எதை நினைத்திருக்கும்? எத்தனை சந்தர்ப்பங்களில் புணர்ச்சியை வைத்துக்கொள்ளும்? இப்படியே யோசித்துக்கொண்டிருந்த சரோஜா மாமிக்கு பொழுது எப்படிக் கழிந்ததென்றே தெரியவில்லை தினமும் இப்படித்தான் எப்படியோ போய்விடுகிறது ஒரு கோழித்தூக்கத்துக்கும் வழியில்லாமல் அதை விட அவள

உரை
மு. இராமனாதன்  

ஹாங்காங் தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல தருணத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் அவசியத்தைப் பற்றியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் ஹாங்காங் பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்தச் சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றிவரும் நிறுவனத்தில், வாரம் ஒருநாள் மதிய உணவு வேளையில் மூத்தபொறியாளர் ஒருவர், புதிதாகச் சேர்ந்திருக்கும் இளம்பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களின் சிறப்பு, நூதன பொறியியல் அம்சங்களைப் பற்றிப் பாடம் எடுக்க வேண்டும். உரை நடந்துகொண்டிருக்கும் போதே உணவும் நடந்தேறிவிடும். என் முறை வந்தது. நான் ஒரு சிறிய மாற்றம் செய்தேன். ஹாங்காங்கில்

அஷ்ரஃப் ஃபயாத்  

பாலஸ்தீனக் கவிஞர் அஷ்ரஃப் ஃபயாத் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை செய்யப்படாத குற்றவாளியாக சவுதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் இழைத்த இரு பெரும் குற்றங்கள் - ‘இறைவனை அவமதிக்கும் வகையில்’ கவிதை எழுதியதும் தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டிருப்பதும். சவுதி அரேபியாவிலுள்ள தென்மேற்குப் பகுதி நகரமான ஆபாவில் 2013ஆம் ஆண்டு சவுதி போலீஸார் அஷ்ரஃப் ஃபயாத்தைக் கைதுசெய்து சிறையில் தள்ளினார்கள். மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் அவர் மீட்கப்பட்டார். ஆனால் உடனேயே மீண்டும் கைது செய்யப்பட்டார். 2014ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் விசாரணையும் நடைபெற்றது. நீதிமன்றம் அவருக்கு எண்ணூறு கசையடிகளும் நான்காண்டுச் சிறைவாசமும் விதித்தது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் அஷ்ரஃப்.

கதை
 

நான் ஒரு பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பலவகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு வாரத்தில் கடை மூடப்படுமெனவும் தீர்க்க தரிசனம் செய்தனர். எனது மனதோ தளரவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வாடிக்கையாளர்கள் பெருக்கெடுத்தனர். உண்மையிலேயே வாடிக்கையாளிகள் என்பதே சரி.. எனது மனதைத் தளரவைத்தவர்களும் மெல்லமெல்ல வாடிக்கையாளர்களாகினார்கள். ஏன் எனக்குள் இந்தத் திட்டம் ஏற்பட்டது என்பது இன்னும் விளங்கமுடியாமல் உள்ளது. நான் பிரபல அப்பிள் பிரியன் அல்லன். பழங்களின் வடிவங்களில் எனது மனதை நான் பறி கொடுத்தாலும் அவைகளைச் சாப்பிடுவது குறைவு. வெண்ணிறப

பதிவு
அம்பை  

ஸ்பாரோவின் 2015 இலக்கிய விருது நிகழ்வு நண்பர்களும் நலம் நாடுபவர்களும் வந்து உற்சாகம் அளித்த மனத்துக்கு உகந்த நிகழ்வாக அமைந்துவிட்டது. விருதுகளை வழங்க இந்த ஆண்டு குவாலியர் கரானாவைச் சேர்ந்த கயால் பாடகி நீலா பாக்வத் எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்தார். ஸ்பாரோவுடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்டிருக்கும் தோழி அவர். பெண் இயக்கத்தில் எங்களில் பலரைக் கொண்டாடும் தருணங்களிலும் போராடும் தருணங்களிலும் இயங்கவைத்த இசையை வழங்கியவர்; ஷரத் சந்திர ஆரோல்கரின் மாணவி. இந்த விருதை நிறுவியவர் ஸ்ரீராம் குழுமத்தைச் சேர்ந்த திரு ஆர். தியாகராஜன். இந்த ஆண்டு அதிகப்படியான செலவுகளை ஏற்க ஸ்பாரோ அறக்கட்டளையின் அறங்காவலர்களான டாக்டர் திவ்யா பாண்டே, டாக்டர் உஷா தக்கர், அமெரிக்காவிலிருந்து அரவிந்தன் கண்ணையன், சென்ன

பதிவு
கிருஷ்ண பிரபு  

‘ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச்’ ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த ‘மதுரம் பூதலிங்கம் (1915 - 2009)’ - தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறையவே எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இயற்பெயரில் எழுதியவர் தமிழில் ‘கிருத்திகா’ என்ற புனைபெயரில் ‘சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகப் பனுவல்’ எனப் பல்வேறு தளங்களில் ஊக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார். கிருத்திகாவின் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் கலைமகள், மஞ்சரி, சுதேசமித்திரன், கணையாழி, எழுத்து, அமுதசுரபி போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாவல்கள் மற்றும் நாடகங்கள் புத்தக வடிவிலேயே வெளிவந்துள்ளன. அவரது நினைவைப்போற்றும் வகையில் “நூற்றாண்டில் கிருத்திகா – எண்ணங்களில

 

டிசம்பர் இதழில் ‘திப்பு சுல்தான்: வரலாறு என்ன சொல்கிறது’, ‘ஏகாதிபத்தியத்தின் எதிர்நாயகன்’ ஆகிய இரு கட்டுரைகளையும் வாசித்தேன். ஆவணங்கள் அடிப்படையில் விவரிக்கப்படும் வரலாற்றுக்கு இணை கோடாக மக்களின் வாய்மொழியாக வழங்கப்படும் கருத்தாடல்கள் மிகவும் வலிமையானவை. திப்புசுல்தானின் ஆட்சிக்குட்பட்ட இன்றைய கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் திப்பு குறித்த வழக்காறுகள் கவனிக்கத்தக்கவை. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெரியகோவில் என்று கூறப்படும் ஸ்ரீவேணுகோபாலசுவாமிகள் ஆலயம் திப்பு கொடுத்த மானியத்தில் கட்டப்பட்டது என அவ்வூரின் வயோதிகப் பிராமணர்கள் கூறிவந்த கர்ணப்பரம்பரைக் கதையொன்று உள்ளது. அவினாசித் திருக்கோவிலில் ‘சுல்தானுக்கு சலாம்’ என்

விவாதம்
ராகவன்  

இலங்கையில் 2009 இறுதி யுத்தத்தின்போது நிகழ்ந்தது இனஅழிப்பா அல்லது யுத்தக் குற்றமா என்று வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. சமீபத்தில் சுமந்திரன் பா.உ., சர்வதேசச் சட்ட வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலையை நிரூபிப்பது கடினம் எனக் கூறியதைத் தொடர்ந்து, அவரைத் துரோகியென்றும் இனப்படுகொலையை நிராகரிப்பவர் என்றும் இலங்கை அரசின் ஏவலாள் என்றும் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதன் உச்சகட்டமாக லண்டனில் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் கூச்சலிட்டுக் கூட்டத்தைக் குழப்ப முயன்றனர். இவ்வாறு பாரிஸிலும் சுவிஸிலும்கூட நடந்தது. அத்துடன் சமீபத்தில் முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர், அதற் காகத் தமிழர்கள் தலைகுனிய வேண்டும் என்பதைச் சுமந்திரன் துணிந்து கூறியதற்காக அவர்மே

வாசிப்பு 2015
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நாவல்கள் பற்றிய கட்டுரையை ஒரு வரலாற்றாசிரியரின் போலியான கவலைக் கூற்றுடன் ஆரம்பிக்கிறேன். Edward Gibbon எழுதிய ‘The Decline and Fall of the Roman’ Empire இல் பொது யூகம் 732 இல் இஸ்லாமியர்களுக்கும் அய்ரோப்பியர்களுக்கும் நடந்த Battle of Poitiers இல் மேற்கத்தையர்கள் தோல்வியடைந்தால் வரக்கூடிய விளைவுகளை கீப்பன் இப்படி யோசிக்கிறார்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திருக்குர்ஆன் போதிக்கப்படும். அதன் பட்டதாரிகள் சுன்னத்துச் செய்யப்பட்டவர்களுக்குத் திருத்தூதர் முகம்மதின் வெளிப்பாட்டின் தூய்மையையும், அதன் புனிதப் பண்புகளை பற்றியும் தெளிவுபடுத்தக் கொண்டிருப்பார்கள். 1776இல் கீப்பன் ஊகம் செய்ததை ‘Submission‘ என்ற நாவலில் Michel Houellebecq என்ற பிரான்சு எழுத்தாளர் கதையாக எழ

கலை
மு. நடேஷ்  

நடராஜன் கங்காதரன். நட்ராஜ் என விளிப்போம். மூன்றாம் முறை இவருடைய ஓவியக்காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, “நடராஜனைப் பார்த்து இயற்கை அமைந்ததா, இயற்கையைப் பார்த்து நடராசன் அமைத்தாரா?” எனக் கேட்டேன். சி. மோகன் சிரித்தார். காத்திரமான ஒரு உலகை வடிவமைத்துவிட்டால், பார்வையாளன் அதில் லயித்துவிட்டால் அவன் கண்கொள்ளும் அனைத்துமே அவ்வடிவில் அமைந்து, நிலைத்து, உயிர்க்கும் எனத் தோன்றும். நவீன ஓவியத் துருத்தல்கள் இன்றி, வெளிப்பாட்டின் வீரியத்துடன், ஆளுமை மறைந்துநின்று ஆர்ப்பரிக்கும் குரல்களாகக் கூவும் நிலைப்பாடற்று, ஓர் அமைதியில் கிடக்கின்றன நடராஜனின் ஓவியங்கள். நாம் எது என உணராத பூமியின் புவியீர்ப்பும் வானமும் மரம், செடிகொடிகளும் நம் உதாசீனத்தின் விளிம்பில் கிடக்கும் காலம் இ

மதிப்புரை
க. இந்திரசித்து  

சதியில் எழுந்த சாதி பி. சம்பத் வெளியீடு: பாரதி புத்தகாலயம் இளங்கோ தெரு, தேனாம்பேட்டை, சென்னை - 18 பக்: 64 ரூ. 30 இன்றைய சமுதாயத்தில் மாபெரும் நோயாக வளர்ந்து வந்திருப்பது சாதி எனும் கொடிய நஞ்சாகும். சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, அது ஏற்படுத்தியுள்ள சீரழிவு போன்றவற்றை பி. சம்பத் ‘சதியில் எழுந்த சாதி’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். சாதிகளின் பரிணாமம், சமூகவிடுதலையும் சமூகமாற்றமும், இந்திய மண்ணில் சாதியும் வர்க்கமும் என்னும் தலைப்புகளில் சாதியை ஆராய்ந்துள்ளார். நூலின் இறுதியில் அவருடைய இரு நேர்காணல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இடதுசாரி இயக்கங்கள் சாதி ஒழிப்பில் முனைந்து ஈடுபடுகின்றன. தீண்டாமை ஒழிப்பு மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத

மதிப்புரை
க.வை. பழனிசாமி  

பிள்ளை கடத்தல்காரன் (சிறுகதைகள்) வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் - 629 001 பக்கம்: 192 விலை: ரூ.175 கடந்த 20 ஆண்டுகால அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இலக்கியத்திலும் கலையிலும் பெரிய மாற்றங்கள் நடந்துவிடவில்லை. இலக்கியம் வாழ்விலிருந்தே தனக்கானதைப் பெற்றுக்கொள்கிறது. மனிதனின் மனவினை அதை வேறு வேறாக ஆக்கிக் காட்டுகிறது. அழகியல் சார்ந்தும் உண்மை சார்ந்தும் புனைவால் மயக்க வல்லது இலக்கியம். இந்த இடத்திலிருந்து நவீன வாழ்க்கையை எழுதுகிற வெகு சிலரில் கவனிக்கத்தக்கவராக அ.முத்துலிங்கத்தை உணர்கிறேன். நவீனமாக எழுத முயன்ற சுஜாதா இலக்கியத்தில் தோற்ற இடத்தில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார். முத்துலிங்கத்திடம் இருப்பது பொதுவான தமிழ் அனுபவம

மொழிபெயர்ப்பு
 

பன்னிரண்டு ஆண்டுகள். ஆமாம்! கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். ‘மரியா’ என்னுடைய இரண்டு பெண்களில் மூத்தவள், இதற்கெல்லாம் காரணம் அவள்தான். இரண்டொரு நாட்களில் சொடுக்கு போட்டதுபோல நடந்து முடிந்ததல்ல. போராடிப் பார்த்தேன், கட்டிப் புரளவில்லை, மற்றபடி பெரியதொரு யுத்தம் நடந்தது. தனது முடிவிற்கு ஆதரவாக அவள் முன்வைத்த நியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல, எனினும் நிர்ணயிக்கப்பட்ட தேதியை ஆரம்பத்தில் மட்டுமே என்னால் தள்ளிப்போட முடிந்தது. எலிஸ்பெத் இரண்டாவது மகள், தனக்கு இதில் சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல அமைதியாக இருந்தாள், வெகுநாட்களாகவே, தர்மசங்கடமான சூழல்களில் மதில்மேல் பூனைபோல இருந்து பழக்கப்பட்டவள். இப்பிரச்சினையைக் குறித்துத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தனது மூத்த சகோதரி

நேர்காணல்
தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி  

“வன்முறை வழிவகைகள் நமது கலிபாக்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனை அல்ல. அவை இஸ்லாமியக் கொள்கைகளுக்கு மாறானவையாகும் என்பதை எனது புத்தகத்தில் விளக்க முயன்றுள்ளேன்” இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமான டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி எழுதிய ‘பயங்கரவாதம் மற்றும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஃப்த்வா’ என்ற நூல் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் வெளியீட்டிற்காக டெல்லி வந்திருந்த டாக்டர் தாஹிரை Frontline ஆங்கில இதழுக்காக நேர்காணல் கண்டவர் அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா. ‘ஷெய்குல் இஸ்லாம்’ எனப் பிரபலமாக அறியப்படும் டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி, புகழ்பெற்ற இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமாவார். 195

பதிவு
 

இந்திய மொழிகளுக்காக சமன்வாய் அமைப்பு நடத்தும் ஐந்தாவது ஆண்டு விழா 28 நவம்பர் 2015 அன்று மாலை இந்தியன் ஹெபிடாட் சென்டரின் அமராவதி திறந்த வெளி அரங்கில் நடந்தது. அதில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த நூல்கள் மூல மொழியிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன. ஆ. இரா. வேங்கடாசலபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சபா நக்வியின் ‘In Good Faith’ என்ற நூலின் மொழியாக்கம் ‘வாழும் நல்லிணக்கம்’ என முடவன் குட்டி முகம்மது அலியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நூலை கர்நாடக இசைக்கலைஞரும் சமூக ஆர்வலருமான டி.எம். கிருஷ்ணா வெளியிட்டுப் பேசினார். இதுவே தனது நூலின் முதல் மொழிபெயர்ப்பு

கட்டுரை
கருணாகரன்  

பங்களாதேசைப் போல இலங்கையும் இயற்கையின் சீற்றத்தினால் அதிகமாகப் பாதிக்கப்படுவதுண்டு. இதற்குப் புவியியல் ரீதியாக அதன் அமைவிடம் காரணமாகலாம். ஆனால், இப்படி அமைந்திருக்கின்ற நாடுகள் தங்கள் நிலத்தையும் மக்களையும் இயற்கையின் சீற்றத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது கடமை. இதற்கான பொறுப்பும் பொறிமுறையும் அரசுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், அது அரசும் இல்லை; ஆட்சி செய்வதில் அர்த்தமும் இல்லை. கடந்த ஆண்டு இலங்கையில் பெருமழை பெய்து, மலையகப் பகுதிகள் பேரழிவைச் சந்தித்திருந்தன. மீரியபத்தை மண்சரிவுத் துயரம் இன்னும் ஆறாமலே உள்ளது. அங்கே புதையுண்டவர்களின் எலும்புக்கூட்டைக் கூட மீட்க முடியாமலே உள்ளது இலங்கை அரசு. இப்பொழுது தொடர்மழை அனர்த்தம். இந்த அனர்த்தங்களை ஓரளவு குறைத்திருக்க முடியும். பொரு

உள்ளடக்கம்