தலையங்கம்
 

பதான்கோட் தாக்குதலைப் பற்றிப் பல பத்திகள் எழுதப்பட்டுவிட்டன. தேசிய பாதுகாப்புக் காவலர்களுக்கு இந்தத் தாக்குதலை அதிகச் சேதம் இன்றி முறியடிக்கும் திறமை இருந்ததா அல்லது இராணுவத்தையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்கு என்ன நடந்தது என்பது முழுவதுமாகத் தெரியாதவரை பதில்கள் கிடைப்பது கடினம். தரைப்படையின் தலைமைத்தளபதி நடந்தவை அனைத்திற்கும் தனது ஒப்புதல் இருந்தது என்று கூறியிருக்கிறார். எனவே ஏழுபேர்களின் உயிர் இழப்பைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி, பயங்கரவாதம் நமது படைத்தளங்களையும் ராணுவத்தளவாடங்களையும் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பல பொதுக்கேள்விகள் எழுகின்றன. பதான்கோட் விமானத்தளத்தில் நடந்த தாக்குதல் நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியைத் தந

தலையங்கம்
 

கடந்த சில ஆண்டுகளாகத் தைப்பொங்கல் காலங்களில் விவாதத்திற்கு உள்ளாகிவந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தீவிரப் போராட்டமாக விரிவடைந்திருக்கிறது. எந்தவொன்றையும் தேவை எழும் காலங்களில் மட்டும் பேசிவிட்டு மற்றக் காலங்களில் பாராமல் விட்டுவிடும் நம்முடைய வழக்கமான அணுகுமுறையே இதிலும் தொடர்ந்தது. தேவைப்படுகிற அளவிற்கு இதில் தொடர்ச்சி இல்லை என்பது முக்கிய குறைபாடு. விழாக்கால நெருக்கத்தில் மட்டுமே அதைப்பற்றிய பேச்சு எழுந்தது. கட்சிகளும் பேசத் தொடங்கின. இவ்வாறான அழுத்தங்கள் எழுந்தபிறகே மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆணை பிறப்பித்தது. நீதிமன்றம் மீண்டும் தடைவிதித்தது. பிறகு ஜல்லிக்கட்டு நடக்கும் வட்டாரங்களில் மக்களின் போராட்டம் எழுந்தது. அவ்வப்போதைய உணர்ச்சி போராட்டம் என்பவற்றோடு நின்றுவிடாமல்

 

சென்ற இதழ் (ஜனவரி 2016) தலையங்கம் ‘வருமுன் காவாதான் வாழ்க்கை’ ஆக்கரீதியான தொலைநோக்குத்திட்டங்களும் பார்வைகளும் அற்ற ஆளும் மற்றும் ஆண்ட அரசியல் வர்க்கத்திற்கும் மழைவெள்ளத்தில் பாதிப்படைந்து நிர்க்கதியாய்ப் பரிதவிக்கும் மக்களுக்கும் ஒருசேர அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. தலையங்கத்திலும் மற்ற பல பொருள்பொதிந்த கட்டுரைகளிலும் இதய சுத்தியோடும் நேரிய மக்கள் நலப்பார்வையோடும் எடுத்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துகளை இனிவருங்காலங்களிலாவது மேற்குறிப்பிட்ட இரு சாராரும் தங்களது உடனடிக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே மானுட நலம்பேணும் அனைவரும் பெரிதும் எதிர்பார்ப்பதாகும். மக்களது வாழ்க்கையைத் தலைகீழாய்ப் புரட்டிப்போட்ட பேய்மழைப் பேரிடரின் பாதிப்புகளைக் கட்டுரையாளர்களும் களத்

கட்டுரை
வே. வசந்திதேவி  

சில மாதங்களுக்கு முன் தமிழ் இந்துவில் பெண் சிசுக் கொலை குறித்து தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. நாம் அறிந்த, ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கும், நமக்கு அருகிலேயே நடக்கும் கொடிய பெண் ஒழிப்பு குறித்த அதிர்ச்சியை அவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழகத்தின் சில பகுதிகளில் பெண் சிசுக் கொலைகள், கருக் கொலைகள் எவ்வாறு நடக்கின்றன, ஏன் நடக்கின்றன, அந்த மக்களிடையில் வேறு வழியில்லை என்று ஏன் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன என்பவையெல்லாம் தொடரில் விளக்கப்பட்டுள்ளன. இன்று தமிழ்நாடு முழுவதும் பல உசிலம்பட்டிகள் தோன்றியிருக்கின்றன; சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு என்று தமிழ்நாட்டின் மாவட்டங்கள் வரிசையாக அணிவகுக்கின்றன என்பதையும் உசிலம்பட்டியை மையமாகக் கொண்ட கட்டுரைகள் சுட்டுகின்றன. ஆனால், பெண் சி

பத்தி
அனிருத்தன் வாசுதேவன்  

இந்தப் பத்திக்கென எழுதிக்கொண்டிருந்த நூல் அறிமுகக் கட்டுரையை நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் தனிநபர் மனநலத்திற்கும் சமூகத்திற்குமுள்ள தொடர்புபற்றிச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் - தற்கொலை - கொலை நிகழ்வு குறித்து எழுந்த விவாதங்களின் இழையே அந்த மாற்றத்திற்குக் காரணம். பல்கலைக்கழகத்தில் வேரூன்றியிருக்கும் சாதியமும் இந்துத்துவமும் இணைந்துசெயல்பட்டு தலித் மாணவர்கள்மீது ஆதிக்கத்தைச் செலுத்தியதாலும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆதிக்க அமைப்புகளுக்குத் துணைபோனதாலும் ஏற்பட்ட இந்த இழப்பு, சமூக வலைத்தள விவாதங்கள் பலவற்றில் ரோஹித் வெமுலாவின் தனிப்பட்ட சோர்வு மனநிலை மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏற்பட்ட ஒன்றாகச் சித்திரிக்கப்பட்டது.

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூடங்குளம் அணுஉலைப் பூங்கா திட்டத்தைக் கைவிடுமாறும், கூடங்குளம் திட்டம்பற்றி எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறும் தீர்மானம் இயற்றியிருக்கிறது. இது போன்ற தீர்மானம் ஒன்றை இதே மாநிலக்குழு ஒரு சில மாதங்களுக்கு முன்பும் நிறைவேற்றியது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, அரசியல் நடவடிக்கைகளால் பின்தொடரப்படாத வெறும் தீர்மானங்களால் மட்டுமே எந்தவிதமான விளைவுகளும் ஏற்பட்டுவிடாது. சக்தியற்ற மக்களின் சகாக்களாக இருக்கவேண்டிய பெரிய இடதுசாரிக் கட்சிகள் பிற சுயநலவாத, பிழைப்புவாத, சந்தர்ப்பவாதக் கட்சிகள் போலவே இயங்குவது உண்மையிலேயே வேதனையளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்

அஞ்சலி: கே.ஏ. குணசேகரன் (1955 - 2016)
சுகிர்தராணி  

கடந்த 15.01.2016 வெள்ளியன்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியபோது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் கவிதையின் ஒரு பகுதியைச் குறிப்பிட்ட போது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பின்னிரவு வரை அவரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.. மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியுடன் காரில் பயணிக்கும்போது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவுவரை நீண்ட எங்கள் பேச்சில் மீண்டும் அவரது அதே கவிதையைப் பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும். விடிந்ததும் மாலதி மைத்ரி முகநூல் வழியாகச் செய்திஅறிந்து என்னிடம் சொன்னார். திகைப்போடும் அதிர்ச்சியோடும். உதட

மறுபிரசுரம்
சுந்தர ராமசாமி  

பேராசிரியர் கே.ஏ. குணசேகரன், ‘வடு’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இச்சுயசரிதை நூலில் தன் கல்லூரிப் பருவம் வரையிலான அனுபவங்களைக் கூறியிருக்கிறார். 125 பக்கங்கள் கொண்ட இந்நூலைத் தன் பேச்சுத் தமிழிலேயே எழுதியிருக்கிறார் அவர். தலித் சுயசரிதை என்ற அளவில் இது தமிழில் எழுதப்பட்டுள்ள இரண்டாவது நூலென்றும் இதற்கு முன்னதாக 1939இல் இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ மட்டுமே வெளிவந்துள்ளது என்றும் பல நுட்பமான சிந்தனைகளும் புதிய செய்திகளும் அடங்கிய தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ரவிக்குமார். கே. ஏ. குணசேகரன் பிறந்தது 1955இல். அப்படியென்றால் இந்நூல் உத்தேசமாக 1960இலிருந்து 1975வரை யிலுமான அவரது வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. இது வெகு

அஞ்சலி: சார்வாகன் (1929 - 2016)
யுவன் சந்திரசேகர்  

எழுபதுகளின் கடைசியில், மாணவப்பருவத்தில், அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில், கி. ராஜநாராயணனின் ‘கிடை’ உள்ளிட்ட ஆறுபடைப்புகள் கொண்ட, வாசகர் வட்டம் வெளியீடான ‘அறுசுவை’ என்ற தொகுப்பு அகப்பட்டது. அதில் இருந்த ‘அமரபண்டிதர்’ மூலமாக சார்வாகனின் எழுத்துடன் பரிச்சயம் உண்டாயிற்று. அந்த ஒரே கதையின் வழி, அவர்மீது நிரந்தர அபிமானம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறுநாவல், இப்போது படிக்கும்போதும் கொஞ்சமும் பழசாகாமல் இருப்பது சார்வாகனுடைய கலை நேர்த்திக்குச் சான்று. அவருடைய கதைகள் அனைத்திலுமே இந்த சமகாலத்தன்மை இருக்கிறது. பின்னர் பல வருடங்கள் கழித்துச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தபோது, மாற்று வடிவத்துக்கான உதாரணமாக அமைந்தது, நகுலன் தொகுத்த ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பில

கதை
சார்வாகன்  

நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குப் போனபோது அங்கே வாங்குவோர் கூட்டமே இல்லை. நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம். அங்கே எப்பவும் கூட்டம் நெரியாது. கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர்மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ணவர்ண இங்கி புட்டியுடன், (புட்டியில்லாமல் அளந்து) சோப்பு, சீப்பு (நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது), க்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக் கொள்ள, நரை மயிரைக் கறுப்பாக்க, ஒத்தை ஜோடி மூக்கை நந்நாலு என்று விதம்விதமாகக் கோடு போட்ட, கோடே போடாத, குறுக்கும்நெடுக்குமாய்க் கோடு போட்டுக் குவித்த நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், இன்னும் எத்தனையோ சாமான்கள், எல்லாம் வாங்குவாரை எதிர்பார்த்துக் காத்திருக்கும். சாதாரணமாய் நாங்கள்தான் போய் நிற்போம். நடேசன் சிரிச்சபடி &

அஞ்சலி: தமிழண்ணல் (1928 - 2016)
உல. பாலசுப்பிரமணியன்  

12.08.1928ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் பிறந்து வளர்ந்த இராம. பெரியகருப்பன், தமிழ் கற்று வெறும் தமிழாசிரியராக ஊதியத்திற்காய் வேலை பார்க்காமல், தன் வாழ்நாள் முழுமையும் தமிழ்த் திறனாளியாக, தமிழ்க் காப்பு அரணாக, தமிழ் இயக்கமாக வாழ்ந்து, தமிழண்ணலாக 29.12.2015இல் புகழுடல் எய்திய பான்மை தமிழுக்கு அவர் நாளெல்லாம் உழைத்த பாங்கை நவிலும். மேலைநாட்டுத் திறனாய்வுக் கல்வி இந்தியப் பல்கலைக்கழகங்களில் பரவலாகும் நிலையில் இலக்கியக் கோட்பாட்டுக் கல்வி தமிழுக்குப் புதிதன்று என்றும், தொன்மைக் காலத்திருந்தே தமிழ்க் கல்வி, இலக்கிய இலக்கண கோட்பாட்டுப் பின்புலத்தில் திறனாய்வுப் பார்வையோடு வளர்ந்து ஆழ வேரூன்றி நிலைபெற்றிருந்தது எனவும் நிறுவியவர். தொல்காப்பியர் வெறும் இலக்கண ஆசிரியர் மட்டுமன்று,

கதை
 

துளசிச் செடி சரியாக வளரவில்லை என்பதற்காக புதிதாகக் குடிவந்த வீட்டில் வாஸ்து சரியில்லை என்று சொல்லத்தொடங்கி கொஞ்சநாளில் வீடே சரியில்லை என்று சொல்லிவிட்டாள் பிரகலாதனின் தாயார். துளசியைச் செடி என்று சொல்வதேகூட அவளைப் பொருத்தவரை அவதூஷணை. தெய்வ நிந்தனை. துளசிதான் ஒரு வீட்டுக்குப் பெண் குழந்தைபோல. துளசி லக்ஷ்மி. துளசி தளதளவென்று தழைத்து நிற்பது வீட்டுக்கு சௌபாக்கியம். அந்த வீட்டை நோய்நொடி அண்டாது. அவள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். ஆனால் அவளைத் துளசி கைவிட்டதே இல்லை. இவ்வளவு காலமாய் அவளை அதுதான் காப்பாற்றி வந்திருக்கிறது என்று அவள் திடமாய் நம்பினள். சொல்லப்போனால், அப்பா உயிரோடு இருக்கும்வரை அவள் என்ன சுகத்தைக் கண்டாள் என்று சமயங்களில் பிரகலாதன் ஆச்சரியப்படுவான். ஆனால் அதை வாய் தவறி

திரை
சுகுமாரன்  

'சேது’ (1999)வைத் தவிர இயக்குநர் பாலாவின் எந்தப் படத்தையும் தனிப்படமாக எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது சற்றுச் சிரமமானது. அவரது சமீபத்திய படமான ‘தாரை தப்பட்டை’யும் பார்வையாளனுக்கு நேரும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டதல்ல. புதிய படத்தைப் பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. முந்தைய படங்களின் சாயல் புதிய படத்தை ரசிக்கவிடாத வகையில் நிழலாடுகின்றன. கதை அமைப்பு, காட்சி நகர்வு, கதாபாத்திரச் சித்திரிப்பு உட்படப் பல அம்சங்களிலும் பழைய ஏதேனும் படத்தை நினைவுறுத்துகின்றன. ‘தாரை தப்பட்டை’யிலும் இந்த சங்கடத்தைப் பார்வையாளன் உணர்கிறான். இதன் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பாலாவின் புதிய படம் ப

திரை
ரதன்  

முன்மாலைப்பொழுது, புதிதாகக் குடிவந்த அச்சிறிய வீட்டின் முன் தந்தையும் தாயும் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது மகள் ஓடிவந்து ஏதோ கூறுகின்றார். எல்லோரும் வீட்டின் பின்பக்கம் ஓடுகின்றனர். வீட்டின் பின்முற்றத்தில் சிறிய நீச்சல் குளம் ஒன்று உண்டு. அக்குளம் முழுவதும் கஞ்சல், குப்பைகள் இறந்த உயிரினங்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. தந்தைக்கு அது அதிர்ச்சியாக இல்லை. ஆனால் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு அது ஓர் அதிர்ச்சியான சம்பவம். பயத்தையும் ஏற்படுத்துகிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அயல் வீட்டவரின் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை. புதிய குடிவரவாளரை அயவலருக்கு நன்கு தெரியும். அவரைப் புதிய குடிவரவாளர் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளார். ஒரு சொல்லில் கூறுவதானால் புதிய குடிவ

கதை
 

அமெரிக்காவில் இருக்கும் எல்லோரிடமும் காரும் துப்பாக்கியும் இருக்கும் என்று நீ நினைத்துக்கொண்டிருந்தாய். உன் மாமாக்களும் அத்தைகளும்கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உனக்கு அமெரிக்கன் விஸா கிடைத்தவுடனேயே அவர்கள் சொன்னது இதுதான்: இன்னும் ஒரே மாதத்தில் ஒரு பெரிய கார் வாங்கிவிடுவாய். அப்புறம் பெரிசாக ஒரு வீடு. ஆனால் அந்த அமெரிக்கர்களைப்போல் நீயும் துப்பாக்கி வாங்கிக்கொள்ளாதே. உன் அம்மா, அப்பா, மூன்று உடன்பிறந்தாரோடு லாகோஸ் நகரில் நீ வசித்துவந்த அறைக்குள் அவர்கள் திமுதிமுவென்று நுழைந்தார்கள். அந்த அறையில் போதிய அளவுக்கு நாற்காலிகள் இல்லாததால், வெள்ளையடிக்காத சுவரின்மீது சாய்ந்துகொண்டு உரத்த குரலில் உனக்கு வாழ்த்து சொன்னார்கள். பின் குரலைத் தாழ்த்தி, அவர்களுக்கு நீ என்னென்ன வா

கட்டுரை
ஞா.பி. அருள் செல்வி  

தமிழகத்தில் காடுகளிலும் மலைகளிலும் 36 வகையான பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையின் காலடியிலிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், காணிப் பழங்குடியினத்தவர், 48 குடியிருப்புகளில் வசித்துவருகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தனக்கென குறிப்பிட்ட பாரம்பரியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்டு விளங்குகின்றன. இப்பழங்குடியினரின் கலாச்சார இருப்பிடமாக நிகழ்த்துக்கலைகள் விளங்குவதுடன் அவர்களுடைய மனநிலை, கலைநயம், எளிமை, சமூக நிலை, பழக்கவழக்கம், நம்பிக்கை முதலியவற்றை வெளிக்காட்டும் கண்ணாடியாகவும் அவை திகழ்கின்றன. இவர்களிடம் வழக்கிலுள்ள வழக்கொழிந்துபோன நிகழ்த்துக் கலைகளின் தொடர்பியல் பார்வை இது. பிறப்பு முதல் இறப்புவரை நிகழும் வாழ்க்கை வட்டச் சடங்குகள், சாற்றுப்பாடல்கள், தோற்றப்பாட

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

கவிதைக்கென்று தனி ஞாபகத் தொகுப்பு இருக்க முடியுமா என்ன! கவிதைக்குள் புழங்கும் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த தனிநபர்களின் அனுபவம் மற்றும் செயல்பாட்டுக் கிடங்கே அதன் நினைவுப் பெட்டகமாக ஆகிறது. அவர்கள் வழியாகத் தன்னைப் பற்றிய மறுமதிப்பீட்டையும் தனது உத்தேசத்தையும் தனது வல்லமையையும் தன் இருப்பின் நியாயத்தையும் தானே எடுத்துரைக்கிறது கவிதை. இதேவிதமாக, தன்னைப் பற்றித் தானே நிலையறிவிக்கவும் செய்கிறது!. ஆமாம், கவிதை பற்றிய கவிதை எழுதப்படாத ஒரேயொரு மொழிச்சூழல் கூட இருக்காது. அநேகமாக, தனது கவிதைபற்றி வெளிப்படையான பிரகடனம் செய்யாத கவிஞனும் இல்லை. எந்த மொழியிலும் எந்தவிதமான வகைமையிலும் ஆரம்பநிலைக் கவிதைகளில் அநேகம் கவிதையின் தன்னிலையறிவிப்பாக இருப்பதில் ஆச்சரியமுமில்லை. தமிழ் நவீன கவிதையும் விதிவ

சுகுமாரன்  

ஜகன்மோகினி மறைக்கப்படாத உன் இடங்களை எல்லாம் பகல் ஒளியின் உண்மைபோலப் பார்த்த எனக்கு ஆடையின் இருளில் அதே இடங்கள் அறியாமையின் திகைப்பாய்த் திணறவைப்பதேன்? தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில் தெரியாப் புதிராகிறது ஜகன் மோகினி? ஜகன்மோகினி: 15 ஆவது மேளகர்த்தா ராகமான மாயாமாளவகௌளையின் ஜன்ய ராகம். கடலினும் பெரிது விரும்பியதை அடைய ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள் காலடி மணலில் பிசுபிசுத்த முதல் கடலைத் தாண்டினேன் பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது இரண்டாம் கடல் கணுக்காலைக் கரண்டிய மூன்றாம் கடலை உதறித் தள்ளியும் முழங்காலில் மண்டியிட்டது நான்காம் கடல் இடுப்பை வருடிய ஐந்தாம் கடலைப் புறக்கணித்து நடந்தேன் கழுத்தை நெரிக்க அலைந்தது ஆறாம் கடல் தலையை ஆழ மூழ்கடித்து உட்புகுந்து ஆர்ப்பரித்த ஏழாம் கடலைக் கொப்பள

விவாதம்
ஜெ. பாலசுப்பிரமணியம்  

2015 நவம்பர் மாத காலச்சுவடில் வெளியான ஸ்வப்பநேஸ்வரி நடத்திய ‘தமிழ்மாது’ எனும் கட்டுரை ஸ்வப்பநேஸ்வரி அம்மாள் குறித்த சில அடிப்படைத் தகவல்களைத் தருகிறது, அந்த வகையில் ஸ்வப்பநேஸ்வரி அம்மாள் குறித்தும் அவர் நடத்திய தமிழ்மாது இதழ் குறித்துமான ஆய்வில் இது ஒரு தொடக்கம். அவர் நடத்திய தமிழ்மாது இதழின் மூன்று வருடத் தொகுப்புகள் கிடைத்தும் அதன் ஆசிரியரைப் பற்றிய தகவல்களை முழுமையாகப் பெறமுடியாமல்போனது இதழியல் வரலாறு எழுதுவதில் உள்ள சவால்களைக் காட்டுகிறது. இதழ் தொடங்கிய வருடம் இதுவரை 1907 என்று தவறாகக் குறிக்கப்பட்டு வந்ததை 1905 என்று சரிசெய்த அக்கட்டுரையில், அவரது சாதி குறித்த கேள்வியில் அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்ற அனுமானத்தையே முன்வைக்கிறது. மேலும் அவ்விதழின்

மதிப்புரை
பாவண்ணன்  

வாழும் நல்லிணக்கம் சபா நக்வி தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. ரோடு, நாகர்கோவில் & 629 001 பக்கம்: 207 விலை: ரூ. 250 ‘மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன. துயரப்படும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களுக்காகத் துயரப்படுகின்றன’ என்னும் வாக்கியத்திலிருந்து தல்ஸ்தோயின் ‘அன்னா கரினினா’ நாவல் தொடங்குகிறது. இது குடும்பத்துக்கு மட்டுமல்ல, எல்லா அமைப்புகளுக்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மை. முக்கியமாக மதம். ஒவ்வொரு மதமும் மோதலுக்கான காரணத்துக்காகக் காத்திருக்கிறது. நெருக்கடி மிகுந்த நவீன வாழ்வில் பொருளாதாரம், அரசியல், வசிப்பிடம், சமூகம், குடும்பம், தேசம், பாலியல், தன்னலம் எனப் பல்வேறு காரணங்களால

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

தேவாரத்தில் தொன்மம் (பாகம் 1, 2, 3, 4) வே. சேதுராமன் வெளியீடு: சேது பதிப்பகம் 3/52, அக்ரகாரம், திருச்செந்துறை ஜீயபுரம், திருச்சி & 639 101 பக்கம்: 2111 நான்கு பாகங்கள் ரூ. 1150 சலுகை விலை: ரூ.950 தமிழகப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஆய்வு மையம் உள்ள கல்லூரிகளிலிருந்தும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வரும் பி.எச்.டி. மாணவர்களில் சிலரே ஆய்வேட்டை நூலாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆய்வேட்டின் எல்லாப் பகுதிகளையும் நூல்வடிவில் கொண்டு வருவது என்ற வழக்கம் பொதுவாக இல்லை. விதிவிலக்காக வந்தவற்றில், தேவாரத்தில் தொன்மமும் ஒன்று. நான்கு பகுதிகளாக 2111 பக்கங்களில் இந்த ஆய்வேடு வந்திருக்கிறது. ஆசிரியர் சொந்தமாக இதை வெளியிட்டி ருக்கிறார். இதனால் ஆய்வேட்டைத் திருடுபவர்களுக்கு வாய்ப்பில்ல

 

நாவடக்கம் வகுப்பில் பேசுபவர்களின் பெயர்களை எழுதிப் போட்டு நல்லஅடி வாங்கிக் கொடுத்தேன் ‘அமைதி காக்கவும்’ என்ற அறிவிப்பை எங்கே பார்த்தாலும் வாய்பொத்தி நின்றேன் ‘சத்தம் போடாதீர்’ என்ற எச்சரிக்கைக்குக் கட்டுப்பட்டவனானேன் வாயாடிகளும் தேசப் பற்றும் என்ற சொற்பொழிவைப் பலமுறை கேட்டேன் ‘பேச்சைக் குறைப்பீர்; பணி செய்வீர்’ என்று கட்டளை இட்டவர்களின் படத்தைச் சுவரில் மாட்டினேன் நாப்பழக்கத்துக்கான சிறப்பு யோகாசனத்தை வழக்கப்படுத்தினேன் மௌன விரதமிருக்கப் பழகினேன் இப்போது எதைக் கண்டாலும் கேட்டாலும் ‘இம்’மென்று சொல்லாமலிருக்கும் பொறுமை நாவுக்குச் சொந்தம் மௌனத்தை அணிகலனாக்கி தப்பிக்கக் கிடைத்த எந்த வாய்ப்பையும் வீணடிக்க வில்லை. ஊமைகளால் கூட முடியாத வகையில் மௌன

உள்ளடக்கம்