தலையங்கம்
 

ஜே.என்.யு மீதும் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீதும் பாஜக அரசு தொடுத்திருக்கும் தாக்குதல் என்பது பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் அடிப்படைக் கருத்தாக்கங்களான சுதந்திரமான சிந்தனை, எதையும் கேள்விக்குட்படுத்துதல், கட்டற்ற விவாதங்கள், உரையாடல்கள், அறிவியல்பூர்வமான சிந்தனையின் வழியே புதிய விஷயங்களைக் கற்றறிதல் ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். இது ஜே.என்.யுவைப் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். தேசவிரோதிகளை உற்பத்திசெய்யும் இடமாகச் சங் பரிவாரத்தினரால் ஜே.என்.யு சித்திரிக்கப்படுவதற்கும், அது நிரந்தமாக மூடப்பட வேண்டும் என்று அவர்களால் சொல்லப்படுவதற்கும் காரணம் ஜே.என்.யு தனது அடிப்படையாகக் கொண்டிருக்கும் விழுமியங்களே ஆகும். ஒரு லட்சியவாதப் பல்கலைக்கழகம் எப்படி இர

கட்டுரை
 

ரோஹித் வெமுலா கடைசியாக எழுதிய கடிதத்தை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் இணையதளத்திற்குச் சென்று முதலில் அதைப் படிக்கவும். பிறகு இதைப் படிப்பதும் படிக்காமல் இருப்பதும் உங்கள் இஷ்டம். சொற்களைமீறிய ஆழமான ஒன்றை, மேற்கோள் குறிப்புகளுக்குள் அடைக்க முடியாத ஒரு சுதந்திரத்தை, நிகழ்வுக்குப் பின்னர் திரும்பத் திரும்ப அங்கே சென்று கூற இயலாத ஓர் உண்மையைப் படிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தைப் படித்தவர்கள் விரும்பினால், மேலே தொடரவும். குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடியை நம் நாட்டின் தலைநகரில் ஜனாதிபதியும் மாநிலக் தலைநகரங்களில் ஆளுநர்களும் மாவட்டத் தலைமையகங்களில் ஆட்சியர்களும் ஏற்றுவார்கள். பின் அதற்கு வணக்கம் செலுத்தப்படும். நாட்டுப்பற்றின் சுயவெளிப்பாட்டை அறிவிக்கும் வண்ணம் வெவ்வேறு சுருதி

கட்டுரை
 

ரோஹித் வெமுலாவின் சாதியை முன்வைத்த அரசியல், அவர் தனக்கென தேர்ந்தெடுத்துக்கொண்ட அடையாளத்தை முறியடிப்பதற்கான முயற்சி. சாதி அடையாள அரசியல் குறித்தும் ஒரு சிறப்பான எதிர்காலத்திற்காக சாதிக் கோடுகளைத் தாண்டிச் செல்லும் சாத்தியப்பாடுகள் பற்றியும் ஒரு விவாதத்தை ரோஹித் வெமுலா தூண்டிவிட்டிருக்கிறார். அவரது கடைசிக் கடிதம், பொது அறிக்கையில் அவர் எழுதியிருக்கிறார், “ஒரு மனிதனின் மதிப்பு அவனது உடனடி அடையாளமாகவும் நெருங்கிய சாத்தியப்பாடாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாக்காக. ஒரு எண்ணாக. ஒரு பண்டமாக. ஒரு மனிதன் ஒரு மனமாக நடத்தப்பட்டதே இல்லை.” தீவிர அம்பேத்கரியரான வெமுலா சாதி அடையாளத்தை அழித்தொழிப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது வாழ்க்கை புதியதும் விடுதலையளிப்பதுமான ஒரு அடைய

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

பனிதனின் அறிதலை நோக்கிய பயணம் அவன் தோன்றிய நாளிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. அது அவன் முற்றிலும் மறைந்துபோகும் வரையில் நடந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. உலகம் என்ற உருண்டையில் இருக்கும் மிகச் சிறிய உயிர்ப்புள்ளி ஒன்று, உலகம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்ற தேடலில் ஈடுபட்டால் அதன் எண்ணம் அதன் வாழ்நாளுக்குள் நிறைவேறாது. ஆனால் புள்ளிக்குப் பிறக்கும் புள்ளிகள், அவற்றிற்குப் பிறப்பவை, தேடலைத் தொடர்ந்து நடத்தினால் ஒருவேளை என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு பிறக்கலாம். விரிந்து பரந்திருக்கும் பிரம் மாண்டத்தோடு ஒப்பிடும்போது நான் சொல்லும் உயிர்ப்புள்ளியைவிட மனிதன் பல்லாயிரம் மடங்குகள் சிறியவன். ஆனால் அவனது சந்ததிகள் விட்டுச் சென்றிருக்கும் அறிவு அவனைவிடப் பலகோடி மடங்குகள் பெ

 

பெண் சிசுக்கொலை பண்டைய மரபா, இன்றைய வீழ்ச்சியா? வசந்தி தேவியின் கட்டுரை படித்தேன். கள்ளிப்பாலுக்கும் காய்ந்த உமிக்கும் தப்பிப் பிறந்த பெண் எழுதுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை பெண் குழந்தை வேண்டா வெறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அன்றும் இன்றும் பெண் குழந்தை ‘மண்’ குழந்தையே. ஞெகிழிப்பையைச் சேர்த்து பத்திரப்படுத்தும் பெண், தனக்குப் பிறக்கும் பெண் குழந்தையை எப்படிக் குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறாள்? யோசியுங்கள். கணவனின் / ஆணின் மூன்றாந்தர ஆசைகளால் (சின்னவீடு) இவள் / பெண் நாலாந்தர வாழ்க்கை நகர / நரக வாழ்க்கை வாழுகிறாள் என்பது கசப்பான உண்மையுங்கூட. அவ்வளவு ஏன் அவள் கும்பிடும் கடவுளுக்கும் இரண்டு / மூன்று மனைவிகள்தானே? பெண்ணை மிதிக்காமல், மதித்தாலே இந்தப் பெண் சிசுக்கொலை, பெண்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

அண்மையில் கேரளத்திலுள்ள ஒரு கல்லூரியில் சூழலியல்பற்றி நான் பேசி முடித்ததும், நான்கைந்து மாணவியர் என்னைச் சந்திப்பதற்காக மேடையருகே வந்து நின்றனர். “என்ன படிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அனைவரும் முதுகலைப்பட்ட மாணவியர். ஓர் இளம்பெண் “பேச்சு நன்றாக இருந்தது. சூழல் பிரச்சினைகளினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்” என்று சொன்னார். அருகே நின்ற இன்னொரு மாணவி தொடர்ந்தார்: “அணுக் கதிர்வீச்சு போன்ற சூழல் கேடுகளால் உடல் ஊனமுற்ற அல்லது மனவளர்ச்சியற்ற ஒரு குழந்தை பிறந்துவிட்டால், எங்கள் வாழ்க்கை அத்துடன் சிதைந்துவிடும். ஆண்கள் வீட்டைவிட்டு வெளியே சென்று ஆசுவாசம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருசில ஆண்கள் அந்தக் குடும்பத்தைவிட்டே நிரந்தரமாக வெளியேறிவிடுகின்

அஞ்சலி: உம்பர்தோ இக்கோ (1932 - 2016)
சுகுமாரன்  

தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் 1990களின் இடை, இறுதிப் பகுதிகளில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஆளுமைகளில் உம்பர்தோ இக்கோவும் ஒருவர். ஃபூக்கோ, தெரிதா, சஸூர் என்று அடுக்கப்பட்ட சிந்தனையாளர்களின் பெயர் வரிசையில் இக்கோவும் இருந்தார். அவரது ஆக்கங்கள் சில மொழிபெயர்க்கப்பட்டன; சில விவாதிக்கப்பட்டன. இந்த அறிமுகத்தினூடே ஒரு வாசகனாக நான் கண்டடைந்த இக்கோ வேறு ஒருவராக இருந்தார். குறியீட்டியல் அறிஞர், சிந்தனையாளர், நவீனக் கோட்பாட்டாளர் என்ற பன்முகங்கள் உம்பர்த்தோ இக்கோவுக்கு உண்டு. இந்தத் தோற்றங்கள் ஓர் எளிய வாசகனான என்னை வெருட்டியபோது அவரது இலக்கிய முகம் நெருக்கமானதாக உணரச் செய்தது. அவரது நாவல்களும் இலக்கியக் கட்டுரைகளும் வாசிப்புக்கு உவப்பானவையாக இருந்தன. இக்கோவின் இரண்டு நாவல்கள் புகழ் பெற்றவை. ரோஜாவின் ப

கட்டுரை
 

சில மாதங்களுக்கு முன்பு, நியூயார்க்கில் சாவகாசமாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது, சற்றுத் தொலைவில் என்னுடைய திக்கை நோக்கி வந்துகொண்டிருந்த நபரைக் கண்டேன். எனக்கு மிகவும் தெரிந்தவர்தான். சிக்கல் என்னவென்றால், அவரது பெயரையோ, முன்னர் எங்கே சந்தித்திருக்கிறேன் என்பதையோ நினைவுகூர முடியவில்லை. அந்நியநாட்டு நகரமொன்றில் இருக்கும்போது, சகஜமாக நேரும் உணர்வுகளில் ஒன்றுதான் இது. உள்ளூரில் சந்தித்த ஒருவரை எதிர்கொள்ள நேரும்போதோ, அல்லது இங்கே சந்தித்தவரை உள்ளூரில் பார்க்கும்போதோ ஏற்படுவது. அந்த இடத்துக்குத் தொடர்பில்லாத முகம் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். ஆனாலும், வந்த முகம் மிகவும் பரிச்சயமானதாய் இருந்தது. அவரை நிறுத்தி வந்தனம் சொல்லவேண்டும் என்றே பட்டது எனக்கு. அவருடன் உரையாட வேண்டும். அவர் உடனடிய

உரை
கண்ணன்  

கடும் சொற்களால் ஏற்படும் காயம் ஆறாது என்பது வள்ளுவரின் கூற்று. இக்குறளைப் படிக்கும் ஒவ்வொரு மனமும் இதை ஆமோதித்து ஏற்கும். இதற்கும் அப்பால் ஒரு பார்வை இருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங் சொல்கிறார்: “இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மௌனங்களே.” ஆக, சொற்களைவிடக் காயப்படுத்திடும் ஆற்றல் மௌனத்திற்கு உண்டு. இந்த மௌனம் எதனால் ஏற்படுகிறது? அச்சம், சந்தர்ப்பவாதம் போன்ற காரணங்கள் இருக்கலாம். சந்தர்ப்பவாதம் தனிமனிதனின் குறைபாடு; ஆனால் சகிப்புத்தன்மையற்ற சூழலே அச்சத்தை ஏற்படுத்துகிறது. பேச வேண்டியவர்களை மௌனிக்கச் செய்கிறது. நாம் வெளிப்படுத்தும் கருத்திற்காக நமக்கு இழப்புகள் ஏற்படக்கூடும், ஆபத்துகூட ஏற்படலாம் என்ற அச்சம் கருத்துச் சுதந்திரத்த

ஆவணம்
செ. முஹம்மது யூனூஸ்  

செயலாளர், நேதாஜி விசாரணைக் கமிட்டி அயல்நாட்டுக்காரிய அமைச்சர் இலாகா, இந்திய அரசாங்கம், புதுடெல்லி, இரங்கூன் 12.4.56 அன்புள்ள ஐயா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுபற்றி என் கீழ்க்கண்ட அபிப்ராயத்தைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நேதாஜியின் மரணம் பற்றி ஆராயும் போது அவர் ஏன் கொல்லப்பட்டிருக் கலாகாது என்பதை ஆராய வேண்டும். வீரர் நேதாஜி, உலகிலே சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்த மகாபுருடர்களில் முதன்மையான இடம்வகிப்பவர். உலக சரித்திரத்திலே ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காகப் பரித்தியாகம் செய்த ஈடுஇணையற்ற ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் நேதாஜியைத்தான் குறிப்பிட வேண்டும். அத்தகைய ஒப்பற்ற தலைவரின் வீரதீரத்திற்கு மாசு கற்பிப்பதற்கு ஒப்பானது தான் அவர் இந்திய விடுதலைக்காக, இந்திய மண

கட்டுரை
எச். முஜீப் ரஹ்மான்  

ஹாபியம் என்ற அராபிய சமயத் தூய்மை வாதம் தமிழகத்தில் செயல்படத் துவங்கி கால் நூற்றாண்டாகிறது. ஆனால் சவுதி அரேபியாவில் இந்தக் கருத்தியல் துருக்கிய ஆட்சி மாற்றத்துக்குப் பின் அரச அதிகாரமாக முன்வைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் பாரம் பரியச் சின்னங்கள் இடித்துத் தள்ளப்படுகின்றன. மன்னராட்சியாக இருப்பதன் காரணமாக உலகம் தழுவிய முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. ஒருவிதமான அடிப்படைவாதம், சமயத் தூய்மைவாதம் என்ற பெயரால் கட்டமைக்கப்படுகிறது. வஹ்ஹாப் அல் நஜ்தி என்ற அடிப்படை வாதியால் இந்தச் சித்தாந்தம் முன்னெடுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் கருத்துரிமையைப் புறந்தள்ளிவிட்டு திருகுர் ஆன், ஹதீதுகள் என்ற இரண்டுவித அறிவு மட்டும் போதும், மற்றவை தேவையில்லை என்கிறது இந்த அடிப்படைவாதம்; புனித நூல

கட்டுரை
எச். பீர்முஹம்மது  

இஸ்லாம், தற்போதைய உலகில் ஏன் அடிப்படைவாதமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது? பண்பாட்டிற்கும் அதற்குமான உறவு என்ன? மேற்குலகிற்கும் அரபுலகிற்குமான மோதலுக்குக் காரணம் என்ன? இஸ்லாம் பன்முக சமூகக் கட்டமைப்பிற்கு இணக்கமானதா? அது அரசியல் வகைப்பட்டதா? இஸ்லாம் பற்றிய இவ்வகைக் கேள்விகள், பதில்கள் அற்ற கேள்விகளாக, கேள்விகளற்ற பதில்களாக எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் உருவாகிய ஒரு மதம் ஏன் இடைக்கால வரலாறு முதல் தற்போது வரை மோதல்களின், பண்பாட்டுச் சிக்கல்களின் களமாக மாறி இருக்கிறது? இதற்கான விடையானது மதங்களின் வரலாறு, சமூக அடையாளம் மற்றும் பண்பாடு குறித்த தர்க்கங்களுக்கு இட்டுச் செல்லும். தனிமனிதன் சமூகமாக இருப்புக் கொள்ளும் தருணத்தில் உருவாகும் ஆட்சியமைப்பு - அதிகார நிர்வாக

 

ஆணம் எட்ட முடியாத நட்சத்திரமாகி உயர்ந்திருக்கிறது நேசத்தின் பற்றுக்கோடு திரும்பப் பெறா வாசனை ஊற்றெடுத்துப் பெருக அருந்தப் பெறா சுவை ஆன்மாவின் பச்சை நரம்புகளில் கூர் ஊசியென நுழைய விலாசமற்ற தெருக்களில் முக்கலும் முனகலுமாக ஒலியெழுப்பி ஓடுகிறது உறவின் பிரசவ வலி. இதொன்றும் சுகப்பிரசவமாக இராது இத்துயரத்தை இரு கரம் ஏந்தித் தாங்குவார் யாருமில்லை இதன்போது தாயென்றும் தந்தையென்றும் நிலைமாற்றம் நிகழவும் வழியில்லை. பற்றுக்கோடு - வலியுண்டு, நிவாரணமில்லை நொடியுண்டு முடிவில்லை இன்பமுண்டு அளவில்லை திக்கற்றுத் திசையற்று அளவற்று நிகரற்று ஊறிப் பெருகும் பேர் ஆணம்! அவள் செல்லட்டும் விடுங்கள் அவள் செல்லட்டும் விடுங்கள் நீருக்குள் வசிப்பவளாகச் செல்லட்டும் காற்றோடு கரைந்துபோகட்டும் இரவின் தடித்த இ

கட்டுரை
ஹெச்.ஜி. ரசூல்  

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி - மெய்ஞானக் கடலென்று உலகமக்களால் போற்றப்படும் சூபிக் கவி ஞானி. மௌலவியா தரீகாவினர் மௌலானா ரூமியின் மரபை இசை நடனத்தின் வழி முன்னெடுத்துச் செல்கின்றனர். இங்கு இடம் பெறுவது சூபிய மரபுகளில் ஒன்றான சூபி இசைச் சுழல் நடனம். முஸ்லிம்களின் மீது புனையப்பட்ட தீவிரவாதப் படிமத்தை உடைத்து சூபி இசை, சூபி நடனம் வழியாக சமாதானமும் அன்பும் நேசமும் இதயங்களில் மலர்கின்றன. மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை இது; உயரே பறவை பறக்கிறது கீழே தரையில் அதன் நிழல் தெரிகிறது. வேடன் ஒருவன் அந்த நிழலைத் துரத்திக் கொண்டு ஓடுகிறான். அவன் அந்த நிழல்மீது அம்பெய்கிறான். அவனுடைய அம்பறாத் துணியே காலியாகிவிட்டது. அந்த நிழலைத் துரத்திக் கொண்டு இன்னும் அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். தமிழில் முதன்முதலில் மஸ்ன

கதை
 

திண்ணையில் குட்டிச் சுவருக்கும் தூணுக்கும் நடுவில் வாப்பாவின் சாய்மனைக் கதிரை போடப்பட்டிருக்கும். அவரின் இடப்பக்கமாக வாசலும் அதற்கு நேரே சிறிது தூரம்விட்டு வெளிக்கடப்பும். அதற்கங்கால் பலாமர வளவும் இருந்தது. வலப்பக்கம் கைதொடும் பக்கமாக வீட்டுக்குரிய முன்கதவு அமைந்திருந்தது. மரியாதைக்கும் மகத்துவத்துக்குமான கதவு. கதவு நிலையில் ‘ஷானாஸ் மன்சில்’ என்று நீள் சதுரமான கறுப்பு நிற பிளாஸ்டிக் சிலேடில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அந்தவீடே அந்தப் பெயருக்காகத்தான் கட்டப்பட்டதுபோல அந்த எழுத்துக்கள்தான் வீட்டைத் தாங்கும் மாயக்கற்களைப்போல, ஒவ்வொரு எழுத்துக்களிலிருந்தும் அபரிமிதமான ஆசீர்வதிக்கப்பட்ட பெண்மையின் தெய்வீக வாசனை, ஒளி வீடெல்லாம் வீசி மணக்கத்தான் செய்தது. அதன் பி

கதை
 

அன்று ஊர்கூடும் பொதுவிடத்தில் மரங்கள் குவித்துவைத்த நிழலில் கூடி நின்று சேவல் சண்டை நடத்தும்போது, தோற்றுப்போன சேவலுக்குச் சொந்தக்காரனான பானுவின் வாப்பா ஷாஹுல் ஹமீது, ஜெயிச்ச சேவல்காரன் மைதீனை அடித்து நொறுக்கித் துவம்சம் செய்ததைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பானு மனம் பேதலித்துப் போனாள். அதன்பிறகு வீட்டு முற்றத்தில் விழுந்துகிடக்கும் ரசனைகளின் இரத்த வாடைகளில் அவள் தன் கோலத்தை மாற்றிக்கொண்டு வெறுப்புடன் அடிக்கடி கதவைத் திறந்து அடைத்துக்கொள்வாள். மனித வர்க்கத்தின் வரலாறு, ஆண்களால் பின்னப்பட்டுள்ளதை அவள் தன்னுடைய ஜின் மூலம் அறிந்துகொண்டாள். தந்தையாய் வாழும் ஆண்களும், சகோதரனாய் வாழ்ந்து தொலைப்பவர்களும், முகம்தேய்ந்து புருஷனாக வாழ்ந்து இறப்பவர்களும், முட்டாள்தனமாக அதிகாரம் செலுத்தி வாழ

ஷாஅ  

நீயின் நெருக்க வாசனை அவன் யார் திடீரென்று என்ன செய்கிறான் இங்கு நடுவழியில் ஆடையை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துவிடுவானோ இவனை நோக்கி எறிகிறார்களே கல் இறுக்கமாய் முரட்டுத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு வலிக்கும் உடல்மேல் எதையோ எழுதி மாட்டிக்கொள்கிறான் அருகில் கூச்சமாய் ஒருத்தி போய்ப் படிக்கிறாள் முன் பின் அட்டைகளில் - எனக்குச் சோறு வேண்டாம் தண்ணி வேண்டாம் உடுத்தத் துணி வேண்டாம் இருக்க இடம் வேண்டாம் வெளிச்சத்தில் ராப்பிச்சை வேண்டும் வழிப்போக்கன் நான் வேகாத வெயிலில் ஏன் இப்படி உணவு உடை எல்லாத்துக்கும் என்ன செய்வாய் ஆள்காட்டி விரல்மேல் காட்டி இருக்கே.. பின் பிச்சையாக வேண்டுவது என் முகமும் உன் முகமும் பார்க்காத நீயின் நெருக்க வாசனை, அவ்வளவுதான் அவன் முகமருகே மெள்ளக் கை நீட்டுகிறாள் கட்

கட்டுரை
தொ. பத்தினாதன்  

புலம்பெயர் மக்கள் மத்தியில் தங்கள் தாய்மொழி, சடங்குகள், கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டு அடையாளங்களைப் பேணவேண்டியது முக்கியமான சவாலாகவே உள்ளது. இதற்காக அவர்கள் தாய்மொழிவழிப் பள்ளிகள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்து அந்நாட்டுக் குடி மக்களாகிவிட்ட இளைய தலைமுறையினரின் புழங்கு தளம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எல்லாமே பெரும்பான்மைச் சமூகத்துடனான தொடர்பால் தங்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதைப் பெரும் சுமையாக உணர்கிறார்கள். என்னதான் தமிழ் வழிப் பள்ளி நடத்தினாலும், வீட்டு உரையாடலுக்கு மட்டுமே அக்கல்வி உதவுகிறது. ஆனால், இந்தத் தலைமுறையினரும் கடந்த பின்பு இனிவரும் தலைமுறை பண்பாட்டு அம்சங்களைக் ‘காக்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

முதலில் ஒரு திருத்தம். பட்டுச் சாலை அல்ல. பட்டுச் சாலைகள் என்பதுதான் சரி. சீனப் பேரரசையும் ரோம இராச்சியத்தையும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் போகும் கி - 9 போல் ஒரு நேர்ப்பாதை இணைக்க வில்லை. பட்டுச் சாலைகள் குறுக்கும் நெடுக்குமான அமைப்புகள்கொண்டவை. ஹான் சீனாவையும் ரோமாபுரியையும் இச் சாலைகள் ஒன்றுசேர்த்து வைத்தாலும் செல்லும்வழியிலிருந்த இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவையும் யூரேசிய, மத்திய ஆசிய நாடுகளான காசக்தான், உஸ்பேக் கிஸ்தான், கேரிக்ஸ்தான், தூர்க்மினிஸ்தான் தேசங்களின் கண்கவரும் கலை நேர்த்தித் திறன் இந்தப் பட்டுச்சாலைகள் பிரதானமாகுவதற்குத் துணை செய்தன. இந்தப் பாதைகளின் மொழியாகப் பெர்சிய மொழி பாவனையில் இருந்தமை பெர்சியப் பேரரசின் வல்லமையை உறுதிப்படுத்துகிறது.இன்னு

கட்டுரை
ம.வ. சீனிவாசன்  

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில், உயர்கல்வியில் மட்டுமல்ல பள்ளிக் கல்வியிலும் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அதில் முக்கியமானது, பள்ளிகள் மத்திய உயர்நிலைக் கல்வித் தேர்வு வாரிய (Central Board of Secondary Education - சிபிஎஸ்இ) அங்கீகாரம்பெற்ற பள்ளிகளாக மாறியும் அதிகரித்தும் வருவதுதான். 2006இல் வெறும் 55 சிபிஎஸ்இ பள்ளிகள் இருந்தன. அதில் பெரும்பாலானவை மத்திய அரசு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள். இன்று ஏறத்தாழ 600 சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. பெரும்பாலானவை தனியார்ப் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வித்தரம் தமிழகத் தேர்வு வாரியங்களின் அங்கீகாரம்பெற்ற சமச்சீர்க் கல்விப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரத்தை விட நன்றாக இருக்குமா? இதனைப் புரிந்த

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
 

தமிழ் எழுத்துச் சூழலில், காலம் என்ற சொல், நேரம் என்ற பொருளிலேயே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் காலம் என்பது, பருப்பொருள்களாலான முப்பரிமாண உலகத்தின் புலப்படாத நான்காவது பரிமாணம் என்கின்றன அறிவியலும் ஆன்மீகமும். இன்னும் எளிமையாகச் சொல்வதானால், நீள அகலங்களை அளக்க அங்குலம், மீட்டர்போன்ற அளவைகள் இருக்கிற மாதிரி, காலம் என்ற வியக்தியை அளக்க நேரம் என்ற அளவை பயன்படுகிறது. மற்றபடி, நேரம் அறிதலைப் பௌதிக உலகத்தின் நடைமுறை அங்கமாக, கிட்டத்தட்ட ஒரு புறக் கூறாகவே சொல்லலாம். காலம் என்பதோ, மேற்படிப் புறக்கூறையும் உள்ளடக்கிய பெரும்புலம் எனலாம். மானுடக் குழந்தைகள் பிறக்கும் முன்பே காலவுணர்வைத் தரித்திருக்கின்றன என்பது இம்மானுவல் காண்ட்டின் தெளிவு. ஆமாம், அவற்றுக்கு உயரமும் அகலமும் ஆழமும

அஞ்சலி: ஹார்ப்பர்லீ (1926 - 2016)
சித்தார்த்தன் சுந்தரம்  

‘பெரும்பான்மை விதிக்கு உட்படாத ஒன்று உண்டு என்றால் அது மனிதனொருவனின் மனசாட்சியே’ 1960களில் சர்ச்சைக்குள்ளான ‘டூ கில் எ மாக்கிங் பேர்டி’ல் (To Kill a Mocking Bird) வெள்ளையினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆட்டிகஸ் ஃபின்ச் (Atticus Finch) கூறுவதுபோல எழுத்தாளர் நேல் ஹார்ப்பர் லீ (Nelle Harper Lee) தன் எண்ணத்தைச் சொல்லியிருக்கக்கூடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இலக்கியவாதிகளால் இது பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இதற்குக் காரணம், இக்கதையின் பின்னணியும் அதன் கதாபாத்திரங்களும் பெரும்பாலும் ஹார்ப்பர் லீயின் வாழ்க்கையை ஒத்தே இருந்திருக்கிறது. கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான ஆட்டிகஸ் ஃபின்ச் போலவே ஹார்ப்பரின் அப்பாவும் ஒரு வழக்கறிஞராக இருந்தவர். ஆட்டிக

மதிப்புரை
செந்தூரன்  

இந்திய இலக்கியச் சிற்பிகள் - சுந்தர ராமசாமி அரவிந்தன் வெளியீடு: சாகித்திய அக்காதெமி ‘இரவீந்திர பவன்’ 35, பெரோஸ்ஷா சாலை, புதுடெல்லி - 110 001 பக்கம்: 128 விலை: ரூ.50 தமிழ் இலக்கியச் சூழலில், சுந்தர ராமசாமி படைப்புலகம் பற்றிய பார்வைகள் மதிப்பீடுகள் பேரளவில் விவாதிக்கப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமி என்ற எழுத்துக்காரரின் வாழ்வும் எழுத்தும் புதிய வாசகர்களுக்கு ஓர் அநாயசமான புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியது. அவ்வாறே அவரின் ஆளுமை பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு திறப்பாய் வெளிவந்திருக்கிறது ‘சுந்தர ராமசாமியின் படைப்புலகம்’ நூல். சாகித்திய அக்காதெமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பதிப்பித்துள்ள இந்நூலை எழுத்தாளர் அரவிந்தன் எழுதியுள்ளார். சுராவின் படைப்புலகம், அ

மதிப்புரை
க. பஞ்சாங்கம்  

காஃப்காவின் நாய்க்குட்டி நாகரத்தினம் கிருஷ்ணா வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் & 629 001 பக்கம்: 312 விலை: ரூ.295 மொழி அறிந்த மனிதராகப்பட்டவர் எழுத்தாளராக மாறும் புள்ளி பிறரைப் பார்ப்பதுபோலத் தன்னைப் பார்க்கத் தொடங்கும்போதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது; கூடவே, தன் கண்கொண்டு பார்க்காமல் பிறர் கண்கொண்டும் பார்க்க வேண்டும். பாரீஸ் பண்பாட்டோடு வாழ்வதற்கு விதிக்கப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு உலக அளவில் பன்முகப்பட்ட பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு மனிதர்களாகத் தன்னை மாற்றிப் பார்த்துக்கொள்வதற்கான சூழலில், அவரின் எழுத்து மொழி தமிழாக இருந்தாலும், புனைவெழுத்து உலகம் தழுவி நீட்சிபெறுவதை அன்னாரின் நாவல்களை வாசிக்கிற கூர்மையான வாசகர் உணர்ந்து கொள்ளலாம்.

மதிப்புரை
அசதா  

அறிதலின் தீ (கவிதைகள்) லாவண்யா சுந்தரராஜன் வெளியீடு: பாதரசம் பதிப்பகம் 377/16, முதல் தளம் கங்கா காவேரி அடுக்ககம் கம்பர் காலனி அண்ணாநகர் மேற்கு சென்னை & 600 040 பக்கம்: 96 விலை: ரூ.60 கவிமனதின் பிரக்ஞை நிலை எப்போதும் விழிமூடா ஒரு அகவுலகைச் சுமந்து திரிவது. வெளியேயிருந்து அதில் விழும் காட்சிகளால் பெருகும் அதிர்வுகள் மனச்சுவரில் மோதி அலைக்கழிந்து பிறகு மொழியைப் பற்றிக்கொண்டு கரை சேரும். புறநிலையின் மீதொரு மூடுதிரையைச் சாத்திவிட்டு அகத்தின் பாடலை உரக்கப் பாடும் கவிமனதுக்கும் உடன் வாத்தியங்கள் புற உலகின் காட்சிகளும் அவற்றால் தூண்டப்படும் அகச்சித்திரங்களுமே. வேறெவற்றையும்விட நீண்ட உணர்கொம்புகளுள்ள உயிரினமாகக் கவிஞன் இருக்கிறான். தன் உலகின் கடை எல்லை வரையும் அதைத் தாண்டியும் அ

மதிப்புரை
ஜீனத்ப்ரியா  

நீதிமாரே! நம்பினோமே!! கே. சந்துரு வெளியீடு: கவிதா பப்ளிகேஷன் தபால் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்னை - 17 பக்கம்: 208 விலை: ரூ. 150 இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்லமெல்லச் சரிந்துவரும் நிலையில், கே. சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் சமூகக் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை. சந்துரு கடந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்ததால் இவரின் கவலைகளும் வழிகாட்டல்களும் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன. நீதித்துறையை இந்திய மாண்புகளைக் காக்கும் கட்டமைப்பாகப் பாமரர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நீதிபதிகளின் மேலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவின் சாபக்கேடான

மதிப்புரை
ஆ. சிவசுப்பிரமணியன்  

மீனவ வீரனுக்கு ஒரு கோயில் ராம் வெளியீடு: ஜெ.இ. பப்ளிகேஷன் பெருவிளை, நாகர்கோவில் &3 பக்கம்: 100 விலை: ரூ.90 அய்வர் ராஜா கதை என்ற வரலாற்றுக் கதைப்பாடல், ‘வீணாதி வீணன் கதை’ ‘இடைச்சி கதை’ ‘மன்னன் மதிப்பன் கதை’ எனச் சில கிளைக் கதைகளை உள்ளடக்கியது. இக்கதைப்பாடல் நா. வானமாமலையால் 1974ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. வள்ளியூரை ஆண்ட பிற்காலப் பாண்டிய மன்னன் குலசேகரப்பாண்டியனுக்கும், கன்னடிய மன்னனுக்கும் இடையே 13 ஆம் நூற்றாண்டில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அவனுக்கு உறுதுணையாய் இருந்தவர்களில் ஒருவன் ‘மன்னத்தேவன்’ என்ற பரதகுல இளைஞன். கன்னியாகுமரி அருகிலுள்ள கோவளம் என்ற ஊரைச் சேர்ந்த இவன் சிறந்தவீரன். இவனை அழித்துவிட்டால் போரில் எளிதாக வ

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

பாணர் இனவரைவியல் பக்தவத்சல பாரதி வெளியீடு: அடையாளம் பதிப்பகம் 1205/1, கருப்பூர் சாலை புத்தாநத்தம் திருச்சி - 621 310 பக்கம்: 276 விலை: ரூ. 220 சங்ககாலப் புலவர்களை ஒருநிலையில் வைத்துப் பார்த்த பார்வையை முதன்முதலாக உடைத்தவர் இலங்கைப் பேராசிரியர் கைலாசபதி. ஆனால் அவரின் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து மறுப்போ ஆதரவோ பெரிய அளவில் வரவில்லை. சங்கப்புலவர்களைப் பாணர் மரபில் முழுவதும் அடக்குவதில் உள்ள தயக்கம் தமிழறிஞர்களிடம் இருந்தது ஒரு காரணம். நாட்டார் வழக்காற்றியல் துறை தனியாகச் செயல்பட ஆரம்பித்தபின் பழம் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சாதிகள், குழுக்கள் குறித்த செய்திகளை மானிடவியல் சமூகவியல் பார்வையில் ஆராயவேண்டிய சூழ்நிலை உருவானது. இத்துறை சார்ந்தவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படித்து

உள்ளடக்கம்