தலையங்கம்
 

தமிழகச் சட்டமன்றத்துக்கு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் கடந்தகாலத் தேர்தல்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். இது அரசியல் கட்சிகளின் அதிகாரப் பறிப்புக்கான தேர்தலாக மட்டுமே இருக்கும். இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் அனைத்துமே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான பந்தயங்கள்தாம்; எனினும் ஒப்புக்காவது மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த முறை கட்சிகள் முன்னிருத்துவது மக்கள் பிரச்சனைகளை அல்ல; மாறாக, ஒவ்வொரு கட்சியும் தனது எதிரிக் கட்சியின் களங்கங்களை அப்பட்டமாக விரித்துக்காட்டி வெளுப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றன. தமிழக மக்களின் வாழ்வாதாரமான பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் வழக்கம்போலவே பொக்கான வாக்குறுதிகளை முன்வைத்துப் பசப்புக் காட்டுகின்றன. தேர்தல் வெற்றி என்பதை

தலையங்கம்
 

மதுரை மாவட்டம் தோப்பூரை ஒட்டி அமைந்துள்ளது இலங்கை அகதிகளுக்கான உச்சப்பட்டி முகாம். இங்கு சுமார் 1500 பேர் வசிக்கின்றனர். 600 குடும்பங்கள் உள்ளன. அவற்றில் ரவீந்திரனின் குடும்பமும் ஒன்று. ரவீந்திரன் 45ஐ ஒட்டிய வயதினர். மனைவி மஞ்சுளா, 4 மகள்கள் 2 மகன்களுடன் முகாமில் வசித்து வந்தார். ரவீந்திரனின் கடைசி மகனான பிரதீபன் (வயது 13) ஹீமோஃபீலியா (ரத்த ஒழுகல்) நோய்க்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை பெறவேண்டிய நோயை முன்னிட்டு ரவீந்திரன் பல சமயங்களில் முகாமைவிட்டு வெளியேறி மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலைக்கு உட்பட்டிருக்கிறார். அரசு அகதிகளுக்கு வழங்கும் உதவித் தொகை பற்றாக்குறையாகவே இருந்து வரும் நிலையில் ரவீந்திரன் தனக்குத் தெரிந்த கடல்சார் தொழிலில் கூலியாகவும் பணியாற்றி வந்தார்.

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

கடந்த மார்ச் 13 ஆம் நாள் உடுமலைப்பேட்டையில் சாதிகடந்த காதல் மணம் புரிந்துகொண்ட சங்கர் - கௌசல்யா தம்பதியர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். இதில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கர் இறந்து போயிருக்கிறார். சாதி காரணமாக ஆணவக்கொலைகள் நடப்பது புதிதானதல்ல. ஆனால் அதில் கூர்மைபெற்றுவரும் சமகால மாற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. வீட்டார் உறவினர் மற்றும் உள்ளூரின் சொந்தச் சாதியினர் சார்ந்து ‘ரகசியமாக’ நடந்து வந்த இக்கொலைகள் சமகாலத்தில் உருவாகியிருக்கும் அரசியல் ஆதரவால் வெளிப்படையாகி இருக்கிறது. தம் வீட்டுப் பெண்களை ரகசியமாகக் கொலை செய்தவர்கள், தம் பெண்களைக் காதலித்த ‘கீழ்ச்சாதி’ ஆண்களைக் கொலை செய்யும் போது அவற்றை வெளிப்படையாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு வெளிப்படையாகக்

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

பல மாதங்களாகத் தேசபக்தி என்ற நாடகத்தை பாஜகவும் அதைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாடகத்தின் கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் அடையாளம் காண்பது சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் வில்லன்களையும் வில்லிகளையும் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். ரோஹித் வெமுலா, கன்னையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சாரியா, ஷெஹ்லா ரஷீத் என்ற புத்தம்புதிய பெயர்களுடன் நமக்குப் பழக்கமான தமிழ்ப் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. கைதேர்ந்த வில்லன் பாத்திரத்தில் பல சதித் திட்டங்களைத் தீட்டுபவராகச் சிதம்பரம் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிஜேபியும் சிலதொலைக்காட்சி சேனல்களும் இஸ்ரத் ஜஹான் விவகாரத்தில் அவரைக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. எது உண்மை, எது பொய் என்பதைத் தீர்மானிக்க அவகாசம்

தேர்தல் 2016
வாஸந்தி  

தமிழ்நாட்டு மக்களின் நிலை பரிதாபமானது. இதுவரை இப்படிப்பட்ட ஒரு சட்டசபைத் தேர்தலை அவர்கள் எப்போதும் எதிர்கொண்டதில்லை. வாழ்க்கை முன்பு சரளமாக இருந்ததுபோலவே தேர்தல் களமும் எளிமையாக இருந்தது. தேசிய கட்சியான காங்கிரஸ் 67இல் திராவிட எழுச்சியில் சுருண்டு பின்னகர்ந்த பிறகு, மக்கள் யோசிக்கத் தேவையே இருக்கவில்லை. ஐந்தாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்டதா? அடுத்தாற்போல் வாய்ப்பு அனைத்திந்திய அண்ணா திமுகவுக்குத்தான். மக்கள் தலைவர் எம்ஜிஆர் இருந்தபோதும் பாமரனுக்கும் தெரியும் அவரை நீக்க எந்தச் சக்தியும் மண்ணுலகில் இல்லை என்று! 13 ஆண்டுகளுக்கு அவரை முதல்வர் இருக்கையிலிருந்து அசைக்கமுடியவில்லை. அவர் மறைந்தபின் இரண்டு திராவிடக் கட்சிகள் தான் மாறிமாறி! தமிழனின் ரத்தமும் மூச்சும் தலைவர்களின் க

தேர்தல் 2016
சுப. உதயகுமாரன்  

நடக்கவிருக்கும் 2016 சட்டமன்றத் தேர்தலும் திராவிடக் கட்சிகளின் தேர்தலாகத்தான் இருக்கிறது. இதன் பிறகு அதிமுக அல்லது திமுக எனும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுள் ஒன்றுதான் ஆட்சித் தலைமையேற்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. திராவிடக் கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வலம் வரும் தேமுதிக திமுகவுடனோ அல்லது வேறு கட்சிகளோடோ அல்லது தனியாகவோ தேர்தலைச் சந்திக்கலாம்.இந்த மூன்று கட்சிகளும், இவற்றின் தலைவர்களும்தான் நமது சமூக - பொருளாதார - அரசியல் வாழ்வை இன்னும் ஐந்து ஆண்டுகள் மேலாண்மை செய்யப்போகின்றனர், நமது வருங்காலத்தை நிர்ணயிக்கப்போகின்றனர் என்பது உண்மையிலேயே கவலையளிக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வராவதைவிட கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல

தேர்தல் 2016
களந்தை பீர்முகம்மது  

கழகங்களின் எழுச்சிக்காலம் ஒரு வழியாக முடிவுக்கு வரும் சேதியை இத்தேர்தல் நமக்கு அறிவிக்க இருக்கிறது. வெளிப்பார்வைக்குத் தெரிய வருகின்ற கூட்டணிச் சேர்க்கைகள் அவ்வப்போது கலைவதும் சேர்வதுமாய் இருப்பன. ஆனால் நிரந்தரமான கூட்டணியாக இருப்பது இரண்டு கழகங்களுமே! ஐம்பது ஆண்டுக்காலமாக வேறு கட்சிகளை ஆட்சிக் கட்டிலின் அருகே நெருங்கவிடாமல் இரு கழகங்களும் காட்டும் சாதுர்யம் சாதாரணமானதல்ல. அவை பல கட்சிகளுடனும் கூட்டணிகளை அமைத்துக் கொண்டுள்ளன. தேர்தலுக்குப் பின் அமையும் ஆட்சியில் ‘நாங்கள் பங்கேற்கமாட்டோம்’ என அந்தந்தக் கட்சிகளின் வாயாலேயே அவை சொல்லவைத்ததை நாடு அறியும். மதுவிலக்கை அமல் செய்ய இரு கழகங்களும் மறுத்துவந்தன; அவை மோதிக்கொண்டாலும், அடுத்தடுத்த கழகங்களின் முக்கியப் பிரமுகர்கள் நடத்

அஞ்சலி: பெர்னார்டு பேட் (1960 - 2016)
ஆ.இரா. வேங்கடாசலபதி  

பார்ணியை நான் முதலில் பார்த்தது 1992 கடைசியில். சிகாகோ பல்கலைக்கழக மாணவர்கள் சிலரோடு நானும் பார்ணியும் ‘தேவர் மகன்’ திரைப்படம் பார்த்தோம். குடல் இறக்கத்திற்காக அறுவை முடித்து அண்மையில்தான் அவர் வெளியே வரத் தொடங்கியிருந்தார். இரண்டொரு வார்த்தைகளுக்குமேல் நாங்கள் பேசிக்கொள்ளாததற்கு அது காரணம் அல்ல. சிகாகோ மாணவர் என்பதால் எனக்குத் தயக்கம். தேவையற்ற இடையீடுகளை விரும்பாதவன் என்று என்னைப் பற்றி ஒரு பிம்பம் அப்போதே (தவறாக?!) கட்டமைக்கப்பட்டிருந்ததால் அவரும், தம் இயல்புக்கு மாறாக, எட்ட நின்றிருக்கிறார். (இதைப் பற்றி பின்பு பலமுறை பேசிச் சிரித்திருக்கிறோம்.) மேடைப் பேச்சை ஆய்வு செய்பவர், தமிழைச் சரளமாகப் பேசக்கூடிய வெள்ளைக்காரர் என்பதற்குமேல் அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவில்ல

 

பார்ணியை நேரில் சந்திப்பதற்குப் பலகாலம் முன்னரே அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். மாணவனாக மதுரைக்கு முதலில் சென்றபொழுது தமிழை மிகச் சரளமாகப் பேசக்கூடிய ஒரு வெள்ளைக்காரர், மதுரையையும் தமிழகத்தையும் நேசித்த ஓர் அபூர்வ மனிதர் என்று பலர் அவரைப் பற்றிச் சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து, அவர்தான் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என் தமிழாசிரியராக வரவிருக்கிறார் என்று அறிய உற்சாகமும் அச்சமும் என்னைப் பற்றிக்கொண்டன. பார்ணி ஒரு மானிடவியலாளர். தமிழ்மீது அவர் கொண்டிருந்த பற்று நான் கேள்விப்பட்டிருந்ததைவிட அதிகம் என்பதை உணர்ந்தேன். நான் ஒரு மொழிநூலாளன் (philologist) மட்டுமல்ல, ஒரு சமஸ்கிருத மாணவன். எனவே எங்கள் இருவரின் பார்வைகள் ஒத்துப்போகவில்லை என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால், புலமை ரீதியாக

தொ. பரமசிவன்  

பண்மையைச் சொல்வதானால் பார்ணி என்னுடைய மாணவரல்ல. என்னுடைய ஆய்வு நெறியாளர் டாக்டர் மு. சண்முகம்பிள்ளை விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்திலே பணியாற்றியவர். அவரிடம்தான் பார்ணி ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். சேர்ந்த சிறிது நாளிலே அவர் இறந்துபோனதால் நண்பர்கள் என்னிடத்திலே அனுப்பி வைத்தார்கள். ஐந்தாண்டுகள் என் மாணவராக இருந்தார். பெரும்பாலும் தினமும் மாலையிலே சந்திப்பார். அவருடைய இருசக்கர வாகனத்தின் சத்தம் அண்ணாநகரில் எல்லாருக்கும் தெரியும். அதேபோலக் கடைசியாக அவர் குடியிருந்த முனிச்சாலை. அது கலவரம் நிறைந்த பகுதி. முனிச்சாலை மூங்கில்கார வீதியிலே அவரை எல்லாருக்கும் தெரியும். அந்த வீதியிலே சின்னப்பிள்ளைகள்கூட பார்ணி என்று பெயர் சொல்லிக் கூப்பிடும். அவர்களிடத்திலே பிரியமாக இருப்பார். யார் வேண்டுமானாலும்

உரை
 

நூலின் ஒரு பகுதியில் தமிழினி சொல்வார் எல்லாவற்றையும் தலைவர் பார்த்துக்கொள்வார் என்று. இத்தகவலைத்தான் தமிழ்ச்செல்வன் பல இடங்களில் கூறுவதைப் பார்க்க முடியும். “அண்ணன் இருக்கிறார், அண்ணன் பார்த்துக்கொள்வார்” என்று. அதைத்தான் அவர்களும் (புலிகளும்) நம்பினார்கள் நாங்களும் நம்பினோம். இப்புத்தகத்தில் இன்னொரு பகுதியில் போரின் இறுதிநாட்களில் கிளிநொச்சிப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் (ஜன. 2009) ஈழப்பிரியன் என்ற போராளியைச் சந்தித்து என்ன நிலைமை என்று கேட்கும்போது அவரது பதில், அண்ணனைக் கடைசியாகப் பார்த்தேன். “எல்லோரும் இந்த கைக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைக்குள் ஒன்றுமேயில்லை” என்று சொல்லிக் கையை விரித்துக்காட

நேர்காணல்
 

தமிழினி காலமாகிவிட்ட நிலையில் அவர் எழுதியதாக ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறீர்கள். தமிழினி உயிரோடு இருந்த போது வெளியிடாமல் அவர் இறந்த பின்னர் வெளியிட்டது ஏன்? அவர் உயிருடன் இருக்கும்போதே நூலை எழுதி நிறைவு செய்துவிட்டார். அதை வெளியிடுவதற்கான ஆயத்த வேலைகளை நானும் அவரும் சேர்ந்து செய்துகொண்டிருந்தபோது, அவரின் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்தது. தொடர்ந்து அவரால் இயங்கமுடியாத நிலையும் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அவரின் நோய் பற்றியும் மருத்துவம் பற்றியும் தன் சிந்தனையைச் செலுத்த வேண்டி வந்ததால் நூலைப் பதிப்பிக்கும் வேலையை ஒத்திப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் அவரின் மரணம், இறுதிக் கிரியைகள் விடயங்களில் முழுதாக ஈடுபட்டதால் நூல் பதிப்பிக்கும்

புத்தக அறிமுகம்
தெய்வீகன்  

ஒரு கூர்வாளின் நிழலில் (புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு) தமிழினி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் - 629 001 பக்கம்: 256 விலை: ரூ.225 மூன்று தசாப்தத்துக்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தில் முக்குளித்து எழுந்த ஈழ வரலாற்றில் கிட்டத்தட்ட தனது 17 வருடகாலப் பயணத்தை இயன்றளவு உண்மைக்கு நெருக்கமாக நின்று தமிழினி பதிவு செய்திருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரிலக்கியப் பிரதி ‘ஒரு கூர்வாளின் நிழலில்.’ வெளிவந்த நாள் முதல் பல்வேறு பரப்புகளிலும் நூல்மீது நடைபெறுகின்ற ‘கன்னித்தன்மைச் சோதனைகள்’ இந்த நூல் வெளிவரக்கூடாது என்ற நோக்கத்தில் மேற் கொள்ளப்படும் அரசியல் ஆகியவற்றைப் பார்க

 

தலையங்கம் ‘தேச விரோதம்’ படித்தேன். தலையெழுத்து - விதியை நம்புகிறவர்களுக்கு, தேச விரோதத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் உள்ள வேற்றுமை குறித்து தெரியவாய்ப்பில்லை. ஆளுகிறவர்களின் கண்களில் தெரிவது சாதியும் மதமும் கலந்த இந்துத்துவா சித்தாந்தம். இந்த வேதாந்திகளுக்குக் கொஞ்சம் புரிவது கடினம்தான். ஒரு கருத்துக்கு, ஒரு கோஷத்திற்கு இன்னொரு மாற்றுக் கருத்து, மாற்றுக் கோஷம் வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். வாழ்க என்று சொல்லுவதற்குப் பதிலாக வாள்க என்று உச்சரிப்பில் பிழை இருப்பினும் சிறைதானோ? இந்தியா தாறுமாறான தவறான பாதையில் செல்கிறது.குடியரசு என்பது பெயரில்தான். ரோகித் வெமுலாவின் மரணம் என்னை மிகவும் பாதித்த ஒன்று. இவ்வளவு படித்த பையன், உறவும் உரிமையும் ஒன்றாக இருக்

நீள்கவிதை
எம். யுவன்  

1. அம்பாலா நிலையத்தில் ரயிலுக்காக நின்றவள் அம்பாள்போல இருந்தாள். அருகில் நின்ற மற்றொருத்தி இந்திராகாந்திபோல இருந்தாள். அதற்கு சில காலம் முன் இன்னொரு பெண்மணி இந்திராகாந்தியாகவே இருந்தார். நான் என் அப்பாபோல இருக்கிறேன் அப்பா அவரது அம்மாபோல அவர் அவரது அப்பாபோல. முத்தாத்தா தற்போது கடவுள்போல இருக்கிறார். திதிநாள் தவறாமல் வந்து வந்து பருக்கை கொறித்துப் போகிறார் - அச்சமயம் காக்காய்போல இருக்கிறார். என் பெண் சிசுவாக இருந்தாள் அம்மணமாய்த் திரிந்தாள் - மெல்ல மெல்ல இறுக்கி மூடிய உடைக்குள் புகுந்தாள் - திடீரென்று ஒருநாள் பயந்த முகத்துடன் ஓடிவந்து தாயின் காதில் ரகசியம் சொன்னாள் - இன்று

கட்டுரை
கி. அரங்கன்  

இந்தியா பல மொழிகளை, பல பண்பாடுகளை, பல இனங்களைக் கொண்ட நாடு. வேறுபாடுகள் இந்நாட்டின் அடிப்படைக் கூறுகள். இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல; அவை இந்தோ-ஆரிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிகள், திபோத்தோ-பர்மிய மொழிகள் என நான்கு குடும்ப மொழிகளுக்குள் அடக்கப்படுகின்றன. அந்தமான் போன்ற தீவுகளில் பேசப்படும் மொழிகளை எந்தக் குடும்ப மொழிகளுக்குள் அடக்குவது என்பது இன்னும் முடிவுறாத பிரச்சனையாக உள்ளது. ஆகையால், இந்தியா என்பது ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஓர் இனம் என்ற ஒற்றைத் தன்மை கொண்ட நாடல்ல; வரலாற்றுக் காலம் தொட்டு இங்கு பலமொழிகள் பேசப்பட்டும் பல்வகைப் பண்பாடுகள் பேணப்பட்டும் வந்த நாடு. இது பல மொழிகளையும் பல பண்பாடுகளையும் பல இனங்களையும் பல மதங்

கதை
 

அன்றும் காலையில் தன்னுடைய கடையை சுப்பிரமணி திறந்தான். ‘மணி சிராக்சு’க்கு உள்ளே அடைந்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கமான நெடி வெளியேறியது. தடுப்புக்குப் பின்னால் போர்த்திவைக்கப்பட்டிருந்த நகல் இயந்திரம் மங்கிய வெளிச்சத்தில் குட்டிப்பூதம்போல் தோன்றியது. அதற்குத் தினமும் கொஞ்சமாவது தீனி போடவேண்டும்; இல்லையென்றால் தன்னுடனிருக்கும் மனிதனை எடுத்து விழுங்கிவிடும். பெஞ்சுக்குக் கீழே செருப்பைக் கழற்றிவிட்டு மதியச் சாப்பாட்டையும் செய்தித்தாளையும் மேஜையடியில் வைத்தான். ‘எல்லாமும் நல்லதா நடக்கணும்’ என்று மனத்தில் வேண்டியபடி விளக்கைப் போட்டான். பிறகு கடையின் பின்னாலிருந்து பெருக்கிக்கொண்டு வந்தான். புழுதியும் சிமெண்டும் மணல் துகள்களுமாயிருந்த குப்பையைக் கூட்டித் தள்ளி

அஞ்சலி: பி.கே. நாயர் (1934 - 2016)
எஸ். ஆனந்த்  

ஒரு திரைப்படத்தின் வாழ்வு, அது பணம் ஈட்டித்தரும் காலம் வரைதான் எனும் வணிக அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும் நமது திரையுலகம் படைப்பைப் பாதுகாப்பது பற்றித் துளியும் அக்கறையற்ற வியாபாரிகளால் ஆனது. அத்தகைய சூழலில் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை அரும்பாடுபட்டுச் சேகரித்து ஆவணப்படுத்தியிருக்கும் மேதைமை சமீபத்தில் மறைந்த பி.கே. நாயர். சிறந்த படங்கள் என்றல்லாது அனைத்துத் திரைப்படங்களையும் ஆவணப்படுத்துவது அவசியம் என்ற அடிப்படையை நிறுவிச் செயல்படுத்திய முன்னோடி. திருவனந்தபுரத்தில் பிறந்த நாயர் சிறுவயது முதல் திரைப்படங்கள்மீது ஆர்வம் கொண்டிருந்தார். 1950களில் கல்லூரிப்படிப்பை முடித்தபின் திரைப்படம் எடுப்பதை முறையாக அறிந்துகொள்ள மும்பை சென்றவர் மெஹபூப் ஸ்டுடியோவில் சேர்ந்தார். இயக்குநர் ரிஷிகேஷ்

திரை
தியடோர் பாஸ்கரன்  

பல ஆண்டுகளுக்கு முன்லண்டனுக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தபோது, அதிலிருந்த இசைத்தொகுப்பில் தமிழ் சினிமாப் பாட்டுகள் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வான் பயணங்களில் சினிமா பார்க்கும் வசதி கிடையாது. பயணிகளுக்கு ஒலிவாங்கிகள் வினியோகிக்கப்படும். அதைக் காதில் மாட்டிக்கொண்டு நமக்குக் கொடுக்கப்படும் கையேட்டிலிருந்து பிடித்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுக்கொள்ளலாம். நான் பயணித்த அந்த வானூர்தியில் ஐம்பது, அறுபதுகளில் வெளியான படங்களிலிருந்து பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. பீம்சிங்கின் ‘பா’ வரிசைப் படங்களுடன் மங்கையர் திலகம், விஜயபுரி வீரன், மாயா பஜார் போன்ற திரைப்படங்களின் பாடல்களும் இருந்தன. வயதானவர்களுக்கு நினைவேக்கத்துடன் (nos

அனுபவம்
அ. முத்துலிங்கம்  

ஒரு வருடமாக நாங்கள் டெலிபோனில் தொடர்ந்து பேசினோம். சில சமயங்களில் நான் ஒரு கேள்வி எழுதி மின்னஞ்சலில் அனுப்புவேன்; அவர் பதில் எழுதுவார். இது ஒரு நேர்காணல்போல நடக்கவே இல்லை. அவரும் நினைக்கவில்லை; நானும் அப்படி எண்ணவில்லை. திட்டமிட்டதெல்லாம் கிடையாது. செல்பேசியில் கோடு மெள்ளமெள்ள நிரம்புவதுபோல தகவல்கள் நிரம்பின. ஒருநாள் பேசும்போது அவர் போகிறபோக்கில் ‘சிவாஜியின் குரல் ரேடியோவுக்கு ஏற்றதில்லை’ என்றார். நான் ‘என்ன?’ என்று அலறினேன். ‘இல்லை, நான் சொல்லவில்லை. அதற்கு ஒரு கதை இருக்கிறது’ என்றார். நான் சொல்லுங்கள் என்றதும் அவர் சொல்லத் தொடங்கினார். இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. நான் அப்போது அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்

அறிக்கை
 

தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மதச் சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன்மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக்கோள்களை அர்த்தமுள்ள முறையில் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய யாப்பில் உள்ள

கட்டுரை
பழ. அதியமான்  

விடாமுயற்சியே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது, அதை அவன் தன் சொந்த அனுபவத்தின் மூலமே உணரமுடியும். அறிவுரை, குறிப்பு காட்டலாம். அக்குறிப்பை ஒருவன் ஊர்ந்துசெல்லும் எறும்பிடமிருந்து அறிந்துகொண்டான். வரலாற்றில் இன்னொருவன் தன் திரவம் சிந்தி வலை பின்னிய சிலந்தியிடமிருந்து புரிந்துகொண்டான். மற்றொருவன் சகமனிதனான கஜினி முகம்மதுவிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருந்திருக்கக் கூடும். எனக்கான அந்தக் குறிப்பை, சமீபத்தில் படித்த முன்னுரை ஒன்றிலிருந்து வரித்துக் கொள்ள முயல்கிறேன். மகாபாரதத்தைத் தமிழாக்கிய ம.வீ. ராமானுஜாச்சாரியாரின் கர்ண பருவத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ஈதென்ன பேர் ஊக்கம்!மணலூர் வீரவல்லி ராமானுஜாச்சாரியை (1866 - 1940) இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள். இளைஞர்கள் என்பது நாகரிகப்

எதிர்வினை
 

தமிழகத்தில் வஹாபியத்தின் வேர்கள் நூறாண்டுகள் பழமை வாய்ந்தவை. ‘சலபி’ என்ற சிந்தனைப் பள்ளி என்னும் அடையாளமும் இதற்கு உண்டு. தற்போது தமிழகத்தில் முஸ்லிம் அடையாள அரசியலை முன்னிறுத்தும் அரசியல் சமூக அமைப்புகள் வஹாபியம் சார்ந்த சிந்தனைகளின் தாக்கத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொண்டிருப்பவை. அஹ்லெ ஹதீஸ், முஜாஹிதீன், ஜம்யித்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் போன்றவை அரசியல் வடிவம்பெறாத தமிழகத்தின் வஹாபிய சிந்தனைகளின் வலுவான அடித்தளங் கள். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக ஆகியன இந்தச் சிந்தனைகளைக் கருத்தியல் பின்புலமாகக் கொண்டு இயங்குபவை. தமிழக முஸ்லிம் அரசியல் என்பது இங்கு குறிப்பிடப்பட்ட அமைப்புகளைக் குவிமையமாகக்கொண்டே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் வஹாபியத்

மதிப்புரை
 

ஏழு தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற மறுப்பு, தமிழ்நாடு அரசு அதிகாரம் கி. வெங்கட்ராமன் வெளியீடு: பன்மைவெளி பதிப்பகம் 21, முதல் தெரு, முதல் பிரிவு கே.கே. நகர், சென்னை - 600 078 பக்கம்: 104 விலை: ரூ.75  ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலை இன்று தமிழக அரசியல் களத்தின் காய் நகர்த்தலாக இருந்துவருகிறது. அத்தகைய அரசியல் விளையாட்டுகள் தேவையில்லை, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசால் இயலும் - அதற்கான வழிவகைகள் உண்டு என்று வாதிடுகிறது இந்நூல். ஆயுள்சிறை எத்தனை ஆண்டுகள் என இன்னும் வரையறுக்கப்படாமல் அப்பாவிகள் கனகாலம் இன்னலுறுகின்றனர். ஆனால் எல்லா சமயங்களிலும் சட்டமும் அரச நடைமுறைகளும் இவ்வளவு இறுக்கமாக இருந்ததில்லை; இதற்கு உதாரண

கவிதை
மண்குதிரை  

வெண் மணல் பரப்பினில் மிதிலா மிதிலா ஏர் முனையின் கீழல்ல நீ தவழ்வது பாதிராமணல்* விரிப்பில்? நித்யம் அநித்யமாகி சமுத்திரங்கள் வற்றி வெண்குதிரைகள் கரையேறிவிட்டன மிதிலா நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? கரையோரங்களில் உன் கண்களைப் பறிப்பது மான் அல்ல மாயமும் அல்ல அவை செம்மீன் தேடி வரும் நீர் நாய்கள் மிதிலா காகமாக அல்ல அவன் நீ வியந்து பார்க்கும் பாம்புத்தாரா** வாக உருமாறிப் பறந்துகொண்டிருக்கிறான் பூமி புரண்டு புலன்கள் திசை மாறி இருபத்தியொன்றாம் நூற்றாண்டு எல்லோரையும் வெளியேற்றிவிட்டது அவர்களும் இவர்களும் இவனும் அவனும்கூட இந்தத் தீவிலிருந்து கரையேறிச் ச

உள்ளடக்கம்