தலையங்கம்
 

சிங்கணாப்பூர் சனி பகவான் ஆலயத்தில் பெண்களுக்கான அனுமதி மறுப்பு வழக்கைத் தொடர்ந்து தற்போது சபரிமலை அனுமதி மறுப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் வலுவடைந்திருக்கிறது. ஹிந்த் நவோத்தன பிரதிஷ்டான், நாராயணசர்மா தபோவனம் ஆகிய இரு இந்து அமைப்புகளும் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்தப் பொதுநல வழக்கைத் தொடர்ந்த இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கத்துடன் ‘ஹேப்பி டூ பிளீட்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் கைகோத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் பத்தோடு பதினொன்று என்று பின்னுக்குத் தள்ள முடியாத முக்கியத்துவம் இவ்வழக்குக்கு உண்டு. இந்த வழக்கு நம் ஜனநாயக அமைப்பில் முக்கியத்துவம் மிக்கது. இந்திய அரசியல் சாசனம் ஷரத்த

கட்டுரை
வா. மணிகண்டன்  

சமீபத்தில் மானுடவியல் கருத்தரங்கொன்றில் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். கருத்தரங்கில் கட்டுரை வாசித்த பேராசிரியர் ஒருவர் ‘நாம் சமூக ஊடகங்களின் யுகத்தில் (Social media era) வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்பதை அழுத்தம்திருத்தமாகவும் திரும்பத்திரும்பவும் வலியுறுத்தினார். மக்களின் மனநிலையில் அலையை உண்டாக்குவதில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்ற அர்த்தத்தில் பேராசிரியர் பேசினார். அது சரியான வாதம். கடந்த பத்தாண்டுகளாகவே அப்படியான சூழல்தான். பெரும்பாலான கார்பொரேட் நிறுவனங்கள் சமூக ஊடகங்களின் வழியாகச் செய்கிற விளம்பரங்கள் மற்ற எந்த ஊடகத்தைவிடவும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சமூக ஊடக மனநிலை குறித்தான ஆராய்ச்சிகள்

புதிய பத்தி
நித்யானந்த் ஜெயராமன்  

ஒரு கட்டடத்துக்கு அற மதிப்பீடுகள் இருக்க முடியுமா? ஒரு கட்டடத்திற்குச் சமூகப் பொறுப் புணர்வு இருக்க முடியுமா? ஒரு கட்டடத்திற்குப் பொறுப்புணர்வு இருக்கமுடியா தென்றால் ஒரு கார்ப்பரேஷன் அதைக் கொண்டிருக்க முடியும் என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்? ஒரு கார்ப்பரேஷன் என்பது செயற்கையான சட்டரீதியான கட்ட மைப்பே... அது அறத்துடனோ அறம்பிறழ்ந்தோ இருப்பதில்லை..” - மில்டன் ஃப்ரைட்மன். மார்ச் ஒன்பது அன்று, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) தற்போது தானே மூடிவிட்ட கொடைக்கானலிலிருந்த அதன் பாதரசவெப்பமானித் தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 600 பேருடன் ஒரு தீர்வு ஒப்பந்தம் அறிவித்தது. நிக்கி மினாஜின் தூண்டுதலில் சென்னையைச் சேர்ந்த ராப் பாடகர் சோஃபியா அஷ்ரஃப் உருவாக்கிய ‘கொடைக்

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

இயற்கை பற்றிப் பாடிய வள்ளலார் பெருமான் “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்” என்கிறார். இதைவிடச் சுருக்கமாக முழுமையாக யாராலும் சொல்ல முடியாது. செயற்கை எப்படி பொய்யானதாக இருக்கிறதோ, அதுபோல இயற்கை உண்மையானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பொய் பேசுவது, போலியாகச் சிரிப்பது, ஒழுக்கமின்றி வாழ்வது என நமது இயல்புக்கு எதிராக இயங்குவது செயற்கையானவை. செயற்கையில் உண்மை இல்லாமல் இருப்பதால் அதிலிருந்து எந்தவிதமான ஆக்க சக்தியும் வெளிப்படுவதில்லை, எனவே அது யாரையும் கவருவதுமில்லை. செயற்கைத்தன்மை இல்லாமல், நாம் நாமாக இயல்பாக வாழும்போது, நம்மில் ஒரு காந்தசக்தி எழுகிறது. அந்த உண்மைத்தன்மை நம்மில் ஓர் ஓர்மையை உருவாக்குகிறது; அது பிறரைக் காந்தமெனக் கவர்கிறது. திருவள்ளுவர் சொன்னது, “வஞ்

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு
சேரன்  

சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”) அந்த மனிதருக்கு நடுத்தர வயது. சற்றுக் கூன் விழுந்த உடல். கிழிந்த காற்சட்டை

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு
 

ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. பேரழிவின் பின்னான தனது ‘உடல்’ என்ற கவிதையில் இவ்வாறு கவிஞர் சேரன் எழுதுகிறார்: கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல் இறப்பிலும் மூட மறுத்த கண்களின் நேர்கொண்ட பார்வையில் மிதக்கிறது: எதிர்ப்பு, ஆச்சரியம், தவிப்பு, தத்தளிப்பு, கொதிப்பு, ஆற்றாமை, முடிவற்ற ஒரு பெருங்கனவு கண்கள் இன்னமும் விறைத்துப் பார்த்தபடி இருக்கின்றன. அவை இன்று எங்களைப் பார்க்கின்றன. அந்தக் கனவைப் பலர் கண்டார்கள். இலங்கையின் யுத்தம் எப்படி நினைவுகூரப்பட வேண்டும்? அது நினைவு கூரப்படத்தான் வேண்டுமா? நினைவு கூரப்படத்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்பவர்கள், மனிதர்கள் உண்மையாகவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள் என்று நம்புபவர்களாக இருக்கின்றார்கள். ‘யுத்தத்தின் முடிவு’

கவிதை
சேரன்  

கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில்

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு
 

ஆஸ்விட்ஸ் வதை முகாம் அனுபவத்துக்குப் பின்னர் கவிதையெழுதுதல்’ பற்றி தியோடர் அடர்னோவின் மிகப் பிரசித்திபெற்ற கூற்றினை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று தரம் மேற்கோள் காட்டியுள்ளமை எனக்கு நினைவிருக்கிறது. முதலாவது, அனுர கே. எதிரிசூரியவின் ‘நிஷ்ஷப்த’ (நிசப்தம்) கவிதைத் தொகுதியைப் பற்றி 2003இல் ஹிரு பத்திரிகைக்கு நான் எழுதிய குறிப்பிலும், இரண்டாவதாக விக்டர் ஐவனுடன் சேர்ந்து இனப்படுகொலை தொடர்பில் ராவய பத்திரிகையில் 2009ஆம் ஆண்டு சூடுபிடித்த விவாதங்களின் போதும் அக்கூற்றை மேற்கோள் காட்டினேன். சில காலத்துக்கு முன்பு நிர்மால் ரஞ்சித் தேவசிரி (கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர், இடதுசாரிச் செயற்பாட்டாளர

கவிதை
 

வானத்தை அண்ணாந்து பார்த்தபடி முற்றத்தில் விரைந்து ஓடினேன் மேகங்கள் பிரியும் இடைவெளிகளூடே வடக்கை நோக்கிப் பயணிக்கும் விமானம் உரத்த சத்தம் மயிர்க் கூச்செறிகிற உடல் உள்ளங்கால்களில் துவங்கி உடலையே உருக்கும் வெப்பம் இன்னும் சில கணங்களில் குருதி பெருக்கெடுக்கிறது வடக்கின் பால்வெள்ளைக் கடற்கரை மணலில் துளித் துளியாக விழுகிறது நான் விரைந்து ஓடினேன் அறைக்குள் சுயமைதுனம் துய்க்க. ரோஹன பொத்துலியத்த: இலங்கையில் குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். பத்து ஆண்டுகளாகக் கவிதை எழுதி வருகிறார். அவரது தலைமுறையின் சிறந்த அரசியல் கவிஞர்களில் ஒருவர். ரோஹனவின் முதலாவது கவிதைத் தொகுதி, &lsqu

கவிதை
 

வடுக்களைப் படமெடுப்பேன் பழைய நைகோன் காமிராவும் சிங்கத்தின் தங்க சாமந்தித் தோலும் என்னிடம் இருந்திருந்தால் மாற்றுருவில் அங்கு இருந்திருப்பேன் வடுவுற்ற அமைதியை போரின் அமைதியை ஒளிப்படங்கள் எடுக்க கரு வளையங்கள் சூழ்ந்த பெண்ணின் மார்பகங்கள் வெளிப்பட்டன அவளது தலைமுடி சிக்குப்பட்டு வளையல்கள் நொறுக்கப்பட்டிருந்தன. இந்த மரணத்துக்கு சாட்சியமில்லை விளக்கம் தேவையில்லை பாதி எரிந்த தொட்டிலின் கீழ் தாய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் மரச்சட்டங்கள் இல்லாதிருந்தால் குழந்தை தப்பியிருக்கக் கூடும் ஒரு வேளை இல்லை பிறந்த குழந்தை நடப்பதில்லை சித்தார்த்த கௌதமன் மட்டுமே நடந்தா

கவிதை
 

அவள் நிர்வாணமாயிருந்தாள் பகலின் ஒளியுறிஞ்சி இரவின் இருட்டை வானுக்குப் பகிர்ந்தபடியிருந்தது நிலம் கையிலிருந்த மெல்லிய போர்வையால் சிதைந்த மென்னுடலை மூடிவிட்டு நீ அவளைப் பாராமல் கடந்துசென்றாய் பொறு. நீ அவளை அடையாளங்காண வேண்டும் அவளை நன்கறிந்த அயலவன் நீதான் அவர்கள் வெடிவைத்து எரித்துச் சாம்பலாக்கியது ஆண்களெனும் சரித்திரத்தைத்தான் வல்லுறவுகொண்டு கடலெறிந்ததென்னவோ பெண்களெனும் உரிமையைத்தான் இந்த அனைத்தையும் புறந்தள்ளியபடியேதான் நீயிருந்தாய் பூமி கிளர்ந்தெழ ஆண்களின் சாம்பல் துளிர்க்கும் தளிருக்கு உரமாகக்கூடும் கடல்நீர் ஆர்ப்பரித்தெழ எழ நாளையும் பெண்ணுடல்கள் இக்கரை ஒதுங்

கவிதை
 

சிங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது நான்கு மூலைகளிலும் உள்ள அரசிலைகள் கூர்வாளால் கிழிக்கப்பட்டன பனம் பூக்களும் தென்னம்பூக்களும் தயங்கியபடி களத்தில் வீழ்கின்றன பனையோலைகளாலும் தென்னோலைகளாலும் விசித்திரமான பின்னல்கள் பின்னப்படுகின்றன கலரியில் விசில் சத்தம் இப்போது உரத்துக் கேட்கிறது சரவெடிகள் வெடித்து எழுந்து எரிந்து சாம்பலாகி யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் வீழ்கின்றன. திரையரங்குகளில் மதுக் கோப்பைகள் நிரம்புகின்றன தேசப்பற்று நிரம்பி வழிகின்றது. கொண்டாட்டத்தின் சத்தத்துக்குள் மரணம் விழித்தெழுகிறது ஓலைக் குடிசைக்குள்ளிருந்து ஒரு மனைவி விம்முகின்றாள். வானுக்க

கவிதை
 

துயரம் கலந்த நீண்ட நாட்கள் உனது துன்பத்தின் வரலாறு கல்லறைகளிலிருந்தபடி பிறக்காத குழந்தையின் இரத்தத்தில் கூட எழுதப்பட்டு விட்டது. எனவே சுதந்திரக் கனவு அவர்களின் இரு கண்களுடனும் ஒப்பந்தமிட்டிருந்தது. இளமைநாட்களும் முதுமைக்காலமும் குரூரமான வயதென்னும் மரத்தினால் எரிக்கப்பட்டன ஆத்மாவையும் உடம்பையும் நோக்கி வேட்டைக் களத்தின் அம்புகள் எய்யப்பட்டன இப்பொழுதும், பசித்திருக்கும் குழந்தைகளைத் தேடிக்கொண்டு பெருங்காட்டில் ஒளிந்திருக்கும் தமிழச்சி நீ ஓர் அரற்றலின் நதி ஆழங்களில் கொதித்துக் கொண்டிருக்கும் கதறல்கள் பற்றிய எழுதப்படாத கவிதை

கவிதைகள்
 

நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை நான் கேட்கிறேன் சொல்ல இருப்பவை எனக்குள்ளே எதிரொலிக்கின்றன நமக்கு ஒரே உயிர்கள், மெய்கள், ஒரே மௌனம். ஊர் முற்றங்களில் பொங்கல் விழாக்களில் கோலமிடுவதற்காக நமது விரல்கள் ஒன்றாக மடங்கி நிமிர்கின்றன. ஒரே கடலின் இரு விளிம்புகளிலும் நாம் பலியிட்டோம் மழித்துக் கொண்டோம் நாம் காண்பது ஒரே ஆழம். இக்கரையில் ஓர் ஊர் ஒரு பாட்டி ஒரு கடவுள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன உங்கள் பெயர்கள் எனக்கு அறிமுகமானவை இடங்கள் அறிமுகமானவை ரீகல் சினிமா வீரசிங்கம் மண்டபம் பேருந்து நிலையம் எல்லாம் எனது கண்டறியாக் காட்சிகள்

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு
கீதா சுகுமாரன்  

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைலக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் போர்க்களத்தில் கணவனை இழந்தபின் விதவை வாழ்நிலையைப் பற்றிய இப் புறநாநூற்று வரிகள் (புறம் 246) பெரிதும் அறிந்ததுதான். இங்கே நெய் தீண்டாமல், நீரிலிருந்து பிழிந்தெடுத்த சோறும் எள்ளின் விழுதும் கலந்த உணவே அந்தப் பெண்ணின் நலிவுற்ற வாழ்முறையின் உடலாகச் செயல்படுகிறது. தனக்குக் கிடைக்காத அல்லது தான் உண்ண இயலாத உணவு தன் வாழ்வின் மாற்றம் அவளுடைய மனத்தில் ஏற்படுத்தும் மனக்காயத்தையும் வாழ்வின் வெறுமையையும் உணர்த்தும் உருவாக ஆகிறது. அதாவது உண்ண இயலாத உணவே போரினால் ஏற்பட்ட அவளுடைய

கவிதை
 

உன்னருகே படுத்திருக்கும் கணவனின் தொப்பை முக்கால் குன்றைக்க விழ்த்திருக்கிறது அவன் குறட்டையில் பூமியோடு பக்கத்துக் கிரகமும் நடுங்குகிறது நீ விழித்திருக்கிறாய் மணி இரவு ஒன்று, உன் கணவனுக்கு கட்டிலில் அமர்ந்தாலே மூச்சிரைக்கிறது இப்போதெல்லாம் நீ தினந்தோறும் சாமிக்கு விளக்கேற்றுகிறாய் இரவுணவுக்குப் பின் கைகழுவியவுடன் உன் கணவனுக்குக் கண் செருகாதிருக்க சில அபூர்வமான மதியங்களில் அவன் உன் இடுப்பின் டயர் மடிப்புகளை எண்ணுகிறான் வேடிக்கையாம் உன் கன்னம் தோல்பை கணக்காகத் தடித்திருக்கிறது உன் முலைக் காம்புகளுக்கு காந்தம் வைக்க வேண்டும் உன் யோனி நாயர் கடை வடையின் துளை நாளுக்கு நாள் வள

கட்டுரை
டி.எம். கிருஷ்ணா  

கூர் நாக்கு கொண்ட இளம் இசைக் கலைஞர் ஒருவர் எண்பதுகளின் இறுதியில், தனிப்பட்ட உரையாடலில் எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி அசாதாரணமான கருத்தைச் சொன்னார்.. ‘எம்.எஸ். சுப்புலட்சுமி,’ என்று தொடங்கும்போதே அவர் குரலில் இளக்காரம் தொனித்தது. “இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மோசடி” என்றார். இப்படிப்பட்ட கருத்தை நான் மேற்கோள் காட்டு வதையே தெய்வ நிந்தனைக்கு இணையான குற்றமாக வாசகர்கள் பலர் கருதுவார்கள். அவர் அப்படி சொன்னது ஏன் என் மனத்தில் தங்கிவிட்டது என்பதை இனி விளக்கப் போகிறேன். சந்தைப்படுத்தும் உத்திகள்தாம் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியைக் கர்நாடக இசையின் உலகளாவிய முகமாகவும் குரலாகவும் மாற்றியது என்னும் வாதம்தான் அந்த இளம்கலைஞரின் கூற்றுக்கு அடிப்படை. எம்.எஸ்.ஸின் இசை

நினைவு
கண்ணன்  

பார்ணி மீண்டும்மீண்டும் சொன்ன, சொல்ல விரும்பிய கதை இது. ஒவ்வொருமுறை சொல்லும்போதும் சின்னச்சின்ன அலங்காரங்கள், புதிய வண்ணங்கள் சேர்வதுண்டு. ஒரு நாட்டுப்புறக் கதைபோல அது உருப்பெற்று வந்தது. 25 ஆண்டுகள் இருக்கும். சு.ரா.வின் ஒரு சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான உரிமை பெற வீட்டிற்கு வந்திருந்தார் பார்ணி. தன் ஆசிரியர் ஏ.கே. ராமானுஜத்துடன் இணைந்து மொழிபெயர்த்தார் என்பது என் நினைவு. பார்ணி அப்போது மதுரையில்தான் ஆய்வு நிமித்தம் தங்கியிருந்தார். காலை உணவருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் இதைக் கதையாகச் சொல்கையில் ‘மல்லிப்பூபோல இட்லி’ என்பார் பார்ணி. போதும்போதும் என்று சொன்னாலும், கூட இரண்டு வைக்கும் சீரிய தமிழ் விருந்தோம்பலைக் கணக்கில் எடுத்தபடி வயிறு நிறையும்மு

நினைவு
 

நண்பர் பார்ணியிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன் - உங்களிடம் வடிகட்டி இல்லை என்று. மகிழ்ச்சியில் திளைப்பு, துன்பத்தில் உழல்வு, வாழ்க்கையைக் குறிக்கோள் உள்ளதாக்கல்-இவையெல்லாம் என் இருபதாண்டுகால நண்பருக்கு நேரிடையானதாகவே இருந்தன. உள்ளத்தில் கிளர்ந்த புலமைக் கருத்தைத் தொடர்வதில், நீதியற்ற உலகில் அறம்சார்ந்து வாழ வேண்டும் என்ற உறுதியில், நண்பர்களிடமும் அறிமுகமில்லாதவர்களிடமும் உரையாடுவதில், இளம் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில், நடைப்பயணத்தில் கண்ணுற்ற பறவையை இனங்காண்பதற்காகப் பின்னிரவில் என்னைத் தொலைபேசியில் அழைப்பதில் - எல்லாமே அவருக்கு உற்சாகத்துக்கு உரியவை. எல்லாவற்றையும் இந்த அளவுக்குத் தீவிரமாக உணர்ந்த ஒருவரை நான் கண்டதில்லை. இதன் விளைவு அவர் உணர்ச்சிப் பாங்கானவராக இருந்தார்; வேறு எப்ப

கதை
 

ட்ரிப்ளிக்கேனின் புராதன அடை யாளங்களில் ஒன்று விகேஎன் மேன்ஷன். நான்கு தளங்கள் கொண்ட மேன்ஷனின் இருநூற்றுச் சொச்சம் அறைகளில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட பல்துறை வல்லுனர்கள் வாசம் புரிகிறார்கள். காலத்தின் பிடியில் சிக்கி விரிசலுற்ற நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டு வாழும் எழுத்தாளர்கள், ஜர்னலிஸ்ட்கள், அசிஸ்டென்ட் டைரக்டர்கள், துணை நடிகர்கள், புரோகிதர்கள், எஞ்சினீயர்கள், வெயிட்டர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், லாப் டெக்னீஷியன்கள், தனியார் இன்ஸ்ட்டிடியூட்களில் போட்டோ ஷாப் - ஜாவா - அனிமேஷன் டெக்னாலஜி பயிலும் மாணவர்கள், வாரத்தில் இரண்டு நாள்களோ மூன்று நாள்களோ தங்கிச் செல்லும் பெட்ஷீட் - பனியன் - ஜட்டி - கைலி - உள்பாவாடை - ஜாக்கெட் பிட் - ப்ரா வியாபாரிகள், இன்னும் தினமும் நூற்று இருபது ரூபாய்க் கணக்கில

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14ஆம் நாள் சென்னை அம்பேத்கர் மணிமண்ட பத்தில் துடி இயக்கம் சார்பில் நண்பர்கள் சிலரோடு சேர்த்து எனக்கும் விருதொன்று வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏற்புரை வழங்க என்னைக் கேட்டுக்கொண்டபோது இதுபோன்ற அங்கீகாரங்கள்பற்றி யோசித்துக்கூடப் பார்த்திராத பல முன்னோடிகள் தன்னெழுச்சியாகத் தலித் சமூகத்திற்காகப் பாடுபட்டிருக்கும் நிலையில் என்னைப் போன்ற இளையவர்களுக்கு விருது தருவதை ஒருவித சங்கடத்தோடு எதிர்கொள்வதாகக் கூறினேன். அந்த வகையில் நம்மில் பலருக்குப் பெயராகக்கூட அறிந்திராத இரண்டொரு முன்னோடிகளின் பெயர்களை அங்கு பகிர்ந்துகொண்டேன். அவ்வாறு பகிர்ந்துகொண்ட முன்னோடிகளின் பெயர்களுள் ஒன்று, பௌர்ணமி டி. குப்புச்சாமி. பௌர்ணமி குப்புச்சாமியின் பெயரை அங்கு கூறிய தருணத்தில் பார்வையாளர் வரிச

 

‘ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தக அறிமுகம் - தெய்வீகன், நூல் வெளியீட்டுரை - சோமிதரன், எதிர்காலச் சந்ததிக்கான உரையாடல்கள் - ஜெயக்குமரன் ஆகிய மூன்றும் சில வினாக்களையும் சிந்தனைகளையும் எழுப்புகின்றன. இந்த நூல் முக்கிய வரலாற்று ஆவணம் என்கிறார் நூல் வெளியீட்டுரையில் சோமிதரன். இலங்கை ராணுவத்தால் 30 ஆண்டுகளுக்கு மேலாக வெல்ல முடியாத அளவு வீரச் செறிவுடன் கட்டமைக்கப்பட்டிருந்த அமைப்பாகிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் முதலான நாடுகள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கிய போர்த்தளவாட ஆயுதங்கள், ராடார், புலனாய்வு என்று முழு ஒத்துழைப்பு, புலிகளுக்கு ஆயுதங்கள் கொண்டு வந்த கப்பல்களை இலங்கை அரசு மூழ்கடிப்பதற்குத் தேவையான உதவிகள் என்று செயலற்றுப் போகச் செய்ததையெல்லாம்

மதிப்புரை
சுபாஷினி (லியோன்பெர்க், ஜெர்மனி)  

குறத்தியாறு கௌதம சன்னா வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 028 பக்கம்: 242 விலை: ரூ.270 தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஏராளமான புனை கதைகளை, புராணங்களைத் தன்னிடத்தே கொண்ட வளமான களமாகத் திகழ்கின்றது. தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. கிராமங்களில் இருக்கும் கதைகளே அக்கிராமங்களை அடையாளப்படுத்தும் சின்னங்களாக அமைந்துவிடுகின்றன. இந்தக் காரணத்தால், கதைகளும் புராணங்களும் அந்தக் கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்துவிடுகின்றன. குறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் சிறிய காப்பியம். கற்பனைக் குதிரையான மனோரஞ்சிதத்தின் முதுகில் ஏறிக்கொண்டு வாசகர

மதிப்புரை
அ.கா. பெருமாள்  

  கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள் இரா. சம்பத் (தொ-&ர்) வெளியீடு: சாகித்திய அக்காதெமி குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018 பக்கம்: 300 விலை: ரூ.272 கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு நிகழ்வு நடந்தபோது (1920) சாகித்ய அக்காதெமி நடத்திய ஒருநாள் உரையரங்கில் படித்த 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வாணிதாசன் (1915-1974) புதுச்சேரி வில்லியனூரில் பிறந்தவர். இயற்பெயர் ரங்கசாமி. வைணவ மரபினர். முறையாகத் தமிழ்ப் படித்துவிட்டு ஆசிரியப் பணிக்கு வந்தவர். பெரியாரின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். தமிழ்த் தேசியமும் உண்டு. ஆரம்பத்தில் ரமி என்ற பெயரில் எழுதினார். பின் வாணிதாசன் ஆனார். வாணிதாசனைப்பற்றிய இந்த நூலில் பாடுபொருள் தலைப்பில் மூன்று கட்டுரைக

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் தமிழ்ப் படைப்பாளிகளின் பார்வையில் (ப-ர்): மஸ்கட் எஸ். ஃபாஸில் அலி வெளியீடு: உங்கள் தூதுவன் பதிப்பகம் 6/109, சி2, அமைதி இல்லம் கோவளம் ரோடு கன்னியாகுமரி அஞ்சல் பக்கம்: 120 விலை: ரூ.100 தமிழகத்திற்கான தனி அடையாளங்களில் ஒன்று, எண்பது வயதுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் இன்னமும் இளமையோடு இயங்கிக்கொண்டிருப்பது. அரசியல் களம் முதற்கொண்டு இலக்கியக் களம் வரையிலும் இந்தப் பெருமைமிக்க நடமாட்டங்கள் காணக்கிடைக்கின்றன. இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ். குமரி மாவட்ட்த்தின் கொடிக்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா ஒரு காலத்தில் குமரி மாவட்டக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகச் செயல்பட்டவர். தலித்தாகப் பிறந்து அவர் இந்த உயர்நிலையை எட்டினார். செல்லப்பாதான

உள்ளடக்கம்