தலையங்கம்
 

தமிழகத் தேர்தல் முடிவு இம்முறை ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஆச்சரியமான ரீதியில் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. மாநில அரசியலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இன்னும் தேறிவராதவர்கள் உருவாக்கிவைத்த ஆச்சரியங்கள் அவை. ஒரு சார்பான நிலையில் நின்ற ஊடகங்கள், கருத்துக்கணிப்புகள் எனப் பலவாறான ஊகங்களைக் கிளப்பிவிட்டது இன்னொரு காரணம். கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மாறிமாறி வந்திருக்கும் யதார்த்தத்திலிருந்து புனையப்பட்ட கற்பனைகளை இம்முறை திமுகழகத்தின் அறிவுஜீவிகள் பற்றுக்கோடாகக் கொண்டிருந்தனர். சக்கரம் ஒரே திசைநோக்கிச் சுழலும் என்று எண்ணினார்கள். ஒவ்வொருவருக்குமான கட்சி விசுவாசங்கள் மற்றும் தலைமையின் மீதான பற்றுதல்கள் கருத்துக் கணிப்புகளாக மக்கள் மத்தியில் உலவவிடப்பட்டன. அவர்கள் களத்திலி

கட்டுரை
சுகுமாரன்  

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சடங்குகள் அனைத்தும் முழுமை அடைந்திருக்கும். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்றிருக்கும். முக்கிய எதிர்க்கட்சியான திமுக ‘உள்ளே வெளியே’ ஆட்டத்தில் முடிவெடுத்திருக்கும். நமது இடதுகைச் சுட்டுவிரலில் தீற்றப்பட்ட ஜனநாயக முத்திரை மங்கியோ அழிந்தோ போயிருக்கும். வென்றவர்களும் தோற்றவர்களும் ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று செயலில் இறங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருப்பார்கள். வெகுசனங்களான நாமும் மாபெரும் கடமையைச் செய்து முடித்த நிறைவில் அன்றாடக் கவலைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்திருப்போம். ஊடகப் பண்டிதர்களின் கணிப்புகளையும் அரசியல் நோக்கர்களின் கணக்குகளையும் சம்பந்தப்பட

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

இந்த முறை முஸ்லிம் மக்கள்தொகைப் பிரதிநிதித்துவத்தைச் சட்டமன்றப் பிரதிநிதித்துவம் ஈடு செய்யவில்லை. முஸ்லிம்களின் மனநிலை பல சந்தர்ப்பங்களிலும் திமுகவைச் சார்ந்திருக்கிறது. கோவை குண்டுவெடிப்புக்குப் பின் திமுக மீது கடும் கோபம் முஸ்லிம்கள் மத்தியில் உருவானாலும் பின்னர் அது சரிபாதி அளவுக்கேனும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கெனவே அமைப்பு ரீதியான வேர்களை இழந்து செயலற்றுப் போனது. மாநிலத்தின் அரசியல் அலையடிப்புகள் எப்படியிருந்தாலும் திமுகவை அனுசரித்து லீக் ஒரே நிலையாக நிற்கின்றது. உண்மையில், இன்றைய ஆயாராம் கயாராம் அரசியல் சித்து விளையாட்டில் இத்தகைய மாறா உறுதி அக்கட்சிக்குப் பொலிவையும் புகழையும் தந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நிலை இல்லை. யூனியன் முஸ்லிம் லீக்க

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை சமயநல்லூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். அது சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட ஊர். தலித்துகள் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதி அது. எங்களைத் தாண்டிச் சென்று நின்ற மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார வாகனத்திலிருந்து ஒருவர் வெளியே தலை நீட்டினார். மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கு போட்டியிட்டது. பிறகு மெல்ல வாகனத்திலிருந்த ஒலிபெருக்கியில் ஒருவரின் குரல் கேட்கத் தொடங்கியது. கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆதரவுபெற்ற சின்னம்; புரட்சிப் புயல் அய்யா வைகோ ஆதரவுபெற்ற சின்னம்; மக்கள் தலைவர் அய்யா வாசன் ஆதரவுபெற்ற சின்னம்; அய்யா ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆதரவுபெற்ற சின்னம் என்றெல்லாம் அடுக்கிவந்த அக்குரல் கடைசிப் பெயராக

 

டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு “எம்.எஸ். புரிந்துகொள்ளலை நோக்கி” படித்தேன். முதலில் மொழிபெயர்ப்பு செய்த ‘அநாமிகா’வைப் பாராட்டியாக வேண்டும். கூர்மையாக மொழியைக் கையாண்டுள்ளார். சுந்தர ராமசாமியை நினைவுபடுத்தும் மொழிநடை. விஸ்தாரமான, நுட்பங்களுடைய ஆழமான கட்டுரை. நான் ‘மாயக்கண்ணாடி’ என்ற தலைப்பில் பத்தி எழுதி வந்தேன். ஜூன் 2006இல் வெளிவந்த பத்தி சங்கீதம் பற்றியது. அதில் எம்.எஸ். பற்றி இவ்வாறு எழுதியிருந்தேன். “எம்.எஸ்.ஸின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் போரடித்தன. அவர் சதாசிவத்தைத் திருமணம்செய்து மிகையான பிராமணப் பெண்ணாக மாறி, சதாசிவம் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் விருப்பத்திற்கேற்ப வளர்ந்து, பிரபலப்பாடகியாக இருந்து மறைந்தார்.

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

அந்நியர்கள் நம் நாட்டுக்கு வந்து ஐந்து நாட்கள் தங்கிவிட்டு ஏதோ அவர்களுக்குத்தான் நம்முடைய சரித்திரம் பழக்கவழக்கங்கள் எல்லாம் தெரிந்ததுபோல் கட்டுரைகளும் நூல்களும் எழுதுவதாக ஒரு பொதுவான அபிப்ராயம் உண்டு. நானும் இந்த அயலவர்கள் எங்களைப்பற்றிக் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட விந்தையான ஞானம் பற்றிப் பகடியாகக் கதைத்திருக்கிறேன். மார்ச் மாதம் விருந்தாளி விரிவுரையாளராக ஜமேக்காவுக்குச் சில நாட்கள் போயிருந்தேன். எந்தவிதக் குற்றவுணர்வுமிலாமல் அந்த அனுபவம் பற்றி எழுதுகிறேன். இன்னுமொன்று. ஒரு காலத்து தமிழ் எழுத்தாளர்கள் வெளிநாடு சென்றுவிட்டு ரசத்துக்கும் சாம்பாருக்குமாக ஏங்கினேன் என்று எழுதியதைப்போல நான் எழுதமாட்டேன் என்று காலச்சுவடு பொறுப்பாசிரியர் சுகுமாரனுக்கு உறுதி கொடுத்திருந்தேன். ஆனால் Mc

கட்டுரை
கமலா ராமசாமி  

சுராவின் சகோதரி மீனாக்காவின் மகள் சாருகேசி ஆக்லாந்தில் வசிக்கிறாள். (அவளும் அவள் கணவர் ராஜ்குமாரும்). அங்கு பிப்ரவரி கோடைகாலம் என்பதால் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அழைத்ததின் பேரில் சென்றோம். நான் பிப். 8ஆம் தேதி கிளம்பிப்போய் பிப். 28ஆம் தேதி ஊர் திரும்பினேன். ராம், தைலா, தங்கு குடும்பங்கள், அமெரிக்காவிலிருந்து வர, நான் சென்னையிலிருந்து மலேசியன் விமானத்தில் கோலாலம்பூர் போய், இரண்டுமணி நேரத்தில் அங்கு விமானம் மாறி நியூஸிலாந்தின் தலைநகர் ஆக்லாந்திற்கு (Aukland) சென்றேன். ராம், தைலா டிக்கட் பதிவு செய்யும்போதே சக்கர நாற்காலிக்கும் ஏற்பாடு செய்துவிட்டதால், சிறிய நெருக்கடிகள் ஏற்பட்டாலும், மொத்தத்தில் பயணம் சௌகரியமாகவே அமைந்தது. பத்து நாள் பயணமான நைரோபி அனிம

அறிக்கை
அஜிதா  

இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விஷயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாக் கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது. இதேபோன்று வேறு பலவிதமான ஆதிக்கங்களால் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம், நேபாளம், மியான்மார், இராக், சிரியா, செக், ஸ்லேவாகியா, போஸ்னியா, ஹெர்ஜ கோவினா என பல நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் மக்களை அழித்தும் இடம்பெயரச் செய்தும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கியபோது இந்த அளவு தாக்கத்தை நாம் உணரவில்லை. தமிழக அரசியல்வாதிகளால் ஈழமக்களி

நேர்காணல்
கருணாகரன்  

இலங்கையில் போர் முடிந்துவிட்டது, ஆகவே அங்கு எல்லாமே சீராகிவிட்டன அல்லது எல்லாமே சீராகி வருகின்றன என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், நினைப்பதைப்போல போர் நடந்த இடங்களில் அத்தனை விரைவாக நிலைமைகள் சீராகிவிடுவதில்லை; அப்படிச் சீராகவும் முடியாது. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். மக்கள் மீளக் குடியேறத்தக்க வகையில் சூழலையும் நிலைமைகளையும் உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீள்நிலைப்படுத்தப்பட வேண்டும். மீள் நிலைக்குக் கொண்டு வரவே முடியாதவர்கள் பராமரிக்கப்பட வேண்டும். அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஏற்ற முறையான புனரமைப்பு வேண்டும். இப்படி ஏராளம் தேவைகளும் ஏராளம் பிரச்சினைகளும் போர் நடந்த பகுதிகளில் இருக்கின்றன. இத்தகைய நிலையில் - போர் முடிந்து இரண்டரை ஆண்டுகளான பிறகும், கண்

பதிவு
கிருஷ்ணபிரபு  

‘எழுத்து எனது ஜீவனம்’ என்று சொன்ன பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலின் சர்ச்சையைத் தொடர்ந்து ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான்’ என்று அறிவித்து இலக்கியச் சூழலிலிருந்து விலகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் பெருமாள்முருகன் குறித்துப் பல கட்டுரைகள் வெவ்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக மலையாள இதழ்களில் வெளியான கட்டுரைகள் பலவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டிருப்பது முக்கியமான செய்தி. ஓர் எழுத்தாளன் சந்தித்த கருத்துரிமை சார்ந்த பிரச்சனையின் ஆவணப்படுத்தல் இன்றியமையாத ஒன்று. தமிழில் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் நடைபெறாதது நமது போதாமை; அந்த வகையில் பெருமாள்முருகன் பற்றி அவரது மாணவர்கள் நாற்பத்திரண்டு பேர்

தமிழில்: வெற்றி  

எங்களுக்குச் சொந்தமானது எங்களது ஆண்கள் எங்களுக்குச் சொந்தமல்ல. ஒரு மதியம் வீட்டை விட்டுப் போன என் சொந்த அப்பாகூட எனதல்ல. சிறையில் இருக்கும் என் சகோதரன், எனதல்ல. என் மாமாக்கள் சித்தப்பா பெரியப்பாக்கள், வீடுதிரும்பும்போது தலையில் சுடப்படும் அவர்கள், எனதல்ல. மாமா சித்தப்பா பெரியப்பா பையன்கள், போதுமாக இல்லாத அல்லது அதிகமாக இருந்ததால் தெருவில் குத்தப்படும் அவர்கள், எனதல்ல. பின் நாங்கள் காதலிக்கும் ஆண்கள் சொல்கின்றார்கள், நாங்கள் எக்கச்சக்க இழப்பைச் சுமந்துத்திரிகிறோம், எக்கச்சக்க கருப்பை அணிகிறோம், கூட இருக்கமுடியாதளவு சுமையோடிருக்கிறோம், காதலிக்கமுடியாதளவு சோகமாயிருக்கிறோம். பின் அவர்கள் போய்விடுகிறார்கள், அவர்களுக்க

கதை
 

அவன் எப்போதும் அந்த இடத்தில்தான் நிற்கச் சொல்வான். பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் பத்திரிகை, சிகரட் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் கடைக்குப் பக்கத்தில். வெயில்படாமல் நிற்க, சார்ப்பு இருக்கும். தவிரவும், ஒரு வகையான மறைப்பு வேறு இருக்கும். அனாவசியமாகப் பயணம் போகும் தெரிந்தவர் கண்களில் விழ வேண்டாம். மேல் இருக்கும் தென்னங்கூரைப் பொத்தல் வழியாகத்தான் தன்மேல் விழும் வெய்யிலைத் தவிர்க்கத் தள்ளி நின்றாள். மொபைலில் மணி பார்த்தாள். அவன் சொன்ன நேரம் கடந்து இருபது நிமிஷங்கள் ஆகி இருந்தன. தொடக்கத்தில் அவன்தான் அவளுக்கு முன்னால் வந்து காத்திருப்பான். தொடக்கம் என்ன. ஆறு ஏழு மாதங்களுக்கு முன்தான். அப்போதெல்லாம் அவள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். என்ன கலரில் சட்டை போடுவது என்றுகூட அவன் கேட்

அஞ்சலி: லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரம் (1935-2016)
 

மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர் எம்மை விட்டு மறைந்துவிட்டார். அந்தச் செய்தி மே 7ஆம் திகதி, சனிக்கிழமை காலையில் என்னை வந்தடைந்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ‘ஆர்க்’ பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப்பட்ட இலங்கைப் போர் பற்றிய தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான, ‘தொலைந்த மாலைகள், தொலைந்த வாழ்வுகள்’ (Lost Evenings, Lost Lives ) என்பது நாங்கள் இணைந்து உருவாக்கிய இறுதிப் புத்தகம். அதனை வெளியிடுவதற்காக நான் அன்று ரொரொன்ரோவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அவர் அமைதியாக, வீட்டிலேயே உயிர்துறந்தார் என்பதைத் தெரிவித்து, ஒரே வசனத்தில் அமைந்த மின்னஞ்சல் ஒன்றை அன்று லக்ஷ்மியின் கணவர் எனக்கு அனுப்பியிருந்தார். அவர் புற்றுநோய்க்கெதிராகப் போராடிக்கொண்டிருந்தா

கட்டுரை
பெருந்தேவி  

இக்கட்டுரை பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலை வாசிக்கும் வழியிலும் அதை முன்னிட்டும் பழம் சம்ஸ்கிருத, தமிழ் நூல்களின் சொல்லாடல்களையும் தொடர்புடைய நாட்டார் வாய்மொழி மரபுச் சொல்லாடல்களையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்படுகிறது. மாதொருபாகன் நூல்குறித்த சர்ச்சையிலும் விவாதங்களிலும் ‘நியோகம்’ என்கிற பழம்வழக்கமும் பெண் ‘கற்பும்’ முக்கியமாக இடம்பெற்றிருந்ததால் இவற்றைக் கட்டுரை முதலில் விவாதிக்கிறது. பின்னர், தமிழில் வாய்மொழி வழக்காறுகளை, புராணங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, மாதொருபாகன் விவரிக்கும் திருவிழாச் சுதந்திரக் கலவிக்கும் நியோகத்துக்கும் இருக்கும் சொல்லாடல் தொடர்புறுத்தல்களையும் இடைவெளிகளையும் (discursive connectins and discontinuities)

கதை
 

காலை ஏழரை மணி வெய்யிலில் துலங்கிக்கொண்டிருந்தது கடற்கரையை ஒட்டியிருந்த அந்த நகர். ஒரு கலர் பென்சில் டப்பாவைச் சேர்ந்து பிடித்தபடி பழுப்பேறிய வெள்ளைச் சட்டை அணிந்திருந்த குணாவும் நரசிம்மனும் குழாயடிக்குச் சற்றுத் தள்ளி நின்றிருந்தார்கள். “குணாம்மா, வந்துக்கிதுங்க பாரு” என்றாள் பிரபா. எப்போதோ சிவப்பு வண்ணம் அடித்து மீண்டும் துருப்பிடித்திருந்த தெருக் குழாயிலிருந்து தண்ணீர் சுண்டு விரல் தடிமனுக்கு வந்துகொண்டிருந்தது. அதிலிருந்து கண் விலக்கித் தன் பிள்ளைகளைப் பார்த்தாள் சக்தி. குழாயடியில் இருந்தபடியே “என்னா? சாப்டுக் கௌம்பலியா?” என்றாள். “இங்க வாம்மான்னா” என்றான் நரசிம்மன். “இருங்க, வரன்.” “தரமாட்டுன்றாம்மா கலர் பென்சில” என்றாள

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
 

தேசாந்திரிகளுக்குக் குறைவற்ற தேசம் இது. வடக்கே சூதர்களும் தெற்கே பாணர்களும் பெரும் எண்ணிக்கையில் நடமாடி வந்திருக்கிறார்கள். அந்தந்தப் பிராந்தியங்களில் புழங்கிய மொழிகளுக்குக் கவிச்செழுமை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், விடுதலையுணர்வின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறுகிறவர்களுக்கும் பிழைப்புக்காக, பொருளீட்டுவதற்காக, பணி நிமித்தம் பிரிந்திருப்பவர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இரு நிலைகளுமே கவிதை யாத்தலுக்கு ஏதுவான தாது கொண்டவை; பிரிவாற்றாமை. என்றாலும், முன்னதில் வேதாந்தமும் பின்னதில் துக்கமும் மண்டியிருப்பது இயல்பே. இடைக்காலத்திலும் கூட தமிழ்ப் புலவர்கள் ஊர்ஊராய்ச் சென்று கவிபாடிப் பிழைத்திருக்கிறார்கள். காளமேகம், இரட்டைப்புலவர்கள் போன்ற உதாரணங்கள் அநேகம். த

புத்தகப் பகுதி - நாவல்
சல்மா  

மெஹருக்கு உடல் ராகத்தாக* இருந்தது. இவ்வளவு நாள் எவ்வளவோ கஷ்டப்பட்ட, வேதனைப்பட்ட நாள் எல்லாம் அழ மட்டும்தான் தோன்றியிருக்கிறது. ஆனால் அன்றைக்கு அரிப்பு எடுத்துக் கஷ்டப்பட்டபோதுதான் சாக வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்தாள். அன்றிரவு மட்டும் பர்வீனுடன் அந்த டாக்டரைப் பார்த்திருக்கவில்லை என்றால் ஏதாவது செய்துகொண்டிருப்பாள். அந்த சிலமணி நேரத்தில் எதுவுமே நினைவில் இல்லை. தன் வாழ்க்கையைப் பற்றியோ குழந்தைகளைப் பற்றியோ எதுவுமே நினைவில்லை. படுக்கையில் இருந்தபடியே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரின் மீது கண்களை ஓட்டினாள். ரத்னம் ஸ்டோர் கொடுத்த காலண்டர். சாமி படம் இருந்ததால், சாஜி அதன்மீது வெள்ளைப் பேப்பரை ஒட்டி, அதன்மீது அவளும் தம்பியும் இருந்த போட்டோவை ஒட்டியிருந்தாள். தனது படுக்கைக்கு எதிரிலி

புத்தகப் பகுதி - நாவல்
பா. வெங்கடேசன்  

பாதிக்காக ஒரு மனநல மருத்துவரைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை என்கிற எண்ணமே வாசுதேவனிடமிருந்து தைரியக் குறைவை நீக்கியதோடு (இம்மாதிரியான மருத்துவர் களுடைய பேச்சே அவர்கள் விவரிக்கும் பைத்தியத்தின் துவக்க நிலை அடையாளங்கள் முழுவதும் தன்னிடம் இருப்பதைப்போன்ற பிரமையையும் கலக்கத்தையும் உண்டாக்கிவிட வல்லவை) பிரச்சினையின் புதிய பரிமாணங்களை நோக்கி யோசிக்கும் தெளிவைக் கொடுத்தது. உண்மையிலேயே ஜெமினி என்கிற அந்த ஓவியர் தன் வீட்டிற்கு அந்த மதியத்தில் எப்படி வந்திருக்க முடியும் என்று அவன் யோசித்தான். பாகீரதியையும் அவள் அந்தச் சித்திரத்தைப் பார்த்துப் பார்த்து அதிசயப்பட்டுக்கொண்டிருந்தது போதுமென்று சொல்லி வாங்கி அப்பால் வைத்துவிட்டு அதைப்பற்றி யோசிக்கச் சொன்னான் (பாகீரதியும் நிதானத்திற்கு வந்திருந்தாள

ஓவியம்: Courtesy: Jogen Chowdhury  

ஆகச் சிறந்த காதல் முன் எப்போதோ வீசப்பட்டு செயலிழந்த ஒரு வெடிகுண்டின் காலிக் கோப்பையென என் உடலில் லீலிப்பூவின் செடி வளர்க்கிறாய் இனிப்புக்கூடிய உன் எச்சிலால் நீர் ஊற்றுகிறாய் ஒழுகும் அன்பைச் சிந்தாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன் மழைக்குப் பிந்தைய கணத்தில் புதரடியில் முளைத்தெழும் காளானென என் ஆன்மா பூக்கிறதை நீ அறிவாயா சதையாலான இந்த உடலையும் எலும்புகளற்ற இந்த ஆன்மாவையும் உருண்டையாக்கப்பட்ட சூரணமென விழுங்கிவிடு நீருக்குள் நீராய் இருப்பது ஆகச் சிறந்த காதல். பெண்பாற் கூற்று வெகுதூரம் ஓடிய விலங்கொன்றின் உலர்நாவென தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவ

கட்டுரை
சீனிவாசன் நடராஜன்  

பேருந்துப் பயணம் என்பது இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் தார்ச் சாலையை நம்பி இருப்பதில்லை. பேருந்துகள் உருவாக்கப்படும் விதம் இந்தியாவிற்காக அல்லது இந்திய சாலைகளுக்குப் பொருந்தும்படியாகக் கட்டமைக்கப்படுவதை ‘மேட் ஃபார் இந்தியா’ என்று சந்தை பிரகடனப் படுத்துகிறது. இவ்வாறான தேவைக்கும் பயன்பாட்டுச் சூழலுக்கும் அணுக்கமாய் உற்பத்தியின் தரம் நிர்ணயிக்கப்பட்டால் அதன் உள்ளீடும் வெளிப்பாடும் உலகின் தரக்கட்டுப்பாட்டில் இருந்து வெகுதூரம் விலகிச்செல்ல வழி வகுப்பதை அன்றாட இந்தியச் சந்தை நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. தொன்மையான இந்தியக் கலைப் பண்பாட்டைத் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் பல்வேறு ஆதாரங்களில் ஏறக்குறைய உலகின் பழமையான ஆதாரமாக ‘பீம் பெட்கா’ பாறை ஓவ

உள்ளடக்கம்