தலையங்கம்
 

‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்கிற நாவலை எழுதியதால் முன்பு ஊரால் தள்ளிவைக்கப்பட்ட எழுத்தாளர் துரை குணா மீது தற்போதும் மனித உரிமை மீறல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்முறை இதை நிகழ்த்தியிருப்பது காவல்துறை. ஜூன் மாதம் பத்தாம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த துரை குணாவை எழுப்பிய காவல்துறை அவரையும் குணாவின் நண்பரும் மனித உரிமை ஆர்வலருமான பூபதி கார்த்திகேயன் என்பவரையும் கைது செய்வதாகச் சொன்னது. எந்தவிதப் புகாரும் இல்லாமல் இவர்களைக் கைது செய்த காவல்துறை உடனடியாக வழக்கும் பதிவு செய்தது. கைது செய்தமைக்கான முறையான காரணங்களைச் சொல்லாததோடு அவர்களை மரியாதைக் குறைவாகவும் நடத்தியிருக்கிறது காவல்துறை. ஒரு எழுத்தாளருக்கு மட்டுமல்ல, எவரொருவர்மீதும் இதுபோன்று மாண்புக்கே

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

மதச்சார்பின்மைக்குப் பல விளக்கங்களுண்டு. மதங்களை ஒட்டுமொத்தமாக வெறுப்பது, எதிர்ப்பது என்பது இடதோரத் துருவநிலை. ஏதாவது ஒரு மதத்தை ஏற்றுக்கொண்டு அதுதான் வாழ்க்கை என அதனில் வெறியோடு மூழ்கிக்கிடப்பது வலதோர, துருவ நிலை. இவற்றுக்கிடையே மதங்களைக் கண்டு கொள்ளாமலிருப்பது, அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிப்பது என ஏராளமான நிலைப்பாடுகளைக் குறித்துக்கொள்ள முடியும். மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவை வாழ்விற்கு அளிக்கும் நிறங்களை, கதைகளை, கொண்டாட்டங்களை, நிலையற்ற மண்ணுலக வாழ்விற்கு அளிக்கும் விண்ணுலக நங்கூரங்களைப் பலர் ரசிக்கிறோம். ஆனால் மதம் எனும் நிறுவனம் மக்களை அடிமைப்படுத்துவதை, சுரண்டுவதை, சீரழிப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என்னைப் பொறுத்தவரை, எல்லா மதங்களையும் சமமாக மதிக்கும், ஆனால

கட்டுரை
 

ஒவ்வொருமுறையும் சென்னை வெள்ளத்தில் மூழ்கும்போதும், அந்த நதியோ இந்த ஏரியோ மோசமான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்படும். கடந்த நூற்றாண்டு முழுக்க வெள்ளங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட போதெல்லாம் அடையாறு, கூவம் நதிகளும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளும் அதைத் தாங்கிக்கொண்டன. நகரத்தின் வடக்குக் கோடியிலிருக்கும் குசஸ்தலையாறு கோபக்கார நகர் நிர்வாகிகளின் குற்றப் பார்வையிலிருந்து பெருமளவு தப்பித்திருக்கிறது. என்றாலும், இனி நீண்டகாலத்திற்கு அல்ல. கூட்டாட்சி ஒத்துழைப்பின் ஒரு அரிய வெளிப்பாட்டில், மத்திய மாநில நகர் அரசாங்கங்கள் அதை மாற்ற ஒன்றிணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வரும் ஆண்டுகளில், சென்னையின் இரண்டாவது பெருந்திட்டத்தின்படி எல்லாம் நடக்குமென்றால், குசஸ்தலையாறு அழிவுக் கால த

 

களந்தை பீர்முஹம்மது எழுதிய ‘பொதுவெளியில் முஸ்லிம்கள்’ எனும் கட்டுரை கண்டேன். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிநாள்வரை வாக்காளர்களைக் குழப்பமடையச் செய்வதாகவே இருந்தது. எந்தக் கட்சி அல்லது கூட்டணி என்ன கொள்கையை அல்லது இலட்சியத்தைக் கொண்டது என்பது யாருக்குமே புரியவில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் பேசினார்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளையே வழங்கினார்கள். ‘அடுத்த முதல்வர் நானே’ என்ற குரல் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒலித்தது. மதம் - சாதி என்று வரும்போது, வெகுஜன வாக்காளர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற ஒரே கவனம்தான் ஒவ்வொருவரிடமும் காணப்பட்டது. உண்மையாக, விளிம்புநிலை மக்களுக்காகவெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க

கட்டுரை
ஜெ. பாலசுப்பிரமணியம்  

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டையொட்டி எப்போதும் இல்லாத அளவுக்கு அவரின் கருத்துகள் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் கவனத்தைப் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அம்பேத்கர் குறித்த இரண்டு சர்வதேசக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அங்குள்ள பல அம்பேத்கரியவாதிகளைச் சந்தித்துப் பேசியதிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். அம்பேத்கரின் நூறாவது (1990) ஆண்டுதான் தலித்துகளின் எழுச்சிக் காலம். இதற்கு மாநில அளவிலான தலித் இயக்கங்களின் தீவிரமான போராட்டங்கள், அம்பேத்கரின் எழுத்துகள் அச்சுக்கு வந்தமை, தன்னார்வக் குழுக்களின் மனித உரிமை முன்னெடுப்புகள் போன்றவை அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளில் தலித் மக்களில் சொற்ப எண்ணிக்க

மலையாளக் கதை
 

"கூவள இலை பத்தாதே” பேபி வைத்தியர் சொன்னார். வைத்தியரின் ஒரு புறமாகத் தரையில் உட்கார்ந்திருக்கிறான் ஷாஜி. பக்கத்தில் ஒரு பத்திரிகை மேல் பரப்பிவைத்திருக்கும் நாட்டு மருந்துகள். வைத்தியருக்கு வியர்க்கிறது. ஷாஜி இடையிடையே மாசிகையால் அவருக்கு விசிறுவான். ஷாஜியின் மனைவி ராணிக்கு ஆவி பிடிப்பும் மசக்குதலும் தொடங்கி ஒன்று ஒன்றரை மணி நேரமாகியிருந்தது. ராணியைப் படுக்க வைத்திருப்பது ஒரு கயிற்றுக் கட்டிலில். ஒரு கையை முலைகளுக்குக் குறுக்காக வைத்திருக்கிறாள். இன்னொரு உள்ளங்கையால் கீழே நாணமுள்ள இடத்தை மூடியிருக்கிறாள். மசக்குதலின் கட்டங்களில் பிராவையும் ஜட்டியையும் உருவும்போது அவள் வெட்கப்பட்டாள். அப்போது ஷாஜி ஆசுவாசப்படுத்தினான். “கழற்று ராணி, எல்லா இடத்திலேயும் புடிச்சுவுட வேண்டாமா?&r

சென்னை புத்தகக் காட்சி 2016
 

பாகீரதியின் மதியம் நூல் வெளியீட்டு நிகழ்வு டிஸ்கவரி புக் பேலஸ் 22, மே 2016 எண்பதுகளின் பிற்பகுதிகளில் எழுதத் தொடங்கிய பா. வெங்கடேசன், கவிதை - சிறுகதை - குறுநாவல்கள் என்று இயங்கி வருபவர். ‘தாண்டவராயன் கதை’யை அடுத்து, எட்டாண்டுகள் கழித்து வெளியாகும் அவரது நாவல் ‘பாகீரதியின் மதியம்’. விருட்சம் ஆசிரியர் அழகிய சிங்கர் வெளியிட, எழுத்தாளர் சாரு நிவேதிதா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். விருட்சம் இதழின் மூலம் பா. வெங்கடேசனுடன் இலக்கிய உறவு ஏற்பட்டது குறித்தும், அவரது முதல் தொகுப்பை வெளியிட்டது குறித்துமான தகவல்களை அழகிய சிங்கர் பகிர்ந்துகொண்டார். ‘பாகீரதியின் மதியம்’ நாவலின் நூறு பக்கங்களை மட்டுமே படிக்க முடிந்தது, அதுவே இந்நாவலின் செழுமையை உணர்த்தப் போ

மின்னஞ்சல் வழி உரையாடல்: கோமகன்
கருணாகரன்  

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி என்ற ஊரில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசிக்கிறார். இலக்கியப்பரப்பில் கவிஞராக அடையாளப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும் ஊடகவியலாளராகவும் தொடர் இலக்கியச் செயற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில் வெளிப்பட்டிருக்கிறார். வெளிச்சம் கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் காட்சி ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். பத்திரிகையாளரும் கூட. 1980களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னைப் போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம்பெற்ற வேளையிலும் வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் பயணித்த போராளி. இதுவரையில், ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்

அஞ்சலி: கிரகோரி ரபஸா (1922 - 2016)
சுகுமாரன்  

கிரகோரி ரபஸாவின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் இல்லாமலிருந்தால் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராக காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஒருவேளை அறியப்படாமலே போயிருக்கலாம். அல்லது உலக இலக்கிய வாசகர்களுடனான அவரது அறிமுகம் மிகத் தாமதமாக நிகழ்ந்திருக்கலாம்; ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குக் கிரகோரி ரபஸா வழங்கிய ஆங்கில மொழியாக்கமே மார்க்கேஸை உலகளாவிய புகழுக்கு உரியவராக்கியது. அந்த மொழிபெயர்ப்பே ரபஸாவையும் சர்வதேசப் பாராட்டுகளுக்கும் உள்ளாக்கியது. இதைச் சரியாகக் கணித்ததும் உணர்ந்ததும் இந்த இருவரும்தான். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் மூலமொழியான ஸ்பானிஷில் 1967ஆம் ஆண்டு வெளியானது. செர்வான்டிஸின் ‘டான் குவிக்சோட்’டுக்குப் பிறகு ஸ்பானிய மொழியில் நிகழ்ந்த அ

கட்டுரை
 

மதுவோடு மனிதன் மேற்கொண்டிருக்கும் சரசம் தொன்றுதொட்டே தொடர்ந்து வரும் அம்சம். மிகப் பெரும்பான்மையான மதங்களின் வேத நூல்களிலும் ஏதோ ஒருவகை போதைப்பொருளைப் பற்றிய குறிப்பு இருப்பதைக் காண முடியும். நன்கறியப்பட்ட தொல்பொருள் ஆய்வாளரும் சமைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் நொதிக்கவைக்கப்பட்ட பானங்கள் மீதான உயிர்-மூலக்கூறியல் மற்றும் உடல்நலம் குறித்த ஆய்வுத் திட்டத்தின் இயக்குநருமாக அறியப்படுபவர் பேட்ரிக் மெக்கவர்ன். இவர் தொல்வரலாற்று ஆய்வுக் களங்களில் காணக்கிடைக்கும் மண்பாண்டச் சிதைவுகளில் மதுபானக் கசடுகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் சிறப்பு ஈடுபாடு கொண்டிருப்பவர். கற்காலத்துக்கும் முந்தைய காலகட்டத்திலேயே (ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே) மதுவை நுகரும் பழக்கம் இருந்ததற்கான சுவடுகள் காணக

பதிவு
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல் விருது விழா ரொறொன்ரோவில் 2016, யூன் 18ஆம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் அமெரிக்கா வாழ் மருத்துவர் திருஞான சம்பந்தம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக முனைவர் மு. இளங்கோவன் கலந்துகொண்டார். இம்முறை வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது இ. மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சிய மான ‘விக்கிப்பீடியா’வின் ஒரு பகுதியாக, 2003இல் உருவான தமிழ் விக்கிப்பீடியா, இன்று ஏறக்குறைய 90,000 கட்டுரைகளைக் கொண்ட இணையக் கலைக் களஞ்சியமாக உள்ளது. கட்டுரைகளின் எண்ணிக்கைக்கும் அப்பால், தொடர்ச்சியாக விக்கிப்பீடியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பல வழிகளிலும் பல்வகைமைத் தன

 

1. நத்திங் ஸ்பெஷல்? கைகளற்ற ஒருவன் தன் காலால் திருவள்ளுவரை வரைந்து காட்டிவிட்டான். இதில் ஒரு சுவாரஸ்யம் கிட்டிவிட்டது. எனவே அவனுக்கு நமது நாளிதழ்களில் ஒரு போட்டோவும் கிடைத்துவிட்டது. சுவாரஸ்யமற்ற முடவர்கள் சுவாரஸ்யமற்ற குருடர்கள் சுவாரஸ்யமற்ற ஊமைகள் மூத்திரச்சந்துகளில் ஒளிந்து கொள்கிறார்கள். 2. இடமுலை வடிவக்கல் ஒரு வழியாக கவர்மெண்ட் கக்கூஸிலிருந்து வெளியே வந்து விட்டான் துரத்தியடித்த நாய்களில் ஒன்று திரும்ப வந்து உறுமி நிற்கிறது நடப்பதும் ஊர்வதும் கண்ட அதற்கு தவழ்வது பிடிக்கவில்லை இவன் பாக்கெட்டில் கைவிட்டுத் தேடினான் இன்னுமொரு கல் மிச்சமிருந்தது. அதை எடுத்து ஓங்கி எறிந்தான்

கதை
 

மதி எங்கள் ஊருக்கு வந்தபோது வானத்தில் வெள்ளியோ வால்நட்சத்திரமோ தோன்றவில்லை. ஆறுமாதம்வரை அவன் ஒரு சாதாரணப் பைத்தியக்காரனாய் இருந்தான். சேற்றில் ஒரு வருடம் புதைத்துவைத்த மாதிரி இருந்த பஞ்சையான வேட்டி கட்டியிருந் தான். இடது கையால் அதை எப்போதும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு வலது கையால் டீ வேண்டுமென ஜாடை செய்வான். கீழே கிடக்கும் துண்டுப் பீடிகளைப் பொறுக்கிக் கைநிறைய வைத்திருப்பான். ஊருக்கு இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் அடிக்கடி வருவார்கள். எனவே, யாரும் அவனைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பிரியா ஸ்நாக்ஸ் கடைக்காரர் தினமும் இரண்டுவேளை டீயும் காலை மாலை டிபன் சாப்பாடும் என கொடுத்தார். பயங்கரக் கருமி எனப் பெயரெடுத்திருந்த அவர் மனதை இந்த அளவுக்கு எப்படி மாற்றினான் என்பது பு

காற்றின் கலை
 

திருவனந்தபுரம் நவராத்திரி மண்டபத்தில் பாலமுரளி கிருஷ்ணா முதன்முறையாகப் பாடினார். 1998 செப்டம்பர் 30 அன்று நடந்தது அந்தக் கச்சேரி. ஆரபி ராக ‘பாஹி பர்வத நந்தினி’ முதலாவது கிருதியாக இருந்தது. ராகமும் தானமும் வசீகரிப்பவையாக இருந்தன. பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் இனிமையானதும் உருக்கமானதாகவும் இருந்தது. தொடர்ந்து கண்ட, யமுனா கல்யாணி, வல்லபி, வாகதீஸ்வரி ராகங்களில் கிருதிகளைப் பாடினார். யமுனா கல்யாணியில் அமைந்த ‘ஆஜ் ஆயே ஸ்யாம் மோஹன ராஸ மண்டல கேலனே’ வை பாலமுரளியைப்போல இவ்வளவு இனிமையாக யாராலும் பாட முடியாது என்று தோன்றியது. இந்த அளவு கற்பனாவாதமும் மோகனமுமான உணர்வுகளை யாரால் அளிக்க முடியும்? கச்சேரி முடிந்தது. அத்தோடு அந்தக் கற்பனையான மாய உலகமும் மறைந்து போயிற்று. மனத்தில்

புத்தகப் பகுதி
ஜான் சுந்தர்  

1. மழைப்பாடல் ஆர்கெஸ்ட்ரா’ என்றுதான் பெரும் பாலானவர்களால் குறிப்பிடப்படுகின்றன மெல்லிசைக் குழுக்கள். சொற்பமாக, தமிழில் ‘பாட்டுக்கச்சேரி’ என்போரும் உண்டு. சுவரொட்டிகளில் ‘திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி’ என்றும் அச்சிடுகிறார்கள். கேரளத்தில் ‘கானமேளா’ என்கிறார்கள். கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலிருக்கிற ‘அகழி’யிலா? தமிழர்களும் மலையாளிகளுமாக வசிக்கிற, ‘நெம்மாரா’விலா? இடம் சரியாக நினைவிலில்லை. சம்பவம் மட்டும் இருக்கிறது தெளிவாக. மெல்லிசை நிகழ்ச்சியை துவக்க, இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை ஆயத்தமாக்கிக்கொண்டிருந்த போது, மேடையில் ‘ராம்ஸ்’ என்கிற ‘ராமேட்டன்’ என்னும் ‘ராமேந்திரன்’ எனப்படும் ர

நூல் பார்வை
சுப்பிரமணி இரமேஷ்  

எங்கள் ஐயா பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் - 629 001 பக்கம்: - 360 விலையடக்கப் பதிப்பு: ரூ.250 பெருமாள்முருகனைப் பற்றி அவரது மாணவர்கள் எழுதிய ‘எங்கள் ஐயா’ நூலில் 42 மாணவர்கள் அவருடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்தப் புத்தகத்தைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் எனக்கும் பெருமாள்முருகன் ஐயாதான். இந்நூலில் கட்டுரை எழுதியுள்ள அவரது மாணவர் கு.சீனிவாசன், இளங்கலையில் சில மாதங்கள் எனக்கு ஆசிரியர். நவீனத் தமிழ்ச்சூழலில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதைப் புனைவுத்தன்மை இல்லாமல் பகிர்ந்துகொள்ளும் நூல்தான் ‘எங்கள் ஐயா’. இன்றைய சூழலில் ஆசிரியர

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

மாவீரன் சிவாஜி காவித் தலைவனல்ல காவியத் தலைவன் கோவிந்த் பன்சாரே தமிழில்: செ. நடேசன் வெளியீடு: விஜய்ஆனந்த் பதிப்பகம் 20, பாரதி இல்லம், திருப்பூர் ரோடு, ஊத்துக்குளி ஆர்.எஸ், திருப்பூர் மாவட்டம் - 638752 பக்கம்: 112 விலை: ரூ.100 1) இந்த நூலின் ஆசிரியர் கொல்லப்பட்டுவிட்டார். 2) இந்த நூல் மராத்தி, ஆங்கில மொழிகளில் சுமார் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையாகிவிட்டன. இந்த இரண்டு செய்திகளும் நமக்குச் சொல்லும் மூன்றாவது செய்திதான் இந்த நூலின் தலைப்பு; மாவீரன் சிவாஜி, காவித் தலைவனல்ல காவியத் தலைவன். இந்த மராட்டிய மன்னனின் பெயர் ‘வீர’ என்கிற முன்னொட்டு கொண்டு நம்மிடம் புழக்கத்தில் இருக்கிறது. இந்த முன்னொட்டும் சிவாஜி என்கிற பெயரும் ஒருவிதமான

மதிப்புரைகள்
அ.கா. பெருமாள்  

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை தொ-ர்: இரா. காமராசு வெளியீடு: சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை தேனாம்பேட்டை சென்னை - 18 பக்கம்: 240 விலை: ரூ.180 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் சாகித்திய அகாதெமி அமைப்பும் இணைந்து இரண்டு நாட்கள் நடத்திய (2014 நவம்பர்) கருத்தரங்கில் படிக்கப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு. பதிப்பாசிரியரான இரா. காமராசுவின் அறிமுகவுரையும் கி. நாச்சிமுத்துவின் தலைமை உரையும் கால்டுவெல் பற்றிய செய்திகளின் மொத்த சாராம்சம். புத்தகத்தினுள் நுழைவதற்கு ஏதுவான தரமான கட்டுரைகள். இராபர்ட் கால்டுவெல் (1814-1891) அயர்லாந்தில் பிறந்தவர். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 24 வயதில் சீர்திருத்துவ கிறிஸ்தவ சமயப் பரப்புநராகச் சென்னைக்கு வந்தவர். அங்கிருந்து திருநெ

பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
யுவன் சந்திரசேகர்  

பரபரப்பான மாநகரச்சாலையிலிருந்து உள்ளொடுங்கிய கட்டடத்தின் வாயிற் படியில் அமர்ந்திருந்தோம். பக்கவாட்டுப் பார்வைக்குச் சாலையும் அதில் விரையும் வாகனங்களும் தெரிந்தன. ஒலிகளைப் பிரித்தறிவது சாத்தியமில்லை என்றாலும், வாகனங்கள் தெளிவற்ற ஒலித் தொகுப்பாகக் கவனத்துள் வந்து, கணநேரக் காட்சியாக நிறைந்து காணாமல்போயின. இன்னமும் போய்க்கொண்டுதான் இருக்கின்றன என்பதை ஓசை தெரிவித்தபடி இருந்தது. இடைவெளியேயின்றி வாகன ஒலிகள் கேட்டதால் ஓடுவது வெவ்வேறு வண்டிகள் அல்ல, இடத்தை விட்டு நகராது - ஓய்வே இன்றி இயங்கும் - முடுக்கப்பட்ட ஒரே ராட்சத வண்டி என்கிற பிரமை தட்டியது. ‘இடம்’ என்பது தனித்துவமான இருப்பு கொண்டது அல்ல, காலத்திலல்லாது வேறெங்கும் அது இருக்க முடியாது என்ற அறிவியல் கூற்றைச் சுற்றி நகர்ந்திருந

அ. ரோஸ்லின்  

தொடர்தலின் பிரியம் ஒரு பிரியத்தைத் தொடர்வது ஆழியைத் தொடர்வது போல ஒரு ஆழியைத் தொடர்வது இசையைத் தொடர்வது போல ஒரு இசையைத் தொடர்வது மீட்பைத் தொடர்வது போல ஒரு மீட்பைத் தொடர்வது ஆன்மாவைத் தொடர்வது போல ஒரு ஆன்மாவைத் தொடர்வது பிரபஞ்சத்தைத் தொடர்வது போல. ஓராயிரம் பறவைகள் தற்போதெல்லாம் என் காமத்தை ஒரு இறகென உன் கரங்களில் ஒப்புவிக்கப் பழகியிருக்கிறேன், அது ஒரு மீட்சியென, ஒரு துளிர்த்தலென, ஒரு நகர்த்துதலென, ஒரு கரைதலென உன்னுள் வளர்ந்து மினுங்குகிறது, நம் அன்பின் உவர்ப்புக்கு ஏதுவானதாக நம் காமத்தைத் தேக்கி வைத்திருக்கும் உன் நிலத்திற்கு ஓராயிரம் பறவைகள் திரும்புகின்றன.

உள்ளடக்கம்