சுந்தர ராமசாமி, 1988ஆம் ஆண்டு காலாண்டிதழாக காலச்சுவடை ‘தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட’தாகத் தொடங்கினார். இன்றும் காலச்சுவடின் ஆதாரநோக்கமும் விசையும் அதுவே. எண்ணற்ற கரங்களின் அரவணைப்பு காலத்தைத் தாண்டி இவ்விதழை இன்றைய தளத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.   படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைசார்ந்த எழுத்துகளுக்கான களமாக சுந்தர ராமசாமி காலச்சுவடை முன்னிறுத்தினார். எனினும் மேலான படைப்புகளுக்கான சீரிய இதழாகவே அது அமைந்தது. நிறைவும் பெற்றது.   1994ஆம் ஆண்டு மீண்டும் வெளிவரத் தொடங்கிய காலச்சுவடு கலை சார்ந்த கருத்துகளுக்கான களம் என்று பிரகடனப்படுத்திக்கொண்டது. ஆனால் காலம் அதை இன்னொரு சிறு பத்திரிகையாக அல்லாமல் தமிழின

தலையங்கம்
 

 சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மானுஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர்; சமூகச் செயற்பாட்டாளர். தண்ணீர்ப் பிரச்சினையில் தவித்துக்கொண்டிருந்த சேலம் நகர  மக்கள் சில ஆண்டுகளாக நிம்மதியாக வாழ்வதற்குக் காரணம் அவர் தலைமையேற்று நடத்திய ‘சேலம் மக்கள் குழு’வின் செயல்பாடுகள். மூக்கனேரி, மரவனேரி உள்ளிட்ட சில ஏரிகளையும் குளங்கள் சிலவற்றையும் பலரின் பங்களிப்புடன் தூர்வாரிச் சீரமைத்தவர் அவர். கோடை காலத்திலும் நீர் ததும்பும் அந்நீர்நிலைகளில் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. மரங்களை நாடிப் பறவைகள் வருகின்றன. ஏரிகளுக்கு நடுவில் குறுந்திட்டுக்கள் சோலை வனங்களாகக் காட்சி தருகின்றன. ஏரியைச் சுற்றிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுக் காலையிலும் மாலையிலும் பலர் இயற்கைச் சூழலில் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். அங்கங்கே இர

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

 மண் மீதான மனித வாழ்வுக்கு இயற்கையைப் பயன்படுத்தும் முறைகள் குறித்த பூசல்களே இன்றைய வளர்ச்சி விவாதங்களாக, வில்லங்கங்களாக இருக்கின்றன. பெரும் பணக்காரர்களும், அவர்களின் ஆசி-ஆதரவுடன் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகள் அனைவரும் ‘வரைமுறையற்ற வளர்ச்சி’யை ஆதரிக்கிறார்கள். இவர்கள் கட்டிக்காக்கும் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்போடு சூழல் செயல்பாட்டாளர்கள், உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் முரண்படுகிறார்கள்; முட்டி மோதுகிறார்கள்.   அவர்கள் இயந்திரமயமாக்கல், உலகமயமாக்கல், பணமயமாக்கல் என்று இயங்குகிறார்கள்; இவர்கள் இயற்கைமயமாக்கல், உள்ளூர்மயமாக்கல், நலமயமாக்கல் என்று இயங்குகிறார்கள். அவர்கள் அணுஉலை, அனல்உலை எனும் அழிவுத் திட்டங்கள் வழியாகத்தான்

காலச்சுவடும் நானும்
அரவிந்தன்  

காலச்சுவ’டில் நான் பணிபுரியத் தொடங்கியது 2002 பிப்ரவரியில். 2000ஆவது ஆண்டில் இந்தியா டுடே இதழை விட்டு விலகி முத்ரா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இணைய உள்ளடக்கச் சேவைப் பிரிவின் பொறுப்பாளராக 2001இல் பணிக்குச் சேர்ந்திருந்தேன். ஒரே ஆண்டில் அந்த வேலையை விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட அதே சமயத்தில் காலச்சுவடின் ஆசிரியர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரன் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அதையடுத்து காலச்சுவடு சென்னையில் தயாராகத் தொடங்கியது. நான் வேலையை விட்டதுமே காலச்சுவடில் பணிக்குச் சேர இயலுமா என்று கண்ணன் கேட்டார். தனிப்பட்ட முறையில் பல வேலைகளை எடுத்துச் செய்துகொண்டிருந்ததாலும், அவர்களால் நான் எதிர்பார்க்கும் சம்பளத்தைத் தர முடியுமா என்ற சந்தேகம் இருந்ததாலும்

கட்டுரை - மொழிபெயர்ப்பு
ராமச்சந்திர குஹா  

சுதந்திரம் என்பதற்கு ஏதாவது பொருள் இருக்கக் கூடுமென்றால், அது மக்கள் கேட்க விரும்பாதவற்றை அவர்களிடம் சொல்ல முடிகிற உரிமை என்பதாகத்தான் இருக்கும். - ஜார்ஜ் ஆர்வெல் 2007இல் வெளியான ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’ என்ற எனது நூலில் நமது நாட்டை ‘ஒரு 50-50 ஜனநாயக நாடு’ என்று குறிப்பிட்டிருந்தேன். சில அம்சங்களில் இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு. சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள், நாட்டின் எந்தப் பகுதிக்கும் பயணம் செல்லும் உரிமை போன்றவற்றில். ஆனால் குற்றவியல் நீதி ஏறத்தாழக் குலைந்திருப்பதிலும், அரசியல் ஊழல்களை ஒழிக்க முடியாத இயலாமையிலும் நாடு அரைகுறையான ஜனநாயகத்தையே கொண்டிருக்கிறது. ஜனநாயகப் போதாமை பிரதானமாக இருக்கும் ஒரு துறை கருத்து சுதந்திரம். எழுத்தாளர்களும் கலைஞர

கட்டுரை
ஜி. குப்புசாமி  

பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல்,  வால்டேரின் பிரசித்திபெற்ற வாசகத்தின் (‘உன் கருத்தோடு நான் உடன்படாதிருக்கலாம், ஆனால் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை நிலைநாட்டுவதற்காக என் உயிரையும் தருவேன்) மேற்கோளோடு தீர்ப்பை வாசிக்கத் தொடங்குகிறார். இதே நீதிபதி 2008 இல் ஓவியர் எம்எஃப். உசேனுக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கில்  அளித்த தீர்ப்பில் பாப்லோ பிக்காஸோவின் மேற்கோளைக் குறிப்பிட்டிருந்தார். ‘கலை என்பது எப்போதுமே கற்போடு இருப்பதல்ல. அறிவற்ற அப்பாவிகளிடமும் போதிய அளவுக்குத் தம்மைத் தயாராக இல்லாதவர்களிடமும் அதனைக் கொண்டு செல்லக்கூடாது. ஆம், கலை என்பது அபாயகரமானது. க

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் இருந்தார்கள். சிலர் வழக்கையே பார்த்திராத வழக்கறிஞர்கள். சிலர் கிராமத்திலிருந்து வரும் நெல்லைக் குதிருக்குள் போட்டு அது காலியாகிற வரை காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள். இடையிடையே உலக அரசியலைப்பற்றிப் பேசுவார்கள். அவர்கள் கஷ்டங்களைச் சொறிந்துகொண்டு  ‘இந்த நேரு பார்த்த பார்வைதான் காஷ்மீர்ல இந்த நிலமை இருக்கு. அவன் படேல்ட பிரச்சினையை விட்டுருந்தான்னா இன்னிக்கு பாகிஸ்தானே இருந்திருக்காது’ என்று சொன்னது எனக்கு இன்றுவரை நினைவில் இருக்கிறது. பல இந்திய வலதுசாரிகளின் வரலாற்று அறிவு சன்னிதித் தெருத் திண்ணை அறிஞர்களின்அளவில்தான் இருக்கிறது என்பது இன்றைய வலதுசாரிப் பெரும் புள்ளிகளின் பேச்சுகளையும் பதிவுகளையும் பார்த்த

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

”அதிகம் சிரிக்காதே. இன்னும் சில நாட்களில் நீ உன் சொந்த ஊருக்குப் போய்விடுவாய்.” இது போலந்து நாட்டு மேசைப் பணியாளிக்கு உணவு அருந்த வந்த ஒரு ஆங்கிலேயர் சொன்னது. பிரித்தானிய பாகிஸ்தானி வாடகை வண்டி ஓட்டுநர் அவருடன் சவாரிக்கு வந்த ஆங்கிலேயரிடம் கேட்கிறார், “நீங்கள் எப்படி வாக்களித்தீர்கள்?” “வெளியேறுவதற்கு” என்று பதில் வந்தது. “ஏன்” என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார் ஓட்டுநர். அவருடைய முகத்தில் அடித்ததுபோல் “உன்னைப் போன்றவர்களை உன் நாட்டுக்கு அனுப்புவதற்காக” என்று கடுங்காரமான பதில் வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்புக்குப் பின் நடந்த இப்படியான இன எதிர்ப்பாடுகளைச் சொல்லிக்கொண்டு போகலாம். பொது இடங்களில் நேருக்குநேர் நடைபெற்ற இன, அரசியல

கவிதை
தேவதச்சன்  

ஏனோ சிலருக்கு சிலநேரம் பறவைகளிடம் பேசத் தோன்றுகிறது   கணவனைப் பிரிந்த பெண் சிட்டுக்குருவியோடு பேசுகிறாள் மனைவியைப் பிரிந்தவன் செங்கால் நாரையோடு உரையாடுகிறான் காதலியைப் பிரிந்தவன் கிளியோடு   ஏன் அவர்கள் சொல்லவிரும்புவதைக் கேட்க பக்கத்தில் யாருமில்லையா உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள் வக்கீல்கள், மந்திரிகள், கோயில்குருக்கள் உளவியல் நிபுணர்கள், சாமியார்கள் யாருமில்லையா. யாரும் இல்லை போலும் இருந்தும் இல்லாத முடிவு எடுத்தார்களா   அன்னங்கள், புறாக்கள், குயில்கள்   ஏதாவதும் கொட்டியிருக்கிறதா இல்லை வெறுமனே தலையைத் திருப்பிக்கொண்டு அங்கும் இங்கும் பராக்கு பார்க்கிறதா அல்லது பராக்கு பார்க்கச் சொல்லுகிறதா &nbs

கவிதை
க. மோகனரங்கன்  

அந்த அழைப்பு வரும்போது, வரப்புப் பனைகளுக்கு மேலாக எழுந்து வரும் சூரியனை பார்த்தவாறு, இருப்புப் பாதையோரமாக நடந்துகொண்டிருந்தேன். செவிசேர்ந்த குரலோ ஆமோதிப்புகளுக்கப்பால், அதுகாறும் சென்றறியாத சேய்மை நிலங்களுக்கு யென்னை அழைத்துக்கொண்டிருந்தது. தயங்கிப் பின் தளிர்த்துப் பரவிய உரையாடலின் நடுவே, ஊடறுத்துச் சென்ற ஒரு ரயிலின் கூவலுக்கு நின்று தலை திருப்ப, சடசடத்துக் கடக்கும் ஜன்னலொன்றிலிருந்து பூத்த உள்ளங்கையானது இறுதியாய் கேட்ட சொல்லின் மீது அசைந்து கொண்டிருக்க கண்டேன்.  

கவிதை
போகன் சங்கர்  

 நீங்கள் உங்கள் ரொட்டிகளை எங்கு புதைத்து வைக்கிறீர்கள் ? பிணங்களை மறைத்துவைக்கும் அதே அறையில். அது பற்றி எனக்குப் புகார்கள் உண்டு குருதியின் கடுத்த மணத்தோடு  நான் அவற்றை உண்ண வேண்டியிருக்கிறது உங்கள் நகரங்களில் நான் ஒரு போதும் குற்றங்களைத் தயாரிக்கவேண்டியதில்லை அவை ஆயத்தமாக இருக்கின்றன என்மீது கவிழ எனும்போது எனது தண்டனைகளைப் பகிர்ந்தளிக்கலாம்தானே ? நான் உங்கள் நகரத்துக்கு எனது நதிகளோடு வந்தேன் நதிகளோடும் மரங்களோடும் மலர்களோடும் நான் அவற்றை உங்கள் கழிவறைகளில் வைக்கப் பணிக்கப்பட்டேன் எனக்கு முன்பே அங்கே ஆயிரம் பேர் இருந்தார்கள் எனது ஆயிரம் பிரதிகள் எனது ஆயிரம் பெயர்களோடு நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனது வருகையைத் தெரிவித்தேன் ஆகவே நிச்சயம் அ

கவிதை
அனார்  

 காட்டுக்குள் வழிதவறித் திரும்பியவள் ஊகித்தறிய முடியாத சொற்களோடும் மஞ்சோணாப் பூக்களோடும் தோன்றினாள்   கூந்தலில் நீலப்பறவையின் இறகு கரும் அம்புக்கு உடலை எய்தவள் பயம் மறந்து போகுமளவு நீரோடையின் அருகே மிருகவாடை இணைந்த முத்தங்களை மற்றொரு அருள்பாலிப்பை பூந்துணர்களில் உமித்தூறல் சொட்டும்போதெல்லாம் நினைவு கூருகின்றாள்   மரங்களின் பட்டைகளில் முதுகுரச சருகுகள் நொறுங்கும் ரகசிய வழிகளில் தொலைந்தவள் தன் உடலின் குறுக்கு வழிகளால் வந்தடைந்தாள்   கனியாகும் தறுவாயின் நாவல்களை தீட்டிய பகலொளியில் மரமாக மாறியிருந்த உடலின்  உதக்காய்களை அணில்கள் கொறித்து தின்றன   தனிமையின் குருதி இறப்பின் தனிமை வசிய அழைப்புகளின் நறுமணம்

கதை
களந்தை பீர்முகம்மது, ஓவியங்கள் - றஷ்மி  

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கிளம்ப ஆரம்பித்ததுமே காதர் மனம் உற்சாகமாகிவிட்டது. காதர், அவன் மனைவி அஸ்மத், பிள்ளைகள் நவாஸ், அசனம்மா நால்வரும் இப்படி சேர்ந்து சொந்த ஊருக்குப் போய் எத்தனை வருஷங்களாகிவிட்டன?   ரயிலின் வேகம் ஏறவும் குளிர்ந்த காற்று முகத்தில் அறையவும் ரம்மியம் பெருகியது. இருப்பதிலேயே அதிக உற்சாகம் குடும்பத் தலைவனுக்கு. மனத்தின் ராகத்துக்குத் தண்டவாளம் இசையைக் கூட்டிக் கொடுத்தது. மச்சினன் அக்பரின் மகன் ரஹீம் திருமணம் ஊரில் நடக்கவிருந்தது. மனைவி அஸ்மத்தின் காக்கா மகன் அவன். மனத்தின் மகிழ்ச்சி இழைகள் அவள் முகத்தையும் ஒரு புதுமனுஷியாகச் சமைத்துவிட்டது.   ரயில் தாம்பரத்தைத் தாண்டியதும், கிட்டத்தட்ட ஊரின் மண்வாசனை மூக்கில் நுழைந்தது காதருக்கு. அஸ்மத்தையும் பிள்ளைகளையும் பார்த

கவிதை
ந. ஜயபாஸ்கரன்  

தங்க ஆபரணக் கடைத்தெருவின் நீட்சி தான் என்ற போதிலும் மஞ்சள் வர்ண இலைகள் கனவிலும் உதிராத மரமற்ற தெரு கல்யாணப் பட்டின் செம்புச் சரிகை மட்டும் அங்கங்கே மின்றுகிறது வெள்ளைப் பூண்டுப் பற்களின் பழுப்புச் சிரிப்பு உறைந்து கிடக்கிறது கேதம் விழாதா என்று நோங்குகிறது பித்தளைக்கடை மரக்கால் நர்சரிப் பள்ளியின் கண்ணாடிக் கதவினுள் மினுங்கும் நட்சத்திரத்தை அழைக்கின்றன கிளிக்குழந்தைகள் நிரந்தர ஒருவழிப்பாதையில் படர்ந்து வருகிற ரசாயனப் பொடியின் படலத்தை விலக்கியவாறு கம்மிவிலைக் கார்ப்பெட்டை வாயிலிருந்து விரித்துக் கொண்டு வருகிறான் அயல்மாநில இளைஞன் நடந்து வருகிறது அதன்மீது வெண்கலக் கடைத் தெரு.

கவிதை
சேரன்  

 இரண்டு பட்டினங்களைக் குறுக்கறுத்து ஓடும் ஆற்றின் ஒருகரையில் ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு மூச்சிலும்   நெருங்க முடிந்தாலும் வருடத் தயங்கும் அத்தனை விரல்களிலும்   ஒரு நினைவு உதிர்கிறது இன்னொன்று மலர்கிறது   இரண்டையும் தாங்கிக் கொள்ளவும் தூவிச் செல்லவும் நான்கு கைகளும் போதவில்லை   காற்றின் மலர்களை அலைக்கழிக்கும் மிகையான இதயத்துடிப்புக்கு மறுபெயர் என்ன என்பதை நான் அதிகாலையில் கண்டுபிடிக்கக் கூடும்   நீ தப்பி வரும்போது பெண்களின் அழுகுரல் தெருவின் இருபுறமும் விரித்து வைத்திருந்த மாயக் கவசம் உன்னைக் காப்பாற்றியது என்றாய்.   அந்தத் தெரு அறிமுகமானதுதான் பழையகாலக் கோட்டையும் துறைமுகமும் மாநகரும் க

கவிதை
என்.டி. ராஜ்குமார்  

பலமுறை சொல்லியிருக்கின்றேன் இது நல்லதற்கல்ல என்று அன்று அவன் கதையை முடிக்க இருட்குகையில் மறைந்து நின்றிருந்தாய்   நீ எனது சாயலை ஒத்திருந்ததால் எச்சரிக்கை செய்தனுப்பினேன் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலை உருவியெடுத்து அவனது மண்டையை அடித்து நொறுக்கி சிவப்பு நிறத்தில் வழிந்து கொண்டிருந்த சர்பத்தை ரசித்துக் கொண்டிருந்தாய் உயிர் பயத்தில் அவன் இடது கையால் தட்டியதில் உனது ஆயுதம் கைவிட்டுப் போயிருந்தது கணப்பொழுதில் அடிவாங்கி நொந்தபாம்பு இருட்டின் கால்களுக்கிடையே ஊடுருவிப் பறந்து செல்ல அன்றைய கருங்குளத்துப் படித்துறையோரம் என்னைப்போல் படுத்துக்கிடந்த நீ ஓலைப்பாம்பின் அனக்கம் கேட்டு எரிச்சலடைந்து எலிகளுக்கும் பாம்புகளுக்கும் ஒர

கவிதை
ஸர்மிளா ஸெய்யித்  

 நிசப்தத்தைக் கலைக்கும் அவனது புறப்படுதல்களில் துவங்குகிறது, அவளது சரணடைதல்   நீச்சல் அறியாப் பறவையின் தத்தளிப்பாகவேதான் நிரூபண முயற்சிகள் ஒவ்வொன்றும் ஆகி முடிகின்றன.   பார்வையிழந்த கோழியென நிலத்தைக் கிளறுகிறாள் கூர்மங்கிய அலகு எதையும் கொத்தவொண்ணாது செய்கிறது   வசிப்பிடம் அறியாத மலைப்பெண் மண் குண்டாயில் பழகியறிந்த ஒழுங்கில் முட்டைகளை அடுக்குகிறாள்   அவன் வீடுபோய்ச் சேர்ந்திட்டான் ஓடுபிளந்து தலைநீட்டுகின்றன குஞ்சுகள் ஒவ்வொன்றாக....

கட்டுரை
எம்.ஏ.நுஃமான்  

 தமிழ்ப் பற்றாளர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டைச் சிரத்தையோடு கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், தமிழின் பன்மைத்துவம் பற்றிப் பேசுவது அவர்களைச் சீண்டுவதற்கான முயற்சி என்று சிலர் கருதக் கூடும். எனது நோக்கம் அது அல்ல. தமிழின் பெருமைகள் பற்றிப் பலரும் பேசுவதுபோல அதன் தொன்மை, தூய்மை, இனிமை, இளமை, கன்னிமை பற்றியெல்லாம் நானும் பேசவேண்டியதில்லை. இவைபற்றி ஏற்கனவே நிறையப் பேசியாகிவிட்டது. அவ்வாறு பேசுவதற்கான கற்பனை வளமும் என்னிடம் இல்லை. அதற்கு வேண்டிய அளவு மொழி உணர்வு, பற்று, பாசம் என்பனவும் என்னிடம் இல்லை. எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவகையில் தமிழின் முக்கியமான பெருமை அல்லது  அதன் பலம் என்று நான் கருதுகின்ற அதனுடைய பன்மைத்தன்மை பற்றிச் சில கருத்துகளைச் சொல்வதுதான் இங்கு எனது நோக

கதை
என். ஸ்ரீராம், ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி  

1 பங்குனி உத்திரத் தேர் வலம் வரும் வீதிகள் எல்லாம் வெறிச்சோடியே கிடந்தன. செங்கொன்றை மரத்தின் பூக்கள் இறைந்த காவல் நிலையத்தின் முகப்பில் மட்டும் மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. எதிர்சாரி கடைகள் எல்லாம் பலகை சாத்தி மூடியிருந்தன. மலையடிவாரப் பாதையில் பசு ஒன்று அசைவாங்கிக்கொண்டு நின்றது. தெப்பக்குளத்துப் படிக்கட்டில் பரதேசிகள் சிலர் படுத்துறங்கிக்கொண்டிருந்தனர். பாசிநீர்ப்பரப்போரம் கத்திய தவளையின் நாராச ஓசை இடைவிடாமல் எதிர்க்கரையில் மோதி எதிரொலித்துக் கேட்டபடியே இருந்தது. மலைக்கோவிலைப் பார்த்தபடியே இருக்கும் மயில்வாகனத்தின் கீழ் சேதுசிற்பி ஒரு பரதேசி போலவே உட்கார்ந்துகொண்டார். காவித்துண்டால் தலைக்கு முக்காடிட்டுத் தன்னை யாரென்று அடையாளம் தெரியாத அளவுக்கு மறைத்துக் கொண்டார். கண்கள் மட்

நேர்காணல்
சந்திப்பு: சுகுமாரன்  

 கலையை விடவும் அன்பைத்தான் அதிகம் பொருட்படுத்துகிறேனா என்று என்னையே கேட்டுக் கொள்வேன். இரண்டும் ஒருபோதும் பிரிக்க இயலாதவை என்பதுதான் பதில். கலைஞர்களைப் பொறுத்தவரை கலைதான் அவர்களுடைய நேசம். ஆன்மாவில் மிளிரும் முடிவற்ற அழகின் காட்சியே அன்பின் வெளிப்பாடு. -  இஸடோரா டங்கன் (1878 -1927) ‘என் வாழ்க்கை’ சுயசரிதை முன்னுரையிலிருந்து.   பரதநாட்டியக் கலைக்கு சமகாலக் கேரளத்தில் பெயர், ராஜஸ்ரீ வாரியர். திருவனந்தபுரத்தில் பிறந்தவர். அங்கேயே வளர்ந்து படித்து வாழ்ந்து வருகிறார். மிக இளம் வயதிலேயே இசையும் நாட்டியமும் கற்கத் தொடங்கித் தேர்ச்சிபெற்ற கலைஞர். இசையில் முனைவர் பட்டமும் இதழியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றிருக்கிறார். உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை ந

கவிதை
ஆனந்த்  

 தோழிகளைப் பார்க்க போனாள் இளவரசி   அவர்களுடன் அவள் சிரித்த சிரிப்பைக் கேட்டு கள்ளமில்லா உள்ளத்தின் களிப்பைக் கண்டு பிள்ளை மனம் கொண்ட அவள் கண்கள் பார்த்து காதல் மிகும் உள்ளத்தின் கீதம் கேட்டு கடல் தாண்டி மலை தாண்டிக் காதம் கடந்து காற்றென அவள் கனவில் வந்தான் இளவரசன்   அவள் கனவில் அவன் வந்து போன கதையை தோழியிடம் அவள் ஒருநாள் சொல்லக் கேட்டு அரண்டுபோன அரசன் உடன் ஆணை போட்டு தனியே அவள் வெளியே எங்கும் போக வேண்டாம் என   காவல் கூட்டிக் கதவுகளை அடைத்துப் போட்டு முதியவளை உடனிருந்து பார்க்கச் சொன்னான்   மூன்று நாள் கழித்து அவள் முகத்தைக் காண முகமூடி அணிந்து வந்த இளவரசன் முன்பின் அறியாத சாயல் கொண்ட வதனத்தின் அழகு கண்டு அ

கவிதை
ஹெச்.ஜி. ரசூல்  

 ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்தை உங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டேன். இனி அழைத்துச் சென்று பலியிடுங்கள் என்னை உங்களிடம் கூரிய வாள் இருக்கிறது. யார் யாரோ சொல்லும் வாழ்த்துக்களில் ரத்த வாடை வீசுகிறது. ஆதியின் வாசலில் நுழைந்து பாலகனைக் கைப்பிடித்து அழைத்துவருகிறேன். எந்தக் கதறலும் இல்லை. நூற்றாண்டுகளாய் வாள்பட்ட அந்தக் கழுத்தில் எந்தக்காயமும் இல்லை. ஒட்டகங்களைப் பலியிட்ட ரத்தமல்ல நான் சென்ற பாலைமணல்வெளியில் சிந்திக்கிடந்த ரத்தத்தைக் கண்டு அதிர்ச்சியுறுகிறேன் என் குழந்தைகளின் ரத்தம் என்னைக் கொஞ்சம் அதில் புரளவிடுங்கள் அதன்பின் பலியிடுங்கள் என்னை.  

கவிதை
ஸ்ரீநேசன்  

 என்னொரு நண்பன் எங்கள் வயதே எங்கள் நட்புக்கும் எம் கனவுகள் அன்றாட விருப்பங்கள் இளமைத் தொட்டே வேறுவேறானவை சற்று முரண்பட்டவையும் கூட பதின்மத்தின் தொடக்கநிலை சிறுவர்கள் நாங்கள் அன்று சிறுகுன்றின் பறவைப்பாறையில் இருந்தோம் கடிவாளமற்ற கற்பனைக்குதிரை களிப்பில் கனைத்துக் கிளம்பியது ஒரு கைச் சொடுக்கில் பாறை எனக்குப் பறக்கும் கம்பளமாய் விரிய அவனுக்கோ புதையல் பெட்டகமாய் திறந்தது அடிப்படை ஆசைகள் ஆளாளுக்கு வேறுதான்போல புத்தகம் படிப்பதில் நானும் நோட்டை ஈட்டுவதில் அவனும் நாட்டமாய் வளர்ந்தோம் இருபதில் ஒரு சர்ச்சை பின் நிறைவேறவும் செய்தது இன்றவன் ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளர் நானும் சில கவிதைகளை எழுதிவிட்ட கவிஞன் திருமணப் பேச்சில் பள்ளிப் படிப்பிருந

கவிதை
லாவண்யா சுந்தரராஜன்  

 நானே தூரிகையாகி தீட்டத் தொடங்கிய ஓவியத்தை தொட்டுத் துழாவ குப்பிகளில் வண்ணங்கள் நிறைந்திருந்தன     இதுவரை யாரும் கண்டிராத தீண்டல்களுடன் தூரிகையின் கோட்பாடற்ற நடனம் சிலமுறை உற்சாகமாக பலமுறை சோர்வாகத் தொடந்தது.     சூட்சும விதிகளை மீறிய யாரும் அணுகவியலாத அந்தச் சித்திரத்தை வரைந்து முடித்தபோது செய்நேர்த்தி பெருமூச்செறிந்தது   பின்பு கண்பட வேண்டாமென்று ஓவியத்தைத் தீயிலிட நெருங்கியபோது அது இருந்தது இல்லாமலும்    

நெடுங்கதை
கே.என். செந்தில், ஓவியங்கள்- அனந்த பத்மநாபன்  

வெயிலைக் கண்திறந்து முகஞ்சுருக்கிப் பார்த்தபின் அந்தப் பேருந்து நிலையப் படிக்கட்டுகளுக்கு இன்னும் சூடேறாததை உணர்ந்து திரும்பிப் படுத்தேன். சுற்றிலும் மொய்த்துக் கடித்த கொசுக்களின் தொந்தரவு இப்போது இல்லை என உணர்ந்து கால்களை நீட்டியதும் சற்றே இலகுவாக ஆனதுபோல் இருந்தது. நிற்கவும் நிமிரவும் கூட நேரமின்றிக் கைகால்கள் இற்றுப் போவதுபோல நடுநிசி வரை செய்த கல்யாணச் சமையல் வேலையின் பளுவைத் தாங்க முடிந்திருக்கவில்லை. முக்கால் பங்கு வேலைகள் என்மீது வந்து விடிந்ததில் கடும்சோர்வு ஆட்கொண்டிருந்தது. ஆறுமுகத்தின் கைங்கர்யம் அது. மதியை அவனிடம் வேலைக்கனுப்பாமல் போனதால் வந்த ஆற்றாமையென அறிவேன். அவளைத் தட்டிச்செல்ல முடியாமல் குறுக்கே வந்துவிட்டேனே என்ற கடுப்பில் தலைதிருப்பக்கூட அவகாசம் தராமல் வேலையை மீண்டும்மீண

பாரதியியல்
ய. மணிகண்டன்  

 பாரதியின் ‘தராசு’ என்னும் தலைப்பிலான உரைநடைப் படைப்புகள் பலராலும் அறியப்பட்டவை. ஒருவகையில் இன்றைய இதழ்களில் இடம்பெறும் ‘பத்தி’ எழுத்துகளுக்கு அவை முன்னோடி எனலாம். தமிழிலக்கிய வரலாற்றிலும் நவீனத் தமிழ் இதழியலிலும்கூடத் தராசு படைப்புகள் தனித்தன்மை கொண்டவையாகவும் முதன்முயற்சிகளாகவும் அமைகின்றன. முதன்முறையாகத் ‘தராசு’ என்னும் தலைப்பிட்டுக் ‘காளிதாஸன்’ என்னும் புனைபெயரில் பாரதி எழுதியபோது ‘இத் தலைப்பெயரிட்டு, காளிதாஸன் பல விஷயங்களைக் குறித்து எழுதுகிறார்’ எனச் சுதேசமித்திரன் முற்குறிப்பை எழுதியிருந்தது. பாரதியாரும் படைப்பின் தொடக்கத்தில்,   “மித்திரனில் ‘காரியப் பேச்சு’ அதிகமாக இருக்கிறது. இத்துடன் கொஞ்சம் விள

கதை
உமா மகேஸ்வரி , ஓவியங்கள்- மணிவண்ணன்  

 அழைப்புமணியின் ஒலி. வாசற்கதவில் மிக மெல்லிய தட்டல். ரகசியமாக. நாகரிகமாக. கொஞ்சம் கொஞ்சலாகக்கூட ஒலித்தது அந்தத் தட்டல். சேலையைச் சரிசெய்து கொண்டாள். முன் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கி, ஸ்டிக்கர் பொட்டை அழுத்தியபடியே, ஒரு கதவுத் தட்டலுக்கு இத்தனை சரிப்படுத்தல்களா. என் தோற்றம் சற்றுக் கலைந்தேதான் இருந்தாலென்ன எனும் எண்ணம் வர தாழ்ப்பாளைத் திறந்தாள். வெயில் முகத்தில் சுள்ளென்று பட்டது. கதவருகில் யாருமேயில்லை. ஆனால் நிச்சயமாக அழைப்பு மணியை யாரோ அடித்தார்கள்... கதவைத் தட்டினார்கள். இரண்டு, மூன்று தடவை. நான்தான் சரியாகக் கவனிக்கவில்லையா? இல்லை, நிச்சயமாக. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாராவது விற்பனைப் பிரதிநிதிகள், விளையாட்டுச் சிறுவர்கள்..? ம்ஹும், ஒருவருமில்லை. மறுபடி கதவைத் தாழிட்டாள். அடுப

கட்டுரை
கல்யாணராமன், ஓவியம்- ஆதிமூலம்  

 பழந்தமிழ்ப் பனுவல்களைப் பதிப்பிப்பதில் சி.வை.தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதய்யரும் எதிர்கொண்ட சிக்கல்களைத் ‘தமிழ் கூறும் நல்லுலகு’ நன்கறியும். 500, 1000, 1500, 2000 ஆண்டுகாலப் பழைமையுள்ளவற்றைப் பதிப்பிக்கும்போது ஏற்படும் ஐயங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் விடை கண்டு ‘சிக்கலறுத்துத் தெளிதல்’ எவ்வளவு உழைப்பைக் கோரும் செயல்பாடு என்பதை விளக்கத் தேவையில்லை.   ஆனால் 100, 200 ஆண்டுகாலப் பனுவல்களுக்கும் இதே நிலைமைதான் தமிழில் நிலவுகிறது. ‘கமலாம்பாள் சரித்திரத்’தின் முதல் பதிப்பைச் சென்ற நூறாண்டுகளில் பார்த்தவர் எண்ணிக்கை அதிகமிருக்க வாய்ப்பில்லை. இந்நாவலின் இரண்டாம் பதிப்பைப் பயன்படுத்தித்தான், இன்றைய பதிப்புகள் உருப்பெற்றுள்ளன. சுப்பிரமணிய பாரதியின் எழ

நெடுங்கதை
ஜே.பி. சாணக்யா  

 மிகவும் புகழ்பெற்ற திரைப்படக் கலை இயக்குநரும் தீவிரச் சிற்பக் கலை வல்லுநருமான ராபர்ட் ஃபிலிப்ஸ் சென்ற வாரம் நியூ ஜெர்ஸி (New Jersey) யில் தனது சொந்த வீட்டில் காலமானார். இறப்பதற்கும் எட்டு நாட்களுக்கு முன்பு தனது இளைய மகள் நோவா ஃபிலிப்ஸை அழைத்து (இரண்டு பெண் பிள்ளைகள் மட்டுமே. முதியவள் ஆதரா ஃபிலிப்ஸ்.) ஒரு கடித உறையைக் கொடுத்தார். அதில் இந்தியப் பணத்திற்கு இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கான பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியின் காசோலையும் ஒரு இணைப்புக் கடிதமும் இருந்தன. அந்தக் கடிதத்தை அவள் விரும்பினால் படிக்கலாம் என்றார். இவைகளை இந்தியாவில் & தமிழகத்தில் கோவர்தனன் குழுமத் தலைவர் விவேகாநந்தனின் தந்தையிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பிறகு, ஏன் இது தரப்பட வேண்டும் என்று விளக்கிக் கூறிய எட்டாவது நாள் இ

கவிதை
சுகுமாரன்  

 உணரும்போது ஒன்றாகத் தெரிந்தாலும் வலிகள் பொதுவானவை அல்ல   ஒவ்வொரு வலியும் ஒன்றுக்கொன்று மாறுபட்டது ஒவ்வொரு வலிக்கும் தனிப் புவியியல் இருக்கிறது தனி வரலாறும்   ஒவ்வொரு வலிக்கும் தனித்தனி எல்லைகள் இருக்கின்றன மண்டைக் குடைச்சலும் கால்கடுப்பும் வெவ்வேறாவதற்கும் பற்கூச்சமும் கண்நோவும் தனித்தனியாவதற்கும் காரணம் இந்த எல்லைப் பிரிவினை.   ஒவ்வொரு வலிக்கும் பிரத்தியேக நிறங்கள் இருக்கின்றன செவிக்குத்தலின் அரைவெண்மையையும் குடலிறக்கத்தின் வெளிர் மஞ்சளையும் மூட்டுப் பிடிப்பின் நீலத்தையும் உதரக் கலவரத்தின் சிவப்பையும் கை முறிவின் கருமையையும் அதனதன் பிரதேச எல்லைகளே தீர்மானிக்கின்றன அவற்றை உண்மையாக்குகிறது வரலாறு ஒவ்வ

கவிதை
அகச்சேரன்  

 அமரத்துவம் அருகிருந்தும் தூரத் தெரியும் முழுநிலவு பொழிவில் படரும் பனிப்படலத்தில் மனம் லயித்து பின் விலகும் சில யூகலிப்டஸ் மரங்களும் கண்ணீர் வடிக்கும் ஒரு நானும் உச்சி விளிம்பில்.   இரண்டு சிகரெட் நண்பர்களை வெளியேற்றிய பிறகு மீதமிருந்தது இரண்டு சிகரெட் யதார்த்த ஜாலம் பெட்டிக்குள் ஒன்றையொன்று தொட்டுக் களித்திருந்திருக்க வேண்டும் விளக்கை அணைத்தான் ஒருவன் இரண்டுமே கிங்ஸ்.  

கவிதை
கீதா சுகுமாரன்  

 நப்பின்னை மாயவனே நீ இல்லாத பொழுதுகள் ஆயர்பாடியின் வெற்றுக்குழலில் ஊர்ந்து எனது அலுவலக மேசையில் தட்டையாகி உறைகின்றன   எனது தனிமை நஞ்சாகி நுரையீரலை அடைக்கையில் கோகுலத்தின் வெண்ணெய் குளிர்ப்பதனப் பெட்டியில் இறுகியிருக்க கண்களின் கருமை மேகத்தோடு கரைந்து பெய்கையில் சிலிர்த்தெழும் மென்தோள்கள் உன் வரவை எதிர்நோக்கித் துவள பல்லாண்டு பல்லாண்டு கழித்து எனது கடற்கரையில் ஒதுங்கும் துளசியின் வாசம் என்னிடம் உன்னைச் சேர்ப்பிக்கிறது   உனது விரல் நீவி இருளவிழும் முடிக்கற்றைகளால் தேகம் மூடும் போதில் சர்க்கரைப் பாகாகி உடல் இளகிக் கலந்து எனது வாதுமை நிறத்தில் நீ மினுங்கி நாணுகிறாய்   நானோ  நீலநிறமேகி திரண்டு நீண

கவிதை
சசிகலாபாபு  

 எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் கடலாய் இந்த உடல்   108 டிகிரி காய்ச்சல், மாதாந்திரப் போக்கின் இரண்டாம் நாள் மற்றும் சிசுக் கருவறையில் சுற்றிச் சுற்றி வரும் ஏழாம் மாத இரவுகளில் எல்லாம் உடல் கச்சிதமாய் விழித்துக் கொள்கிறது இணையுடல் தேடி உங்களைக் கடப்பதுபோல் அத்தனை எளிதாயில்லை உங்கள் உடலை கடப்பது எனும் பெண்களைக் கண்டு அஞ்சாதீர் காதலுக்கென ஒரு காதலும் காமத்திற்காய் பல காமமும் பாவமல்ல என்று இறுதிப் பிரசங்கத்தில் கூறியே விட்டார் உடலாய் வந்த கடவுள்  

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

 கிராமப்புறங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்கள் பற்றி ஓரிடத்தில் எழுதிச் செல்லும் அம்பேத்கர் அதைக் காட்டுவதற்கான மூன்று பின்னிணைப்புக் கட்டுரைகளைத் தன் நூலில் தருகிறார். (நூல் தொகுதி: 9) மூன்றும் பிறரால் எழுதப்பட்டவை. அதில் தமிழ்நாட்டு அனுபவங்களை விவரிக்கின்ற இரண்டு கட்டுரைகளையும் எழுதியவர் பெயர், காந்தி தொடங்கிய அரிஜனசேவா சங்கத்தில் மேலூர் வட்டார மண்டல செயலாளர் ஆனந்த தீர்த்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரக் கிராமங்களின் தீண்டாமைக் கொடுமைகளை இவ்விரண்டு கட்டுரைகளும் ஆனந்த தீர்த்தர் சொற்களில் விவரித்துள்ளன. அரிஜன சேவா சங்கம் தொடங்கப்பட்ட 1930கள் முதலே மதுரை வட்டாரத்தில் அது தீவிரமாகச் செயற்பட்டு வந்தது. குறிப்பிடும்படியான சங்கச் செயற்பாட்டாளர்கள் இங்கிருந்தனர்.&nbs

உள்ளடக்கம்