தலையங்கம்
 

மனித வாழ்க்கையின் மிக நிச்சயமான முடிவு மரணம். எதிர்பார்த்ததோ தற்செயலானதோ எதுவாயினும் மரணம் நம்மை உலுக்கிவிடுகிறது. இளவயது மரணங்களும் முதிர்பருவச் சாவுகளும் அதிர்வைத் தருகின்றன. நேற்றிருந்தவர் இன்றில்லை என்ற உண்மையும் இனி  திரும்ப மாட்டார் என்ற இறுதித் தெளிவும் நம்மைக் கலங்கச் செய்கின்றன. எல்லா மரணங்களும் ஈடுசெய்ய முடியாததுதான். எனினும் சில மரணங்கள் நம்மைக் கையறு நிலைக்குக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக, ஆளுமைகளின் சாதனையாளர்களின் விடைபெறல்கள் இழப்புணர்வை வலுவாக்குகின்றன. அண்மைக் காலத்திய மறைவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. உலகளவிலும் தேசிய அளவிலும் தமிழகப் பின்புலத்திலும் ஏற்பட்ட பலரின் மறைவுகள் பெரிதான உணர்வலைகளைத் ததும்பவிட்டன. வெகுசன ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இதைக் காண முடிந்தது

கவிதைகள்
பெருமாள்முருகன்  

ஆயிரமாயிரம்   நஞ்சுண்டு செத்த வெள்ளெலியின் உடலில் புகுகிறேன் கனவிலிருந்து விழித்தெழுவது போல் திடுக்கிட்டுச் சுற்றி இருக்கும் பரந்த வெளியைப் பயத்துடன் பார்க்கிறது தறி கெட்டோடிப் பெருங்கரையொன்றின் அடியில் பதற்றத்தோடு வளை பறித்துச் செல்கிறது மண்ணை வெளித் தள்ளும்போதில் காற்றும் வெளிச்சமும் படக் கூசிச் சிலிர்த்துக் கணத்தில் வளைக்குள் ஏகுகிறது ஆயிரமாயிரம் வழிகள் ஆயிரமாயிரம் அடைப்புகள் யாராலும் கண்டறிய இயலாத ஏதோ ஓர் அடைப்புக்குள் இப்போது எங்கே இருக்கிறேன் நான்?   ஆக்கும் பெருநடனம்   இதை என்ன செய்ய? உடலல்ல, விஷப் பாம்பு பாம்புக்குப் பல்லில் விஷம் பாம்பல்ல, முழுக்க விஷம் விஷத்தின் ஆற்றல் அழிவு விஷமல்ல, ஆக்கும் பெருநடனம் வகை வகையாய்க் கூடைகள் அடக்கிச

உரை
பெருமாள்முருகன்  

அனைவருக்கும் வணக்கம். எனது நூல் அதுவும் என் தாய்மொழியில் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா இந்தியத் தலைநகரில் நடைபெறும் என்று நான் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. இப்படி ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்கவும் இயலவில்லை; வருத்தத்துடன் விலகவும் முடியவில்லை. எனினும் மகிழ்ச்சியும் வருத்தமும் இணைந்த கலவை மனநிலையில் இருக்கிறேன். ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான பிரச்சனை காரணமாக எனது வாழ்வில் ஏற்பட்ட கடும் நெருக்கடியின்போது தமிழ் எழுத்தாளர்களும் இந்திய மொழி எழுத்தாளர்களும் ஆங்கிலத்தில் எழுதுவோரும் உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு காட்டினர். தங்கள் வாய்ப்புக்கு உட்பட்டுப் பலவிதமாகச் செயல்பட்டனர். சகிப்பின்மைக்கு எதிராகவும் கருத்துரிமைக்கு ஆதரவாகவும் நாடு முழுவதுமிருந்து குரல்கள்

உரையாடல்
அருண்குமார்  

“ஓர் எழுத்தாளர் சாதியை ஆதரித்து எழுத முடியாது” -  பெருமாள்முருகன் தில்லி தீன்மூர்த்திபவனில் அமைந்துள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் பெருமாள்முருகன் புத்துயிர்ப்பின் அறிவிப்பாக அவர் எழுத்துத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த காலத்தில் எழுதிய 200 கவிதைகளின் தொகுப்பு ‘கோழையின் பாடல்கள்’ மூத்த கவிஞர் அஷோக் வாஜ்பேயியால் வெளியிடப்பட்டது. பெருமாள்முருகன் தன் கவிதைத் தொகுப்பிலிருந்து ‘சொந்த ஊர்’ என்ற கவிதையையும் ‘கோழையின் பாடல்’ என்ற கவிதையையும் தமிழில் வாசிக்க, அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அஷோக் வாஜ்பேயி வாசித்தார். பெருமாள்முருகன் தன் உரையைத் தமிழிலும் ஆ.இரா. வேங்கடாசலபதி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தனர். பின்னர் பெருமாள்முருக

கடிதங்கள்
 

‘ஊரார் வரைந்த ஓவியம்’ எழுத்தாளர் துரை குணா காவல்துறையால் கைது செய்யப்பட்டு கைதாகிப் பொய் வழக்கு பதியப்பட்ட செய்தி வரும் முன் செங்கையில் வீதியில் பேசிக் கொண்டிருந்தவர்களைக் கதறக்கதற அடித்துப் பொய் வழக்கு பதிவு செய்த செய்தியைப் பார்க்கிறோம், காவல்துறையின் நிலையால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மனித உரிமை மீறல் தொடர்கிறது.   ‘தமிழ்ச் சமூகமே ஜனநாயக விரோத சமுதாயம்’ என்ற கருணாகரனின் பேட்டி சிறப்பு. யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார்.   ‘மது விலக்கு:  ஓர் தள்ளாடும் கொள்கை’ என்ற கட்டுரை, மது காலகாலத்தில் உழைப்பின் அசதியில் தோன்றியது. பின்பு அது வெறியாக மாறி, சமுதாயத்தில் நிம்மதிக்காகக் குடித்து, இப்போது நாகரிகமாக மாறிவிட்ட

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

  இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தைப் பற்றி பாரதியார் இப்படி வர்ணித்தார்: ‘இம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம்! இந்தியா விடுதலை அடைந்தபிறகு, ‘இம்’ என்றால் தேசத்துரோக வழக்கு, ‘ஏன்’ என்றால் போர் தொடுத்த வழக்கு. 124A  அல்லது 121!   அண்மைக் காலங்களில் அரசை விமர்சிக்கிற, எதிர்க்கிற மாணவர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுசீவிகள், சூழல்வாதிகள் என அனைவர் மீதும் தேசத்துரோக வழக்கு சுமத்தப்படுகிறது. நிலைமை எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, கடந்த வாரம் கர்நாடகாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தேசத்துரோக வழக்கு.   ‘அம்னஸ்டி இண்டர்நேஷனல்’ அரசியல் கைதிகளின் உரிமைகளுக்காகப் பா

கட்டுரை
அ. ஆசீர் முகம்மது  

  இன்று இஸ்லாம் குறித்த உரையாடல்கள் சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின், அதிகாரம் ஒருமுனைப்பட்ட சூழமைவில், ‘இஸ்லாம்’ என்ற பேசுபொருள் அதிகமும் அரசியல் சார்ந்ததாகிவிட்டது. வெறுமனே மதப்பிரதிகளின் கல்வி மட்டும் பெற்றிருக்கும் மரபான இஸ்லாமிய அறிஞர் ஒருவர் தற்காலத்தில் இஸ்லாம் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், அவற்றிற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கும் ஏன் போதுமானவராக இல்லை என்பதற்கான பின்னணி இதுதான். நமது நாட்டில்  இந்துத்துவம் பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வருகிறது. இந்துத்துவம் என்பது மத அடிப்படைவாதம் கிடையாது. மாறாக, அது ஒரு அரசியல் சித்தாந்தம். ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவை ‘மற்றமை’யாகக் கட்டமைப்பு செய்

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

  சவூதி அரேபியா வழங்கும் சர்வதேச ரீதியிலான மன்னர் பைசல் விருதின் மதிப்பு அளவிடற்கரியது; இரண்டு லட்சம் யு.எஸ். டாலர்கள் மற்றும் 24காரட் எனும் தன்மையில் இருநூறு கிராம் தங்கம்.   2015ஆம் ஆண்டுக்கான இந்த விருது, இந்தியாவிலிருந்து இஸ்லாமிய ஆராய்ச்சி ஃபௌண்டேஷனையும் பீஸ் தொலைக்காட்சியையும் இயக்கிவரும் ஜாகிர்நாயக்கிற்கு வழங்கப்பட்டது. ஜாகிர்நாயக் தான் கற்ற கல்வியின்படி ஒரு மருத்துவராகப் பணிபுரிந்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் ஒரு மதப் பரப்புரையாளராக இருக்கிறார்; பெரும் வியப்புக்குரிய பேச்சாற்றலால் சர்வதேச நாடுகளுக்கும் சென்று வருகிறார். அவர் உரை கேட்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள்; அல்லது வரவழைக்கப்படுகிறார்கள். பேச்சாற்றலும் அபாரமான ஞாபக சக்தியும் கூட்டத்தைக் கட்டிப்போடுகின்றன.

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

  ஊடகங்களில் உரிய அளவில் காட்டப்படாவிட்டாலும் ஆளும் பாஜக அரசுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திய போராட்டமாக உனா எழுச்சி அமைந்துவிட்டது. அப்போராட்டம் குஜராத் மாநில முதலமைச்சரை மாற்ற வைத்திருக்கிறது. பிரச்சினை ஏற்பட்டு, அதன் விளிம்புக்குச் சென்று எல்லை மீறாத வரையிலும் அதுபற்றிப் பேசுவதைத் தவிர்த்துவரும் பிரதமர் மோடியைப் பேச வைத்துவிட்டது. எல்லாவற்றையும்விட போராடிய மக்களுக்கே அது அரசியல் மாற்று அரசியலுக்கானஅடையாளத்தையும் அப்போராட்டம் வழங்கியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் மாவட்டம் மோடா சமத்தியாலா என்ற கிராமத்தில் நான்கு தலித் இளைஞர்கள் இறந்த மாடுகளின் தோலை உரித்தார்கள் என்று கூறப்பட்டு, பசுப் பாதுகாப்பியக்கம் என்ற அமைப்பினரால் கட்டிவைத்துக் கடு

கட்டுரை
ஜெ. பாலசுப்பிரமணியம்  

  கடந்த சில வாரங்களாக நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு பத்திரகாளியம்மன் கோவிலில் தலித்துகளின் மண்டகப்படி கோரிக்கை குறித்த செய்தி ஒரு சில ஊடகங்களால் கவனம் கொள்ளப்பட்டும் ஒரு சில ஊடகங்களால் துளியும் கண்டுகொள்ளப்படாமலும் இருந்தது. பிரச்சினையை விவாதிப்பதுதான் பிரச்சினைக்குத்  தீர்வைத்தரும் என்பதற்கு மாறாக, ஒரு சில ஊடகங்கள் இது உணர்ச்சிமிக்க விசயம், ஆகவே செய்திவெளியிடாமல் இருப்பதே ஊடக நீதி என்று மௌனம் காத்தன. வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கள்ளிமேடு கிராமத்தில் பிள்ளைமார்களும் அதையொட்டியுள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் தலித்துகளும் (ஆதிதிராவிடர்கள்) சொற்ப எண்ணிக்கையில் குயவர்களும் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரகாளி‌யம்மன் கோவிலில் வரு

புத்தகப் பகுதி
கோ. ரகுபதி  

  தமிழ் வைத்தியத்தை நாம் சித்த வைத்தியமெனக் கூறுகின்றோம். சித்த வைத்தியத்தை அரசாங்கத்தார் ஒத்துக்கொண்டு அதற்குப் பாடசாலை, மருத்துவசாலை அமைத்தபின்னர் அதைப்பற்றிச் சிலர் தங்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். சித்தவைத்தியம் ஒன்று தனியே இருக்கிறதா என்றும், சமஸ்கிருத வைத்தியம் ஒன்றுதானே இந்தியாவிலுள்ளதென்றும், சித்தவைத்தியமென்றால் சித்தர்களுடைய வைத்தியமென்றும், அவ்வகைச் சித்தர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களில் மட்டுந்தானா இருந்தார்கள், வேறுமொழி பேசுகிற மக்களில் சித்தர்கள் இருந்திருக்கக்கூடாதா? ஆதலால் ஏனைய சம்ஸ்கிருத வைத்தியமும் சித்தவைத்தியமாகாதா எனவும், ஆயுர்வேத மருந்துகளும் சித்தமருந்துகளும் பலவகையில் ஒன்றாகத்தானே இருக்கிறது, அப்படியிருந்தும் ஏன் சித்தவைத்தியத்தை தனியாகவைத்து தமிழில் நடத்தவேண்ட

பதிவு
பாரதி பிரபு  

  ஆப்பிரிக்க தலித் மற்றும் பழங்குடி மாணவர்களின் பட்டமளிப்பு விழா ஜூலை 23 அன்று சென்னையில் நிகழ்ந்தது. ஆப்பிரிக்க மாணவர்களும் தலித் மாணவர்களும் நீல நிறமும் பொன்னிற வேலைப்பாடுகளும் நிறைந்த அங்கிகளோடு ஒருங்கிணைந்தனர். மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் எடுத்த தலித் மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு அணியமானார்கள். கல்வியிலும் கலையிலும் விளையாட்டுத்துறையிலும் சாதனைபுரிந்த தலித்துகள் பெருமிதத்தோடு கூடியிருந்தனர். இந்தியாவிலிருந்து கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, பாண்டிச்சேரி, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் கலந்துகொண்டனர். நீல நிறத்தில் கல்லூரியின் வாயிலை டாக்டர் அம்பேத்கர், மார்ட்டின் லூதர் கிங் படங்கள் அடங்கிய வரவேற்புப் பதாகைகள் அலங்கரித்தன. கல்லூரிக்குள் நீல நிறத்தில் நெல்சன் மண்டேலா,

அஞ்சலி
ஆனந்த்  

  கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நண்பர் பதியின் அறையில் ஞானக்கூத்தனை முதல்முறையாகச் சந்தித்தேன். ந. முத்துசாமியுடன் அங்கே ஒரு மாலைவேளையில் வந்தார். அப்போதெல்லாம் அவருடைய உடை வெறும் வெள்ளை வேட்டியும் கை மடித்துவிடப்பட்ட முழுக்கை வெள்ளைச் சட்டையும்தான். அப்போதிலிருந்து தொடங்கி ஏறக்குறைய 50 ஆண்டுகள் அவருடன் நட்பு இருந்து வருகிறது; இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.  ‘நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்’ என்ற பழகிப்போன சொல்லாட்சி இவர் விஷயத்தில் முழு அர்த்தத்துடன் உண்மையாகவே இருக்கும்.   நடை இலக்கிய இதழ் அப்போது வெளிவரத் தொடங்கியிருந்தது. அதில் வெளியாகியிருந்த அவருடைய கவிதை இது. இதுதான் நான் வாசித்த அவரது முதல் கவிதை.   திண்ணை இருட்டில் எவரோ

அஞ்சலி: மகாஸ்வேதா தேவி (1926-2016)
அம்பை  

  1996இல் டில்லியின் கதா நிறுவனம் அதன் வருடாந்திர இலக்கிய விருதுகள் தரும் நிகழ்வையொட்டி ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஓர் அமர்வில் மிருணாள் பாண்டே, மகாஸ்வேதா தேவியுடன் நானும் பங்கேற்றேன். காயத்ரி ஸ்பிவாக் மொழியாக்கம் செய்திருந்த ‘ஸ்தனதாயினி’ கதையுடன் மகாஸ்வேதா தேவி பற்றியும் அவர் செயல்பாடுகள் பற்றியும் நிறைய படித்திருந்தேன். அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணாள் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவரின் தாய் சிவானியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணாள் பாண்டே தொடங்கமாட்டார். அன்றும் தன் தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறுபெண்ணாக இருக்கும்போதே மகாஸ்வேதா தேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் தன் தாய

அஞ்சலி அப்பாஸ் கியரோஸ்தமி (1940 - 2016)
ஜீவன் பென்னி  

அப்பாஸ் கியரோஸ்தமி (1940 - 2016)   குழந்தைகளைத்தான் பட்டாம்பூச்சிகள் பின்தொடர்கின்றன குழந்தைகள் சிரிக்கின்றன சற்றே இறுக்கமான கடவுளுக்கு அன்பைச் சொல்லித்தருகின்றன அவை முதுமையின் விரல்களைப் பிடித்துத் திரியும் சின்னக் கைகள் பெரும் ரகசியங்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றன ஒவ்வொரு மனதையும் இறுக்கமாக அணைத்துக்கொள்வதே வாழ்க்கையென்கின்றன இப்போதும் மிச்சமிருக்கின்ற இவ்வுலகின் கடைசித்துண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது ஊர்ந்துஊர்ந்துவொரு பெரும் கதையாகிறது எறும்பு கொடுமையான பசிக்கெனத் தீராத பாடலாகிறது பாதி நிலவு செடியின் இலையாகி விழுகிறது ஒரு வாழ்வு இறுகப்பற்றிக்கொண்டிருக்கும் சங்கிலித்தொடர் கைகளை விடுவித்துக்கொள்கிறோம் ஒவ்வொருவரும் பிரிந்துசெல்கிறோம் ஒவ்வொருவரிடமிருந்து எல்லோரையும்

அஞ்சலி: ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் (1932 - 2016)
பசு. கவுதமன்  

  அஞ்சலி: ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் (1932 - 2016)   “அந்தப் பட்டியலில் மொத்தம் 11 பேர்கள். அதில் உள்ள பத்து பேர் பற்றிப் பேசுங்கள். 11வது ஆள் ஏ.ஜி.கேயைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். அவர்மேல் இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, 200 வழக்குகள் இருக்கின்றன. ஏ.ஜி.கேவுக்காக பேசிக்கொண்டு இங்கே என்னிடத்தில் யாரும் வராதீர்கள்” என்று ஏ.ஜி.கேவின் சகோதரரும் மலைக்கண்ணன் என்ற பெயரில் திமுகவின் பேச்சாளரும் தென்னக இரயில்வே - திருச்சி பிரிவின் திமுக தொழிற்சங்கத்தின் காரியதரிசியுமான ஏ.ஜி. வெங்கடகிருஷ்ணனை வைத்துக் கொண்டு சொன்னது மட்டுமல்லாமல், தூக்குத் தண்டனைக் குறைப்புக் கோப்பில், “Very dangerous communist minded person” என்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் குறிப்பெழுதி அனுப்பப்படுகின்

கவிதைகள்
கல்யாணராமன் , ஓவியம்: ஆதிமூலம்  

  காலச்சுவடு வெளியீடான ‘ஆத்மாநாம் கவிதைகள்’ முழுத் தொகுப்பு நூலில் இடம்பெறாத ஒன்பது கவிதைகள்: 1. பாலும் பழமும் நியதியில் பழம் சுவைத்து(ப்) பாலருந்துவோர் கேட்கையில், ஏன் “பாலும் பழமும்” என்கிறார் என நான் சிந்தித்துப் பார்க்கையில் தோன்றிற்று, “மங்கையர் கொங்கையில் பால் தேடிச் சுவைத்ததாலோ” (இதழ் 20: கசடதபற: மே 1972: ப.8)   2. RATION கூட்டுறவுக் கடைமுன் சர்க்கரை நாடிச் சென்று வரிசையில் ஊர்ந்திடும் மனித எறும்புகள்  (கணையாழி: நவம்பர் 1972: ப.47)   3. USE ME use me என்று வாய் விரித்திருக்கும் தெரு ஓரக் குப்பைத்தொட்டி சிலருக்கு(க்) கழிவு கொட்ட சிலருக்கு உணவு தேட(கணையாழி: நவம்பர் 1972: ப.47)   4. ஆசனம் கைகளை

கதை
யுவன் சந்திரசேகர், ஓவியங்கள்: செல்வம்  

  பின்வரும் கதையைச் சொன்னவரை ஒரு கோயில் வளாகத்தில் சந்தித்தோம்.யாரோ ஹொய்சாள ராஜா கட்டிய கோயில். நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்திருப்பது என்பது ஒவ்வொரு அங்குலத்திலும் புலப்பட்டது. உயரமான விதானத்தின் உட்புறம் இருட்டு அப்பியிருந்தது. வௌவால் நாற்றம் அடர்ந்த வளாகம். ஆட்கள் நடமாட்டத்துக்கேற்ப சடசடத்துக் குறுக்கே பறந்து இடம் மாறி அமரும் புறாக் கூட்டம். அடங்கிய குரலில் குமுறும் களகளப்பொலியுடன் பறக்கும் அவற்றின் எச்சம் ஏதும் தலையில் வீழ்ந்துவிடுமோ என்ற மெல்லிய அச்சத்துடனே உள்ளே நடந்தோம். ஆனால், அவ்வளவு பறவைகள் குடியிருக்கும் வளாகத்தின் தரையில் எச்சத்தடம் ஏதுமில்லாதிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. இவ்வளவு பழமையான கோவிலைத் தொல்லியல் ஆய்வுத்துறை கையகப்படுத்தவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். சந்நித

அறியப்படாத பாரதி -1
ய. மணிகண்டன்  

அறியப்படாத பாரதி -1   “எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம், ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்”,    (‘பாரத ஸமுதாயம்’) எனப் பாடியவர் மகாகவி பாரதி. உலக நாடுகளிடையே குரு ஸ்தானத்தை இந்தியா வகிக்கும் என்பது அவரது நம்பிக்கை. இவ்வகையில் ஆன்மீகத் துறையிலே விவேகாநந்தரையும், இலக்கியத்துறையிலே இரவீந்திரநாத தாகூரையும், அறிவியல் துறையிலே ஜகதீச சந்திர போஸையும் இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது என அழுத்தமாக எடுத்துரைத்தார். விவேகாநந்தரின் சீடப் பெண்ணாகிய நிவேதிதையையே இலக்கிய, அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் குருவாகக் கொண்டு போற்றியவர் அவர். இராமகிருஷ்ண இயக்கத்தின் துறவி அபேதாநந்தரைப் போற்றும் கவிதையில் &l

காலச்சுவடும் நானும்
சமஸ்  

  தஞ்சாவூரில் சின்ன அளவில் ஒரு புத்தகக்காட்சி நடந்தது. அங்குதான் காலச்சுவடு இதழை முதன் முதலில் பார்த்தேன். அப்போது மன்னார்குடியில் தீவிர இலக்கிய இதழ்கள், நூல்கள் வாங்க வாய்ப்பில்லை. சிறுவர் பத்திரிகைகள், காமிக்ஸ் நூல்கள், ராஜேஷ்குமார் - பட்டுக்கோட்டை பிரபாகர் - சுபா நாவல்கள், வைரமுத்து - மேத்தா - அப்துல் ரகுமான் கவிதைகள் என்று படிப்படியாக மாறிக்கொண்டிருந்த என்னுடைய வாசிப்பு கல்லூரியில் சேர்ந்தபின் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் என்று விரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்துக்கொண்டு, ஐநூறு ரூபாயைத் தொட்டுவிட்டால், புத்தகங்கள் வாங்க தஞ்சாவூருக்குக் கிளம்பிவிடுவது வழக்கம். இலக்கிய இதழாக கணையாழியை மட்டுமே அதுவரைஅறிந்திருந்தேன்.   புத்தகக்காட்சியில், ‘

திரை
விலாசினி  

  “To the city of this people we donate this monument: Peace and Prosperity” ஜோக்கர், கோமாளி, நகைச்சுவை நாயகன் என்றெல்லாம் குறிப்பிடும்போது சார்லி சாப்ளின் ஆளுமையைக் கடந்து நாம் பேசிவிட முடியாது. திரையில் நாம் கண்ட ‘ஜோக்கர்’ பிதாமகன் அவர். அவரின் ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படம் இந்த வாசகங்களுடன் தொடங்குகிறது. பின்னர், அந்நகரின் தலைவர்கள் குறிப்பிட்ட சிலையைத் திறக்க, அதில் நாடோடியான சாப்ளின் உறங்கிக்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்த காவலர்கள் சாப்ளினைத் துரத்துகிறார்கள். அக்காட்சியில் அந்த நாடோடி அங்கிருந்து காவலர்களிடம் பிடிபடாமல் நழுவி ஓடுகிறார். இதை அப்படியே ‘ஜோக்கர்’ திரைப்படத்திற்கும் வேறொரு பொருளில் பொருத்திப் பார்க்

மதிப்புரை
செ.மு. நஸீமா பர்வீன்  

  மனாமியங்கள் (நாவல்) சல்மா வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் & 629 001 பக்கம்: 288 விலை: ரூ.250   சல்மாவின் படைப்புகள் சமூகவெளியில் உண்டாக்கும் அதிர்வலைகள் சற்று வித்தியாசமானவை. இஸ்லாமியப் படைப்புலகு புறக்கணித்த பெண்ணுடல் குறித்த பதிவுகளை முன்னெடுக்கின்றன சல்மாவின் படைப்புகள். சல்மாவின் படைப்புலகம் என்பது ஆணாதிக்க விடுபடலுக்கானதாக மட்டுமின்றி, இஸ்லாமிய சமயத்தோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ மீதான மதிப்பீடுகள் படைப்பைவிடவும் படைப்பாளியை நோக்கியே அமைந்தன. மூடுண்ட சமூகத்தில் மறைக்கப்பட்ட பெண்களின் இருப்பை சல்மா தன் நாவலால் திரைவிலக்கினார். அதன் காரணமாக, அவர் தான் சந்தித்த எதிர்வினைகளை நெட்டித்தள்ளித் தனது அட

உள்ளடக்கம்